Tnpsc

19th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

19th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

19th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. யானைகளின் வாழ்விடங்களை மேம்படுத்துவதற்காக, எந்த மாநிலத்தைச் சார்ந்த வல்லுநர்கள், பூர்வீக புல் மற்றும் மரங்களை அடையாளம் கண்டுள்ளனர்?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) மத்திய பிரதேசம்

  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் குழுவானது யானைகளுக்கு ஏற்ற பூர்வீக புல் மற்றும் மரங்களை அடையாளம் காணும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இத்திட்டம் பெரும் பெருக்கம் நுட்பங்களை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில், வனத்துறை, எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தது. அது சமீபத்தில் 29 பூர்வீக புல் இனங்கள் மற்றும் யானைகள் மற்றும் பிற தாவர உண்ணிகள் உண்ணக்கூடிய 14 தீவன மர இனங்களை அடையாளம் கண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. இந்த இனங்களை வளர்ப்பதற்காக அக்குழு நாற்றாங்கால் பண்ணை ஒன்றைத் தொடங்கியுள்ளது.

2. எந்த ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில், இருபாலினத்தவரும் கொடியேந்தலாம் என பன்னாட்டு ஒலிம்பிக் குழுமம் அறிவித்தது?

அ) டோக்கியோ 2020

ஆ) ரியோ டி ஜெனிரோ 2016

இ) லண்டன் 2012

ஈ) பெய்ஜிங் 2008

  • முதன்முறையாக கடந்தாண்டு தொடக்க விழாவில் இருபாலினத்தவரும் ர்களிடமிருந்தும் கொடியேந்துவதற்கான ஏற்பாடுகளை பன்னாட்டு ஒலிம்பிக் குழு செய்திருந்தது. அது 2020 டோக்கியோ ஒலிம்பிக் முதல் நடைமுறைக்கு வரும். இந்திய குத்துச்சண்டை வீராங்கனை எம் சி மேரி கோமும் ஆடவர் ஹாக்கி அணியின் அணித்தலைவர் மன்பிரீத்சிங் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இந்திய அணிக்கான கொடியினை ஏற்றுவார்கள். ஆக.8ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கொடியேந்துவார்.

3. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ONDC என்பதன் விரிவாக்கம் என்ன?

அ) Open Network for Digital Commerce

ஆ) Outsourced for Digital Commerce

இ) Open Network for Development Commerce

ஈ) Output Network for Development Commerce

  • தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை சமீபத்தில் அதன் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பு திட்டத்திற்கான ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளது.
  • திறந்தமூல முறைமையில் உருவாக்கப்பட்ட திறந்த வலையமைப்புகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஈ-காமர்ஸ் செயல்முறைகளையும் திறந்தமூலமாக மாற்றும். இந்த சபையில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர் எஸ் சர்மா மற்றும் இன்போசிஸின் நிர்வாகத்தில் ஈடுபடாத தலைவர் நந்தன் நிலேகனி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஹரிபங்கா மாம்பழங்கள் பயிரிடப்படுகின்ற நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) வங்கதேசம்

இ) சீனா

ஈ) இந்தியா

  • ஹரிபங்கா மா வகையானது வங்கதேசத்தில் குறிப்பாக ரங்க்பூர் மாவட்டத்தில் வளர்க்கப்படுகிறது. அண்மையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு பரிசாக 2,600 கிலோ மாம்பழங்களை அனுப்பியுள்ளார். புகழ்பெற்ற ‘ஹரிபங்கா’ மாம்பழங்கள் பெனாபோல் சோதனைச்சாவடி வழியாக அனுப்பப்பட்டது. இது ‘மாம்பழ ரீதியான அரசியல் உறவு’ என்றும் அழைக்கப்படுகிறது.

5. போலி தலைப்புகளுடன் மோசடி குறுந்தகவல் அனுப்புவோருக்கு தொலைத்தொடர்பு துறையால் விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத் தொகை என்ன?

