Tnpsc

1st & 2nd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1st & 2nd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st & 2nd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st & 2nd August 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. இந்தியாவில் செயல்படும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் வரம்பு என்ன?

அ) 1000 கிமீ

ஆ) 2000 கிமீ

இ) 4000 கிமீ 🗹

ஈ) 6000 கிமீ

  • துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சரான சர்பானந்த சோனோவால், உள்நாட்டு கப்பல் மசோதா, 2021’ஐ மக்கள் அவையில் அறிமுகப்படுத்தினார். இது வழிசெலுத்தல் பாதுகாப்பு, உயிர் மற்றும் சரக்கு பாதுகாப்பு மற்றும் ஏற்படக்கூடிய மாசுபாட்டைத் தடுக்க முயற்சி செய்கிறது. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், உள்நாட்டு கப்பல்களை நிர்வகிக்கும் நடைமுறைகளை வலுப்படுத்தவும் இது எண்ணுகிறது. 4000 கிமீ நீள உள்நாட்டு நீர்வழிகள் இந்தியாவில் இயங்குகின்றன.

2. எந்த மாநிலத்தின் இரு நகரங்கள் யுனெஸ்கோவால் ‘வரலாற்று நகர்ப்புற நிலப்பரப்பு திட்டத்தின்’கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன?

அ) உத்தர பிரதேசம்

ஆ) மத்திய பிரதேசம் 🗹

இ) மகாராஷ்டிரா

ஈ) ஒடிஸா

  • மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த குவாலியர் மற்றும் ஓர்ச்சா ஆகிய நகரங்கள் யுனெஸ்கோவால் ‘வரலாற்று நகர்ப்புற நிலப்பரப்பு திட்டத்தின்’ கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வேகமாக வளர்ந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களை உள்ளடக்கிய இந்தத்திட்டம் 2011ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் ஆஜ்மீர் மற்றும் வாரணாசி உட்பட தெற்காசியாவின் ஆறு நகரங்கள் ஏற்கனவே இத்திட்டத்தில் உள்ளன. ஓர்ச்சா மற்றும் குவாலியர் ஆகியவை முறையே ஏழாவது மற்றும் எட்டாவது நகரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

3. இந்தியாவின் இரண்டாவது நூல்களின் கிராமத்தை அமைத்த இந்திய மாநிலம் எது?

அ) ஒடிஸா

ஆ) கேரளா 🗹

இ) கர்நாடகா

ஈ) மேற்கு வங்கம்

  • மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள பிலார் என்ற கிராமம், கடந்த 2017ஆம் ஆண்டில் அம்மாநில அரசால் ‘நூல்களின் கிராமம்’ என அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது ‘நூல்களின் கிராமம்’, கேரளத்தின் கொல்லம் கொட்டாரக்கரா நகரத்திலிருந்து ஐந்து கிமீட்டர் தொலைவில் உள்ள பெருங்குளம் என்ற குக்கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மகாத்மா காந்தியின் நினைவாக, அக்கிராமத்தில் உள்ள வாசகர்களை அதிக நூல்களைப் படிக்க ஊக்குவிக்கும் வகையில் ஒரு நூலகமும் தொடங்கப்பட்டுள்ளது.

4. அண்மையில் எந்த நகரத்தில், உலகின் முதல் 3D முறையில் அச்சிடப்பட்ட எஃகு பாலம் திறக்கப்பட்டுள்ளது?

அ) ஆம்ஸ்டர்டாம் 🗹

ஆ) டோக்கியோ

இ) சிட்னி

ஈ) மாஸ்கோ

  • உலகின் முதல் 3D முறையில் அச்சிடப்பட்ட எஃகு பாலமானது சமீபத்தில் ஆம்ஸ்டர்டாமில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இது MX3D என்ற ஒரு டச்சு ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்தப் பாலத்தை நெதர்லாந்தின் மகாராணி மெக்ஸிமா திறந்து வைத்தார். நான்கு ஆண்டுகாலமாக கட்டப்பட்டு வந்த இந்தப் பாலம் ஆம்ஸ்டர்டாம் நகரத்தின் மையத்திலுள்ள பழமையான கால்வாய்களில் ஒன்றான அவுடெஜிட்ஸ் அச்செர்பர்க்வாலில் நிறுவப்பட்டுள்ளது.

