Tnpsc

22nd 23rd August 2020 Current Affairs in Tamil & English

22nd 23rd August 2020 Current Affairs in Tamil & English

22nd 23rd August 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

22nd 23rd August 2020 Current Affairs Pdf Tamil

22nd 23rd August 2020 Current Affairs Pdf English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

1.உலைச்சாம்பலை கொண்டுசெல்லும் தனது உட்கட்டமைப்பிற்காக சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘ரிஹந்த் திட்டம்’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஹரியானா

ஆ. உத்தர பிரதேசம்

இ. பஞ்சாப்

ஈ. இராஜஸ்தான்

  • தேசிய அனல்மின் கழகமானது (NTPC) உத்தரபிரதேசத்தில் ரிஹந்த் திட்டத்தில் உட்கட்டமைப்பைக் கட்டியுள்ளது. சிமென்ட் ஆலைகளுக்கு மலிவு விலையில் உலைச்சாம்பலை மொத்தமாக கொண்டு செல்வதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களில் உள்ள உலைச் சாம்பலை முழுமையாகப் பயன்படுத்த NTPC உறுதிபூண்டுள்ளது. இந்திய இரயில்வேயின் ஏற்றுதல் வசதிகளைப்பயன்படுத்தி, உலைச்சாம்பலை (flyash) பயனுள்ள முறையில் பயன்படுத்த, மின்னுற்பத்தி நிலையங்கள் அவற்றின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும்.

2.இந்திய பள்ளிமாணாக்கருக்கு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தொகுதியைத்தொடங்க NITI ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கத்துடன் (AIM) அண்மையில் ஒத்துழைத்த சங்கம் எது?

அ. இன்டெல்

ஆ. IBM

இ. CDAC

ஈ. NASSCOM

  • தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கமானது (NASSCOM) அண்மையில் NITI ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கத்துடன் (AIM) இணைந்து இந்திய பள்ளிமாணாக்கருக்காக ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பாடத்தொகுதியை அறிமுகப்படுத்தியது.
  • AI அடிப்படையிலான இந்தப் பாடத்தொகுதி கிட்டத்தட்ட 5,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களில் (ATL) செயல்படுத்தப்படவுள்ளது. இது 2.5 மில்லியன் மாணாக்கரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AI கருத்தாக்கங்களில் செயல்பாடுகள் மற்றும் காணொளிகளைக்கொண்ட இந்தப் பாடத்தொகுதி பிப்ரவரி 27 முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

3. ‘பலாச’ மலருடன் கூடிய தனது புதிய மாநிலச் சின்னத்தை வெளியிட்ட மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. கேரளம்

ஆ. ஜார்க்கண்ட்

இ. பஞ்சாப்

ஈ. கர்நாடகம்

  • ஜார்க்கண்ட் மாநில அரசு தனது மாநிலத்திற்கான புதிய சின்னத்தை வெளியிட்டுள்ளது. இதனை இராஞ்சியில் வைத்து அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்டார். வட்ட வடிவிலான இச்சின்னத்தில் இடம்பெற்றுள்ள செறிவான வட்டங்களுக்கு இடையே இந்திய ஒன்றியத்தின் தேசிய சின்னம் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செறிவான வட்டங்கள், அம்மாநிலத்தின் ஏராளமான இயற்கை வளங்களையும் அதன் வளமான கலாசாரத்தையும் சித்தரிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநில மலரான ‘பலாச’ மலரையும் மாநில விலங்கான ‘யானை’யையும் இந்தச் சின்னம் கொண்டுள்ளது.

4.எவ்விரு அமைப்புகளைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிலவின் மேற்பரப்பை பயன்படுத்தி சுடுகற்களை (bricks) உருவாக்கும் செயல்முறையை உருவாக்கியுள்ளனர்?

அ. HAL & DRDO

ஆ. NASA & DRDO

இ. IISc & ISRO

ஈ. NASA & ISRO

  • இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் இந்திய விண்வெளி ஆய்வுமையம் (ISRO) ஆகியவற்றின் ஆராய்ச்சிக்குழு, நிலவின் மேற்பரப்பில், ‘சுடுகல்போன்ற கட்டமைப்பை’ உருவாக்கும் செயல்முறையை உருவாக்கியுள்ளது. இந்தச்சுடுகற்களை, நிலவின் மேற்பரப்பில் கட்டமைப்புகளை இணைக்க பயன்படு -த்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • யூரியா மற்றும் நிலவு மண் ஆகியவை இந்தச் செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களாகும். பாக்டீரியா மற்றும் கொத்தவரை ஆகியவற்றை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது.

5.ISRO’இன் சந்திரயான்-2 விண் சுற்றுக்கலனால் படமெடுக்கப்பட்ட பெரும்பள்ளத்தின் பெயரென்ன?

அ. லூனார் பெரும்பள்ளம்

ஆ. சாராபாய் பெரும்பள்ளம்

இ. கலாம் பெரும்பள்ளம்

ஈ. ஆப்டிமஸ் பெரும்பள்ளம்

  • சந்திரயான் -2 விண் சுற்றுக்கலனில் இருந்த Terrain Mapping Camera-2 (TMC-2), அண்மையில், நிலவின் மேற்பரப்பில் உள்ள, “சாராபாய் பெரும்பள்ள”த்தை படமெடுத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) தெரிவித்துள்ளது. இந்தப் பெரும்பள்ளம் நிலவின் வடகிழக்கு பகுதியில் உள்ள “மரே செரினிடாடிஸி”ல் அமைந்துள்ளது; இது, எரிமலைக்குழம்புப் படிவால் ஆன பரந்த தட்டையான பகுதியாகும். இந்தப் பெரும்பள்ளம் சராசரியாக 1.7 கிலோ மீட்டர் ஆழத்தைக் கொண்டுள்ளது மற்றும் அதன் சுவர்கள் சராசரியாக 25° முதல் 30° வரை சாய்வைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

6.பாதுகாப்பு அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘கொங்கூர் ஏவுகணை சோதனை உபகரணங்களை’ உருவாக்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. பாரத நில அகழ்வு நிறுவனம்

இ. பாரத டைனமிக்ஸ் லிட்

ஈ. பாரத மின்னணு நிறுவனம்

  • பாரத டைனமிக்ஸ் நிறுவனத்தால் (BDL) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, “கொங்கூர் ஏவுகணை சோதனை உபகரணங்கள்” மற்றும் “கொங்கூர் ஏவி பரிசோதனை உபகரணங்கள்” ஆகியவற்றை பாதுகாப்பு அமைச்சர் தொடக்கிவைத்தார்.
  • “தற்சார்பு இந்தியா” வார கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, BDL’ஆல் வடிவமைக்கப்பட்ட கொங்கூர் – M பீரங்கி எதிர்ப்பு கட்டளை ஏவுகணைகள் மற்றும் கொங்கூர் – M ஏவுகணை ஏவிகள் ஆகிய இரு உபகரணங்களும் அவற்றின் சேவைத்திறனை சரிபார்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டன. முன்னர் இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் இரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

7.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘அடல் சுரங்கம்’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. சிக்கிம்

ஈ. கர்நாடகா

  • ரோதங் கணவாயின்கீழ் அமைந்துள்ள உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதைக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டது. ரோதங்கில் உள்ள, ‘அடல் சுரங்கப்பாதை’ 2020 செப்டம்பருக்குள் பிரதமர் மோடியால் திறக்கப்படும் என ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் அண்மையில் அறிவித்தார். 8.8 கிமீ நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை, உலகில் உள்ள மிகநீளமான சுரங்கப்பாதைகளுள் ஒன்றாக இருக்கும். இந்தச் சுரங்கம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கங்கோத்ரி தேசிய பூங்கா’ அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தரகண்ட்

ஆ. சிக்கிம்

இ. அஸ்ஸாம்

ஈ. பீகார்

  • எழுபது ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோனதாகக் கருதப்படும் கம்பளி பறக்கும் அணில், உத்தரகண்ட் மாநிலம் கங்கோத்ரி தேசிய பூங்காவில் அண்மையில் காணப்பட்டது. வன ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, இக்கம்பளி பறக்கும் அணில் IUCN சிவப்புப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தேசிய பூங்காவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது இது காணப்பட்டது. இவ்விலங்கு அதன் கம்பளி போன்ற உரோம நகங்களை ஒரு வான்குடைபோன்று பயன்படுத்தி பறக்கிறது.

9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற CAMPA நிதியத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. வெளியுறவு அமைச்சகம்

ஈ. உழவு & உழவர் நல அமைச்சகம்

  • CAMPA (Compensatory Afforestation Fund Management and Planning Authority) நிதியில் எண்பது சதவீதத்தை காடு வளர்ப்பு (அ) தோட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் இருபது சதவீதத்தை திறன் மேம்பாட்டுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளார். அண்மைய நிதி ஆணையம் வனப்பகுதிக்கான நிதிப்பகிர்வை பத்து சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

10.எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ. இராகேஷ் அஸ்தானா

ஆ. நாகேஸ்வர இராவ்

இ. ரிஷி குமார் சுக்லா

ஈ. இரஞ்சித் சின்ஹா

  • எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) தலைமை இயக்குநராக இராகேஷ் அஸ்தானா, IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு முன்பு, அவர், கடந்த 2019 ஜனவரி முதல் உள்நாட்டு வான் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் தலைவராக பணிபுரிந்துவந்தார். S S தேஸ்வால் அவருக்கு பதிலாக அந்தப்பதவியில் அமரவுள்ளார். தற்போதைய BSF தலைவர் R K சுக்லா, 2020 பிப்ரவரியில் ஓய்வுபெறவுள்ளார். இராகேஷ் அஸ்தானா, 1984ஆம் ஆண்டுத்தொகுதி IPS அதிகாரியாகவும், மத்திய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியாகவும் இருந்தார்.

1. Rihand project, that was seen in news for its infrastructure to transport fly ash, is located in which state?

[A] Haryana

[B] Uttar Pradesh

[C] Punjab

[D] Rajasthan

  • National Thermal Power Corporation (NTPC) has built an infrastructure at Rihand project in Uttar Pradesh. The project has been designed to transport fly ash in bulk at affordable rates to cement plants. NTPC has committed to utilise the fly ash completely from power plants. The power plants will upgrade their infrastructure for utilising the fly ash using the loading facilities of the Indian Railways.

2. Which association recently collaborated with NITI Aayog’s Atal Innovation Mission (AIM) to launch artificial intelligence (AI) based module for Indian school students?

[A] Intel

[B] IBM

[C] CDAC

[D] NASSCOM

  • The National Association of Software and Services Companies (NASSCOM) recently collaborated with NITI Aayog’s Atal Innovation Mission (AIM) to launch an artificial intelligence (AI) based module for Indian school students. The AI–Base Module is to be implemented in nearly 5,000 Atal Tinkering Labs (ATL) and is expected to reach as many as 2.5 million students. The module with activities and videos on AI concepts is to be introduced from 27 February.

3. Which State / UT has unveiled its new state logo with ‘Palash flower’?

[A] Kerala

[B] Jharkhand

[C] Punjab

[D] Karnataka

  • The Government of Jharkhand has unveiled a new logo for the state. It was unveiled at Ranchi by the Chief Minister Hemant Soren. It is a circular logo with the National Emblem of India placed at its center, between concentric circles.
  • These concentric circles depict the state’s abundant natural resources and its rich culture. The logo contains “Palash flower” which is the state’s flower and “Elephant” which is the state animal.

