TnpscTnpsc Current Affairs

20th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

20th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th July 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. சில பொதுத்துறை வங்கிகள் அண்மையில் ‘AA’ சூழலமைப்புடன் இணைக்கப்பட்டன. ‘AA’இன் விரிவாக்கம் என்ன?

அ. Amount Aggregator

ஆ. Account Aggregator 

இ. Affiliate Aggregator

ஈ. Account Administrator

  • பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (PNB) நிதிநிலைத் தகவல் பயனர் (FIU) மற்றும் நிதிநிலைத் தகவல் வழங்குநர் (FIP) என கணக்கு திரட்டி சூழலமைப்பில் செயல்பாட்டில் உள்ளது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை கணக்கு திரட்டி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. SBI, BOB மற்றும் UCO வங்கி உள்ளிட்ட பிற வங்கிகள் சோதனை கட்டத்தில் உள்ளன; மேலும் சில வளர்ச்சிக்கட்டத்தில் உள்ளன.

2. 2022 குடியரசுத்தலைவர் தேர்தலானது எத்தனையாவது இந்தியக்குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுகிறது?

அ. 12ஆவது

ஆ. 14ஆவது

இ. 15ஆவது 

ஈ. 17ஆவது

  • இந்தியாவின் 15ஆவது குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடப்பு 2022ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் தேர்தல் இந்தியாவில் நடைபெறுகிறது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்கள் மற்றும் தில்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர் குழுமத்தால் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

3. உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு நிதியுதவிபுரியும் தேசிய வங்கியின் (NaBFID) நிர்வாக இயக்குநராக (MD) பரிந்துரைக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. G இராஜ்கிரண் இராய் 

ஆ. K V காமத்

இ. உர்ஜித் படேல்

ஈ. V K சிங்

  • நிதியியல் சேவைகள் நிறுவனப்பணியகமானது (FSIB) G ராஜ்கிரண் ராயை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு நிதியுதவி அளிக்கும் தேசிய வங்கியின் (NaBFID) நிர்வாக இயக்குநராகப் பரிந்துரைத்துள்ளது. அண்மையில் நிறுவப்பட்ட பிறகு, FSIB வழங்கும் முதல் பரிந்துரை இதுவாகும்.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மைராஜ் அகமத் கானுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. பளு தூக்குதல்

ஆ. துப்பாக்கி சுடுதல் 

இ. மல்யுத்தம்

ஈ. டென்னிஸ்

  • கொரியாவின் சாங்வோனில் நடந்த ISSF உலகக்கோப்பையில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் இந்தியாவின் முன்னணி துப்பாக்கி சுடும் வீரருமான மைராஜ் அகமது கான் நாட்டின் முதல் தனிநபர் தங்கத்தை வென்றார். இன்னும் இரண்டு நாள் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப்பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அஞ்சும் மௌத்கில், சிப்ட் கௌர் சாம்ரா மற்றும் ஆஷி சௌக்சே ஆகியோரின் 50 மீ ரைபிள் மகளிர் அணியுடன் இந்தியா வெண்கலம் வென்றது.

5. முதல் AI அடிப்படையிலான டிஜிட்டல் மக்கள் மன்றத்தைத் தொடங்கியுள்ள இந்திய மாநிலம்/UT எது?

அ. கேரளா

ஆ. தெலுங்கானா

இ. இராஜஸ்தான் 

ஈ. ஒடிஸா

  • தேசிய சட்டசேவைகள் ஆணையத்தின் தலைவர் உதை உமேஷ் லலித், இராஜஸ்தானில் நடந்த 18ஆவது அகில இந்திய சட்டசேவைகள் அதிகாரிகளின் கூட்டத்தில் நாட்டின் முதல் AI அடிப்படையில் இயங்கும் டிஜிட்டல் மக்கள் மன்றத்தைத் (லோக் அதாலத்) தொடங்கிவைத்தார். இராஜஸ்தான் மாநில சட்டசேவைகள் ஆணையத்தின் டிஜிட்டல் லோக் அதாலத் இந்தியாவின் பெருகிவரும் நிலுவை வழக்குகளுக்கு இடையில் தொடங்கப்பட்டுள்ளது.

6. கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் 17ஆவது பறவைகள் சரணாலயமாக, ‘நஞ்சராயன் குளம்’ அறிவிக்கப்பட்டுள்ளது?

அ. தமிழ்நாடு 

ஆ. கேரளா

இ. ஆந்திரப் பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • தமிழ்நாட்டின் பதினேழாவது பறவைகள் சரணாலயமாக, ‘நஞ்சராயன் குளம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பறவைகள்சூழ் இடமாகும். சர்க்கார் பெரியபாளையம் நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் நஞ்சராயன் குளத்தில் 220 நீர்க்காக்கைகளும் 165 கூழைக்ககடாக்களும் உள்ளன.
  • அங்கு நூற்றுக்கணக்கான வர்ண நாரைகளும் நாமக்கோழிகளும் கூட உள்ளன. 800 ஆண்டுகள் பழமையான இக்குளத்திற்கு, பல நூற்றாண்டுகளாக பறவைகள் வந்து செல்கின்றன. 181 வகையான பறவைகள், 16 வகையான ஊர்வன, 40 வகையான பட்டாம்பூச்சிகள், 11 வகையான பாலூட்டிகள் மற்றும் 76 வகையான தாவரங்கள் அங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன.

7. ‘ஹுருன் இந்தியா பியூச்சர் யூனிகார்ன் இன்டெக்ஸ் – 2022’இன்படி, இந்தியாவின் துளிர் நிறுவனங்களின் தலைநகரம் எது?

அ. சென்னை

ஆ. பெங்களூரு 

இ. ஹைதராபாத்

ஈ. மும்பை

  • ‘ஹுருன் இந்தியா பியூச்சர் யூனிகார்ன் குறியீடு – 2022’இன்படி, பெங்களூரு இந்தியாவின் துளிர் நிறுவல்களின் தலைநகரமாகத் தொடர்கிறது. அந்த நகரத்தில் குறைந்தது 46 துளிர் நிறுவல்கள் இருக்கலாம். அதைத்தொடர்ந்து தில்லி NCR (25), மும்பை (16) ஆகிய நகரங்கள் உள்ளன. இந்தக் குறியீட்டின்படி, அடுத்த இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 122 புதிய துளிர் நிறுவல்கள் தொடங்கப்படும்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, யாயர் லாபிட் என்பவர் கீழ்க்காணும் எந்த நாட்டின் புதிய பிரதமராவார்?

அ. ஆப்கானிஸ்தான்

ஆ. பாகிஸ்தான்

இ. இஸ்ரேல் 

ஈ. ஈரான்

  • 58 வயதான யாயர் லாபிட், இஸ்ரேலின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, இஸ்ரேலின் 14ஆம் பிரதமராக அண்மையில் பதவியேற்றார். பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யாயர் லாபிட், இஸ்ரேலின் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார், ஏனெனில் வரும் நவம்பர் மாதத்தில் அந்நாடு பிரதமர் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. இது நான்கு ஆண்டுகளில் அந்நாடு சந்திக்கும் ஐந்தாவது பிரதமர் தேர்தலாகும். பெஞ்சமின் நெதன்யாகுவின் பன்னிரண்டு ஆண்டுகால ஆட்சிபுரி சாதனையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கோடு அவர் ஒரு கூட்டணியை உருவாக்கினார்.

9. நீலாச்சல் இஸ்பாட் நிகாம் லிட் (NINL) ஆனது கீழ்க்காணும் எந்த இந்திய கூட்டுக்குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது?

அ. ரிலையன்ஸ் குழுமம்

ஆ. TATA குழுமம் 

இ. அதானி தொழிற்துறைகள்

ஈ. வேதாந்தம்

  • டாடா ஸ்டீல் லாங் புராடக்ட்ஸ் (TSLP) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து நீலாச்சல் இஸ்பாட் நிகாம் லிட் இன் (NINL) தனியார்மயமாக்கல் செயல்முறை நிறைவடைந்தது. TATA குழுமத்தால் வாங்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை அடுத்து, இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் 2ஆவது வெற்றிகரமான தனியார்மயமாக்கல் ஆகும் இது. NINL, இது MMTC, NMDC, BHEL, MECON ஆகிய நான்கு ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒடிஸா மாநில அரசாங்கத்தின் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான OMC மற்றும் IPICOL ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும்.

10. உலகின் மிக ஆற்றல்வாய்ந்த துகள் மோதியான, ‘லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்’ அமைந்துள்ள இடம் எது?

அ. நியூயார்க்

ஆ. ஜெனீவா 

இ. சைபீரியா

ஈ. பாரிஸ்

  • உலகின் மிக ஆற்றல்வாய்ந்த துகள் மோதியான, ‘லார்ஜ் ஹாட்ரான் மோதி’, இந்த ஆண்டு ஜூலை முதல் செயல்பட உள்ளது. இது ஜெனீவாவில் அமைந்துள்ள அணுவாராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பால் உருவாக்கப்பட்டது.
  • ‘லார்ஜ் ஹாட்ரான் மோதி’ என்பது துகள்களை ஆய்வதற்காகக் கட்டப்பட்ட ஒரு மாபெரும், சிக்கலான எந்திரமாகும். இது இதுவரை அறியப்பட்டதிலேயே மிகச்சிறிய கட்டுமானத்தொகுதிகளை ஆயும். பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மூடப்பட்டு மூன்றாண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் அது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்   

1. நூலகம் எனும் அறிவுக்கிடங்கு!

“நான் மறைந்தபிறகு என் உடல்மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம்; என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள்’” என்று புத்தகங்கள் மீதான தன் தீராவேட்கையை வெளிப்படுத்தியவர் நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. புத்தகங்களால் உயர்ந்தவர்கள் உலகில் பலர் உள்ளனர்.

அதுதான் புத்தகங்களுக்கு உண்டான சிறப்பு. உலகில் புத்தகங்களுக்கு எத்துணை சிறப்பு இருக்கிறதோ அத்துணை பெருமைகொண்டவையாக விளங்குகின்றன நூலகங்கள். அறிவுக்கிடங்காக, அறிவின் புதையலாக அவை தொடர்ந்து இயங்கிவருகின்றன. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல் மையங்களாக நூலகங்கள் திகழ்கின்றன.

உலகில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை 26 லட்சம்

ஆசியாவில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை 19 லட்சம்

இந்தியாவில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை 15 லட்சம்

அத்தகைய நூலகங்கள் குறித்து ஒரு பார்வை…

உலகின் முதல் நூலகம்

* நிறுவப்பட்டது: கி.மு. 7-ஆம் நூற்றாண்டு

* மத்திய கிழக்கின் நினேவா பகுதியில் (தற்போதைய இராக்) அசிரிய ஆட்சியாளர் அசுர்பனிபால் என்பவரால் அமைக்கப்பட்டது.

* பண்டைய மத்திய கிழக்கின் எழுத்துகளால் ஆன சுமார் 30,000 கல்வெட்டுகளையும் பதிவுகளையும் கொண்டிருந்தது.

* அப்போதைய அறிஞர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.

நாகரிகங்களின் நூலகங்கள்

உலகின் பல்வேறு பகுதிகளில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தபோது நூலகங்களும் வளர்ந்தன.

அலெக்ஸாண்ட்ரியா நூலகம், எகிப்து

*கிரீஸ், பாரசீகம் (இன்றைய ஈரான்), எகிப்து, இந்தியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7,00,000 ஆவணங்கள் இருந்தன.

கலீஃப் அல்-அகம் நூலகம்

* இடம்: கோர்டோவா, ஸ்பெயின்

* நிறுவப்பட்டது: 10-ஆம் நூற்றாண்டு

* 4,00,000-க்கும் அதிகமான புத்தகங்கள்

உலகின் மிகப்பெரும் நூலகங்கள்

பிரிட்டிஷ் நூலகம், லண்டன்

* நிறுவப்பட்டது: 1973

* புத்தகங்கள், இதழ்கள், நாளிதழ்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை: 17 கோடி முதல் 20 கோடி வரை

லைப்ரரி ஆஃப் காங்கிரஸ், வாஷிங்டன், அமெரிக்கா

* நிறுவப்பட்டது: 1800

* அமெரிக்காவின் தேசிய நூலகமாக உள்ள நாடாளுமன்ற நூலகம்

* புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை: 17 கோடி

ஷாங்காய் நூலகம், சீனா

* நிறுவப்பட்டது: 1847

* புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை: 5.6 கோடி

இந்தியாவின் முக்கிய, பழைமையான நூலகங்கள்

திருவனந்தபுரம் நூலகம், கேரளம்

* நிறுவப்பட்டது: 1829

* நிறுவியவர்: அரசர் ஸ்வாதி திருநாள்

சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்

* நிறுவப்பட்டது: நாயக்க மன்னர்கள் காலம்

நாட்டின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அரிய ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கன்னிமாரா நூலகம், சென்னை

* நிறுவப்பட்டது: 1896

* தேசிய புத்தக களஞ்சியங்களுள் ஒன்று. நாட்டில் வெளியாகும் அனைத்து நூல்கள், இதழ்கள், நாளிதழ்களின் ஒரு பிரதி இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்திய தேசிய நூலகம், கொல்கத்தா

* நிறுவப்பட்டது: 1836

* புத்தகங்களின் எண்ணிக்கை: 26.41 லட்சம்

* நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பிப்ரவரி 1, 1953

* தேசிய புத்தக களஞ்சியங்களுள் ஒன்று.

தில்லி பொது நூலகம்

* நிறுவப்பட்டது: 1951

* புத்தகங்களின் எண்ணிக்கை: 18 லட்சம்.

* ஹிந்தி, ஆங்கிலம், உருது, பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன.

சேஷாத்ரி நினைவு நூலகம், பெங்களூரு

* நிறுவப்பட்டது: 1915

* புத்தகங்களின் எண்ணிக்கை: 3 லட்சம்

* விருது: ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை விருது (1999-2000)

2. ஆசிய பளுதூக்குதல்: ஹர்ஷதாவுக்கு தங்கம்

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய யூத் மற்றும் ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்தது. இதில் மகளிருக்கான 45 கிலோ பிரிவில் இந்தியாவின் அசத்தல் இளம் வீராங்கனை ஹர்ஷதா கௌட் மொத்தமாக 157 கிலோ எடையைத்தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அவர் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 69 கிலோ, ‘கிளீன் & ஜெர்க்’ பிரிவில் 88 கிலோ எடையைத் தூக்கினார். இதே பிரிவில் களம்கண்ட மற்றொரு இந்தியரான சௌம்யா தேவி 145 கிலோ (63+82) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் பெற்றார்.

இதில் ஹர்ஷதா கௌட் தூக்கிய எடையானது, கடந்த மே மாதம் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் முயற்சியின்போது அவர் தூக்கிய எடையைவிட 4 கிலோ அதிகம் ஆகும்.

இதனிடையே, ஆடவருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் L தனுஷ், 185 கிலோ (85+100) எடையைத் தூக்கி 4-ஆவது இடம்பிடித்தார். என்றாலும், ‘ஸ்னாட்ச்’ பிரிவில் அவர் தூக்கிய 85 கிலோ எடைக்காக அவருக்கு அந்தப்பிரிவுக்கான வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ஆசிய மற்றும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் ஸ்னாட்ச், கிளீன் & ஜெர்க், இரண்டும் சேர்த்து என மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனியே பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக ஒரே பதக்கம் மட்டும் வழங்கப்படுகிறது.

3. பாரத் கௌரவ் இரயில்கள்

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை இந்திய மற்றும் உலக மக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கத்துடன், ‘பாரத் கௌரவ் இரயில்கள்’ (சுற்றுலா) கொள்கையை இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுவரை இரண்டு பாரத் கௌரவ் இரயில்கள் பின்வரும் பகுதிகளுக்கு இடையே இயக்கப்படுகின்றன.

1) கோயம்புத்தூர்-மந்த்ராலயம்-ஷீரடி-கோயம்புத்தூர்.

2) தில்லி சப்தர்சங்-அயோத்யா-பாக்சர்-சனக்பூர் (நேபாளம்)-வாரணாசி-நாசிக்-ஓஸ்பெட்-ராமேசுவரம்-காஞ்சிபுரம் -பத்ராசலம் சாலை-தில்லி சப்தர்சங்.

இந்தத்தகவலை, மத்திய ரயில்வேத்துறை, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

1. Some public sector banks have recently connected to the AA ecosystem. What is the expansion of AA?

A. Amount Aggregator

B. Account Aggregator 

C. Affiliate Aggregator

D. Account Administrator

  • Public sector bank Punjab National Bank (PNB) has gone live on the account aggregator ecosystem as financial information user (FIU) as well as financial information provider (FIP). Union Bank of India, Canara Bank and Indian Bank have also connected to the account aggregator system. Other banks including SBI, BOB and UCO Bank are in the testing phase and some others are in the development phase.

2. The 2022 Presidential Election is conducted to choose the ………. President of India.

A. 12th

B. 14th

C. 15th 

D. 17th

  • The 2022 Presidential Election is conducted to choose the 15th President of India are being held in India. NDA candidate Droupadi Murmu and the opposition’s Yashwant Sinha are participating in the election. The President is elected by the members of the Electoral College comprising elected members of both houses of Parliament and legislative assemblies of all states as well as the NCT of Delhi and the UT of Puducherry.

3. Who has been recommended as the MD of National Bank for Financing Infrastructure and Development (NaBFID)?

A. G Rajkiran Rai 

B. K V Kamath

C. Urjit Patel

D. V K Singh

  • The Financial Services Institutions Bureau (FSIB) has recommended G Rajkiran Rai for the position of Managing Director at the National Bank for Financing Infrastructure and Development (NaBFID). This is the first ever recommendation by FSIB, after it was recently set up.

4. Mairaj Ahmad Khan, who was seen in the news recently, is associated with which sports?

A. Weight lifting

B. Shooting 

C. Wrestling

D. Tennis

  • Two–time Olympian and India’s ace Skeet shooter Mairaj Ahmad Khan won the country’s first ever individual gold in the ISSF World Cup at Changwon, Korea. India stays on top of the medal standings with five gold, five silver and three bronze medals with two more days of competitions left. India also won a bronze with the 50m Rifle women’s team of Anjum Moudgil, Sift Kaur Samra and Ashi Chouksey.

5. Which Indian state/UT has launched first AI–powered digital Lok Adalat?

A. Kerala

B. Telangana

C. Rajasthan 

D. Odisha

  • National Legal Services Authority Chairman Uday Umesh Lalit launched the country’s first AI–powered digital Lok Adalat during the 18th All India Legal Services Authorities’ meet in Rajasthan. The Digital Lok Adalat of Rajasthan State Legal Services Authority (RSLSA) was launched amid the recent headlines of India’s growing case pendency.

6. ‘Nanjarayan Tank’ has been declared as a bird sanctuary of which state?

A. Tamil Nadu 

B. Kerala

C. Andhra Pradesh

D. Karnataka

  • ‘Nanjarayan Tank’ has been declared as the 17th Bird sanctuary of Tamil Nadu. It is a a protected birding hotspot in Tiruppur district of the state. The Nanjarayan Tank also known as Sarkar Periyapalayam Reservoir, has 220 cormorants and 165 pelicans. It has over hundreds of painted storks, and coots. The tank is over 800 years old and birds have been visiting here for centuries. 181 species of birds, 16 species of reptiles, over 40 varieties of butterflies, 11 species of mammals and as many as 76 types of flora have been recorded.

7. As per ‘Hurun India Future Unicorn Index 2022’, which city is the start–up capital of India?

A. Chennai

B. Bengaluru 

C. Hyderabad

D. Mumbai

  • According to the ‘Hurun India Future Unicorn Index – 2022’, Bengaluru continues to be the start–up capital of India, with 46 probable Unicorns. It is followed by Delhi NCR (25) and Mumbai (16). As per the index, India will have 122 new unicorns in the next two to four years.

8. Yair Lapid, who was seen in the news, is the new Prime Minister of which country?

A. Afghanistan

B. Pakistan

C. Israel 

D. Iran

  • The 58–year–old Yair Lapid recently took over as Israel’s 14th prime minister after the country’s parliament dissolved. The journalist–turned politician, has taken over as Israel’s caretaker prime minister as the country preparing to go for polls for the fifth time in four years in November. He built a coalition that ended Benjamin Netanyahu’s record 12 consecutive years in power.

9. Neelachal Ispat Nigam Ltd (NINL) was handed over to which Indian conglomerate group?

A. Reliance Group

B. TATA Group 

C. Adani Industries

D. Vedanta

  • The privatisation of Neelachal Ispat Nigam Ltd (NINL) was completed as it has been handed over to Tata Steel Long Products (TSLP). NINL is the second successful privatisation by the government, after Air India which was also bought by Tata Group. NINL, which is a joint venture of 4 CPSEs named MMTC, NMDC, BHEL, MECON and 2 Odisha government PSUs– OMC and IPICOL.

10. Where is the ‘Large Hadron Collider’, the world’s most powerful particle collider located?

A. New York

B. Geneva 

C. Siberia

D. Paris

  • The world’s most powerful particle collider, the Large Hadron Collider (LHC), is set to function from July this year. It was built by the European Organization for Nuclear Research located in Geneva. The Large Hadron Collider is a giant, complex machine built to study particles, the smallest known building blocks of all things.  Three years after it was shut down for maintenance and upgrades, the collider was switched back recently.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!