TnpscTnpsc Current Affairs

1st November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

1st November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 1st November 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st November 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. தேசிய பாதுகாப்பு வியூகத்தை கொண்டுவருவதற்கு முனைந்துள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. அமெரிக்கா

இ. ரஷ்யா

ஈ. இந்தியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமெரிக்கா

  • அண்மையில் அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்பு வியூகத்தை (National Security Strategy) அறிமுகப்படுத்தியது. அனைத்து அமெரிக்க அதிபர்களும் தங்களுடைய NSSஐ வெளிக்கொணர்வதற்கு, ‘கோல்ட்வாட்டர்–நிக்கோல்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் டிஃபென்ஸ் ரீஆர்கனைசேஷன் ஆக்ட் ஆஃப் 1986’ஆல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு குறித்த நிர்வாகியின் பார்வையை சட்டமன்றத்திற்குத் தெரிவிப்பதை இந்த வியூகம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜோ பைடனின் நிர்வாகமானது தேசிய பாதுகாப்பு வியூகம், அணு நிலை ஆய்வு மற்றும் ஏவுகணை பாதுகாப்பு ஆய்வு ஆகியவற்றையும் வெளியிட்டது.

2. மச்சு ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள மோர்பி பாலம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. குஜராத்

இ. அஸ்ஸாம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. குஜராத்

  • மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள 135 ஆண்டுகள் பழைமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் நாற்பது பெண்கள் மற்றும் முப்பத்து நான்கு குழந்தைகள் உட்பட நூற்று நாற்பது பேர் உயிரிழந்தனர். மச்சு ஆற்றின்மீது 754 அடி நீளத்தில் அமைந்துள்ள இப்பாலம் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது கட்டப்பட்டது. பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்புப்பணிகளுக்காக ஏழு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள்ளாக அது அறுந்து விழுந்துள்ளது. இது ஜுல்டோ புல் (அலைவுறு பாலம்) எனப்படும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும்.

3. ‘DRDO தொழிற்துறை பல்கலைக்கழகம் – சிறப்பு மையம் (DIA–CoE)’ அமைக்கப்பட்டுள்ள நிறுவனம் எது?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. ஐஐடி ரூர்க்கி

இ. IISc பெங்களூரு

ஈ. NIT கோழிக்கோடு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஐஐடி ரூர்க்கி

  • இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமானது இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ரூர்க்கியில் (IIT ரூர்க்கி) ‘DRDO தொழிற்துறை பல்கலைக்கழகம் – சிறப்பு மையம் (DIA–CoE)’ அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மையம் இந்திய அரசாங்கத்தின் DRDOஇடமிருந்து இதற்காக நிதியுதவி பெறும். பாதுகாப்பு பயன்பாடுகளுக்கான திறன்மிகு உட்கட்டமைப்பு மற்றும் கடினப்படுத்தப்பட்ட கட்டமைப்புகள், ஆற்றல் சேமிப்பு சாதனங்கள், நிலச்சரிவு, பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வுகள், லேசர் மற்றும் ஸ்பெஷாலிட்டி ஃபைபர் போன்ற முதன்மை ஆராய்ச்சிப் பகுதிகளில் இது தனது கவனத்தைச் செலுத்தும்.

4. 2022 – ‘ஊழல் விழிப்புணர்வு வாரத்திற்கான’க் கருப்பொருள் யாது?

அ. Corruption free India for a developed Nation

ஆ. Elimination of Corruption

இ. Embodiment of Honesty

ஈ. Ethics and Values

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Corruption free India for a developed Nation

  • காலஞ்திசென்ற சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் (அக்டோபர் 31) வரும் வாரத்தில் நடுவண் விழுப்புணர்வு ஆணையம் (CVC) ஊழல் விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்கிறது. நடப்பு 2022ஆம் ஆண்டில் அக்.31ஆம் தேதி முதல் நவ.6ஆம் தேதி வரை, “Corruption free India for a developed Nation” என்ற கருப்பொருளின்கீழ் இந்த ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னதாக, CVC 3 மாதம் நீளும் இயக்கத்தை முன்னெடுத்தது.

5. ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி, பணவீக்க இலக்கை எத்தனை காலாண்டுகளுக்குப் பராமரிக்கத்தவறினால், இந்திய ரிசர்வ் வங்கி நடுவணரசுக்கு அறிக்கை அனுப்பவேண்டும்?

