Tnpsc

21st & 22nd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

21st & 22nd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st & 22nd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

21st & 22nd July 2021 Tnpsc Current Affairs in Tamil & English


 1. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற சட்கோசியா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) ஒடிஸா

இ) உத்தரகண்ட்

ஈ) பீகார்

 • சாதாரண மரநாயான Paradoxurus hermaphrodite’கள், ஒடிஸாவில் 129 ஆண்டுகளுக்குப்பின், சட்கோசியா புலிகள் காப்பாகத்தில் காணப்பட்டன. இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஆசிய மரநாய் என்றும் அழைக்கப்படுகிறது. இது விவர்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுபாலூட்டியாகும். அவற்றின் நீண்ட உடல் கரடுமுரடான ரோமத்தால் மூடப்பட்டிருக்கும். அவை பொதுவாக சாம்பல் நிறத்தில் இருக்கும்.

2. COVID-19’இன் போதான நைஜரின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்காக, ‘Suffering in Silence’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) UNICEF

இ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்

ஈ) UNHCR

 • COVID-19 தொற்றுகாலத்தின்போதான நைஜரின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதற்காக யுனிசெப் சமீபத்தில் ‘Suffering in Silence’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையின்படி, நாட்டில் 2.1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவி தேவைப்படுகிறது. 2021ஆம் ஆண்டில், நைஜரில், 3.8 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவி தேவைப்படும். ஆயுத மோதல், புலம்பெயர்வு, வெள்ளம், நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுடன் கூடுதலாக, சமீபத்தில் COVID-19’இன் தாக்கங்களாலும் நைஜர் பாதிக்கப்பட்டுள்ளது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கேம்பிரிட்ஜ்-1 என்பது எந்த நாட்டின் சூப்பர் கம்ப்யூட்டராகும்?

அ) ஐக்கியப் பேரரசு

ஆ) ரஷ்யா

இ) அமெரிக்கா

ஈ) ஜப்பான்

 • கேம்பிரிட்ஜ்-1 எனப்பெயரிடப்பட்ட இங்கிலாந்தின் மிகவும் திறன்வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர் தற்போது செயல்படுகிறது. நோய்த்தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிக்கும் செயல்முறைகளை இது விரைவாகவும் மலிவாகவும் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, அமெரிக்காவைச் சார்ந்த கம்ப்யூட்டிங் நிறுவனமான என்விடியாவின் $100 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டமாகும்.
 • கேம்பிரிட்ஜ்-1’ஆல் வெவ்வேறு தரவுத்தொகுப்புகளை ஒருங்கிணைக்க முடியும். இது, பல்வேறு மருந்து நிறுவனங்கள் மற்றும் தரவுகளுக்கான துளிர் நிறுவனங்களுடன் கூட்டிணைந்துள்ளது.

4. இந்திய உயிரியலாளர்கள், பின்வரும் எந்தக்கண்டத்தில், ‘Bryum bharatiensis’ என்ற புதிய தாவர இனத்தை அடையாளம் கண்டனர்?

அ) ஆப்பிரிக்கா

ஆ) அண்டார்டிகா

இ) ஆசியா

ஈ) ஐரோப்பா

 • இந்திய உயிரியலாளர்கள், 2017ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிற்கு மேற்கொண்ட ஒரு பயணத்தின்போது ஒருவகை பாசியை அடையாளம் கண்டுள்ளனர். இது சமீபத்தில் ஒரு சர்வதேச இதழில் வெளியிடப்பட்டது.
 • பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உயிரியலாளர்கள் இந்த இனத்திற்கு ‘Bryum bharatiensis’ எனப்பெயரிட்டுள்ளனர். பாரதி என்பது இந்தியாவின் அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையங்களுள் ஒன்றாகும். பாறை மற்றும் பனிப்பரப்பில் பாசி எவ்வாறு உயிர்வாழ்கிறது என்பதே இதில் மிகவும் வியக்கத்தகு செய்தியாகும்.

5. சமீப செய்திகளில் இடம்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற மல்லிகைப் பூக்கள், பின்வரும் எந்த மாநிலத்தைச் சார்ந்தவையாகும்?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளம்

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கர்நாடகா

 • வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது இல்லங்களிலும் கோவில்களிலும் மலர்களால் அலங்காரம் செய்வதற்கு ஏதுவாக புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெற்றுள்ள மதுரை மல்லி மற்றும் பட்டன் ரோஜா, அல்லி, சாமந்தி, துலக்க சாமந்தி போன்ற இதர பாரம்பரிய பூக்கள் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா & துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
 • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான APEDA’இல் பதிவுசெய்யப்பட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த வேன்கார்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இப்பூக்களைப் பெற்றது. இதன் மூலம் 130 பெண் தொழிலாளர்களுக்கும், 30 திறமைவாய்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற நிஹால் சரின், பின்வரும் எந்த விளையாட்டோடு தொடர்புடையவராவார்?

