21st June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

21st June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

21st June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ஐநா அவையின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல்லா ஷாஹித் சார்ந்த நாடு எது?

அ) மாலத்தீவுகள்

ஆ) ஈரான்

இ) பாகிஸ்தான்

ஈ) சௌதி அரேபியா

 • தற்போது மாலத்தீவுகளின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் அப்துல்லா ஷாஹித், ஐக்கிய நாடுகள் அவையின் அடுத்த தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐநா’இன் தலைமைப்பொறுப்பை மாலத்தீவுகள் கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும். ஐநா’இன் 76ஆவது அமர்வு (2021-22), ஆசிய-பசிபிக் குழுமத்தின் முறையாகும்.

2. A. cooperensis என்பது அண்மையில் எந்த நாடு / பிராந்தியத்தின் மிகப்பெரிய தொன்மாவாக அடையாளங்காணப்பட்டுள்ளது?

அ) ரஷ்யா

ஆ) ஆஸ்திரேலியா

இ) ஆப்பிரிக்கா

ஈ) அண்டார்டிகா

 • ஆசுதிரேலியாவின் மிகப்பெரிய தொன்மாவாக Australotitan cooperensis அடையாளங்காணப்பட்டுள்ளது. அண்மையில் அதன் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த டைட்டனோசர் குடும்பத்தின் ஒருபகுதியாகும். இது 5-6.5 மீ., உயரமும் 25-30 மீட்டர் நீளமும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மூட்டளவு ஒப்பீடுகளின் அடிப்படையில், இப்புதிய டைட்டனோசர், உலகின் முதல் 5 இடங்களுள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

3. ‘சுரக்ஷித் ஹம் சுரக்ஷித் தும் அபியான்’ என்பது எந்நிறுவனத்தின் முன்னெடுப்பாகும்?

அ) AIIMS

ஆ) NITI ஆயோக்

இ) ICMR

ஈ) IMA

 • அறிகுறியற்ற மற்றும் மிதமான COVID-19 பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, வீட்டுக்குச்சென்று பராமரிப்பு உதவிகளை அளிப்பதில் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவ, ‘சுரக்ஷித் ஹம் சுரக்ஷித் தும் அபியான்’ (எங்களுக்கும் பாதுகாப்பு, உங்களுக்கும் பாதுகாப்பு) என்ற திட்டத்தை 112 இலக்கு மாவட்டங்களில் NITI ஆயோக்கும் பிரமல் அறக்கட்டளையும் தொடங்கின.

4. சர்வதேச கோல் எண்ணிக்கைகளில் லியோனல் மெஸ்ஸியை விஞ்சிய இந்திய கால்பந்து வீரர் யார்?

அ) குர்பிரீத் சிங் சந்து

ஆ) சுனில் சேத்ரி

இ) முகமது யாசிர்

ஈ) அம்ரிந்தர் சிங்

 • இந்திய கால்பந்து வீரரான சுனில் சேத்ரி சர்வதேச கோல் எண்ணிக்கைகளில் லியோனல் மெஸ்ஸியை விஞ்சியுள்ளார். அண்மையில் தோகாவில், வங்கதேசத்தை எதிர்த்து இந்தியா பெற்ற 2-0 என்ற கோல் கணக்கில், இருகோல்களையும் அவரே அடித்தார். 2022 FIFA உலகக் கோப்பை மற்றும் 2023 AFC ஆசிய கோப்பைக்கான தகுதிப்போட்டியில் அடித்த கோல்களின்மூலம் மெஸ்ஸியின் 72 கோல் எண்ணிக்கையை சேத்ரி கடந்தார். சர்வதேச பட்டியலில், போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 103 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

5. இந்தியாவின் முதல் CAR-T செல் சிகிச்சையானது அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. கீழ்காணும் எந்த நோயில் இச்சிகிச்சைமுறை பயன்படுத்தப்படுகிறது?

