TnpscTnpsc Current Affairs

1st & 2nd October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

1st & 2nd October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 1st & 2nd October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1st & 2nd October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. ‘WIPO உலகளாவிய புத்தாக்க குறியீடு – 2022’இல் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 25

ஆ. 40

இ. 50

ஈ. 75

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 40

  • உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வெளியிட்டுள்ள தரவரிசையின்படி, 2022ஆம் ஆண்டின் உலகளாவிய புத்தாக்க குறியீட்டில், 132 நாடுகளுள் இந்தியா 40ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஓராண்டிற்கு முன்பு இருந்ததை விட ஆறு இடங்கள் முன்னேறியுள்ளது இந்தியா. இந்த உயர்வுக்கு முக்கியமாக தகவல் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள், ஏற்றுமதி தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் காரணமாக அமைந்துள்ளது. சுவிச்சர்லாந்து, அமெரிக்கா, சுவீடன், UK மற்றும் நெதர்லாந்து ஆகியவை உலகின் மிகப்புதுமையான பொருளாதாரங்களாக விளங்குகின்றன.

2. இந்தியாவின் புதிய அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. R வெங்கடரமணி

ஆ. A J சதாசிவா

இ. D Y சந்திரசூட்

ஈ. இரஞ்சன் கோகோய்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. R வெங்கடரமணி

  • இந்தியாவின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் R வெங்கடரமணி மூன்று ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய அட்டர்னி ஜெனரல் K K வேணுகோபாலின் பதவிக்காலம் செப்டம்பர்.30ஆம் தேதி முடிவடைகிறது. 91 வயதான மூத்த வழக்கறிஞர் K K வேணுகோபால், கடந்த 2017 ஜூலையில் அந்தப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். மேலும், கடந்த ஜூன் மாதத்தில் மூன்றுமாத காலத்திற்கு மீண்டும் அவர் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார்.

3. ‘உலகளாவிய தகவல் அணுகலுக்கான சர்வதேச நாள் மாநாடு’ நடத்தப்படுகிற நகரம் எது?

அ. தாஷ்கண்ட்

ஆ. டாக்கா

இ. நூர்சுல்தான்

ஈ. புது தில்லி

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. தாஷ்கண்ட்

  • உலகளாவிய தகவலணுகலுக்கான சர்வதேச நாள் ஆண்டுதோறும் செப்.28 அன்று UNESCOஆல் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. “தகவலைத்தேட, பெற மற்றும் விநியோகிக்க அனைவருக்கும் உரிமையுண்டு” என்ற கருத்தை ஆதரிப்பதே இந்த நாளின் நோக்கமாகும். “Artificial Intelligence, e-Governance and Access to Information” என்பது உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

4. நடுவண் MSME அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தேசிய SC-ST மைய மாநாட்டை நடத்துகிற மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஜார்கண்ட்

இ. குஜராத்

ஈ. மகாராஷ்டிரா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. குஜராத் 

  • நடுவண் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சகமானது குஜராத் மாநிலத்தில் தேசிய SC-ST மைய மாநாட்டை ஏற்பாடு செய்தது. NTPC லிட், இந்திய உணவுக்கழகம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனம், பாரத வங்கி மற்றும் YES வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் பங்கேற்பு இந்தத் திட்டத்தில் அடங்கும்.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆபரேஷன் கருடா’ என்பதுடன் தொடர்புடைய அமைப்பு எது?

அ. நடுவண் ஊழல் கண்காணிப்பு ஆணையம்

ஆ. நடுவண் புலனாய்வுப் பணியகம் (CBI)

இ. இந்திய வான்படை

ஈ. இந்திய கடற்படை

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. நடுவண் புலனாய்வுப் பணியகம் (CBI)

  • சட்டத்துக்குப்புறம்பான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பிற்கு எதிராக நடுவண் புலனாய்வுப்பிரிவு பல கட்ட ‘ஆபரேஷன் கருடா’வைத் தொடங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியை மையமாகக்கொண்டு நடைபெறும் சட்டத்துக்குப்புறம்பான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து, பன்னாட்டு காவலகம் (INTERPOL) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் ஒருங்கிணைந்து இந்த உலகளாவிய நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்தச் சிறப்பு நடவடிக்கையின்போது 127 புதிய வழக்குகளை பதிவுசெய்த CBI, 175 பேரை கைது செய்தது மற்றும் ஏராளமான போதைப்பொருட்களையும் அப்போது அது கைப்பற்றியது.

6. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய பணவியல் கொள்கைக் குழுக் கூட்டத்திற்குப்பிறகு (2022 அக்டோபர்), இந்தியாவின் 2022-23 காலத்திற்கான வளர்ச்சிக்கணிப்பு என்ன?

