TnpscTnpsc Current Affairs

21st October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

21st October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 21st October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை கண்காணிப்பதற்காக, உயிரி தொழினுட்ப துறையால் தொடங்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் பெயரென்ன?

அ) பாரத் ஹெல்த்

ஆ) ஒன் ஹெல்த் 

இ) COVID வாரியர்

ஈ) ஹெல்த் ஹீரோஸ்

 • தொற்றுநோய்களை எதிர்கொள்வதில் ஒரே மாதிரியான சுகாதார முயற்சிகளின் முக்கியத்துவத்தை COVID பெருந்தொற்று வலியுறுத்தியது.
 • இவ்வவசரத்தேவையை கருத்தில்கொண்டு, COVID-19’க்கும் பின்பான நாட்டின் முதல் ‘ஒன் ஹெல்த்’ கூட்டமைப்பை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் முக்கிய பாக்டீரியா, வைரஸ் மற்றும் இதர தொற்றுகளை கண்காணித்து, அவற்றின் போக்கை புரிந்துகொண்டு, அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதே இந்தக் கூட்டமைப்பின் நோக்கமாகும்.
 • ஹைதரபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை – விலங்குகள் உயிரி தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் தலைமையிலான இந்தக் கூட்டமைப்பில் 27 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

2. சமீப செய்திகளில் இடம்பெற்ற தவாங் கந்தன் நம்க்யல் லாட்ஸே (தவாங் மடாலயம்) அமைந்துள்ள நாடு எது?

அ) இந்தியா 

ஆ) நேபாளம்

இ) தாய்லாந்து

ஈ) தென் கொரியா

 • திபெத்திய பௌத்தத்தின் இரண்டாவது பெரிய மடமான தவாங் கந்தன் நம்க்யல் லாட்சே (தவாங் மடாலயம்) ஆனது அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. துணைக் குடியரசுத்தலைவர் M வெங்கையா, சமீபத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றதற் -கு சீனாவின் ஆட்சேபனையை இந்தியா கடுமையாக நிராகரித்தது.
 • அருணாச்சல பிரதேசத்திற்கு இந்தியத்தலைவர்கள் வருகைதருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அது தெற்கு திபெத்தின் ஒருபகுதி ஆகும். தவாங், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்திற்கு ஓர் உத்தி சார் நுழைவை வழங்குகிறது. திபெத்துக்கும் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கி -ற்கும் இடையிலான வழித்தடத்தில் இது ஒரு முக்கியப்புள்ளியாகும்.

3. பின்வரும் எந்த ஆயுதப்படைக்கு, குடியரசுத்தலைவரின் தத்ரக்ஷக் பதக்கம் வழங்கப்படுகிறது?

அ) கடலோர காவல்படை 

ஆ) எல்லைப் பாதுகாப்பு படை

இ) இந்திய கடற்படை

ஈ) மத்திய சேமக்காவல் படை

 • இந்திய கடலோர காவல்படையின் வீரர்களுக்கு குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த், குடியரசுத்தலைவரின் தத்ரக்ஷக் பதக்கம் மற்றும் தத்ராக்ஷக் பதக்கத்தை வழங்கினார். 1990 ஜனவரி 26 முதல் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு நாள் மற்றும் சுதந்திர நாளன்று இந்திய கடலோர காவல்படை வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

4. “தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய பங்களிப்புக்கான லோகப்ரியா கோபிநாத் போர்டோலோய் விருது”, எந்த மாநிலத்தால் வழங்கப்படுகிறது?

அ) தமிழ்நாடு

ஆ) மகாராஷ்டிரா

இ) ஒடிஸா

ஈ) அஸ்ஸாம் 

 • ‘லோகப்ரியா கோபிநாத் போர்டோலோய் விருது’ என்பது தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய பங்களிப்புக்காக அசாம் மாநில அரசால் வழங்கப்படும் மிகவுயரிய குடிமக்கள் விருது ஆகும்.
 • விடுதலைப்போராளியான கோபிநாத் போர்டோலோய், சுதந்திரத்திற்குப் பிறகு அஸ்ஸாமின் முதல் முதலமைச்சராக இருந்தார். இந்த விருது `5 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விருதை துணைக்குடியரசுத்தலைவர் M வெங்கையா வழங்கினார்.

