TnpscTnpsc Current Affairs

1st April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

1st April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. UNEP ‘வருடாந்திர பிராண்டியர் அறிக்கை, 2022’இன் படி, உலக அளவில் ஒலி மாசுபட்ட நகரங்களில் 2ஆவது இடத்தில் உள்ள இந்திய நகரம் எது?

அ) மும்பை

ஆ) மொராதாபாத் 

இ) கான்பூர்

ஈ) பாட்னா

  • ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய ‘Annual Frontier’ அறிக்கை – 2022’இன்படி, உத்தர பிரதேச மாநிலத்தின் மொராதாபாத், உலக அளவில் அதிக ஒலி மாசுபட்ட நகரங்களில் 2ஆவது இடத்தில் உள்ளது.
  • 2021–இல் WHO நிர்ணயித்த 55 dB–க்கு எதிராக, 114 டெசிபல் ஒலி மாசுபாட்டை அந்நகரம் பதிவு செய்தது. ஐந்து இந்திய நகரங்களை உள்ளடக்கிய உலகெங்குமுள்ள 61 நகரங்களின் பட்டியலில் டாக்கா முதலிடத்தில் உள்ளது.

2. சமீப அரசாங்கத் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டிலேயே அதிக ODF+ சிற்றூர்களைக் கொண்ட மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) தெலுங்கானா 

இ) குஜராத்

ஈ) மகாராஷ்டிரா

  • நாட்டில் 50,000 ODF பிளஸ் கிராமங்கள் உள்ளன என்று அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. ODF+ கிராமம் என்பது திறந்தவெளி மலங்கழித்தலற்ற நிலையைத் தக்கவைத்து, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையை உறுதி செய்து, பார்வைக்கு தூய்மையாக இருக்கும் கிராமமாகும்.
  • 13,960 ODF+ கிராமங்களுடன் தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 11,477 ODF+ உடன் தமிழ்நாடு 2 ஆம் இடத்திலும்; 3,849 ODF+ உடன் மத்திய பிரதேசம் மாநிலம் 3ஆம் இடத்திலும் உள்ளது.

3. கரடுமுரடான பற்கள்கொண்ட டால்பின்கள் (Steno bredanensis) முதன்முறையாக இந்தியாவின் எம்மாநிலம் /யூடியில் நேரடியாகக் காணப்பட்டது?

அ) கேரளா

ஆ) இலட்சத்தீவுகள் 

இ) கோவா

ஈ) மகாராஷ்டிரா

  • இலட்சத்தீவுகளில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் கடல் பாலூட்டிகள் ஆராய்ச்சிக் குழு, இந்தியக் கடற்பகுதியில் முதன்முறையாக கரடுமுரடான பற்கள் கொண்ட ஓங்கில்களை (Steno bredanensis) நேரடியாகக் கண்டதாகத் தெரிவித்துள்ளது.

4. ‘இராஷ்ட்ரிய சமற்கிருதி மகோத்சவம் – 2022’ தொடங்கியுள்ள மாநிலம் / UT எது?

அ) இராஜஸ்தான்

ஆ) ஆந்திர பிரதேசம் 

இ) குஜராத்

ஈ) உத்தர பிரதேசம்

  • அமுதப்பெருவிழாவின் ஒருபகுதியாக, ‘இராஷ்ட்ரிய சமற் கிருதி மகோத்சவம்–2022’ ஆனது ஆந்திர பிரதேசத்தில், ஆளுநர் விஸ்வபூசன் ஹரிசந்தன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ‘இராஷ்ட்ரிய சமற்கிருதி மகோத்சவம்’ என்பது கலாசார அமைச்சகத்தின் முதன்மை திருவிழா ஆகும். இது இந்திய நாட்டின் வளம்மிகுந்த கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மற்றும் பிரபலப்படுத்தவும் நோக்கம் எனக் கொண்டுள்ளது. முதல் ‘இராஷ்ட்ரிய சமற்கிருதி மகோத்சவம்’ ஆனது கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.

5. 2022ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற திரைப்படம் எது?

அ) King Richard

ஆ) The Power of Dog

இ) CODA 

ஈ) West Side Story

  • 94ஆம் அகாதமி விருதுகளில், சியான் ஹெடரின் ‘CODA’ ‘சிறந்த படத்திற்கான’ ஆஸ்கர் விருதை வென்றது.
  • ‘கிங் ரிச்சர்ட்’ படத்திற்காக வில் ஸ்மித் சிறந்த நடிகராகவும், சிறந்த நடிகைக்கான விருதை ஜெசிகா சாஸ்டெய்னும் வென்றனர். அரியானா டிபோஸ், ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை வென்றார்.

6. 2021–2022 நிதியாண்டில், ஏற்றுமதியில் இந்தியா எந்த மைல்கல் சாதனையை எட்டியது?