அ. 6.5%

ஆ. 7.0%

இ. 7.5%

ஈ. 8.2%

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 7.0%

  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய பணவியல் கொள்கைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, அது அதன் முந்தைய மதிப்பீட்டான 7.2 சதவீதத்திலிருந்து 2022-23 காலத்திற்கான இந்தியாவின் வளர்ச்சிக்கணிப்பை 7 சதவீதமாகக் குறைத்தது. இந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி நான்காவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ரெப்போ விகிதம் 50 அடிப்படைப்புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5.9%ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Standing Deposit Facility (SDF) விகிதம் 5.65 சதவீதமாகவும், Marginal Standing Facility (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.15 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

7. இந்தியாவின் 50 பிரத்தியேக மற்றும் தனித்துவமிக்க பாரம்பரிய ஜவுளி கைவினைப்பொருட்களின் பட்டியலை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNESCO

ஆ. NITI ஆயோக்

இ. நடுவண் கலாச்சார அமைச்சகம்

ஈ. FICCI

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. UNESCO

  • UNESCO, இந்தியாவின் ஐம்பது பிரத்தியேக மற்றும் தனித்துவமிக்க பாரம்பரிய ஜவுளி கைவினைப் பட்டியலை, “21 ஆம் நூற்றாண்டிற்கான நெசவு: பாரம்பரிய இந்திய ஜவுளியைப் பாதுகாத்தல்” என்ற பெயரில் வெளியிட்டது. இது அவற்றின் தயாரிப்பின் பின்னணியிலுள்ள செயல்முறைகளை விவரிக்கிறது; அவற்றின் புகழ் மங்கிவருவதற்கான காரணங்களைக்குறிப்பிடுகிறது மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கான உத்திகளை வழங்குகிறது. தமிழ்நாட்டைச் சார்ந்த தோடா பூத்தையல் மற்றும் சுங்குடி, ஹைதராபாத்தில் இருந்து ஹிம்ரூ நெசவுகள் மற்றும் ஒடிசாவிலிருந்து பந்தா சாய நெசவு ஆகியவை இப்பட்டியலில் அடங்கும்.

8. சமீபத்தில், பசிபிக் தீவு நாடுகளுடனான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு எது?

அ. சீனா

ஆ. அமெரிக்கா

இ. ரஷ்யா

ஈ. ஜெர்மனி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமெரிக்கா

  • ஐக்கிய அமெரிக்க நாடுகளானது (USA) ஒரு வரலாற்று முக்கியத்துவம்மிக்க உச்சிமாநாட்டை நடத்தியது. அப்போது பிஜி, மார்ஷல் தீவுகள், பப்புவா நியூ கினியா, டோங்கா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பசிபிக் தீவு நாடுகளுடனான கூட்டு ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டது. சீனாவின் வளர்ந்துவரும் இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கு குறித்து அதிகரித்துவரும் அச்சங்களுக்கு இடையே, பசிபிக் பிராந்தியத்தில் தனது இருப்பை அதிகரிக்க உறுதி பூண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இவ்வுச்சிமாநாட்டில் பார்வையாளர்களாகப் பங்கேற்றன.

9. அண்மையில் காவிரியாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட Pangasius Icaria என்பது சார்ந்த இனம் எது?

அ. ஆமை

ஆ. கெளுத்தி மீன்

இ. தவளை

ஈ. பாம்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கெளுத்தி மீன்

  • மேட்டூர் அணைக்கருகே காவிரியாற்றில் Pangasius Icaria (P. icaria) என்ற பெயரில் புதிய உண்ணத்தகு கெளுத்தி மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இனத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்தது; இது Pangasius இனத்தைச் சேர்ந்ததாகும். ஏறக்குறைய இருநூறாண்டுகளாக Pangasius இனம் இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் Pangasius pangasius என்று ஓர் இனத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.

10. UNICEFஇன் சமீபத்திய அறிக்கையின்படி, பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி வழங்கினால் எத்தனை சதவீத அளவுக்குக் குழந்தைத்திருமணங்கள் குறையும்?