4. Researchers of which two organisations have developed a process of making Bricks on lunar surface?

[A] HAL & DRDO

[B] NASA & DRDO

[C] IISc & ISRO

[D] NASA & ISRO

  • Research team from Indian Institute of Science, IISc and Indian Space Research Organisation (ISRO) have developed a process for making “Brick like structure” on lunar surface. The researchers suggest that these bricks could be used for assembling structures in lunar surface. The raw material used is urea and lunar soil. It is developed by using bacteria and guar beans to consolidate the land into load bearing brick like structures.

5. What is the name of the Crater that has been captured by the ISRO’s Chandrayaan 2 Orbiter?

[A] Lunar Crater

[B] Sarabhai Crater

[C] Kalam Crater

[D] Optimus Crater

  • The Indian Space Research Organisation (ISRO) has stated that the Terrain Mapping Camera–2 (TMC–2) on board the Chandrayaan–2 orbiter has recently captured the images of the “Sarabhai Crater” on the lunar surface. The crater is located at north eastern quadrant of Moon on the “Mare Serenitatis”, which is a vast flat region due to larva deposition. The crater has an average depth of 1.7 km and its walls seem to have an average slope between 25 to 30 degrees.

6. The “Konkurs Missile Test Equipment” launched by the Defence Minister, has been developed by which organisation?

[A]  DRDO

[B] Bharat Earth Movers Ltd

[C] Bharat Dynamics Ltd

[D] Bharat Electronics Ltd

  • The “Konkurs Missile Test Equipment” and “Konkurs Launcher Test Equipment” indigenously developed by Bharat Dynamics Limited (BDL) has been launched by the Defence Minister. Launched as a part of the “Atma Nirbhar Bharat Week” celebrations, the two equipment have been designed by BDL to check the serviceability of Konkurs–M anti–tank guided missiles and Konkurs–M missile launchers. These products were earlier imported from Russia.

7. The ‘Atal Tunnel’ that was seen in news recently, is located in which state?

[A] Uttar Pradesh

[B] Himachal Pradesh

[C] Sikkim

[D] Karnataka

  • The strategic tunnel under the Rohtang Pass was named after former Prime Minister Atal Bihari Vajpayee in December last year. Himachal Pradesh Chief Minister Jai Ram Thakur has recently announced that the ‘Atal Tunnel’ in Rohtang would be inaugurated by Prime Minister Narendra Modi by September 2020. The 8.8–km long tunnel will be the longest tunnel among those in the world above an altitude of 3000 metres.

8. Gangotri National Park, which was seen in news recently, is located in which state/UT?

[A] Uttarakhand

[B] Sikkim

[C] Assam

[D] Bihar

  • Considered as extinct over seventy years back, the Woolly flying squirrel was spotted at Gangotri National Park in Uttarakhand. As per the Forest Research Institute, the flying squirrel was added in the IUCN Red List. It was spotted during the survey conducted in the national park. The animal uses its wool–like furry claws like a parachute and fly.

9. CAMPA fund, that was seen in news recently, is associated with which Union Ministry?

[A] Ministry of Environment, Forests and Climate Change

[B] Ministry of Home Affairs

[C] Ministry of External Affairs

[D] Ministry of Agriculture and Farmers welfare

  • Union Minister of Environment, Forests and Climate Change, Prakash Javadekar has directed that 80% of the CAMPA (Compensatory Afforestation Fund Management and Planning Authority) funds have to mandatorily be used for plantation drives and afforestation. The rest of the funds are to be used capacity building, as per the separate budget of the state. The recent Finance Commission has increased the devolution to 10% for the forest cover.

10. Who has been appointed as the Director General of Border Security Force?

[A] Rakesh Asthana

[B] Nageswara Rao

[C] Rishi Kumar Shukla

[D] Ranjit Sinha

  • IPS officer Rakesh Asthana has been appointed as the Director General of Border Security Force (BSF). The incumbent head RK Shukla is set to retire in February 2020. Prior to this appointment, he was the head of the Bureau of Civil Aviation Security since January 2019. SS Deswal is set to replace him in the said post. Asthana was a 1984–batch IPS Officer and a former official of the Central Bureau of Investigation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!