அ) காசநோய்

ஆ) புற்றுநோய்

இ) COVID

ஈ) AIDS

 • மும்பையில் உள்ள TATA நினைவு மருத்துவ மனை, மும்பை IIT குழு ஆகியவை இணைந்து புற்றுநோய்க்கான முதல் CAR-T செல் சிகிச்சையை, எலும்பு மஜ்ஜை மாற்று மையத்தில் மேற்கொண்டன. இதற்கு உயிரித்தொழில்நுட்பத்துறை ஆதரவு தெரிவித்துள்ளது.
 • இந்தக்குழுவினர் தங்கள் ஆய்வு திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்டப்பரிசோதனைகளை மனிதர்களிடம் மேற்கொள்ள, உயிரித்தொழில் நுட்பத்துறை மற்றும் பிராக் ஆகியவை தேசிய பயோபார்மா திட்டம் மூலம் `19.15 கோடி நிதியுதவி அளிக்கின்றன. இந்த மரபணு சிகிச்சை இந்தியாவில் முதல்முறையாக மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற வட அட்லாண்டிக் வல திமிங்கலம், IUCN செம்பட்டியலில், எவ்வகையின்கீழ் வைக்கப்பட்டுள்ளது?

அ) அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்

ஆ) அருகிவிட்ட இனம்

இ) மிகவும் அருகிவிட்ட இனம்

ஈ) இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்

 • ஓர் அண்மைய ஆய்வின்படி, வட அட்லாண்டிக் வல திமிங்கலங்களின் இளந்தலைமுறைகள், இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த திமிங்கலங்களைவிட 3 அடி நீளங்குறைவாக உள்ளன. மீன்பிடி கருவி உடனான சிக்கல்கள், கப்பல்களுடனான மோதல்கள் மற்றும் அவற்றின் உணவுப் பரவலை வடக்கே நகர்த்தும் காலநிலைமாற்றம் ஆகியவை இந்நிகழ்வுக்கு காரணங்கள் என்று கூறப்படுகிறது. இவ்வகை திமிங்கலங்களை IUCN, ‘மிகவும் அருகிவிட்ட இனம்’ என வகைப்படுத்தியுள்ளது.

7. எந்த ஆற்றின்மீது, ஜங்கி தோபன் பொவாரி நீர்மின்சார திட்டத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது?

அ) கங்கை

ஆ) சட்லெஜ்

இ) சிந்து

ஈ) யமுனா

 • திட்டமிடப்பட்டுள்ள 804 MW ஜங்கி தோபன் பொவாரி நீர்மின்சாரத் திட்டத்திற்கு ஹிமாச்சலப் பிரதேச மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது, சட்லெஜ் ஆற்றின்மீது நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ஆற்றின் போக்கிலான இத்திட்டத்தில், சட்லெஜ் ஆற்றின் குறுக்கே ஒரு திண்காறை ஈர்ப்பணை & கரையையொட்டி நிலத்தடி மின்நிலையம் அமைத்தல் ஆகியவை அடங்கும்.

8. சமீப செய்திகளில் இடம்பெற்ற எகோ டம்பிங் மலை அமைந்துள்ள மாநிலம் எது?

அ) உத்தரகண்ட்

ஆ) சிக்கிம்

இ) அருணாச்சல பிரதேசம்

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

 • சமீபத்தில், வனவுயிரி ஆர்வலர்கள் குழு ஒன்று கடல் மட்டத்திலிருந்து 4,173 மீ உயரத்தில், எகோ டம்பிங் மலையில், இரண்டு வகையான மோனல் பறவைகளைக்கண்டது. அது அருணாசல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. இமயமலை மோனல் (Lophophorus impejanus) ஆப்கா -னிஸ்தான் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. கொண்டையற்ற (Lophophorus sclateri) மோனல்கள் சீனா மற்றும் மியான்மரில் பரவலாக காணப்படுகிறன.

