Tnpsc

22.06.2018 Tamil Current Affairs நடப்பு நிகழ்வுகள்

22.06.2018 Tamil Current Affairs நடப்பு நிகழ்வுகள்

1.நிகழாண்டின் சர்வதேச யோகா தினத்தின் (IYD) கருப்பொருள் என்ன?

[A] Yoga for Peace

[B] Yoga for Health

[C] Yoga for Harmony and Peace

[D] Yoga for Peaceful Mind

  • யோகக்கலை என்பது உடல், மனம், அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலையாகும். யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் (அ) இணக்கமாக இருத்தல் என்று பொருள். பதஞ்சலி முனிவரால் இந்தக் கலை இந்தியாவில் தோன்றி வழி வழியாய் வளர்ந்து வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். சர்வதேச யோகா தினம், ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படும் என ஐ.நா அவை அறிவித்துள்ளது.
  • 4வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் முதன்மை நிகழ்வானது, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. நிகழாண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “இணக்கம் மற்றும் அமைதிக்காக யோகா” என்பதாகும். 2 கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் ஜூன் 21-ம் தேதியானது, வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்டநாளாக உள்ளது.

2.ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3வது வருடாந்தர கூட்டத்தை நடத்தும் நாடு எது?

[A] சீனா

[B] இந்தியா

[C] பிரேசில்

[D] நியூசிலாந்து

  • மும்பையில் ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3வது ஆண்டுக்கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியன இணைந்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.
  • இந்த ஆண்டுக்கூட்டத்திற்கான கருப்பொருள், “அடிப்படை வசதிக்கு நிதி திரட்டுதல் : புதுமைப்படைப்பும், ஒத்துழைப்பும் (Mobilizing Finance for Infrastructure: Innovation and Collaboration)” என்பதாகும்.
  • இந்தக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், அரசின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த அலுவலர்கள், நல்ல உட்கட்டமைப்பு முதலீடுகள் மூலம் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது பற்றிய தங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் இந்தக் கூட்டத்தில் பகிர்ந்துக்கொள்வார்கள்.
  • இந்த 2 நாள் கூட்டத்தில் உயர்மட்ட கொள்கை வகுப்பாளர்கள், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உறுப்புநாடுகளின் அமைச்சர்கள், கூட்டாண்மை நிறுவனங்களின் பிரதிநிதி –கள், தனியார் துறையினர் மற்றும் சிவில் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
  1. 2017-ம் ஆண்டிற்கான Sports Illustrated’ன் ‘ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்’ விருதை வென்ற இந்திய விளையாட்டு வீரர் யார்?

[A] கிடாம்பி ஸ்ரீகாந்த்

[B] மனவ்  தாக்கர்

[C] ஜித்து ராய்

[D] சுபாங்கர் சர்மா

  • நிகழாண்டின் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற இறகுப்பந்து வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், 2017-ம் ஆண்டிற்கான Sports Illustrated’ன் ‘ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்’ விருதை வென்றுள்ளார். இதுதவிர, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் தன்ராஜ் பிள்ளைக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
  • பெண்கள் கிரிக்கெட் அணிக்கு ‘ஆண்டின் சிறந்த அணி’ விருதும், தேசிய கால்பந்து அணி பயிற்சியாளர் ஸ்டீஃபன் கான்ஸ்டன்டைனுக்கு ‘ஆண்டின் சிறந்த பயிற்சியாளர்’ விருதும் வழங்கப்பட்டது. மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பையசுக்கு ‘விளையாட்டுத் துறைக்கு ஈடிணையற்ற பங்களிப்பு வழங்கியவர்’ விருது வழங்கப்பட்டது.
  • ஐசால் FC-க்கு அணிக்கான சிறப்பு பதிப்பாசிரியர் விருப்ப விருதும், ஜித்து ராய்க்கு சிறப்பு பதிப்பாசிரியர் விருப்ப விருதும் (ஆண்) வழங்கப்பட்டது. இளம் டேபிள் டென்னிஸ் வீரர் மனவ் தாக்கர் மற்றும் கோல்ஃப் வீரர் சுபாங்கர் சர்மா ஆகியோருக்கு முறையே ‘Young Sportsperson of the Year’ மற்றும் ‘Game Changer of the Year’ விருது வழங்கப்பட்டது.

