TnpscTnpsc Current Affairs

20th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

20th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சமீபத்தில் எந்த இந்திய மாநிலத்தில், பெருங்கற்கால கல் ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன?

அ) தமிழ்நாடு

ஆ) அஸ்ஸாம் 

இ) உத்தர பிரதேசம்

ஈ) மேற்கு வங்கம்

  • அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை அறியப்படாத நான்கு இடங்களில், டசன் கணக்கிலான பெருங்கற்கால கல் ஜாடிகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இந்தக் கண்டறிவானது இந்தியாவின் வடகிழக்கிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான சாத்தியமான சம்பந்தங்களை எடுத்துக்கூறுகிறது.

2. உலக வர்த்தக அமைப்பின் கூற்றுப்படி, 2022–23 நிதி ஆண்டில் உலகின் வர்த்தக வளர்ச்சி எவ்வளவு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது?

அ) 2.5%

ஆ) 3% 

இ) 4%

ஈ) 5.5%

  • உலக வர்த்தக அமைப்பானது (WTO) 2022–23 நிதி ஆண்டில் உலகின் வர்த்தக வளர்ச்சி மூன்று சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கு முன் இந்தக் கணிப்பு 4.7% எனக் கணிக்கப்பட்டிருந்தது.
  • ரஷ்யா – உக்ரைன் போரின் தாக்கம் காரணமாக இந்தக் குறைப்பேற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடும் என்றும் WTO எச்சரித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் உலகின் வர்த்தக வளர்ச்சி 3.4%ஆக உயரும் என்றும் அது கணித்துள்ளது.

3. இந்தியாவில் 2021–22 நிதியாண்டில் சொத்துக்களைப் பணமாக்குதலிலிருந்து திரட்டப்பட்ட வருவாய்கள் மற்றும் முதலீடுகளின் மொத்தத்தொகை என்ன?

அ) `36000 கோடி

ஆ) `45000 கோடி

இ) `75000 கோடி

ஈ) `96000 கோடி 

  • நிலக்கரி மற்றும் கனிமத் தொகுதிகள், நெடுஞ்சாலை நீட்சிகள் மற்றும் மின் பரிமாற்ற வடங்கள் ஆகியவற்றின் வலுவான செயல்திறன் காரணமாக, நடுவணரசின் சொத்துக்களைப் பணமாக்குதல் இயக்கமானது 2021–22 நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 12% அதிகமாக ஈட்டியுள்ளது.
  • மொத்தத்தில், 2021–22இல் சொத்தைப் பணமாக்குதலின் மூலம் திரட்டப்பட்ட வருவாய்கள் மற்றும் முதலீடுகள் `96,000 கோடியாக இருந்தது.

4. எந்த நாட்டுடன் இணைந்து, ‘கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பணிக்குழு’வினை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது?

அ) அமெரிக்கா 

ஆ) பிரான்ஸ்

இ) ஜெர்மனி

ஈ) பின்லாந்து

  • இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து புதிய, ‘இந்தியா–அமெரிக்கா கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பணிக்குழு’ ஒன்றை நிறுவ முடிவுசெய்துள்ளன. இந்தக் கூட்டு முயற்சி மூலம் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தப்படும்.

5. ‘ஸ்வநிதி சே சம்ரிதி’ என்ற திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகார அமைச்சகம் 

இ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ) நிதி அமைச்சகம்

  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 126 நகரங்களில், ‘ஸ்வநிதி சே சம்ரிதி’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பிரதம அமைச்சர் ஸ்வநிதியின் கூடுதல் திட்டமான, ‘ஸ்வநிதி சே சம்ரிதி’ கடந்த ஆண்டு முதல் கட்டமாக 125 நகரங்களில் சுமார் 35 லட்சம் தெருவோர வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களை உள்ளடக்கியதாக தொடங்கப்பட்டது.
  • தெரு வியாபாரிகளுக்கு மலிவு விலையில் செயல்பாட்டு மூலதனக்கடனை வழங்குவதை பிரதமர் சுவநிதி திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. NSO வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் என்ன?

அ) 5.20%

ஆ) 5.85%

இ) 6.95% 

ஈ) 7.20%

  • தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • தொடர்ந்து மூன்றாவது மாதமாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஏற்பமைவு வரம்பைவிட இந்த விகிதம் அதிகமாக உள்ளது. தொழிற்துறை உற்பத்திக் குறியீடு (IIP) பிப்ரவரியில் ஆண்டளவில் 1.7% உயர்ந்தது; ஆனால் மாதத்தளவில் 4.7 சதவீதம் எனச் சுருங்கியது.