5. மீகாங்-கங்கா ஒத்துழைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை?

அ) 5

ஆ) 6 🗹

இ) 7

ஈ) 8

  • மீகாங்-கங்கா ஒத்துழைப்பு என்பது இந்தியா, கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மை அமைப்பாகும். இந்த நாடுகளுக்கிடையே அரசியல் ரீதியான ஒத்துழைப்பை அதிகரிக்க இது 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சமீபத்தில், 11ஆவது மீகாங்-கங்கா ஒத்துழைப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

6. ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் வென்ற 3ஆவது இந்தியர் யார்?

அ) சோம்தேவ் தேவ்வர்மன்

ஆ) சுமித் நாகல் 

இ) யூகி பாம்ப்ரி

ஈ) ரோகன் போபண்ணா

  • கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக, டோக்கியோ விளையாட்டுப் போட்டியின் முதல் போட்டியில் டெனிஸ் இஸ்டோமைனை தோற்கடித்து ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் போட்டியில் வென்ற மூன்றாவது இந்தியர் என்னும் பெருமையை சுமித் நாகல் பெற்றுள்ளார். 1988ஆம் ஆண்டு சியோல் விளையாட்டுப் போட்டியில், பாரகுவேவைச் சார்ந்த விக்டோ கபல்லெரோவை வீழ்த்தி, ஒற்றையர் போட்டியில் வென்ற முதல் இந்தியராக ஆனார் ஜீஷன் அலி.
  • அதன்பிறகு, 1996ஆம் ஆண்டு அட்லாண்டா விளையாட்டுப்போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், பிரேசிலின் பெர்னாண்டோ மெலிகெனியை வீழ்த்தி வெண்கலம் வென்றார் லியாண்டர் பயஸ்.

7. இந்தியாவில் நிறுவனங்கள் சட்டம், 2013’ஐ அமல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ) நிதி அமைச்சகம்

ஆ) பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் 🗹

இ) MSME அமைச்சகம்

ஈ) வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

  • நிறுவனங்கள் சட்டம், 2013’இன்கீழ் நிறுவனங்களை இணைப்பது தொடர்பான விதிகளை நடுவண் அரசு திருத்தியுள்ளது. நிறுவனங்கள் சட்டம், 2013’ஐ அமல்படுத்தும் நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், நிறுவனங்கள் (ஒருங்கிணைப்பு) விதிகள், 2014’ஐ திருத்தியுள்ளது.
  • இச்சட்டத்தின் பிரிவு 16’இன்கீழ், ஏற்கனவேயுள்ள நிறுவனத்திற்கு புதிய பெயரை ஒதுக்கீடுசெய்யும் முறையில் திருத்தஞ்செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும்.

8. யூரோபா கிளிப்பர் மிஷனுக்கான ஏவுதள சேவைகளை வழங்க நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி நிறுவனம் எது?

அ) புளூ ஆர்ஜின்

ஆ) ஸ்பேஸ் X 🗹

இ) விர்ஜின் கேலக்டிக்

ஈ) போயிங்

  • யூரோபா கிளிப்பர் மிஷனுக்கான ஏவுதள சேவைகளை வழங்குதற்காக NASA, ஸ்பேஸ் X நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. வியாழனின் நிலவான யூரோபாவை விரிவாக ஆய்வு செய்வதற்காக பூமியிலிருந்து செல்லும் முதல் திட்டம் இதுவாகும்.
  • புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் ஏவுகலத்தின்மூலம் வரும் 2024 அக்டோபரில் இது ஏவப்படும். நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகமானது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு இயற்பியல் ஆய்வகத்துடன் இணைந்து யூரோபா கிளிப்பர் திட்டத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

9. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட அண்மைய தரவுகளின்படி, 2019-20’இல் வேலையின்மை விகிதம் என்ன?

