TnpscTnpsc Current Affairs

19th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

19th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 19th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற “நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு” என்பதுடன் தொடர்புடையது எது?

அ) நெகிழிக்கழிவு மேலாண்மை 

ஆ) ஆட்டோமொபைல் உற்பத்தி

இ) இறைச்சி உற்பத்தி

ஈ) வேளாண் ஏற்றுமதி

  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது நெகிழிக்கழிவு மேலாண்மை விதிகள்-2016’இன்கீழ் “நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு – Extended Producer Responsibility”ஐ ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது, திடமான நெகிழிப்பொதியல் என 3 வகை நெகிழிகளை உள்ளடக்கியுள்ளது: ஒற்றை அடுக்கு / பல அடுக்கு நெகிழிகளின் நெகிழ்வான நெகிழிப் பொதியல். இந்த வரைவின்படி, உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய கழிவுகளின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.

2. ‘உலகின் கைத்தூய்மை’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?

அ) WHO மற்றும் UNICEF 

ஆ) NITI ஆயோக்

இ) பெல் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை

ஈ) இந்திய மருத்துவ சங்கம்

  • உலக நலவாழ்வு நிறுவனமும் (WHO) மற்றும் UNICEFஉம் இணைந்து 2021ஆம் ஆண்டு ‘உலகின் கைத்தூய்மை’ அறிக்கையை வெளியிட்டன. இந்த அறிக்கையின்படி, உலகம் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நபருக்கு $1’க்கும் குறைவான தொகையை கைத்தூய்மையில் முதலீடு செய்தால், உலகின் 46 குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள அனைத்து வீடுகளும் 2030’க்குள் கைத்தூய்மை வசதிகளைக் கொண்டிருக்கும்.
  • வீட்டில் சோப்புகொண்டு கையைக் கழுவுவதை ஊக்குவிப்பதற்காக, இந்த நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது சுகாதார செலவில் 2.5% அளவுக்கு செலவிடுகின்றன.

3. இந்திய இரயில்வேயால் நடத்தப்படும் இந்திய வேலையில்லாத இளையோருக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் பெயர் என்ன?

அ) சிறந்த இந்தியா சிறந்த உலகம்

ஆ) திறன் இந்தியா

இ) ரயில் திருஷ்டி

ஈ) இரயில் கௌஷல் விகாஸ் யோஜனா 

  • இரயில் கௌஷல் விகாஸ் யோஜனா என்பது 18-35 வயதுடைய வேலையில்லா இளையோருக்கு இந்திய இரயில்வேயால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் ஒரு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகும். இத்திட்டம் அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனை -வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சமீபத்தில், இரயில் கௌஷல் விகாஸ் யோஜனாவின்கீழ் முதல் பிரிவில் வெற்றிபெற்ற பயிற்சியாளர்களுக்கு சுய வேலைவாய்ப்பு கருவிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்திய ரயில்வேயின் உற்பத்தி அலகான பனாரஸ் லோகோமோட்டிவ் வொர்க்ஸ் அதன் முதல் தொகுதி பயிற்சியாளர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சியை நடத்தியது.

4. “தி நேவல் இன்டராக்ஷன்-2021” என்பது எவ்விரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு கடற்படைப் பயிற்சியாகும்?

அ) இந்தியா மற்றும் அமெரிக்கா

ஆ) இந்தியா மற்றும் சீனா

இ) சீனா மற்றும் ரஷ்யா 

ஈ) ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா

  • சீனா & ரஷ்யாவின் கடற்படைப் படைகள் “தி நேவல் இன்டராக்ஷன் -2021” கூட்டு கடற்படைப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. இந்தப் பயிற்சி இருநாட்டின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதோடு கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கூட்டாக சமாளிக்கும் திறனை வளர்த்துக்கொள்கிறது. இப்பயிற்சி ஜப்பான் கடலில் உள்ள ரஷ்யாவின் பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் நடக்கிறது.

