TnpscTnpsc Current Affairs

20th & 21st November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

20th & 21st November 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 20th & 21st November 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

November Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘வறட்சிக்குத் தகவமைப்பதற்கான பிராந்திய நடவடிக்கைத் திட்டம்’ என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது?

அ) ஜி-20

ஆ) பிரிக்ஸ்

இ) ஆசியான் 

ஈ) பிம்ஸ்டெக்

  • ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஐநா பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையம் (ESCAP) வறட்சியை தழுவுவதற்கான ஆசியான் பிராந்திய நடவடிக்கை திட்டத்தை (ARPA-AD) அறிமுகப்படுத்தியது. செயல்கள் 26 துணைச் செயல்களாகவும், 2021-2025’ஐ உள்ளடக்கிய செயல்படு -த்தல் திட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. வறட்சிக்கு ஏற்ப தொழில்நுட்ப பணிக்குழுவை உருவாக்குவது முக்கிய பரிந்துரைகளுள் ஒன்றாகும்.
  • வறட்சி மேலாண்மை சுழற்சி மற்றும் பிராந்திய மற்றும் தேசிய அளவில் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்பது குழுக்களின் செயல்திட்டம் இத்திட்டத்தில் உள்ளது.

2. 2021 உலக நீரழிவு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ) Access to Diabetes Care 

ஆ) Leaving None behind

இ) Importance of Insulin sensitisers

ஈ) Respect to Sir Frederick Banting

  • கடந்த 1922’இல் சார்லஸ் ஹெர்பர்ட் பெஸ்டுடன் இணைந்து இன்சுலின் ஹார்மோனைக் கண்டுபிடித்த சர் ஃபிரடெரிக் பான்டிங்கின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்.14 அன்று உலக நீரழிவு நாள் கொண்டாடப்படுகிறது.
  • நிபுணர்களின் கூற்றுப்படி, உலகளவில் 463 மில்லியன் மக்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 90 சதவீதத்தினர் டைப்-2 நீரிழிவு நோயால் (இன்சுலின்கொண்டு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்) பாதிக் -கப்பட்டுள்ளனர். 2021-23 உலக நீரழிவு நாளுக்கானக் கருப்பொருள் “Access to Diabetes Care – If Not Now, When?” என்பதாகும்.

3. சாவ் பாலோ (பிரேசிலியன்) கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்ற பந்தய ஓட்டுநர் யார்?

அ) லூயிஸ் ஹாமில்டன் 

ஆ) மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

இ) சார்லஸ் லெக்லெர்க்

ஈ) வால்டேரி போட்டாஸ்

  • ஏழு முறை உலக சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன், பிரேசிலிய சாவ் பாலோ கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பெற்றார். ஹாமில்டன் பெனால்டி காரணமாக 10ஆவது இடத்திலிருந்து தொடங்கினாலும், அவர் பந்தயத்தில் முதலிடம் பிடித்தார். இப்போட்டியில் வால்டேரி போட்டாஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

4. ‘பகவான் பிர்சா முண்டா ஸ்மிருதி உத்யன் மற்றும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகம்’ சமீபத்தில் எந்த இந்திய மாநிலத்தில் திறக்கப்பட்டது?

அ) ஒடிசா

ஆ) ஜார்கண்ட் 

இ) மேற்கு வங்கம்

ஈ) சத்தீஸ்கர்

  • இராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா ஸ்மிருதி உத்யன் மற்றும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சிமூலம் திறந்து வைத்தார்., 2000 நவம்பர்.15 அன்று 19ஆம் நூற்றாண்டின் விடுதலைப் போராட்ட வீரரும் பழங்குடியினத் தலைவருமான பிர்சா முண்டாவின் பிறந்தநாளில் ஜார்கண்ட் மாநிலம் பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டது. அம்மாநிலத்தின் நிறுவன நாளைக் குறிக்கும் வகையில், மாநிலத்தின் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், விளிம்புநிலை மக்களுக்கான உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

5. சமீபத்தில் காலமான பாபாசாகேப் புரந்தரேவுடன் தொடர்புடைய தொழில் எது?

அ) விளையாட்டு வீரர்

ஆ) வரலாற்றாசிரியர் 

இ) தொழிலதிபர்

ஈ) அரசியல்வாதி

  • புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான பாபாசாகேப் புரந்தரே முதுமை மற்றும் நிமோனிடிஸ் தொடர்பான நோய்களால் தனது 99ஆம் வயதில் காலமானார். புகழ்பெற்ற எழுத்தாளரும் நாடக ஆளுமையுமான புரந்தரே, சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாறு குறித்த தனது பணிக்காக அறியப்பட்டவர். அவர் சிவாஜி, அவரது நிர்வாக பாணி, அத்துடன் அந்தக் காலகட்டத்தின் கோட்டைகள் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.

6. 2021 T20 உலகக்கோப்பையை வென்ற நாடு எது?

அ) நியூசிலாந்து

ஆ) ஆஸ்திரேலியா 

இ) இங்கிலாந்து

ஈ) தென்னாப்பிரிக்கா

  • 14 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஆஸ்திரேலியா தனது முதல் T20 உலகக்கோப்பை கோப்பையை அண்மையில் வென்றது. நியூசிலாந்து நிர்ணயித்த 173 இரன்கள் இலக்கை கேன் வில்லியம்சனின் 85 இரன்களால் ஆஸ்திரேலியா துரத்தியது.
  • ஆஸ்திரேலியா, 2010’இல் இறுதிப்போட்டியை எட்டியது; ஆனால் அதன் பிறகு அந்த அணி இறுதிப்போட்டியை எட்டவில்லை. ஆஸ்திரேலியா 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் 173 ரன்களை எட்டியதால், அதிகபட்ச வெற்றிகரமான ‘ரன் சேஸ்’ என்ற புதிய சாதனையையும் படைத்தது.

7. 2016’க்குப் பிறகு முதல் பழங்குடி நாடுகளின் உச்சிமாநாட்டை நடத்தவுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) அமெரிக்கா 

இ) ஜப்பான்

ஈ) ரஷ்யா

  • கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் பழங்குடி நாடுகளின் உச்சி மாநாட்டை அமெரிக்கா நடத்தவுள்ளது. இவ்வுச்சிமாநாட்டின்போது பூர்வீக அமெரிக்கர்களுக்கான பொது பாதுகாப்பு மற்றும் நீதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிபர் ஜோபிடன் அறிவிப்பார்.
  • அமெரிக்காவில் உள்ள 570’க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தைச்சேர்ந்த தலைவர்கள் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். பூர்வீக அமெரிக்கர்கள் மற்றும் பூர்வீக அலாஸ்கா மக்களை பெரிதும் பாதித்துள்ள COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்த உச்சிமாநாடு மெய்நிகராக நடத்தப்படுகிறது.

8. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற செக்மேட் என்ற புதிய ரகசிய போர் விமானம் உருவாக்கப்பட்டு வருகிற நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா 

இ) சீனா

ஈ) இஸ்ரேல்

  • இரட்டை எஞ்சின்கொண்ட Su-57 ஃபெலோனுக்குப்பிறகு ரஷ்யா தனது இரண்டாவது இரகசிய போர் விமானத்தை உருவாக்கி வருகிறது. ‘Su-75 Checkmate’, என்ற பெயரிலான இப்புதிய இரகசிய விமானம் இலகு இரக உத்திசார் விமானம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இவ்விமானத்தை யுனைடெட் ஏர்கிராப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது, மாநில பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ரோஸ்டெக் நிறுவனத்தின் ஒருபகுதியாகும். செக்மேட் என்பது ஐந்தாம் தலைமுறை இலகுரக போர்விமானமாகும். அது 2023ஆம் ஆண்டில் தனது முதல் பணியைத் தொடங்கும்.

9. 2023ஆம் ஆண்டிற்குள் படிக்கவும், பணியாற்றவும் மற்றும் துளிர் நிறுவனங்களை நிறுவவும் உலகளவில் 30000 திறமையாளர்களை ஈர்க்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ள நாடு எது?

அ) ஜெர்மனி

ஆ) பின்லாந்து 

இ) ஆஸ்திரேலியா

ஈ) நார்வே

  • பின்லாந்து அண்மையில் ‘ஃபியூச்சர் இஸ் மேட் இன் பின்லாந்து’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன்கீழ் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் படிக்கவும், பணி செய்யவும் மற்றும் நாட்டில் துளிர் நிறுவனங்களை நிறுவவும் இந்தியா உட்பட உலகளவில் 30,000 திறமையாளர்களை ஈர்க்க அந்நாடு திட்டமிட்டுள்ளது.
  • நான்காவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து இடம் பிடித்துள்ளது. 2019-2023 பின்லாந்து அரசாங்கத் திட்டத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் 10,000 திறமையாளர்களை பின்லாந்துக்கு ஈர்ப்பதை அந்நாடு இலக்காகக் கொண்டுள்ளது.

10. ‘ஸ்வவலம்பன் சவால் நிதியத்தைத்’ தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ) நபார்டு

ஆ) SIDBI 

இ) செபி

ஈ) ஆர்பிஐ

  • இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது (SIDBI) ஸ்வவலம்பன் சவால் நிதியத்தின் இரண்டாவது சாளரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிதியத்தின் கருப்பொருள் ‘பசுமை பாரதம்’ ஆகும். பசுமை மற்றும் தூய்மையான காலநிலை மாற்றத்தை பூர்த்தி செய்யும் புதுமையான திட்டங்களில் இந்த நிதியத்தின் கவனம் உள்ளது.
  • நிலையான வாழ்வாதாரம், நிதி உள்ளடக்கம் மற்றும் நிதி சேவைகளுக் -கான அணுகல் மற்றும் தொழில்முனைவோர் கலாசாரத்தை மேம்படுத் தல் ஆகியன இதன் பிற கருப்பொருள்களாம். ஒரு சவால் நிதி என்பது நிறுவனங்களுக்கிடையிலான போட்டியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நிதிகளை ஒதுக்குவதற்கான ஒரு நிதியியல் பொறி முறையாகும். ஸ்வவலம்பன் சவால் நிதியத்தின் முதல் சாளரம் இந்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆதிச்சநல்லூரில் திறக்கப்பட்ட – முதுமக்கள் தாழிக்குள் மனித மண்டை ஓடு, எலும்பு:

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கனிமொழி முன்னிலையில் திறக்கப்பட்ட முதுமக்கள் தாழியில், மனிதனின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருந்தன.

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த அக்.10-ம் தேதி மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இந்த அகழாய்வில் ஏற்கெனவே 12 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாழியைத் திறந்து, உள்ளிருக்கும் பொருட்களை ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்தனர்.

நேற்று அந்தத் தாழி திறக்கப்பட்டது. அதற்குள் மனிதமண்டை ஓடு, கால் எலும்பு, சிறுபானைகள் இருந்தன. தாழிக்குள் இருந்த பானைகளில் தானியங்களும், ஆயுதங்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் தெரிவித்தார்.

2. மோசமான காவல் துறையில் முன்னிலை வகிக்கும் பிஹார், உ.பி. மாநிலங்கள்; தென் மாநில போலீஸார் சிறப்பான செயல்பாடு: இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் ஆய்வில் தகவல்

மோசமான காவல்துறையில் பிஹார், உத்தரபிரதேச மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாகவும், தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் காவல் துறை யினரின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் (ஐபிஎஃப்) அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் காவல் துறை குறித்து ஒரு ஆய்வை அந்த அமைப்பு நடத்தியுள்ளது. பொதுமக்களின் பிரச்சினைகளை அணுகுவது, குற்றங் களை கையாளும் முறை உட்பட பல அம்சங்கள் ஆய்வில் இடம் பெறுகின்றன.

அந்த வகையில் பிஹார், உத்தர பிரதேச மாநில காவல்துறை யின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த காவல்துறையின் செயல்பாடு 69 சதவீதம் திருப்தி கரமாக உள்ளதாக அந்த ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மோசமான காவல்துறை செயல் பாடுகள் உள்ள மாநிலங்களாக பிஹார், உத்தரபிரதேசம், சத்தீஸ் கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகியமாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள் மோசமான காவல்துறை பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.

