TnpscTnpsc Current Affairs

1st February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

1st February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 1st February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி என்பாருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) டென்னிஸ்

ஆ) கால்பந்து 

இ) ஹாக்கி

ஈ) மட்டைப்பந்து

  • போலந்து கால்பந்தாட்ட வீரர் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி 2021ஆம் ஆண்டிற்கான ‘FIFA சிறந்த வீரர்’ விருதை வென்றார். தற்போது, அவர் பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விருதை வெல்கிறார்.
  • பார்சிலோனாவின் ஸ்பானிய நடுகள வீராங்கனையான அலெக்ஸியா புட்டெல்லாஸ் ‘FIFA சிறந்த வீராங்கனை’ விருதை வென்றார். இந்த ஆண்டின் சிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருதை அர்ஜென்டினா வீரர் எரிக் லமேலா வென்றுள்ளார்.

2. ‘நுசந்தரா’ என்பது எந்நாட்டின் புதிய தலைநகரமாகும்?

அ) கஜகஸ்தான்

ஆ) ஆப்கானிஸ்தான்

இ) இந்தோனேசியா 

ஈ) இலங்கை

  • இந்தோனேஷியா தனது தலைநகரமான ஜகார்த்தாவை போர்னியோ தீவின் கிழக்கே அமைந்துள்ள கிழக்கு கலிமந்தனுக்கு மாற்றும் மசோதாவை நிறைவேற்றியது. இந்தோனேஷியாவின் புதிய தலைநகர் நுசந்தரா என்று அழைக்கப்படும். ‘நுசந்தரா’ என்றால் ஜாவனிய மொழியில் ‘தீவுகளின் கூட்டம்’ எனப்பொருள்.
  • ஜகார்த்தா ஏற்கனவே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் காரணத்தால், இந்தப் புதிய நகரத்தில் ஒரு சீர்மிகு நகரக் கட்டமைப்பை உருவாக்க இந்தோனேஷிய அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தோனேசியா நான்காவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக உள்ளது.

3. ‘குளோபல் சைபர் செக்யூரிட்டி அவுட்லுக் – 2022’ என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) உலக பொருளாதார மன்றம் 

இ) உலக வர்த்தக அமைப்பு

ஈ) சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்

  • உலக பொருளாதார மன்றம் ‘குளோபல் சைபர்செக்யூரிட்டி அவுட்லுக் – 2022’ என்றவோரறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, COVID-19 தொற்று வணிகத்திலும் வீட்டிலும் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டை அதிக்கப்ப -டுத்தியுள்ளது. இந்த அதீத உயர்வு பல்வேறு இணைய நிகழ்வுகளுக்கு வழிவகுத்தன.

4. ‘ஆபரேஷன் சர்த் ஹவா’வை மேற்கொள்கிற இந்திய ஆயுதப்படை எது?

அ) இந்தோ-திபெத்திய எல்லைக்காவல்படை

ஆ) எல்லைப் பாதுகாப்புப் படை 

இ) மத்திய சேமக்காவல்படை

ஈ) மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை

  • எல்லைப் பாதுகாப்புப் படையானது ஜன.23-28 வரை நடைபெறவுள்ள அதன் “ஆபரேஷன் சர்த் ஹவா” கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் கண்காணிப்பை அதிகரிக்கும். எல்லைப் பாதுகாப்புப்படை கோடையில் “கரம் ஹவா” மற்றும் குளிர்காலத்தில் “சர்த் ஹவா” ஆகியவற்றை நடத்துகிறது.

5. ‘சாதி’ என்ற திறன்பேசிச் செயலியை அறிமுகப்படுத்திய நிதி நிறுவனம் எது?