4.எந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ், இந்திய அரசானது இந்திய துணை கண்டத்தின் அல்கொய்தா (AQIS) மற்றும் ஈராக்கின் இஸ்லாமிய அரசு மற்றும் ஷாம் கொராசன் (ISKP) அமைப்புகளை தடைசெய்துள்ளது?

[A] சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1968

[B] சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967

[C] சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1966

[D] சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1965

  • அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் இந்திய கிளையான AQIS (இந்திய துணை கண்டத்தின் அல்கொய்தா), ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளையான ISKP (ஈராக்கின் இஸ்லாமிய அரசு மற்றும் ஷாம் கொராசன்) அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.
  • AQIS பயங்கரவாத இயக்கம் அண்டைய நாடுகளில் பல்வேறு பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இந்திய துணை கண்டத்தில் பயங்கரவாத செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. பயங்கரவாத செயல்களுக்கு இந்திய இளைஞர்களை வழிநடத்தவும், சேர்க்கவும் முயற்சி செய்கிறது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ISKP அமைப்பும் இந்திய துணை கண்டத்தில் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கிறது, இளைஞர்களை சர்வதேச பயங்கரவாதத்திற்கு சேர்க்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் கடுமையான சட்டமாக கருதப்படுகிற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம், 1967–ன் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளை கையாள்வதற்கான அதிகாரங்களை வழங்குவதாகும். தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் அவற்றின் உறுப்பினர்களை கையாள கடுமையான தண்டனை விதிகளை இது கொண்டுள்ளது.
  • இஸ்லாமிய அரசு, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது (JEM) உட்பட 39 இயக்கங்கள் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன.

5.எந்த மாநிலத்தில், அம்புபச்சி திருவிழா தொடங்கியுள்ளது?

[A] மணிப்பூர்

[B] மிசோரம்

[C] அருணாச்சலப்பிரதேசம்

[D] அசாம்

  • இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமின், கெளகாத்தியில் நீலாச்சல் மலைச்சாரலில் அமைந்துள்ள ‘காமாக்யா’ கோவிலில் ஜூன் 22 அன்று அம்புபச்சி திருவிழா தொடங்கியது. இன்றைய மாலையிலிருந்து மூடப்படும் இக்கோவில், பொது மக்களின் பயன்பாட்டுக்காக வரும் 26 அன்று காலையில் மீண்டும் திறக்கப்படும்.
  • பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கோவில் மற்றும் அதைச்சுற்றியுள்ள இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3000 பாதுகாப்பு அதிகாரிகள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசாம் மாநில போக்குவரத்துக் கழகத்தின் 80 பேருந்துகள் பொது மக்களுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளன.

6.அண்மையில் காலமான பிரபாகர் சௌபே, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?

[A] விளையாட்டுத்துறை

[B] பத்திரிகை

[C] அரசியல்

[D] அறிவியல்

  • மூத்த பத்திரிகையாளர் மற்றும் இலக்கிய எழுத்தாளரான பிரபாகர் சௌபே (83), சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ஜூன் 21 அன்று காலமானார்.

7.அண்மையில் காலமான புலிட்சர் பரிசு வென்ற கட்டுரையாளர் சார்லஸ் கிராத்ஹாமர், எந்த நாட்டவராவார்?

[A] இத்தாலி

[B] ஜெர்மனி

[C] ஜப்பான்

[D] அமெரிக்கா

  • புலிட்சர் பரிசு வென்ற அமெரிக்க கட்டுரையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சார்லஸ் கிராத்ஹாமர் (68), ஜூன் 21 அன்று காலமானார்.