அ. இரண்டு

ஆ. மூன்று

இ. நான்கு

ஈ. ஐந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மூன்று

  • இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 45ZN பிரிவின்கீழ், அவ்வங்கியானது, தொடர்ந்து மூன்று காலாண்டுகளுக்கு பணவீக்க இலக்கைப் பராமரிக்கத் தவறினால், அது எடுக்கும் காரணங்கள் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை விளக்கி அறிக்கையொன்றை நடுவணரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 2016இல் பணவியல் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்திய பின்னர் முதன்முறையாக, RBI, வங்கி பணவியல் கொள்கைக் குழுவின் சிறப்புக்கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது. 2022 ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளுக்கு சில்லறை பணவீக்க விகிதம் ஆறு சதவீத இலக்கைவிட அதிகமாக இருப்பதால், அது அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

6. `350 கோடியில் மருத்துவ சாதன பூங்கா கட்டப்படவுள்ள நலகர் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கேரளா

ஆ. கர்நாடகா

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. ஆந்திர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஹிமாச்சல பிரதேசம்

  • இமாச்சல பிரதேச மாநிலம் நலகரில் மருத்துவ சாதன பூங்கா கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோதி நாட்டினார். சுமார் `350 கோடி மதிப்பீட்டில் இந்தப் பூங்கா கட்டப்படவுள்ளது. மொத்த மருந்து பூங்காவிற்கு தெரிவான 3 மாநிலங்களுள் ஹிமாச்சல பிரதேச மாநிலமும் ஒன்று. மருத்துவ சாதனங்கள் பூங்காவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் ஹிமாச்சல பிரதேசமும் ஒன்று. நலகர் மருத்துவ சாதனப் பூங்கா இதன் ஒருபகுதியாகும்.

7. ‘VIDA V1’ என்ற பெயரில் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. மாருதி சுசூகி

ஆ. ஹீரோ மோட்டோகார்ப்

இ. TATA மோட்டார்ஸ்

ஈ. TVS மோட்டார்ஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹீரோ மோட்டோகார்ப்

  • நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, Hero MotoCorp தனது முதல் மின்–ஸ்கூட்டரான ‘VIDA V1’ஐ அறிமுகப்படுத்தியதன்மூலம் மின்சார வாகனப்பிரிவில் தடம்பதித்தது. ‘VIDA V1’ ஆனது Bajaj Chetak, TVS iQube, Ather Energy, Hero Electric, Ola Electric போன்ற பிறவற்றுடன் போட்டியிடும். ஹீரோ மோட்டோகார்ப், அமெரிக்காவைச் சார்ந்த ஜீரோ மோட்டார்சைக்கிள்களில் $60 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்து மின்சார மோட்டார்சைக்கிள்களை கூட்டாக உருவாக்குவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏதர் எனர்ஜியில் அது பங்கு கொண்டுள்ளது.

8. 2022 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, ‘Center for Civil Liberties’ அமைந்துள்ள நாடு எது?

அ. ஆப்கானிஸ்தான்

ஆ. உக்ரைன்

இ. ஈரான்

ஈ. சீனா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. உக்ரைன்

  • 2022 – அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி, ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான, ‘Center for Civil Liberties’ ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நார்வே நோபல் கமிட்டியின்படி, அதிகாரத்தை விமர்சிப்பதற்கும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்கும் அவை போராடியுள்ளன. போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

9. 2022 – உலக பருத்தி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Weaving a better future for cotton

ஆ. Cotton and Sustainability

இ. Assistance to Cotton–4 Nations

ஈ. Cotton by Products and its Markets

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Weaving a better future for cotton

  • உலக பருத்தி நாளானது அக்டோபர்.7 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2022) இச்சர்வதேச நிகழ்வின் மூன்றாமாண்டு கொண்டாட்டத்தைக் குறிக்கிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் உழவு அமைப்பின் (FAO)படி, 2022 – உலக பருத்தி நாளுக்கானக் கருப்பொருள், “Weaving a better future for cotton” என்பதாகும். UNCTAD மற்றும் பன்னாட்டு வர்த்தக மையம் (ITC) ‘பருத்தி–4’ நாடுகளுக்கு (பெனின், புர்கினா பாசோ, சாட் மற்றும் மாலி) உதவி வழங்குவதற்கான முன்முனைவைத் தொடங்கியது.

10. ‘தொழிற்துறை 4.0’ என்ற மாநாட்டை ஏற்பாடு செய்த நடுவண் அமைச்சகம் எது?