அதே நேரத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தென்இந்தியாவைச் சேர்ந்த 3 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் முதலிடத்தில் ஆந்திராவும், 2-ம் இடத்தில் தெலங்கானாவும், 3-ம் இடத்தில் அசாமும், 4-ம் இடத்தில் கேரளாவும், 5-ம் இடத்தில் ஒடிஷாவும் உள்ளன.

இதுகுறித்து இந்தியன் போலீஸ் பவுண்டேஷன் அமைப்பின் சேர்மனும், முன்னாள் உ.பி. போலீஸ் டிஜிபியுமான பிரகாஷ் சிங் கூறும்போது, “பிரதமரின் நவீன போலீஸ் முன்னெடுப்பு திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு மாநில போலீஸாரின் செயல்பாட்டை ஆய்வு செய்தோம். நாட்டில் ஒட்டுமொத்த போலீஸாரின் செயல்பாடு 69 சதவீதம் திருப்தி அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் கடைசியில்உள்ள மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். அதற்குத் தேவையான பயிற்சிகள் அந்த மாநில போலீஸாருக்கு வழங்கப்படும்” என்றார்.

ஐபிஎஃப் தலைவரும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான என்.ராமச்சந்திரன் கூறும்போது, “நாடு முழுவதும் 1.61 லட்சம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தினோம். ஆன்-லைன் மூலமாகவும், நேரடியாகச் சென்றும் கடந்த 5 மாதங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார். -பிடிஐ

நாட்டில் ஒட்டுமொத்த போலீஸாரின் செயல்பாடு 69 சதவீதம் திருப்தி அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்,

3. ரேடாரை செயலிழக்க செய்யும் நவீன கருவி கடற்படையிடம் பிரதமர் மோடி ஒப்படைப்பு:

எதிரி நாட்டு ரேடார்களை துல்லியமாக கண்காணித்து அவற்றை செயலிழக்க செய்யும் வகையிலான ‘சக்தி’ என்ற பெயரிலான எலக்ட்ரானிக் போர்முறைக் கருவியை (எலக்ட்ரானிக் வார்ஃபேர் சிஸ்டம்) டிஆர்டிஓ நிறுவனம் அண்மையில் வடிவமைத்தது. இந்தக் கருவிகளை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ரூ.1,805 கோடி செலவில் 12 கருவிகள் தயாரிக்கப்பட்டு வந்த சூழலில், சமீபத்தில் 2 கருவிகளின் வடிவமைப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, இந்தக் கருவிகளை இந்தியக் கடற்படையிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒப்படைத்தார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தக் கருவியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

4. வேளாண் சட்டங்கள் போராட்டம்: ஒரு கண்ணோட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ள தாகவும், இது தொடர்பாக வரும்நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றும் பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் போராட்டம் தொடர்பான கண்ணோட்டம் வருமாறு:

ஜூன் 5, 2020: 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வருவ தற்கான அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்தது.

ஜூன் 6, 2020: அவசரச் சட்டங்களைஎதிர்த்து பஞ்சாபில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தொடக்கம்.

செப். 14, 2020: நாடாளுமன்றத்தில் 3 புதிய வேளாண் அவசரச் சட்டங்கள் தாக்கல்.

செப். 17, 2020: அவசரச் சட்டங்கள் மக்களவையில் நிறைவேற்றம்.

செப். 20, 2020: குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் அவசரச் சட்டங்கள் நிறை வேற்றம்.

செப். 23, 2020: சட்டங்களுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராட 31 விவசாய அமைப்பு கள் முடிவு.

செப். 27, 2020: 3 விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்.

அக். 8, 2020: விவசாயிகளுடன் பேச்சு நடத்த 8 உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்தது.

நவ. 23, 2020: டெல்லி சலோ போராட்டத்தை அறிவித்தது விவசாயிகள் சங்கம்.

டிச. 3, 2020: விவசாய அமைப்புகள், மத்திய அரசுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை.

டிச. 8, 2020: நாடு தழுவிய பந்த் நடத்த விவசாயிகள் அமைப்பு அழைப்பு.

டிச. 9, 2020: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் விவசாயத் தலைவர்கள் சந்திப்பு.

டிச. 16, 2020: பிரச்சினையைத் தீர்க்க குழு அமைக்கலாம் என உச்ச நீதிமன்றம் யோசனை.

டிச. 21, 2020: 24 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் அறிவித்தனர்.

ஜன. 7, 2021: குடியரசு தினத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு.

ஜன. 11, 2021: விவசாயிகள் போராட்டத்தைத் தவறாக கையாள்வதாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.

ஜன. 12, 2021: வேளாண் சட்டங்களுக்கு காலவரையற்ற தடையை உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும் 4 பேர் கொண்ட உச்ச நீதிமன்றக் குழுவை அமைப்பதாகவும் அறிவித்தது.

ஜன. 22, 2021: தோல்வியில் முடிந்தது விவசாயிகள், மத்திய அரசு இடையிலான 11-வது சுற்று பேச்சுவார்த்தை.

ஜன. 26, 2021: டெல்லியில் நுழைந்த விவசாயிகள் போலீஸாருடன் மோதல், செங்கோட்டையில் கொடியேற்றி ஆர்ப்பாட்டம்.

ஜன. 28, 2021: காஸிப்பூர் போராட்டத்தின்போது பாரதீயகிஸான் யூனியன் தலைவர் ராக்கேஷ் டிகைத் உணர்ச்சி கரமான வகையில் பேச்சு.

ஜன. 29, 2021: முஸாபர்நகரில் நடைபெற்ற மகாபஞ்சாயத்தில் ஆயிரக்கணக்கான விவசாயி கள் பங்கேற்பு.

பிப். 3, 2021: விவசாயிகள் போராட்டத்துக்கு பருவநிலை மாறுபாட்டு ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் ஆதரவு, டூல் கிட்டையும் வெளியிட்டார்.

பிப். 13, 2021: டூல்கிட் விவகாரத்தில் பெங்களூருவைச் சேர்ந்த திஷா ரவியை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

பிப். 18, 2021: நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தது சம்யுக்தா கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்).

பிப். 23, 2021: திஷா ரவிக்கு டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன்.

மார்ச் 5, 2021: நிபந்தனையற்ற முறையில் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டும் என பஞ்சாப் சட்டப் பேரவையில் தீர்மானம்.

மார்ச் 6, 2021: டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 100-வது நாளை எட்டியது.

மே 27, 2021: போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறை வடைந்ததையொட்டி கருப்பு தினத்தை அனுஷ்டித்த விவசாயிகள்.

ஆக. 7, 2021: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் கிஸான்சன்சத் (விவசாயிகள் நாடாளு மன்றம்) நிகழ்ச்சியில் பங்கேற்க 14 எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு.

நவ. 19, 2021: விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு.

5. ஆசிய வில்வித்தை: இறுதி நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம்

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை இந்தியா 2 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றது.

வங்கதேச தலைநகா் டாக்காவில் ஆசிய வில்வித்தை சாம்பியன் போட்டிகள் நடைபெற்று வந்தன. இறுதி நாளான வெள்ளிக்கிழமை மகளிா், ஆடவா் ரெக்கா்வ் பிரிவில் பலம் வாய்ந்த கொரிய அணியை எதிா்கொண்டது இந்தியா.

இறுதிச் சுற்றில் இந்திய அணிகள் தோல்வி கண்டன. ஆடவா் பிரிவில் ஒலிம்பியன் பிரவீன் ஜாதவ், தேசிய சாம்பியன் பரத் சலுன்கே, கபில் ஆகியோா் இடங்கிய இந்திய அணி 2-6 என்ற புள்ளிக் கணக்கில் கொரிய ஆடவரிடம் தோல்வி கண்டு வெள்ளியை வென்றது.

மகளிா் பிரிவில் அங்கிதா பகத், மதுவேத்வான், ரிதி ஆகியோா் கொண்ட இந்திய அணி 0-6 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவிடம் தோற்று வெள்ளி வென்றனா்.

மேலும் கலப்பு ரெக்கா்வ் பிரிவில் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் அணியை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் அங்கிதா பகத்-கபில் இணை வீழ்த்தி வெண்கலம் வென்றது.

இப்போட்டியில் ஜோதி சுரேகா தங்கம் வென்றாா். 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா.

6. ‘பாடப் புத்தகங்களில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு’

பாடப் புத்தகங்களிலும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு தகவல், தொடா்பு எண் உள்ளிட்டவை இடம்பெறும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

சா்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபா் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தைகளின் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பயிற்சி பணிமனையை தொடங்கி வைத்த அமைச்சா் மேலும் கூறியது:

தமிழகத்தில் முதல்கட்டமாக திருச்சியில் இந்தப் பயிற்சி 316 பேருக்கு அளிக்கப்படுகிறது. தொடா்ந்து சென்னையில் நாளொன்றுக்கு 400 போ் பயன்பெறும் வகையில் பயிலரங்கு நடைபெறும். பின்னா், அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஆசிரியா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள், பள்ளி நிா்வாகக் குழுவினா் முன்மாதிரி அலுவலா்களாகச் செயல்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்துவா்.

தமிழகம் முழுவதும் உள்ள 2.87 லட்சம் வகுப்பறைகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு சுவரொட்டி இடம்பெறச் செய்யப்படும். மேலும், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு, குழந்தைகள் உதவி பெற 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி குறித்தும் பாடப்புத்தகங்களில் முதல் பக்கத்திலேயே வெளியிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

மாணவா்கள் அளிக்கும் புகாா்களின் உண்மை தன்மை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். நிலுவையில் உள்ள புகாா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் மாணவா்கள் புகாா் அளிப்பது வெளியே தெரிந்தால் பள்ளிக்கு அவப்பெயா் ஏற்படுகிறது எனக் கருதி அதை மூடி மறைக்க தனியாா் பள்ளி நிா்வாகங்கள் முயற்சிக்கின்றன. அதற்காக பிரச்னைகளை விசாரிக்காமல் விட்டு விடக் கூடாது. மாணவா்களின் நலன் கருதி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணம் செலுத்தவில்லை என்பதற்காக தனியாா் பள்ளி ஆன்லைன் வகுப்புகளில் மாணவா்களைப் புறக்கணிப்பதோ, பள்ளித் தோ்வு வினாத்தாள், விடைத்தாள் வழங்காமலோ, இதர கல்விச் சேவை அளிக்காமலோ புறக்கணித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவா்களின் எண்ணிக்கை விகிதம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 2021-2022 ஆம் கல்வியாண்டில் 5 லட்சம் மாணவா்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா். இதன்மூலம் தற்போது ஏறத்தாழ 71 லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனா் என்றாா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநா் ஆா். சுதன் பேசுகையில், பள்ளி ஆசிரியா்கள், தலைமையாசிரியா்கள், முதல்வா்கள், பள்ளி நிா்வாகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழுவினா், ஆசிரியரல்லாத பணியாளா்கள், பெற்றோா் என அனைத்துத் தரப்பும் ஒன்றிணைந்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

7. நிதி தொழில்நுட்ப ஆட்சிமன்றக் குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

வா்த்தக மேம்பாடு, சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளக் கூடிய நிதி தொழில்நுட்பப் பணிகளுக்கென தனி ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக தொழில் துறை அமைச்சா் இருப்பாா் என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட உத்தரவு:-

நிதிதொழில்நுட்பத்துக்கான ஆட்சிமன்றக் குழுவின் தலைவராக தொழில் துறை அமைச்சரும், துணைத் தலைவராக தலைமைச் செயலாளரும் செயல்படுவா். மேலும் தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா், நிதித் துறை முதன்மைச் செயலாளா், தகவல் தொழில்நுட்பவியல் முதன்மைச் செயலாளா், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலாளா், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் உள்ளிட்டோா் உறுப்பினா்களாக இருப்பா். அவா்களுடன் நிதி சாா்ந்த துறைகளில் வல்லுநா்களான பாலாஜி நூதலபாடி, சுந்தா் கண்ணன், ராம்குமாா் ராமமூா்த்தி ஆகியோரும் உறுப்பினா்களாகச் செயல்படுவா்.