5. 2021-உலகப் பார்வை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Love Your Eyes 

ஆ) Donate Eyes; Donate Life

இ) Eye Health matters

ஈ) Sight First

  • உலக பார்வை நாளானது ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாவது வியாழனன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2021) அக்டோபர். 14 அன்று இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது குருட்டுத்தன்மை மற்றும் பார்வை குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும். இது முதலில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் ‘Sight First’ பிரச்சாரத்தால் கடந்த 2000’இல் தொடங்கப்பட்டது.
  • “உங்கள் கண்களை நேசியுங்கள்” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருளாகும்.

6. இந்தியா-அமெரிக்க பொருளாதார மற்றும் நிதிக் கூட்டாண்மை உரையாடலின் எட்டாவது அமைச்சர்கள் கூட்டம் சமீபத்தில் எங்கு நடைபெற்றது?

அ) புது தில்லி

ஆ) வாஷிங்டன் DC 

இ) புனே

ஈ) நியூயார்க்

  • இந்தியா-அமெரிக்கா பொருளாதார & நிதிக் கூட்டாண்மைக்கான அமைச்சர்கள் அளவிலான எட்டாவது கூட்டம் வாஷிங்டன் டிசி’இல் நடைபெற்றது. மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க கருவூல செயலாளர் டாக்டர் ஜானெட் யெல்லென் இதற்குத் தலைமையேற்றனர்.
  • பரந்த பொருளாதாரக் கண்ணோட்டம், COVID-19 பெருந்தொற்றில் இருந்து மீட்சி, நிதி ஒழுங்குமுறை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பலதரப்பு ஈடுபாடு, பருவநிலை நிதி, பண மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுத்தல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

7. விண்வெளியில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படமான ‘தி சேலஞ்ச்’ சார்ந்த நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா 

இ) சீனா

ஈ) இஸ்ரேல்

  • விண்வெளியில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம் “தி சேலஞ்ச்”. கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்திலிருந்து சோயூஸ் MS -19 ஏவுகலம்மூலம் படக்குழு விண்வெளிக்குச்சென்றது. அங்கு 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியபின், இயக்குனர் கிளிம் ஷிபென் கோவும், நடிகை யுலியா பெரெஸில்ட்டும் பூமிக்கு திரும்பினர்.

8. UCO வங்கியின் MD & CEOஆன A K கோயல், அண்மையில் எந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அ) பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா

ஆ) IBPS

இ) இந்திய வங்கிகள் சங்கம் 

ஈ) RBI சேவை வாரியம்

  • UCO வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான AK கோயல், 2021-22ஆம் ஆண்டிற்கான இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 அக்.14 அன்று நடந்த அமைப்பின் நிர்வாக குழுக்கூட்டத்தில் இதற்கான தேர்தல் நடைபெற்றது. அவர் யூனியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜ்கிரண் ராய் ஜியைத் தொடர்ந்து இப்பதவிக்கு வந்துள்ளார்.

9. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஹாமில்டன் பொருள்’ என்பதுடன் தொடர்புடைய எது?

அ) இயற்பியல்

ஆ) விண்வெளி அறிவியல் 

இ) தீநுண்மவியல்

ஈ) பொருளாதாரம்

  • NASA/ESA ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட படங்களிலிருந்து, திமோதி ஹாமில்டன் தலைமையிலான வானியலாள -ர்கள் குழு, அசாதாரண ஈர்ப்பு லென்சிங் கட்டமைப்பை கண்டறிந்து உள்ளது. ‘ஹாமில்டனின் பொருள்’ என அது பெயரிடப்பட்டுள்ளது.

10. சமீப செய்திகளில் இடம்பெற்ற Amoria thorae என்பது பின்வரும் எந்த வகை சார்ந்த ஒரு புதிய உயிரினமாகும்?

அ) கடல் நத்தை 

ஆ) ஆமை

இ) சிலந்தி

ஈ) நண்டு

  • Amoria என்பது கடல் வயிற்றுக்காலிகளின் (கடல் நத்தைகள் மற்றும் கடலட்டைகள்) ஓர் இனமாகும். இந்த வேட்டையாடும் உயிரினங்கள் ஆஸ்திரேலியாவின் முழு கடற்கரையைச்சுற்றியும் (கடற்கரை மற்றும் கடல்நீரில்) காணப்படுகின்றன. இதன் சில இனங்கள் தெற்கு இந்தோ
    -னேசியா வரை பரவியுள்ளன. Amoria thorae எனப் பெயரிடப்பட்ட இந்த இனம் மிகவும் அரிதானது ஆகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சேதி தெரியுமா?

