20th & 21st February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

20th & 21st February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th & 21st February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

20th & 21st February 2021 Tnpsc Current Affairs in Tamil

1. சமீப செய்திகளில் இடம்பெற்ற, INS கரஞ்ச் என்றால் என்ன?

அ) பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை

ஆ) ஸ்கார்பீன் நீர்மூழ்கிக்கப்பல்

இ) இராணுவ பீரங்கி

ஈ) சூப்பர்சோனிக் சீர்வேக ஏவுகணை

 • இந்திய கடற்படை தனது 3ஆவது ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பலைப் மும்பையில் வைத்து ‘INS கரஞ்ச்’ என்ற பெயரில் பணியில் இணைத்தது. இது, ‘திட்டம் 75’இன்கீழ் கட்டப்பட்டு வரும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களுள் ஒன்றாகும். மசகன் கப்பல்கட்டும் நிறுவனமானது மூன்று ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக்கப்பல்களை இந்திய கடற்படைக்கு கந்தேரி, கல்வாரி மற்றும் கரஞ்ச் என்ற பெயரில் வழங்கியுள்ளது.

2. ‘அப்யுதயா’ திட்டமானது பின்வரும் எம்மாநிலத்தினுடையதாகும்?

அ) மத்திய பிரதேசம்

ஆ) உத்தர பிரதேசம்

இ) குஜராத்

ஈ) ஒடிஸா

 • உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘அப்யுதயா’ திட்டத்தை தொடக்கிவைத்தார். NEET மற்றும் IIT-JEE போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 50000’க்கும் மேற்பட்ட மாணாக்கர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

3. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைப்பைப்பற்றி ஆய்வு செய்ய, ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

அ) மைக்கேல் D பத்ரா

ஆ) N S விஸ்வநாதன்

இ) B P கனுங்கோ

ஈ) உஷா தோரத்

 • நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான ஒழுங்காற்று செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. இக்குழுவிற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் N S விஸ்வநாதன் தலைமைதாங்குவார். இத்துறையில் உள்ள ஒருங்கிணைப்பு வாய்ப்புகளையும் இந்தக் குழு ஆய்வு செய்யும். நிபுணர் குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, வான் இலக்கை தாக்கும் தொலைதூர ஏவுகணைகளை (Long Range Surface to Air Missiles (LRSAM)) உருவாக்கிய அமைப்பு எது?

அ) HAL

ஆ) BEL

இ) ISRO

ஈ) DRDO

 • பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (DRDO) கூட்டு முயற்சியில் உருவாக்கிய வான் இலக்கை தாக்கும் தொலைதூர ஏவுகணைகள் (Long Range Surface to Air Missiles (LRSAM)), ஐதராபாத்தில் உள்ள APJ அப்துல்கலாம் ஏவுகணை வளாகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டன.
 • கடற்படை பயன்பாட்டுக்காக மேற்பரப்பிலிருந்து வான் இலக்கைத் தாக் -கும் ஏவுகணைகளை DRDO, இஸ்ரேல் நாட்டின் IAI நிறுவனம் உட்பட பல நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்தது. இந்திய கடற்படையின் நவீன போர்க்கப்பல்களில் இருந்து, எதிரி நாட்டு போர் விமானம் உட்பட வான் இலக்குகளைத் தாக்கும் விதத்தில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

5. COVID-19 தொற்றை எதிர்த்துப்போராடுவதற்காக குருகிராமைச் சார்ந்த மருத்துவமனை குழுமமான மெதந்தாவுக்கு `100 கோடி நிதி வழங்கவுள்ள அமைப்பு எது?

அ) AIIB

ஆ) ADB

இ) உலக வங்கி

ஈ) IMF

 • ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB) குருகிராமைச்சார்ந்த மருத்துவமனை குழுமமான மெதந்தாவுக்கு `100 கோடி கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு, நலவாழ்வுச்சேவைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நவீனப்படு -த்துவதற்கு இந்நிதி உதவும். தொற்று கட்டுப்பாடு குறித்த ஊழியர்களுக் -கான பயிற்சித்திட்டங்களும் இதில் அடங்கும்.

6. ‘அரிபாடா – Arribada’ என்பது கீழ்க்காணும் எந்த உயிரினத்துடன் தொடர்புடைய சொல்லாகும்?