நிதிதொழில்நுட்பம் மற்றும் அதுசாா்ந்த துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள், முன்னெடுப்புகள் ஆகியவற்றை இந்த ஆட்சிமன்றக் குழு தீவிரமாக கண்காணிக்கும். சந்தைப்படுத்துதல் மற்றும் முத்திரைப்படுத்துதல், வணிக மேம்பாடு, கூட்டாண்மைகள், கல்வி, முதலீடுகள் போன்ற துறைகளில் கொள்கைகளை வகுக்க துணைக் குழுக்களை ஏற்படுத்தும் பணிகளை ஆட்சிமன்றக் குழு செய்யும். மேலும், துறைகளில் நிபுணத்துவம் பெற்றோா்களின் ஆலோசனைகளும் ஆட்சிமன்றக் குழுவால் கோரப்படும். இந்தக் குழுவானது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூடி விவாதிக்கும் என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. ‘தமிழ்நாடு குழந்தைகளுக்கான கொள்கை 2021’: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021”-ஐ இன்று வெளியிட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (20.11.2021) தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டார். மேலும், நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவியும், கருணை அடிப்படையில் 15 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெறவும், குழந்தைகளின் உரிமைகள் எவ்வித தடையுமின்றி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும் மாநில அளவில் குழந்தைகளுக்கான கொள்கையை வடிவமைத்தல் இன்றியமையாதது ஆகும்.

இதனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வளர்ச்சிப் படிநிலைகளுக்கான இலக்கினை அடைந்திடவும், குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, மருத்துவம், பாலியல் பாகுபாடின்மை, பாதுகாப்பு இவை அனைத்திற்குமான தனித்துவம் வாய்ந்த கொள்கையாக “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் மேல் மாறாத அன்பும் அவர்களின் நலனில் மிகுந்த அக்கறையும் கொண்டுள்ள தமிழக முதல்வர், கோவிட்-19 நோய் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு உதவி திட்டங்களையும் நிவாரண நிதி உதவிகளையும் வழங்குவதற்கு 29.05.2021 அன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

அவ்வறிப்பினை தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் இதுநாள்வரையில் கோவிட்-19 நோய் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த 256 குழந்தைகளுக்கு ரூ.12.80 கோடி மற்றும் ஒரு பெற்றோரை இழந்த 6,493 குழந்தைகளுக்கு ரூ.194.79 கோடி, என மொத்தம் 6,749 குழந்தைகளுக்கு ரூ.207.59 கோடி தமிழ்நாடு அரசால் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் 2021-22ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், பெற்றோர் இருந்தும் வறுமை நிலை காரணமாக, பராமரிக்க இயலாது குழந்தைகளை நிறுவனங்களில் வைத்து பராமரிப்பதற்கு மாற்றாக குடும்பங்களில் வைத்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வண்ணம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவுத் திட்டத்தின் காத்திருப்பு பட்டியலில் உள்ள 1,148 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு மாநில அரசின் முழு பங்களிப்புடன் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இத்திட்டத்திற்காக நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,37,76,000/- நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 10 குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமூகநல இயக்குநரக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகங்களில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக ஸ்டாலின், 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

8. தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம்

தூய்மை நகரங்கள் பட்டியலில் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம் கிடைத்துள்ளது. மாணவர்களுக்கு ‘சுகாதார தூதர்’ அட்டை வழங்கியதை பாராட்டி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும்நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், தூய்மை இந்தியா இயக்கம்கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்கீழ் கடந்த 2016-ம் ஆண்டுமுதல் தேசிய அளவில் தூய்மை நகர கணக்கெடுப்பு நடத்தி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. தூய்மைப் பணியில் சிறந்து விளங்கும் நகர்ப்புற உள்ளாட்சிக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

2021-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தூர், 2-ம் இடம் பிடித்த சூரத், 3-ம் இடம் பிடித்த விஜயவாடா ஆகிய நகரங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சி 43-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில், சென்னை 45-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 48 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்றிருந்தன. இதில் சென்னை மாநகராட்சிக்கு 43-வது இடம் கிடைத்துள்ளது. இத்தரவரிசையில் தமிழ்நாட்டில் இருந்து பங்கு பெற்ற சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில், சென்னை முதலிடத்தில் உள்ளது.

இந்த ஆண்டுக்கான ‘திடக்கழிவு மேலாண்மையில் புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதல்’ என்ற பிரிவின்கீழ் சென்னைமாநகராட்சிக்கு விருது கிடைத்துள்ளது. இந்த விருதை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா வழங்க, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ்.மனீஷ் பெற்றுக்கொண்டார்.

சென்னை மாநகராட்சியின் சுகாதாரக் கல்வித்துறை சார்பில் திடக்கழிவுமேலாண்மை, மக்கும் குப்பைகள் மூலம் வீட்டிலேயே இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவ, மாணவியும் மாநகராட்சியின் சுகாதாரத் தூதராக செயல்பட்டு, மாநகர தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, உறுதிமொழி எடுத்தல் மற்றும் “சுகாதார தூதர்” அடையாள அட்டைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி கவுரவிக்கும் பணிகளையும் மாநகராட்சி சுகாதாரக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இப்பணியை பாராட்டியே இந்த ஆண்டு, மத்திய அரசு சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் “புதுமை படைத்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதல்” என்ற விருது சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

9. இந்திய தொழில் கூட்டமைப்பின் ‘கனெக்ட் 2021′ மாநாடு- நவ.26-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தமிழக அரசுடன் இணைந்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ)நடத்தும், தகவல் தொடர்புத் துறை குறித்த ‘கனெக்ட் 2021’ சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை வரும் நவம்பர் 26-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இம்மாநாடு, ஒரு நிலையான ஆழமான தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை கருப்பொருளாக கொண்டு நடத்தப்படுகிறது.

