1st October 2020 Current Affairs in Tamil & English

1st October 2020 Current Affairs in Tamil & English

1st October 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

Tnpsc Current Affairs 1st October 2020 in Tamil

Tnpsc Current Affairs 1st October 2020 in English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1.பரவா நோய்களைக்கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, ஐக்கிய நாடுகளின் விருதை வென்ற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. கர்நாடகா

 • பரவா நோய்களைக் கட்டுப்படுத்துவதின்மூலம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் சிறப்பான பங்களிப்பை செய்தமைக்காக கேரள மாநில அரசு ஐக்கிய நாடுகள் அவையின் விருதை வென்றுள்ளது. இந்த விருதைப் பெறும் உலகெங்கும் உள்ள ஏழு சுகாதார அமைச்சகங்களுள் கேரளாவும் ஒன்றாகும். அம்மாநிலத்தின் பிற திட்டங்களான புற்றுநோய் சிகிச்சை திட்டம், நுரையீரல் நோய் திட்டம் மற்றும் பக்கவாதம் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியவையும் இந்த விருதுக்கு பரிசீலிக்கப்பட்டன.

2.பல்லுயிர் தொடர்பான வட்டமேசை உரையாடலை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. சீனா

இ. ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஈ. ஜெர்மனி

 • “2020ஆம் ஆண்டு’க்கு அப்பால் பல்லுயிர் பற்றிய வட்டமேசை உரையாடல்: புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்குமான எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பிலான உரையாடலை மெய்நிகர் முறையில் சீனா நடத்தியது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த வட்டமேசை உரையாடலில் கலந்துகொண்டார். இது, பல்லுயிர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நடத்தப்பட்டுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதையும் இந்த உரையாடல் நோக்கமாகக் கொண்டிருந்தது.

3.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) பரிசோதனை செய்யப்பட்ட பிருத்வி-2 என்பது எந்த வகை ஏவுகணையாகும்?

அ. பரப்பிலிருந்து பரப்புக்கு பாயும் ஏவுகணை

ஆ. பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணை

இ. கப்பல் எதிர்ப்பு ஏவுகணை

ஈ. கண்டங்களுக்கு இடையில் பாயும் எறிகணை

 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அண்மையில் ஒரு பரப்பிலிருந்து மற்றொரு பரப்புக்கு ஏவக்கூடிய பிருத்வி-2 ஏவுகணையை சோதனை செய்தது. ஒடிசாவின் சண்டிப்பூர் தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து இந்திய இராணுவம் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டது. இந்த பிருத்வி-2 ஏவுகணை, இந்திய ராணுவத்தால் தோராயமாக தெரிவு செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகும். DRDO அறிவியலாளர்களின் கண்காணிப்பின்கீழ் இது நடந்தேறியது.

4. ‘பன்னாட்டு நீதியரசர்கள் ஆணையத்தின்’ தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ. பாரிஸ்

ஆ. ரோம்

இ. ஜெனீவா

ஈ. நைரோபி

 • ‘பன்னாட்டு நீதியரசர்கள் ஆணையம்’ என்பது சுவிச்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட, சர்வதேய மனிதவுரிமைகள்பற்றி பேசும் ஓர் அரசுசாரா அமைப்பாகும். அண்மையில் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்றுதல்) திருத்த மசோதா, 2020 ஆனது பன்னாட்டுச் சட்டத்திட்டங்களுடன் பொருந்தாது என்று இவ்வமைப்பு அறிவித்ததை அடுத்து அது அண்மைச் செய்திகளில் இடம்பெற்றது. இந்த மசோதாவின் விதிகள் யாவும், மனிதவுரிமை மேம்பாட்டில் தன்னிச்சையான தடைகளை விதிக்கும் என்றும் அது கருத்து தெரிவித்திருந்தது.