அ) `10000

ஆ) `5000

இ) `2500

ஈ) `1000

  • போலி தலைப்புகளுடன் மோசடி குறுந்தகவலனுப்பும் வணிக ரீதியான குறுந்தகவல் அனுப்புநர்களுக்கு தொலைத்தொடர்புத்துறை `10,000 வரை அபராதம் விதிக்கும். வீதிமீறலுக்கு விதிக்கப்படும் `1000 முதல் `10000 வரையிலான அபராதம் தவிர, மீறல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அனுப்பும் அலபேசி எண் அல்லது அனுப்புநர் அடையாள எண்ணை நிரந்தரமாக முடக்குவதையும் அத்துறை மேற்கொள்ளும்.

6. ஆண்டுதோறும், ஆட்கடத்தல்குறித்த அறிக்கையை வெளியிடுகிற நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) சுவீடன்

இ) நோர்வே

ஈ) ஆஸ்திரேலியா

  • ஆட்கடத்தல் குறித்த அறிக்கையை ஐக்கிய அமெரிக்கா ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த அறிக்கையின்படி, COVID தொற்றுநோய், ஆட் கடத்தலின் பாதிப்பை அதிகரிப்பு செய்துள்ளது மற்றும் ஏற்கனவே உள்ள ஆட்கடத்தலுக்கு எதிரான முயற்சிகளை சேதப்படுத்தியுள்ளது. சீனா உட்பட 12 நாடுகளின் அரசாங்கங்கள், இவ்வறிக்கையிடல் காலத்தில் கடத்தலுக்கு எதிரான கொள்கையைக் கொண்டிருந்தன என்பதையும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

7. 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, சிறந்த நடிகருக்கான அதிகபட்ச பிலிம்பேர் விருதுகளை வைத்துள்ள நடிகர் யார்?

அ) திலீப் குமார்

ஆ) இரஜினிகாந்த்

இ) விஜய்

ஈ) அஜித்

  • புகழ்பெற்ற நடிகர் திலீப் குமார் அண்மையில் தனது 98ஆம் வயதில் காலமானார். 8 முறை விருதை வென்றதன்மூலம் சிறந்த நடிகருக்கான அதிக பிலிம்பேர் விருதைப் பெற்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
  • 1994ஆம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே விருது, பத்ம பூஷன் (1991), பத்ம விபூஷன் (2015) மற்றும் பாகிஸ்தானின் நிஷன்-இ-இம்தியாஸ் (1998) உள்ளிட்ட திரைத்துறையில் தனது 5 தசாப்த பயணத்தின்போது பல்வேறு விருதுகளை வென்றார். 2000-2006ஆம் காலகட்டத்தில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார்.

8. “The Hunger Virus Multiplies” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) யுனிசெப்

இ) ஆக்ஸ்பாம்

ஈ) பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

  • அண்மையில் “The Hunger Virus Multiplies” என்ற புதிய அறிக்கையை ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, ஒவ்வொரு நிமிடமும் பதினொரு பேர் பசியால் இறக்கின்றனர். உலகளவில் பஞ்சம்போன்ற நிலைமைகளை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. COVID-19 காரணமான பஞ்சம் நிமிடத்திற்கு ஏழு பேரைக் கொல்கிறது.

9. குடும்ப வன்முறை (தடுப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதா, 2021 உடன் தொடர்புடைய நாடு எது?

அ) இந்தியா

ஆ) பாகிஸ்தான்

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) குவைத்

  • பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட குடும்ப வன்முறை (தடுப்பு மற்றும் பாதுகாப்பு) மசோதா, 2021ஐ பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளது.
  • எந்தவொரு குடும்ப வன்முறைச் செயலுக்கும் ஆறு மாதங்கள் முதல் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், `1 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று இம்மசோதா கூறுகிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக இம்மசோதா காத்திருக்கின்றது.