அ. MSME அமைச்சகம்

ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

இ. கனரக தொழிற்துறை அமைச்சகம்

ஈ. நிதியமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கனரக தொழிற்துறை அமைச்சகம்

  • நடுவண் கனரக தொழிற்துறை அமைச்சர் Dr மகேந்திரநாத் பாண்டே, ‘தொழில் 4.0: முன்னிருக்கும் சவால்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லுதல்’ மாநாட்டை குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில் தொடங்கி வைத்தார். டிஜிட்டல் உற்பத்தி செயல்முறைகளை பின்பற்றுவதற்கும், தொழிற்துறையில் ஆட்டோமேஷன் மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்கும் நாட்டில் தொழிற்துறைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த மாநாடு. இந்த நிகழ்ச்சியில், ‘மாடல் ஸ்மார்ட் தொழிற்சாலை மற்றும் மதிப்பீட்டு கருவிகள்’ வெளியிடப்பட்டன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சோதனை அடிப்படையில் இன்று முதல் ‘எண்ம ரூபாய்’ பயன்பாடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவின் முதல் எண்ம ரூபாய் (டிஜிட்டல் ரூபாய்) திட்டம் சோதனை அடிப்படையில் நவ.1ஆம் தேதியிலிருந்து பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக அரசின் நிதிப்பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் எண்ம ரூபாயின் பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. அரசு நிதிப்பத்திரங்களை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வங்கிகள் சோதனை அடிப்படையில் எண்ம ரூபாயை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மகிந்திரா, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி, ஹெச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகளுக்கு சோதனை அடிப்படையிலான எண்ம ரூபாயின் பயன்பாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

2. சொந்த விண்வெளி நிலையத்துக்கு ஆய்வகக்கலம் அனுப்பியது சீனா

சீனா சொந்தமாக நிறுவிவரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான இரண்டாவது ஆய்வகக் கலத்தை அந்த நாடு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனாவிடமுள்ள இராக்கெட்டுகளிலேயே மிகவும் பிரம்மாண்டமான லாங் மார்ச்-5பி ஒய்4 இராக்கெட்மூலம் அனுப்பப்பட்டுள்ள அந்த ஆய்வுக்கலத்துக்கு ‘மெங்டியன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வுக்கலம் தனது சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுவப்பட்டதாகவும், பின்னர் அது தியாங்காங் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும்.

முன்னதாக, சீன விண்வெளி நிலையத்துக்கான, ‘வென்டியன்’ என்ற முதல் ஆய்வுக்கலம் கடந்த ஜூலையில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. தியாங்காங் விண்வெளி நிலையத்தின் மையக்கலமான தியான்ஹேவுக்கு இடர்கால மாற்றாகவும் மற்ற நேரங்களில் சக்திவாய்ந்த ஆய்வகமாகவும் ‘வென்டியன்’ செயல்படும். அவ்விண்வெளி நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படத்தொடங்கும்.

1st November 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which country is mandated to bring out the National Security Strategy (NSS)?

A. China

B. USA

C. Russia

D. India

Answer & Explanation

Answer: B. USA

  • The United States has recently launched its National Security Strategy (NSS). All US Presidents are mandated by the ‘Goldwater–Nichols Department of Defense Reorganization Act of 1986’ to bring out their NSS. The strategy aims to communicate the executive’s vision of national security to the legislative. Joe Biden’s administration also released the National Defense Strategy, the Nuclear Posture Review and the Missile Defense Review.

2. Morbi Bridge on the Machchu river is located in which state?

A. Maharashtra

B. Gujarat

C. Assam

D. Arunachal Pradesh

Answer & Explanation

Answer: B. Gujarat

  • Over 140 people including 40 women and 34 children were killed in the collapse of a 135–year–old suspension bridge on Machchhu river in Morbi. The 754–feet bridge on the Machchu river was built during British rule in the 19th Century. It collapsed four days after it was reopened, after being closed for over seven months for repair and renovation work. It is a popular tourist attraction known as Julto Pul (swinging bridge).

3. ‘DRDO Industry Academia–Centre of Excellence’ (DIA–CoE) has been set up in which institution?

A. IIT Madras

B. IIT Roorkee

C. IISc Bengaluru

D. NIT Kozhikode

Answer & Explanation

Answer: B. IIT Roorkee

  • Ministry of Defence, Government of India, has approved to set up the ‘DRDO Industry Academia–Centre of Excellence’ (DIA–CoE) at Indian Institute of Technology Roorkee (IIT Roorkee). The Facility will receive financial assistance from the DRDO, Government of India. Key research areas include, Smart Infrastructure and Hardened Structures for Defence Applications, Energy Storage Devices, Landslide, Snow, and Avalanche Studies, Pulsed Laser and Specialty Fiber, among others.