மாநாட்டை தொடங்கிவைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனெக்ட்2021 விருதுகளை வழங்கி, தமிழகஅரசின் தகவல் தொழில்நுட்பத்துறையின் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்துகிறார். இந்த மாநாடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசும்போது, “தமிழக அரசும்இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து கடந்த 2000-ம் ஆண்டுமுதல் நடத்தும் கனெக்ட் மாநாடு மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக மாறி வருகிறது. இந்தமாநாடு மூலம் தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய முதலீடுகள் தமிழகத்துக்கு வரவேண்டும். 2030-க்குள் தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவில் பொருளாதார உற்பத்தியை அடைவதற்கு இந்தமாநாடு உதவுவதாக அமையவேண்டும்’’ என்றார்.

சிஐஐ தமிழ்நாடு தலைவர் டாக்டர் எஸ். சந்திரகுமார் கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளில் கனெக்ட் மாநாடு தொழில்நுட்ப தளங்கள் உருவாக்கம், ஐசிடி அகாடமி, சிறப்பு தொழில்நுட்ப பூங்காக்கள், விண்வெளி தொழில் பூங்காவில் புதிய மேம்பாடுகள், திறன் மேம்பாட்டிற்கான தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு உள்ளிட்டவற்றில் பல்வேறு சாதனை முயற்சிகளை உருவாக்கி உள்ளது’’ என்றார்.

சிஐஐ கனெக்ட் 2021 தலைவர் ஜோஷ் பவுல்கர் பேசும்போது, ‘‘இந்த மாநாடு தற்போது அனைத்துதொழில்நுட்ப வழங்குநர்களையும் தொழில்நுட்ப நுகர்வு தொழில்களையும் இணைத்து, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த சேவைகள் துறையில் சிறப்பு கவனம் செலுத்தும் விதமாக மாறி உள்ளது’’ என்றார்.

10. ரூ.44.30 கோடியில் காவல்துறை கட்டிடம் திறப்பு – தடய அறிவியல் துறைக்காக ‘மரபணு தேடல் மென்பொருள்’ : முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாடு தடய அறிவியல் துறையால் நாட்டில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள ‘தடய மரபணு தேடல் மென்பொருளை’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு, காவல்துறை கட்டிடங்களையும் திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் டிஎன்ஏ பிரிவில் தடய மரபணுதேடல் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் மாநிலம்

இதன்மூலம் இத்தொழில்நுட்பத்தை நாட்டில் அறிமுகப்படுத்துவதில் முதல் மாநிலமாக தமிழகம்திகழ்கிறது. இந்த தேடல் மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இப்புதிய தடய மரபணு தேடல் மென்பொருள் மூலமாக, கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் காணாமல் போன குழந்தைகளை மரபணு ஒப்பீடு ஆய்வு மூலம் உரிய பெற்றோருடன் ஒப்படைத்தல், மாநிலங்களுக்கு இடையில் செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பை கண்டறிதல், கரையோரம் ஒதுங்கும் அடையாளம் தெரியாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணுதல், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிதல், இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களை கண்டறிதல் போன்ற பணிகளை எளிதாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள முடியும்.

11. தமிழகத்தில் முதல்முறையாக கரூரில் – கருத்தடை செய்யும் ஆண்களுக்கு ‘தங்கத் தந்தை’ விருது : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழகத்திலேயே முதல்முறையாக, கரூர் மாவட்டத்தில் கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு ரூ.5,000 ஊக்கத் தொகையுடன் ‘தங்கத் தந்தை’ விருது அல்லது இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற ஏதேனும் ஒருஅரசுத் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு அரசு சார்பில் ரூ.1,100 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திலேயே முதன்முறையாக, கரூர் மாவட்டத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வரும் ஆண்களை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.5,000 ஊக்கத் தொகையுடன் தங்கத் தந்தை விருது வழங்கும் திட்ட தொடக்க விழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் திட்டத்தை தொடங்கி வைத்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆண்களுக்கு தங்கத் தந்தை விருது வழங்கினார்.

பின்னர் ஆட்சியர் த.பிரபுசங்கர் பேசியது: ஆண்கள் கருத்தடை செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.5,000 ஊக்கத் தொகையுடன் தங்கத் தந்தை விருது வழங்கப்படும். அல்லது இலவச வீட்டு மனைப்பட்டா, வீட்டில் உள்ள முதியவர் ஒருவருக்கு மாதாந்திர உதவித் தொகை, விலையில்லா கறவை மாடு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்கரூ.10 லட்சம் வரை பிணையில்லா வங்கிக் கடனுதவி, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து தருதல், தோட்டக்கலைத் துறைமூலமாக தென்னையில் பல அடுக்கு பயிர் திட்டத்தின் மூலம்ஒரு ஹெக்டேருக்கு ரூ.40,000 வரைமானியம் வழங்குதல் போன்ற ஏதேனும் ஒரு அரசுத் திட்டத்தில் முன்னுரிமை அளித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார்.

முதல்நாளில் 21 பேர்

நேற்று நடந்த முகாமில் 21க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டனர். அவர்களுக்கு ஊக்கத் தொகையுடன், தங்கத் தந்தை விருது வழங்கப்பட்டது.

12. கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கான ஆயுஷ்-64 மாத்திரை தயாரிப்பு 46 நிறுவனங்களுக்கு அனுமதி: மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல்

கரோனா அறிகுறி உள்ளவர்களை குணப்படுத்த உதவும் ஆயுஷ்-64 மாத்திரை தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை 46 நிறுவனங்களுக்கு அளிக்க மத்திய ஆயுஷ்அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பில் அதாவது ஏ சிம்டம் மற்றும் குறைந்த அளவு நோய் தொற்றுஅறிகுறி உள்ளவர்களை குணப்படுத்துவதற்கு ஆயுஷ்-64 மாத்திரை மிகவும் உதவியாக உள்ளது. இதுவரை 7 நிறுவனங்கள் மட்டுமே இந்த மாத்திரையைத் தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்றிருந்தன. தற்போதுஇந்த மாத்திரையின் தேவையைக் கருத்தில் கொண்டு அதிகஅளவிலான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் மலேரியா நோய்க்கான மாத்திரையாக ஆயுஷ்-64 பரிந்துரைக்கப்பட்டு வந்தது. நாட்டில் கரோனா வைரஸ்பரவியபோது குறைந்த அளவிலான பாதிப்பு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த தீர்வாக இருந்தது. கரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்றுவந்த 63 ஆயிரம் பேர் இந்த மாத்திரையை சாப்பிட்டு விரைவாக குணமடைந் துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஆயுஷ்-64 மாத்திரைக்கான தேவை அதிகரித்தது. இது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவியதோடு, காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க உதவியது. கரோனா முதல் அலை தீவிரமடைந்தபோது பலருக்கும் இது மிகவும் உதவியாக இருந்தது.

இந்த மாத்திரையின் செயல் பாடு குறித்து 8 தனித்தனி மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. இது மிகச் சிறந்த பலனை அளித்துள்ளது. மேலும் எவ்வித பக்க விளைவுகளையும் இந்த மாத்திரை ஏற்படுத்தவில்லை என்பதும் இதன் தனிச் சிறப்பாகும். – பிடிஐ

13. உள்நாட்டில் தயாரான போர்க்கப்பல் – ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு:

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ்விசாகப்பட்டினம், இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

இந்திய கடற்படையில் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், ரோந்துகப்பல்கள் என 130 கப்பல்கள் உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையை 170 ஆக உயர்த்ததிட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் ஐஎன்எஸ்விசாகப்பட்டினம் போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது. மும்பையில் நடைபெறும் விழாவில் இந்த போர்க்கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவுக்கு தலைமை வகிக்கிறார்.

மத்திய பாதுகாப்புத் துறையின் 15 பி திட்டத்தின் கீழ் 4 அதிநவீன போர்க்கப்பல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இதில் முதல் போர்க்கப்பலான ஐஎன்எஸ்விசாகப்பட்டினம் மும்பை கட்டுமான தளத்தில் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

7,400 டன் எடை கொண்டது

இதைத் தொடர்ந்தே அந்த போர்க்கப்பல் கடற்படையில் இணைகிறது. இது 7,400 டன் எடை கொண்டது. நிர்பய், பிரம்மோஸ், பாரக் உள்ளிட்ட அதிநவீனஏவுகணைகள், அதிநவீன ரேடார்கள் கப்பலில் பொருத்தப்பட் டுள்ளன. இதில் 2 ஹெலிகாப் டர்களை நிறுத்தி வைக்கும் வசதியும் உள்ளது. 50 அதிகாரி களும் 250 வீரர்களும் கப்பலில் பணியாற்ற உள்ளனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி கப்பல் வரும் 28-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதுபிரான்ஸ் தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள் ளது. 1,775 டன் எடை கொண்டஇந்த நீர்மூழ்கியில், போர்க்கப் பல்களை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

14. உலகின் முதல் மின்சார தானியங்கி கார்கோ கப்பல்: நார்வேயின் யாரா இன்டர்நேஷனல் அறிமுகம்

நார்வேயின் பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான யாரா இன்டர்நேஷனல் உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை அறிமுகம் செய்துள்ளது.

யாரா பிர்க்லேண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள 80 மீட்டர் நீளமுள்ள இந்த எலெக்ட்ரிக் தானியங்கி சரக்கு கப்பல் தெற்கு நார்வேயின் போர்ஸ்கிரன்னில் உள்ள உற்பத்தி ஆலையிலிருந்து 14 கிமீ தொலைவில் பிரெவிக்கில் உள்ள ஏற்றுமதி துறைமுக முனையம் வரையிலான சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கப்பல் இந்நிறுவனத்தின் 40,000 டீசல் லாரி போக்குவரத்துக்கு மாற்றாக விளங்கும். இதனால் ஆண்டுக்கு 1000 டன் கார்பன் வெளியேற்றம் குறையும். இதன்மூலம் நாட்டின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் யாரா நிறுவனத்தின் இக்கப்பல் பெரும்பங்கு வகிக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வெய்ன் தோர் ஹோல்ஸ்தர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “மின்சார மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் இயங்கும் கப்பலை உலகிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்வதன்மூலம் மிகப்பெரிய மாற்றத்தின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம். இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல நீர்வழித்தடங்களில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.

இந்த கப்பல் முழுமையாகமின்சாரத்தில் இயங்குவது மட்டுமல்லாமல் கண்டெய்னர்களை ஏற்றுவது இறக்குவது, ரிசார்ஜ் செய்வது, சரியான வழித்தடத்தில் பாதுகாப்பாக கப்பலை செலுத்து வது என அனைத்தையும் தானி யங்கி தொழில்நுட்பம் மூலம் செயல்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

15. நாட்டின் தூய்மையான நகரமாக 5-வது முறையாக இந்தூர் தேர்வு :

மத்திய அரசின் வருடாந்திர தூய்மையான நகரங்கள் கணக்கெடுப்பில் 5-வது முறையாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டில் தூய்மையை பராமரிக்கும் நோக்கத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கான நகரங்கள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.

இதில் நாட்டில் மிகவும் தூய்மையான நகரமாக மத்தியபிரதேசத்தை சேர்ந்த இந்தூர், தொடர்ந்து 5-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத், ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.

கங்கைக் கரையில் அமைந்துள்ள மிகவும் தூய்மையான நகரமாக (தூய்மையான கங்கை நகர்) வாரணாசி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மிகவும் தூய்மையான மாநிலமாக சத்தீஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை நேற்று அறிவித்தது. விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (நவ. 21) வழங்குகிறார்.

16. நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் தொட்டியம் காவல் நிலையம் 8 ஆம் இடம்

இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்களில் தொட்டியம் காவல் நிலையம் 8 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

நாட்டிலுள்ள காவல் நிலையங்களில் தரவுப் பகுப்பாய்வு, நேரடிக் கண்காணிப்பு, பொதுமக்களின் பின்னோட்டத்தைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் இந்தியாவிலுள்ள காவல் நிலையங்களில் 10 சிறந்த காவல் நிலையங்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றன.

அதன்படி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்திய அளவிலான 10 சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள தொட்டியம் காவல் நிலையம் 8 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தக் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் மோகன்ராஜ், 2 காவல் உதவி ஆய்வாளா்கள், ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், 3 தலைமைக் காவலா்கள், 7 பெண் காவலா்கள் உள்ளிட்ட 30 போ் பணிபுரிகின்றனா்.

மாவட்ட எஸ்பி ஆய்வு: இந்நிலையில், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற சுஜித்குமாா், காட்டுப்புத்தூா், தொட்டியம் காவல் நிலையங்களை ஆய்வு செய்து தொட்டியம் காவல் நிலையம் பெற்ற சிறப்பைத் தக்க வைக்க அறிவுறுத்தி, வாழ்த்தினாா். தொட்டியம் காவல் நிலையமானது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் முசிறி கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில் செயல்படுகிறது.

1. The ‘Regional Plan of Action for Adaptation to Drought’ is associated with which institution?

A) G–20

B) BRICS

C) ASEAN 

D) BIMSTEC

  • United Nations Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) launched the ASEAN Regional Plan of Action for Adaptation to Drought (ARPA–AD). The actions are divided into 26 sub–actions and an implementation plan covering 2021–2025.
  • One of the key recommendations is for the establishment of a Technical Working Group on Adaptation to Drought. The plan consists of nine groups of action covering a drought management cycle and coordination on the regional and national levels.

2. What is the theme of World Diabetes Day 2021?

A) Access to Diabetes Care 

B) Leaving None behind

C) Importance of Insulin sensitisers

D) Respect to Sir Frederick Banting

  • World Diabetes Day is celebrated every year on November 14 to mark the birthday of Sir Frederick Banting, who discovered the insulin hormone in 1922along with Charles Herbert Best.
  • According to experts, an estimated 463 million people worldwide suffer from diabetes, with Type–2 diabetes (to be treated with insulin sensitisers) at 90 per cent of the cases. The theme for World Diabetes Day 2021–23 is “Access to Diabetes Care – If Not Now, When?”.

3. Which racing driver won the Sau Palo (Brazilian) Grand Prix tournament?

A) Lewis Hamilton 

B) Max Verstappen

C) Charles Leclerc

D) Valtteri Bottas

  • Lewis Hamilton, a seven–time world champion, beat Max Verstappen and obtained a stunning victory at the Brazilian Sau Palo Grand Prix tournament. Though Hamilton started from 10th position on the grid due to a penalty, he finished first in the race. Valtteri Bottas finished at third place in the tournament.

4. ‘Bhagwan Birsa Munda Smriti Udyan cum Freedom Fighters Museum’ has been recently inaugurated in which Indian state?

A) Odisha

B) Jharkhand 

C) West Bengal

D) Chhattisgarh

  • Prime Minister Narendra Modi inaugurated Bhagwan Birsa Munda Smriti Udyan cum Freedom Fighters Museum in Ranchi via video conferencing. Jharkhand was carved out of Bihar on the birth anniversary of Birsa Munda, the 19th century freedom fighter and tribal leader on November 15, 2000.
  • The state’s Chief Minister Hemant Soren launched a universal pension scheme for vulnerable sections, to mark the state’s foundation day.

5. Babasaheb Purandare, who passed away recently, was associated with which profession?

A) Sportsperson

B) Historian 

C) Businessperson

D) Politician

  • Eminent historian and author Babasaheb Purandare passed away at the age of 99, due to ailments associated with old age and pneumonitis. Purandare, a celebrated writer and theatre personality, was known for his work on the history of Chhatrapati Shivaji Maharaj. He has also written several books on Shivaji, his style of administration, as well as the forts from the period.

6. Which country won the T20 World Cup trophy in 2021?

A) New Zealand

B) Australia 

C) England

D) South Africa

  • Australia has recently won its maiden T20 World Cup trophy, after 14–year–long wait. Australia chased the 173–run target set by New Zealand due to Kane Williamson’s 85 runs. Australia had reached the final match in 2010, however the team has not reached the summit clash after that. Australia also set a new record for the highest–successful run chase as they reached 173 with 7 balls to spare.

7. Which country is set to host the first tribal nations’ summit since 2016?

A) India

B) USA 

C) Japan

D) Russia

  • The United States is set to host the first tribal nations’ summit since 2016. President Joe Biden will announce steps to improve public safety and justice for Native Americans during the summit. Leaders from more than 570 tribes in the United States are expected to participate in the two–day event. The summit is being held virtually due to the COVID–19 pandemic that has heavily affected Native Americans and Alaska Natives.

8. Checkmate, a new stealth aircraft seen in the news, is being developed by which country?

A) USA

B) Russia 

C) China

D) Israel

  • Russia is developing its second stealth fighter jet after the twin–engine Su–57 Felon. ‘Su–75 Checkmate’, the new stealth aircraft is also known as the Light Tactical Aircraft (LTC). The aircraft has been developed by the United Aircraft Corporation, which is a part of state defense and technology conglomerate, Rostec. Checkmate is a fifth–generation light fighter jet, which will take its maiden flight in 2023.

9. Which country has launched a campaign to attract over 30000 talents globally to study, work and establish start–ups by 2023?

A) Germany

B) Finland 

C) Australia

D) Norway

  • Finland has recently launched a ‘Future is made in Finland’ campaign, under which it is planning to attract over 30,000 skilled talents globally, including from India, to study, work and establish start–ups in the country by 2023. Finland is also voted the World’s Happiest Country for the fourth year.
  • Based on Finnish government programme 2019–2023, the country is aiming to get 10,000 skilled talents in Finland, annually.

10. Which institution has launched the ‘Swavalamban Challenge Fund’?

A) NABARD

B) SIDBI 

C) SEBI

D) RBI

  • Small Industries Development Bank of India (SIDBI) has launched the second window of Swavalamban Challenge Fund (SCF). The theme of the fund is ‘Green Bharat’. The focus of the fund is on innovative projects addressing the green and clean climate change. Other themes are sustainable livelihood, financial inclusion, and access to financial services and promoting the culture of entrepreneurship.
  • A challenge fund is a financing mechanism to allocate funds for specific purposes using competition among organisations. The first window of SCF was launched in August this year.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!