அ) டென்னிஸ்

ஆ) டேபிள் டென்னிஸ்

இ) செஸ்

ஈ) நீச்சல்

 • பெல்கிரேடில் நடந்த செர்பியா ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்பின் முதுநிலை பிரிவில் 16 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் நிஹால் சரின் சமீபத்தில் சாம்பியன் ஆனார். சில்வர் லேக் ஓபன் போட்டியில் பட்டத்தை வென்ற பிறகு, இது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக நிஹால் சரின் வெல்லும் பட்டமாக்கும். சரின் தனது 14 வயதில், 2018ஆம் ஆண்டில் கிராண்ட்மாஸ்டர் ஆனார். இந்தப் போட்டியில், அவர் ஆறு ஆட்டங்களில் வென்று மூன்று போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

7. புவிசார் குறியீடுபெற்ற பாலியா வகை கோதுமை சார்ந்த மாநிலம் எது?

அ) மத்திய பிரதேசம்

ஆ) குஜராத்

இ) அஸ்ஸாம்

ஈ) உத்தரகண்ட்

 • பாலியா வகை கோதுமையானது அதிக புரதச்சத்தும் இனிப்புச்சுவையும் கொண்ட கோதுமையாகும். இதற்கு, 2011ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இது குஜராத் மாநிலத்தின் பால் பகுதி முழுவதும் வளர்க்கப்படுகிறது. அண்மையில், குஜராத்திலிருந்து கென்யா மற்றும் இலங்கைக்கு பாலியா வகை கோதுமை ஏற்றுமதியை இந்திய அரசு தொடங்கியது.

8. உலகின் மிகவுயரமான மணற்கோட்டை கட்டப்பட்டுள்ள நாடு எது?

அ) டென்மார்க்

ஆ) ஸ்காட்லாந்து

இ) பிரான்ஸ்

ஈ) நார்வே

 • டென்மார்க்கின் கடலோர நகரான புளோகஸில், உலகின் மிகவுயரமான மணற்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை 20 மீட்டருக்கும் அதிகமான உயரங்கொண்டது. கிட்டத்தட்ட 5,000 டன் மணலைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இது கடந்த 2019ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கட்டப்பட்டதைவிட 3 மீட்டர் உயரங்கொண்டதாகும்.

9. இந்தியாவில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்து உள்ள இடம் எது?

அ) ஆமதாபாத்

ஆ) மும்பை

இ) மைசூரு

ஈ) சென்னை

 • முன்னர், ‘குஜராத் தடய அறிவியல் பல்கலை’ என அழைக்கப்பட்டு வந்த தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகமானது தடயவியல் மற்றும் விசாரணை அறிவியலுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
 • ஆமதாபாத்தில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் போதைப்பொருள் மற்றும் உளநிலைமாற்றிகளின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்புமையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்துவைத்தார். பெண்களுக்கெதிரான குற்றங்களை விசாரிப்பது தொடர்பான இணையவழி பயிற்சியும் தொடங்கப்பட்டது.

10. பன்னாட்டு நிதிச்சேவை மையங்கள் ஆணையமானது (IFSCA) ITFS தளத்தை அமைப்பதற்கான கட்டமைப்பை வெளியிட்டது. ITFS என்பது எதைக் குறிக்கிறது?

அ) Indian Trade Finance Services

ஆ) International Trade Finance Services

இ) Indian Trade Finance Secretariat

ஈ) International Trade Finance Secretariat

 • பன்னாட்டு நிதிச்சேவை மையங்களில் நிதிசார் தயாரிப்புகள், நிதிசார் சேவைகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமாக பன்னாட்டு நிதிச்சேவை மையங்கள் ஆணையம் அமைக்கப்பட்டது.
 • பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள் தளத்தை (ITFS) அமைப்பதற்கும் இயக்குவதற்குமான ஒரு கட்டமைப்பை IFSCA வெளியிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் தங்களது பன்னாட்டு வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு, பல்வேறு வகையான வர்த்தகரீதியான நிதிசார் வசதிகளைப்பெற இது உதவும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஒற்றைச் சாளர இணையம் 2.0

தொழில் புரிவதை எளிதாக்கவும், அரசின் அனுமதிகளை விரைந்து வழங்கிடவும் ஒற்றைச் சாளர இணையதளம் 2.0’ஐ தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில் 24 துறைகளின் 100 சேவைகள்கொண்ட ஒரு மேம்படுத்தப்பட்ட இணையதளமாக இது இருக்கும்.