4. What is the theme of the ‘Vigilance Awareness Week 2022’?

A. Corruption free India for a developed Nation

B. Elimination of Corruption

C. Embodiment of Honesty

D. Ethics and Values

Answer & Explanation

Answer: A. Corruption free India for a developed Nation

  • Central Vigilance Commission (CVC) observes Vigilance Awareness Week during the week in which the birthday of late Sardar Vallabhbhai Patel (31st October) falls. This year, Vigilance Awareness Week is being observed from 31st October to 6th November, 2022 with the theme of ‘Corruption free India for a developed Nation’. Earlier, CVC carried out a three–month campaign highlighting preventive vigilance initiatives as focus areas.

5. As per the RBI Act, the central bank has to send a report to the Government, in case of failure to maintain inflation target for how many quarters?

A. Two

B. Three

C. Four

D. Five

Answer & Explanation

Answer: B. Three

  • Under section 45ZN of the RBI Act, the central bank is required to submit a report to the government explaining the reasons and remedial actions it would take, in case of failure to maintain its inflation target for three consecutive quarters. For the first time since the implementation of the monetary policy framework in 2016, the central bank has called a special meeting of the Monetary Policy Committee (MPC). It will submit a report to the government, as the retail inflation rate is above six per cent target for three consecutive quarters from January 2022.

6. Nalagarh, where a 350–crore Medical Device Park is set to be built, is located in which state?

A. Kerala

B. Karnataka

C. Himachal Pradesh

D. Andhra Pradesh

Answer & Explanation

Answer: C. Himachal Pradesh

  • Prime Minister (PM) Narendra Modi laid the foundation stone of the Medical Device Park at Nalagarh, Himachal Pradesh (HP) The park is to be built at a cost of about Rs 350 crore. Himachal Pradesh is one of the three states that have been selected for the Bulk Drugs Park. Himachal Pradesh is also one of the four states that have been selected for Medical Devices Park and the Nalagarh Medical Device Park is part of this.

7. Which company launched its first electric scooter named ‘VIDA V1’?

A. Maruti Suzuki

B. Hero Motocorp

C. TATA Motors

D. TVS Motors

Answer & Explanation

Answer: B. Hero Motocorp

  • The country’s largest two–wheeler maker Hero MotoCorp entered into the electric vehicle segment with the launch of its first electric scooter VIDA V1. The VIDA V1 will compete with the likes of Bajaj Chetak, TVS iQube, Ather Energy, Hero Electric, Ola Electric among others. Hero Motocorp announced to invest USD 60 million in US–based Zero Motorcycles to jointly develop electric motorcycles. It already has a stake Ather Energy.

8. ‘Center for Civil Liberties’, which was awarded 2022 Nobel Peace Prize, is based in which country?

A. Afghanistan

B. Ukraine

C. Iran

D. China

Answer & Explanation

Answer: B. Ukraine

  • International Solar Alliance’s Fifth Assembly is to be hosted by India in New Delhi on October 17–20, 2022. Union Minister for Power and New and Renewable Energy RK Singh unveiled the curtain raiser to the Fifth Assembly of ISA. India holds the office of the President of the ISA Assembly. The Fifth Assembly will deliberate on key initiatives of ISA on three critical issues: energy access, energy security, and energy transition.

9. What is the theme of the ‘World Cotton Day 2022’?

A. Weaving a better future for cotton

B. Cotton and Sustainability

C. Assistance to Cotton–4 Nations

D. Cotton by Products and its Markets

Answer & Explanation

Answer: A. Weaving a better future for cotton

  • ‘World Cotton Day’ is celebrated on October 7. This year marks the third–anniversary celebration of the international event. As per the Food and Agriculture Organisation of the United Nations (FAO), the theme of the ‘World Cotton Day 2022’ is ‘Weaving a better future for cotton’. UNCTAD and International Trade Centre (ITC) launched initiative to offer assistance to ‘Cotton–4’ nations: Benin, Burkina Faso, Chad and Mali.

10. Which Union Ministry organised the ‘Conference on Industry 4.0’?

A. Ministry of MSME

B. Ministry of Commerce and Industry

C. Ministry of Heavy Industries

D. Ministry of Finance

Answer & Explanation

Answer: C. Ministry of Heavy Industries

  • Union Minister for Heavy Industries Dr. Mahendra Nath Pandey inaugurated ‘Conference on Industry 4.0: Challenges Ahead and Way Forward’, at Kevadia Gujarat. The Conference is aimed at sensitising industrial sectors in the country to adopt digital manufacturing processes and to promote automation and innovation in the industry. ‘Model Smart Factory and Assessment Tools’ was also inaugurated on the occasion.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!