அ) இந்திய ரிசர்வ் வங்கி

ஆ) நபார்டு

இ) SEBI 

ஈ) SIDBI

  • பங்குச்சந்தையின் அடிப்படைக்கருத்துகள் குறித்து முதலீ -ட்டாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதற்காக, மூலதனச் சந்தை ஒழுங்காற்றுநரான SEBI தனது திறன் பேசிச்செயலியை ‘சாதி’ என்ற பெயரில் வெளியிட்டது.
  • பங்குச்சந்தையில் நுழையும் தனிநபர் முதலீட்டாளர்களின் அதிகரிப்பு காரணத்தாலும் திறன்பேசி அடிப்படையிலான வணிகநடவடிக்கைகளாளும் இச்செயலி வெளியிடப்பட்டு உள்ளது. KYC செயல்முறை, வர்த்தகம் மற்றும் தீர்வு, பரஸ்பர நிதிகள், சந்தை மேம்பாடுகள், முதலீட்டாளர் குறைகளை நிவர்த்தி செய்யும் பொறிமுறை போன்ற அடிப்படைக் கருத்துகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. ‘AFC மகளிர் ஆசிய கோப்பை – 2022’ போட்டியை நடத்துகிற நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) ஆஸ்திரேலியா

இ) சீனா

ஈ) இந்தியா 

  • ‘AFC மகளிர் ஆசிய கோப்பை – 2022’ போட்டியை இந்தியா நடத்துகிறது. இந்தியா காலிறுதிக்கு தகுதிபெற்று 2023 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையை எட்டுவதன் மூலம் சரித்திரம் படைக்கும் நோக்கில் உள்ளது. ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது.
  • இந்திய சீனியர் கால்பந்து அணி இதுவரை எந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் விளையாடியதில்லை. ஆஸ்திரேலியாவும் சீனாவும் மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், தொடர்ந்து 3ஆவது முறையாக தனது முதலிட -த்தை உறுதிப்படுத்திக்கொள்ள ஜப்பான் விழைகிறது.

7. ‘முடிவிலி பாலம்’ என்பது எந்த நாட்டில் அமைந்துள்ள ஒரு சிறப்புவாய்ந்த கட்டடக்கலை அமைப்பு ஆகும்?

அ) ரஷ்யா

ஆ) ஐக்கிய அரபு அமீரகம் 

இ) இந்தியா

ஈ) அமெரிக்கா

  • ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ‘இன்ஃபினிட்டி பிரிட்ஜ்’ முதன்முறையாக சமீபத்தில் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. துபாய் சிறுகுடாமீது கட்டப்பட்டுள்ள இப்புதிய பாலம், அல் ஷிந்தகா சுரங்கப்பாதைக்கு அருகில், வாகனங்கள் நீருக்கடியில் அந்தச் சிறுகுடாவை கடக்க உதவுகிறது. 2018’இல் முதன்முதலில் முன்மொழியப்பட்ட அல் ஷிந்தகா வழித்தட திட்டத்தின் ஒருபகுதியாக இந்த ‘முடிவிலி பாலம்’ அமைந்துள்ளது.

8. குடியரசுத்தலைவர் சார்பாக ‘இந்தியாவின் எதிர்பாராச் செலவுக்கான நிதியத்தை’ நிர்வகிக்கிற துறை எது?

அ) பொருளாதார விவகாரங்கள் துறை 

ஆ) செலவினத்துறை

இ) நிதியியல் சேவைகள் துறை

ஈ) வருவாய்த்துறை

  • ‘இந்தியாவின் எதிர்பாராச் செலவுக்கான நிதியம்’ என்பது இந்தியக்குடியரசுத்தலைவரின் சார்பாக நிதியமைச்சகத் -தின் பொருளாதார விவகாரங்கள் துறையால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இது நிர்வாக செயல்முறை நடவடிக்கை மூலம் இயக்கப்படலாம். பேரிடர்கள் மற்றும் தொடர்புடைய எதிர்பாராத செலவுகளின் போது பயன்படுத்தப்படலாம்.
  • சமீபத்தில், இந்த நிதிக்கான செலவின விதிமுறைகளை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது. மொத்த நிதி மதிப்பில் 40 சதவீதத்தை செலவினச் செயலாளரின் வசம் வைக்க இது வழிகோலுகிறது.