அ) 6.1%

ஆ) 5.4%

இ) 4.8% 🗹

ஈ) 3.2%

  • தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (NSO) 2019 ஜூலை – 2020 ஜூன் மாதத்திற்கு இடையில் நடத்தப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு மீதான மூன்றாமாண்டு அறிக்கையின்படி, 2019-20’இல் வேலையின்மை விகிதம் 4.8% ஆக குறைந்துள்ளது. 2018-19’இல் வேலையின்மை விகிதம் 5.8% ஆகவும், 2017-18’இல் 6.1% ஆகவும் இருந்தது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2019-20’இல், தொழிலாளர் குறிகாட்டிகளும் அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளன.

10. 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் எத்தனை நச்சுயிரியல் ஆராய்ச்சி மற்றும் கண்டறி ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?

அ 12

ஆ) 42 🗹

இ) 82

ஈ) 142

  • இந்திய அரசாங்கம் நாடு முழுவதும் 42 வைராலஜி ஆராய்ச்சி மற்றும் வைரஸ் கண்டறியும் ஆய்வகங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. மொத்தம் `324 கோடி செலவில் இவை நிறுவப்படவுள்ளன.
  • 2021-22 முதல் 2025-26 வரையிலான 15ஆம் நிதி ஆணையத்தின் காலத்தில் இவை நிறுவப்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் நலவாழ்வு ஆராய்ச்சித்துறையின் கீழ் உள்ள திட்டத்தின்மூலம் இவை நிறுவப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என்.கோா்மாடே பதவியேற்பு

கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என்.கோா்மாடே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படையில் 39 ஆண்டு சேவையாற்றிய பின் துணைத் தளபதி பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஜி.அசோக் குமாரிடம் இருந்து அப்பொறுப்பை எஸ்.என்.கோா்மாடே ஏற்றுக் கொண்டாா். துணைத் தளபதி பொறுப்பேற்றதும் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்டு ஏற்றாா். முன்னதாக, கடற்படை செயல்பாடுகள் தலைமை இயக்குநா், கிழக்கு கடற்படை கட்டுப்பாட்டு மைய தலைமை அதிகாரி, பாதுகாப்புத்துறை பணியாளா் சேவைகள் கட்டுப்பாட்டு அதிகாரி போன்ற சவாலான பல பதவிகளை எஸ்.என்.கோா்மாடே வகித்துள்ளாா்.

கடற்படை துணைத் தளபதி பொறுப்பை ஏற்கும் முன்பு, அவா் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளா் தலைமையகத்தில் முப்படைகளின் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி பிரிவின் துணைத் தலைவா் பதவியை வகித்துள்ளாா்.

2. சேதி தெரியுமா?

ஜூலை 16: நாட்டில் முதன் முறையாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உணவு தானிய ஏடிஎம் இயந்திரத்தை அந்த மாநில அரசு நிறுவியுள்ளது.

ஜூலை 17: கீழடியில் நடந்துவரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சுடுமண் பெண் பொம்மை, உறைகிணறு ஆகியவை கண்டறியப்பட்டன.

ஜூலை 18: திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நவீன ரக ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கி இந்தியக் கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தத் துப்பாக்கி தானாகவே இலக்கைத் தேடும் நுட்பம்கொண்டது.

ஜூலை 18: ஐந்து நட்சத்திர ஹோட்டல் வசதியுடன் கூடிய ரயில் நிலையத்தை குஜராத் மாநிலம் காந்திநகரில் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

ஜூலை 19: ஆந்திரம், தெலங்கானா இடையேயான தண்ணீர் பிரச்சினையால் கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் குறுக்கே அணைகள் கட்டும் உரிமையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது.

ஜூலை 19: தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதன் முறையாக தசம எண்களில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

ஜூலை 20: தமிழ்நாட்டில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பில் 33 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

ஜூலை 21: சீனாவில் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயில் அறிமுகமானது. மின்காந்த சக்தியில் இயங்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜூலை 23: உலக விளையாட்டுத் திருவிழாவான 32-வது ஒலிம்பிக், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. 206 நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8 வரை நடைபெறுகின்றன.