அக்.8: அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸா, ரஷ்ய பத்திரிகையாளர் திமித்ரி முராதஃப் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அக்.8: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஐசரி கணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், இந்தச் சங்கத்தில் 15 ஆண்டுகள் துணைத் தலைவராக இருந்தார்.

அக்.9: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இது, ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ என அழைக்கப்படும்.

அக்.10: 2022ஆம் ஆண்டில் பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ள காமன்வெல்த் ஹாக்கிப் போட்டியிலிருந்து விலகுவதாக ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்தது.

அக்.13: தமிழகத்தில் நவம்பர் 1 முதல்ஒன்பதாவதற்குக் கீழ் உள்ள வகுப்பு களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வாரத்தில் 7 நாட்களும் வழிபாட்டுத் தலங்களை திறக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

அக்.14: ‘டி23’ என்று பெயரிடப்பட்ட புலியை 23 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் உயிருடன் வனத்துறைப் பிடித்தது.

அக்.13: சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்திருந்தவர்களின் பட்டியலில் பீலேவின் (77 கோல்) சாதனையை இந்தியாவின் சுனில் சேத்ரி முறியடித்தார். 79 கோல் அடித்திருக்கும் சுனில் சேத்ரி 3ஆம் இடத்தில் உள்ளார்.

அக்.15: துபாயில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துக் கோப்பையை வென்றது. இது சென்னை அணி வெல்லும் 4-வது கோப்பை.

பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் (அக்.8), புகழ்பெற்ற மலையாள நடிகர் நெடுமுடி வேணு (அக்.11), பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் (அக்.12) ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.

2. கதைப்போமா அறிவியல் 5: நோபல் நாயகர்கள்!

அக்டோபர் வந்தாலே அறிவியல் ஆராய்ச்சி சமூகத்திற்கு பரபரப்பு தொற்றிக் கொள்வது வழக்கம். நோபல் அமைப்பு அந்த வருடத்திற்கான விருது பெற்றவர்கள் யார் என்பதை முதல் இரண்டு வாரங்களில் அறிவிப்பதை வழக்கமாக வைத்திருப்பதால் வரும் பரபரப்பு அது.

வேதியியல் பொறியாளராகவும், தொழில்முனைவருமாக இருந்த ஆல்ப்ஃரட் நோபல் 1896ல் இறப்பதற்கு முன்னால் எழுதி வைத்த உயிலில், வாழ்நாள் முழுக்க தான் சேர்த்த சொத்துக்களை வைத்து குறிப்பிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றவர்களுக்கு வருடந்தோறும் கொடுக்கப்பட வேண்டும் என எழுதிவைத்துவிட்டுப் போக நோபல் அமைப்பு தொடங்கப்பட்டது. வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்படும் டெனமைட்டை கண்டறிந்தவர் நோபல் என்பது கிளைச் செய்தி. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஆறு துறைகளில் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

இயற்பியல், வேதியியல், மருத்துவம் என மூன்று அறிவியல் துறைகளுக்கும், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி என மற்ற துறைகளுக்குமாக பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் அதிக பட்சம் மூன்று பேர் ஒரு துறைக்கான விருதை பகிர்ந்துகொள்ளலாம். 975 பேர் இதுவரை நோபல் பரிசு வென்றிருக்கிறார்கள் என்றாலும் அதில் 58 பேர் மட்டுமே பெண்கள் என்பது கவனத்துடன் உற்று நோக்க வேண்டிய புள்ளியியல் தகவல். இது அறிவியல் தொடர் என்பதால், அறிவியல் துறைகளுக்கான இந்த வருட பரிசு வெற்றியாளர்களின் ஆராய்ச்சி பணிகளைப் பார்த்துவிடலாம்.