5. Dr. கபில வத்சயன் விட்டுச்சென்ற காலியிடத்தை நிரப்புவதற்காக, இந்திய பன்னாட்டு மையத்தின் (IIC) வாழ்நாள் அறங்காவலராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. கபில் சிபல்

ஆ. கோபாலகிருஷ்ண காந்தி

இ. ராஜீவ் ஆகிர்

ஈ. சுனில் மேத்தா

 • மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான கோபாலகிருஷ்ண காந்தி, புது தில்லியின் இந்திய சர்வதேச மையத்தின் வாழ்நாள் அறங்காவலராக நியமனஞ்செய்யப்பட்டுள்ளார். Dr கபில வத்சயனின் இறப்பால் உருவாக்கப்பட்ட காலியிடத்தை நிரப்ப அவர் தயாராகவுள்ளார். கோபாலகிருஷ்ணா காந்தி, ஓய்வுபெற்ற தூதரும் மகாத்மா காந்தியின் பெயரனும் ஆவார். 2004 முதல் 2009 வரை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக அவர் பணியாற்றினார்.

6. உலக மருந்தாளுநர்கள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. செப்டம்பர் 25

ஆ. செப்டம்பர் 26

இ. செப்டம்பர் 27

ஈ. செப்டம்பர் 28

 • ஒவ்வோர் ஆண்டும் செப்.25 அன்று உலக மருந்தாளுநர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளை பன்னாட்டு மருந்துக் கூட்டமைப்பு (FIP) அனுசரிக்கிறது. இத்தேதியைக் கடைப்பிடிப்பதற்கான முடிவு, கடந்த 2009ஆம் ஆண்டில் இஸ்தான்புல்லில் நடந்த FIP கவுன்சில் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது.
 • உடல்நலத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களின் பங்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். “Transforming global health” என்பது நடப்பாண்டில் (2020) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

7.எந்தத் தேசிய திட்டத்தின்கீழ், நடுவணரசு, சமீபத்தில் மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு 670 மின்சார பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியது?

அ. சூரிய மித்ரா

ஆ. பிரதமர் உஜ்வாலா யோஜனா

இ. FAME

ஈ. தேசிய சூரிய மின்னாற்றல் திட்டம்

 • மின்சார போக்குவரத்துக்கு ஒரு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும் விதமாக, Faster Adoption and Manufacturing of Electric Vehicle (FAME) இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் சண்டிகரில் 670 மின்சார பேருந்துகளுக்கும், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கேரளா, குஜராத் மற்றும் போர்ட் பிளேரில் 241 மின்னேற்ற நிலையங்களுக்கும் நடுவணரசு ஒப்புதல் அளித்துள்ளது. FAME திட்டத்தை கனரக தொழிற்சாலைகள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

8.சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற “யோகா பிரேக்” நெறிமுறையுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. நலவாழ்வு அமைச்சகம்

ஆ. கல்வி அமைச்சகம்

இ. AYUSH அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

 • COVID-19 நெறிமுறைகள் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த, ‘யோகா இடைவேளை’யை ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் தொடங்கியது. பணியிலிருந்து சிறிது நேரம் விலகி புத்துணர்வுபெற்று மீண்டும் பணியில் கவனஞ்செலுத்துவதே இந்த ஐந்து நிமிட யோகா இடைவேளை திட்டத்தின் நோக்கமாகும். மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையத்துடன் இணைந்து இந்த 5 நிமிட, ‘யோகா இடைவேளை’ நெறிமுறைகளை கடந்த 2019ஆம் ஆண்டில் AYUSH அமைச்சகம் உருவாக்கியது.

9.பாரத் கொடுப்பனவுகள் இயக்கப்பிரிவு அமைப்பதற்கு, அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கொள்கை அளவிலான ஒப்புதலைப் பெற்ற அமைப்பு எது?