10. புதிய ‘கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின்’ முதல் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) கிரேன் ரிஜிஜு

ஆ) அமித் ஷா

இ) அனுராக் தாக்கூர்

ஈ) நிர்மலா சீதாராமன்

  • நடுவண் அமைச்சர் அமித் ஷா தனது தற்போதைய உள்துறை அமைச்சகத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகத்தின் முதல் நடுவணமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு அமைச்சகம் அமைப்பது நாட்டில் கூட்டுறவு இயக்கத்திற்கு அதிக கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • “சகர் சே சமிர்தி” (கூட்டுறவிலிருந்து செழிப்பு) என்பது அதன் நோக்க அறிக்கையாகும் என்று அமைச்சரவை செயலகத்திலிருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய அமைச்சகம், நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த தனி நிர்வாகம், சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்பை வழங்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கிராம்னிக்கை வீழ்த்தினார் விஸ்வநாதன் ஆனந்த்

டார்ட்மண்ட்டில் நடைபெற்ற செஸ் ஆட்டத்தில் ரஷிய கிராண்ட்மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். ஸ்பார்க்ஸன் கோப்பைக்கான செஸ் போட்டிகள் டார்ட்மண்டில் நடைபெற்று வருகின்றன. முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் நோ கேஸ்ட்லிங் ஆட்டம் ஒன்றில் மோதினார் கிராம்னிக். 4 ஆட்டங்கள் கொண்ட இதில் 2-1 என முன்னிலையில் ஆனந்த் இருந்த போது, கடுமையாக போராடிய கிராம்னிக் 61ஆவது நகர்த்தலில் டிரா கண்டார். சாதகமான நிலையில் இருந்த ஆனந்த் வெற்றிவாய்ப்பை தவறவிட்டார். ஏற்கனவே இருவரிடையே நடைபெற்ற இரண்டாவது ஆட்டம் டிராவில் முடிந்தது. எனினும் முதல் ஆட்டத்தில் ஆனந்த் வெற்றி பெற்றிருந்தார்.

நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி ஆட்டத்தில் கிராம்னிக்கை 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார் ஆனந்த். நோ கேஸ்ட்லிங் முறை ஆட்டத்தில் ஒரே நகர்த்தலில் 2 காய்களை வைத்து ஆடலாம். மேலும் இராஜாவை பாதுகாப்பதற்கான வழிமுறையும் இதில் உள்ளது. இந்தப் புதிய முறையை வகுத்தவர் கிராம்னிக் என்பது குறிப்பிடத்தக்கது.

1. Experts from which state have identified native grasses and trees to improve elephant habitats?

A) Tamil Nadu

B) Kerala

C) Karnataka

D) Madhya Pradesh

  • A group of experts from the Tamil Nadu Agricultural University (TNAU) and its Forest College and Research Institute (FC&RI) has undertaken a project to identify native grasses and trees, suitable for elephants. This project aims to standardise mass multiplication techniques.
  • Earlier this year, the Forest Department set up the eight–member team, which recently submitted a report after identifying 29 native grass species and 14 fodder tree species that are eatable for elephants and other herbivores. The team have started a nursery to grow these species.

2. In which Olympics, International Olympic Committee made provisions for flagbearers from both genders at the opening ceremony?

A) Tokyo 2020

B) Rio De Janeiro 2016

C) London 2012

D) Beijing 2008

  • The International Olympic Committee, for the first time, had made provisions for flagbearers from both genders at the opening ceremony only last year. This will be made effect from the Tokyo Olympics 2020.
  • Indian Boxer M.C. Mary Kom and men’s hockey team skipper Manpreet Singh will be flagbearers for India at the opening ceremony of Tokyo Olympics. Wrestler Bajrang Punia will be the flagbearer at the closing ceremony on August 8.

3. What is the expansion of ONDC, a recent project initiated by the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)?

A) Open Network for Digital Commerce

B) Outsourced for Digital Commerce

C) Open Network for Development Commerce

D) Output Network for Development Commerce

  • The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) has recently appointed an advisory committee for its Open Network for Digital Commerce (ONDC) project. It aims to promote Open networks developed in open–source methodology.
  • This can also make e–commerce processes open source. National Health Authority CEO RS Sharma and Infosys non–executive chairman Nandan Nilekani are appointed in this council.