இயற்பியல்

இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூவர் இந்த வருட பரிசை பகிர்ந்து கொள்கிறார்கள். மூவருமே கோட்பாடு இயற்பியலாளர்கள் (Theoretical physicists). அதென்ன கோட்பாடு இயற்பியல் என்ற கேள்வி எழலாம். நம்மைச் சுற்றியிருக்கும் நிகழ்வுகளை விளக்குவதுதான் இயற்பியலின் அடிப்படை நோக்கம். குளிப்பதற்காக தொட்டியில் அமர்ந்த ஆர்கிமிடீஸ் தன் எடைக்கேற்ற தண்ணீர் வெளியேறியதைப் பார்த்து, அதிலிருந்து மிதவை (Buoyancy) என்பதைக் கணித வழியாக செய்த வரையறை மூலமாகத்தான் கப்பல் போக்குவரத்து என்பது தொடங்கியது. ஆப்பிள் மரத்தில் கீழ் அமர்ந்திருக்கையில் தலையில் ஆப்பிள் விழுந்ததில் இருந்து தொடங்கிய சிந்தனைதான், நியூட்டனின் புவியீர்ப்பு விசை பற்றிய கணித வடிவாக மாறியது. ஆர்கிமிடீஸ், நியூட்டன் போன்றவர்கள் நேரடி இயற்பியலாளர்கள்.

ஆனால், அறிவியல் ஆராய்ச்சிகளில் இப்படி நேரடியாகவே பணி புரிவது கடினம். இதைத் தீர்க்க, பெறப்படும் தகவல்களைக் கொண்டு மாதிரிகளை (Model) உருவாக்கி, அந்த மாதிரிகள் மாற்றங்களுக்கு எப்படி உட்படும் என்பதை கணித வடிவில் கொண்டுவரும் முறைமையை கோட்பாடு இயற்பியல் என சொல்லலாம். இந்த வருடம் நோபல் பரிசு வென்ற – க்ளாஸ் ஹேசல்மன், ஜியார்ஜியோ பரீசி மற்றும் சியக்கூரோ மனாபி – ஆகிய மூவரின் ஆராய்ச்சி முயற்சிகள் இன்றைய காலத்திற்கு ஏற்ற சூழலியலின் அடிப்படை அறிவியல் சம்பந்தப்பட்டது. கடலுக்கு கீழ் இருக்கும் பனிப்பாறைகள் உருகும் தன்மை முதல் பறவைகள் ஒன்றாக பறப்பதன் பின்னிருக்கும் காரணிகள் வரை ஆழமாகச் செல்கின்றன இவர்களது ஆராய்ச்சிகள். இந்த வருட இயற்பியல் வெற்றியாளர்கள் பற்றிய நோபல் அமைப்பின் அறிக்கை – https://www.nobelprize.org/prizes/physics/2021/press-release/

வேதியியல்

பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் வேதியியலுக்கான பரிசை சரிசமமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இருவருக்கும் நேரடியான அறிமுகம் இல்லை என்றாலும், தனித்தனியாக மேற்கொண்ட இவர்களது ஆராய்ச்சிகளில் இருந்து பெறப்பட்ட புதுமையான கண்டுபிடிப்பிற்குத்தான் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. வினையூக்கம் (Catalysis) என்பது நம் உடலில் தொடங்கி நம்மைச் சுற்றி நடக்கும் பல நிகழ்வுகளின் அடிப்படை. உதாரணத்திற்கு, நாம் உண்ணும் உணவை நம் உடல் நொதிகள் (Enzymes) மூலம் வேதிமாற்றம் செய்து சத்துக்களை எடுத்துக்கொள்கிறது. நீங்கள் கையில் வைத்திருக்கும் அலைபேசியின் உள்ளிருக்கும் பேட்டரி உலோகத்தால் ஆன மூலக்கூறுகளால் கட்டப்பட்டது.

அடிப்படையில் இது வரை, நொதிகள் மற்றும் உலோகம் என்ற இரண்டு மட்டுமே வினையூக்கம் செய்ய பயன்படும் என்றுதான் வேதியியல் ஆராய்ச்சி உலகம் நினைத்திருந்தது.

