Tnpsc

20th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

20th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th January 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

20th January 2021 Tnpsc Current Affairs in Tamil

1. இந்தியாவின் முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) மேற்கு வங்கம்

ஈ) ஆந்திர பிரதேசம்

  • இந்தியாவின் முதல் தொழிலாளர் இயக்க அருங்காட்சியகமானது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா படகு இல்ல சுற்றுலா மையத்தில் திறக்கப்பட உள்ளது. உலக தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றையும் அதன் முக்கியமான ஆவணங்களையும், கேரள தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றையும் இந்த அருங்காட்சியகம் காட்சிப்படுத்துகிறது. `9.95 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு பாதுகாப்பு கட்டடக் கலைஞர் டாக்டர் பென்னி குரியகோஸ் முன்னிலை வகிக்கிறார்.

2. “ஆளுமையில் வெளிப்படைத்தன்மை” என்ற பிரிவின்கீழ், ஸ்கோச் சேலஞ்சர் விருதை வென்ற மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) பஞ்சாயத்து இராஜ் அமைச்சகம்

இ) சட்ட அமைச்சகம்

ஈ) வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • மத்திய பஞ்சாயத்து இராஜ் அமைச்சகம், “வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஆளுமை” பிரிவின்கீழ், SKOCH சேலஞ்சர் விருதை வென்றது. SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டம், e-கிராம்ஸ்வராஜ், mActionSoft, AuditOnline மற்றும் ServicePlus ஆகியவை அவ்வமைச்கத்தின் முன்னெடுப்புகளுள் அடங்கும்.

3. “The Making of Aadhaar: World’s Largest Identity Platform” என்ற தலைப்பிலான நூலின் ஆசிரியர் யார்?

அ) இராம் சேவக் சர்மா

ஆ) நந்தன் நிலேகனி

இ) A K சிக்ரி

ஈ) கிரிஸ் கோபாலகிருஷ்ணன்

  • இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பின் (UIDAI) முதல் தலைமை இயக்குநரான இராம் சேவக் சர்மா, “The Making of Aadhaar: World’s Largest Identity Platform” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார்.
  • இந்நூல் ஆதார் அமைப்பின் சட்ட, ஆளுமை மற்றும் சமூக அம்சங்கள் தொடர்பான தொழில்நுட்ப விவரங்களை உள்ளடக்கியது.

4. கனடாவின் ஹிந்தி எழுத்தாளர்கள் சங்கம் வழங்கிய “சாகித்ய கெளரவ் சம்மன்” விருதைப் பெற்ற இந்திய மத்திய அமைச்சர் யார்?

அ) S ஜெய் சங்கர்

ஆ) இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’

இ) அமித் ஷா

ஈ) ஜிதேந்திர சிங்

  • மத்திய கல்வி அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ஹிந்தி இலக்கியத்திற்கு பங்களித்ததற்காக கனடா ஹிந்தி எழுத்தாளர்கள் சங்கத்தால் கெளரவிக்கப்பட்டுள்ளார். மெய்நிகராக நடந்தேறிய இந்த விழாவில் அமைச்சருக்கு, “சாகித்ய கெளரவ் சம்மன்” விருது வழங்கப்பட்டது. கனடாவுக்கான இந்திய உயராணையர் அஜய் பிசாரியா முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.

5. நடப்பாண்டுக்கான (2021) G7 உச்சிமாநாட்டை நடத்தவுள்ள காரன்வால் அமைந்துள்ள நாடு எது?

அ) சுவிட்சர்லாந்து

ஆ) இத்தாலி

இ) பிரேசில்

ஈ) ஐக்கியப் பேரரசு

  • நடப்பாண்டுக்கான (2021) G7 உச்சி மாநாடு, ஐக்கியப் பேரரசின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள தீபகற்ப நாடான காரன்வாலில் ஜூன் 11 முதல் 13 வரை நடைபெறவுள்ளது.
  • நடப்பாண்டில் G7 கூட்டமைப்பின் தலைவராக இருப்பதால், ஐக்கியப் பேரரசானது (UK) இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளை இந்த உச்சிமாநாட்டில் விருந்தினர் நாடுகளாக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. G7 உறுப்புநாடுகளின் அரசாங்கத் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் G7 உச்சி மாநாட்டின்போது பரஸ்பரம் சந்தித்துக்கொள்கிறார்கள்.