2. ரூ.40,000 கோடியில் 6 பிரமாண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள்

6 பிரமாண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை ரூ.40,000 கோடிக்கும் அதிகமான செலவில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் ‘பி-75 இந்தியா’ என்ற திட்டத்தின்கீழ் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை சுமார் ரூ.40,000 கோடி செலவில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

மஸகான் டாக் கப்பல்கட்டும் நிறுவனம், லார்சன் & டியூப்ரோ நிறுவனம் ஆகியவற்றுக்கு ஒப்பந்தப்புள்ளியானது வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் வாயிலாக, உள்நாட்டில் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் இரு நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியைப் பெறவுள்ளன. வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் உள்நாட்டிலேயே நீர்மூழ்கிக்கப்பல்கள் கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரஷியா, தென் கொரியா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அந்த 5 நிறுவனங்களில் ஏதாவது ஒன்றுடன் இணைந்து செயல்படுவது குறித்து இந்திய நிறுவனங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

நீர்மூழ்கிக் கப்பல் கட்டுவதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை வெளிநாட்டு நிறுவனங்களே வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் தேவைப்படும் கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களே (MSME) தயாரிக்கும் என்பதால் அத்துறையும் வளர்ச்சிகாணும் என்று அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய திட்டம்: தென்சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்தியக் கடற்படையை வலுப்படுத்தும் நோக்கில் ‘பி-75 இந்தியா’ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படவுள்ள மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும். நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் முன்னணி பெறுவதற்கும் இத்திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை 12 ஆண்டுகளில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டில் தற்போது 15 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றுள் 2 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகும். 24 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

3. அதிவலிவு கொண்ட டைட்டானியம் கலவையை உருவாக்கியது டிஆர்டிஓ

போர் விமானங்கள் உள்ளிட்டவற்றின் கருவிகளைத் தயாரிப்பதற்காக அதிக வலிமை கொண்ட பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பீட்டா டைட்டானியம் உலோகக்கலவையில் வனேடியம், இரும்பு, அலுமினியம் ஆகியவை டைட்டானியத்துடன் கலக்கப்படுகின்றன. இந்த உலோகக் கலவையானது குறைந்த எடையுடையதாக உள்ளது. அதே வேளையில், அதிக வலிமை கொண்டுள்ளதாகவும் கலவை திகழ்கிறது.

டிஆர்டிஓ உருவாக்கியுள்ள இந்த உலோகக் கலவையைப் பயன்படுத்தி, போர்விமானங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படும் கருவிகளைத்தயாரிக்க முடியும். இந்த உலோகக்கலவைமூலம் கருவிகளைத் தயாரிப்பதன் வாயிலாக, போர் விமானங்கள் உள்ளிட்டவற்றின் எடை 40% வரை வெகுவாகக் குறையும். நிக்கல், குரோமியம், மாலிப்டினம் ஆகியவற்றை எஃகுடன் கலந்து தற்போது கருவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

எஃகு மூலமாகத் தயாரிக்கப்படும் கருவிகள் சீக்கிரமாக அரிக்கப்பட்டு விடுகின்றன. பீட்டா டைட்டானியம் உலோகக் கலவை மூலமாகத் தயாரிக்கப்படும் கருவிகளின் அரிப்புத்தன்மை எஃகைவிடக் குறைவாகவே உள்ளது. டைட்டானியம் உலோகக் கலவை வாயிலாகத் தயாரிக்கப்படும் கருவிகள் நீடித்து உழைக்கும் தன்மையையும் பெற்றுள்ளன. தற்போது பல நாடுகள் எஃகுக்கு பதிலாக டைட்டானியம் கலவையைக் கருவிகள் தயாரிக்கப் பயன்படுத்தி வருகின்றன. அக்கலவை வாயிலாகக் கருவிகள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1. Satkosia Tiger Reserve, which was making news recently, is located in which state?

A) West Bengal

B) Odisha

C) Uttarakhand

D) Bihar

 • Paradoxurus hermaphrodites, the common palm civet has been spotted in Odisha after 129 years, in the Satkosia Tiger Reserve (STR). It is also called as the Asian palm civet, found in southern and south–eastern Asia. It is a small mammal belonging to the family Viverridae. Their long body is covered with coarse hair, which is usually grey in colour.

