TnpscTnpsc Current Affairs

1st August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

1st August 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st August 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

August Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st August 2022 Tnpsc Current Affairs in Tamil

1. இந்தியாவில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வேளாண் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது?

அ. 2

ஆ. 3

இ. 5 

ஈ. 10

  • பதினோராவது வேளாண் கணக்கெடுப்பு (2021–22) சமீபத்தில் நடுவண் உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வேளாண் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. திறன்பேசிகள் மற்றும் கையடக்க கணினிகள்கொண்டு தரவுசேகரிப்பு நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். மொத்த விவசாய பரப்பின் அளவு, வகுப்பு வாரியான பங்கீடு, நிலப் பயன்பாடு, குத்தகை, பயிரிடும் முறை என்பன உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின்கீழ் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

2. இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பலான ‘விக்ராந்த்’ஐ கட்டிய கப்பல்கட்டுந்தளம் எது?

அ. கொச்சி கப்பல்கட்டுந்தளம் 

ஆ. மசகன் கப்பல்கட்டுந்தளம்

இ. கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியாளர்கள்

ஈ. ஹிந்துஸ்தான் கப்பல்கட்டுந்தளம்

  • இந்தியாவின் முதலாவது உள்நாட்டு விமானந்தாங்கிக்கப்பலான, ‘விக்ராந்த்’ கொச்சின் கப்பல்கட்டுந்தளத்தால் (CSL) கட்டப்பட்டு இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது. கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை கப்பல்கட்டுந்தளமான CSL, 76% உள்நாட்டு பாகங்களைக்கொண்டு இந்தக்கப்பலை கட்டியுள்ளது. ‘விக்ராந்த்’, இந்திய கடற்படையில் இந்திய கடற்படை கப்பலாக (INS) பணியமர்த்தப்படும்.

3. சர்வதேச புலிகள் நாள் கொண்டாட்டங்களை நடத்திய தடோபா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. சிக்கிம்

ஆ. மகாராஷ்டிரா 

இ. குஜராத்

ஈ. ஆந்திர பிரதேசம்

  • மகாராஷ்டிர மாநிலத்தின் தடோபா புலிகள் காப்பகம் இந்தியாவில் சர்வதேச புலிகள் நாள் கொண்டாட்டங்களை நடத்தியது. மகாராஷ்டிராவின் சந்திராபூர் வன அகாதெமியில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு சர்வதேச புலிகள் நாள் கொண்டாட்டத்தில் நடுவண் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார். சர்வதேச புலிகள் நாளைக் கொண்டாடுவதற்கான பேரறிவிப்பு கடந்த 2010 ஜூலை.29 அன்று புனித பீட்டர்ஸ்பெர்க்கில் செய்யப்பட்டது.

4. இந்தியாவில் முதன்முறையாக FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு 

ஆ. தெலுங்கானா

இ. மகாராஷ்டிரா

ஈ. ஒடிஸா

  • 44ஆவது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகிறது. இச்சர்வதேச போட்டியை இந்தியா நடத்துவது இதுவே முதல்முறை. 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியான இது சென்னைக்கு மிக அருகிலுள்ள மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சர்வதேச நிகழ்வை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

5. இந்திய கடற்படையானது அண்மையில் கீழ்க்காணும் எந்த நாட்டிலிருந்து இரண்டு ‘MH–60 R’ என்ற பன்முக இயக்கங்கொண்ட உலங்குவானூர்திகளைப் பெற்றது?

அ. ரஷ்யா

ஆ. அமெரிக்கா 

இ. இஸ்ரேல்

ஈ. பிரான்ஸ்

  • இந்திய கடற்படையானது சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து இரண்டு ‘MH–60 R’ என்ற பன்முக இயக்கங்கொண்ட உலங்குவானூர்திகளைப் பெற்றது. மூன்றாவது உலங்குவானூர்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வந்து சேரும். 2019ஆம் ஆண்டில், அமெரிக்கா தனது வெளிநாட்டு இராணுவ விற்பனை (FMS) திட்டத்தின்கீழ் 24 MH–60R பன்முக உலங்குவானூர்திகளை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்தது. ‘MH–60R’ என்பது தற்போது பயன்பாட்டில் உள்ள மிகவும் அதிநவீன கடல்சார் பன்முகப்பணிகள் செய்யும் உலங்குவானூர்தி ஆகும்.