மேற்கண்ட இரண்டு ஆராய்ச்சியாளர்களும் இதற்கு மாற்றாக இயங்கும் வினையூக்கியை கண்டறிந்திருக்கிறார்கள். கரிம வினையூக்கம் (Organocatalysis) எனப்படும் இந்த முறைமை கரிம அணுக்களை (Carbon atoms) பயன்படுத்துகிறது. ஆக்சிஜன், நைட்ரஜன் என பலவற்றுடன் கரிமம் எப்போதும் இணைய விரும்பும் கரிமத்தின் தன்மை இதற்கு அடிப்படை. இந்த கண்டுபிடிப்பு புதிய மருந்து ஆராய்ச்சிகளுக்கு வெகுவாக பயன்படுவதோடு, மாசு உண்டாக்காத விதத்தில் வினையூக்கத்தை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இவர்களது ஆராய்ச்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள, நோபல் வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கு செல்லுங்கள் – https://www.nobelprize.org/prizes/chemistry/2021/press-release/

மருத்துவம்

வேதியியல் போலவே மருத்துவத்திற்கான நோபல் பரிசை இருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். இருவரும் அமெரிக்கர்கள். நரம்பியல் ஆராய்ச்சியாளரான ஆர்டம் பாட்டபூடியன், உடல்கூறு நிபணரான டேவிட் ஜூலியஸ் இருவரது ஆராய்ச்சிகளும் தொடுதலின் அறிவியல் சார்ந்தவை. சூடாக இருக்கும் தட்டின் மீது கையை வைத்தால், தோல் சென்சாராக மாறி, மூளையில் இருக்கும் நியூரான்களுக்கு தகவல் அனுப்பி கையை இழுத்துக் கொள்வதற்கு இடையில் நடக்கும் தகவல் பரிமாற்றம் படித்தறிய பிரமிப்பூட்டுவது. நாம் அறிந்து நடக்கும் இந்த நிகழ்வுகளைத் தாண்டி அனிச்சையாக உடலுக்குள் இப்படி பல்லாயிரம் நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இதை முழுக்க புரிந்து கொள்வதன் மூலம், நோய் காரணிகளை மட்டுமல்லாமல், சிறந்த வகையில் வலி மேலாண்மை செய்வதற்கும் இவர்களின் ஆராய்ச்சிகள் உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்த பரிசு. நோபல் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை இதோ – https://www.nobelprize.org/prizes/medicine/2021/prize-announcement/

3. ஓசூரில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம்: காணொலியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.19 கோடியே 5லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம், மீன்வளத் துறை கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

நாட்டு கோழிக்குஞ்சு உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமங்களில் இத்தொழிலை ஊக்குவித்து தொழில் முனைவோரை உருவாக்கவும், பயிற்சி அளிக்கவும் ஓசூரில்உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ.6 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் குஞ்சுபொரிப்பகத்துடன் கூடிய நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதைசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இந்த வளாகத்தில் 5,100 வளரும்கோழிகள், 9,150 முட்டையிடும் கோழிகளைப் பராமரிக்க முடியும். வாரத்துக்கு 20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 10 லட்சம் கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் நபார்டு திட்ட நிதியில் ரூ.8 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மீன்வளர்ப்பு தொழில்நுட்ப தொழில்சார் கல்வி நிலைய கட்டிடத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். மீன்வளர்ப்பு தொழில் நிறுவனத்துக்கு தேவையான 2-ம் நிலை தொழில்நுட்ப உதவியாளர்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும். மேலும், திருச்சி ஜீயபுரத்தில் ரூ.3 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மைய கட்டிடத்தையும் முதல்வர் திறந்துவைத்தார். விலைஉயர்ந்த நன்னீர் அலங்கார மீன்களை வளர்ப்பவர்களுக்கு சிறந்த தரமான சினை மீன்களை உற்பத்தி செய்வது இம்மையத்தின் நோக்கமாகும்.

4. கற்றல் இடைவெளியை குறைக்க ‘இல்லம் தேடி கல்வி’ புதிய திட்டம் அறிமுகம்

பள்ளிக் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை குறைக்கும் பொருட்டு ‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டம் காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

கரோனா காரணமாக பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டதால் பள்ளிக் குழந்தைகளின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் பள்ளிக்கல்வித் துறை ‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டத்தை கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின்படி, தன்னார்வலர்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஆடல், பாடல், பொம்மலாட்டம் மூலம் பாடம் மற்றும் பாடம் சார்ந்த விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்படும்.

