TnpscTnpsc Current Affairs

21st & 22nd October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

21st & 22nd October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 21st & 22nd October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

21st & 22nd October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. அண்மையில் அறிவிக்கப்பட்ட துர்காவதி புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. மேற்கு வங்காளம்

ஆ. மத்திய பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. ஆந்திரப் பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மத்திய பிரதேசம்

  • மத்திய பிரதேச வனவுயிரி வாரியம் துர்காவதி புலிகள் காப்பகம் என அழைக்கப்படும் பன்னா புலிகள் காப்பகத்தின் (PTR) புலிகளுக்கான புதிய காப்பகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. கென்–பெட்வா ஆறுகளை இணைப்பதால் 2,339 சதுர கிமீ பரப்பளவுள்ள இந்தப் புதிய புலிகள் காப்பகத்தின் ¼ பங்கு நீரில் மூழ்கும். துர்காவதியுடன் பன்னா புலிகள் காப்பகத்தை இணைக்கும் பசுமை வழிச்சாலை, புலிகள் அனைத்தும் இந்தப் புதிய காப்பகத்திற்கு இயற்கையாக செலவதற்காக உருவாக்கப்படவுள்ளது.

2. ‘இந்திய நகர்ப்புற வீட்டுவசதி மாநாடு–2022’ நடத்தப்படும் மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. குஜராத்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. குஜராத்

  • குஜராத் மாநிலத்தின் இராஜ்கோட்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள ‘இந்திய நகர்ப்புற வீட்டுவசதி மாநாடு–2022’ என்ற மூன்று நாள் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு தொழில்நுட்பங்களை விளக்கிக் காட்டுவதற்கான ஒரு தளத்தை வழங்கும். அத்துடன் நாட்டின் வெவ்வேறு புவி–காலநிலை பகுதிகளுக்கு ஏற்ற வீட்டு கட்டுமானத்திற்கான பல்வேறு பொருட்கள் மற்றும் செயல்முறைகளை விவாதிக்கும். ‘கலங்கரை விளக்கம்’ திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 1100 வீடுகளையும் பிரதமர் அப்போது அர்ப்பணித்தார்.

3. ‘காலநிலை வெளிப்படைத்தன்மை அறிக்கை – 2022’இன்படி, வெப்பம் தொடர்புடைய தொழிலாளர் திறன் குறைப்பினால் ஏற்பட்ட வருமான இழப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு எது?

அ. இந்தோனேசியா

ஆ. சவூதி அரேபியா

இ. இந்தியா

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இந்தியா

  • ‘காலநிலை வெளிப்படைத்தன்மை அறிக்கை–2022’ G20 நாடுகளிலுள்ள காலநிலை பகுப்பாய்வு அமைப்புகளின் கூட்டாண்மைமூலம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின்படி, இந்தத் துறைகளில் வருமான இழப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் இந்தியா (GDPஇல் 5.4%), இந்தோனேசியா (GDPஇல் 1.6%), மற்றும் சவுதி அரேபியா (GDPஇல் 1%). வெப்பம் தொடர்பான தொழிலாளர் திறன் குறைப்பினால் ஏற்படும் வருவாய் இழப்புகள் சேவைகள், உற்பத்தி, வேளாண்மை மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் மிக அதிகமாக உள்ளது.

4. வெளியுறவு அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, ‘தலைவர்கள் மாநாட்டை’ நடத்தும் நகரம் எது?

அ. சென்னை

ஆ. காந்திநகர்

இ. கேவாடியா

ஈ. மதுரை

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கேவாடியா

  • கேவாடியாவில் நடந்த 10ஆவது தூதரக தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார். வெளியுறவு அமைச்சகத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டது. ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் முன்னிலையில் கேவாடியாவில் மிஷன் லைப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) திட்டத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்தார். குஜராத்தின் அதாலாஜ், திரிமந்திரில் மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆகியவற்றையும் இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்தார்.

5. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட உள்நாட்டு பயிற்சி வானூர்தியான HTT–40’ஐ உருவாக்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. HAL

இ. BEL

ஈ. ISRO

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. HAL

  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் (HAL) வடிவமைத்து உருவாக்கிய உள்நாட்டு பயிற்சி விமானமான HTT–40’ஐ இந்தியப்பிரதமர் நரேந்திர மோதி அறிமுகம் செய்து வைத்தார். இது குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் நடந்த 12ஆம் இராணுவ கண்காட்சியின்போது (DefExpo) இந்திய அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தனியார் தொழிற் துறையின் ஒத்துழைப்புடன் 60 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பொருட்களுன் தயாரிக்கப்பட்டதாகும்.