8.எந்த தேதியில், உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது?

[A] ஜூன் 19

[B] ஜூன் 20

[C] ஜூன் 21

[D] ஜூன் 22

  • இசைத்துறையில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டும் விதத்தில் ஜூன் 21-ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. 1982-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் Fete De La Musique (பிரான்சில் நடைபெறும் இசைத்திருவிழா) எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதன் நினைவாகவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாளின்போது, நாட்டிலுள்ள குடிமக்கள் தங்களின் சுற்றுப்புறங்களில் இசைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், கட்டணமேதும் வாங்காமல் பொழுதுபோக்குக்காக நடத் –தப்படும் இலவச கச்சேரிகளையும் இசைக்கலைஞர்கள் நடத்துகிறார்கள்.

9.அண்மையில் காலமான புகழ்பெற்ற உருது நையாண்டி எழுத்தாளர் முஸ்தக் அஹ்மத் யூசுபி, இந்தியாவின் எந்த அண்டை நாட்டைச் சேர்ந்தவராவார்?

[A] ஆப்கானிஸ்தான்

[B] மியான்மர்

[C] வங்கதேசம்

[D] பாகிஸ்தான்

  • புகழ்பெற்ற உருது நையாண்டி எழுத்தாளர் மற்றும் நகையுணர்வாளரான முஸ்தக் அஹ்மத் யூசுபி (94), ஜூன் 20 அன்று கராச்சி நகரில் காலமானார். இலக்கிய வட்டாரங்களில் மிகவும் தனித்துவமான எழுத்து மற்றும் நகையுணர்வுக்காக அவர் பரவலாக பாராட்டப்பட்டார்.
  • உருது இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் பொருட்டு, பாகிஸ்தான் அரசு முறையே 1999 மற்றும் 2002–ம் ஆண்டுகளில் மிகவுயர்ந்த இலக்கிய விருதுகளான சித்தாரா-இ-இம்தியாஸ் மற்றும் ஹிலால்-இ-இம்தியாஸ் ஆகிய விருதுகளை அவருக்கு வழங்கியது.
  1. SKOCH–ன் ‘சிறப்பாகச் செயல்பட்ட சமூகத்துறை அமைச்சகம்’ விருதைப்பெற்ற மத்திய அமைச்சகம் எது?
[A] வெளியுறவுத்துறை அமைச்சகம்

[B] மனிதவள மேம்பாட்டமைச்சகம்

[C] பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

[D] சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

  • பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் கடந்த 4 ஆண்டுகளில் நிகழ்த்திய முக்கியச் சாதனைகளையும் முன்முயற்சிகளையும் பாராட்டும் விதமாகச் ‘சிறப்பாகச் செயல்பட்ட சமூகத் துறை அமைச்சகத்திற்கான’ SKOCH விருது அதற்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • பெண்கள் மற்றும் குழந்தை நலனமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி, அமைச்சகத்தின் சார்பில் ஜூன் 22 அன்று புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதைப்பெற்றுக்கொண்டார். 6 மாதகால மகப்பேறு விடுப்பு, பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறை தீர்ப்பு) சட்டம், 2013, She–Box, உதவி மையங்கள், அனைத்து மகளிர் உதவி மையம் (181) மற்றும் காவற்துறையில் 33% இடஒதுக்கீடு உள்ளிட்டவை இவ்வமைச்சகத்தின் சாதனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
  • ஸ்கோச் குழுமம் என்பது 1997–ம் ஆண்டு முதல் உள்ளடங்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு சமூகப்பொருளாதார சிக்கல்களைக் கையாண்டு வரும் ஒரு மதியுரையகமாகும். SKOCH விருதுகள், நேர்மறையான சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை முன்னெடுத்துச் செல்லும் தத்துவத்தின் அடிப்படையில், சமூகத்தில் பெருமைமிகு மாற்றங்களை மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!