அதேபோல், இந்தத் திட்டத்தில் இணைந்து தன்னார்வலர்களாக பணியாற்ற illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த புதிய இணையதளத்தையும், விழிப்புணர்வு வாகன பிரசாரத்தையும் சென்னை டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

வயதுவரம்பு தளர்வு

பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா கூறும்போது, “ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட உள்ளது. வெகு விரைவில் அரசாணை வெளியாகும்” என்று குறிப்பிட்டார். இந்நிலையில், இதுதொடர்பான அரசாணை நேற்று வெளியானது.

5. தமிழக அரசு, ஐரோப்பிய தமிழர்கள் நிதியால் கொலோன் பல்கலை. தமிழ் பிரிவு நீட்டிப்பு

மூடும் நிலையில் இருந்த தமிழ்ப் பிரிவை 2023-ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக கொலோன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்விப் பிரிவில் தமிழுக்கானக் கல்வி கடந்த 58 ஆண்டுகளாக போதிக்கப்படுகிறது. ஆனால், நிதி நெருக்கடியால் கடந்த நவம்பர் 2020 முதல் தமிழ்ப் பிரிவை மூடுவதாக கொலோன் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. அதன்பின், தமிழ்ப் பிரிவை காக்க ஜெர்மனி வாழ் தமிழர்கள் மற்றும் ஐரோப்பியத் தமிழர் கூட்டமைப்பு முயற்சி எடுத்தது. இதற்காக, தமிழக அரசிடமும் நிதி உதவி கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு ரூ.1.25 கோடியும், ஐரோப்பியத் தமிழர் கூட்டமைப்பு சார்பில் ரூ.23 லட்சமும் நிதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவை மார்ச் 2023-ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

6. கொரோனா தடுப்பூசி: உத்தரகாண்ட் மாநிலம் சாதனை – பிரதமர் மோடி பாராட்டு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக முதல் டோஸ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹிமாச்சல் பிரதேஷ், கோவா உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி முடித்துள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி தேவ பூமியில் வாழும் மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான தேசத்தின் போரில் உத்தரகாண்டின், சாதனை மிக முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். பெருந்தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிக சிறப்பானதாக திகழப் போகிறது என்கிற நம்பிக்கை தமக்கு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

7. இந்திய கடற்படைக்கு போயிங் 11-ஆவது பி-81 போர் விமானம்

அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடமிருந்து 11-ஆவது பி-81 நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர் விமானத்தை இந்திய கடற்படை பெற்றுக்கொண்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்திடம் இருந்து 8 பி-81 விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த விமானங்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலும் 4 பி-81 விமானங்களை வாங்க 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி மூன்றாவது பி-81 விமானம் இந்திய கடற்படையிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பி-81 விமானங்களை இந்திய கடற்படையிடம் போயிங் ஒப்படைத்துள்ளது. மேலும் ஒரு விமானம் வழங்கப்பட வேண்டியுள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்க்கும் போர்த் திறன்களைக் கொண்ட பி-81 விமானங்கள் கடல்சார் உளவுப் பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றன. அத்துடன் பேரிடர் காலங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவவும் பயன்படுத்தப்படுகின்றன.

8. நோரி, பதோசா முதல் முறை சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் கேமரூன் நோரி, மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் பௌலா பதோசா ஆகியோர் சாம்பியன் ஆகினர்.

இப்போட்டியில் இவர்கள் இருவரும் சாம்பியன் ஆனது இது முதல் முறையாகும். அதேபோல் அவர்கள் இதுவரை வென்ற பட்டங்களிலே இதுதான் மிகப்பெரிதும் கூட.

கரோனா சூழல் காரணமாக தாமதமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியை பல நட்சத்திர போட்டியாளர்கள் தவிர்த்து விட, போட்டியில் பங்கேற்ற இதர முக்கிய வீரர், வீராங்கனைகளும் தோற்கடிக்கப்பட்டனர். இதனால் சர்வதேச தரவரிசையில் முதல் 25 இடங்களில் இல்லாத இருவர் சாம்பியன் ஆகியிருக்கின்றனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் போட்டித்தரவரிசையில் 21-ஆம் இடத்திலிருந்த கேமரூன் நோரி 3-6, 6-4, 6-1 என்ற செட்களில் 29-ஆம் இடத்திலிருந்த ஜார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை தோற்கடித்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் போட்டித்தரவரிசையில் 21-ஆம் இடத்திலிருந்த பௌலா பதோசா 7-6 (7/5), 2-6, 7-6 (7/2) என்ற செட்களில் 27-ஆவது இடத்திலிருந்த பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தினார்.