5. அபி அகமது, எந்த நாட்டின் பிரதமராக பதவியேற்றார்?

அ) இஸ்ரேல்

ஆ) ஈரான்

இ) எத்தியோப்பியா 

ஈ) வெனிசுலா

 • அபி அகமது, மீண்டும் எத்தியோப்பியாவின் பிரதமராக பதவியேற்றார். டிக்ரேயின் வடக்கு பகுதியில் நிகழ்ந்து வரும் நீண்ட மோதல்கள் உட்பட நிறைய சவால்களை அவ்வரசாங்கம் எதிர்கொள்கிறது. அபி அகமதின் பிராஸ்பர்டி கட்சி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அண்டை நாடான எரித்ரியாவுடனான உறவை மீட்டெடுத்ததற்காக, 2019ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அபி அகமதுக்கு வழங்கப்பட்டது.

6. 40ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தவுள்ள நகரம் எது?

அ) மும்பை

ஆ) புது தில்லி 

இ) வாரணாசி

ஈ) அகமதாபாத்

 • இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பானது (ITPO) நவம்பர் 14 முதல் 27 வரை புது தில்லி பிரகதி மைதானத்தில் 40ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தவுள்ளது. பொருளாதாரம், ஏற்றுமதி திறன், உட்கட்டமைப்பு விநியோகச் சங்கிலி, தேவை மற்றும் துடிப்பான மக்கள் தொகை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்ற கருப்பொருளின்கீழ் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
 • இந்த நிகழ்வு “ஆசாதிகா அம்ருத் மகோத்சவின்” ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. உலக வாழ்விட நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?

அ) அக்டோபர் முதல் திங்கள் 

ஆ) அக்டோபர் முதல் ஞாயிறு

இ) செப்டம்பர் கடைசி ஞாயிறு

ஈ) செப்டம்பர் கடைசி சனிக்கிழமை

 • ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை, ஐநா அவையால், “உலக வாழ்விட நாள்” என அனுசரிக்கப்படுகிறது.
 • அனைவருக்கும் போதுமான தங்குமிடத்தை வலியுறுத்தி இந்நாள் அனு -சரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, அக்டோபர்.4 அன்று அனுசரிக்கப்பட்டது. “Accelerating urban action for a carbon-free world” என்பது இந்த ஆண்டு (2021) உலக வாழ்விட நாளுக்கானக் கருப்பொருளாகும்.

8. ‘அஜெயா வாரியர்’ என்ற பாதுகாப்புப் பயிற்சி, இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப்படுகிறது?

அ) இங்கிலாந்து 

ஆ) பிரான்ஸ்

இ) இலங்கை

ஈ) வங்காளதேசம்

 • இந்தியாவும் பிரிட்டனும் உத்தரகண்டின் சௌபாத்தியாவில் 2 வாரகால இராணுவப் பயிற்சியான ‘அஜெயா வாரியரை’ தொடங்கின. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப் -படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்திய இராணுவத்தின் கூற்றுப்படி, ‘அஜெயா வாரியர்’ பயிற்சியின் இப்பதிப்பானது, இயங்குதிறன் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

9. புவிசார் குறியீடு (GI) பெற்றுள்ள கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மரச்சிற்ப வேலைப்பாடுகள் சார்ந்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) ஹரியானா

 • தமிழ்நாட்டைச்சார்ந்த கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் & கள்ளக்குறிச்சி மரச்சிற்ப வேலைப்பாடுகட்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. குறிப்பிட்ட புவிசார் தோற்றங்கொண்ட தயாரிப்பு -களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அது அந்தத் தயாரிப்புக்கு முக்கியத்துவத்தை சேர்க்கிறது. இது பொருட்களுக்கான புவிசார் குறியீ -டுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