3. உலகத் தரம் மிக்க புலிகள் காப்பகமாக ஆனைமலை, முதுமலை காப்பகங்களுக்கு அங்கீகாரம்

கோவை மாவட்டம் ஆனைமலை மற்றும் நீலகிரி முதுமலை புலிகள்காப்பகங்களை உலகத் தரமிக்கபுலிகள் காப்பகமாக அங்கீகரித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தியாவில் 20 மாநிலங்களில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. அவற்றில் உலக அளவிலான புலிகள் பாதுகாப்பு தரநிலைகளை உறுதிப்படுத்துதல் ஆய்வினை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2020-ம் ஆண்டு செயல்படுத்தியது. அதில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம், புலிகள் பாதுகாப்புக்கான மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் ஈடுபாடு ஆகியன கணக்கிடப்பட்டன.

புலிகள் வாழும் 20 மாநிலங்களில் உள்ள 28 புலிகள் காப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் 14 புலிகள் காப்பகங்களுக்கு புலிகள் பாதுகாப்பு தரநிலையை உறுதிப்படுத்தி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

4. வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து

டோக்யோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்யோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கத்திற்கான இன்று நடத்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சீன வீராங்கனையை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் பி.வி.சிந்து.

பி.வி.சிந்து வெண்கலம் வென்றதன் மூலம் டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2ஆவது பதக்கம் கிடைத்தது. ஏற்கெனவே டோக்யோ ஒலிம்பிக் பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். முன்னதாக மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலப் பதங்கங்களை வென்றிருந்தார். தற்போது அவரைத் தொடர்ந்து சிந்துவும் ஒலிம்பிக் போட்டியில் 2 பதங்களை வென்ற முதல் வீராங்கனை என்கிற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 2016 ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

5. தமிழக மேலவையின் வரலாறு

இன்று தமிழக ‘சட்டமேலவை’ தனது நூற்றாண்டை நிறைவு செய்கிறது. அந்த மேலவைக்கு மூன்று தடவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவன் என்கிற முறையில், எனக்கும் இது பெருமைக்குரிய தருணம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1921-இல், நம்முடைய மேலவை (லெஜிஸ்லேடிவ் கவுன்சில்) உதயமாவதற்கு முன்பு, இந்திய நாட்டில் நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகளை விளக்குவது அவசியம். மகாத்மா காந்தி நடத்திய ஒத்துழையாமை போராட்டத்தின் விளைவாக, அப்போதைய பிரிட்டிஷ் அரசின் இந்தியாவுக்கான அமைச்சா் சா் மொண்டெகுவும் இந்திய நாட்டின் வைஸ்ராயாக இருந்த செம்ஸ்ஃபோா்ட் பிரபுவும் கூடி விவாதித்து, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய சற்று கூடுதலான அதிகாரங்களை வழங்க வேண்டுமென முடிவெடுத்தனா்.

இது ‘மொண்டெகு – செம்ஸ்ஃபோா்ட் சீா்திருத்தம்’ என அந்த காலத்தில் கூறப்பட்டது. இதன் பலனாக ‘இந்திய அரசாங்கத்தின் 1919 சட்டம்’ பிறந்தது. இந்த சட்டத்தின் ஒரு பகுதியாக, பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் (ராஜதானிகளில்) மேலவை ஏற்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் உருவானது தான், இந்த மேலவை. தமிழக மேலவை உருவாக்கப்பட்ட 1919-இல் தமிழ்நாடு இருக்கவில்லை. இது சென்னை ராஜதானியாக (பிரஸிடென்சி) இருந்தது. பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ராஜதானிகளாகவும், ஏனைய பகுதிகள் அந்தந்த ராஜாக்களின் சமஸ்தான ஆட்சிப்பகுதிகளாகவும் இருந்தன.

சென்னை ராஜதானியில் இன்றைய தமிழகம், ஆந்திர பிரதேசம், ஒடிஸா மாநிலத்தின் தெற்கு மாவட்டங்கள், மலபாா் மற்றும் தெற்கு கா்நாடகம் ஆகியவை அடங்கியிருந்தன. இந்த ஒட்டுமொத்தப் பகுதிகளின் மக்கள்தொகை, அன்று நான்கு கோடியாக இருந்தது. மேலவை அங்கத்தினா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டது. இந்தப் பட்டியலில் இடம்பெற, ஒருவா் தனக்கென ஒரு வீடு அல்லது ஒரு மனை வைத்திருக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டது. இந்த நிபந்தனையால், நான்கு கோடி மக்களில் வெறும் 12,48,156 போ் மட்டும் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றனா். நம்முடைய மேலவைக்கான முதல் தோ்தல், 1920-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்றது. அப்போது 12.5 லட்சம் போ் வாக்காளா்களாக இருந்தும் வெறும் 3,03,558 வாக்குகள் (25%) மட்டும் பதிவாயின.

பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அன்றைய காங்கிரஸ் கட்சி மேலவைக்கான தோ்தலைப் புறக்கணித்தது. தோ்தலில் காங்கிரஸ் இல்லாத நிலையில், ஜஸ்டிஸ் கட்சி ஒரு பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதனுடைய தலைவரான சா் பிட்டி தியாகராய செட்டி தலைமையில் அந்தக் கட்சி தோ்தல் களத்தில் இறங்கியது. 1920 நவம்பரில் நடைபெற்ற மேலவைத் தோ்தலில், 93 தொகுதிகளில் 63 தொகுதிகளில், ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்றது. சென்னை ராஜதானியின் ஆளுநராக இருந்த வெல்லிங்டன், ஆட்சி அமைக்கும்படி ஐஸ்டிஸ் கட்சியின் தலைவராக இருந்த சா் பிட்டி தியாகராய செட்டியைக் கேட்டுக் கொண்டாா். ஆனால், அவா் அதனை ஏற்க மறுத்து, தனக்கு பதிலாக சுப்புராயலு ரெட்டியாரை முதலமைச்சராக அமா்த்தினாா்.

12.1.1921 அன்று, நம்முடைய மேலவை சா் பி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி அல்ல, வேறு ஒருவா்) தலைமையில் (சோ்மன்) கூடியது. அந்த அவையில் ஒரு பெண்மணி கூட இடம் பெறவில்லை என்பதால், 1.4.1921 அன்று, மீண்டும் மேலவை கூடி மேலவையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்கிற தீா்மானத்தை நிறைவேற்றியது. இதன் விளைவாக, நம் நாட்டின் முதல் எம்பிபிஎஸ் படித்த பெண்மணியான டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி 1926-இல், மேலவை உறுப்பினரானாா். 1919 இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த மேலவை, மீண்டும் நான்கு முறை (1923, 1926, 1930,1934) தோ்ந்தெடுக்கப்பட்டது.

இதற்கிடையில், சுதந்திரப் போராட்டம் காரணமாக மக்களுக்கு அதிக ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டிய நிா்பந்தம் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக, 1935 இந்திய அரசின் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக எல்லா ராஜதானிகளிலும் 1937-இல், பொதுத்தோ்தல் நடத்தப்பட்டு சட்டமன்றப் பேரவை (லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி) வந்தது. ராஜாஜி சென்னை ராஜதானியின் முதலமைச்சா் ஆனாா். அப்போதும்கூட ராஜாஜி மேலவையின் உறுப்பினராகத்தான் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

1953-ஆம் ஆண்டில், தமிழகம் தனி மாநிலமானதற்குப் பின் 63 உறுப்பினா்களைக் கொண்டதாக ஆனது தமிழக சட்ட மேலவை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 21 புது உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க வேண்டிய முறையும் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த உறுப்பினா்களில், இரண்டு இடங்கள் பட்டதாரி தொகுதியின் மூலமாகவும், இரண்டு இடங்கள் ஆசிரியா் தொகுதியின் மூலமாகவும், சட்டமன்றப் பேரவையின் மூலமாகவும், உள்ளாட்சி உறுப்பினா்கள் மூலமாகவும் தலா ஏழு உறுப்பினா்களும், மூன்று உறுப்பினா்கள் ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினா்கள் மூலமாகவும் இடம்பெற்றனா். 1962-இல் ஆசிரியா் தொகுதியிலிருந்து பேராசிரியா் க. அன்பழகனும், 1964, 1978, 1984 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை நானும், மேலவை உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டோம். தமிழக மேலவை உறுப்பினா்களாக இருந்தவா்களில் நானும், ஆா்எம். வீரப்பனும்தான் இப்போது இருக்கிறோம்.

