TnpscTnpsc Current Affairs

22nd December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

22nd December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 22nd December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

22nd December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. நிதியமைச்சகத்தின் அண்மைய தரவுகளின்படி, 2022–23இன் முதற்பாதியில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்னவாக இருந்தது?

அ. 7.7%

ஆ. 8.7%

இ. 9.7%

ஈ. 10.7%

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. 9.7%

  • நடுவண் நிதியமைச்சகத்தின் அண்மைய தரவுகளின்படி, 2022–23இன் முதல் பாதியில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சராசரியாக 9.7%ஆக இருந்தது. இது நிதி அமைச்சகத்தின் மத்திய ஆண்டு செலவு மற்றும் வருவாய் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகளாவிய பேரினப் பொருளியல் நிலைமை அரசாங்கத்தின் கணிப்புகளைச் சீர்குலைப்பதால், நிதிப்பொறுப்பு மற்றும் வரவுசெலவுத்திட்ட மேலாண்மைச் சட்டத்தால் அறிவுறுத்தப் –படுகிற நடுத்தர–கால செலவினக் கட்டமைப்பை முன்வைக்க இயலவில்லை என்று நிதி அமைச்சகம் கூறியது.

2. 2023 பிப்ரவரியில், இந்தோ–பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் நான்கில் மூன்று தூண்கள் குறித்து சிறப்புப் பேச்சுவார்த்தைச் சுற்று நடத்தப்படும் நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. இந்தியா

இ. பிரான்ஸ்

ஈ. ஜெர்மனி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. இந்தியா

  • 2023 பிப்ரவரி மாதத்தில், அமெரிக்கா தலைமையிலான இந்தோ–பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் நான்கில் மூன்று தூண்கள் குறித்த சிறப்புப் பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தவுள்ளது. வர்த்தகம், விநியோகச்சங்கிலி, வரி & ஊழல் எதிர்ப்பு மற்றும் தூய ஆற்றல் ஆகியன அந்நான்கு தூண்களாகும். 2022 செப்டம்பரில் நடந்த முதல் நேரடி அமைச்சர்கள் சந்திப்பின்போது, இந்தியா மூன்று தூண்களை மட்டுமே இணைக்க முடிவு செய்து வர்த்தக தூணில் இருந்து தாமாக விலகிக்கொண்டது.

3. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் PSEகளின் முதலீடு விலகல் மற்றும் உத்திசார் விற்பனை ஆகியவற்றின்மூலம் அரசாங்கத்தால் திரட்டப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு?

அ. ரூ 1.01 இலட்சம் கோடி

ஆ. ரூ 2.02 இலட்சம் கோடி

இ. ரூ.3.03 இலட்சம் கோடி

ஈ. ரூ.4.04 இலட்சம் கோடி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. ரூ.4.04 இலட்சம் கோடி

  • 2014ஆம் ஆண்டு முதல் பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடு விலகல் மற்றும் உத்திசார் விற்பனைமூலம் `4.04 இலட்சம் கோடியை அரசாங்கம் திரட்டியுள்ளது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 59 உருப்படிகளில் ‘offer for sale’மூலம் மிகப்பெரிய தொகையான `1.07 இலட்சம் கோடி திரட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து ‘Exchange Traded Fund’மூலம் 10 தவணைகளாக `98,949 கோடிக்கு பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. ஏர் இந்தியா உட்பட 10 நிறுவனங்களின் உத்திசார் விற்பனைமூலம் `69,412 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2014–15இலிருந்து 17 CPSEகள் பட்டியலிடப்பட்டுள்ளன; இதன்மூலம் `50,386 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

4. நடப்பு நிதியாண்டில் PMEGP திட்டத்தின்கீழ், அதிக எண்ணிக்கையிலான பணிகளை உருவாக்கிய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?

