TnpscTnpsc Current Affairs

19th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

19th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 19th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

19th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘மேற்பரப்பு நீர் மற்றும் பெருங்கடல் நிலப்பரப்பு (SWOT)’ விண்கலத்தை ஏவிய நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ரஷ்யா

இ. இஸ்ரேல்

ஈ. சீனா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அமெரிக்கா

  • அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகமானது (NASA) பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து நீரையும் கண்காணிப்பதற்காக புவி அறிவியல் செயற்கைக்கோளை ஏவியது. மேற்பரப்பு நீர் மற்றும் பெருங்கடல் நிலப்பரப்பு (SWOT) விண்கலம் மூன்றாண்டு பணிக்காலத்துடன் ஸ்பேஸ்X ஏவுகலத்தால் ஏவப்பட்டது. 90 சதவீதத்திற்கும் அதிகமான புவியின் மேற்பரப்பில் உள்ள நன்னீர் மற்றும் கடலில் உள்ள நீரின் உயரத்தை இச் செயற்கைக்கோள் அளவிடும். இந்தத் தகவல் கடல்சார் காலநிலை மாற்றத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும்.

2. ICMR–NARFBR (உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையம்) தொடங்கப்பட்ட நகரம் எது?

அ. வாரணாசி

ஆ. ஜெய்ப்பூர்

இ. ஹைதராபாத்

ஈ. மைசூரு

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஹைதராபாத்

  • ஹைதராபாத்தில் உள்ள ஜீனோம் பள்ளத்தாக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் உயிரி மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு வள மையத்தை நடுவண் சுகாதாரத்துறை அமைச்சர் Dr மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். NARFBR என்பது ஆராய்ச்சியின்போது ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் விலங்குகளுக்கு அறம் சார் பராமரிப்பையும் நலன்களையும் அளிக்கும் ஓர் உச்சநிலை வசதி ஆகும். புதிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் நோயறிதல்கள் ஆகியவற்றில் மருத்துவ முன் நிலை பரிசோதனைக்கான செயல்முறைகளை தர உத்தரவாத சோதனைகளுடன் இம்மையம் உருவாக்கும்.

3. இந்திய வம்சாவளியைச் சார்ந்த தலைவர் லியோ வரத்கர் என்பவர் கீழ்க்காணும் எந்நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்?

அ. இலங்கை

ஆ. அயர்லாந்து

இ. சிங்கப்பூர்

ஈ. மாலத்தீவுகள்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அயர்லாந்து

  • அயர்லாந்தின் பிரதமராக லியோ வரத்கர் 2ஆவது முறையாக பதவியேற்றார். அயர்லாந்தின் இளம் தலைவர்களுள் ஒருவராக அவர் உள்ளார். 2020ஆம் ஆண்டு தேர்தலில் லியோ வரத்கர் தலைமையிலான பைன் கேல் கட்சி பியனா பெயில் மற்றும் பசுமை கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. அதில் 2022 டிசம்பர் வரை பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் பிரதமராகவும், அதன்பிறகு லியோ வரத்கர் பிரதமராக இருப்பார் என்றும் ஒப்பந்தமானது. அதன்படி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர் பிரதமராக தேர்வுசெய்யப்பட்டார்.

4. ஆண்டுதோறும், ‘உலக புலம்பெயர்ந்தோர் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. டிசம்பர்.15

ஆ. டிசம்பர்.18

இ. டிசம்பர்.21

ஈ. டிசம்பர்.23

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. டிசம்பர்.18

  • உலகெங்கும் உள்ள புலம்பெயர்ந்தோரின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளில் கவனம் செலுத்துவதற்காக உலக புலம்பெயர்ந்தோர் நாள் டிசம்பர்.18 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் 281 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பன்னாட்டளவில் புலம்பெயர்ந்துள்ளனர். 2021ஆம் ஆண்டின் இறுதியில் 59 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக பன்னாட்டளவில் புலம்பெயர்ந்த மக்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

5. 2022 – உலக எய்ட்ஸ் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Leaving no one behind.

ஆ. Equalize.

இ. Empathize.

ஈ. Inclusion of AIDS survivors.

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Equalize.

  • மனித நோயெதிர்ப்புத்திறன் குறைபாட்டு வைரஸ் (HIV) அதன் பரவல், நோயறி சோதனை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள்குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் டிசம்பர்.01 அன்று உலக எய்ட்ஸ் நாள் அனுசரிக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டின் உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருள் “Equalize” என்பதாகும்; இது சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும் உயிருக்கு ஆபத்தான இந்த நோய்க்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கும் உள்ள நடைமுறை தீர்வுகளில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட, ‘காகிதமில்லா வானூர்தி நிலைய நுழைவு வசதி’யின் பெயர் என்ன?