தமிழக மேலவையில் புகழ்பெற்ற தலைவா்களில் சிலா், முன்னாள் குடியரசுத் தலைவா் ஆா். வெங்கட்ராமன், டாக்டா் ஏ.எல். முதலியாா், டாக்டா் வி.கே. ஜான், ம.பொ.சி, டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி, டாக்டா் யூ. ராம ராவ், டாக்டா் பி.வி. செரியன், மாணிக்கவேல் நாயக்கா், எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாா், தமிழக முன்னாள் முதலமைச்சா் மு. கருணாநிதி ஆகியோா். 1.11.1986 அன்று தமிழக மேலவை கலைக்கப்பட்டது. இந்த ஆண்டு, நம்முடைய மேலவை தொடங்கப்பட்டு நூறு ஆண்டு நிறைவடைகிறது.

6. இ-ருபி: டிஜிட்டல் கட்டண முறை; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இ-ருபி என்பது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லா மற்றும் தொடர்பில்லா சாதனம். இது க்யூஆர் குறியீடு அல்லது எஸ்எம்எஸ் அடிப்படையிலான மின்னணு -சான்று. இது பயனாளிகளின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது. இந்த தடையற்ற, ஒரே முறை பணம் செலுத்தும் பொறிமுறையை பயன்படுத்துபவர்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இல்லாமல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் செயலி இல்லாமல் அல்லது நெட் பேங்கிங் முறையை பயன்படுத்தாமல், மின்னணு சான்று மூலம் சேவை அளிப்பவரிடம் பணம் செலுத்த முடியும்.

இதை யுபிஐ தளத்தில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, நிதி சேவைகள் துறை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த இ-ருபி, இந்த சேவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்களை, பயனாளிகளுடன் இணைக்கிறது மற்றும் சேவை அளிப்பவர்களையும் நேரடி தலையீடு இன்றி டிஜிட்டல் முறையில் இணைக்கிறது. பரிவர்த்தனை முடிந்தால் மட்டுமே, சேவை அளிப்பவருக்கு பணம் செலுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது. முன்கூட்டியே பணம் செலுத்தப்படும் (ப்ரீ-பெய்டு) முறையாக இது இருப்பதால், எந்த நடுவர் தலையீடும் இன்றி, சேவை அளிப்பவருக்கு குறித்த நேரத்தில் பணம் செலுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது.

நலன்சார்ந்த சேவைகளை வழங்குவதில் ஆதார கசிவு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், இது புரட்சிகரமான முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய் சேய் நலத்திட்டங்கள், டி.பி ஒழிப்பு திட்டங்கள், ஆயுஸ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் பரிசோதனை, உர மானியம் போன்ற திட்டங்களின் சேவைகளை வழங்கவும் இதை பயன்படுத்த முடியும். ஊழியர்களின் நலன் மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இந்த டிஜிட்டல் சான்றுகளை தனியார் நிறுவனங்கள் கூட பயன்படுத்த முடியும். இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

7. 3 ஆண்டுகளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் தற்கொலை!

நாடு முழுவதும், சிறார்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆா்பி) அறிக்கை ஒன்றை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ’கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 13,325 பெண்கள் உள்பட 24,568 சிறார்கள் தற்கொலை செய்து கொண்டனர். 2017ம் ஆண்டு 8029 சிறார்களும், 2018ம் ஆண்டு, 8,162 சிறார்களும் 2019ம் ஆண்டு 8,377 சிறார்களும் தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் அனைவரும் 14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 3,115 பேரும், அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 2,802 பேரும், மகாராஷ்டிரத்தில் 2,527 பேரும், தமிழ்நாட்டில் 2,035 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட சிறார்களில், 4046 பேர் தேர்வுகளில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். திருமணம் தொடர்பான காரணங்களினால், 639 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களில் 411 பேர் பெண்கள் ஆவர். காதல் தோல்வி காரணமாக, 3315 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2567 சிறார்கள் உடல்நலக் கோளாறு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 81 சிறார்கள் உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சில சிறார்களின் தற்கொலைக்கு, நெருக்கமானவர் ஒருவரின் மரணம், போதைப் பழக்கம், வேலையின்மை, ஏழ்மை நிலை, தகாத உறவால் ஏற்படும் கர்ப்பம், சமூகத்தில் மதிப்பு குறைதல் ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. இந்தியா – வங்கதேசம் இடையே 50 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரயில் சேவை தொடக்கம்