6. கடந்த 2021ஆம் ஆண்டில், அதிகபட்ச சட்டமன்ற அமர்வுகளை நடத்திய மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா 

இ. ஒடிஸா

ஈ. கர்நாடகா

  • PRS, சட்டமன்ற ஆராய்ச்சி என்ற மதியுரையகத்தின் அண்மைய ஆய்வின்படி, கேரளாவில் 2021ஆம் ஆண்டில் 61 நாட்கள் என்ற அளவில் அதிகபட்ச சட்டமன்ற அமர்வுகள் நடைபெற்றுள்ளன. 2016 மற்றும் 2019–க்கு இடையில், சராசரியாக 53 நாட்கள் சட்டமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டு கேரளா முதலிடத்தில் இருந்தது. கேரளாவைத்தொடர்ந்து ஒடிஸா (43 நாட்கள்), கர்நாடகா (40 நாட்கள்), தமிழ்நாடு (34 நாட்கள்) உள்ளன.

7. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘புதுப்பிக்கப்பட்ட விநியோகப் பிரிவுத் திட்டத்தைச்’ செயல்படுத்துகிற நடுவண் அமைச்சகம் எது?

அ. எரிசக்தி அமைச்சகம் 

ஆ. நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வழங்கல் அமைச்சகம்

இ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஈ. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம்

  • நடுவண் எரிசக்தி அமைச்சகத்தின், ‘புதுப்பிக்கப்பட்ட விநியோகப் பிரிவுத் திட்டத்தைப்’ பிரதமர் தொடங்கிவைத்தார். எரிசக்தி விநியோக நிறுவனங்கள் அவற்றின் செயல்பாட்டுத்திறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. `5200 கோடி மதிப்பிலான NTPCஇன் பல்வேறு பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய சூரியசக்தி தளத்தையும் பிரதமர் அப்போது தொடங்கி வைத்தார்

8. ஒரு புதிய ஊசித்தட்டான் இனம் (Protosticta anamalaica) கண்டுபிடிக்கப்பட்ட பீச்சி வனவுயிரிகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா 

இ. மகாராஷ்டிரா

ஈ. கர்நாடகா

  • திருச்சூரின் பீச்சி வனவுயிரிகள் சரணாலயத்திலுள்ள மேற்குத்தொடர்ச்சிமலையில், ஆனைமலை நாணல்–வாலி (Protosticta anamalaica) என்ற ஒரு புதிய ஊசித்தட்டான் இனத்தை திருவாங்கூர் இயற்கை வரலாற்றுச்சங்கத்தின் பூச்சியியல் வல்லுநர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம், கேரள மாநிலத்தில் உள்ள தும்பி இனங்களின் எண்ணிக்கை 182–ஆக உயர்ந்துள்ளது. மூணாறு நிலப்பரப்பின் பீச்சி வனவுயிரிகள் சரணாலயத்தில் உள்ள பொன்முடி மலையில் இந்தப் பூச்சி முதலில் காணப்பட்டது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ‘Logistics Data Bank’ திட்டத்துடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 

இ. MSME அமைச்சகம்

ஈ. கனரக தொழிற்துறை அமைச்சகம்

  • NLDSL–NICDC சரக்குப்போக்குவரத்து தரவு வங்கி (LDB) திட்டமானது 50 மில்லியன் EXIM கொள்கலன்களைக் கையாண்டு சாதனை புரிந்துள்ளது. NICDC சரக்குப்போக்குவரத்து தரவு சேவைகளின் இச்சாதனைக்காக நடுவண் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். National Industrial Corridor Development Corporation என்பதன் சுருக்கந்தான் ‘NICDC’. இந்தியாவின் EXIM கொள்கலன் அளவின் 100 சதவீத அளவை LDB கையாளுகிறது. EXIM கொள்கலன் இயக்கத்தின் நிகழ்நேர கண்காணிப்பிற்காக இது இணைய உலகம் (IoT), பெருந்தரவு மற்றும் மேகக்கணினி அடிப்படையிலான தீர்வுமூலம் RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

10. இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோக்டாக் ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. மணிப்பூர் 

இ. ஹரியானா

ஈ. தெலுங்கானா

  • மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ள லோக்டாக் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகும். இந்த ஏரி மணிப்பூரில் அடையாளம் காணப்பட்ட மொத்த ஈரநிலங்களில் 61 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது. அண்மையில், லோக்டாக் ஏரியில் உள்ள அனைத்து மிதவை வீடுகள் மற்றும் மீன்பிடி கட்டமைப்புகளை அகற்றுவதற்கான அறிவிப்பை லோக்டாக் ஏரி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டது. இது அங்குள்ள மீனவ சமூகம் மற்றும் வீட்டுவிடுதி உரிமையாளர்களிடமிருந்து கடுமையான எதிர்வினையை ஈட்டியுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. 11ஆவது வேளாண் கணக்கெடுப்பு தொடக்கம்: அறிதிறன்பேசி, கையடக்க கணினிமூலமாக விவரங்கள் சேகரிப்பு