7. ‘பிரதமர் சங்கராலயா’ அருங்காட்சியகம் அமைந்துள்ள நகரம் எது?

அ) காந்தி நகர்

ஆ) புது தில்லி 

இ) சென்னை

ஈ) கொல்கத்தா

  • பிரதமர்களின் அருங்காட்சியகத்தை (சங்கராலயா) பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த அருங்காட்சியகம், இந்தியப் பிரதமர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் மூலம் விடுதலைக்கு பிந்தைய இந்தியாவின் வரலாற்றை எடுத்துரைக்கும். இவ்வருங்காட்சியகத்தில் மொத்தம் 43 காட்சியகங்கள் உள்ளன. ‘சங்கராலயா’, பிரதமர்களின் சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது.

8. ராஷ்ட்ரிய கிராம சுவராஜ் அபியானைச் செயல்படுத்தும் மத்திய அமைச்சகம் எது?

அ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ) பஞ்சாயத்து இராஜ் அமைச்சகம் 

இ) உள்துறை அமைச்சகம்

ஈ) மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • இந்தியப் பிரதமர் மோடி பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ், ‘ராஷ்ட்ரிய கிராம சுவராஜ் அபியான்’, ‘முன்னேற விழையும் மாவட்டங்களின் மாற்றம்’ என்ற திட்டத்தைத் தொடங்கினார். 2018ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட இது, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களை முன்னேற்றவும், 2.78 இலட்சம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இராஷ்ட்ரிய கிராம சுவராஜ் அபியானுக்கு (RGSA) `5,911 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2022 ஏப்ரல்.1 முதல் 2026 மார்ச்.31 வரை இந்தத் திட்டத்தைத் தொடர நடுவணரசு ஒப்புதலளித்தது.

9. யாருக்கு, ‘2021 – தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருது’ வழங்கப்பட்டுள்ளது?

அ) Dr பூஷன் குமார் 

ஆ) Dr G P தல்வார்

இ) Dr M D குப்தே

ஈ) Dr அதுல் ஷா

  • சண்டிகரைச் சேர்ந்த Dr பூஷன் குமாருக்கும், குஜராத்தின் சகயோக் குஷ்தா யக்னா அறக்கட்டளைக்கும், 2021ஆம் ஆண்டுக்கான தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதை குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா வழங்கினார்.
  • காந்தி நினைவு தொழுநோய் அறக்கட்டளையால் ஆண்டு தோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. தேசிய தொழு நோய் ஒழிப்புத்திட்டமானது இந்தியாவில் தொழுநோயை முற்றாக ஒழிக்க முயற்சி செய்து வருகிறது.

10. Dr B R அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல்.14 அன்று ‘சமத்துவ நாள்’ எனக் கொண்டாடப்படும் என அறிவித்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) மகாராஷ்டிரா

இ) புது தில்லி

ஈ) ஒடிஸா

  • Dr B R அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல்.14ஆம் தேதி இந்த ஆண்டு முதல் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அன்றைய நாள் மாநிலம் முழுவதும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார். Dr B R அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

பொது நிர்வாகத்தில் சிறந்துவிளங்குவதற்கான பிரதமரின் விருது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. புதுமைகள் (பொது) மத்திய பிரிவில் இந்த விருதிற்கு உடான் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அரசின் மாவட்டங்கள் மற்றும் அமைப்புகளால் செய்யப்படும் அசாதாரணமான மற்றும் புதுமையான பணிகளை அங்கீகரித்து, வெகுமதி அளிக்க இந்திய அரசு இந்த விருதைத் தொடங்கியுள்ளது. நல்ல நிர்வாகம், சிறப்பான சாதனைகள் மற்றும் கடைசி மைல் இணைப்பு ஆகியவற்றை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது. கோப்பை, பாராட்டு பத்திரம் மற்றும் ஊக்கத்தொகையாக `10 லட்சம் ஆகியவற்றை தாங்கி இந்த விருது வருகிறது.

2. இந்தியாவின் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 2013-14இலிருந்து 109% அதிகரித்து 6115 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது

இந்தியாவின் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 2013-14 நிதியாண்டில் 2925 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் 2021-22 நிதியாண்டில் 6115 மில்லியன் அமெரிக்க டாலர்களாக 109% அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது.

வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குநரக தரவுகளின்படி, 2021-22-ல் உலகம் முழுவதும் 150 நாடுகளுக்கு இந்தியா அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. 2021-22-ல் 150 நாடுகளில் 76 நாடுகளுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது, இந்தியாவின் அரிசி ஏற்றுமதியின் பன்முகத்தன்மையை இது குறிக்கிறது.

3. முதல் செமிகான் இந்தியா 2022 மாநாடு ஏப்ரல் 29 முதல் மே 1 வரை பெங்களூருவில் நடைபெறுகிறது

முதல் செமிகான் இந்தியா 2022 மாநாட்டை ஏப்.29 முதல் 1 மே 2022 வரை பெங்களூருவில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்தவுள்ளது.

“உலகத்திற்காக இந்தியாவில் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி: இந்தியாவை செமிகண்டக்டர் தேசமாக மாற்றுதல்” என்பது இதன் மையக்கருவாகும்.

4. பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: பிரதமர் மோடி

ஆண்டுக்கு `8.5 இலட்சம் கோடி மதிப்புக்கு பால் உற்பத்தி செய்து, உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

5. தொழிற்துறையின் பெயர் மாற்றம்; கிருஷ்ணகிரியில் `1800 கோடியில் புதிய SIPCOT தொழிற்பூங்கா; சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

பேரவையில் நேற்று தொழில்துறை மானியக் கோரிக்கையின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு:

* தமிழகத்தில் தொழில்துறை இனி, ‘தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை’ எனப் பெயர்மாற்றம் செய்யப்படும்.

* தொழில்துறையின்கீழ் மாநில அளவில் ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் புதிதாக உருவாக்கப்படும். சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த ‘எத்தனால் கொள்கை 2022’ வெளியிடப்படும். தமிழ்நாடு தொழிற்கொள்கை 2021’ன்கீழ் வழங்கப்படும் நிலையான ஊக்க சலுகைகளுடன் கூடுதலாக தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி துறைக்கான சிறப்பு திட்டம் ஒன்று வெளியிடப்படும்.

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய SIPCOT தொழிற்பூங்கா ஒன்று `1800 கோடி திட்ட மதிப்பீட்டில் 3000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். இதன்மூலம் `21 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 16,800 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கும்.

* திருப்பெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் `7 கோடி மதிப்பீட்டில் வணிகவளாகம் மற்றும் உணவகம் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுமார் 250 ஏக்கர் பரப்பில் பல் துறை தொழிற்பூங்கா அமைக்கப்படும். தமிழ்நாட்டில் அதிவேக இரயில் வழித்தடத்தை அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு `3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் சுமார் `500 கோடி மதிப்பீட்டில் கோவையில் அமைக்கப்படும். மாநிலத்தில் பல விமானங்களை இயக்க பயிற்சி தரும் நிறுவனங்களை அமைக்க டிட்கோ துணை புரியும்.

* புதிய ஏர்போர்ட்

சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ் உச்சரிப்புக்கு விருது

* மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களிடையே தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும்.

இதற்கென ஒவ்வொரு கல்லூரிக்கும் `5 இலட்சம் வீதம் 100 கல்லூரிகளுக்கு `5 கோடியும், இவ்வாண்டு போட்டிகள் நடத்திட `36 லட்சமும் என மொத்தம் `5.36 கோடி வழங்கப்படும்.

* தமிழைச் சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும். இதற்கென `5 லட்சம் வழங்கப்படும்.

1. In which Indian state, megalithic stone jars were recently unearthed?

A) Tamil Nadu

B) Assam 

C) Uttar Pradesh

D) West Bengal

  • Dozens of megalithic stone jars have been recently unearthed in the state of Assam, at four previously unknown sites. The discovery has brought to focus the possible links between India’s Northeast and Southeast Asia.

2. As per WTO, what is the estimated global trade growth in the 2022–23 fiscal year?

A) 2.5%

B) 3% 

C) 4%

D) 5.5%

  • The World Trade Organization (WTO) revised down its forecast for global trade growth in 2022–23 to 3% from 4.7%. The slash is because of the impact of the Russia–Ukraine war.
  • WTO also warned of a potential food crisis caused by surging prices. It also forecasted that the global trade growth in 2023 would rise up to 3.4%.