6. ‘பறவைகள் விழா’வை நடத்தவிருக்கும் மகானந்தா வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) ஹிமாச்சல பிரதேசம்

ஆ) மத்திய பிரதேசம்

இ) மேற்கு வங்கம்

ஈ) ஒடிசா

  • மேற்கு வங்கத்தில் உள்ள மகானந்தா வனவுயிரி சரணாலயம் இந்த ஆண்டு பிப்ரவரி 20 முதல் 23 வரை ‘பறவைகள் திருவிழா’வை ஏற்பாடு செய்யவுள்ளது. டார்ஜிலிங் வனவுயிரி பிரிவு இந்த நிகழ்வை நடத்தும். செங்கழுத்து இருவாச்சி உள்ளிட்ட முந்நூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்களைக்கொண்டுள்ளதால், இச்சரணாலயம் “முக்கியமான பறவைப் பகுதி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

7. வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த காமிக் புத்தகக் கலைக்கான சாதனையை அண்மையில் உருவாக்கிய பிரபல காமிக் ஓவியம் எது?

அ) ஹாரி பாட்டர்

ஆ) பாப்பாய்

இ) டாம் மற்றும் ஜெர்ரி

ஈ) டின் டின்

  • பெல்ஜிய கலைஞரான ஹெர்ஜ் வரைந்த டின்டின் ஓவியம் சமீபத்தில் பிரான்ஸின் பாரிஸில் €2.6 மில்லியன் யூரோவுக்கு விற்கப்பட்டது. இதன்மூலம், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த காமிக் புத்தகக் கலைக்கான சாதனையை இந்த ஓவியம் உருவாக்கியது.
  • இந்த ஓவியத்தில், கருப்பு பின்னணியில் வரையப்பட்ட ஒரு சிவப்பு டிராகன் உள்ளது.

8. ஐநா மனித உரிமைகள் பேரவையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட நசாத் ஷமீம் கான் சார்ந்த நாடு எது?

அ) இந்தியா

ஆ) பாகிஸ்தான்

இ) பிஜி

ஈ) நேபாளம்

  • ஜெனீவாவுக்கான பிஜியின் தூதர் நசாத் ஷமீம் கான், 2021ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
  • “இரகசிய வாக்கு” முறையைப் பயன்படுத்தி இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது 47 வாக்குகளில் 29 வாக்குகள் நசாத் ஷமீம் கானுக்கு ஆதரவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற யோவேரி முசவேனி, எந்த நாட்டின் அதிபராவார்?

அ) நைஜீரியா

ஆ) உகாண்டா

இ) காங்கோ மக்கள் குடியரசு

ஈ) சிரியா

  • கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடான உகாண்டாவின் அதிபராக யோவேரி முசவேனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 59% வாக்குகளைப்பெற்றார். கடந்த 1986ஆம் ஆண்டு முதல் ஆறாவது முறையாக அவர் அதிபர் பதவியை ஏற்கிறார்.

10. புதிய தனியுரிமைக்கொள்கை அமல்படுத்தலை மூன்று மாத காலத்திற்கு தாமதப்படுத்தியுள்ள சமூக-ஊடக நிறுவனம் எது?

அ) பேஸ்புக்

ஆ) வாட்ஸ் ஆப்

இ) யூடியூப்

ஈ) டெலிகிராம்

  • பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான சமூக தொடர்பு நிறுவனமான “வாட்ஸ் ஆப்” தனது புதிய தனியுரிமைக் கொள்கை அமல்படுத்தலை 3 மாத காலத்திற்கு தாமதப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்தப் புதிய தனியுரிமைக் கொள்கை முதலில் பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்தப் புதிய தனியுரிமைக் கொள்கையானது பொதுமக்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. மேலும் அதன் பயனர்கள், வாட்ஸ் ஆப்பில் இருந்து சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற பிற தளங்களுக்கு பெருமளவில் இடம்பெயர வழிவகுத்தது.

1. India’s first Labour Movement Museum is to be launched in which state/UT?

A) Tamil Nadu

B) Kerala

C) West Bengal

D) Andhra Pradesh

  • India’s first Labour Movement Museum is to be launched in the Houseboat tourism hub, Alappuzha in the state of Kerala. The Museum aims to showcase the history of world labour movement, by showcasing the important documents of the World Labour movement and the exhibits of Kerala’s labour movement. Conservation architect Dr Benny Kuriakose is leading the project of outlay Rs 9.95 Crore.