அ. உத்தரகாண்ட்

ஆ. ஜம்மு–காஷ்மீர்

இ. கோவா

ஈ. புது தில்லி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஜம்மு–காஷ்மீர்

  • நடப்பு நிதியாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின்கீழ் (PMEGP) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அதிக எண்ணிக்கையிலான பணிகளை ஜம்மு–காஷ்மீர் உருவாக்கியுள்ளது. நடுவண் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சகத்தின் (MSME) இந்தத் திட்டம் காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்துறைகள் ஆணையத்தால் (KVIC) செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல், ஜம்மு மற்றும் காஷ்மீரில் 7,851 உதவித்திட்டங்கள்மூலம் 62,808 பணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

5. ‘2022 in Nine Charts’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. உலக பொருளாதார மன்றம்

ஆ. பன்னாட்டு செலாவணி நிதியம்

இ. உலக வங்கி

ஈ. ஆசிய வளர்ச்சி வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. உலக வங்கி

  • உலக வங்கியானது ‘2022 in Nine Charts’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கடந்த 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகம் அதன் பெரும சரிவிறக்கத்தில் இருப்பதாகவும், நடப்பு 2022ஆம் ஆண்டின் இறுதியில் 685 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் வாழக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2020–க்குப் பிறகு, கடந்த இருபதாண்டுகளில் வறுமைக் குறைப்புக்கான மோசமான ஆண்டாக 2022 உள்ளது.

6. ஸ்வர் தரோஹர் விழாவை நடத்திய நடுவண் அமைச்சகம் எது?

அ. கலாச்சார அமைச்சகம்

ஆ. சுற்றுலா அமைச்சகம்

இ. MSME அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. கலாச்சார அமைச்சகம்

  • இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், ஸ்வர் தரோஹர் அறக்கட்டளையுடன் இணைந்து கலாஞ்சலியின்கீழ், ‘ஸ்வர் தரோஹர் திருவிழா’வைத் தொடங்கியது. இது ஒரு இசை, கலை மற்றும் இலக்கிய விழாவாகும்; இது இந்தியாவின் தனித்துவமான கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் இந்திய மாநிலங்களின் வளமான இலக்கியக் கலை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. சமீப செய்திகளில் இடம்பெற்ற மானு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. ஹாக்கி

ஆ. துப்பாக்கி சுடுதல்

இ. ஸ்குவாஷ்

ஈ. மட்டைப்பந்து

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. துப்பாக்கி சுடுதல்

  • 65ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மானு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோர் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி பட்டத்தை வென்றனர். கர்நாடகத்தின் திவ்யா TS மற்றும் இம்ரோஸ் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும், பஞ்சாப் மற்றும் ONGC அணிகள் வெண்கலப்பதக்கங்களையும் வென்றன. ஜூனியர் கலப்பு அணி பிஸ்டல் பிரிவில், உத்தரகாண்டின் யஷஸ்வி மற்றும் அபினவ் ஜோடியை வீழ்த்தி உத்தர பிரதேசத்தின் அஞ்சலி மற்றும் சாகர் ஜோடி தங்கம் வென்றது. மகாராஷ்டிராவும், ஆந்திர பிரதேசமும் வெண்கலப்பதக்கங்களை வென்றன.

8. சைத்திய பூமி என்பது கீழ்க்காணும் எந்தத் தலைவரின் நினைவிடமாகும்?

அ. Dr B R அம்பேத்கர்

ஆ. சர்தார் வல்லபாய் படேல்

இ. இரவீந்திரநாத் தாகூர்

ஈ. ஜவஹர்லால் நேரு

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Dr B R அம்பேத்கர்

  • ‘இந்திய மாமணி’ Dr B R அம்பேத்கரின் 67ஆவது ‘மகாபரிநிர்வான தினம்’ டிசம்பர்.06 அன்று அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மும்பையின் தாதரில் அமைந்துள்ள சைத்திய பூமியில் கூடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். சைத்திய பூமி என்பது ஒரு பௌத்த சைத்தியமாகும். இருபதாம் நூற்றாண்டின் இந்திய மேதையும் இந்திய அரசியலமைப்பின் தலைமைச் சிற்பியுமான Dr B R அம்பேத்கரின் தகனம் செய்யப்பட்ட இடந்தான் சைத்திய பூமி.

9. இந்தியாவின் முதல் தங்க ATM திறக்கப்பட்ட நகரம் எது?

அ. வாரணாசி

ஆ. ஐதராபாத்

இ. லக்னோ

ஈ. கொச்சி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஐதராபாத்

  • இந்தியாவின் முதல் தங்க ATMஉம் உலகின் முதல் நிகழ்நேர தங்க ATMஉம் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தங்க ATMமூலம் வாடிக்கையாளர்கள் தங்கநகைக் கடைக்குச் செல்லாமல் தங்கம் வாங்கவியலும். தங்கம் வாங்கல் மற்றும் விற்றலில் நிபுணத்துவம் பெற்ற கோல்ட்சிக்கா நிறுவனம், ஐதராபாத்தைச் சார்ந்த துளிர் நிறுவனமான, ‘Open Cube’இன் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த ATMஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ATMஇல், வாங்குபவர் விலையைத் தேர்ந்தெடுத்து, அந்தத் தொகைக்கு மதிப்புள்ள தங்கத்தை வாங்கலாம்.

10. 2023ஆம் ஆண்டு FIH ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பையை நடத்தும் மாநிலம் எது?

அ. ஒடிஸா

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. மேற்கு வங்கம்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. ஒடிஸா

  • 2023ஆம் ஆண்டு FIH ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை, ஒடிஸா மாநிலத்தின் புவனேசுவரம்–ரூர்கேலாவில் 2023 ஜனவரி.13 முதல் நடத்தப்படும். ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், FIH ஒடிஸா ஹாக்கி ஆடவர் உலகக்கோப்பை–2023இன் கோப்பை சுற்றுப்பயணத்தைத் தொடக்கிவைத்தார். அக்கோப்பை 13 மாநிலங்கட்கும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கும் பின்னர் ஒடிஸா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 48 தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு விருதுகள்.

தமிழ்மொழிக்குச் சிறந்த பங்களிப்பைச் செய்துவரும் தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கப்பட்டது. 38 பேருக்கு ‘தமிழ்ச்செம்மல்’ விருதுகளும், 10 பேருக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பாளர்’களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.

‘தமிழ்ச்செம்மல்’ விருது தலா `25,000 காசோலை, பாராட்டுச்சான்றிதழ், பொன்னாடை ஆகியன அடங்கியது. ‘சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது’ தலா `2 இலட்சத்துக்கான காசோலை, தகுதியுரை, பொன்னாடை ஆகியன அடங்கியது.

2. நெல்லை செ திவான் உள்பட 8 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை.

நெல்லை செ திவான் உள்ளிட்ட 8 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. தமிழறிஞா்களும், எழுத்தாளர்களுமான நெல்லை செ திவான், விடுதலை இராஜேந்திரன், நா மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அதற்காக அவர்களின் மரபுரிமையர் ஒவ்வொருவருக்கும் தலா `15 இலட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், மறைந்த தமிழறிஞர் ‘நெல்லை’ கண்ணன் உள்ளிட்ட ஐந்து எழுத்தாளர்களின் நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ‘நெல்லை’ கண்ணன் நூல்களுக்கு `15 லட்சமும், கந்தர்வன் என்ற நாகலிங்கம், சோமலெ, முனைவர் ந ராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் நூல்களுக்கு தலா `10 இலட்சமும் வழங்கப்பட்டன. இந்தத் தொகைகள் தமிழறிஞர்களின் மரபுரிமையர்களிடம் அளிக்கப்பட்டது.

22nd December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. As per Finance Ministry’s latest data, what is India’s gross domestic product growth in the first half of 2022–23?

A. 7.7%

B. 8.7%

C. 9.7%

D. 10.7%

Answer & Explanation

Answer: C. 9.7%

  • As per the Finance Ministry’s latest data, India’s gross domestic product growth in the first half of 2022–23 is averaged to 9.7%. This was announced in the Ministry’s mid–year expenditure and revenue statement. The ministry said it could not present the medium–term expenditure framework (MTEF) as mandated by the Fiscal Responsibility and Budget Management Act, as the global macro–economic situation disrupted the government’s projections.

2. Which country is the host of special negotiation round on three of the four pillars of Indo–Pacific Economic Framework (IPEF) in February 2023?

A. USA

B. India

C. France

D. Germany

Answer & Explanation

Answer: B. India

  • India will host the next special negotiation round on three of the four pillars of the United States–led Indo–Pacific Economic Framework (IPEF) on February 2023. IPEF has four pillars in all namely trade, supply chain, tax and anti–corruption and clean energy. During the first–ever in–person ministerial in September 2022, India decided to join only three pillars, and opted out of the trade pillar.

3. What is the total amount raised by the Government through disinvestment and strategic sale of PSEs since 2014?

A. Rs 1.01 lakh crores

B. Rs 2.02 lakh crores

C. Rs 3.03 lakh crores

D. Rs 4.04 lakh crores

Answer & Explanation

Answer: D. Rs 4.04 lakh crores

  • The government has raised over Rs 4.04 lakh crore through disinvestment and strategic sale of public sector enterprises since 2014, the Finance Ministry said. The largest amount of over Rs 1.07 lakh crore was raised through offer for sale in 59 cases. This was followed by a stake sale through Exchange Traded Fund (ETF) in 10 tranches, amounting to Rs 98,949 crore. Strategic sales in 10 companies, including Air India, yielded Rs 69,412 crores. 17 CPSEs were listed since 2014–15, which yielded Rs 50,386 crore.

4. Which state/UT generated most number of jobs under the PMEGP scheme in the current fiscal year?

A. Uttarakhand

B. Jammu and Kashmir

C. Goa

D. New Delhi

Answer & Explanation

Answer: B. Jammu and Kashmir

  • Jammu & Kashmir has generated the most number of jobs among all the states and UTs under the Prime Minister’s Employment Generation Programme (PMEGP) in the current fiscal year. The scheme by the Ministry of Micro, Small and Medium Enterprises (MSME) is implemented by Khadi and Village Industries Commission (KVIC). Since 2008, 62,808 jobs were created by 7,851 assisted projects in Jammu & Kashmir.

5. Which institution released the ‘2022 in Nine Charts’ report?

A. World Economic Forum

B. International Monetary Fund

C. World Bank

D. Asian Development Bank

Answer & Explanation

Answer: C. World Bank

  • The World Bank released a report titled ‘2022 in Nine Charts’, in which it said that the world is in its steepest slowdown since 1970 and 685 million people could be living in extreme poverty by the end of 2022. This would make 2022 the second–worst year for poverty reduction in the past two decades, after 2020.

6. Which Union Ministry organised the Swar Dharohar festival?

A. Ministry of Culture

B. Ministry of Tourism

C. Ministry of MSME

D. Ministry of Home Affairs

Answer & Explanation

Answer: A. Ministry of Culture

  • Ministry of Culture, Government of India in collaboration with Swar Dharohar Foundation inaugurated “Swar Dharohar Festival” under Kalanjali. It is a Music, Art and Literature Festival which was organised to showcase the iconic art and culture of India and, the rich literary Art and Heritage of Indian States.

7. Manu Bhaker and Sarabjot Singh, who were in the news recently, are associated with which sports?

A. Hockey

B. Shooting

C. Squash

D. Cricket

Answer & Explanation

Answer: B. Shooting

  • Manu Bhaker and Sarabjot Singh won the 10 metre air pistol mixed team title at the 65th National Shooting Championship Competitions. Karnataka’s Divya TS and Imroz clinched silver while Punjab and ONGC shared the bronze medals. In the junior mixed team pistol, the gold was won by Uttar Pradesh’s Anjali and Sagar after beating Uttarakhand’s Yashasvi and Abhinav. Maharashtra and Andhra Pradesh won the bronze medals.

8. Chaityabhoomi is the resting place of which leader?

A. Dr B R Ambedkar

B. Sardar Vallabhbhai Patel

C. Rabindranath Tagore

D. Jawaharlal Nehru

Answer & Explanation

Answer: A. Dr B R Ambedkar

  • Bharat Ratna Dr BR Ambedkar’s 67th Mahaparinirvan Diwas is observed on December 6. Lakhs of followers from all over the country gathered at Chaityabhoomi in Dadar in Mumbai to pay tribute to the great leader. Chaitya Bhoomi is a Buddhist chaitya and the cremation place of B. R. Ambedkar, the 20th–century Indian intellectual and the chief architect of the Indian Constitution.

9. India’s first gold ATM has been inaugurated in which city?

A. Varanasi

B. Hyderabad

C. Lucknow

D. Cochin

Answer & Explanation

Answer: B. Hyderabad

  • India’s first gold ATM and world’s first real time gold ATM has been launched in Hyderabad. The gold ATM enables customers to buy gold without going to a physical jewellery store. Goldsikka, a company that specialises in buying and selling of gold, introduced the ATM with technology support from a Hyderabad–based startup OpenCube. In the ATM, the buyer selects the price and gold worth the amount is released to the buyer.

10. Which state is the host of the FIH Men’s Hockey World Cup 2023?

A. Odisha

B. Andhra Pradesh

C. West Bengal

D. Karnataka

Answer & Explanation

Answer: A. Odisha

  • The FIH Hockey Men’s World Cup 2023 will be hosted by Odisha at Bhubaneswar–Rourkela from 13 January, 2023. Odisha Chief Minister Naveen Patnaik launched the trophy tour of the FIH Odisha Hockey Men’s World Cup 2023. The trophy will travel across 13 states and one Union territory and then across all districts of the state.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!