10. மரணதண்டனைக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) அக்டோபர்.8

ஆ) அக்டோபர்.10 

இ) அக்டோபர்.12

ஈ) அக்டோபர்.14

 • அக்.10 அன்று மரணதண்டனைக்கு எதிரான உலக நாள் அனுசரிக்கப்ப -டுகிறது. இந்த ஆண்டு (2021) உலகெங்கிலுமுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் இதன் கருப்பொருள் கவனஞ்செலுத்துகிறது. பன்னாட்டு மன்னிப்பு அவையின் 2020-மரணதண்டனை அறிக்கையின்படி, உலகின் 2/3 பங்கு நாடுகள், சட்டம் அல்லது நடைமுறையின்மூலம் மரணதண்டனையை ரத்துசெய்துள்ளன. 108’க்கும் மேற்பட்ட நாடுகள் அனைத்து விதமான குற்றங்களுக்கும் மரணதண்டனையை முற்றிலும் இரத்துசெய்துள்ளன. இவ்வறிக்கையின்படி, குறைந்தது கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 483 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. முதல்கட்டமாக 6,429 கிராமப் பஞ்சாயத்துகளில் – பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது

பாரத்நெட் திட்டத்தை முதல்கட்டமாக 6,429 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக அலைக் கற்றைமூலம் இணைய சேவை வழங்க பாரத்நெட் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில் 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையச்சேவை வழங்க `1815.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அதன்படி, தகவல் தொழில்நுட்பத்துறையின் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (பைபர்நெட் கழகம்) பாரத்நெட் திட்டத் -தைச் செயல்படுத்துவதற்காக A, B, C, D என்ற நான்கு தொகுப்புகளாக மாநிலத்தைப் பிரித்துள்ளது.

இந்நிலையில், C தொகுப்பில் உள்ள நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3,326 கிராம பஞ்சாயத்துகளும் D தொகுப்பில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள 3,103 கிராம பஞ்சாயத்துகளுக்கும் பாரத்நெட் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக L&T, ஐடிஐ, பிஇசிஐஎல் ஆகிய நிறுவனங்களுடன் பைபர்நெட் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

2. குஷி நகர் விமான நிலையத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து பேசியதாவது:

ஏர் இந்தியா – டாடா நிறுவனம் இடையிலான ஒப்பந்தம் இத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும், விமானப் போக்குவரத்தில் இது முக்கிய மைல்கல்லாக அமையும். இந்த நடவடிக்கையானது விமான போக்குவரத்துத் துறைக்கு புதிய புத்துணர்வை அளிக்கும்.

இந்தப் புதிய விமான நிலையம் தொடங்கப்பட்டதன்மூலம் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பயனடைவர். இந்தப் பகுதியில் தொழில்வளம் பெருக இது உதவியாக இருக்கும். சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும். இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அடுத்த 4 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 200 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் மற்றும் தண்ணீரில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதிகளை உருவாக்குவதே அரசின் இலக்கு.

குஷிநகர் பகுதிதான் மகான் கவுதம புத்தர் மகாபரிநிர்வாண நிலை (உயிர்நீத்தல்) எட்டிய இடமாகும். புத்தமதத்தைப் பின்பற்றுவோருக்கு இப்பகுதி மிகவும் முக்கியமான புனித தலமாகும். உலகெங்கும் உள்ள புத்த மதத்தினர் இறுதியில் இப்பகுதியை வந்து தரிசிக்க இந்த சர்வதேச விமான நிலையம் உறு துணையாக இருக்கும் என்றார்.

குஷிநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு முதலாவது விமானமாக லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்ததாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் நமல் ராஜபக்ஸ தெரிவித்தார். இந்த சர்வதேச விமான நிலையம் `260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

3. அருணாச்சல் எல்லையில் பீரங்கிகளைக் குவித்த இந்தியா

சீனா உடனான அருணாச்சல் எல்லைப் பகுதியில் பீரங்கிகளை மத்திய அரசு குவித்துள்ளது. இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்னை நிலவிவருகிறது. இருதரப்பினரிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசத்திற்கு அரசுமுறைப் பயணமாக துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா சென்றிருந்தார். இடாநகரில் உள்ள சட்டப்பேரவையிலும் அவர் உரையாற்றினார். இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய வெளியுறவுத் துறை அந்நாட்டின் வெளியுறவுத் துறையின் கருத்தை நிராகரிப்பதாக கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியான தாவங் பகுதியில் இந்திய ராணுவம் பீரங்கிகளைக் குவித்துள்ளது. இதனால் இருதரப்பு எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை சீனா-இந்தியா இடையே 13 கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

4. மெரீனாவில் மூழ்குவதைத் தடுக்க தனி பிரிவு தொடக்கம்

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் மூழ்குதல் தடுப்புப் பிரிவு புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இது குறித்த விவரம்:

சென்னை மெரீனா கடற்கரையில் பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க ‘பல்வகை குழு அடங்கிய மூழ்குதல் தடுப்புப்பிரிவு’ தொடங்கப்பட்டது.