2. Which Union Ministry won the SKOCH Challenger Award under “Transparency in Governance” category?

A) Ministry of Home Affairs

B) Ministry of Panchayati Raj

C) Ministry of Law

D) Ministry of Agriculture and Rural Development

  • Union Ministry of Panchayati Raj won the SKOCH Challenger Award under “Transparency in Governance” category. Transformational initiatives of the Ministry include the launch of SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) Scheme, e–GramSwaraj, mActionSoft, AuditOnline and ServicePlus.

3. Who is the Author of the book titled “The Making of Aadhaar: World’s Largest Identity Platform”?

A) Ram Sewak Sharma

B) Nandan Nilekani

C) A K Sikri

D) Kris Gopalakrishnan

  • Ram Sewak Sharma, the first Director–General of the Unique Identification Development Authority of India (UIDAI), has authored a book titled “The Making of Aadhaar: World’s Largest Identity Platform”. The book comprises of technical details regarding the legal, governance and social aspects of the Aadhar system.

4. Which Indian Union Minister was conferred with the “Sahitya Gaurav Samman” award by the Hindi Writers Guild, Canada?

A) S Jai Shankar

B) Ramesh Pokhriyal ‘Nishank’

C) Amit Shah

D) Jitendra Singh

  • Union Education Minister Ramesh Pokhriyal ‘Nishank’ was honoured by the Hindi Writers Guild, Canada for his contribution to Hindi Literature. The Minister was conferred with the “Sahitya Gaurav Samman” award, in a ceremony conduced virtually.
  • The award was presented in the presence of India’s High Commissioner in Canada Ajay Bisaria.

5. Cornwall, the host of this year’s G7 Summit, is located in which country?

A) Switzerland

B) Italy

C) Brazil

D) United Kingdom

  • The G7 Summit of this year is to be held in Cornwall, a peninsular country in the south–west region of the United Kingdom, during June 11 to 13. Being the President of G7 this year, the United Kingdom has extended its invitation to India, Australia and South Korea to participate in the Summit as Guest countries.
  • The Heads of Government of member states, and the representatives of the EU, usually meet at the G7 Summit.

6. Mahananda wildlife sanctuary, which is to conduct the ‘Bird Festival’, is located in which state?

A) Himachal Pradesh

B) Madhya Pradesh

C) West Bengal

D) Odisha

  • The Mahananda wildlife sanctuary in West Bengal is to organise a first–of–its kind Bird Festival from February 20–23 this year. The Darjeeling Wildlife Division will organise the event, which will enable the applicants visit several bird–watching spots like Rongdong and Latpanchor.
  • The Sanctuary is designated as ‘important bird area’, as it is rich in fauna with more than 300 species of birds including Rufous–necked hornbill.

7. A drawing of which famous comic has set the record for the most expensive comic book art in history, recently?

A) Harry Potter

B) Popeye

C) Tom and Jerry

D) Tin Tin

  • A Tintin drawing, created by the Belgian artist Herge, is sold recently for €2.6 million at Paris, France. This makes the artwork the most expensive comic book art in history. The art contains a red dragon drawn on a black background by the frightened character’s face.

8. Nazhat Shameem Khan, who has been elected as the President of UN Human Rights Council, belongs to which country?

A) India

B) Pakistan

C) Fiji

D) Nepal

  • Fiji’s ambassador in Geneva, Nazhat Shameem Khan – has been elected as the President of UN Human Rights Council for 2021. She has served the UN Human Rights Council as the Vice President in 2020. The election was conducted using a “secret ballot” method, and registered 29 out of 47 votes in favour of Nazhat Shameem Khan.

9. Yoweri Museveni, who is seen in news recently, is the President of which country?

A) Nigeria

B) Uganda

C) Congo Democratic Republic

D) Syria

  • Yoweri Museveni, has been re–elected as the President of Uganda, a land locked country in East Africa. He won almost 59% of the votes.
  • This makes Yoweri Museveni assume President’s office for the 6th term since 1986.

10. Which social media giant has delayed the implementation of a new privacy policy by 3 months?

A) Facebook

B) WhatsApp

C) YouTube

D) Telegram

  • The Facebook owned social communication giant “WhatsApp” has announced that, the implementation of its new privacy policy has been delayed by 3 months.
  • The privacy policy was to originally come into force on Feb 8, 2021. The new privacy policy has come under severe criticism from public and has led to massive migration of users from WhatsApp to other platforms like Signal and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!