இந்தியா – வங்கதேச நாடுகளிடையே 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சரக்கு ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இரு நாடுகளிடையே ரயில் சேவையை மீண்டும் தொடங்கும் வகையில், மேற்கு வங்க மாநிலம் ஹல்திபாரி நகரையும் வங்கதேசத்தின் சிலாஹாட்டி நகரையும் இணைக்கும் ரயில் பாதை அண்மையில் மறுசீரமைக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட இந்த ரயில் பாதையை கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவும் இணைந்து தொடக்கிவைத்தனா். எனினும், கரோனா பாதிப்பு சூழல் காரணமாக இந்த ரயில் பாதையில் ரயில்கள் எதுவும் அதிகாரபூா்வமாக இயக்கப்படவில்லை.

இந்த நிலையில், 58 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் கற்களை ஏற்றிக்கொண்டு மேற்கு வங்கத்தின் அலிபூா்துவாரில் உள்ள டிம்டிமா ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் ஹல்திபாரி வழியாக வங்கதேசத்தின் சிலாஹாடியை சென்றடைய உள்ளது. முன்னதாக, ‘ஹல்திபாரி – சிலாஹாட்டி இடையே முதல் சரக்கு ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படும்’ என்று வடகிழக்கு எல்லை ரயில்வே (என்எஃப்ஆா்) செய்தித்தொடா்பாளா் சனிக்கிழமை கூறியிருந்தாா். அதன்படி, இந்த ரயில் புறப்பட்டுள்ளது. ஹல்திபாரியிலிருந்து 4.5 கிலோ மீட்டா் பயணித்து சா்வதேச எல்லையை அடையும் இந்த ரயில், அதன் பிறகு வங்கதேசத்தின் சிலாஹாட்டியிலிருந்து 7.5 கிலோ மீட்டா் தூரம் பயணம் செய்ய உள்ளது.

வடக்கு வங்க மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மேற்கு வங்க மாநில பொருளாதார வளா்ச்சிக்கு உதவ உள்ள இந்த சரக்கு ரயில் சேவையின் தொடக்க நிகழ்ச்சியில், வடக்கு வங்க வா்த்தக சபை தலைவா் கிஷோா் மரோதியா பங்கேற்றாா். அப்போது பேசிய அவா் ‘சரக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது தொழிலதிபா்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது’ என்று அவா் கூறினாா்.

‘இந்த ரயில் பாதை கடந்த 1965-ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போா் காரணமாக இந்தியாவுக்கும் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கும் (வங்கதேசம்) இடையேயான ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. அதன் காரணமாக, இந்த ரயில் பாதையும் துண்டிக்கப்பட்டது’ என்று கடந்த 2020 டிசம்பா் மாதம் ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1. What is the range of inland waterways, that are operational in India?

A) 1000 km

B) 2000 km

C) 4000 km 

D) 6000 km

  • Ports, Shipping and Waterways Minister Sarbananda Sonowal introduced the Inland Vessels Bill, 2021 in the Lok Sabha. It seeks to provide safety of navigation, protection of life and cargo and prevention of pollution that may be caused.
  • It also seeks to bring in transparency in administration of inland water transportation, strengthen procedures governing inland vessels. inland waterways of 4000 km are operational in India.

2. Two cities of which state have been selected by UNESCO under ‘Historic Urban Landscape Project’?

A) Uttar Pradesh

B) Madhya Pradesh 

C) Maharashtra

D) Odisha

  • Gwalior and Orchha cities from Madhya Pradesh have been selected by UNESCO under ‘Historic Urban Landscape Project’. The project was started in the year 2011, for the inclusive and well–planned development of fast–growing historical cities. Six cities of South Asia, including Ajmer and Varanasi in India are already involved in this project. Orchha and Gwalior have been included as the seventh and eighth cities.