9. அஸ்ஸாமின் உயரிய குடிமக்கள் விருதான ‘அஸ்ஸாம் வைபவ்’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) ரத்தன் டாடா 

ஆ) கௌதம் அதானி

இ) முகேஷ் அம்பானி

ஈ) அஸிம் பிரேம்ஜி

  • தொழிலதிபரும், கொடையாளியுமான ரத்தன் டாடாவுக்கு மாநிலத்தின் மிகவுயரிய விருதான ‘அஸ்ஸாம் பைபவ்’ விருதை அஸ்ஸாம் அரசு வழங்கவுள்ளது.
  • அஸ்ஸாம் மாநிலம் ‘அஸ்ஸாம் பைபவ்’, ‘அஸ்ஸாம் சௌரவ்’ & அஸ்ஸாம் கௌரவ் ஆகிய விருதுகளையும் வழங்கும். ‘அஸ்ஸாம் சௌரவ்’ விருது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் உட்பட ஐந்து நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

10.Halodule uninervis’ என்ற கடற்புல் வகையானது, கீழ்காணும் எந்த நோய்க்கு எதிராக வலுவான செயல்பாட் -டைக் கொண்டுள்ளது?

அ) புற்றுநோய் 

ஆ) உயர் இரத்தவழுத்தம்

இ) நீரிழிவு நோய்

ஈ) COVID-19

  • ‘Halodule uninervis’இன் எத்தில் அசிடேட் கூறினிலுள்ள வலுவான புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டின் அறிவியல் ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தென் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகே கடலோரப் பகுதியில் காணப்படும் ஒரு கடற்புல் வகையாகும்.
  • வீரியம்மிக்க கருங்கட்டி, நுரையீரல், கருப்பைவாய்ப்புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் உள்ளிட்ட மனிதரில் ஏற்படும் பல்வேறு புற்றுநோய் செல்களுக்கு எதிரான இது செயல்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பொறுப்புணர்வு: குடியரசுத்தலைவர் பெருமிதம்

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரை:

உலகம் தற்போது பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் சர்வதேச அளவில் இந்தியா குரல் கொடுத்துவருகிறது. 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ய கரியமில வாயு உமிழ்வு நிலை உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் இந்தியா நிர்ணயித்தது.

‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் விநியோக அமைப்பு’ திட்டத்தையும் இந்தியா முன்னெடுத்தது.

கரோனா தொற்று பரவல் காலத்திலும், கடந்த 2020-21 நிதியாண்டில் நாட்டின் விவசாயிகள் 30 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்தனர். 433 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்தது. அதன்மூலமாக 50 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர். நாட்டின் வேளாண் ஏற்றுமதி `3 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

விவசாயிகள் நிதியுதவித் திட்டம் வாயிலாக 11 கோடி விவசாயிகள் பலனைடந்துள்ளனர்.

ரயில்வே துறையில் சாதனை: உழவர்களுக்கான ரயில் (கிசான் ரயில்) சேவை, ரயில்பாதைகள் மின்மயமாக்கம், நவீனமயம், வடகிழக்கு மாநிலங்களுக்கான ரயில் சேவை உள்ளிட்டவை ரயில்வே துறையில் அரசு நிகழ்த்திய முக்கிய சாதனைகள். வந்தே பாரத் ரயில், ‘விஸ்டாடோம்’ பெட்டிகள் உள்ளிட்டவை நவீனத்தை வெளிப்படுத்துகின்றன.

கடந்த 7 ஆண்டுகளில் 24,000 கிமீ தொலைவுக்கு ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் செனாப் நதிக்கு மேலே கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் நவீனத்தின் மையமாகத் திகழ்கிறது.

வடகிழக்கின் வளர்ச்சி: வடகிழக்கு மாநிலங்களில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்த அரசு உறுதிகொண்டுள்ளது. அந்த மாநிலங்களின் தலைநகரங்கள் அனைத்தும் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்தும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கான வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும் நிலை உருவாகும்.