அ. வக்ரங்கீ

ஆ. IDFC

இ. கிராமாலயா

ஈ. ஏர்டெல் கொடுப்பனவு வங்கி

 • பாரத் கொடுப்பனவுகள் இயக்கப்பிரிவு (BBPOU) அமைப்பதற்கு, வக்ரங்கீக்கு (Vakrangee), RBI (இந்திய ரிசர்வ் வங்கி) கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்துள்ளது. கொடுப்பனவு மற்றும் தீர்வை முறைகள் சட்டம், 2007’இல் உள்ள விதிகளின்படி இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் BBPS’இன் கீழ் வரும் கொடுப்பனவுகள் தொடர்பான சேவைகளை வக்ரங்கீயால் தற்போது கையாள முடியும்.

10.இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நகர்ப்புறத் துறை ரீதியான திட்டங்களுக்கு, $570 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடனுதவியைச் செய்ய ஒப்புதல் அளித்துள்ள வளர்ச்சி வங்கி எது?

அ. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

ஆ. ஆசிய வளர்ச்சி வங்கி

இ. BRICS வங்கி

ஈ. உலக வங்கி

 • ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் நகர்ப்புறத் துறை ரீதியிலான திட்டங்களுக்கென 2 கடன்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. ராஜஸ்தான் நகரங்களில் நீர் வழங்கல் மற்றும் நலவாழ்வு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு $300 மில்லியன் அமெரிக்க டாலர் கடனும், மத்திய பிரதேச நகர்ப்புற சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக $270 மில்லியன் அமெரிக்க டாலர் கடனையும் வழங்க அவ்வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

 • தமிழ்நாடு முழுவதும், ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’த்திட்டத்தை இன்று (01.10.2020) முதலமைச்சர் எடப்பாடி க பழனிசாமி தொடக்கிவைத்தார். இத்திட்டம் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் 01.10.2020 முதல் செயல்படுத்தப்படும். மேலும், தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், இராமநாதபுரம், மதுரை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் 16.10.2020 முதல் செயல்படுத்தப்படும்.
 • நாட்டிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியின் ஏழு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில், செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை தனியார் பங்களிப்புடன் தொடக்கிவைக்கும் அடையாளமாக காம்பாக்டர்கள், மெக்கானிக்கல் ஸ்வீப்பர், இ-ரிக்‌ஷா வாகன சேவைகளை தமிழ்நாடு அரசு தொடங்கிவைத்துள்ளது.

1. Which state has won the UN Award for Performance in Non–Communicable Diseases related SDGs?

[A] Tamil Nadu

[B] Kerala

[C] Karnataka

[D] Himachal Pradesh

 • On 2020 Sep.24, Kerala won the United Nation Interagency Task Force Award for its outstanding performance in controlling non–communicable diseases related Sustainable Development Goals. Kerala is one among the seven ministries of health from all over the world to receive the award. The other programmes of the state such as Cancer Treatment Programme, Lung Disease Programme and Paralysis Control Programme were also considered for the award.

2. Which country hosted the Ministerial Roundtable Dialogue on Biodiversity in September 2020?

[A] India

[B] China

[C] United States of America

[D] Germany

 • The ‘Ministerial Roundtable Dialogue on Biodiversity Beyond 2020: Building a Shared Future for All Life on Earth’ has been virtually hosted by China. Union Environment Minister of India Prakash Javadekar has attended the Ministerial Roundtable Dialogue. This was conducted one week before the upcoming United Nation Summit on Biodiversity. It also aims to exchange views on biodiversity conservation and sustainable development.

3. Prithvi–II, that was test–fired by the Defence Research and Development Organisation (DRDO), belongs to which category of equipment?

[A] Surface–to–Surface Missile

[B] Anti–Tank Guided Missile

[C] Anti–Ship Missile

[D] Intercontinental Ballistic Missile

 • The Defence Research and Development Organisation (DRDO) has recently test–fired Prithvi–II, the surface–to–surface missile. This exercise has been undertaken as a part of User trial by the Indian Army, from the Integrated Test Range (ITR) at Chandipur base in Odisha. The missile was randomly chosen from the production stock by the Army and was monitored by DRDO Scientists.