9. நெல், எள், துவரை மற்றும் உளுந்து ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அண்மையில் உயர்த்தப்பட்டன. இவை _____ வகை பயிர்கள்.

அ) ரபி

ஆ) காரீப்

இ) சயீத்

ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை

 • 2021-22ஆம் ஆண்டில் காரீப் சந்தை பருவத்தின் அனைத்து பயிர்களு -க்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பொருளாதார விவகா -ரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.
 • அதிகபட்ச உயர்வாக, எள்ளுக்கு கடந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குவின்டால் ஒன்றுக்கு `452 அதிகரிக்க பரிந்துரைக்கப் -பட்டுள்ளது. துவரை மற்றும் உளுந்துக்கு `300 அதிகரிக்க பரிந்துரைக் -கப்பட்டுள்ளது. நிலக்கடலைக்கு குவின்டாலுக்கு `275 அதிகரிக்க பரிந் -துரைக்கப்பட்டுள்ளது. நெல் பொதுவான ரகத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவின்டாலுக்கு `1868’லிருந்து `1940 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் இரக நெல்லின் விலை `1960 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

10. QS உலக தரவரிசை 2022’இன் படி, உலகின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனம் எது?

அ) IIT சென்னை

ஆ) IIT மும்பை

இ) IIT பெங்களூரு

ஈ) IISc, பெங்களூரு

 • பல்கலைக்கழக தரவரிசைகளின் வருடாந்திர வெளியீடான குவாக்கரெ -ல்லி சைமண்ட்ஸ் (QS) உலக தரவரிசை 2022 ஆனது அண்மையில் வெளியிடப்பட்டது. இவ்வெளியீட்டின்படி, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), “உலகின் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக” இடம் பெற்றுள்ளது. இந்நிறுவனம், ‘ஒருவர் சமர்ப்பித்துள்ள ஆய்வுக்கட்டுரை’ என்ற மதிப்பீட்டின்கீழ் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளது.

செய்தித்தாள் நடப்புநிகழ்வுகள்

1. ஜூன்.21 – பன்னாட்டு யோகா நாள்

கருப்பொருள்: யோகாவுடன் இணைந்திருங்கள், வீட்டிலேயே இருங்கள்

2. தமிழகத்தில் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையம் திறப்பு

பொதுமக்கள் மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட ‘மின்னகம்’ என்ற புதிய மின்நுகர்வோர் சேவை மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

1. Abdulla Shahid, who has been elected as the next president of the United Nations General Assembly, belongs to which country?

A) Maldives

B) Iran

C) Pakistan

D) Saudi Arabia

 • Abdulla Shahid, who is currently the Foreign Minister of Maldives, has been elected as the next president of the United Nations General Assembly. This is the first time the Maldives is to occupy the office of the President of the UNGA. The 76th UNGA session (2021–22) was the turn of the Asia–Pacific group.

2. A. cooperensis has been identified recently, as the biggest dinosaur of which country/ region?

A) Russia

B) Australia

C) Africa

D) Antarctica

 • The Australotitan cooperensis has been recently identified as the biggest dinosaur of Australia. This was announced after its bones were first uncovered. This is a part of the titanosaur family that lived about 100 million years ago. It is estimated to had a height of 5–6.5 metres and a length of 25–30 metres. Based on the limb size comparisons, this new titanosaur is estimated to be in the top five largest in the world.

3. ‘Surakshit Hum Surakshit Tum Abhiyaan’ is an initiative of which institution?

A) AIIMS

B) NITI Aayog

C) ICMR

D) IMA

 • NITI Aayog launched the Surakshit Hum Surakshit Tum Abhiyaan, in association with Piramal Foundation. The campaign is part of a special initiative– Aspirational Districts Collaborative. It aims to provide home–care support to asymptomatic or mildly symptomatic Covid–19 patients in 112 aspirational districts.