4. Haribhanga mangoes, which were making news, are grown in which country?

A) USA

B) Bangladesh

C) China

D) India

  • The Haribhanga mango variety is grown in Bangladesh, especially in the Rangpur district. Recently, the Bangladesh Prime Minister Sheikh Hasina has sent 2,600 kg mangoes as gift for PM Modi and West Bengal Chief Minister Mamata Banerjee. The consignment of the famous ‘Haribhanga’ mangoes was sent across the land border via the Benapole checkpoint. This is also dubbed as ‘Mango Diplomacy’.

5. What is the maximum fine, to be imposed by the Department of Telecommunications, for fraud messages with fake headers?

A) Rs.10000

B) Rs.5000

C) Rs.2500

D) Rs.1000

  • The Department of Telecommunications (DoT) will impose a fine of up to Rs 10,000 per violation of commercial SMS senders who send fraudulent SMS with fake headers.
  • Apart from the fine of Rs 1000 to Rs 10000 per violation, the DoT will also undertake permanent suspension of the sending mobile number or sender ID, depending on the number of violations.

6. Which country releases the Trafficking in Persons report, annually?

A) USA

B) Sweden

C) Norway

D) Australia

  • The Trafficking in Persons report is an annual study released by the U.S. State Department. As per the report, the pandemic caused an increase in vulnerability to human trafficking and damaged existing anti–traffic efforts.
  • The U.S. has also determined that governments of twelve countries, including China, had a policy of trafficking in the reporting period.

7. As of 2021, which actor holds the record of receiving most Filmfare Awards for Best Actor?

A) Dilip Kumar

B) Rajinikanth

C) Vijay

D) Ajith

  • Legendary actor Dilip Kumar died recently at the age of 98. He holds the record of receiving most Filmfare Award for Best Actor, by winning the award for 8 times.
  • He had won various awards during his 5–decade journey in Cinema, including Dadasaheb Phalke Award in 1994, Padma Bhushan (1991), Padma Vibhushan (2015) and Pakistan’s Nishan–e–Imtiaz (1998). He was nominated as the Member of Parliament in Rajya Sabha from Maharashtra in 2000–2006.

8. Which institution released the report titled “The Hunger Virus Multiplies”?

A) World Bank

B) UNICEF

C) Oxfam

D) Bill and Melinda Gates Foundation

  • Oxfam has recently released a new report titled “The Hunger Virus Multiplies”. As per the report, eleven people die every minute of hunger. The report also found that the number of those facing famine–like conditions globally has increased by six times over the past year. It highlighted that famine outpaces COVID–19, which kills about seven people per minute.

9. Domestic Violence (Prevention and Protection) Bill, 2021 is associated with which country?

A) India

B) Pakistan

C) Afghanistan

D) Kuwait

  • Pakistan passed the Domestic Violence (Prevention and Protection) Bill, 2021, which aims to protect women, children, the elderly and other vulnerable groups from domestic violence.
  • The bill states that any act of domestic violence will be punishable with imprisonment of a maximum period of three years and not less than six months, along with fines up to Rs 1 lakh. It was also passed by the Senate and awaiting presidential assent.

10. Who has been appointed as the first Union Minister of the new ‘Ministry of Cooperation?

A) Kiren Rijiju

B) Amit Shah

C) Anurag Thakur

D) Nirmala Sitharaman

  • Union Minister Amit Shah, has been appointed as the first Union Minister of the newly–set up Ministry of Cooperation along with his current Home Affairs portfolio. The setting up of the Ministry of Cooperation was aimed at providing more focus to the cooperative movement in the country.
  • “Sahkar se samriddhi” (Prosperity from cooperation) is its vision statement, according to a release from the Cabinet Secretariat. This ministry will provide a separate administrative, legal, and policy framework to strengthen the cooperative movement in the country.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!