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் போட்டியில் முதல் முறையாக களம் காணும் சீசனிலேயே சாம்பியன் ஆன 3-ஆவது வீராங்கனை என்ற பெருமையை பதோசா பெற்றுள்ளார். முன்னதாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் (1999), கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்கு (2019) ஆகியோர் இவ்வாறு பட்டம் வென்றனர்.

உலகத்தரவரிசையில் 26-ஆவது இடத்தில் இருக்கும்போது இப்போட்டி -யில் சாம்பியன் ஆகியிருக்கும் 4-ஆவது வீரர் நோரி. முன்னதாக குரோஷியாவின் இவான் ஜுபிசிச் (2019), ஸ்பெயின் வீரர் அலெக்ஸ் காரெட்ஜா (2000), அமெரிக்காவின் ஜிம் கொரியர் (1991) ஆகியோர் அவ்வாறு சாம்பியன் ஆகியிருந்தனர்.

`9 கோடி பரிசு

சாம்பியன் ஆகியிருக்கும் நோரி மற்றும் பதோசாவுக்கு தலா ரூ.9 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

9. அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவு அமைச்சர் காலமானார்

அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவு அமைச்சராகப் பதவி வகித்த காலின் பவெல் (84) திங்கள்கிழமை காலமானார். அவரின் மறைவுக்கு முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் அமைப்பின் தலைவராக கடந்த 1989ஆம் ஆண்டு காலின் பவெல் பொறுப்பேற்றார். 1991ஆம் ஆண்டு பனாமாவிலும் குவைத்திலும் இருந்து இராக் ராணுவத்தை வெளியேற் -றும் பணிகள் அவரின் மேற்பார்வையில் நடைபெற்றது. இதனால் அவர் மீது நன்மதிப்பு ஏற்பட்டது.

எனினும் இராக்குக்கு எதிராக அமெரிக்க போர் தொடுத்தது தொடர்பாக 2003-ஆம் ஆண்டு ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கமளித்த பவெல், பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சதாம் ஹுசேன் ரகசியமாக பதுக்கி வைத்திருந்ததாக தவறான தகவலை தெரிவித்தார். இது அவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை அமெரிக்க வெளியுறவு அமைச்சராக அவர் பதவி வகித்தார். இவரே அந்நாட்டின் முதல் கருப்பின வெளியுறவு அமைச்சர்.

10. மாஸ்கோவில் நேட்டோ அலுவலகங்கள் மூடப்படும்: ரஷியா அறிவிப்பு

மாஸ்கோவில் உள்ள நேட்டோ அலுவலகங்கள் மூடப்படும் என ரஷியா அறிவித்துள்ளது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் NATO கூட்டமைப்பின் அலுவலகங்கள் உள்ளன. நேட்டோ நாடுகளுடனான உயர்நிலை கூட்டங்களுக்காக அந்த அலுவலகங்களில் ரஷியா சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8 பேரை நோட்டோ கடந்த வாரம் நீக்கியது. அவர்கள் ரஷியாவின் உளவுத்துறை அதிகாரிகளாக ரகசியமாக செயல்பட்டதால் நீக்கியதாக நேட்டோ தெரிவித்தது.

1. “Extended Producer Responsibility” which is in news recently, is associated with?

A) Plastic waste management 

B) Automobile Manufacturing

C) Meat Production

D) Agricultural Export

  • The Union Ministry of Environment has released a draft notification on regulation of extended producer responsibility under the plastic waste management rules 2016. This covers three categories of plastics namely rigid plastic packaging: flexible plastic packaging of single layer / multilayer plastics. As per the draft, quantity of waste that will have to be managed by producers and importers has been specified.