அ) பாம்பு

ஆ) கடலாமை

இ) தவளை

ஈ) சிலந்தி

 • ‘அரிபாடா’ என்ற பதம் கடலாமைகளின் பெருமளவிலான இடம்பெயர்வை விவரிக்கப்பயன்படுகிறது. அங்கு பேரளவில் பெண் கடலாமைக் குழுக்கள், கடற்கரையில் உள்ள ஒரு கூடுகட்டுமிடத்தில் கூடுகின்றன. அண்மையில், ஆலிவ் ரிட்லி ஆமைகள், இந்தக் கூடுகட்டும் பருவத்தில், கடற்கரையில் முட்டையிடத் தொடங்கின.
 • நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக காலநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, பொதுவாக நவம்பரில் தொடங்கும் இந்தக் கூடு கட்டும் பருவம், இவ்வாண்டு சிலவாரங்கள் தாமதமாக தொடங்கியுள்ளது.

7.`5000 கோடி மதிப்பிலான திறன்பேசி கூறுகள் உற்பத்திப் பிரிவை, தமிழ்நாட்டில் அமைப்பதற்கு முன்மொழிந்துள்ள உற்பத்திக் குழுமம் எது?

அ) TATA எலெக்ட்ரானிக்ஸ்

ஆ) T C S

இ) இன்போடெல்

ஈ) லெனோவோ

 • TATA எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது திறன்பேசி கூறுகளை உற்பத் -தி செய்வதற்கான உற்பத்திப் பிரிவை நிறுவுவதற்காக தமிழ்நாடு அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. `4684 கோடி மதிப்பீட்டில், கிருஷ்ணகிரியில் இந்தப் பிரிவு நிறுவப்படும். இந்தத் திட்டம், 18250 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும்.
 • செய்யாற்றில் வண்ணப்பூச்சு உற்பத்திப் பிரிவை நிறுவும் பொருட்டு தமிழ்நாடு அரசு, கிராசிம் இண்டஸ்ட்ரீஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. `750 கோடி முதலீட்டில் இது நிறுவப்படும். மொத்தம், `28,000 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்காக, 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது.

8. ‘பாரம்பரிய வழித்தடம் திட்ட’த்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) ஒடிஸா

ஈ) மத்திய பிரதேசம்

 • ஜகந்நாதர் கோவில் மேலாண்மைக் குழுமமானது, அண்மையில் `800 கோடி மதிப்பீட்டிலான, ‘பாரம்பரிய வழித்தடம் திட்ட’த்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம், கோவிலை புதுப்பித்து மறுவடிவமைப்பு செய்வதை நோக்கமாகக்கொண்டுள்ளது. பகவான் ஜகந்நாதர் கோவில் ஒடிஸா மாநிலத்தின் பூரியில் அமைந்துள்ள, பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு முக்கியமான கோவிலாகும்.
 • கங்கை வம்சத்தைச் சேர்ந்த மன்னர் அனந்தவர்மன் சோடகங்காவால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.

9. நைஜீரிய அமெரிக்க பொருளாதார நிபுணர் Ngozi Okonjo-Iweala, எந்த அமைப்பின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ) UNICEF

ஆ) IMF

இ) WTO

ஈ) உலக வங்கி

 • நைஜீரிய அமெரிக்க பொருளாதார நிபுணர் Ngozi Okonjo-Iweala, உலக வர்த்தக அமைப்பின் (WTO) புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின்மூலம், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநரான முதல் ஆப்பிரிக்க பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். உலக வர்த்தக அமைப்பு என்பது நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துகின்ற ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

10. மெட்ராஸ் IIT’இன் ஆதரவில் உள்ள ‘பை பீம்’ என்ற துளிர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள, மின்சாரத்தில் இயங்கும் 2 சக்கர வாகனத்தின் பெயர் என்ன?

அ) எலக்ட்ரோ

ஆ) ஆம்பியர்

இ) வோல்டாபைக்

ஈ) பைமொ (PiMo)

 • மெட்ராஸ் IIT’இன் ஆதரவில் உள்ள ‘பை பீம்’ என்ற துளிர் நிறுவனம், சமீபத்தில், ‘பைமொ’ என்ற பெயரிலான 2 சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தை திறன்பேசியைவிடவும் வேகமாக மின்னேற்றம் செய்ய முடியும். ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 50 கிமீ., தூரம் வரை இதில் செல்லவியலும். இதன் விலை `30,000/-. இந்த வாகனத்திற்கு பதிவு எண் தேவையில்லை.

1. What is ‘INS Karanj’, which was making news recently, with reference to Indian Defence?

A) Anti–tank Guided Missile

B) Scorpene Submarine

C) Military Tank

D) Supersonic Cruise Missile

 • The Indian Navy got its third Scorpene submarine, which will be commissioned in Mumbai as ‘INS Karanj’. This is a part of the six submarines, which are being constructed under Project 75. Mazagon Dock Shipbuilders Limited has delivered three Scorpene submarines to the Indian Navy named Khanderi, Kalvari and Karanj.