2. Which institution released a report titled ‘Suffering in Silence’, to highlight the plight of Niger during Covid–19?

A) World Bank

B) UNICEF

C) IMF

D) UNHCR

 • UNICEF has recently released a report titled ‘Suffering in Silence’, to highlight the plight of Niger during Covid–19. As per the report, more than 2.1 million children need humanitarian help in the country. In 2021, 3.8 million people will need humanitarian assistance in Niger. In addition to the armed conflict, displacement, floods, diseases and malnutrition, Niger has also been affected by the impacts of Covid–19 recently.

3. Cambridge–1, which was making news recently, is the supercomputer of which country?

A) UK

B) Russia

C) USA

D) Japan

 • The UK’s most powerful supercomputer, named Cambridge–1 is operational now. It is expected to make the process of preventing, diagnosing and treating disease faster and cheaper.
 • It is a $100m investment by US–based computing company Nvidia. Cambridge–1 can integrate different datasets. It collaborates with various pharma companies and start–ups for data.

4. Indian biologists have identified a new plant species named ‘Bryum bharatiensis’, in which continent?

A) Africa

B) Antarctica

C) Asia

D) Europe

 • Indian biologists have identified a species of moss during an expedition to Antarctica in 2017. This has been published in an international journal recently. The biologists, based in the Central University of Punjab, have named the species as Bryum bharatiensis. Bharati is the name of one of India’s Antarctic research stations. The most astonishing fact is how the moss survives in the landscape of rock and ice.

5. GI–certified jasmine flowers, which were making recently, belong to which state?

A) Tamil Nadu

B) Kerala

C) Andhra Pradesh

D) Karnataka

 • Geographical Indications (GI) certified Madurai jasmine and other traditional flowers such as button rose, lily, chamanthi, and marigold were exported to the US and the United Arab Emirates (UAE) from Tamil Nadu.
 • As per the Commerce & Industry Ministry, this export initiative generated employment for 130 women workers. The flowers sourced from places near Madurai are processed in APEDA registered centre.

6. Nihal Sarin, who was seen in the news recently, is associated with sports?

A) Tennis

B) Table Tennis

C) Chess

D) Swimming

 • 16–year–old Indian Grandmaster Nihal Sarin recently became champion in the Masters’ section of the Serbia Open Chess Championship in Belgrade.
 • This is the second consecutive tournament victory for Nihal Sarin after he claimed the title in Silver Lake Open tournament. Sarin became a Grandmaster in 2018 at the age of 14. In this tournament, he won six games and drew three, to remain unbeaten.

7. Bhalia variety of wheat, which is a GI tagged product, belongs to which state?

A) Madhya Pradesh

B) Gujarat

C) Assam

D) Uttarakhand

 • The Bhalia variety of wheat, which has a high protein content and a peculiar sweet in taste was awarded the Geographical Indication (GI) tag in the year 2011. This is grown across the Bhal region of Gujarat. Recently, the Government of India has commenced the exports of Bhalia variety of wheat to Kenya and Sri Lanka from Gujarat.

8. The world’s tallest sandcastle has been built in which country?

A) Denmark

B) Scotland

C) France

D) Norway

 • In the seaside town of Blokhus – Denmark, the world’s tallest sandcastle has been built. The castle is more than 20 metres in height and has been built using nearly 5,000 tonnes of sand. This is 3 metres taller than one built in Germany in 2019, which was previously the tallest sand castle to be built on earth.

9. Where is the National Forensic Science University located in India?

A) Ahmedabad

B) Mumbai

C) Mysuru

D) Chennai

 • National Forensic Science University, erstwhile known as ‘Gujarat Forensic Science University’ is dedicated to forensic and investigative science. The Union Home Minister Amit Shah inaugurated the newly built Center of Excellence for Research & Analysis of Narcotics and Psychotropic Substances of the National Forensic Science University in Ahmedabad. Virtual training on Investigation of Crimes Against Women was also inaugurated.

10. The International Financial Services Centres Authority (IFSCA) issued framework to set up ITFS Platform. What does ITFS stand for?

A) Indian Trade Finance Services

B) International Trade Finance Services

C) Indian Trade Finance Secretariat

D) International Trade Finance Secretariat

 • International Financial Services Centres Authority (IFSCA) was set up to develop and regulate the financial products, financial services and financial institutions in the International Financial Services Centres (IFSCs). IFSCA has issued a framework for setting up and operating International Trade Finance Services Platform (‘ITFS’).
 • This will help the Exporters and Importers to avail various types of trade finance facilities for their international trade transactions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Turnoff the Ad Blocker to view the content