மீட்புக்கு 3 திட்டங்கள்:

சம்பவத்துக்கு முன், சம்பவத்தின் போது, சம்பவத்துக்கு பின் என தடுப்புக் குழுவானது மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நிலையிலும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

‘சம்பவத்துக்கு முன்’ திட்டத்தில் கடலில் இறங்குவதற்கு தடை விதித்தல், கடற்கரையில் அறிவிப்புப் பலகைகள் வைத்தல், சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உயிர்காக்கும் உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல், கடற்கரையில் ஒலிபெருக்கிமூலம் எச்சரிக்கை செய்தல் ஆகிய பணிகளில் இந்தப் பிரிவு ஈடுபடும்.

‘சம்பவத்தின்போது’ என்ற நிலையில், உடனடியாக மீட்புக் குழுவினர் தக்க இயந்திரங்கள், உபகரணங்களுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்பர். ‘சம்பவத்துக்கு பின்’ என்ற நிலையில் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டவர்களுக்கு தயார்நிலையில் வைக்கப்பட் -டுள்ள மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சையளித்து காப்பாற்றுவர். இந்தத் தடுப்புப் பிரிவில் காவல்துறை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மீனவர்கள், முதலுதவிக் குழுவினர் ஆகியோர் இடம்பெறுகிறார்கள். மீட்புப்பணிக்காக கட்டுமரம், உயிர்காக்கும் உடைகள், அதிவேக படகுகள், மிதவைப் படகுகள், கயிறுகள் போன்ற பல்வேறு இயந்திரங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடல் அலைகளின் தன்மை ஆய்வு:

கடல் அலைகளின் தன்மை, அலைகளில் தீவிரம் ஏற்படும் நாள்கள், ஆபத்து நிறைந்த ஆழமான பகுதிகள் போன்றவற்றை பற்றி ஒரு விரிவான ஆராய்ச்சியை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், கடல்சார் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள்மூலம் மேற்கொண்டு அறிக்கை பெறப்படவுள்ளது. இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

5. கரோனா தடுப்பூசிகளுக்கு பரஸ்பர அங்கீகாரம்: 11 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம்

கரோனா தடுப்பூசிகளுக்கு பரஸ்பர அங்கீகாரம் அளிக்கும் வகையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட பயணிகள் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி இந்த நாடுகளுக்கு சென்றுவர முடியும்.

இந்தத் தகவலை தெரிவித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், அதன் அடிப்படையில் இந்தியா வரும் சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து வழிகாட்டுதலுக்கும் மாற்றாக இந்தப் புதிய வழிகாட்டுதல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய வழிகாட்டுதலின்படி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நேபாளம், பெலாரஸ், லெபனான், ஆர்மீனியா, உக்ரைன், பெல்ஜியம், ஹங்கேரி, செர்பியா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அந்தந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது உலக சுகாதார அமைப்பு சார்பில் அங்கீகரிக்க -ப்பட்ட கரோனா தடுப்பூசிகளை முழுமையாக (அனைத்து தவணைக
-ளையும்) செலுத்தியிருக்கும் நிலையில், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி விமான நிலையத்திலிருந்து செல்ல முடியும். அதாவது, கரோனா பரிசோதனைக்கு உட்படவோ அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கவோ தேவையில்லை.

அதே நேரம், கரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான விரைவுப் பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இந்தியா வந்திறங்கிய நாளிலிருந்து 14 நாள்களுக்கு தாங்களாகவே உடல் நிலையை சுய கண்காணிப்பு செய்துகொள்ள வேண்டும்.