வலுவான நிலையில் இந்தியா: தொடர்ந்து மாறிவரும் சர்வதேச சூழலில் தூதரகத்தொடர்புகள்மூலமாக இந்தியா தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டுவருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்று பல்வேறு முக்கிய முடிவுகளை இந்தியா எடுத்தது; கடல்சார் பாதுகாப்பு குறித்து முதல்முறையாக விவாதம் நடத்தப்பட்டது.

அண்டைநாடான ஆப்கானிஸ்தானில் நிலையில்லாத் தன்மை ஏற்பட்டவுடன், அந்நாட்டில் சிக்கிக்கொண்டவர்கள் ‘ஆபரேஷன் தேவி சக்தி’மூலமாக மீட்கப்பட்டனர். ஆப்கனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள், உணவுப்பொருள்களை இந்தியா அனுப்பி வருகிறது.

‘ஒரே இந்தியா, சிறந்த இந்தியா’: பல ஆண்டுகளாகப் புறக் -கணிக்கப்பட்டு வந்த ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கை
-ளை அரசு மேற்கொண்டு வருகிறது. ‘ஒரே இந்தியா, சிறந்த இந்தியா’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜனநாயக கொள்கைகளைக்கடைபிடித்து வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது என்றார் இந்தியக் குடியரசுத் தலைவர்.

2. பொருளாதார வளர்ச்சி 8 – 8.5% ஆக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கை

2022-23ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5% ஆக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2021-22ஆம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்தார்.

பொருளாதார ஆய்வறிக்கையின்படி, எதிர்வரும் 2022-23ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நிதியாண்டில் வரக்கூடிய சவால்களை சந்திக் -கக்கூடிய வகையில் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில், நாட்டின் மெய்யான பொருளாதார வளர்ச்சி 9 புள்ளி 2 சதவிகிதமாக ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில், வேளாண் துறை 3.9 சதவிகிதமாக வளரும் எனக் கணிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. இதேபோல், தொழில்துறை 11.8 சதவிகிதமாக வளர்ச்சி அடையும் எனக் கருதப்படுவதாகவும், சேவைத் துறை 8.2 சதவிகிதமாக உயரும் என கணிக்கப்படுவதாக -வும் அதில் கூறப்பட்டுள்ளது.

3. 2020-21 பொருளாதார வளர்ச்சியில் 6.6% பின்னடைவு

கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.6 சதவீதம் சரிவைக் கண்டதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்க -ப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பேரிடரின் தாக்கம் இந்தியப்பொருளாதாரத்தில் முன்பு கணிக்கப்பட்டதைவிட குறைவாகவே இருந்தது. அதனை எடுத்துக்காட்டும் வகையில், 2021 மே மாதத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டில் இந்தியப்பொருளதாரம் 2020 -21ஆம் நிதியாண்டில் 7.3 சதவீத சரிவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதிப்பின் தாக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததன் பலனாக இந்தச் சரிவு 6.6 சதவீதம் அளவுக்கே ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நிலையான (2011-12) விலை அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019-20ஆம் நிதியாண்டில் `145.16 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2020-21இல் `135.58 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என NSO தெரிவித்துள்ளது.

1. Robert Lewandowski is associated with which sports?

A) Tennis

B) Football 

C) Hockey

D) Cricket

  • Polish striker Robert Lewandowski won the FIFA Best Men’s Player award for 2021. At present, he plays for Bayern Munich and has won the award for the second straight year. Barcelona’s Spanish midfielder Alexia Putellas won the FIFA Best Women’s Player prize. The Puskas Award for best goal of the year was won by Argentine Erik Lamela.

2. ‘Nusantara’ is the new capital city of which country?

A) Kazakhstan

B) Afghanistan

C) Indonesia 

D) Sri Lanka

  • Indonesia passed a bill replacing its capital Jakarta with East Kalimantan, situated to the east of Borneo Island. The new capital city of the country will be called Nusantara. Nusantara means ‘Archipalego’ in Javanese language. The Government also aims to build a smart metropolis in the new city as Jakarta was already overpopulated. As of 2022, Indonesia is the fourth largest populous country.