பதினோறாவது வேளாண் கணக்கெடுப்பை நடுவண் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடக்கி வைத்தார். பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தக் கணக்கெடுப்பில் முதன்முறையாக அரிதிறன்பேசி, கையடக்க கணினி ஆகியவை மூலமாக விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2021-22ஆம் ஆண்டுக்கான 11ஆவது வேளாண் கணக்கெடுப்பை நடுவண் அமைச்சர் தொடக்கிவைத்தார். இதற்கான களப்பணிகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படவுள்ளன.

இந்தக் கணக்கெடுப்பு நடைமுறையை கடந்த 1970-71ஆம் ஆண்டு முதல் நடுவண் வேளாண் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. பத்தாவது வேளாண் கணக்கெடுப்பு கடந்த 2015-16ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.

2. இந்தியா – ஓமான் கூட்டு இராணுவப்பயிற்சி இராஜஸ்தானில் இன்று தொடக்கம்

இந்தியா, ஓமான் கூட்டு இராணுவப் பயிற்சியான ‘அல் நஜா’ நான்காவது பதிப்பு ஆக.1 அன்று இராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்குகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் ஓமான் நாட்டு பாராசூட் படை வீரர்கள் இந்தியா வந்தடைந்ததாக நடுவண் பாதுகாப்புத்துறை தெரிவித்தது.

புவியியல் ரீதியாக அரபிக்கடலால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஓமான் நாட்டுடன், வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில், அரபு லீக் மற்றும் இந்தியப்பெருங்கடல் ரிம் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றில் இணைந்திருப்ப -தோடு வர்த்தகம் மற்றும் இராணுவ ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெப்பமிட்டுள்ளன. சுமார் 4 பில்லியன் டாலர் அளவிற்கு இருதரப்பு வர்த்தம் நடைபெற்ற வருகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஒப்பந்தங்களையொட்டி, இந்தியா-ஓமான் நாடுகளுக்கிடை -யே ‘அல் நஜா’ என்ற கூட்டு இராணுவப்பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த அல் நஜாவின் நான்காவது பதிப்பு ஆக.1-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இராஜஸ்தான் மாநிலத்தில் வெளிநாட்டுப் பயிற்சி முனையான மகாஜன் பீல்ட் பயர் ரேஞ்ச்சில் நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக ராயல் ஓமான் இராணுவத்தின் பாராசூட் படையைச் சேர்ந்த 60 வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இந்திய ராணுவத்தின் சார்பாக 18ஆவது போர் வாகன காலாட்படையைச் சேர்ந்த வீரர்கள் குழு இதில் கலந்துகொள்ளுகிறது.

தீவிரவாத எதிர்தாக்குதல் நடவடிக்கைகள், பிராந்திய பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் அமைதியை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளுடன் உடற்தகுதி பயிற்சி, செயல்முறை மற்றும் நடைமுறைகளில் இந்தக் கூட்டுப் பயிற்சிகளில் கவனஞ்செலுத்தப்படுகிறது.

1st August 2022 Tnpsc Current Affairs in English

1. The Agricultural Census is conducted in the interval of how many years in India?

A. 2

B. 3

C. 5 

D. 10

  • The Eleventh Agricultural Census (2021–22) was recently launched by the Union Minister for Agriculture and Farmers Welfare, Narendra Singh Tomar.
  • Agriculture Census is conducted every 5 years in India and this is the first time the data collection will be conducted on smart phones and tablets. Agricultural Census is the main source of information on the number and area of ​​operational holdings, their size, class–wise distribution, land use, tenancy and cropping pattern, etc.

2. Which shipyard–built India’s first indigenous aircraft carrier— Vikrant?

A. Cochin Shipyard 

B. Mazagon Dock Shipbuilders

C. Garden Reach Shipbuilders & Engineers

D. Hindustan Shipyard

  • India’s first indigenous aircraft carrier— Vikrant was built and delivered to the Indian Navy by Cochin Shipyards Limited (CSL). CSL, the public sector shipyard, under the Ministry of Shipping, has built the carrier with 76 per cent indigenisation components. Vikrant will be commissioned into the Indian Navy as Indian Naval Ship (INS) Vikrant.