அ. 25 சதவீதம்

ஆ. 40 சதவீதம்

இ. 60 சதவீதம்

ஈ. 80 சதவீதம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 80 சதவீதம்

  • சமீபத்தில் வெளியிடப்பட்ட UNICEF அறிக்கையின்படி, அனைத்து சிறுமிகளுக்கும் உயர்கல்வி வழங்கினால் 80% குழந்தைத் திருமணங்கள் குறையும். ஆரம்பப்பள்ளிக்கல்வியைவிட இடைநிலைக் கல்வி என்பது குழந்தைத் திருமணத்திற்கு எதிரான மிகவும் வலுவான மற்றும் நிலையான பாதுகாப்பு என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டது. கடந்த தசாப்தத்தில் தெற்காசியாவில் மிகவும் முன்னேற்றம் எய்தப்பட்டுள்ளது; அங்கு ஒரு பெண்ணின் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் ஆபத்து 1/3 பங்காக 30 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வட்டி விகிதங்களை 0.5% உயர்த்தியது RBI

நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ள நிலையில், அதை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இந்திய ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதன் காரணமாக, வீட்டுக்கடன், வாகனக்கடன், மாதாந்திர தவணைத்தொகை உள்ளிட்டவற்றுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தவுள்ளன.

கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து 4ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக வட்டி விகிதமானது 1.90% அதிகரிக்கப்பட்டு தற்போது 5.90 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.

நாட்டில் பணவீக்கம் 2 முதல் 6 சதவீதத்துக்குள் இருக்கவேண்டுமென RBI இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதலே பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது. அதை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதம் ஏற்கெனவே கடந்த மே மாதம் முதல் 1.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம்:

பணவீக்கமானது நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் 6.7%ஆக இருக்கும் என RBI கணித்துள்ளது. நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 4ஆவது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பணவீக்கம் கட்டுக்குள் வரும் எனவும் RBI நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி:

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று RBI முன்பு கணித்திருந்த நிலையில், அந்தக் கணிப்பை 7 சதவீதம் எனத் தற்போது குறைத்துள்ளது.

2. நாட்டின் 3-ஆவது ‘வந்தே பாரத்’ இரயில் சேவை

குஜராத் தலைநகர் காந்திநகரையும் மகாராஷ்டிர தலைநகர் மும்பையையும் இணைக்கும் வகையில் நாட்டின் 3ஆவது ‘வந்தே பாரத்’ இரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.

நவீன வசதிகள்கொண்ட, ‘வந்தே பாரத்’ இரயிலை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. முக்கியமாக, வந்தே பாரத் இரயிலின் பெட்டிகள் சென்னையில் உள்ள ICFஇல் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் ஏற்கெனவே புது தில்லி-வாராணசி, புது தில்லி-ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி காத்ரா ஆகிய இருவழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

3. சர்வதேச புத்தாக்க குறியீடு: 40-ஆவது இடத்தில் இந்தியா

நவீன தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்துவரும் நிலையில், புத்தாக்கம் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. தொழில்முனைவுக்கு அடிப்படையாக இருப்பவை புத்தாக்க நடவடிக்கைகள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புத்தாக்க ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

புத்தாக்கத்தில் நாடுகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பதற்கான ஆய்வை உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு ஆண்டுதோறும் நடத்திவருகிறது. நடப்பாண்டுக்கான ஆய்வின் அடிப்படையில் சர்வதேச புத்தாக்க குறியீட்டை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா 6 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது 40ஆம் இடத்திலுள்ள இந்தியா, இந்தக்குறியீட்டில் தலைசிறந்த 40 நாடுகள் பட்டியலுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும். அதிலும் குறிப்பாக, கடந்த 2015ஆம் ஆண்டில் சர்வதேச புத்தாக்க குறியீட்டில் இந்தியா 81ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 40ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது சிறப்புமிக்கது.

கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி, அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, தொழில்தொடங்குவதற்கு சாதகமான சூழல், நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளதே இந்த முன்னேற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

புத்தாக்க குறியீட்டில் முதல் 3 நாடுகள்

1 சுவிட்சர்லாந்து

2 அமெரிக்கா

3 சுவீடன்

4. 02-10-2022: உத்தமர் காந்தியடிகளின் 154ஆவது பிறந்தநாள்.

1st & 2nd October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. What is the rank of India in the ‘WIPO Global Innovation Index 2022?

A. 25

B. 40

C. 50

D. 75

Answer & Explanation

Answer: B. 40

  • According to the rankings released by the World Intellectual Property Organisation (WIPO), India rose to 40th among 132 countries in the Global Innovation Index 2022. The jump of six places from a year ago, was mainly due to improvement in information and communication technologies (ICT) services, exports, venture capital recipients’ value as well as finance for start–ups. Switzerland, the US, Sweden, the UK and the Netherlands are the world’s most innovative economies.

2. Who has been appointed as the new Attorney General for India?

A. R Venkataramani

B. A J Sadashiva

C. D Y Chandrachud

D. Ranjan Gogoi

Answer & Explanation

Answer: A. R Venkataramani 

  • Senior advocate R Venkataramani has been appointed as the new Attorney General for India for a period of three years. He will succeed the present Attorney General K K Venugopal, whose term will end on September 30. The 91–year–old senior advocate was appointed to the post in July 2017 and he was reappointed as the top law officer of the country for three months in June 2022.