4. Where is the headquarters of ‘International Commission of Jurists’ located?

[A] Paris

[B] Rome

[C] Geneva

[D] Nairobi

 • ‘International Commission of Jurists’ is an international human rights non–governmental organization, headquartered at Geneva, Switzerland. ICJ was recently in news as it has announced that the Foreign Contribution (Regulation) Amendment Bill, 2020 passed by the Indian Parliament was incompatible with international law. It also opined that the provisions of the bill would impose arbitrary obstacles in human rights promotion.

5. Who has been appointed as the life trustee of the India International Centre, to fill the vacancy created by Dr. Kapila Vatsyayan?

[A] Kapil Sibal

[B] Gopalkrishna Gandhi

[C] Rajiv Ahir

[D] Sunil Mehta

 • Gopalkrishna Gandhi, former West Bengal Governor has been appointed as a life trustee of India International Centre, New Delhi. He is set to fill the vacancy created by the death of Dr. Kapila Vatsyayan. Gopalkrishna Gandhi is a retired diplomat and is the grandson of Mahatma Gandhi. He served as the Governor of West Bengal from 2004 till 2009.

6. When is the World Pharmacists Day celebrated every year?

[A] September 25

[B] September 26

[C] September 27

[D] September 28

 • Every year, the World Pharmacists Day is celebrated on September 25. This day is observed by International Pharmaceutical Federation (FIP) and the decision to observe this date was made during the council meet of FIP in 2009 at Istanbul.
 • The aim of this day is to encourage activities that promote the role of the pharmacist in improving health. The theme for this year is “Transforming global health”.

7. Under which national scheme, the central Government has recently sanctioned 670 electric buses to Maharashtra, Goa, Gujarat and Chandigarh?

[A] Surya Mitra

[B] PM Ujjawala Yojana

[C] FAME

[D] National Solar Mission

 • The Union government has sanctioned 670 electric buses for Maharashtra, Goa, Gujarat and Chandigarh under the Phase 2 of Faster Adoption and Manufacturing of Electric Vehicle (FAME) scheme. In addition to electric buses, Government has also sanctioned 241 electric charging stations in Madhya Pradesh, Tamil Nadu, Kerala, Gujarat and Port Blair. The FAME scheme is being implemented by Ministry of Heavy Industries.

8. “Yoga Break” protocol which is in news recently, pertains to which Union Ministry?

[A] Ministry of Health

[B] Ministry of Education

[C] Ministry of AYUSH

[D] Ministry of Home Affairs

 • Activities regarding the “Yoga Break” protocol of Ministry of AYUSH have been resumed, after it was suspended due to COVID–19. This 5–minute protocol is intended to introduce yoga to people at work and help them to take a break from the work schedule. This protocol was developed by Ministry of AYUSH in association with Morarji Desai National Institute of Yoga (MDNIY).

9. RBI has recently given in principle approval for setting up Bharat Bill Payment Operating Unit (BBPOU), to which organization?

[A] Vakrangee

[B] IDFC

[C] Gramalaya

[D] Airtel Payments Bank

 • The Reserve Bank of India has given in–principle approval to Vakrangee for setting up Bharat Bill Payment Operating Unit (BBPOU). The approval has been granted as per the provisions contained in Payment and Settlement Systems Act, 2007. Vakrangee can now handle payment and aggregation of payment services relating to bills under BBPS.

10. Which development bank has approved USD 570 million worth loans for Urban sector projects in Rajasthan and MP?

[A] Asian Infrastructure Investment Bank

[B] Asian Development Bank

[C] BRICS Bank

[D] World Bank

 • The Asian Development Bank (ADB) has announced that it has approved two loans for urban sector projects in Rajasthan and Madhya Pradesh. The bank has approved a USD 300 million loan to improve water supply and sanitation infrastructure in the towns of Rajasthan and a USD 270 million loan for Madhya Pradesh Urban Services Improvement Project.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *