TnpscTnpsc Current Affairs

20th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

20th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 20th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

20th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. 2022ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள நாடு எது?

அ. குவைத்

ஆ. போஸ்னியா

இ. ஏமன்

ஈ. ஆப்கானிஸ்தான்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஏமன்

  • உலக பட்டினிக் குறியீட்டு மதிப்பெண்கள் ஊட்டச்சத்துக்குறைபாடு, குழந்தைகளிடையே காணப்படும் வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தைகளிடையே காணப்படும் இளைத்தல் நோய் மற்றும் குழந்தை இறப்பு முதலான நான்கு குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சீனாவும் குவைத்தும் ஆசிய நாடுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. தெற்காசியப் பிராந்தியம் உலகிலேயே அதிக பட்டினி நிலை, அதிக குழந்தைகளிடையே காணப்படும் வளர்ச்சி குன்றிய விகிதம் மற்றும் இளைத்தல் நோய் விகிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஐந்துக்கும் குறைவான மதிப்பெண்களுடன் 17 நாடுகள் கூட்டாக 1 மற்றும் 17–க்கு இடையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 2022 – உலக பட்டினிக் குறியீட்டில் ஏமன் நாடு கடைசி இடத்தில் உள்ளது.

2. ISROஇன் NGLVஇல் உள்ள NG என்பது எதைக் குறிக்கிறது?

அ. Next Generation

ஆ. Nexus Gamma

இ. Necessary Guidelines

ஈ. New Generation

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Next Generation

  • ISRO (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த 1980ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய முனைய துணைக்கோள் ஏவுகலத்திற்கு (Polar Satellite Launching Vehicle – PSLV) மாற்றாக Next Generation Launching Vehicle (NGLV) என்று பொருள் வரும் அடுத்த தலைமுறை ஏவுகலத்தை தற்போது உருவாக்கி வருகிறது.

3. 2022 அக்டோபரில் ISROஇன் (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) தலைவராக உள்ளவர் யார்?

அ. R N சுப்ரமணியம்

ஆ. G மகாலக்ஷ்மி

இ. S சோமநாத்

ஈ. S சந்திரா இராஜசேகர்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. S சோமநாத்

  • ISRO தலைவர் ஸ்ரீதர பணிக்கர் சோமநாத், வலியமலையில் அமைந்துள்ள திரவ முற்செலுத்த அமைப்பு மையத்தில் (LPSC) ‘2022 – பொறியாளர்கள் மாநாடு’ நிகழ்வையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, புதிய NGLVஇன் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். NGLV ஆனது, புவிநிலை இடைப்பாதைக்கு பத்து டன் எடை வரை கொண்டுசெல்லும் கனரக–ஏவுகலமாக இருக்கும். NGLV அரை–கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத் –துகிறது; இந்தத் தொழில்நுட்பம் திறமையானதும் செலவு குறைந்ததாகவும் விளங்குகிறது.

4. இந்திய அரசால் SCG திட்டத்தை நிறுவ தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலம் எது?

அ. பீகார்

ஆ. சத்தீஸ்கர்

இ. இராஜஸ்தான்

ஈ. உத்தர பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. சத்தீஸ்கர்

  • இந்திய நிலக்கரி நிறுவனமானது BHEL, IOCL மற்றும் GAIL (இந்தியா) நிறுவனம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிஸா, சத்தீசுகர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் திட்டமிப்பட்ட மேற்பரப்பு நிலக்கரி வாயுவாக்க திட்டங்களை (SCG) நிறுவ இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. திட்டமிப்பட்ட SCG திட்டங்கள், `35,000 கோடி மொத்த மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ளன.

5. ஐநா பல பரிமாண வறுமைக்குறியீட்டின்படி, உலகளவில் அதிக ஏழை மக்களைக்கொண்ட நாடு எது?

அ. காங்கோ

ஆ. நைஜீரியா

இ. இந்தியா

ஈ. இந்தோனேசியா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா

  • ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித்திட்டம் (UNDP) மற்றும் OPHI ஆகியவற்றால் வெளியிடப்பட்ட பல பரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கையின்படி, 2005–06 மற்றும் 2019–21–க்கு இடையில் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை சுமார் 415 மில்லியனாக குறைந்துள்ளது. உலகளவில் இந்தியாவில் அதிக ஏழைகள் உள்ளனர் (228.9 மில்லியன்), அதைத் தொடர்ந்து நைஜீரியா (96.7 மில்லியன்) உள்ளது.

6. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘பிரதமர் பாரதிய ஜன் ஊர்வரக் பரியோஜனா’வுடன் தொடர்புடைய நடுவண் அமைச்சகம் எது?

அ. உள்துறை அமைச்சகம்

ஆ. வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. MSME அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகம்

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் பிரதமர் கிசான் சம்மான் சம்மேளன்–2022ஐ தேசிய தலைநகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் தொடங்கி வைத்தார். வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ், ‘பிரதமர் பாரதிய ஜன் ஊர்வரக் பரியோஜனா – ஒரே நாடு ஒரே உரம்” திட்டத்தையும் அவர் தொடங்கினார். இத் திட்டத்தின்கீழ், நிறுவனங்கள் அனைத்து மானிய உரங்களையும், ‘பாரத்’ என்ற ஒரே பெயரின்கீழ் சந்தைப்படுத்த வேண்டும்.

7. ஃப்ரீடம் ஹவுஸின் இன்டர்நெட் ஃப்ரீடம் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 24

ஆ. 58

இ. 71

ஈ. 51

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. 51

  • அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃப்ரீடம் ஹவுஸின் கூற்றுப்படி, நாட்டில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் முனைவுகளைத் தொடர்ந்து இந்தியாவின் இணைய சுதந்திர மதிப்பெண் 2 புள்ளிகள் அதிகரித்து 51ஆக உயர்ந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இணைய சுதந்திரத்தில் இந்தியாவின் மதிப்பெண் 49ஆக இருந்தது. நாட்டில் குறைவான இணையத்தடைகள் நிலவுவதே இந்த மதிப்பெண் முன்னேற்றத்திற்குக் காரணமாகும்.

8. உலக வறுமை ஒழிப்பு நாளுக்கானக் கருப்பொருள் யாது?

அ. Dignity for all in practice

ஆ. Leaving None behind

இ. SDG 1 Poverty

ஈ. Eradication of Poverty First

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Dignity for all in practice

  • வறுமையினால் உலக அளவில் ஏற்படும் சிக்கல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்.17ஆம் தேதி உலக வறுமை ஒழிப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. “Dignity for all in practice” என்பது நடப்பாண்டில் (2022) வரும் உலக வறுமை ஒழிப்பு நாளுக்கானக் கருப்பொருளாகும். கடந்த 1992ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அக்.17ஆம் தேதியை உலக வறுமை ஒழிப்பு நாள் எனக் குறிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஐநா ஆனது, ‘கண்ணியம்’ என்பது ஓர் அடிப்படை உரிமை என்றும் அது பிற அடிப்படை உரிமைகளின் அடிப்படை என்றும், மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் ‘கண்ணியத்திற்கான உரிமை உண்டு’ என்றும் கூறுகிறது.

9. புனைகதைக்கான 2022 – புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலகா சார்ந்த நாடு எது?

அ. இந்தியா

ஆ. இலங்கை

இ. வங்காளதேசம்

ஈ. நேபாளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இலங்கை

  • ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மேடா’ புதினத்துக்காக இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகாவுக்கு 2022ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதினம் ஒரு நுண்புலத் திகில் வகையைச் சார்ந்ததாகும்; இந்தப் புதினம் அதன் தலைப்பில் உள்ள நிழற்படக்காரரின் கதையை விவரிக்கிறது. 1992இல் புக்கர் பரிசை வென்ற மைக்கேல் ஒண்டாட்ஜேவைத் தொடர்ந்து இலங்கையில் பிறந்து இவ்விருதைப்பெறும் இரண்டாவது எழுத்தாளராக கருணாதிலகா விளங்குகிறார்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, NROL–91 என்பதை ஏவிய நாடு எது?

அ. சீனா

ஆ. ரஷ்யா

இ. இஸ்ரேல்

ஈ. அமெரிக்கா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. அமெரிக்கா

  • NROL–91 என்ற உளவுச்செயற்கைக்கோளை அமெரிக்கா ஏவியது. யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் (ULA) டெல்டா IV கனரக ஏவுகலம் கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்காவுக்கான செயற்கைக்கோளை ஏவியது. தேசிய உளவு அலுவலகம் (NRO) என்பது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைசார்ந்த ஒரு நிறுவனமாகும்; இது நாட்டின் உளவுச் செயற்கைக்கோள்களை வடிவமைக்கிறது, உருவாக்குகிறது, ஏவுகிறது மற்றும் இயக்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நடுவணரசின் ஓய்வூதியதாரர்களுக்கான, “வாழ்க்கை வசதியை” இலக்காக கொண்ட ஓய்வூதியதாரர்களுக்கான பவிஷ்யா 9.0 ஒருங்கிணைந்த இணையதளத்தை நடுவண் இணையமைச்சர் Dr ஜிதேந்திர சிங், பாரத வங்கியுடன் இணைந்து தொடங்கி வைத்தார்.

மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியர் நலன் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் Dr ஜிதேந்திர சிங், ஓய்வூதியதாரர்களுக்கான ஒருங்கிணைந்த, “பவிஷ்யா 9.0” இணையதளத்தை தொடங்கிவைத்தார். பவிஷ்யா 9.0 பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது ஓய்வூதியதாரர்களின் “வாழ்க்கை வசதியை” மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஓய்வூதியம் வழங்கும் மீதமுள்ள 16 வங்கிகளும் ஓய்வூதியதாரர்க -ளுக்கான ஒருங்கிணைந்த இணையதளத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளும்.

20th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which country scored least at the Global Hunger Index in 2022?

A. Kuwait

B. Bosnia

C. Yemen

D. Afghanistan

Answer & Explanation

Answer: C. Yemen

  • The Global Hunger Index scores are based on four indicators — Undernourishment, Child Stunting, Child Wasting and Child Mortality. China and Kuwait are the Asian countries that has ranked at the top of the list. South Asian region has the highest hunger level, highest child stunting rate and highest child wasting rate in the world. 17 countries have been collectively ranked between 1 and 17 with a score of less than 5. Yemen is at the last position in the Global Hunger Index 2022 in the world.

2. What does the NG in NGLV of ISRO stands for?

A. Next Generation

B. Nexus Gamma

C. Necessary Guidelines

D. New Generation

Answer & Explanation

Answer: A. Next Generation

  • ISRO (Indian Space Research Organization) is developing Next Generation Launch Vehicle (NGLV) to replace Polar Satellite Launch Vehicle (PSLV) which was created in 1980s.

3. Who is ISRO’s (Indian Space Research Organization) chairman in October, 2022?

A. R N Subrahmanyam

B. G Mahalaxmi

C. S Somanath

D. S Chandra Rajasekhar

Answer & Explanation

Answer: C. S Somanath

  • ISRO chairman Sreedhara Panicker Somanath made the announcement of the new NGLV launch during a press conference on the sidelines of ‘Engineers Conclave 2022’ at the Liquid Propulsion Systems Centre (LPSC) in Valiyamala. NGLV will be cost–efficient three–stage reusable heavy–lift vehicle with a payload capacity of ten tonnes to Geostationary Transfer Orbit (GTO). NGLV is using semi–cryogenic technology which will be both efficient and cost–effective.

4. Which state has been chosen to establish a SCG project by Indian Government?

A. Bihar

B. Chhattisgarh

C. Rajasthan

D. Uttar Pradesh

Answer & Explanation

Answer: B. Chhattisgarh

  • After Coal India Ltd has signed MoUs with BHEL, IOCL, and GAIL (India) Ltd— Government has planned to establish proposed surface coal gasification (SCG) projects in West Bengal, Odisha, Chattisgarh, Maharashtra, and Tamil Nadu. The proposed SCG projects will be established at an aggregated estimated cost of Rs. 35,000 crores.

5. As per the UN Multidimensional Poverty Index (MPI), which country has the largest number of poor people worldwide?

A. Congo

B. Nigeria

C. India

D. Indonesia

Answer & Explanation

Answer: C. India

  • The Multidimensional Poverty Index (MPI) released by the United Nations Development Programme (UNDP) and OPHI. As per the report, the number of poor people in India fell by about 415 million between 2005–06 and 2019–21. India has the largest number of poor people worldwide (228.9 mn) followed by Nigeria (96.7 mn).

6. ‘Pradhan Mantri Bhartiya Jan Urvarak Pariyojana’, which was launched recently, is related to which Union Ministry?

A. Ministry of Home Affairs

B. Ministry of Chemicals and Fertilizers

C. Ministry of Science and Technology

D. Ministry of MSME

Answer & Explanation

Answer: B. Ministry of Chemicals and Fertilizers

  • Prime Minister Narendra Modi inaugurated the two–day PM Kisan Samman Sammelan 2022 at the Indian Agricultural Research Institute in the national capital. He also launched the Pradhan Mantri Bhartiya Jan Urvarak Pariyojana — One Nation One fertiliser scheme under the Ministry of Chemicals and Fertilisers. Under the scheme, companies must market all subsidised fertilisers under a single brand ‘Bharat’.

7. What is the rank of India in Freedom House Internet Freedom Index?

A. 24

B. 58

C. 71

D. 51

Answer & Explanation

Answer: D. 51

  • As per the US government–funded NGO Freedom House, India’s internet freedom score improved by two points to 51 after efforts to bridge the digital divide in the country. India’s score was 49 in Internet Freedom in 2021. The improvement in the score is also based on reduced frequency and intensity of internet shutdowns in the country.

8. What is the theme of the ‘International Day for the Eradication of Poverty’?

A. Dignity for all in practice

B. Leaving None behind

C. SDG 1 Poverty

D. Eradication of Poverty First

Answer & Explanation

Answer: A. Dignity for all in practice

  • International Day for the Eradication of Poverty is observed on 17th October to raise awareness about the global issue of poverty. The theme for this year is ‘Dignity For all in Practice’. In 1992, the United Nations General Assembly passed a resolution designating October 17 as the International Day for the Eradication of Poverty. According to the UN, ‘dignity’ is a fundamental right and the basis of other fundamental rights and every human being is entitled to dignity.

9. Shehan Karunatilaka, who won the 2022 Booker Prize for Fiction, is from which country?

A. India

B. Sri Lanka

C. Bangladesh

D. Nepal

Answer & Explanation

Answer: B. Sri Lanka

  • Sri Lankan author Shehan Karunatilaka, has been awarded the 2022 Booker Prize for Fiction for the novel ‘The Seven Moons of Maali Almeida’. The novel is a metaphysical thriller which tells the story of the photographer of its title. Karunatilaka has become the second Sri Lankan–born author to win, following Michael Ondaatje, who won in 1992.

10. NROL–91, which was seen in the news, was launched by which country?

A. China

B. Russia

C. Israel

D. USA

Answer & Explanation

Answer: D. USA

  • The United States launched a spy satellite named NROL–91. The United Launch Alliance (ULA) Delta IV Heavy rocket launched the satellite for the US from California. The National Reconnaissance Office (NRO) is an agency of the United States Department of Defense which designs, builds, launches, and operates the reconnaissance satellites of the country.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!