அ. ஃபாஸ்ட் யாத்ரா

ஆ. டிஜி யாத்ரா

இ. பாரத் யாத்ரா

ஈ. ஏவியேட் எனிடைம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. டிஜி யாத்ரா

  • புது தில்லி, வாரணாசி, பெங்களூரு ஆகிய 3 விமான நிலையங்களில், ‘டிஜி யாத்ரா’ தொழில்நுட்பத்தை உள்நாட்டு வான்போக்குவரவு அமைச்சகம் தொடங்கியது. முக அடையாள தொழில்நுட்பம் வாயிலாக விமான நிலையத்திற்குள் பயணிகள் ஊழியர்களை நேரடியாக தொடர்பு கொள்வதை தவிர்த்து விரைவாக செல்லும் வகையில் டிஜி யாத்ரா வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஹைதராபாத், கொல்கத்தா, புனே மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களில் இவ்வசதி கொண்டுவரப்படவுள்ளது.

7. இந்தியாவின் மிகப்பெரிய யோகா மையமானது கீழ்க்காணும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் உள்ள மண்டலை கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது?

அ. அஸ்ஸாம்

ஆ. ஜம்மு–காஷ்மீர்

இ. ஒடிஸா

ஈ. ஆந்திர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஜம்மு–காஷ்மீர்

  • இந்தியாவின் மிகப்பெரிய யோகா மையம் ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மண்டலை கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தில் தாவி ஆற்றங்கரையில் சர்வதேச யோகா மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தை கட்டுவதற்கு நடுவண் சுற்றுலா அமைச்சகம் `9,782 கோடி நிதியை அனுமதித்துள்ளது.

8. ‘உலகளாவிய நீர் வளங்களின் நிலை–2021’ஐ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. FAO

ஆ. WMO

இ. UNEP

ஈ. UNFCCC

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. WMO

  • உலக வானிலை அமைப்பானது (WMO) ‘உலகளாவிய நீர் வளங்களின் நிலை–2021’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, 2002 மற்றும் 2021ஆம் ஆண்டுகட்கு இடையில் கங்கையில் கிடைக்கும் நீரினளவும் நிலத்தடி நீரினளவும் கணிசமாகக் குறைந்துள்ளது. இதே போக்கைக்காட்டும் உலகில் உள்ள பல்வேறு இடங்களையும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

9. ‘சர்வதேச கீதை மகோத்சவம்–2022’ஐ நடத்துகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. ஹரியானா

இ. தெலுங்கானா

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹரியானா

  • இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ‘சர்வதேச கீதை மகோத்சவம்–2022’ஐ ஹரியானா மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்ராவில் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு, நேபாளம் பங்காளர் நாடாகவும், மத்திய பிரதேசம் நிகழ்வின் பங்காளர் மாநிலமாகவும் உள்ளது. இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ‘நிரோகி ஹரியானா’, என்ற சுகாதாரப் பரிசோதனைத் திட்டம் மற்றும் பொது சாலைப்போக்குவரத்துக்கான, ‘இ–டிக்கெட்’ முறையையும் தொடக்கிவைத்தார்.

10. 2022ஆம் ஆண்டுக்கான மெரியம்–வெப்ஸ்டரின் சொல் எனத் தெரிவு செய்யப்பட்ட சொல் எது?

அ. Metaverse

ஆ. Permacrisis

இ. Homer

ஈ. Gaslighting

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. Gaslighting

  • ‘Gaslighting’ என்பது மெரியம்–வெப்ஸ்டரின் 2022ஆம் ஆண்டுக்கான சொல் என அறிவிக்கப்பட்டுள்ளது. merriam–webster.comஇல் இந்தச் சொல்லுக்கான தேடல்கள் முந்தைய ஆண்டு இருந்ததைவிட 2022ஆம் ஆண்டில் 1000 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. ‘Gaslighting’ சொல்லுக்கான வரையறை என்பது ஒரு நபரை வினா வழித் தூண்டி அவரது சொந்த எண்ணங்கள், நினைவுகள் ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்குவதாகும். இது ஒருவரை உளவியல் முறையில் கையாளுதலில் பயன்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு

பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு-2023 அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் முன்பிருந்த நிலையைவிட இரண்டு இடங்கள் முன்னேறி இந்தியா 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து குறியீட்டு வகைகளிலும் ஒட்டுமொத்தமாக மிகவுயர்ந்த மதிப்பீட்டை அடைய எந்த நாட்டின் செயல்பாடும் போதுமானதாக இல்லாததால், முதல் மூன்று இடங்கள் அதாவது 1-3 காலியாக உள்ளன. அதன்பிறகான முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியா (8ஆவது), பிரிட்டன் (11ஆவது), மற்றும் ஜெர்மனி (16ஆவது). 3 G20 நாடுகள் மட்டுமே பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு-2023இல் அதிக செயல்திறன்கொண்ட நாடுகளாக உள்ளன. எனவே இந்தியாவின் தரவரிசை G20 நாடுகளில் சிறந்ததாக உள்ளது.

பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டின் பல்வேறு அம்சங்களில் இந்தியாவின் தரவரிசை வருமாறு:

பைங்குடில் வாயு வெளியேற்றம் – உயர்நிலை.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி – நடுத்தரம்.

எரிசக்திப் பயன்பாடு – உயர்நிலை.

பருவநிலைக் கொள்கை – நடுத்தரம்.

2. 2022 – FIFA உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை வென்றது ஆர்ஜென்டீனா!

FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் தலைநகரம் தோகாவில் கடந்த நவ.20-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 36 நாடுகள் பங்கேற்ற இதில் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடப்புச் சாம்பியன் அணியான பிரான்ஸ் அணியும் முன்னாள் சாம்பியனுமான ஆர்ஜென்டீனாவும் மோதின.

போட்டியின் இறுதியில் 7-க்கு 4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆர்ஜென்டீனா அணி வெற்றி வாகை சூடியது. ஆர்ஜென்டீனா வென்றதன் மூலம் 3ஆவது முறையாகக் கோப்பையை வென்ற பெருமையை அந்த அணி பெற்றுள்ளது.

3. அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கான, ‘நம்ம ஸ்கூல்’ திட்டம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், ‘நம்ம ஸ்கூல்’ என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளார்.

அரசுப்பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில்நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறைகொண்ட நிறுவனங்களும் (NGO) தங்களது சமூகப்பொறுப்புணர்வு நிதிமூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வண்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இதற்கான இணையதளம் தொடங்கப்படவுள்ளது. இந்த இணையதளம்மூலம் இந்தத் திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவர்கள், எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். மேலும், பணிகள் முறையாக நிதி மூலம் பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும் நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

4. NLC நிறுவனத்துக்கு விருது.

NLC இந்தியா நிறுவனத்துக்கு சிறந்த தொழில் உறவுக்கான விருதை தென்னிந்திய தொழில், வர்த்தகக் கூட்டமைப்பு வழங்கியது.

5. INS மர்மகோவா போர்க்கப்பல் கடற்படையில் இணைப்பு.

ஏவுகணைகளைத் தாக்கியழிக்கும் திறன்கொண்ட ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. ‘புராஜெக்ட் 15பி’ என்ற திட்டத்தின்கீழ் ஏவுகணைகளைத் தாக்கியழிக்கும் திறன்கொண்ட 4 போர்க்கப்பல்களைக் கட்ட நடுவணரசு திட்டமிட்டது. அத்திட்டத்தின்கீழ் விசாகப்பட்டினம், மர்மகோவா, இம்பால், சூரத் ஆகிய பெயர்களைக்கொண்ட போர்க்கப்பல்களைக் கட்ட திட்டமிடப்பட்டது. ஐஎன்எஸ் இம்பால் ஏற்கெனவே கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தக் கப்பலை மஸகான் கப்பல்கட்டும் தளம் காட்டியுள்ளது.

கப்பலின் சிறப்பம்சங்கள்:

INS மர்மகோவா கப்பலானது 163 மீ நீளமும் 17 மீ அகலமும் கொண்டது. 7,400 டன் எடைகொண்டது. அதிகபட்சமாக அக்கப்பலானது மணிக்கு 55 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல ஆயுதங்களும் உணரிகளும் கப்பலில் இடம்பெற்றுள்ளன. வானிலுள்ள இலக்குகளைத் தாக்கியழிக்கும் ஏவுகணை, தரையிலுள்ள இலக்குகளைத் தாக்கியழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவையும் கப்பலில் இடம்பெற்றுள்ளன. நவீன கண்காணிப்புக் கருவிகள், நவீன ஆயுத அமைப்புகளும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.

19th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which country launched the ‘Surface Water and Ocean Topography (SWOT) spacecraft’?

A. USA

B. Russia

C. Israel

D. China

Answer & Explanation

Answer: A. USA

  • The US National Aeronautics and Space Administration (NASA) launched the Earth science satellite to track nearly all the water on Earth’s surface. The Surface Water and Ocean Topography (SWOT) spacecraft was launched atop a SpaceX rocket with a mission of three years. The satellite will measure the height of water in freshwater bodies and the ocean on more than 90 per cent of Earth’s surface. This information will provide insights on how the ocean influences climate change.