6. ஷியான்–14 மற்றும் ஷியான்–15 என்ற சோதனை செயற்கைக்கோள்களை ஏவிய நாடு எது?

அ. ஈரான்

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. சீனா

ஈ. வட கொரியா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சீனா

  • சீனா ஷியான்–14 மற்றும் ஷியான்–15 என்ற இரண்டு சோதனை செயற்கைக்கோள்களை அண்மையில் ஏவியது. இந்தச்செயற்கைக்கோள்கள் தமக்கென முன்னமைக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நுழைந்தன. ஷியான்–14 என்கிற செயற்கைக்கோள் அறிவியல்பூர்வ பரிசோதனைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைச் சரிபார்ப்பதற்கென பயன்படுத்தப்படும். அதே வேளையில் ஷியான்–15 என்கிற செயற்கைக்கோள் நில அளவீடு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு ஆகிய துறைகளில் தரவுகளை வழங்கும்.

7. அண்மையில் ஓய்வுறுவதாக அறிவித்த ஜூலன் கோஸ்வாமி சார்ந்த விளையாட்டு எது?

அ. டென்னிஸ்

ஆ. மட்டைப்பந்து

இ. பூப்பந்து

ஈ. சுவர்ப்பந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மட்டைப்பந்து

  • லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். ஜூலன் கோஸ்வாமி இந்திய பெண்கள் அணிக்காக 12 டெஸ்ட், 204 ஒருநாள் மற்றும் 68 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 255 ODI விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2007ஆம் ஆண்டில், ஜூலன் கோஸ்வாமி, ICCஇன் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஆனார். அவர், 2010இல் மதிப்புமிக்க, ‘அர்ஜுனா விருதைப்’ பெற்றார்.

8. உச்சநீதிமன்றத்தின் கூற்றுப்படி, அதன் வழக்குகளின் நேரடி ஒளிபரப்பு, எந்தத் தளத்தில் கிடைக்கப்பெறும்?

அ. வலையொளி

ஆ. தேசிய தகவலியல் மையம் (NIC)

இ. மைகௌ

ஈ. திறந்தநிலை அரசாங்க தரவு (OGD)

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. தேசிய தகவலியல் மையம் (NIC)

  • வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக NIC தளத்தினூடாக 3 தனித்தனி அரசியல் சாசன அமர்வுகளை நேரலையில் ஒளிபரப்புவதற்காக உச்சநீதிமன்றம் முடிவுசெய்துள்ளது. எதிர்காலத்தில் மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தைப்போலவே உச்சநீதிமன்றமும் தனக்கென தனி OTTஐப் பெறுவதற்கான செயல்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவு (EWS) ஒதுக்கீடு வழக்கு, சிவசேனா வழக்கில் விரிசல் மற்றும் அகில இந்திய பார் தேர்வின் செல்லுபடி வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகள் நேரலையாகவுள்ளன.

9. 2022 முதல் நடைமுறைக்கு வரும் அயல்நாட்டு வர்த்தகக் கொள்கையின் காலவரையறை என்ன?

அ. 2014–2019

ஆ. 2015–2020

இ. 2016–2021

ஈ. 2016–2022

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 2015–2020

  • அயல்நாட்டு வர்த்தகக்கொள்கை (2015–20) அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்றுமதி ஊக்குவிப்பு அவை மற்றும் முன்னணி ஏற்றுமதியாளர்கள் யாவரும் தற்போதிருக்கும் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையையே தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2015–20 வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை 2022 செப்.30 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க நடுவணரசு முடிவுசெய்துள்ளது; இது 2022 அக்டோபர்.01 முதல் நடைமுறைக்கு வரும்.

10. 2022 – உலக ஆறுகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. The importance of Rivers to Biodiversity

ஆ. The importance of Rivers to Sustainability

இ. The importance of Rivers to Universe

ஈ. The importance of Rivers to Climate Change

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. The importance of Rivers to Biodiversity

  • நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தவுமாக உலக ஆறுகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் நான்காவது ஞாயிற்றுக்கிழமையில் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 2022 செப்டம்பர்.25 அன்று இந்த நாள் வந்தது. இந்த ஆண்டு உலக ஆறுகள் நாளின் கருப்பொருள், “The importance of Rivers to Biodiversity” என்பதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ள கைப்பேசி செயலி அறிமுகம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தெரிந்துகொள்ள கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது குடிமராமத்துப்பணிகள் நடைபெறுவதால், பல்வேறு சாலைகள் குறுகலாகியுள்ளன. சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுக்க, தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை போக்குவரத்துக் காவல்துறை, ‘RoadEase (சாலை எளிமை)’ என்ற கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளனர்.