3. Tadoba Tiger Reserve, which hosted the Global Tiger Day Celebrations, is located in which Indian state?

A. Sikkim

B. Maharashtra 

C. Gujarat

D. Andhra Pradesh

  • Tadoba Tiger Reserve, Maharashtra played host to the Global Tiger Day Celebrations in India. Union Minister of Environment, Forest & Climate Change, Bhupender Yadav attended the Global Tiger Day 2022 Celebrations held at Chandrapur Forest Academy, Maharashtra. The declaration to celebrate Global Tiger Day was taken on 29th July 2010 at St Petersberg, for increased thrust on tiger conservation and management globally.

4. Which state hosted the FIDE Chess Olympiad for the first time in India?

A. Tamil Nadu 

B. Telangana

C. Maharashtra

D. Odisha

  • The 44th FIDE Chess Olympiad is being hosted by the state of Tamil Nadu. This is the first time India is hosting the international event. The world’s biggest team chess championship, with players from 187 countries, is organised at Mamallapuram, near Chennai.
  • The international event was inaugurated by Prime Minister Narendra Modi, in the presence of Tamil Nadu Chief Minister M.K. Stalin.

5. The Indian Navy recently received two MH–60 R multirole helicopters from which country?

A. Russia

B. United States 

C. Israel

D. France

  • The Indian Navy recently received two MH–60 R multirole helicopters from the United States. The third helicopter is scheduled to be delivered in August this year. In 2019, the United States had approved the sale of 24 MH–60R multi–mission helicopters to India under its Foreign Military Sales (FMS) program.  The MH–60R is the most advanced marine multi–mission helicopter which is in use currently.

6. Which state held the most number of sittings of the State Assembly in 2021?

A. Tamil Nadu

B. Kerala 

C. Odisha

D. Karnataka

  • As per the recent study of the think tank PRS, Legislative Research (PRS), Kerala held the most number of sittings of the State Assembly in 2021 at 61 days. Between 2016 and 2019, it remained at the top with an average of 53 days. Kerala is followed by Odisha with 43 sitting days, Karnataka with 40 days and Tamil Nadu with 34 days.

7. ‘Revamped Distribution Sector Scheme’ which was recently launched, is implemented by which Union Ministry?

A. Ministry of Power 

B. Ministry of Consumer Affairs and Food Distribution

C. Ministry of New and Renewable Energy

D. Ministry of Agriculture and Farmers Welfare

  • The Prime Minister launched the Union Power Ministry’s ‘Revamped Distribution Sector Scheme’. It aims to help DISCOMs improve their operational efficiencies and financial sustainability. The Prime Minister laid the foundation stone of various green energy projects of NTPC worth over Rs 5200 crore. He also launched the ‘National Solar rooftop portal’.

8. Peechi Wildlife Sanctuary, where a new damselfly species (Protosticta anamalaica) was spotted, is in which state?

A. Tamil Nadu

B. Kerala 

C. Maharashtra

D. Karnataka

  • Entomologists from the Travancore Nature History Society (TNHS) have recently identified the species, Anamalai Reed–tail (Protosticta anamalaica) from the Western Ghats in the Peechi Wildlife Sanctuary in Thrissur. With this, the number of odonates in Kerala has grown to 182. The insect was first spotted at Ponmudi hills in the Peechi Wildlife Sanctuary of the Munnar landscape.

9. Logistics Data Bank (LDB) Project, which was seen in the news, is associated with which Ministry?

A. Ministry of Road Transport and Highways

B. Ministry of Commerce and Industry 

C. Ministry of MSME

D. Ministry of Heavy Industries

  • NLDSL–NICDC Logistics Data Bank (LDB Project) has achieved a milestone of handling 50 million EXIM containers. Union Commerce and Industry Minister lauded the NICDC Logistics Data Services for the achievement. NICDC stands for National Industrial Corridor Development Corporation.
  • LDB handles 100% of India’s EXIM container volume. It uses RFID technology through Internet of Things, Big Data and Cloud–based solution for real–time tracking of EXIM container movement.

10. Loktak Lake, the largest freshwater lake in India, is located in which state?

A. Assam

B. Manipur 

C. Haryana

D. Telangana

  • Loktak lake is the largest freshwater lake in India, located in the state of Manipur. The lake covers 61 per cent of the total identified wetlands of the state. Recently, the Loktak Development Authority (LDA) issued a notice to remove all floating houses and fishing structures on Loktak lake. It has created a a sharp reaction from the fishing community and home–stay operators.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!