அதுபோல, தடுப்பூசி செலுத்தாத அல்லது முழு தவணைகளையும் செலுத்திக் கொள்ளாத சர்வதேச பயணிகள் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனைக்கு இரத்த மாதிரிகளை அளிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு உள்படுத்தப்பட்ட பின்னரே விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர். மேலும், அவர்கள் முதல் 7 நாள்கள் கட்டாய வீட்டுத் தனிப்படுத்தலில் இருக்க வேண்டும். பின்னர், 8ஆம் நாளில் அவர்களுக்கு மறுபரிசோதனை மேற்கொள்ளப்ப -டும். அப்போது, அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தால், அடுத்த 7 நாள்களுக்கு அவர்களின் உடல்நிலையை சுய கண்காணிப்பு செய்துகொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா, பிரேஸில், வங்கதேசம், போட்ஸ் வானா, சீனா, மோரீஷஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கூடுதல் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியது புதிய வழிகாட்டுதலில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

6. இந்தியா – பிரேஸிலில் உயர் வெப்பத்தால் அதிக உயிரிழப்புகள்: லான்செட் அறிக்கை

உயர் வெப்பநிலை தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் உலக அளவில் இந்தியா, பிரேஸில் நாடுகளில் மிக அதிக அளவில் பதிவாகியிருப்பது லான்செட் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

உலக வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவது தொடர்பான ‘சுகாதாரமான எதிர்காலத்துக்கான சிவப்புக் குறியீடு’ என்ற தலைப்பில் 2021ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை லான்செட் ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

உயர் வெப்பத்தால் ஏற்கெனவே பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதோடு, உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு இல்லாத நிலையை சமூகம் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், இந்த ஆய்வில் உயர் வெப்ப தாக்கம் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் உயிரிழப்பு விகிதம் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் 3,45,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது கடந்த 2000-05ஆம் ஆண்டு சராசரியைவிட 80.6 சதவீதம் கூடுதலாகும். மேலும், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வெப்பம்சார்ந்த உயிரிழப்புகள் உலகிலேயே இந்தியா மற்றும் பிரேஸிலில் மிக அதிகமாக பதிவாகியுள்ளது.

1986-2005 ஆண்டுகளில் பதிவான சராசரியைவிட கடந்த 2020ஆம் ஆண்டு அதிக நாள்கள் வெப்ப அலை தாக்கம் பதிவானது. அதன் காரணமாக கடந்த ஆண்டில் 65 வயதுக்கு மேற்பட்ட 31 லட்சத்துக்கும் அதிகமான முதியவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். குறிப்பாக, சீனா, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். மேலும், உயர் வெப்பநிலை நேரடி உடல் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மக்களின் பணித்திறனையும் பாதிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 29,500 கோடி பணி நேரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு தொழிலாளி -க்கு 88 மணி நேர பணித்திறன் குறைந்ததற்கு சமமானதாகும். இதில், குறிப்பாக பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியா ஆகிய நாடுகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன. உலக சராசரி பாதிப்பில் 3 மடங்கு பாதிப்பை இந்த மூன்று நாடுகளும் ஒட்டுமொத்தமாகச் சந்தித்துள்ளன.

அதுபோல, உயர் வெப்பநிலை காரணமாக உலக அளவில் 19 சதவீத நிலப்பரப்பு மிகக்கடுமையான வறட்சியை சந்தித்துள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. What is the name of the consortium launched by the Department of Biotechnology, to monitor Bacterial and Viral infections?

A) Bharat Health

B) One Health 

C) Covid Warrior

D) Health Heroes

 • The Department of Biotechnology has recently launched ‘One Health’ consortium, to monitor important bacterial, viral and parasitic infections of zoonotic and pathogens in the country. The project aims to study the use of existing diagnostic tests and the development of additional procedures for monitoring and understanding the spread of emerging diseases. One Health Consortium consists of 27 organisations led by DBT–National Institute of Animal Biotechnology, Hyderabad.

2. Tawang Ganden Namgyal Lhatse (Tawang Monastery), which was seen in the news recently, is located in which country?

A) India 

B) Nepal

C) Thailand

D) South Korea

 • The Tawang Ganden Namgyal Lhatse (Tawang Monastery), which is the second largest monastery of Tibetan Buddhism, is located in Tawang district of Arunachal Pradesh. India strongly rejected China’s objection to a recent visit to Arunachal Pradesh by Vice–President M Venkaiah Naidu. China has been objecting to visits of Indian leaders to Arunachal Pradesh, citing it as a part of South Tibet.
 • Tawang provides a strategic entry into India’s northeastern region and is a critical point in the corridor between Tibet and Brahmaputra Valley.

3. President’s Tatrakshak Medal is awarded to which armed force?

A) Coast Guard 

B) Border Security Force

C) Indian Navy

D) Central Reserve Police Force

 • The President of India Ram Nath Kovind has awarded President’s Tatrakshak Medal (PTM) and Tatrakshak Medal (TM) to Indian Coast Guard personnel. The awards are being given to the personnel of Indian Coast Guard on Republic Day and Independence Day every year, since 26 Jan 1990. The awards are given for their act of exemplary gallantry and meritorious service on the occasion of the Republic Day 2021.

4. “Lokapriya Gopinath Bordoloi Award for National Integration and National Contribution” is awarded by which state?

A) Tamil Nadu

B) Maharashtra

C) Odisha

D) Assam 

 • ‘Lokapriya Gopinath Bordoloi Award’ is the Government of Assam’s highest civilian award for National Integration and National Contribution. Gopinath Bordoloi was a freedom fighter, Assam’s first Chief Minister after independence.
 • The award carries a prize of Rs.5 lakh, a citation. This year’s award was presented by the Vice President M. Venkaiah.

5. Abiy Ahmed, has been sworn in as the Prime Minister of which country?

A) Israel

B) Iran

C) Ethiopia 

D) Venezuela

 • Ethiopian Prime Minister Abiy Ahmed has been sworn in for a new five–year term. The government has been facing a lot of challenges, including a long conflict in the northern region of Tigray. Abiy’s Prosperity Party was declared the winner of parliamentary elections earlier this year. The prime minister was also the 2019 Nobel Peace Prize winner for restoring ties with neighbouring country Eritrea.

6. Which city is set to play host to the 40th edition of India International Trade Fair (IITF)?

A) Mumbai

B) New Delhi 

C) Varanasi

D) Ahmedabad

 • India Trade Promotion Organisation (ITPO) is set to conduct the 40th edition of India International Trade Fair (IITF) at Pragati Maidan, New Delhi from November 14 to 27.
 • The fair is to be conducted with the theme of “Atmanirbhar Bharat” with a focus on economy, export potential, infrastructure supply chain, demand and vibrant demography. The event is organised as a part of “AzadiKaAmritMahotsav”.

7. When is World Habitat Day observed every year?

A) First Monday of October 

B) First Sunday of October

C) Last Sunday of September

D) Last Saturday of September

 • Every year, First Monday of October is observed by the United Nations as “World Habitat Day”, to stress on the basic right of all to adequate shelter and to highlight the state of our habitats. This year, it was observed on October 4. The theme for this year’s World Habitat Day is “Accelerating urban action for a carbon–free world”.

8. The ‘Ajeya Warrior’ Defence exercise is held between India and which country?

A) UK 

B) France

C) Sri Lanka

D) Bangladesh

 • India and the UK kickstarted a two–week military exercise ‘Ajeya Warrior’ at Chaubatia in Uttarakhand. It aims to strengthen bilateral defence cooperation between the two countries. As per the Indian Army, this edition of the ‘Ajeya Warrior’ exercise is part of an initiative to develop interoperability and sharing of expertise, it said.

9. Karuppur kalamkari paintings & wood carvings of Kallakurichi, which have received GI tags, belongs to which state?

A) Tamil Nadu 

B) Kerala

C) Andhra Pradesh

D) Haryana

 • Karuppur Kalamkari paintings and wood carvings of Kallakurichi, both belonging to the state of Tamil Nadu have received geographical indication or GI tag, from the Government of India. GI tag is awarded to products of specific geographical origin and it adds significance to the product. It is regulated under the Geographical Indications registration is administered by the Geographical Indications of Goods (Registration and Protection) Act of 1999.

10. When is the ‘World Day Against the Death Penalty’ observed every year?

A) October 8

B) October 10 

C) October 12

D) October 14

 • October 10 marks the World Day Against the Death Penalty. This year, the theme is focused on safeguarding the health and rights of women and girls around the world. According to Amnesty International’s 2020 death penalty report, more than two–thirds of the world has now abolished the death penalty in law or practice.
 • As many as 108 countries have completely abolished the death penalty for all crimes. As per the report, at least 483 people were known to have been executed in 2020.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button