2. ICMR–NARFBR (National Animal Resource Facility for Biomedical Research) has been inaugurated in which city?

A. Varanasi

B. Jaipur

C. ‎ Hyderabad

D. Mysuru

Answer & Explanation

Answer: C. ‎Hyderabad

  • Union Minister for Health and Family Welfare, Dr Mansukh Mandaviya inaugurated ICMR–NARFBR (National Animal Resource Facility for Biomedical Research) at Genome Valley in Hyderabad. NARFBR is an apex facility which will provide ethical care and use and welfare of laboratory animals during research. The Centre will create processes for pre–clinical testing of new drugs, vaccines and diagnostics along with quality assurance checks.

3. Indian–origin leader Leo Varadkar has been elected as the Prime Minister of which country?

A. Sri Lanka

B. Ireland

C. Singapore

D. Maldives

Answer & Explanation

Answer: B. Ireland

  • Leo Varadkar takes over for the second time as Ireland’s Prime Minister. He is still one of Ireland’s youngest ever leaders even in his second stint in the role. Varadkar’s Fine Gael and current premier Micheal Martin’s Fianna Fail parties is unprecedented in Irish history, agreed to the rotating premiership as part of a coalition with Ireland’s Greens following 2020 elections.

4. When is the ‘International Migrants Day’ celebrated every year?

A. December.15

B. December.18

C. December.21

D. December.23

Answer & Explanation

Answer: B. December.18

  • International Migrants Day is being celebrated December 18 to focus toward the social and economic conditions of migrants all across the globe. In 2020 over 281 million people were international migrants while over 59 million people were internally displaced by the end of 2021. The estimated number of international migrants has increased over the past five decades.

5. What is the theme of ‘World AIDS Day’ 2022?

A. Leaving no one behind.

B. Equalize.

C. Empathize.

D. Inclusion of AIDS survivors.

Answer & Explanation

Answer: B. Equalize.

  • World AIDS Day is observed annually on 1 December, to create awareness among people about the Human Immunodeficiency Virus (HIV), its transmission, diagnostic testing, preventive measures, and treatment options. The theme of World AIDS Day 2022 is “Equalize”, which aims to focus on the practical solutions to reduce inequality and put an end to the life– threatening disease.

6. What is the name of the paperless airport entry facility launched by the Civil aviation ministry?

A. Fast Yatra

B. Digi Yatra

C. Bharat Yatra

D. Aviate Anytime

Answer & Explanation

Answer: B. Digi Yatra

  • The Digi Yatra paperless airport entry facility is now functional at three airports in the country, including Delhi’s Indira Gandhi International, Bengaluru and Varanasi airports. Based on the Facial Recognition Technology (FRT), Digi Yatra aims to achieve seamless and contactless processing of passengers at airports. By March 2023, four more cities will be added: Hyderabad, Kolkata, Pune, and Vijayawada.

7. India’s biggest Yoga Centre has been constructed in village Mantalai in which state/UT?

A. Assam

B. Jammu and Kashmir

C. Odisha

D. Andhra Pradesh

Answer & Explanation

Answer: B. Jammu and Kashmir

  • India’s biggest Yoga Centre has been constructed in village Mantalai in the Union Territory of Jammu and Kashmir. The village will house the International Yoga Centre at the banks of the Tawi River. The Union Tourism Ministry has sanctioned Rs 9,782 crore for the construction of the centre.

8. Which institution released the ‘State of Global Water Resources 2021’?

A. FAO

B. WMO

C. UNEP

D. UNFCCC

Answer & Explanation

Answer: B. WMO

  • World Meteorological Organisation (WMO) released a report titled ‘State of Global Water Resources 2021’. As per the report, the volume of water available in the Ganga and the groundwater in the river–basin reduced significantly between 2002 and 2021. The report has also identified several other global hot spots that show the same trend.

9. Which state/UT is the host of ‘International Gita Mahotsav–2022’?

A. Andhra Pradesh

B. Haryana

C. Telangana

D. Kerala

Answer & Explanation

Answer: B. Haryana

  • Indian President Droupadi Murmu inaugurated the International Gita Mahotsav (IGM)–2022 in Kurukshetra in Haryana. This year, Nepal is the partner country, while Madhya Pradesh is the partner State of the event. The President also launched ‘Nirogi Haryana’, a health check–up scheme, and an e–ticketing system of public road transport facilities.

10. What is the ‘Merriam–Webster’s word of 2022?

A. Metaverse

B. Permacrisis

C. Homer

D. Gaslighting

Answer & Explanation

Answer: D. Gaslighting

  • ‘Gaslighting’ has been announced as Merriam–Webster’s word of the year 2022. Searches for the word on merriam–webster.com have increased over 1000 per cent in 2022 over the year before. The definition for gaslighting is the psychological manipulation of a person, which causes the victim to question the validity of their own thoughts, perception of reality, or memories and typically leads to confusion, loss of confidence and self–esteem.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!