4. Which Indian footballer has surpassed Lionel Messi in international goals?

A) Gurpreet Singh Sandhu

B) Sunil Chhetri

C) Mohammad Yasir

D) Amrinder Singh

 • Indian football star Sunil Chhetri has surpassed Lionel Messi in international goals taking his total to 74 goals for India. He has recently scored both goals in India’s 2–0 win over Bangladesh at Doha. Chhetri moved past Messi’s 72 goals, in a qualifying match for the 2022 FIFA World Cup and 2023 AFC Asian Cup. Portugal player Cristiano Ronaldo tops the international list with 103 goals.

5. India’s first CAR–T cell therapy, which was done recently, is used in treatment of which ailment?

A) Tuberculosis

B) Cancer

C) COVID

D) AIDS

 • The Centre has approved Rs 19.15 crore for conducting a first–in–human phase–1/2 clinical trial of the CAR–T cells. India’s first CAR–T cell therapy was done at the Bone Marrow Transplant unit at ACTREC, Tata Memorial Centre, Mumbai. The Chimeric Antigen Receptor T–cell (CAR–T) therapy is a type of gene therapy, used in cancer treatment, especially in patients suffering from acute lymphocytic leukemia.

6. What is the IUCN Red List Category of the North Atlantic right whale, which was making news recently?

A) Vulnerable

B) Endangered

C) Critically Endangered

D) Extinct in the Wild

 • As per a recent study, the younger generation of North Atlantic right whales are about three feet shorter than whales were 20 years ago. Entanglements with fishing gear, collisions with ships and climate change moving their food supply north are said to be the reasons for this phenomenon. The whales are being classified as ‘Critically endangered’ by IUCN.

7. Jangi Thopan Powari hydroelectricity project (JTP HEP) is the proposed project over which river?

A) Ganges

B) Sutlej

C) Indus

D) Yamuna

 • Residents of Himachal Pradesh have been protesting against the proposed 804 MW Jangi Thopan Powari hydroelectricity project (JTP HEP). This is a proposed project over the Sutlej River. The run–of–the–river (ROR) project involves construction of a concrete gravity dam across river Sutlej and underground powerhouse on the right bank.

8. Which of the following schemes is a food security scheme, launched by the Union Government as a part of the Atmanirbhar Bharat Package?

A) Uttarakhand

B) Sikkim

C) Arunachal Pradesh

D) Himachal Pradesh

 • Recently, a team of wildlife enthusiasts have sighted two species of monal birds on Mount Eko Dumbing at 4,173 metres above mean sea level. It is located in the state of Arunachal Pradesh. Himalayan monal (Lophophorus impejanus) is widely distributed from Afghanistan to northeast India, the Sclater’s (Lophophorus sclateri) monal is found in China and Myanmar.

9. The minimum support prices (MSP) of paddy, sesame, tur and urad were hiked recently. These are ……… crops.

A) Rabi

B) Kharif

C) Zaid

D) None of the above

 • The Union Cabinet has approved an increase in minimum support prices (MSP) for various kharif crops or the summer–sown crops for marketing season 2021–22. MSP of paddy was hiked by ₹72 to ₹1,940 per quintal for 2021–22 crop year from ₹1,868 per quintal last year.
 • The highest absolute increase in MSP over the previous year is recommended for sesame (₹452 per quintal) followed by tur and urad (₹300 per quintal each).

10. As per the QS World Rankings 2022, which Indian institution is ranked as the world’s top research university?

A) IIT Chennai

B) IIT Mumbai

C) IIT Bengaluru

D) IISc, Bengaluru

 • The Quacquarelli Symonds (QS) World Rankings 2022, which is an annual publication of university rankings has been recently published.
 • As per the release, the Indian Institute of Science (IISc), Bengaluru has secured the position of the “world’s top research university”. This institution has achieved a score of 100/100 under the metric Citations Per Faculty (CPF) assessment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *