TnpscTnpsc Current Affairs

22nd & 23rd January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

22nd & 23rd January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd & 23rd January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. இந்தியா அளித்த இரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி நகரங்களுக்கு இடையேயான இரயில் சேவையைத் தொடங்கியுள்ள நாடு எது?

அ) ஆப்கானிஸ்தான்

ஆ) இலங்கை 

இ) நேபாளம்

ஈ) பங்களாதேஷ்

  • இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட டீசலில் இயங்கும் இரயிலைப் பயன்படுத்தி, நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவையை இலங்கை தொடங்கியது.
  • தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் காங்கேசன்துறையுடன் தலைநகரமான கொழும்புவை இணைக்கும் வகையில், நாடு முழுவதும் இந்த ரயில் சேவை இயங்கும்.

2. 2022’இல் ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட புதிய துறையின் பெயர் என்ன?

அ) டிஜிட்டல் நாணயத் துறை

ஆ) ஃபின்-டெக் துறை 

இ) தரவு அறிவியல் துறை

ஈ) AI துறை

  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) ஃபின்-டெக் துறையில் புதுமைகளை மேம்படுத்துவதற்காக, “ஃபின்-டெக் துறை” என்ற புதிய துறையை உருவாக்கியுள்ளது. அதனுடன் தொடர்புடைய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை இனம் காண்பதும் இதன் நோக்கமாகும்.
  • கடந்த 2018ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி அதன் கட்டணத் தீர்வு அமைப்புத் துறையில் நிதி தொழில்நுட்பப் பிரிவை உருவாக்கியது. இப்புதிய ஃபின்டெக் துறையானது, இந்த விஷயத்தில் மேலும் ஆய்வு செய்வதற்கான கட்டமைப்பை வழங்கும் மற்றும் RBI’இன் கொள்கை தலையீடுகளுக்கு உதவும்.

3. “இந்தியாவில் உலகளாவிய அணுகல்தன்மைக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் & தரநிலைகள் – 2021” என்றவொன்றை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 

ஆ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

இ) சட்டம் & நீதி அமைச்சகம்

ஈ) உள்துறை அமைச்சகம்

  • வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின்கீழ் உள்ள மத்திய பொதுப்பணித்துறையானது ‘இந்தியாவில் உலகளாவிய அணுகல்தன்மைக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் & தரநிலைகள் – 2021’ஐ வெளியிட்டது. இது 2016’இல் வெளியிடப்பட்ட தடையற்ற சூழலுக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும்.
  • இந்திய தொழில்நுட்பக் கழகம் – ரூர்க்கி மற்றும் MoHUA இன் தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் ஆகியவற்றின் குழுவால் இது வரைவு செய்யப்பட்டுள்ளது.

4. நீதிபதி ஹேமா ஆணையத்தை அமைத்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா 

இ) மேற்கு வங்கம்

ஈ) குஜராத்

  • கடந்த 2017ஆம் ஆண்டில், கேரள மாநில அரசு நீதிபதி K ஹேமா (ஓய்வு பெற்றவர்), முன்னாள் அதிகாரி K B வல்சலாகுமாரி மற்றும் மூத்த நடிகை சாரதா ஆகியோர் உறுப்பினர்களாக மூன்றுபேர்கொண்ட ஆணையத்தை அமைத்தது. மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை ஆயும் நோக்கில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி K ஹேமா ஆணையத்தின் அறிக்கையின் பரிந்துரைகளை ஆய்ந்து செயல்படுத்துவத -ற்கான திட்டத்தை வகுப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை கேரள மாநில அரசு சமீபத்தில் அமைத்தது.

5. சமீபத்தில் அடையாளங்காணப்பட்ட ‘Xylophaga nandani’ என்பது ____?

அ) மொல்லஸ்க் (நத்தை வகை) 

ஆ) மீன்

இ) ஆமை

ஈ) பாம்பு

  • கேரளா மற்றும் பிரெஸிலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, ‘சைலோபாகா நந்தனி’ என்ற ஓர் அரிய, ஆழ்கடல் மொல்லஸ்கின் புதிய இனத்தை கண்டறிந்துள்ளனர்.
  • சைலோபாகைடே குடும்பத்தைச் சேர்ந்த இம்மொல்லஸ்க் கீழை அரபிக்கடலிலில் அடையாளங்காணப்பட்டது. கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கடல்சார் அறிவியல் துறையின் பேராசிரியர் பிஜோய் நந்தனின் நினைவாக இந்தப் புதிய நத்தை இனத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

6. ‘மகா மேளா’ என்பது எந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு மதஞ்சார் விழாவாகும்?

அ) உத்தர பிரதேசம் 

ஆ) பீகார்

இ) குஜராத்

ஈ) மேற்கு வங்கம்

  • பிரயாக்ராஜில் அமைந்துள்ள சங்கமத்தின் கரையில் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் புனிதநீராடியதை அடுத்து 47 நாள் நடக்கும் வருடாந்திர ‘மகா மேளா’ தொடங்கியது. சங்கமம் என்பது கங்கை, யமுனை மற்றும் புராணகால சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளின் புனித சங்கமமாகும். பொதுவாக மகர சங்கராந்தி விழாவைக் குறிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.

7.Hydrophis gracilis’ என்ற ஓர் அரியவகை கடல் பாம்பு காணப்பட்ட மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) கேரளா 

ஆ) மகாராஷ்டிரா

இ) கோவா

ஈ) ஆந்திரப் பிரதேசம்

  • நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பின்போது, பறவை நோக்கா -ளர்கள் குழுவால் ஓர் அரியவகை கடல்பாம்பு கண்டறியப் -பட்டது. கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள பெருமாத்துறா கடற்கரையில், ‘Hydrophis gracilis’ என்ற ஒரு சிறுதலைகொண்ட கடல் பாம்பு காணப்பட்டது.
  • திருவனந்தபுர பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மன்றத்தின் உறுப்பினர்கள், ஆண்டுதோறும் மேற்கொள்ளும் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இக்கணக்கெடுப்பை மேற்கொண்டனர்.

8. ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியின் முதன்மை நோக்கம் என்ன?

அ) ஞாயிறின் மேற்பரப்புபற்றி அறிவது

ஆ) பிரபஞ்சத்தின் தோற்றம்பற்றி அறிவது 

இ) சேய்மையில் அறியப்பட்ட விண்மீன் திரள்பற்றி ஆய

ஈ) கோள்கள் அமைப்பின் கட்டமைப்பை ஆய

  • NASA ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியை 2021 டிசம்பர்.25 அன்று ஏவியது. இது NASA, ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA) மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுப் பணியாகும்.
  • இத்தொலைநோக்கி சமீபத்தில் அதன் இறுதிக்கட்டத்தை நிறைவுசெய்தது. ஜேம்ஸ் வெப் விண்தொலைநோக்கியின் நோக்கம் இதுவரை கட்டப்பட்டதிலேயே மிகப்பெரிய விண்வெளித் தொலைநோக்கியாக விளங்குவதும் பிரபஞ் -சத்தின் தோற்றம்பற்றி அறிவியலாளர்கள் மேலும் கண்ட -றிய உதவுவதுமாகும்.