2. பாதுகாப்புத்துறையில் 5 பில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு இலக்கு: இராஜ்நாத் சிங்

வரும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்திய பாதுகாப்புத்துறையில் 5 பில்லியன் டாலர்கள் (`41,366 கோடி) மதிப்பிலான ஏற்றுமதியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

3. நாளை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எம்-3!

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களுடன் GSLV M-3 கனரக இராக்கெட்டை வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.23) விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) திட்டமிட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படவுள்ள இந்தத்திட்டமானது ISROஇன் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.

GSLV மார்க்-3 இராக்கெட் 43.5 மீ உயரமும், 640 டன் எடையும் கொண்டது. அதனை வடிவமைக்கும் பணிகளும், செயற்கைக்கோள்களை நிறுவும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்படும் என்று ISRO தெரிவித்துள்ளது. உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ‘ஒன் வெப்’ நிறுவனமானது அரசு, வர்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத்தொடர்பு சேவைக்காக இந்தச் செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. இந்தியாவின் பார்தி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமானது ‘ஒன் வெப்’ நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

4. ‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, நடுத்தர தொலைவு இலக்குகளைத் தாக்கவல்ல, ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஒடிஸாவின் பாலசோர் பகுதியில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்டு இந்த ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. திட எரிபொருளைக்கொண்டு முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அந்த ஏவுகணை வெற்றிகரமாகச் செயல்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (DRDO) தயாரித்த அந்த நவீன தலைமுறை ஏவுகணையானது, நடுத்தர தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கியழிக்கும் வல்லமைகொண்டது.

5. CMDA எல்லை ஐந்து மடங்காக அதிகரிப்பு: அரசாணை வெளியீடு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) எல்லை ஐந்து மடங்காக விரிவடைந்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன்படி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை 1189 சதுர கிலோ மீட்டரிலிருந்து 1221 கிராமங்களை புதிதாக இணைத்து 5,904 சதுர கிலோமீட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் நிர்வாக எல்லை சென்னை மாவட்டம் தவிர்த்து அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி 1189 சதுர கிலோமீட்டர் அளவுக்கு தற்போது அமைந்துள்ளது.

6. இத்தாலியின் பிரதமரானார் ஜியார்ஜியா

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தீவிர வலதுசாரிக் கொள்கையைக்கொண்ட ஜியார்ஜியா மெலோனி பதவி ஏற்றார். அவரது தலைமையில் அமையவிருக்கும் அரசுதான், இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய இத்தாலியின் முதல் தீவிர வலதுசாரி அரசு என்பது குறிப்பிடத்தக்கது. கொடுங்கோன்மையர் முசோலினியின் தேசிய பாசிச கட்சியின் வழித்தோன்றலான சுதந்திர மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து உருவானதுதான் ஜியார்ஜியா மெலோனி தலைமையிலான இத்தாலியின் சகோதரர்கள் கட்சியாகும். அவ்வகையில், பாசிசத்துடன் தொடர்புடைய ஜியர்ஜியோ இத்தாலியின் பிரதமராகியிருப்பது ஐரோப்பிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

21st & 22nd October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Durgavati Tiger Reserve, which was notified recently, is located in which state/UT?

A. West Bengal

B. Madhya Pradesh

C. Maharashtra

D. Andhra Pradesh

Answer & Explanation

Answer: B. Madhya Pradesh

  • Madhya Pradesh Wildlife Board approved a new reserve for tigers of Panna Tiger Reserve (PTR), which is to be called Durgavati Tiger Reserve. One–fourth of the 2,339 square kilometres new tiger reserve will get submerged due to the linking of the Ken–Betwa Rivers. A green corridor linking PTR with Durgavati will be developed for the natural movement of the tiger to the new reserve.

2. Which state is the host of the ‘Indian Urban Housing Conclave–2022’?

A. Tamil Nadu

B. Maharashtra

C. Gujarat

D. Karnataka

Answer & Explanation

Answer: C. Gujarat

  • Prime Minister Narendra Modi inaugurated the ‘Indian Urban Housing Conclave–2022’ a three–day event being organised by Ministry of Housing and Urban Affairs (MoHUA) at Rajkot, Gujarat. The Conclave will provide a platform to demonstrate technologies as well as discuss various materials and processes for housing construction suitable for different Geo–climatic regions of the country. The Prime Minister also dedicated 1100 houses constructed under Light House Project.