3. Which institution released the ‘Global Cybersecurity Outlook 2022’ Report?

A) World Bank

B) World Economic Forum 

C) World Trade Organization

D) International Telecom Union

  • The World Economic Forum released the ‘Global Cybersecurity Outlook 2022’ report. As per the report, the COVID–19 pandemic has fast–tracked the use of digital tools in business and the home. These advances have led to several frequent, costly and damaging cyber incidents.

4. Which Indian Armed Force conducts ‘Operation Sard Hawa’?

A) Indo–Tibetan Police Force

B) Border Security Force 

C) Central Reserve Police Force

D) Central Industrial Security Force

  • The Border Security Force will increase surveillance along the Pakistan border in Rajasthan under its “Operation Sard Hawa” to be held from February 23 to 28. The Border Security Force conducts “Operation Garam Hawa” in summer and “Operation Sard Hawa” in winter every year.

5. Which financial institution launched the ‘Saathi’ mobile app?

A) Reserve Bank of India

B) NABARD

C) SEBI 

D) SIDBI

  • Capital markets regulator SEBI launched its mobile App named ‘Saathi’ to create awareness among investors about the basic concepts of securities market. The app has been released among the recent rise in individual investors entering the market, and a large proportion of trading being mobile phone based.
  • The App aims to create awareness about the basic concepts KYC process, trading and settlement, mutual funds, market developments, investor grievances redressal mechanism, etc.

6. Which country played host to the ‘AFC Women’s Asian Cup 2022’?

A) Japan

B) Australia

C) China

D) India 

  • India is hosting the ‘AFC Women’s Asian Cup 2022’. India is aiming qualify for the quarterfinals and create history by reaching the 2023 FIFA Women’s World Cup. The FIFA Women’s World Cup is scheduled to be held in Australia and New Zealand next year.
  • No Indian senior football team has ever played in a World Cup. Japan is looking to reaffirm its top position for third consecutive time, with Australia and China as the biggest challenges.

7. ‘Infinity Bridge’ is the iconic architectural structure located in which country?

A) Russia

B) UAE 

C) India

D) USA

  • The ‘Infinity Bridge’ in Dubai, United Arab Emirates, has been opened to traffic for the first time recently. The new bridge which is built over the Dubai Creek, beside the Al Shindagha Tunnel, which allowed vehicles to cross the Creek underwater. The Infinity Bridge is part of the Al Shindagha Corridor Project, which was first proposed in 2018.

8. Which department manages the ‘Contingency Fund of India’ on behalf of the President?

A) Department of Economic Affairs 

B) Department of Expenditure

C) Department of Financial Services

D) Department of Revenue

  • The ‘Contingency Fund of India’ is held by the Finance Ministry’s Department of economic affairs on behalf of the President of India. It can be operated by executive action and used during disasters and related unforeseen expenditures.
  • Recently, the Government has tweaked spending norms for Contingency Fund, allowing 40% of the total corpus to be placed at disposal of the expenditure secretary.

9. Who has been selected for Assam’s highest civilian award ‘Assam Baibhav’?

A) Ratan Tata 

B) Gautam Adani

C) Mukesh Ambani

D) Azim Premji

  • The Assam government is set to confer the state’s highest civilian award ‘Assam Baibhav’ on industrialist and philanthropist Ratan Tata. The state will also confer Assam Baibhav, Assam Saurav and Assam Gaurav Awards. The Assam Saurav award will be conferred on fiver personalities including Olympics medallist Lovlina Borgohain.

10. Halodule uninervis, a species of sea grass, is found to have strong activity against which disease?

A) Cancer 

B) Hypertension

C) Diabetes

D) COVID–19

  • Researchers have recently found scientific evidence of a strong anti–cancer activity in the ethyl acetate fraction of Halodule uninervis.
  • It is a species of sea–grass found in the coastal region near Rameswaram in southern Tamil Nadu. It evaluated the activity of the species against various human cancer cell lines, including malignant melanoma, lung, cervix, carcinoma and colorectal cancers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!