TnpscTnpsc Current Affairs

1st December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

1st December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 1st December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. அண்மைய NSO தரவுகளின்படி, 2022–23 ஜூலை–செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி சதவீதம் என்ன?

அ. 6.1%

ஆ. 6.3%

இ. 6.5%

ஈ. 7.2%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 6.3%

  • தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2022–23 நிதியாண்டின் ஜூலை–செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2022–23–க்கு முந்தைய ஏப்ரல்–ஜூன் காலாண்டில் GDP 13.5 சதவீத வளர்ச்சியைக் கண்டது. முதன்மையாக உற்பத்தி மற்றும் சுரங்கத்துறைகளின் மோசமான செயல்பாட்டால் இந்தச் சதவீதம் குறைந்துள்ளது.

2. இந்தியா–அமெரிக்க கூட்டு இராணுவப்பயிற்சியான, ‘யுத் அபியாஸ்–2022’ நடைபெறுகிற இந்திய மாநிலம் எது?

அ. கோவா

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. உத்தரகாண்ட்

ஈ. சிக்கிம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. உத்தரகாண்ட்

  • இந்தியா–அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சியான, ‘யுத் அப்யாஸின்’ 18ஆவது பதிப்பு உத்தரகாண்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஆண்டுதோறும் இந்த இராணுவப்பயிற்சி நடத்தப்படுகிறது. ஆதிக்க எல்லைக் கோட்டிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில் இந்தப் யிற்சி நடைபெறுவதால், இந்த இராணுவப் பயிற்சிக்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்தது.

3. அண்மைய தரவுகளின்படி, 2018–20இல் இந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் (MMR) என்ன?

அ. ஓர் இலட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 130

ஆ. ஓர் இலட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 107

இ. ஓர் இலட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 97

ஈ. ஓர் இலட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 85

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஓர் இலட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 97

  • இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்ட சிறப்புத் தகவலேட்டின்படி, 2018–20ஆம் ஆண்டில், தாய்வழி இறப்பு விகிதம் (MMR) ஒரு இலட்சத்துக்கு 97 எனக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2014–16இல் ஒரு இலட்சம் குழந்தைப்பிறப்புக்கு 130 என இருந்தது. இதன்மூலம், ஒரு இலட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 100க்கும் குறைவான MMR–க்கான தேசிய சுகாதாரக் கொள்கை இலக்கை இந்தியா நிறைவேற்றியது. 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சத்துக்கு 70 என்ற எண்ணிக்கையைக் கொண்டுவருவது SDG இலக்காக உள்ளது.

4. உலக வங்கியின் புலம்பெயர்வு மற்றும் மேம்பாட்டு குறித்த சிற்றறிக்கையின்படி, 2022–23இல் இந்தியாவிற்கு எவ்வளவு பணம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது?

அ. $50 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

ஆ. $100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

இ. $150 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

ஈ. $200 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. $100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

  • உலக வங்கி அண்மையில், ‘புலம்பெயர்வு மற்றும் மேம்பாடு குறித்த தனது சுருக்கவுரை’ என்ற தலைப்பில் அதன் முதன்மை அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, இந்த ஆண்டு இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்து $100 பில்லியன் டாலர்களை எட்டும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம்கொண்ட நாடுகளுக்கு பணம் அனுப்புவது 2022இல் 5% அதிகரித்து $626 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

5. இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மை மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (ECTA) 2022 டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. ஆஸ்திரேலியா

இ. பிரான்ஸ்

ஈ. இலங்கை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஆஸ்திரேலியா

  • இந்தியா–ஆஸ்திரேலியா பொருளாதார கூட்டாண்மை மற்றும் வர்த்தக ஒப்பந்தமானது (ECTA) 2022 டிச.29ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இந்தியா–ஆஸ்திரேலிய ECTA ஆனது சரக்கு மற்றும் சேவைகளில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த ஒப்பந்தத்தின்கீழ், 100 சதவீத வரிகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் நீக்கப்படும்.

6. ‘இ–கழிவு (மேலாண்மை) விதிகள்–2022’ஐ அறிவித்த நடுவண் அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

இ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

ஈ. எரிசக்தி அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சமீபத்தில் இ–கழிவு (மேலாண்மை) விதிகள்–2022ஐ அறிவித்தது. இவ்விதிகள் அடுத்தாண்டு ஏப்.01 முதல் நடைமுறைக்கு வரும். அது ஒவ்வொரு உற்பத்தியாளருக்கும் புதுப்பிப்பாளருக்கும் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களுக்கும் பொருந்தும். மின்னணுக் கருவிகள் தயாரிப்பில் ஈயம், பாதரசம், காட்மியம் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் குறைக்க இவ்விதிகள் ஆணையிடுகின்றன.

7. ‘உலகளாவிய தடுப்பூசி சந்தை அறிக்கை–2022’ஐ வெளியிட்ட நிறுவனம் எது?

அ. WHO

ஆ. UNEP

இ. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

ஈ. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. WHO

  • உலக சுகாதார அமைப்பானது (WHO) சமீபத்தில், ‘உலகளாவிய தடுப்பூசி சந்தை அறிக்கை–2022’ஐ வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டில் $141 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையை சுமார் 16 பில்லியன் தடுப்பூசி தவணைகள் வழங்கப்பட்டன. COVID–19 தடுப்பூசிகளால் இந்த எண்ணிக்கை இவ்வளவு உயர்ந்துள்ளது. வரையறுக்கப்பட்ட தடுப்பூசி வழங்கல் மற்றும் சமமற்ற விநியோகம் ஆகியவை உலக அளவில் ஏற்ற இறக்கங்களை உருவாக்குகிறது என்பதையும் இது வெளிப்படுத்தியது.

8. தென்னிந்தியாவின் முதல் ‘வந்தே பாரத்’ விரைவு இரயிலானது மைசூரையும் கீழ்க்காணும் எந்த நகரத்தையும் இணைக்கிறது?

அ. சென்னை

ஆ. மதுரை

இ. கோயம்புத்தூர்

ஈ. சேலம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. சென்னை

  • மைசூரு மற்றும் சென்னையை பெங்களூரு வழியாக இணைக்கும் தென்னிந்தியாவின் முதல் ‘வந்தே பாரத்’ விரைவு இரயிலை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடக்கிவைத்தார். இது நாட்டின் ஐந்தாவது ‘வந்தே பாரத்’ விரைவு இரயிலாகும். இது சென்னை, பெங்களூரு மற்றும் மைசூரு இடையே இரயில் முறையிலான இணைப்பை மேம்படுத்தும். கர்நாடகாவிலிருந்து காசிக்கு யாத்ரீகர்களை அனுப்பும் நோக்கத்துடன், ‘பாரத் கௌரவ் காசி தர்ஷன்’ என்ற இரயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

9. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) குழுமத்தின் 11ஆவது உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள நாடு எது?

அ. திமோர் லெஸ்டே

ஆ. தஜிகிஸ்தான்

இ. கஜகஸ்தான்

ஈ. பப்புவா நியூ கினி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. திமோர் லெஸ்டே

  • இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே தருஸ்ஸலாம், வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய பத்து உறுப்புநாடுகளைக் கொண்ட ஆசியான் குழுமம் தனது 11ஆவது உறுப்பு நாடாக கிழக்குத்திமோரை ஏற்றுக்கொள்ள கொள்கையளவில் ஒப்புக்கொண்டதாக ஆசியான் (ASEAN) கூட்டமைப்பு அறிவித்துள்ளது. திமோர் லெஸ்டே என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் அந்தத் தீவுநாடு, 2002இல் ஐக்கிய நாடுகள் அவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அது ஆசியாவின் இளைய ஜனநாயக நாடாக உள்ளது.

10. 2022 – உலக நிமோனியா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Championing the fight to stop pneumonia

ஆ. Prevention of pneumonia

இ. Early Diagnosis

ஈ. Raising Awareness

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Championing the fight to stop pneumonia

  • நிமோனியா எனப்படும் நோயைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.12ஆம் தேதி, ‘உலக நிமோனியா நாள்’ அனுசரிக்கப்படுகிறது. நிமோனியா என்பது பாக்டீரியா, தீநுண்மங்கள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நுரையீரல் சார்ந்த ஒரு தொற்று ஆகும். இந்த ஆண்டுக்கான உலக நிமோனியா நாளின் கருப்பொருள், “Championing the fight to stop pneumonia – நிமோனியாவை ஒழிப்பதற்கான போராட்டத்தில் வெற்றி பெறுவது” என்பதாகும். இந்த நாள் முதன்முதலில் 2009 நவம்பர்.12 அன்று, ‘ஸ்டாப் நிமோனியா’ என்ற முனைவின் கீழ் நடைமுறைக்கு வந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 23ஆவது ஹார்ன்பில் திருவிழாவை குடியரசுத்துணைத்தலைவர் தொடங்கிவைத்தார்.

நாகாலாந்து தலைநகரம் கோகிமா அருகே கிசாமாவில் உள்ள நாகா பாரம்பரிய கிராமத்தில் 23ஆவது இருவாச்சி திருவிழாவை குடியரசுத்துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கிவைத்தார்.

2. நாட்டின் மூன்று வானூர்தி நிலையங்களில், ‘டிஜி யாத்ரா’ தொழில்நுட்பத்தை நடுவண் வான்போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைத்தார்.

புது தில்லி, வாரணாசி, பெங்களூரு ஆகிய மூன்று விமான நிலையங்களில், ‘டிஜி யாத்ரா’ தொழில்நுட்பத்தை மத்திய வான்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தொடக்கிவைத்தார். முக அடையாள தொழில்நுட்பம் வாயிலாக வானூர்தி நிலையத்திற்குள் பயணிகள் ஊழியர்களை நேரடியாக தொடர்புகொள்வதை தவிர்த்து விரைவாகச் செல்லும் வகையில், ‘டிஜி யாத்ரா’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவராக சி நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார்.

சி நெடுஞ்செழியன் தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I) ஆக இன்று (1 டிசம்பர் 2022) பொறுப்பேற்றார். சி நெடுஞ்செழியன், கடந்த 1996ஆம் ஆண்டில் IA&AS அதிகாரியாக பணியிலமர்ந்தார். முதன்மை கணக்காய்வுத் தலைவர் பொறுப்பில், தமிழ்நாட்டின் 37 துறைகளில், 21 துறைகளை தணிக்கை செய்யும் மாநில CAGஇன் அமைப்பிற்கு அவர் தலைமை வகிக்கிறார். மாநில அரசின், நிதி, வருவாய், சுகாதாரம், கல்வி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனம் ஆகியவற்றை தணிக்கை செய்யும் பொறுப்பை அவர் அலுவலகம் மேற்கொள்கிறது. இந்த அலுவலகம், பல்வேறு தரப்பட்ட தலைப்புகளில் பல தணிக்கை அறிக்கைகளை மாநில சட்டமன்றத்தில் ஒவ்வோர் ஆண்டும் தாக்கல் செய்கிறது.

1st December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. As per the recent NSO data, what is India’s gross domestic product (GDP) growth for the July–September quarter of 2022–23?

A. 6.1%

B. 6.3%

C. 6.5%

D. 7.2 %

Answer & Explanation

Answer: B. 6.3%

  • As per provisional estimates released by National Statistical Office (NSO), India’s gross domestic product (GDP) for the July–September quarter (Q2) of the financial year 2022–23 slowed to 6.3 per cent. The GDP saw a growth of 13.5 per cent in the preceding April–June quarter of 2022–23. It was cut down mainly by the poor performance of manufacturing and mining sectors.

2. India–US joint military exercise ‘Yudh Abhyas–2022’ is held in which Indian state?

A. Goa

B. Andhra Pradesh

C. Uttarakhand

D. Sikkim

Answer & Explanation

Answer: C. Uttarakhand

  • The 18th edition of the India–US joint military exercise ‘Yudh Abhyas’ is being held in Uttarakhand. The military exercise is conducted annually between India and the US. As the exercise is held about 100 km from the Line of Actual Control (LAC), China said it was opposed to the military exercise.

3. As per recent data, what is the Maternal Mortality Ratio (MMR) in India during 2018–20?

A. 130 per lakh live births

B. 101 per lakh live births

C. 97 per lakh live births

D. 85 per lakh live births

Answer & Explanation

Answer: C. 97 per lakh live births

  • As per the Special Bulletin released by the Registrar General of India, India has witnessed a significant decline in the Maternal Mortality Ratio (MMR) to 97 per lakh live births in 2018–20. The figure was at130 per lakh live births in 2014–16. With this, India accomplished the National Health Policy target for MMR of less than 100 per lakh live births. The SDG target is 70 per lakh live births by 2030.

4. As per the World Bank’s Migration and Development Brief, what is the expected Remittance flows to India in 2022–23?

A. USD 50 billion

B. USD 100 billion

C. USD 150 billion

D. USD 200 billion

Answer & Explanation

Answer: B. USD 100 billion

  • The World Bank recently released its flagship report titled ‘Migration and Development Brief’. As per the report, Remittance flows to India will rise 12% to reach USD 100 billion this year. Remittances to low and middle–income countries grew by an estimated 5% to $626 billion in 2022.

5. Economic Cooperation and Trade Agreement (ECTA) between India and which country is set to enter into force from December 2022?

A. UAE

B. Australia

C. France

D. Sri Lanka

Answer & Explanation

Answer: B. Australia

  • The India–Australia Economic Cooperation and Trade Agreement (ECTA) will enter into force on 29th December, 2022. The India–Australia ECTA will enhance bilateral trade in goods and services and create new employment opportunities. Under the agreement, duties on 100 percent tariff lines are to be eliminated by Australia.

6. Which Union Ministry notified the ‘e–waste (management) rules 2022’?

A. Ministry of Home Affairs

B. Ministry of Environment, Forest and Climate Change

C. Ministry of Health and Family Welfare

D. Ministry of Power

Answer & Explanation

Answer: B. Ministry of Environment, Forest and Climate Change

  • The Ministry of Environment, Forest and Climate Change has recently notified e–waste (management) rules 2022. The rules will come into force from 1 April next year and apply to every manufacturer, producer refurbisher and recycler. The rules mandate to reduce the use of lead, mercury, cadmium among others in the manufacturing of electronic equipment.

7. Which institution released the ‘Global Vaccine Market Report 2022’?

A. WHO

B. UNEP

C. John Hopkins University

D. Oxford University

Answer & Explanation

Answer: A. WHO

  • The World Health Organization (WHO) has recently released the ‘Global Vaccine Market Report 2022’. As per the report, approximately 16 billion vaccine doses, worth USD 141 billion, were supplied in 2021. The increase was primarily driven by COVID–19 vaccines. It also revealed that limited vaccine supply and unequal distribution drive global disparities.

8. South India’s first Vande Bharat Express train connects Mysuru and which city?

A. Chennai

B. Madurai

C. Coimbatore

D. Salem

Answer & Explanation

Answer: A. Chennai

  • Prime Minister Narendra Modi flagged off south India’s first Vande Bharat Express train, connecting Mysuru and Chennai via Bengaluru. This is the fifth Vande Bharat Express train in the country and it will enhance connectivity between Chennai, Bengaluru and Mysuru. The Prime Minister also flagged off the ‘Bharat Gaurav Kashi Darshan’ train, which aims to send pilgrims from Karnataka to Kashi.

9. Which country has been admitted as the 11th member of the Association of Southeast Asian Nations (ASEAN) group?

A. Timor Leste

B. Tajikistan

C. Kazakhstan

D. Papua New Guinea

Answer & Explanation

Answer: A. Timor Leste

  • ASEAN bloc has announced that it has agreed in principle to admit East Timor as the group’s 11th member Indonesia, Malaysia, Philippines, Singapore, Thailand, Brunei Darussalam, Vietnam, Laos, Myanmar and Cambodia are the 10 member countries of ASEAN. The half–island nation, officially called Timor Leste, was officially recognised by the United Nations in 2002, making it Asia’s youngest democracy.

10. What is the theme of ‘World Pneumonia Day 2022’?

A. Championing the fight to stop pneumonia

B. Raising Awareness

C. Prevention of pneumonia

D. Early Diagnosis

Answer & Explanation

Answer: A. Championing the fight to stop pneumonia

  • The ‘World Pneumonia Day’ is observed every year on November 12, to raise awareness about the disease named Pneumonia. Pneumonia is a lung–based infection caused by bacteria, viruses, and fungi. The theme for this year’s World Pneumonia Day is ‘Championing the fight to stop pneumonia.’ The day first came into effect on November 12, 2009, under the initiative named ‘Stop Pneumonia’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!