3. What is the total amount of revenues and investments mobilised from asset monetisation in FY22 in India?

A) Rs 36000 Crore

B) Rs 45000 Crore

C) Rs 75000 Crore

D) Rs 96000 Crore 

  • The Centre’s asset monetisation drive mopped up 12% more than the target set for FY22, due to the strong performance of the coal and mineral blocks, highway stretches and power transmission lines.
  • In aggregate, revenues and investments mobilised from asset monetisation in 2021–22 stood at 96,000 crores.

4. India has decided to establish ‘Education and Skills Development Working Group’ with which country?

A) USA 

B) France

C) Germany

D) Finland

  • India and the US have decided to establish a new ‘India–US Education and Skills Development Working Group’. It aims to further strengthen cooperation in the field of education and skill development through joint collaborations.

5. “Svanidhi se Samriddhi” programme is an initiative of which Union Ministry?

A) Ministry of Home Affairs

B) Ministry of Housing and Urban Affairs 

C) Ministry of Rural Development

D) Ministry of Finance

  • The Union Ministry of Housing and Urban Affairs (MoHUA) launched the “Svanidhi se Samriddhi” programme in 126 additional cities across 14 states and Union territories.
  • “Svanidhi se Samriddhi”, an additional programme of PM Svanidhi, was launched last year in 125 cities under the first phase, covering around 35 lakh street vendors and their families. PM Svanidhi aims at providing an affordable working capital loan to street vendors.

6. What is India’s retail inflation rate in March, as per the data released by NSO?

A) 5.20%

B) 5.85%

C) 6.95% 

D) 7.20%

  • The data released by the National Statistical Office (NSO) showed that the retail inflation rate in India rose to 6.95 per cent in March from a year ago.
  • The rate stands above the tolerance limit of the Reserve Bank of India (RBI) for the third straight month. The Index of Industrial Production (IIP) grew 1.7 per cent in February on annual basis but contracted 4.7 per cent month on month.

7. The ‘Pradhanmantri Sangrahalaya’ Museum is located in which city?

A) Gandhi Nagar

B) New Delhi 

C) Chennai

D) Kolkata

  • Prime Minister Narendra Modi inaugurated the ‘Pradhanmantri Sangrahalaya’, a museum dedicated to all the prime ministers of the country since independence.
  • The Prime Ministers’ Museum comprises of a total of 43 galleries. The ‘Sangrahalaya’ highlights the achievements of the prime ministers.

8. Which Union Ministry implements the Rashtriya Gram Swaraj Abhiyan (RGSA)?

A) Ministry of Rural Development

B) Ministry of Panchayati Raj 

C) Ministry of Home Affairs

D) Ministry of Women and Child Development

  • The Prime Minister of India Narendra Modi launched the ‘Rashtriya Gram Swaraj Abhiyan (RGSA), the ‘Transformation of Aspirational Districts’ program, under the Ministry of Panchayati Raj.
  • Approved in 2018, it aims to transform selected districts and help 2.78 lakh rural local bodies achieve sustainable development goals. The Union Cabinet approved a financial outlay of Rs 5,911 crore for the Rashtriya Gram Swaraj Abhiyan. It approved the continuation of the centrally sponsored scheme from April 1, 2022 to March 31, 2026.

9. Who has been awarded the ‘International Gandhi Award for Leprosy, 2021’?

A) Dr Bhushan Kumar 

B) Dr G P Talwar

C) Dr MD Gupte

D) Dr Atul Shah

  • Vice President M Venkaiah Naidu presented the International Gandhi Award for Leprosy, 2021 to Dr Bhushan Kumar from Chandigarh and Sahyog Kushtha Yagna Trust, Gujarat.
  • The annual award was instituted by Gandhi Memorial Leprosy Foundation. The National Leprosy Eradication Programme has been trying to ensure total eradication of leprosy in India.

10. Which Indian state announced to celebrate the birth anniversary of Dr Ambedkar on April 14 as ‘Equality Day’?

A) Tamil Nadu 

B) Maharashtra

C) New Delhi

D) Odisha

  • Tamil Nadu Chief Minister M K Stalin announced in the Legislative Assembly that the birth anniversary of Dr Ambedkar on April 14 would be celebrated as ‘Equality Day’ from this year.
  • The Chief Minister said that a pledge would also be taken across the state on the day. The government also plans to translate and publish some of the selected books of Ambedkar in Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!