அ) $200 பில்லியன்

ஆ) $300 பில்லியன்

இ) $400 பில்லியன்

ஈ) $500 பில்லியன்

  • இந்தியா சமீபத்தில் முதன்முறையாக ஒரு நிதியாண்டில் $400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டியுள்ளது.
  • இந்தச் சாதனையானது திட்டமிட்டதைவிட 9 நாட்களுக்கு முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது.
  • 2020–21 நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி $298.1 பில்லியன் டாலர்களாக இருந்தது.

7. எம்மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார்?

அ) மணிப்பூர்

ஆ) கோவா

இ) உத்தரகாண்ட்

ஈ) பஞ்சாப்

  • பாஜக தலைவர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றார். அவருடன் 8 கேபினட் அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். மலையக மாநிலமான உத்தரகண் –டின் 12ஆவது முதலமைச்சராக தாமி பதவியேற்றார்.

8. ‘அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிக்கப்ப –ட்டவர்களின் கண்ணியம் தொடர்பான உண்மைக்கான உரிமைக்கான உலக நாள்’ அனுசரிக்கப்படும் தேதி எது?

அ) மார்ச்.22

ஆ) மார்ச்.24 

இ) மார்ச்.26

ஈ) மார்ச்.28

  • மார்ச்.24 அன்று, ‘அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியம் தொடர்பான உண்மைக்கான உரிமைக்கான உலக நாள் – International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims’ அனுசரிக்கப்படுகிறது. ஐநா பொது அவையால் கடந்த 2010ஆம் ஆண்டில் இந்த நாள் அறிவிக்கப்பட்டது.

9. இந்தியாவில், ‘பத்ம பூஷன்’ விருது பெற்ற முதல் பாரா–தடகள வீரர் யார்?

அ) தேவேந்திர ஜஜாரியா 

ஆ) மாரியப்பன் தங்கவேலு

இ) அவனி லெகாரா

ஈ) பவீனா படேல்

  • இந்தியாவில், ‘பத்ம பூஷன்’ விருது பெற்ற முதல் பாரா– தடகள வீரர் தேவேந்திர ஜஜாரியா ஆவார். ‘பத்ம பூஷன்’ என்பது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் 3ஆவது உயரிய விருதாகும். தேவேந்திர ஜஜாரியா, கடந்த 2004 –இல் ஏதென்ஸில் நடந்த பாராலிம்பிக்ஸில் முதல் தங்கம், 2016 ரியோ விளையாட்டுப் போட்டிகளில் 2ஆவது தங்கம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி உட்பட பல பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.
  • பாரா–ஷூட்டர் வீராங்கனையான அவனி லெகாராவுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டுள்ளது.

10. 2025ஆம் ஆண்டுக்குள் எத்தனை புதிய வானூர்தி நிலையங்களை அமைப்பதற்கு இந்தியா இலக்கு நிர்ண –யித்துள்ளது?

அ) 110

ஆ) 220 

இ) 330

ஈ) 440

  • 2025ஆம் ஆண்டுக்குள் 220 புதிய வானூர்தி நிலையங் –களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்தார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய புவியியல் ஆய்வுத்துறை புதிய தலைமை இயக்குநர் இன்று பொறுப்பேற்பு

இந்திய புவியியல் ஆய்வுத்துறையின் தலைமை இயக்குநராக தமிழ்நாட்டைச்சேர்ந்த முனைவர் எஸ் ராஜு, பொறுப்பேற்கிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

இந்திய புவியில் ஆய்வுத்துறையின் கூடுதல் தலைமை இயக்குநராக 2018-ஆம் ஆண்டு முதல் பணியாற்றிவரும் இவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பசுவந்தனை கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

2. மெட்ரோ ரயில்கள் இனி காலை 5 முதல் இரவு 11 மணி வரை இயக்கம்

பொதுமக்களின் வசதிக்காக வியாழக்கிழமை முதல் அனைத்து நாள்களிலும் காலை 5 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி திங்கள் முதல் சனிக்கிழமை வரை, நெரிசல்மிகு நேரமான காலை 8 முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடை வெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடை வெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் காலை 5 முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடை வெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3. 100 நாள் வேலை திட்டத்திற்காக `949 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் படி 100 நாள் வேலை திட்டத்திற்காக `949 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதில் மத்திய அரசு சார்பில் 75% நிதியும், மாநில அரசு சார்பில் 25% நிதியும் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

4. நீதிமன்ற உத்தரவுகள் விரைந்து கிடைக்க ‘ஃபாஸ்டர்’ புதிய மென்பொருளை அறிமுகம் செய்தார் தலைமை நீதிபதி

நீதிமன்ற உத்தரவுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரைந்து கிடைக்க, ‘ஃபாஸ்டர்’ என்ற புதிய மென்பொருளை இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிமுகம் செய்தார். மின்னணு தொழினுட்பம் மூலம் பிணை உட்பட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் அதிகாரிகளை விரைந்து சென்று சேரும் வகையில் ‘ஃபாஸ்டர்’ (Faster) என்ற மென்பொருளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி N V ரமணா அறிமுகம் செய்து வைத்தாரர்.

1. Which Indian city has been ranked second–most noise polluted city globally, as per the UNEP ‘Annual Frontier Report, 2022’?

A) Mumbai

B) Moradabad 

C) Kanpur

D) Patna

  • According to the recent ‘Annual Frontier Report, 2022’ published by the United Nations Environment Programme (UNEP), Uttar Pradesh’s Moradabad is the second–most noise polluted city globally.
  • The area recorded noise pollution of 114 decibels at its highest (dB) in 2021, against the WHO standard of 55 dB. Dhaka tops the list of 61 cities around the world, which includes five Indian cities.

2. As per recent Government data, which state has the highest number of ODF plus villages in the country, as of 2022?

A) Tamil Nadu

B) Telangana 

C) Gujarat

D) Maharashtra

  • The country has over 50,000 ODF plus villages, the government recently announced. An ODF plus village is one that sustains its open–defecation–free status, ensures solid and liquid waste management and is visually clean. The top–performing states include Telangana with 13,960 ODF Plus villages; Tamil Nadu with 11,477; Madhya Pradesh with 3,849.

3. India’s First–ever live sighting of rough–toothed dolphins (Steno bredanensis) have been reported in which state/UT?

A) Kerala

B) Lakshadweep 

C) Goa

D) Maharashtra

  • A Marine Mammals Research team of the Department of Environment and Forest in Lakshadweep has reported the first–ever live sighting of rough–toothed dolphins (Steno bredanensis) in Indian waters.

4. ‘Rashtriya Sanskriti Mahotsav 2022’ was inaugurated in which Indian state/UT?

A) Rajasthan

B) Andhra Pradesh 

C) Gujarat

D) Uttar Pradesh

  • Under the Azadi Ka Amrit Mahotsav, Rashtriya Sanskriti Mahotsav 2022 was inaugurated in Andhra Pradesh by the Governor Biswabhusan Harichandan. Rashtriya Sanskriti Mahotsav is the flagship festival of the Ministry of Culture which aims to preserve, promote, and popularise the rich cultural heritage of India. The first Rashtriya Sanskriti Mahotsav was organised in 2015.

5. Which movie won the Oscar Award 2022 for Best Picture?

A) King Richard

B) The Power of Dog

C) CODA

D) West Side Story

  • In the 94th Academy Awards, Sian Heder’s ‘CODA’ created history by becoming the first movie from a major streaming service to win an Oscar for best picture.
  • Will Smith was declared the best actor for ‘King Richard,’ and Jessica Chastain won the best actress award. Ariana DeBose created history by becoming the first queer woman of colour to bag the award for the film ‘West Side Story’.

6. India has achieved which milestone in Exports, in the Financial Year 2021–2022?

A) $200 billion

B) $300 billion

C) $400 billion

D) $500 billion

  • India has recently achieved its target of reaching USD 400 billion in exports, in a financial year for first time.
  • This success is achieved nine days ahead of schedule. India’s goods exports in FY21 were USD 298.1 billion.

7. Pushkar Singh Dhami sworn in as the Chief Minister of which Indian state/UT?

A) Manipur

B) Goa

C) Uttarakhand 

D) Punjab

  • BJP leader Pushkar Singh Dhami took oath as the chief minister of Uttarakhand for his second consecutive term. Along with him, eight cabinet ministers were also administered the oath. Dhami became the 12th chief minister of the hill state–Uttarakhand.

8. When is the ‘International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims’ observed?

A) March.22

B) March.24 

C) March.26

D) March.28

  • On 24 March, the International Day for the Right to the Truth Concerning Gross Human Rights Violations and for the Dignity of Victims is observed. The Day was proclaimed in 2010 by the United Nations General Assembly.

9. Who is the first para–athlete to receive the Padma Bhushan in India?

A) Devendra Jhajharia 

B) Mariappan Thangavelu

C) Avani Lekhara

D) Bhavina Patel

  • Devendra Jhajharia became the first para–athlete to receive the Padma Bhushan in India. Padma Bhushan is the country’s third–highest civilian award.
  • Devendra Jhajharia has won many Paralympic medals, including his first gold at the 2004 Paralympics in Athens, second gold at the 2016 Rio Games, and a silver medal at the 2020 Tokyo Olympics. Avani Lekhara, a para–shooter, was awarded Padma Shri award.

10. What is the target set by India for establishing new Airports, by 2025?

A) 110

B) 220 

C) 330

D) 440

  • The Union Civil Aviation Minister Jyotiraditya Scindia announced that the Central Government has planned to set up as many as 220 new airports by 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!