2. Which institution has released the ‘State of The World’s Hand Hygiene’ report?

A) WHO and UNICEF 

B) NITI Aayog

C) Bell and Melinda Gates Foundation

D) Indian Medical Association

  • World Health Organization (WHO) and UNICEF jointly released the 2021 State of The World’s Hand Hygiene report. As per the report, all households in the world’s 46 least developed countries could have handwashing facilities by 2030 if the world invested less than $1 per person per year, in hand hygiene. An annual cost to governments on promoting handwashing with soap at home comes to 2.5% of the average government health expenditure in these countries.

3. What is the name of skill development programme for the unemployed youths of India, conducted by Indian Railway?

A) Better India Better World

B) Skill India

C) Rail Drishti

D) Rail Kaushal Vikas Yojana 

  • The Rail Kaushal Vikas Yojana is a technical skill development programme organized and conducted by the Indian Railways, to unemployed youths of age 18–35 years.
  • The scheme aims to enhance their employability and entrepreneurship. Recently, the Indian Railways’ Banaras Locomotive Works had successfully conducted the training for its first batch of trainees, and distributed self–employment toolkits cum certificated to the trainees.

4. “The Naval Interaction–2021” is a joint naval exercise between which two countries?

A) India and USA

B) India and China

C) China and Russia 

D) Japan and Australia

  • The Naval forces of China and Russia have commenced the “The Naval Interaction–2021” joint Naval exercise, which aims to enhance the two country’s capability and hone their skills to jointly deal with maritime security threats. The exercise is taking place at Russia’s Peter the Great Gulf in the Sea of Japan.

5. What is the theme of ‘World Sight Day 2021’?

A) Love Your Eyes 

B) Donate Eyes; Donate Life

C) Eye Health matters

D) Sight First

  • World Sight Day is observed annually on the second Thursday of October. This year, the Day is observed on October 14.
  • It is a global event which aims to create awareness on blindness and vision impairment. It was originally initiated by the Sight First Campaign of Lions Club International Foundation in 2000. The theme for World Sight Day 2021 is ‘Love Your Eyes’.

6. Where was the eighth ministerial meeting of the India–USA Economic and Financial Partnership Dialogue held recently?

A) New Delhi

B) Washington DC 

C) Pune

D) New York

  • The eighth ministerial meeting of the India–U.S.A. Economic and Financial Partnership Dialogue held at Washington DC. The meeting was chaired by Union Minister for Finance & Corporate Affairs Nirmala Sitharaman and the Secretary of the Treasury of the United States Dr. Janet Yellen.
  • During the meeting, discussions were held on recovery from the COVID–19 pandemic, financial regulatory and technical collaboration, multilateral engagement, climate finance and anti–money laundering and combating the financing of terrorism.

7. The Challenge, the world’s first movie in space, is being made by which country?

A) USA

B) Russia 

C) China

D) Israel

  • “The Challenge” is the world’s first movie to be shot in space. Russian actress and a director along with a cosmonaut returned to Earth after spending 12 days in the International Space Station (ISS) shooting scenes for the movie. The trio departed ISS in their Soyuz MS–18 spacecraft, according to NASA. They blasted off from the Baikonur Cosmodrome in Kazakhstan earlier this month.

8. A K Goel, MD & CEO of UCO Bank has been recently elected as the Chairman of which body?

A) Press Trust of India

B) IBPS

C) Indian Bank’s Association 

D) RBI Services Board

  • The present Managing Director and CEO of UCO Bank Shri. A K Goel has been elected as the chairman of Indian Bank’s Association for the year 2021–22. The election was held at the body’s Managing Committee meeting held on 2021 Oct.14th. He succeeds Rajkiran Rai G, who is the Managing Director and Chief Executive Officer of Union Bank of India.

9. ‘Hamilton’s Object’ which was discovered recently, is associated with which field?

A) Physics

B) Space Science 

C) Virology

D) Economics

  • From the images captured by the NASA/ESA Hubble Space Telescope, a team of astronomers led by Timothy Hamilton have discovered an unusual gravitational lensing configuration. It is named as ‘Hamilton’s Object’.

10. Amoria thorae, which was seen in the news recently, is a new species of?

A) Marine Snail 

B) Turtle

C) Spider

D) Crab

  • Amoria is a genus of marine gastropods (snails and slugs). These predatory creatures are found in onshore and offshore waters around the entire coast of Australia. Some species extend into waters of southern Indonesia. Named Amoria thorae, the species is very rare.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!