3. Which Indian state has set up India’s second village of books?

A) Odisha

B) Kerala 

C) Karnataka

D) West Bengal

  • Bhilar, a village in Maharashtra’s Satara district, was declared a ‘village of books’ by the State government in 2017. India’s second village of books, has been set up in the small Kerala village, Perumkulam, five kilometres from the Kottarakkara town in Kollam district.
  • A library has been started in memory of Mahatma Gandhi, to promote readers from the village to read more books.

4. World’s first 3D–printed steel bridge was recently unveiled in which city?

A) Amsterdam 

B) Tokyo

C) Sydney

D) Moscow

  • World’s first 3D–printed steel bridge was opened to the public in Amsterdam recently. It was developed by MX3D, a Dutch robotics company, in collaboration with a team of experts. The bridge was unveiled by Her Majesty Queen Máxima of the Netherlands.
  • The bridge was developed for four years and was installed over one of the oldest canals in Amsterdam’s city centre – the Oudezijds Achterburgwal.

5.How many countries makeup the Mekong–Ganga Cooperation?

A) 5

B) 6 

C) 7

D) 8

  • The Mekong–Ganga Cooperation (MGC) is an intergovernmental cooperation among 6 nations namely – India, Cambodia, Myanmar, Thailand, Laos and Vietnam. It was established in the year 2000 to boost diplomatic cooperation among these countries. Recently, the 11th Mekong–Ganga Cooperation (MGC) meeting was organized, and India was represented by the External Affairs Minister S. Jaishankar.

6. Which Indian became the third Indian to win Tennis singles match at Olympic?

A) Somdev Devvarman

B) Sumit Nagal 

C) Yuki Bhambri

D) Rohan Bopanna

  • Sumit Nagal became only the third Indian to win a men’s singles match at an Olympics edition and the first in 25 years, when he defeated Denis Istomin in the first match at Tokyo Games.
  • Zeeshan Ali was the first Indian to win a singles match at the 1988 Seoul Games when he beat Victo Caballero from Paraguay. After that, Leander Paes won the men’s singles bronze at the 1996 Atlanta Games, beating Brazil’s Fernando Meligeni.

7. Which Ministry is implementing the Companies Act, 2013 in India?

A) Finance Ministry

B) Corporate Affairs Ministry 

C) MSME Ministry

D) Commerce and Industries Ministry

  • The Union Government has amended the rules pertaining to incorporation of companies under the Companies Act, 2013.
  • The Corporate affairs ministry, which is implementing the Companies Act, 2013, has amended the Companies (Incorporation) Rules, 2014. Changes are made with respect to allotment of a new name to an existing company under Section 16 of the Act. The changes will come into effect from September 1.

8. Which space agency has been selected by NASA to provide launch services for Europa Clipper Mission?

A) Blue Origin

B) SpaceX 

C) Virgin Galactic

D) Boeing

  • NASA has selected Space Exploration Technologies Corp. (SpaceX), to provide launch services for Europa Clipper Mission. It is the Earth’s first mission to conduct detailed investigations of Jupiter’s moon Europa. The mission will launch in October 2024 on a Falcon Heavy rocket from NASA’s Kennedy Space Center in Florida.
  • NASA’s Jet Propulsion Laboratory leads the development of the Europa Clipper mission in partnership with the Johns Hopkins Applied Physics Laboratory.

9. As per the recent data released by the National Statistical Office (NSO), what is the unemployment rate in 2019–20?

A) 6.1%

B) 5.4%

C) 4.8% 

D) 3.2%

  • According to the third annual report on periodic labour force survey (PLFS), conducted by the National Statistical Office (NSO) between July 2019–June 2020, the unemployment rate fell to 4.8% in 2019–20.
  • The unemployment rate in 2018–19 was 5.8% and in 2017–18 was 6.1%. Labour indicators recorded an increase in 2019–20, as compared to previous years.

10. How many virology research and diagnostic labs are proposed to be set up by the Union Government, during 2021–22 to 2025–26?

A) 12

B) 42 

C) 82

D) 142

  • The Government of India has proposed to establish 42 virology research and diagnostic laboratories across the country, at a total cost of Rs324 crore. These would be established during the 15th Finance Commission period of 2021–22 to 2025–26. These would be established through a scheme under the Department of Health Research (DHR), Indian Council of Medical Research (ICMR).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!