2. ‘Abhyudaya’ scheme is the initiative of which state?

A) Madhya Pradesh

B) Uttar Pradesh

C) Gujarat

D) Odisha

 • Uttar Pradesh chief minister Yogi Adityanath inaugurated the ‘Abhyudaya’ scheme. It aims to provide coaching facilities to the interested candidates for competitive exams like NEET and IIT–JEE. Over 50,000 students are selected under the scheme.

3. Who is the head of the committee formed by the RBI to study the consolidation of urban cooperative banks?

A) Michael D Patra

B) N S Vishwanathan

C) B P Kanungo

D) Usha Thorat

 • The Reserve Bank of India (RBI) has constituted an eight–member expert panel to lay down a regulatory road map for urban co–operative banks. The committee will be headed by former deputy governor of RBI, N. S. Vishwanathan. The group will also study the consolidation prospects in the sector. The expert committee has been asked to submit its report within three months.

4. The Long–Range Surface–to–Air Missile (LRSAM), which was in news recently, was developed by which organisation?

A) HAL

B) BEL

C) ISRO

D) DRDO

 • The final production batch of Long–Range Surface–to–Air Missile (LRSAM) was recently flagged off at DRDL, A P J Abdul Kalam Missile Complex, Hyderabad. The missiles have been designed and developed by DRDO in collaboration with various industry partners.
 • The missile system provides defence against aerial targets including fighter aircrafts and missiles.

5. Which institution is to provide Rs 100 crore to Gurgaon–based hospital chain Medanta, to fight COVID–19 pandemic?

A) AIIB

B) ADB

C) World Bank

D) IMF

 • The Asian Development Bank (ADB) announced that it will provide Rs 100 crore loan to Gurgaon–based hospital chain Medanta.
 • The financial assistance would aid the multi–speciality hospital chain in enhancing healthcare services and medical equipment to fight the COVID–19 pandemic. It also includes staff training programmes on infection control.

6. ‘Arribada’ is a term related to which species?

A) Snake

B) Sea Turtle

C) Frog

D) Spider

 • ‘Arribada’ is a term used to describe the mass migration of sea turtles, where large groups of females assemble at a nesting site on the beach. Recently, the Olive Ridley turtles have started laying eggs in the beach in this nesting season.
 • The nesting season which usually begins in November was delayed by a few weeks this year, due to changes in climate conditions due to the cyclones Nivar and Burevi.

7. Which manufacturing group has proposed to setup Rs 5000 crore phone component manufacturing unit in Tamil Nadu?

A) TATA Electronics

B) TCS

C) Infotel

D) Lenovo

 • The Tata Electronics has signed a Memorandum of Understanding (MoU) with the Tamil Nadu government in order to establish a facility to manufacture the mobile components.
 • The project by the Tata Electronics will cost Rs 4684 crores. It will be established in Krishnagiri. The project can help in creating jobs for 18,250 people. Tamil Nadu has also signed a MoU with the Grasim Industries in order to establish a paint manufacturing unit at Cheyyar. It will be established with an investment of Rs 750 crore. In total, the Tamil Nadu states has signed 28 MoUs for the projects for which the budget outlay is Rs 28,000 crore.

8. ‘Heritage corridor project’, which was making news recently, is associated with which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Odisha

D) Madhya Pradesh

 • The Jagannath Temple Management Committee, has recently approved a Rs 800–crore heritage corridor project. This project aims to revamp and redevelop the temple and its surrounding areas.
 • The Lord Jagannath Temple is an important twelfth century temple located in Puri, Odisha. The temple was built by the King Anantavarman Chodaganga of Ganga dynasty.

9. Nigerian American economist Ngozi Okonjo–Iweala has been appointed as the director–general of which organisation?

A) UNICEF

B) IMF

C) WTO

D) World Bank

 • Nigerian American economist Ngozi Okonjo–Iweala has been appointed as the new director–general of World Trade Organization (WTO).
 • With this appointment, she becomes the 1st African women to be the Chief of WTO. WTO is an intergovernmental organization that is regulates the trade between nations. It is headquartered at Geneva.

10. What is the name of electric two–wheeler that has been launched by IIT Madras–incubated start–up Pi Beam?

A) Electro

B) Ampere

C) Voltabike

D) PiMo

 • Pi Beam – an IIT Madras incubated start–up has recently launched a 2–wheeler named PiMo. This vehicle can be charged faster than a smart mobile phone. It has a range of 50 km and is priced at Rs.30,000/–. This vehicle does not require registration and is targeted at personal and commercial users.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *