Tnpsc

22nd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

22nd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd February 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

22nd February 2021 Tnpsc Current Affairs in Tamil

  1. இந்திய சைகை மொழி அகராதியின் (Indian Sign Language Dictionary) மூன்றாவது பதிப்பில், எத்தனை சொற்கள் இடம்பெற்றுள்ளன?

அ) 5,000

ஆ) 10,000

இ) 3,000

ஈ) 4,500

  • இந்திய சைகை மொழி அகராதியின் மூன்றாம் பதிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டார். இந்தப் பதிப்பில், தினசரி வாழ்வில் பயன்படுத்தக்கூடிய 10,000 சொற்களும் கல்வி, சட்டம், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப சொற்களும் இடம்பெற்றுள்ளன. 2019’இல் வெளியிடப்பட்ட அகராதியின் இரண்டாவது பதிப்பில் 6,000 சொற்களும், 2018’இல் வெளியிடப்பட்ட முதல் பதிப்பில் 3,000 சொற்களும் இடம்பெற்றிருந்தன.

2. கீழ்க்காணும் யாருக்கு, ‘SKOCH ஆண்டின் சிறந்த முதலமைச்சர் விருது’ வழங்கப்பட்டுள்ளது?

அ) எடப்பாடி க பழனிசாமி

ஆ) பினராயி விஜயன்

இ) மம்தா பானர்ஜி

ஈ) Y S ஜெகன் மோகன் ரெட்டி

  • ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சர் Y S ஜெகன் மோகன் ரெட்டிக்கு, ‘SKOCH ஆண்டின் சிறந்த முதலமைச்சர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பல்வேறு மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முடிவுகள் குறித்த ஆண்டாய்வின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் 123’க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

3. பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் (ISA) அடுத்த தலைமை இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) அஜய் மாத்தூர்

ஆ) உபேந்திர திரிபாதி

இ) அஜய் குமார் பல்லா

ஈ) சுபாஷ் சந்திர குந்தியா

  • இந்தியா பரிந்துரைத்த அஜய் மாத்தூர், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் அடுத்த தலைமை இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், கடந்த 2017முதல் தலைமை இயக்குநராக பணியாற்றிவரும் உபேந்திர திரிபாதியை அடுத்து இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, புது தில்லியைச் சார்ந்த ஆற்றல் & ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக அஜய் மாத்தூர் பணியாற்றி வருகிறார்.

4. இந்தியாவில், பின்வரும் எவ்விடத்தில், பேராமைகளின் கூடுகள் உள்ளன?

அ) கோவா

ஆ) ஒடிஸா

இ) அந்தமான் & நிகோபார்

ஈ) மேற்கு வங்கம்

  • எழுவகை கடலாமைகளிலேயே பேராமைகள்தாம் மிகப்பெரியவை. அவை, ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் தவிர அனைத்து கடல்களிலும் காணப்படுகின்றன. இந்தியப் பெருங்கடலில், இந்தோனேசியா, இலங்கை மற்றும் அந்தமான் & நிகோபார் தீவுகளில் அவை கூடுகட்டுகின்றன. சுற்றுலா ஊக்குவிப்பு & துறைமுக மேம்பாட்டுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் இந்த இனத்தை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளன.
  • எனவே, அவற்றை இந்திய வனவுயிரி பாதுகாப்பு சட்டம், 1972’இன் அட்டவணை I’இன்கீழ் பட்டியலிடுவதன்மூலம் அவற்றுக்கு சட்டப்பூர்வ வகையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

5. மாண்டு திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) மத்திய பிரதேசம்

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) ஒடிஸா

  • மூன்றுநாள் நடைபெறும் ‘மாண்டு விழா’வானது வரலாற்றுப் புகழ்பெற்ற நகரமான மாண்டுவில் தொடங்கியது. டைனோ அட்வெஞ்சர் பூங்கா & புதைபடிவ அருங்காட்சியகத்தையும் அம்மாநிலம் திறந்துவைத்துள்ளது. மாண்டு விழாவின்போது, உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிப்பத -ற்காக கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
  • 24 தொன்மா முட்டைகள் மற்றும் தொன்மாக்களின் பல்வேறு புதைபடிவ -ங்களைக் காட்சிப்படுத்தும் நாட்டின் முதல் நவீன புதைபடிவ பூங்காவாக இந்த டைனோசர் பூங்கா அமைந்துள்ளது.

6. நாடு முழுவதுமுள்ள கவிஞர்கள் தங்கள் கவிதைகளை ஓதிக் காண்பிக்கும், ‘முஷைரா’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்யவுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) கல்வி அமைச்சகம்

ஆ) கலாச்சார அமைச்சகம்

இ) சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்

ஈ) வெளியுறவு அமைச்சகம்

  • மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகமானது, ‘முஷைரா’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்யவுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கவிஞர்கள் தங்கள் கவிதைகளை ஓதிக்காண்பிப்பார்கள்.
  • ‘ஒரே பாரதம், ஒப்பிலா பாரதம்’ என்ற கருப்பொருளில் 2021 பிப்ரவரி 20 அன்று இந்நிகழ்வு நடத்தப்படவுள்ளது. கவியரங்க நிகழ்வாக கருதப்படும் ‘முஷைரா’, இந்திய பாகிஸ்தான் கலாச்சாரத்தின் ஒருபகுதியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரம் குறித்து இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இக்கவியரங்க நிகழ்வு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

7. ‘பே ஜல் சர்வேஷன்’ என்பது பின்வரும் எந்த மத்திய அமைச்சகத் -தின் முன்முயற்சியாகும்?

அ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

இ) ஜல் சக்தி அமைச்சகம்

ஈ) உழவு மற்றும் உழவர் நல அமைச்சகம்

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது சமீபத்தில் ஜல் ஜீவன் – நகர்ப்புற இயக்கத்தின்கீழ், ‘பே ஜல் சர்வேஷன்’ என்ற ஆய்வை அறிமுகப்படுத்தியது. ஆக்ரா, பத்லாப்பூர், புவனேசுவரம், சுரு, கொச்சின், மதுரை, பாட்டியாலா, ரோதக், சூரத் மற்றும் தும்கூர் ஆகிய 10 நகரங்களில் இந்த ஆய்வு சோதனை அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீர் வழங்கல், கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளை வரைபடமாக்கல் ஆகியவற்றை இது மதிப்பீடு செய்யும்.

8. உலக பெட்ரோகோல் மாநாடு & உலக எதிர்கால எரிபொருள் உச்சிமாநாடு ஆகியவை நடத்தப்பட்ட நகரம் எது?

அ) மும்பை

ஆ) வாரணாசி

இ) புது தில்லி

ஈ) பெங்களூரு

  • 11ஆவது உலக பெட்ரோகோல் மாநாடு மற்றும் உலக எதிர்கால எரிபொருள் உச்சிமாநாட்டின் கூட்டு மாநாடு புது தில்லியில் நடத்தப்பட்டது. இக் கூட்டு மாநாட்டில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார். BS-VI எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை மேம்படுத்துதற்காக, எண்ணெய் துறையிலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள், `34,000 கோடி நிதியை முதலீடு செய்துள்ளன என்று அவர் அப்போது எடுத்துரைத்தார்.

9. இந்திய விலங்குகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான, ‘பிராணி மித்ரா’ விருதை வென்றவர் யார்?

அ) தியடோர் பாஸ்கரன்

ஆ) S சின்னி கிருஷ்ணா

இ) கெளரி மெளலேகி

ஈ) அஞ்சலி கோபாலா

  • இந்திய புளூ கிராஸ் அமைப்பின் இணை நிறுவனர் S சின்னி கிருஷ்ணாவுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம், 2021ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ‘பிராணி மித்ரா’ விருதை வழங்கியுள்ளது.
  • மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், S சின்னி கிருஷ்ணாவுக்கு விலங்குகளுக்கான அவரின் வாழ்நாள் சேவைக்காக இந்த விருதை வழங்கினார். இந்த விருது, விலங்கு நலனில் அக்கறை செலுத்துவோருக்கு வழங்கப்படும் நாட்டின் மிகவுயர்ந்த விருதாகும்.

10. கடல் பொருளாதார வரைவுக் கொள்கையை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு & பால்வளத்துறை அமைச்சகம்

ஆ) புவி அறிவியல் அமைச்சகம்

இ) ஜல் சக்தி அமைச்சகம்

ஈ) வெளியுறவு அமைச்சகம்

  • கடல் பொருளாதார வரைவுக் கொள்கை வெளியிட்டுள்ள மத்திய புவி அறிவியல் அமைச்சகம், பலதரப்பினரின் ஆலோசனையை கேட்டுள்ளது. நாட்டிலுள்ள கடல் வளத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தி, பொருளாதாரத்தை அதிகரிப்பது பற்றிய வரைவுக்கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் கடல் வளத்தை பயன்படுத்தி கொள்வது தொடர்பான தொலைநோக்கு மற்றும் உத்திகள் இடம்பெற்றுள்ளன. இது ஏழு கருப்பொருள் பகுதிகளையும் அங்கீகரித்துள்ளது.

தமிழ்நாட்டு நடப்புநிகழ்வுகள்

  • புதுமையான உள்நாட்டு தொழினுட்பங்களை வெற்றிகரமாக விற்பனை செய்ததற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தெரிவாகியுள்ளன.
  1. குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில் சென்னையைச் சேர்ந்த எஸ்.வி.பி. லேசர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  2. குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில், தஞ்சாவூரைச்சேர்ந்த அல்ஹல் ஆர் நியூட்ரா பார்ம்ஸ் லிட் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நுண் நீர் பாசிகளில் இருந்து டோகோசஹெக்ஸெனோயிக் அமிலம் என்ற ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தை தயாரிக்கும் பசுமை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
  • தமிழ்நாட்டில் ஊரகத் தொழில்கள் துறையை (MSME) மேம்படுத்தும் வகையில் தனித்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் வழியே வரும் 2025ஆம் ஆண்டுக்குள் `2 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க முடியும். மேலும், `20 இலட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1. The 3rd edition of the Indian Sign Language Dictionary includes how many terms?

A) 5,000

B) 10,000

C) 3,000

D) 4,500

  • Social Justice & Empowerment Minister Thaawarchand Gehlot released the third edition of the Indian Sign Language (ISL) Dictionary.
  • This edition has 10,000 terms of daily use and technical terms including academic, legal, medical terms. The second edition of the dictionary released in 2019 had 6,000 terms and the first edition released in 2018 had 3,000 terms.

2. Who has been conferred with the SKOCH Chief Minister of the Year Award?

A) Edappadi K Palaniswamy

B) Pinarayi Vijayan

C) Mamta Banerjee

D) Y S Jagan Mohan Reddy

  • The Andhra Pradesh Chief Minister, Y. S. Jagan Mohan Reddy has been conferred the Skoch Chief Minister of the Year Award. The award has been provided based on a year–long study of results of the projects being implemented by various state governments of the country. Over 123 projects were implemented in the state of Andhra Pradesh.

3. Who has been elected as the next Director General of the International Solar Alliance (ISA)?

A) Ajay Mathur

B) Upendra Tripathy

C) Ajay Kumar Bhalla

D) Subash Chandra Khuntia

  • India nominated Ajay Mathur was elected as the next Director General of the International Solar Alliance (ISA). He succeeds Upendra Tripathy, who has serving as DG since 2017. The Director–General has a four–year term, which can also be renewed for an additional term.
  • Mathur is the chief of the New Delhi–based The Energy and Research Institute, at present.

4. Giant Leatherback turtle nests in which location in India?

A) Goa

B) Odisha

C) Andaman & Nicobar

D) West Bengal

  • Giant Leatherback turtle are the largest of the seven species of sea turtles. They are found in all oceans except the Arctic and the Antarctic.
  • In the Indian ocean, they nest at Indonesia, Sri Lanka and the Andaman and Nicobar Islands. The Government’s proposal for tourism promotion and port development will threaten this species, which is accorded legal protection by listing in Schedule I of India’s Wildlife Protection Act, 1972.

5. Mandu festival is celebrated in which state?

A) Gujarat

B) Madhya Pradesh

C) Andhra Pradesh

D) Odisha

  • The three–day Mandu Festival began at Mandu, the historic town of Madhya Pradesh. The state also inaugurated Dino Adventure Park & Fossils Museum. During the Mandu Utsav, Handicrafts related to handmade art are displayed to encourage local artisans.
  • Dinosaur Park is the country’s first modern fossil park to display 24 eggs and various fossils of dinosaurs.

6. Which Union Ministry is to organise an event named ‘Mushaira’, in which poets across the country recite their poems?

A) Ministry of Education

B) Ministry of Culture

C) Ministry of Minority Affairs

D) Ministry of External Affairs

  • The Union Ministry of Minority Affairs is to organise a ‘Mushaira’ event, in which renowned poets from across the country will recite their poems. The event is to be conducted on 2021 Feb.20, on the theme ‘Ek Bharat, Shrestha Bharat’.
  • ‘Mushaira’, which is regarded as a poetic symposium is part of the Culture of India and Pakistan. It aims to make younger generation aware of the country’s art and culture

7. ‘Pey Jal Survekshan’ is the initiative of which Union Ministry?

A) Ministry of Rural Development

B) Ministry of Housing and Urban Affairs

C) Ministry of Jal Shakti

D) Ministry of Agriculture and Farmers Welfare

  • Ministry of Housing and Urban Affairs has recently launched the ‘Pey Jal Survekshan’ survey under the Jal Jeevan Mission – Urban.
  • This survey is conducted on a pilot basis in 10 cities– Agra, Badlapur, Bhubaneswar, Churu, Kochi, Madurai, Patiala, Rohtak, Surat and Tumkur. The survey would assess distribution of water, reuse of wastewater and mapping of water bodies.

8. World PetroCoal Congress and World Future Fuel Summit was organised in which Indian city?

A) Mumbai

B) Varanasi

C) New Delhi

D) Bengaluru

  • The Joint Conference of the 11th World PetroCoal Congress and World Future Fuel Summit was organised in New Delhi.
  • Union Minister for Petroleum and Natural Gas Dharmendra Pradhan addressed the joint conference. He highlighted that the Public sector companies in the oil industry have invested Rs 34,000 crore to upgrade plants for producing BS–VI fuel.

9. Who won the ‘Prani Mitra’ award for 2021, by the Animal Welfare Board of India?

A) Theodre Bhaskaran

B) S Chinny Krishna

C) Gauri Maulekhi

D) Anjali Gopala

  • S. Chinny Krishna, the co–founder of Blue Cross of India, has been conferred with the prestigious ‘Prani Mitra’ award for 2021 by the Animal Welfare Board of India.

Union Minister for Fisheries, Animal Husbandry and Dairying Giriraj Singh presented the award to Mr. Krishna in New Delhi, for his lifetime service to animals. It is the country’s highest award for animal welfare.

10. Which Union Ministry has unveiled the draft blue economy policy?

A) Ministry of Fisheries, Animal Husbandry & Dairying

B) Ministry of Earth Sciences

C) Ministry of Jal Shakti

D) Ministry of External Affairs

  • The Ministry of Earth Sciences has unveiled the draft blue economy policy in the public domain, inviting suggestions and inputs from various stakeholders. The draft policy document highlights the strategy that can be adopted by the government to utilise the oceanic resources available in the country.
  • It also has recognised seven thematic areas.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!