3. Which city is the host of the ‘Conference on International Day for Universal Access to Information’?

A. Tashkent

B. Dhaka

C. Nursultan

D. New Delhi

Answer & Explanation

Answer: A. Tashkent

  • International Day for Universal Access to Information was declared to be observed annually on September 28 by UNESCO. This day aims to support the idea that everyone has the right to seek, receive, and distribute information. The theme of the Global Conference in 2022 is ‘Artificial Intelligence, e–Governance and Access to Information’. The conference is set to take place in Tashkent, Uzbekistan.

4. Which state is the host of the National SC–ST hub conclave organised by the Union MSME Ministry?

A. Tamil Nadu

B. Jharkhand

C. Gujarat

D. Maharashtra

Answer & Explanation

Answer: C. Gujarat

  • The Ministry of Micro, Small and Medium Enterprises has organized a National SC–ST hub conclave in Gujarat. The program included participation of CPSE’s like NTPC Limited Food Corporation of India (FCI), Oil and Natural Gas Corporation and Indian Oil Corporation Limited, financial institutions such as State Bank of India and Yes Bank.

5. ‘Operation Garuda’, which was seen in the news, is associated with which organisation?

A. CVC

B. CBI

C. Indian Air Force

D. Indian Navy

Answer & Explanation

Answer: B. CBI

  • The Central Bureau of Investigation has launched a multi–phase ‘Operation Garuda’ against illicit drug trafficking network. This global operation was initiated in coordination with Interpol and Narcotics Control Bureau, to combat smuggling of illicit drugs and psychotropic substances, with focus on Indian Ocean region. CBI registered 127 new cases, arrested 175 people and seized huge quantities of narcotic drugs during this special operation.

6. After the recent Monetary Policy Committee Meeting of RBI (October 2022), what is the 2022–23 growth projection for India?

A. 6.5%

B. 7.0%

C. 7.5%

D. 8.2%

Answer & Explanation

Answer: B. 7.0%

  • After the recent Monetary Policy Committee Meeting of RBI, the Central Bank cut the 2022–23 growth projection to 7 per cent from its previous estimate of 7.2 per cent. RBI also made the fourth–rate hike in this financial year, as the Repo rate was hiked by 50 bps to 5.9%. The standing deposit facility (SDF) rate stands adjusted to 5.65 per cent and the marginal standing facility (MSF) rate and the Bank Rate to 6.15 per cent.

7. Which institution unveiled a list of 50 exclusive and iconic heritage textile crafts of India?

A. UNESCO

B. NITI Aayog

C. Union Culture Ministry

D. FICCI

Answer & Explanation

Answer: A. UNESCO

  • UNESCO released a list of 50 exclusive and iconic heritage textile crafts of India named ‘Handmade for the 21st Century: Safeguarding Traditional Indian Textile’. It describes the processes behind their making, mentions the causes for their declining popularity and provides strategies for their preservation. Toda embroidery and Sungadi from Tamil Nadu, Himroo weaves from Hyderabad and Bandha tie and dye weaving from Odisha are some of the crafts included.

8. Which country has recently signed a partnership agreement with Pacific Island nations?

A. China

B. USA

C. Russia

D. Germany

Answer & Explanation

Answer: B. USA

  • The United States hosted a historic summit and signed a partnership agreement with more than a dozen Pacific Island nations including Fiji, the Marshall Islands, Papua New Guinea, Tonga among others. US President Joe Biden announce that the country was committed to increasing its presence in the region amidst growing concern about China’s growing military and economic influence. Australia and New Zealand also participated in the summit as observers.

9. Pangasius Icaria, which was recently discovered in the Cauvery River, belongs to which species?

A. Turtle

B. Catfish

C. Frog

D. Snake

Answer & Explanation

Answer: B. Catfish

  • A new edible catfish species has been discovered in the river Cauvery near Mettur Dam named Pangasius icaria (P. icaria). As per Indian Council of Agricultural Research, which discovered the species, it belongs to the Pangasius genus. For nearly two centuries Pangasius is represented by one species in India as well as South Asia and is called Pangasius Pangasius.

10. As per a recent UNICEF report, what percent of child marriages can fall down if higher education is provided to girls?

A. 25 per cent

B. 40 per cent

C. 60 per cent

D. 80 percent

Answer & Explanation

Answer: D. 80 percent

  • According to UNICEF report released recently, 80 percent of child marriages can fall down if higher education is provided to all girls. It also noted that secondary education is a much stronger and more consistent protection against child marriage than primary school education. The most progress in the past decade was seen in South Asia, where a girl’s risk of marrying in childhood dropped by over a third to below 30 per cent.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!