3. As per the ‘Climate Transparency Report 2022’, which country was the most affected by income losses from heat–related labour capacity reduction?

A. Indonesia

B. Saudi Arabia

C. India

D. UAE

Answer & Explanation

Answer: C. India

  • The ‘Climate Transparency Report 2022’ was released by a partnership of climate analysis organisations in G20 countries. As per the report, countries most affected by income losses in these sectors were India (5.4% of GDP), Indonesia (1.6% of GDP), and Saudi Arabia (1% of GDP). Losses to earnings from heat–related labour capacity reduction were the highest in services, manufacturing, agriculture, and construction.

4. Which city is the host of the ‘Heads of Missions Conference’ organized by the Ministry of External Affairs?

A. Chennai

B. Gandhinagar

C. Kevadiya

D. Madurai

Answer & Explanation

Answer: C. Kevadiya

  • Prime Minister Narendra Modi participated in the 10th Heads of Missions Conference at Kevadia. It is being organized by the Ministry of External Affairs. The Prime Minister launched Mission LiFE (Lifestyle for the Environment) in Kevadiya in the presence of UN Secretary–General, Antonio Guterres. The Prime Minister also launched Mission Schools of Excellence at Trimandir, Adalaj, Gujarat.

5. Which organisation developed the indigenous trainer aircraft HTT–40, which was recently unveiled?

A. DRDO

B. HAL

C. BEL

D. ISRO

Answer & Explanation

Answer: B. HAL

  • Prime Minister Narendra Modi unveiled HTT–40, an indigenous trainer aircraft designed and developed by Hindustan Aeronautics Limited (HAL). It was launched at the India Pavilion during 12th DefExpo in Gandhinagar, Gujarat. It comprises of over 60 per cent in–house parts with collaboration of private industry.

6. Which country launched experimental satellites named Shiyan–14 and Shiyan–15?

A. Iran

B. UAE

C. China

D. North Korea

Answer & Explanation

Answer: C. China

  • China launched two experimental satellites named Shiyan–14 and Shiyan–15. The pair of satellites entered the preset orbit. The Shiyan–14 will be used to conduct scientific experiments and verify new technologies, while the Shiyan–15 will provide data in the fields of land survey, urban planning, and disaster prevention and mitigation.

7. Jhulan Goswami, who announced her retirement recently, plays which sports?

A. Tennis

B. Cricket

C. Badminton

D. Squash

Answer & Explanation

Answer: B. Cricket

  • India’s ace female cricketer Jhulan Goswami announced her retirement recently, as she played her final international match against England at Lord’s. Jhulan played 12 Tests, 204 ODIs and 68 T20Is for the Indian women’s team. She has clinched 255 ODI wickets, the most by a women’s cricketer in the format. In 2007, Jhulan Goswami became the first female Indian cricketer to be named the ICC Women’s Cricketer of the Year. She received the prestigious Arjuna Award in 2010.

8. As per the Supreme Court, the live streaming of constitutional bench cases will begin from which platform?

A. Youtube

B. National Informatics Centre (NIC)

C. MyGov

D. Open Government Data (OGD)

Answer & Explanation

Answer: B. National Informatics Centre (NIC)

  • The Supreme Court is set to begin live streaming of three separate constitutional benches from the NIC platform to promote transparency. Supreme Court is also said to be in the process of having its separate OTT in future, on the lines of the Madhya Pradesh High Court.  The three constitution bench cases, including the Economically Weaker Section (EWS) quota case, the rift in Shiv Sena case and the case related to validity of All India Bar Examination.

9. What is the tenure of the Foreign Trade Policy, which is effective as of 2022?

A. 2014–2019

B. 2015–2020

C. 2016–2021

D. 2016–2022

Answer & Explanation

Answer: B. 2015–2020

  • The Foreign Trade Policy (2015–20) has been extended from time to time. Export Promotion Councils and leading exporters have been demanding tocontinue with current Foreign Trade Policy. The Central Government has decided to extend the Foreign Trade Policy 2015–20, valid till Sept 30, 2022 for a further period of six months, with effect from October 1, 2022.

10. What is the theme of ‘World Rivers Day 2022’?

A. The importance of Rivers to Biodiversity

B. The importance of Rivers to Sustainability

C. The importance of Rivers to Universe

D. The importance of Rivers to Climate Change

Answer & Explanation

Answer: A. The importance of Rivers to Biodiversity

  • World River Day is observed to raise awareness regarding water bodies and to promote their conservation. It is observed every year on the fourth Sunday of September, and this year, it falls on September 25. The theme for this year’s World Rivers Day is ‘The importance of Rivers to Biodiversity’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!