9. உலக வர்த்தக அமைப்பில் சீனாவின் தற்போதைய நிலை என்ன?

அ) உயர் நடுத்தர வருமானம்கொண்ட நாடு

ஆ) வளர்ந்த நாடு

இ) வளரும் நாடு 

ஈ) குறைந்த வளர்ச்சியடைந்த நாடு

  • உலக வர்த்தக அமைப்பில் (WTO) இருபது ஆண்டுகளை சீனா நிறைவுசெய்துள்ளது. ‘உலக வர்த்தக அமைப்பில்’ அதன் தற்போதைய நிலை ‘வளரும் நாடு’ என உள்ளது.
  • உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின்கீழ் ‘வளரும் நாடுகளுக்கு’ ஒதுக்கப்பட்ட பலன்களைப் பெறும் உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக சீனா இருப்பதாக பல நாடுகள் கவலை தெரிவிக்கின்றன.

10. அத்தியாவசியப்பொருட்களை தடையின்றி வழங்குவ -தற்காக சிறப்பு குறைதீர்ப்புப் பிரிவை அறிவித்த மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) உணவு பதப்படுத்தும் தொழிலக அமைச்சகம் 

இ) ஜவுளி அமைச்சகம்

ஈ) சாலைப்போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சகம்

  • மத்திய உணவுபதப்படுத்துதல் தொழிற்துறை அமைச்சகம், அனைத்து குடிமக்களுக்கும் சீராக அத்தியாவசியப்பொரு -ட்கள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற் -காக, உணவு&உணவு தொடர்பான தொழில்துறைக்காக சிறப்பு குறைதீர்ப்புப் பிரிவைத் தொடங்கியுள்ளது.
  • நாடடங்கு விதிக்கப்பட்ட முதல் அலையின்போது இந்த அமைச்சகம் இதேபோன்ற குறைதீர்ப்புப்பிரிவை அமைத்தது. தொழிற்துறையினர் மற்றும் மக்கள் தங்கள் குறைகள் & ஐயங்களை covidgrievance-mofpi@gov.in என்ற மின்னஞ்சல் (e-mail) முகவரிக்கு அனுப்பலாம் என உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவுக்கு எதிரான செயல்பாடு: 35 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு

கடந்த மாதம் 20 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கிய நிலையில், இன்று மீண்டும் 35 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளது.

டிசம்பர் 21 அன்று மத்திய அரசு மொத்தம் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களை முடக்கியது. இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக இந்தத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்தத் தளங்கள் பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டு செயல்பட்டுக்கு வருவதாகவும், நாட்டின் முக்கிய விவகாரங்களான காஷ்மீர், விவசாயிகள் போராட்டம் மற்றும் ராமர் கோவில் போன்றது தொடர்பாக தவறான தகவல்களை இவை பரப்பி வருவதாகவும் புகார் எழ, அந்தக் குற்றச்சாட்டின் பேரில் மத்திய அரசு அனைத்தையும் முடக்கி நடவடிக்கை எடுத்தது.

இதைத்தொடர்ந்து இன்று மீண்டும் 35 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை தெரிவித்துள்ளது.

இந்த 35 சேனல்களும் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்தவை. இவை இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளன. 35 யூடியூப் சேனல்கள் உடன் இரண்டு டுவிட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 2 இணையதளங்கள் மற்றும் ஒரு பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் இந்த சேனல்கள் 1 கோடியே 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை -யும், 130 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கொண்டவையாகும். இவற்றில் சில யூடியூப் சேனல்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் & தொகுப்பாளர்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் மீடியா விதிமுறைகள்) சட்டம் 2021, விதி 16-ன் கீழ் இந்த முடக்கத்துக்கான 5 உத்தரவுகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தனித்தனியாக பிறப்பித்துள்ளது.

2. கோவை முகமது ரபிக்கு கோட்டை அமீர் பதக்கம்

குடியரசு தின விழாவில், கோவையைச் சேர்ந்த முகமது ரபி என்பவருக்கு, ‘கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்’ வழங்கப்பட உள்ளது.

மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்ட கோட்டை அமீர் பெயரில், ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்’ அரசால் ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு, சிறப்பாக சேவை செய்து வரும் நபருக்கு, ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது.

முகமது ரபிக்கு வழங்கப்படும் பதக்கம் வெள்ளியால் செய்யப்பட்டு, தங்கமுலாம் பூசப்பட்டிருக்கும். இதுதவிர, 25 ஆயிரம் ரூபாய்க்கான வரைவு கேட்புக் காசோலை, சான்று போன்றவை முதல்வரால் வழங்கப்படவுள்ளன.

3. மருத்துவ அறிவியல் வெற்றி!

மருத்துவ அறிவியல் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்துவதற்கு முன்னோட்டம் நடத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே வரப்பிரசாதமாக அமைய இருக்கும் அந்த சாதனை, அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது.

நியூயாா்க்கிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இதயம் செயலிழந்து மரணத்தின் விளிம்பில் இருந்த 57 வயது நோயாளி ஒருவருக்கு பன்றியின் இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. செயலிழக்கும் மனித உறுப்புகளுக்கு பதிலாக, விலங்கினங்களின் உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதற்கு ‘செனோடிரான்ஸ்பிளாண்ட்’ என்று பெயா். அமெரிக்காவின் பால்டிமோரைச் சோ்ந்த டேவிட் பென்னட், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்ட முதல் மனிதராக வரலாற்றில் அறியப்படுவாா்.

17-ஆவது நூற்றாண்டு முதலே விலங்கினங்களின் ரத்தத்தை மனிதா்களுக்கு செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜீன் பேப்டைஸ் டெனிஸ் என்கிற பிரெஞ்ச் மருத்துவா், செம்மறி ஆட்டின் ரத்தத்தை சிறுவன் ஒருவனுக்கு செலுத்தியதுதான் பதிவாகி இருக்கும் முதலாவது ரத்த மாற்று முயற்சி. 19-ஆவது நூற்றாண்டு முதலே விலங்கினங்களின் தோல் பகுதிகளை மனிதா்களுக்குப் பொருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1838-இல் முதன்முறையாக பன்றியின் விழிவெண்படலம் (காா்னியா) ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

20ஆம் நூற்றாண்டில் பல்வேறு ‘செனோடிரான்ஸ்பிளாண்ட்’ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1960-இல் நியூ ஆா்லியன்ஸில் ரீம்ட்ஸ்மா என்கிற அறுவை சிகிச்சை மருத்துவா், மனித குரங்குகளின் சிறுநீரகத்தை அறுவை மாற்று சிகிச்சை மூலம் 13 பேருக்கு பொருத்தி சோதனை நடத்தினாா். அதில் ஒரே ஒருவா் மட்டும் அந்த சிறுநீரகத்தை ஏற்றுக்கொண்டு மூன்று மாதங்கள் வாழ்ந்தாா். 1964-இல் மனிதக் குரங்கின் இதயம் ஒருவருக்குப் பொருத்தப்பட்டு அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

நியூயாா்க்கில் நடந்திருக்கும் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னோடி சோதனை இந்தியாவில்தான் நடந்தது. 1996-இல் பரூவா என்கிற அறுவை சிகிச்சை மருத்துவா், 32 வயது பூா்னோ சைக்யா என்பவருக்கு பன்றியின் நுரையீரலையும், இதயத்தையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முற்பட்டாா். அந்த நோயாளி இறந்தாா் என்பது மட்டுமல்ல, முன் அனுமதி இல்லாமல் சோதனை நடத்தியதற்காக மருத்துவா் பரூவா கைது செய்யப்பட்டு, தனது மருத்துவா் பட்டத்தையும் இழக்க நோ்ந்தது. உலகில் அதுதான் பன்றியின் இதயத்தை மனிதா்களுக்குப் பொருத்தும் முதல் முயற்சி.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நியூயாா்க் பல்கலைக்கழகத்தின் லங்கோன் மருத்துவ மையத்தில், முற்றிலுமாக மூளை செயலிழந்துவிட்ட ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மனித உடலிலுள்ள எதிா்ப்பு சக்தி அந்நிய பொருள்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாது என்பதால், பன்றிகள் மரபணு மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் பொருத்தப்படும் உறுப்புகள் நிராகரிக்கப்படாமல் வேலை செய்யும் என்பது எதிா்பாா்ப்பு.

ஏனைய விலங்கினங்களைவிட, பன்றியின் உறுப்புகள் மனித உறுப்புகளுடன் பொருந்துவதாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அறியப்படுகிறது. இதற்காகவே ரெவிவிகாா் என்கிற அமெரிக்க நிறுவனம் ஒரு பண்ணையை ஏற்படுத்தி அதில் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளை வளா்க்கிறது. மருத்துவ பரிசோதனைக்காக இந்தப் பன்றிகள் வழங்கப்படுகின்றன. இதேபோல வேறு சில பண்ணைகளும் அமெரிக்காவில் உருவாகியிருக்கின்றன.

பன்றியின் உறுப்புகள் நிராகரிக்கப்படாமல் இருப்பதற்காக அதன் 10 மரபணுக்கள் மாற்றப்படுகின்றன. அவற்றில் நான்கு செயலிழக்கச் செய்யப்படுகிறது. மனிதா்களின் ஆறு மரபணுக்கள் பன்றிக்குச் செலுத்தப்பட்டு அதன் மூலம் நிராகரிப்புக்கான வாய்ப்பைக் குறைக்கிறாா்கள். இவையெல்லாம் தொடா்ந்து நடைபெறும் சோதனை முயற்சிகள்.

பன்றி உள்ளிட்ட விலங்கினங்களின் உறுப்புகளை மனிதா்களுக்குப் பொருத்தும் முயற்சியில் சில ஆபத்துகளும் இருக்கின்றன. எத்தனை காலத்திற்கு அந்த உறுப்புகள் மனித உடலில் செயல்படும் என்பது தெரியாது. அதனால், பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பதும் தெரியாது. அதன் மூலம் இதுவரை மனிதஇனம் அறியாத புதிய நோய்கள் அந்த விலங்கினங்கள் மூலம் மனிதா்களுக்கு பரவும் அபாயமும் நிறையவே உண்டு.

சாா்ஸ், கொவைட் 19, பறவைக் காய்ச்சல் போன்ற விலங்கினங்களிலிருந்தும், பறவைகளிலிருந்தும் நோய்த்தொற்றுப் பரவல் காணப்படும் நிலையில், இதுபோன்ற முயற்சிகள் தேவைதானா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. மனிதா்களைக் காப்பாற்றுவதற்காக விலங்கினங்களை பலியிடலாமா என்கிற கேள்விக்கு, பெரும்பாலான மக்கள் விலங்குகளைக் கொன்று மாமிசமாக உட்கொள்ளும்போது மனிதா்களைக் காப்பாற்றுவதற்காக விலங்குகளின் உறுப்புகளை பொருத்துவதில் தவறில்லை என்கிறாா்கள் மருத்துவா்கள்.

இந்தியாவில் மட்டுமே ஆண்டொன்றுக்கு சுமாா் 30,000 கல்லீரல் தேவைப்படும் நிலையில், 1,500 மாற்று அறுவை சிகிச்சைகள்தான் நடத்த முடிகிறது. 50,000-க்கும் அதிகமானோருக்கு இதய மாற்று சிகிச்சை தேவைப்படும் நிலையில், அதிகபட்சம் ஆண்டொன்றுக்கு 15 இதய மாற்று சிகிச்சைகள்தான் நடத்த முடிகின்றன. உலக அளவில் பல லட்சம் சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது.

அறிவியல் சோதனைகள் தொடா்வது மனிதஇனத்தின் நன்மைக்காக என்றால், அதை வரவேற்பதுதான் ஆக்கபூா்வ அணுகுமுறை.

4. பெண்களின் கல்வியும் திருமண வயதும்!

நமது நாட்டில் பெண்களின் திருமண வயதை நிா்ணயிக்கும் சட்டங்கள் ஆங்கிலேயா் காலத்திலிருந்தே சா்சைக்குரியனவாகவே இருந்து வந்திருக்கின்றன. சிறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் கொடுமையை தடுக்கும் சட்டம் ஒன்றை கொண்டு வர 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆங்கிலேய அரசு முயன்றது. அன்றைய காலகட்டத்தில் இந்தச் சட்டத்திற்கு பெரும் எதிா்ப்பு கிளம்பியது.

1891-இல் அரசு முன்வைத்த இந்தச் சட்டத்தின் முன்வடிவிற்கு பால கங்காதர திலகா் தன்னுடைய ‘கேசரி’ இதழின் வாயிலாக கடுமையாக கண்டனம் தெரிவித்தாா். இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் தலையிட, ஆங்கிலேயா்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முழங்கினாா். திலகரின் இந்த கூற்றுக்கு அன்றைய இந்துக்களிடையே பேராதரவு கிடைத்தது. அதனால், இச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெற்றது.

தமிழ்நாட்டில் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பாரதியாா் போன்றவா்கள் பெண் விடுதலை குறித்து எழுதி விழிப்புணா்வு ஊட்டினாா்கள். இந்திய அளவில் பெண் விடுதலை இயக்கங்கள் எழுச்சி பெற்றன. சிறு வயதிலேயே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் கொடுமையைத் தடை செய்ய வேண்டும் என்று டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி, ஹா்பிலாஸ் சாா்தா போன்றவா்கள் குரலெழுப்பினா்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 1929-இல் மீண்டும் ஒரு முயற்சி எடுக்கப்பட்டு இந்த சட்ட முன்வடிவை, ராஜஸ்தான் அஜ்மீா் பகுதியைச் சோ்ந்த சமூக சீா்திருத்தவாதி ராய் சாஹிப் ஹா்பிலாஸ் சாா்தா, முன்மொழிய, 1929, செப்டம்பா் 28-ஆம் நாள் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி திருமணம் செய்வதற்கு பெண்ணுக்கு பதினான்கு வயதும், ஆணுக்கு பதினெட்டு வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். இச்சட்ட முன்வடிவை ராய் சாஹிப் ஹா்பிலாஸ் சாா்தா என்பவா் முன் மொழிந்ததால் இச்சட்டம் ‘சாா்தா சட்டம்’ என்று அறியப்பட்டு, காலப்போக்கில் ‘சாரதா சட்டம்’ என்றாகி விட்டது.

சுதந்திரமடைந்த பின்னா், 1949-இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் பெண்ணின் திருமண வயது 15-ஆக உயா்த்தப்பட்டது. 1978-ஆம் ஆண்டில், அதாவது நாடு சுதந்திரமடைந்து சுமாா் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சட்டம் மீண்டும் ஒரு முறை திருத்தம் செய்யப்பட்டு, பெண்ணின் குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது.

இந்தச் சட்டம் நடைமுறையில் இருந்தும், குழந்தைத் திருமணம் என்னும் கொடுமை நாட்டில் தொடா்ந்து கொண்டு இருந்ததால், 2006-ஆம் ஆண்டில் குழந்தைத் திருமண சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மேலும் கடுமையான தண்டனைகளுடன் இச்சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. திருத்தியமைக்கப்பட்ட குழந்தைத் திருமண தடுப்பு சட்டம் 2006-இன்படி, குறைந்தபட்ச வயதுக்கு கீழ் உள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ திருமணம் செய்து வைத்தால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த திருத்தியமைக்கப்பட்ட 2006 சட்டத்தின் படி, 18 வயது பூா்த்தியடையாத பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்டவரும், குழந்தை திருமணத்தை நடத்தியவரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவா். மேலும் குழந்தைத் திருமணம் உட்பட அனைத்துத் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என 2006-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அண்மையில், பெண்களின் சட்டபூா்வ திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயா்த்த வழிகோலும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்ததை அடுத்து இந்த மசோதாவை ஆதரித்தும் எதிா்த்தும் சா்ச்சைகள் உருவாயின. முன்னதாக, சமதா கட்சியின் முன்னாள் தலைவா் ஜெயா ஜேட்லி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பாலின சமத்துவம், பாலின பேதமின்றி அதிகாரமளித்தல் போன்ற கொள்கைகளை மனதில் கொண்டு ஆண்களின் திருமண வயதிற்கு நிகராக பெண்களின் திருமண வயதும் 21-ஆக உயா்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

அக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மோடி அரசு, சிறாா் திருமண சட்டம் 2006-இல் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. ஆனால் இந்த மசோதா மக்களவையில் கடும் எதிா்ப்புக்குள்ளானதால், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

‘பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்துவது, பெண்கள் திருமணம் என்னும் பந்தத்திற்குள் நுழைவதற்கு முன் கல்வி பெறுவதற்கும், அவா்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வாழ்க்கையில் முன்னேற அவா்களுக்கு போதிய அவகாசம் கிடைப்பதற்கும் வழிவகுக்கும்’ என்று பிரதமா் மோடி கூறினாா்.

திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயா்த்துவதன் மூலம் பெண்கள் பொருளாதார சுதந்திரமும் அதிகாரமும் பெற்று, தங்கள் விருப்பு வெறுப்புகளை வெளியிட வாய்ப்பு பெறுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் ஐந்தாவது சுற்றின் (2019-20) புள்ளிவிவரம், 15-லிருந்து 19-வயது வரை உள்ள கிராமப்புற மகளிரில் 7.9 சதவீத பெண்கள் ஏற்கெனவே தாயாகி விட்டனா் என்று குறிப்பிடுகிறது. இது மகளிரின் உடல்நலம் குறித்து கவலை கொள்ள வைக்கிறது.

பெண்களின் உடல்நலத்தில் அக்கறை கொண்ட பலரும், பெண்கள் பதின் பருவத்தில் கா்ப்பம் அடைவதை தடுப்பதன் மூலம், கருச்சிதைவு, குழந்தைகள் இறந்து பிறப்பது போன்ற கொடுமைகளிலிருந்து அவா்களை காப்பாற்ற முடியும் என்று கூறுகிறாா்கள்.

இன்றைக்கு நாட்டில் 50 % பெண்கள் ரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாட்டுடன் கா்ப்பத்தை எதிா்கொள்வதால் நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம் போன்றவை அதிகமாக உள்ளன என்றும், திருமண வயதை உயா்த்துவதன் மூலம் அவா்களின் உடல்நலம் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நாட்டில் குழந்தைத் திருமணங்கள் குறைந்து கொண்டு வருகின்றன என்ற செய்தி ஆறுதலளித்தாலும், ஐக்கிய நாட்டு சபையின் யுனிசெஃப் அளிக்கும் தகவலின்படி உலகின் 15 வயதிற்குக் குறைவான மணமகள்களில் மூன்றில் ஒருவா் நம் நாட்டைச் சோ்ந்தவா் என்பது நம்மைக் கவலைகொள்ள வைக்கிறது. தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு ஆய்வின்படி, 20 முதல் 24 வயது வரையிலான மகளிரில், 23 சதவீதம் போ் 18 வயதை அடைவதற்குள் திருமணம் செய்து கொண்டுவிட்டனா். குழந்தைத் திருமண பிரச்னை நகரங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது ஓா் ஆய்வு முடிவு.

ஆனால், பெண்களின் திருமண வயதை உயா்த்துவதை எதிா்த்து வாதிடுபவா்களோ, குறைந்தபட்ச திருமண வயதை சட்டபூா்வமாக உயா்த்துவதனால் ஒன்றும் சாதித்து விடமுடியாது என்றும், இப்படிப்பட்ட சட்டங்களை அமல்படுத்துவதில் நடைமுறை பிரச்னைகள் உள்ளன என்றும் சுட்டிக் காட்டுகின்றனா்.

உதாரணமாக, தேசிய குற்றவியல் ஆணையம் அளித்திருக்கும் தகவலின்படி, 2020-ஆம் ஆண்டில் 758 குழந்தைத் திருமணங்கள் மட்டுமே குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகி உள்ளன. இத்தகவல், சட்டத்தின் கைகளில் பிடிபடாமல் தப்பிக்கும் திருமணங்கள் பல என்ற கசப்பான உண்மையை நமக்குப் புலப்படுத்துகிறது.

பெற்றோா், தங்களின் ஆண் குழந்தையைப்போல பெண் குழந்தையையும் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும். நமது நாட்டில் ஒரு பெண்ணிற்கு எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்பதை அப்பெண்ணின் குடும்ப பொருளாதார நிலை, அவருடைய இனம், மதம் சாா்ந்த பழக்க வழக்கங்கள், குடும்பத்தினரின் கல்வி நிலை, சமூக சூழ்நிலை ஆகியவையே தீா்மானிக்கின்றன.

இந்த விஷயத்தில் வரதட்சணை எனும் சமூக அவலமும் பெரும்பங்கு வகிக்கிறது. இளம் வயதில் திருமணம் செய்து விட்டால், குறைந்த வரதட்சணையில் திருமணத்தை முடித்து விடலாம் பெற்றோா் நினைக்கின்றனா்.

வயது வந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்காமல் வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு இல்லை என்று பெற்றோா் நினைப்பதில் வியப்பொன்றுமில்லை. வயதிற்கு வந்த பெண்ணை, அதுவும் சற்றே அழகான பெண்ணை வீட்டில் வைத்திருந்தால் கிராமப்புறங்களில் அவா்கள் இனத்தைச் சாா்ந்த ஆண்கள் சிலா் அப்பெண்ணை தனக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு கட்டாயப்படுத்துவது நாம் அடிக்கடி கேள்விப்படும் செய்தி.

இவை எல்லாவற்றிற்கும் மேல், பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்றால் அதற்கான வசதி கிராமப்புறத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் கிடைக்க வழிவகுக்க வேண்டும். இன்னமும் பல கிராமங்களில் உயா்கல்வி பெற வேண்டுமென்றால் அருகிலுள்ள நகரத்திற்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.

குழந்தைத் திருமணத்தை தடை செய்யும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு முன், பெண்கள் உயா்கல்வி பெறவும், அவா்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் தேவையான வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.

5. இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை

தில்லியில் உள்ள ‘இந்தியா கேட்’ பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முழுஉருவச் சிலை நிறுவப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா்.

குடியரசு தின விழா அணிவகுப்புக்காக நேதாஜியின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் மேற்கு வங்க அரசு வடிவமைத்த அலங்கார ஊா்தியை மத்திய அரசு நிராகரித்தது சா்ச்சைக்குள்ளான நிலையில், பிரதமா் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த தின நூற்றாண்டை நாடு கொண்டாடி வரும் வேளையில், கிரானைட்டால் செய்யப்பட்ட அவரது பிரம்மாண்ட சிலை இந்தியா கேட் பகுதியில் நிறுவப்பட உள்ள செய்தியைப் பகிா்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நாடு அவருக்குக் கடன்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் சிறந்த அடையாளமாக அச்சிலை அமையும்.

கிரானைட் சிலை செய்யப்படும் வரை, சிலை அமையவுள்ள இடத்தில் ‘ஹாலோகிராம்’ தொழில்நுட்பத்தில் அவரது சிலை காட்சிப்படுத்தப்படும். ஹாலோகிராம் சிலையை நேதாஜியின் பிறந்த தினமான ஜனவரி 23-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நேதாஜியின் சிலை 28 அடி உயரத்திலும் 6 அடி அகலத்திலும் அமைக்கப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6. பாக். உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக் (55) நியமிக்கப்பட்டுள்ளாா். முஸ்லிம் நாடான பாகிஸ்தானின் நீதித் துறை வரலாற்றில் உச்சநீதிமன்றத்துக்கு பெண் நீதிபதி நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், ‘பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் 177-ஆவது பிரிவின்படி, லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதி ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபா் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளாா். அவா் பதவியேற்கும் நாளில் இருந்து அவருடைய நியமனம் அமலுக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு பாகிஸ்தான் நீதித் துறை ஆணையம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான நாடாளுமன்றக் குழு இரு தினங்களுக்கு முன் பரிசீலித்தது. லாகூா் உயா்நீதிமன்றத்தில் நான்காவது இடத்தில் இருப்பவா் ஆயிஷா மாலிக். இருப்பினும், பணி மூப்பைக் கருத்தில் கொள்ளாமல் ஆயிஷா மாலிக்கைத் தோ்வு செய்து, அதிபரின் ஒப்புதலுக்கு அந்தக் குழு அனுப்பி வைத்தது. அதைத் தொடா்ந்து, ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

7. ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம்பிடித்த ‘ஜெய் பீம்’

நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், ‘ஜெய் பீம்’ கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பல தரப்புகளிடமிருந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியப் படமாகாவும் அறிவிக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற படங்களில் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படமாகவும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

பல்வேறு சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டுக் கொண்டு வரும் நிலையில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஆஸ்கர் விருது படங்களுக்கான தகுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 276 படங்கள் போட்டியிட்டுள்ள இதன் இறுதிப்பட்டியல் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்படும். ஏற்கனவே, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

8. தமிழகம் முழுவதும் கூட்டுக் குடிநீர், பாதாள சாக்கடை உட்பட ரூ.662 கோடி திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்: ரூ.8.93 கோடியில் 5 புதிய பணிகளுக்கு அடிக்கல்

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.662.22 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள 17 திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், திருப்பூர் ஒன்றியங்களில் 155 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.99.24 கோடி, கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்தில் 274 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.81.41 கோடி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி (தெற்கு), பொள்ளாட்சி (வடக்கு), கிணத்துக்கிடவு ஒன்றியங்களில் 212 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.69.31 கோடி, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் ராயக்கோட்டை மற்றும் 28 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.8.46 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நாமக்கல் நகராட்சிக்கு ரூ.185.24 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டப் பணிகள் முடிவுற்றுள்ன.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் ரூ.30.11 கோடி, எஸ்.கண்ணனூர் பேரூராட்சியில் ரூ.19.45 கோடி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியில் ரூ.51.50 கோடி, தஞ்சை மாவட்டம்வல்லம் பேரூராட்சியில் ரூ.34.51 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் தருவைக்குளம் உரக்கிடங்கு பகுதியில்ரூ.35.84 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ்ரூ.11.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட சிவகுளம், முள்ளிக்குளம், மீளவிட்டான் குளம், மதுரை மாநகராட்சி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு நிதியின் கீழ் மதுரை மாநகராட்சி, குருவிக்காரன் சாலையில் ரூ.23.17 கோடியில் தரைப்பாலம் உயர்மட்ட பாலமாக மாற்றியமைப்பு ஆகிய திட்டங்களும் முடிவுற்றுள்ன.

திண்டுக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கரூர் சாலை, பெஸ்கி காலேஜ் எதிர்புறம் ரூ.70 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுரம் செயலாக்க மையக் கட்டிடம், கோவை மாநகராட்சி கரும்புக் கடைதெற்கு மண்டலத்தில் ரூ.75 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார மையக் கட்டிடம், ரூ.77 லட்சத்தில் காளப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், ரூ.50 லட்சத்தில் கே.கே.புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள உணவுக்கூடம் என மொத்தம் ரூ.662.22 கோடி மதிப்பிலான 17 முடிவுற்ற திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி திருவள்ளுவர் சாலையில் ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட உள்ள நூலகம், அறிவுசார் மையம், கமலா நேரு மருத்துவமனை சாலையில் ரூ.1.40 கோடியில் நகர சமுதாய சுகாதார மையமாக மேம்படுத்தும் பணி, ஓசூர் மாநகராட்சி நேரு நகரில் ரூ.1.03 கோடியில் நகர்ப்புற வீடற்றவர்களுக்கான கட்டிடம், காமராஜ் காலனியில் ரூ.2.50 கோடியில் நூலகம், அறிவுசார் மையம், மத்திகிரி பகுதியில் ரூ.1.50 கோடியில் அமைக்கப்பட உள்ள நவீனஎரிவாயு தகனமேடை என ரூ.8.93 கோடியிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

9. மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் இணைப்புச் சாலை இனி ‘செம்மொழிச் சாலை’ – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் சோழிங்கநல்லூர் இணைப்புச் சாலை இனி ‘செம்மொழிச் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று செம்மொழி விருது வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடந்த 2010 முதல் 2019-ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஆற்றிய உரை: “தமிழுக்கும் அமுதென்றுபேர்- அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர்” என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளை நெஞ்சில் ஏந்தி, இந்த விழாவின் மேடையில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன். தமிழுக்குச் செம்மொழித் தகுதி ஏற்பட வேண்டும் என்பது தமிழறிஞர்களின் நூற்றாண்டுக் கனவு. அந்தக் கனவை நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அத்தகைய தலைவரின் பெயரால் அமைந்திருக்கக்கூடிய செம்மொழித் தமிழாய்வு விருதுகள், அதை விழாவாக, அதிலும் குறிப்பாக, அண்ணா பெயரில் அமைந்திருக்கக்கூடிய இந்த நூலகத்தின் அரங்கத்தில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அண்ணனாகவும் தம்பியாகவும் இருந்து தமிழுக்குத் தொண்டாற்றிய இரண்டு பெருமக்களின் நினைவை ஏந்தி இந்த விழா மேடையில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன். தமிழ் தொன்மையான மொழி என்பதைத் தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. உலகம் முழுவதும் இருக்கும் மொழியியல் அறிஞர்கள், இனவியல் அறிஞர்கள் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் உண்மை இது.

தமிழ் குறிப்பிட்ட நாட்டு மக்கள் பேசும் மொழியாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது நம்முடைய தமிழ் மொழியானது. நிலத்துக்கு, மண்ணுக்கு, இயற்கைக்கு, மக்களுக்கு, பண்பாட்டுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கக்கூடிய மொழி. தமிழைப் பேசும் போது இனிமையாக இருக்கிறது. தமிழைக் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது. ஏன், ‘தமிழ்’ என்று சொல்லும்போதே இனிமையாக இருக்கிறது. தமிழ் என்றாலே இனிமை என்றுதான் பொருள். ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்’ என்று பிங்கலநிகண்டும் கூறுகிறது.தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. தமிழ், எந்த மொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல. தமிழில் இருந்துதான் ஏராளமான மொழிகள் உருவாகியுள்ளன. இப்படிப் பல மொழிகளை உருவாக்கும் திறன்கொண்ட மொழிதான், நமது தாய்மொழியான தமிழ். தமிழ், தமிழரசி, தமிழரசன் என்று மொழியின் பெயரையே பெயராக வைத்துக்கொள்ளும் அளவுக்கு பற்று நம் இனத்தில் இருக்கிறது. மொழிக்காக உயிரைத் தந்த தியாகிகளைப் பெற்ற மொழியும் நம் தமிழ்மொழி ஆகும்.

இலக்கியச் செழுமையும் இலக்கண அறிவும் கொண்ட மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் அறிஞர்கள் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. அந்தக் கனவை நிறைவேற்றி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள், மத்திய அரசால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், அன்றைய மத்திய அரசால் 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்த நிறுவனம், மைசூரில், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இருந்து செயல்பட்டது. 2008-ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் முதல் சென்னைக்கு இந்த நிறுவனம் மாற்றப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கும் காரணமாக இருந்தவர் தலைவர் கருணாநிதி.

சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத்தை அவர், கடந்த 2008-ஆம் ஆண்டு சூன் 30-ஆம் திறந்து வைத்தார். செம்மொழி நிறுவனத்துக்கு எனத் தனியாக ஒரு கட்டடம் அமைய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார், அதற்காக 2007-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் நாள் சென்னை பெரும்பாக்கத்தில் 16 ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். சுமார் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அந்த இடத்தை சமப்படுத்தி வழங்கினோம்.

அந்த இடத்தில் 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசு மாபெரும் கட்டடம் அமைத்துத் தந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி அந்தக் கட்டடத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார். காணொலி வாயிலாக நடந்த அந்த விழாவுக்கு நான் முன்னிலை வகித்துப் பேசும்போது – ‘ இந்தியப் பிரதமர் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார்கள். அதற்காகத் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், அரசின் சார்பிலும், தனிப்பட்ட என் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுச் சொன்னேன். ”தலைவர் கருணாநிதி இன்று இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின்போது தமிழுக்கு இத்தகைய சிறப்பு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுக் காட்டியிருப்பார்கள். அதன் பிறகு நானும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் பெரும்பாக்கம் சென்று தமிழாய்வு நிறுவனத்தைப் பார்வையிட்டோம். உண்மையில் மிகச் சிறப்பாக அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொடக்கம் முதல் இன்று வரை இதன் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. தொல் பழங்காலம் முதல் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த நிறுவனம், தமிழ்மொழி ஆய்விலும் அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித் தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்நிறுவனம் கருதிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு, 2008-ஆம் ஆண்டு சூலை 24-ஆம் நாள், தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை தலைவர் கருணாநிதி வழங்கினார். ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’ என்ற பெயரால் ஓர் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை சார்பில் தகுதிசால் தமிழறிஞர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இந்தியாவிலேயே மிக உயரிய விருதாக, பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்டது இந்த விருது. பாராட்டு இதழும், தலைவர் கருணாநிதியின் உருவம் பொறித்த நினைவுப்பரிசும் வழங்கப்படும். முதல் விருது 2010, ஜூன் 23-அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அன்றைய குடியரசுத் தலைவரால் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘பேராசிரியர் அஸ்கோபார்ப்போலா’க்கு வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இந்த விருதைத் தொடர்புடைய அரசுகள் வழங்கி இருக்க வேண்டும். அதை இந்த மேடையில் பேசி நான் அரசியலாக்க விரும்பவில்லை.

தமிழுக்கு, தமிழறிஞர்களுக்குச் செய்ய வேண்டிய பாராட்டுகள், மரியாதையில் கூட அரசியல் புகுந்ததன் காரணமாக, 2011-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.வேறு எதற்காக இல்லாவிட்டாலும் , தமிழறிஞர்களுக்கு விருது கொடுப்பதற்காகவாவது, தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்ததை நினைத்து இன்றைய நாளில் நான் பெருமைப்படுகிறேன். எப்போதும் தமிழுக்காகவே உழைத்திடும் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதெல்லாம், தமிழின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்,நமது மாநிலத்துக்கு மொழியின் பெயரால் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது, திமுக ஆட்சியில்தான். தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுவி, அதனை மாநிலப் பாடல் ஆக்கியதும் திமுக ஆட்சியில்தான்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளைப் அண்ணா தலைமையில் தொடங்கி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரை நடத்தி, தமிழை உலகளவில் கொண்டு சென்றது. அய்யன் வள்ளுவர் ,அவ்வையார் முதலான பழங்காலத் தமிழ்ப் புலவர்கள் தொடங்கி, கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் வரை, திருவுருவச்சிலை நிறுவியதும் திமுக ஆட்சியில்தான். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு சமூகநீதி வழியில் உயர்கல்வியில் இடஒதுக்கீடு தந்தது திமுக ஆட்சிதான்.வள்ளுவருக்குச் சென்னையில் கோட்டமும் , குமரியில் 133 அடியில் வானுயர்ந்த சிலையும் நிறுவி உலகமே அண்ணாந்து பார்க்க வைத்த ஆட்சிதான் திமுகஆட்சி.சுவடிகளில் இருந்து புத்தகங்களுக்குத் தமிழ் மாறியது போல், தமிழை இணையத்துக்குக் கொண்டு செல்ல 1999-லேயே தமிழ் இணைய மாநாடு நடத்தியதும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தை நிறுவி, இன்று உலகில் எங்கிருந்தாலும், தமிழ் இலக்கண, இலக்கியங்களை அனைவரும் படிக்கும் அளவிற்குத் தமிழை இணையப்படுத்தியதும் திமுக ஆட்சி தான்.இப்படி என்னால், ஒரு நீண்ட பட்டியலை சொல்லிக் கொண்டிருக்க முடியும்.

இப்படித் திமுக ஆட்சி தமிழுக்கு ஆற்றிய பணிகளின் தொடர்ச்சியாகத் தான் இந்த விழாவில் சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி “செம்மொழிச் சாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்படும். செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய, தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும்.விருது பெற்ற தமிழறிஞர்கள் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். உங்களுக்கு விருது வழங்கியதன் மூலமாகச் செம்மொழி நிறுவனம் பெருமை அடைகிறது, ஏன், நானும் பெருமை அடைகிறேன், தமிழ்நாடு அரசும் பெருமை அடைகிறது. இந்த விருதின் மூலமாகத் தமிழ்மொழி மேலும் சிறப்படையப் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை நீங்கள் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பழமைக்குப் பழமையாய், புதுமைக்கு என்றும் புதுமையாய் இருக்கக்கூடிய மொழி நம்முடைய தமிழ் மொழி. இந்த மொழி குறித்த ஆய்வுகள் தமிழ்நாட்டோடு, இந்திய எல்லையோடு முடிந்துவிடாமல் உலகளாவியதாக அமைய வேண்டும். உலக மொழியியல் கோட்பாடுகளை உள்ளடக்கியதாக நமது ஆய்வுகள் அமைய வேண்டும். மொழியை ஒரு பண்பாடாகச் சொல்வது உலக மரபாகவே உள்ளது.’நோம்சாம்ஸ்கி’ போன்ற உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள், மொழியை மூளையின் ஓர் உறுப்பு என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். “குழந்தையின் மூளைக்குள் ஒரு மொழியறிவு இருக்கிறது, இது மனித இனத்துக்கே உரியது” என்று அவர் சொல்கிறார். ‘தமிழ் எங்கள் இளமைக்குப் பால்’ என்று எப்போதோ சொல்லிவிட்டார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

உங்களது ஆய்வுகள் அறிவுப்பூர்வமானதாக மட்டுமில்லாமல் உணர்வுப்பூர்வமானதாகவும் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் தேடி வரக்கூடிய இடமாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிச்சயமாக மாறும். அப்படி உயர்ந்து நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!’ என்று அண்ணா காட்டிய பாதையில், தலைவர் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையோடு நடைபோடும் அரசு, தமிழை ஆட்சிமொழியாகவும் வழக்காடு மொழியாகவும் மேலும் உயர்த்திட தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதைக் கூறி, தமிழ் வாழ்க! செம்மொழித் தமிழ் வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன் எனத் தெரிவித்தார்.

விருதுகள்: முன்னதாக இந்த விழாவில், 2011 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் பொன். கோதண்டராமனுக்கும் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்), 2012 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்திக்கும் (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்), 2013 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் ப. மருதநாயகத்துக்கும் (மேனாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், மேனாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்), 2014 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கு. மோகனராசுக்கும் (மேனாள் பேராசிரியர் & தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை), 2015 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை) 2016ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கா. ராஜனுக்கும் (மேனாள் பேராசிரியர், வரலாற்றுத்துறை, புதுவைப் பல்கலைக்கழகம்) 2018 ஆம் ஆண்டிற்கான விருதினைக் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக்கல்லூரி, சென்னை) 2019 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கு. சிவமணிக்கும் (மேனாள் முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை) முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை வழங்கினார். விருதாளர்களுக்கு விருதுடன் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ், வெண்கலத்தாலான மு.கருணாநிதியின் திருவுருவச்சிலையையும் வழங்கி முதல்வர் கௌரவித்தார். இந்த விழாவில் அமைச்சர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு துறைச் செயலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

10. பருவநிலை மாற்றம்: இந்திய – அமெரிக்க நிபுணா்கள் ஆலோசனை

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள தொழில்நுட்பத்தின் மூலம் கரியமில வாயுவை சேகரிப்பது மற்றும் பயன்பாட்டுத் தீா்வுகளின் சவால்கள் குறித்து இந்தியா, அமெரிக்காவைச் சோ்ந்த நிபுணா்கள் ஆலோசனை நடத்தினா்.

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும், அமெரிக்காவின் எரிசக்தி துறையும் இணைந்து இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.

உலகில் அதிவிரைவாக வளா்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதோடு பருவநிலை இலக்குகளை எதிா்கொள்வதற்கான இந்தியாவின் செயல்பாடு மற்றும் விருப்பங்கள் குறித்து அண்மையில் கிளாஸ்கோவில் நிறைவடைந்த பங்கேற்பாளா்கள் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்ததை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளா் சந்திரசேகா் இந்தக் கூட்டத்தில் நினைவுகூா்ந்தாா். “2070-ஆம் ஆண்டுக்குள் கரிய மில வாயு வெளியேற்றமே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பிரதமா் உத்தரவிட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் நீடித்த வளா்ச்சி தொடரும் நிலையில், கரிய மில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கு அதனை சேகரிப்பது, பயன்படுத்துவது, இருப்பில் வைப்பது போன்ற முக்கிய வழிமுறைகளும் காணப்படுகின்றன என்று அவா் கூறினாா்.

இந்த பயிலரங்கில் பேசிய அமெரிக்காவின் படிம எரிசக்தி மற்றும் கரியமில வாயு அலுவலகம், எரிசக்தி துறை ஆகியவற்றின் துணை அமைச்சா் பொறுப்பு வகிக்கும் ஜெனிபா் வில்காக்ஸ், பருவநிலை மாற்றம், தூய்மையான எரிசக்தி இலக்குகளை எதிா்கொள்ள புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பங்குதாரராக இந்தியா உள்ளது என்றாா். “

தூய்மை எரிசக்தி தொடா்பாக அமெரிக்காவின் முன் முயற்சிகளை எடுத்துரைத்த வில்காக்ஸ் இது உலகளாவிய நெருக்கடி என்றும் இதற்கான தொழில்நுட்பங்களை உலகளாவிய பங்கேற்பு தேவை என்றும் கூறினாா்.

1. Which country launched an inter–city train service using Indian–funded coaches?

A) Afghanistan

B) Sri Lanka 🗹

C) Nepal

D) Bangladesh

  • Sri Lanka recently launched an inter–city train service, using the Diesel Multiple Units procured from India. The train service will run across the country, connecting the capital city of Colombo with Kankesanthurai of the Yaazhpaanam Peninsula, which has a Tamil–majority population.

2. What is the name of the new Department created by the Reserve Bank in 2022?

A) Department of Digital Currency

B) Department of Fin–tech 🗹

C) Department of Data Science

D) Department of AI

  • The Reserve Bank of India (RBI) has created a new department named “Department of Fin–Tech”, to promote innovation in the fin–tech sector. It also aims to identify the challenges and opportunities associated with it. In 2018, RBI created a financial technology within its Department of Payment Settlement Systems.
  • The new fintech department will also provide framework for further research on the subject and help in policy interventions of RBI.

3. Which Union Ministry released the ‘Harmonised Guidelines and Standards for Universal Accessibility in India 2021’?

A) Ministry of Housing and Urban Affairs 🗹

B) Ministry of Social Justice and Empowerment

C) Ministry of Law and Justice

D) Ministry of Home Affairs

  • The Central Public Works Department (CPWD), under the Ministry of Housing and Urban Affairs (MoHUA) released the Harmonised Guidelines and Standards for Universal Accessibility in India 2021. This is a revision to a set of guidelines for barrier–free environment released in 2016.
  • It has been drafted by a team of the Indian Institute of Technology–Roorkee and the National Institute of Urban Affairs of the MoHUA.

4. Which state constituted the Justice Hema Commission?

A) Tamil Nadu

B) Kerala 🗹

C) West Bengal

D) Gujarat

  • In 2017, the Kerala Government formed a three–member commission headed by Justice K Hema (retired), former bureaucrat KB Valsalakumari and veteran actress Sharada as members.
  • The commission was formed to scrutinise problems faced by women in the Malayalam film industry. The Government in Kerala recently formed a three–member panel to study and work out a plan to implement the recommendations of the Justice Hema Commission report.

5. ‘Xylophaga nandani’, which was recently identified, is a species of ____?

A) Mollusc 🗹 B) Fish

C) Turtle D) Snake

  • A team of researchers from Kerala and Brazil have identified a new species of a rare, deep–sea mollusc named ‘Xylophaga nandani’. The mollusc belonging to the family Xylophagaidae has been identified from the eastern Arabian Sea. The wood–boring, tiny species has been named after Proffessor Bijoy Nandan, Dean, faculty of Marine Sciences, Cochin University of Science and Technology (CUSAT)

6. ‘Magh Mela’ is an annual religious fair held in which state?

A) Uttar Pradesh 🗹

B) Bihar

C) Gujarat

D) West Bengal

  • The 47–day annual religious fair ‘Magh Mela–2022’ has been inaugurated with thousands of pilgrims taking holy dip on the banks of the Sangam in Prayagraj. Sangam is a sacred confluence of the three rivers namely Ganga, Yamuna and the mythical Saraswati. The fair is usually held to mark the occasion of Makar Sankranti.

7. ‘Hydrophis gracilis‘, a rare sea snake has been spotted in which state/UT?

A) Kerala 🗹

B) Maharashtra

C) Goa

D) Andhra Pradesh

  • During a water bird census, an uncommon sea snake was spotted by a team of bird watchers. Hydrophis gracilis, the small–headed sea snake, was spotted at the Perumathura coast in Thiruvananthapuram, Kerala. Members of the Thiruvananthapuram–based forum of bird watchers and nature lovers, Warblers and Waders, were carrying out the survey as part of the yearly water–bird census.

8. What is the main objective of the ‘James Webb space telescope’?

A) To find out about the Surface of the Sun

B) To find out about the origin of the Universe 🗹

C) To study the most distant known galaxies

D) To explore the structure of planetary system

  • NASA launched the James Webb space telescope on December 25, 2021. It is a joint collaboration between NASA, the European Space Agency (ESA), and the Canadian Space Agency. The telescope recently completed its final deployment which was of the primary mirror.
  • The mission of the James Webb telescope is the largest space telescope ever built and its mission is to help scientists find out more about the origin of the universe. It will capture infrared light from celestial objects with high resolution.

9. What is the present status of China at the World Trade Organization?

A) Upper Middle–Income country

B) Developed Country

C) Developing Country 🗹

D) Least Developed Country

  • China completed 20 years at the World Trade Organisation and its present status at the ‘World Trade Organization (WTO)’ is ‘Developing Country’. A number of countries are raising concerns that China being an upper middle–income nation deriving benefits reserved for developing countries under WTO norms.

10. Which Union Ministry announced a dedicated Grievance Cell, for uninterrupted supply of essentials?

A) Ministry of Home Affairs

B) Ministry of Food Processing Industries 🗹

C) Ministry of Textiles

D) Ministry of Road Transport and Highways

  • Ministry of Food Processing Industries has launched a dedicated grievance cell for the food and food–related industry to ensure smooth operations and uninterrupted supply of essentials for all citizens. The Ministry had set up a similar grievance cell during the first wave when the national lockdown was imposed in the country.
  • The Ministry said that industry players and people can send their concerns and queries on covidgrievance–mofpi@gov.in.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!