TnpscTnpsc Current Affairs

22nd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

22nd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. எந்த நாட்டைச்சேர்ந்த அறிவியலாளர்கள் 59 MJ நீடித்த ஆற்றலை உருவாக்கி அணுக்கரு இணைவு ஆற்றலில் மைல்கல் சாதனையை எட்டியுள்ளனர்?

அ) அமெரிக்கா

ஆ) சீனா

இ) இந்தியா

ஈ) UK 

  • UK’இல் உள்ள அறிவியலாளர்கள் அணுக்கரு இணைவு ஆற்றலை உற்பத்தி செய்வதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர். சூரியனில் ஆற்றல் உற்பத்தி செய்யப்படும் முறையை இது பின்பற்றுகிறது.
  • மத்திய இங்கிலாந்தில் உள்ள Joint European Torus (JET) வசதியிலுள்ள ஒரு குழு ஒரு பரிசோதனையின் போது 59 மெகா ஜூல்கள் நீடித்த ஆற்றலை உருவாக்கியது. ஒரு கிலோ இணைவு எரிபொருளில் ஒரு கிலோ நிலக்கரி, எண்ணெய் அல்லது எரிவாயுவால் உண்டாக்கப்படும் ஆற்றலைவிட 10 மில்லியன் மடங்கு ஆற்றல் உள்ளது.

2. கல்விநிலைகுறித்த ஆண்டறிக்கையை வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) பிரதம் அறக்கட்டளை 

இ) கல்வி அமைச்சகம்

ஈ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • பிரதம் அறக்கட்டளை ஆண்டுதோறும் மாணவர்களின் கற்றல் விளைவுகளை ஆய்வுசெய்வதற்காக பள்ளிகளில் விரிவான ஆய்வை நடத்துகிறது. சமீபத்தில், அது கல்வி நிலைகுறித்த ஆண்டறிக்கையை (ASER, மேற்கு வங்கம்) வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களின் அடிப்படை வாசிப்பு மற்றும் எண் திறன்கள் COVID-19 காலத்தில் குறைந்துள்ளன.

3. எந்த வளரும் நாடு, டிரோன்களை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ளது?

அ) இந்தியா 

ஆ) இந்தோனேசியா

இ) அர்ஜென்டினா

ஈ) பிரேசில்

  • இந்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஆளில்லா வானூர்திகளை (டிரோன்) இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ராணுவ மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதற்கு இதில் விலக்களிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது உலகின் தலைசிறந்த டிரோன் தயாரிப்பாளரான சீனாவின் SZ DJI’இன் சந்தையைத் தடுக்கிறது மற்றும் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவின் உள்ளூர் தொழிற்துறையை ஊக்குவிக்கிறது.

4. 2022 பிப்ரவரி நிதிக்கொள்கைக்குழுக்கூட்டத்திற்குப் பிறகு, புதிய கொள்கை ரெப்போ விகிதம் என்ன?

அ) 3.75%

ஆ) 4.00% 

இ) 4.25%

ஈ) 4.50%

  • ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக்குழு பாலிசி ரெப்போ விகிதத்தை 4 சதவீதமாக மாற்றாமல் இருக்க ஒருமனதாக வாக்களித்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் மாறாமல் 3.35 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் கருத்துப்படி, ‘இணக்க’ நிலைப்பாடு தேவைப்படும் காலம் வரை தொடரும்.

5. ‘நம்ம ஷாலே நன்னா கொடுகே’ செயலியானது எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் முன்னெடுப்பாகும்?

அ) மேற்கு வங்கம்

ஆ) கர்நாடகா 

இ) தெலுங்கானா

ஈ) பஞ்சாப்

  • கர்நாடக மாநிலத்தின் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித்துறை, ‘நம்ம ஷாலே நன்னா கொடுகே’ என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இது அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புத் தேவைகள், ஆசிரியர் பற்றாக்குறை, கற்றல் கருவிகளின் சிறந்த பயன்பாடு மற்றும் பெரு நிறுவன சமூகப்பொறுப்பு நிதியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6. NASA’இன் கூற்றுப்படி, 2022 வரை சுற்றுப்பாதையில் கண்காணிக்கப்பட்ட மொத்த பொருட்களின் எண்ணிக்கை என்ன?

அ) 1000

ஆ) 10000

இ) 25000 

ஈ) 50000

  • NASA’இன் அண்மைய அறிவிப்பின்படி, சுற்றுப்பாதையில் தற்போதுவரை மொத்தம் 25,000 பொருட்கள் கண்காணி -க்கப்பட்டுள்ளன. ஸ்பேஸ்X’இன் Gen2 விரிவாக்கம் 30 ஆயிரம் செயற்கைக்கோள்களை ஏவுவதை உள்ளடக்கி உள்ளது. அது சுற்றுப்பாதையில் கண்காணிக்கப்படும் பொருட்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும்.

7. ஒரு சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவின் எந்தத்தேசிய பூங்கா, தான் உறிஞ்சும் அளவைவிடவும் அதிக கரியமில வளியை (CO2) வெளியிடுகிறது?

அ) பக்கே புலிகள் காப்பகம்

ஆ) காசிரங்கா தேசிய பூங்கா 

இ) நம்தாபா தேசிய பூங்கா

ஈ) குனோ தேசிய பூங்கா

  • ஒரு சமீபத்திய ஆய்வின்படி, அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா தேசிய பூங்கா, தான் உறிஞ்சுவதைவிட அதிக கரியமில வாயுவை (CO2) வெளியிடுகிறது. இத்தேசிய பூங்காவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் உள்ளது.
  • வழக்கமாக, காடுகள் அவை வெளியிடுவதைவிட அதிக C02’ஐ உறிஞ்சுகின்றன. இதனால் அவ்விடத்தில் CO2’ இன் அளவு அதிகரித்துவிடும். அப்பகுதியில் மழைப்பொழிவு குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

8. ‘உலக பருப்பு நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 8

ஆ) பிப்ரவரி 10 

இ) பிப்ரவரி 12

ஈ) பிப்ரவரி 15

  • ‘உலக பருப்பு நாளானது’ ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி.10 அன்று கொண்டாடப்படுகிறது. 2019ஆம் ஆண்டில் ஐநா பொதுச்சபை, உலகளவில் பருப்பு வகைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் அணுகலை அதிகரிப்பதற்காக இந் நாளை உருவாக்கியது. “Pulses to empower youth in achieving sustainable agri-food systems” என்பது நடப்பு 2022’இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

9. ‘இந்திய அருங்காட்சியகங்களின் மறு-உருவாக்கம்’ என்ற உச்சிமாநாட்டை ஏற்பாடுசெய்த மத்திய அமைச்சகம் / நிறுவனம் எது?

அ) கலாச்சார அமைச்சகம் 

ஆ) சுற்றுலா அமைச்சகம்

இ) NITI ஆயோக்

ஈ) UNESCO

  • “இந்தியாவின் அருங்காட்சியகங்களை மறு-உருவாக்கம்” செய்வதுகுறித்து முதன்முறையாக உலகளாவிய இரு நாள் உச்சிமாநாட்டிற்கு மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. 75ஆவது அமுதப்பெருவிழாவின் ஒருபகுதியாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • கட்டடக்கலை மற்றும் செயல்பாட்டுத் தேவைகள், நிர்வாகம், சேகரிப்பு (பராமரிப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் உட்பட), கல்வி மற்றும் பார்வையாளர் ஈடுபாடு ஆகிய 4 கருப்பொருட்களைக் கொண்டதாக இம்மாநாடு இருக்கும்.

10. 2022ஆம் ஆண்டில் G20’இன் தலைமைப்பொறுப்பை வகிக்கும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) இந்தோனேசியா 

இ) சீனா

ஈ) ஜப்பான்

  • 2022ஆம் ஆண்டில் இந்தோனேசியா G20இன் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது. G20இன் 2ஆவது நிதி மற்றும் மத்திய வங்கிப் பிரதிநிதிகள் கூட்டமானது எதிர்கால தொற்றுநோய்களைச் சமாளிக்க நீண்டகால பொருளாதார மீட்பு உத்தியைக்கொண்ட ஒரு தகவல்தொடர்பு வரைவை உருவாக்கியது.
  • முதலாவது நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் இந்த அறிக்கை வரைவு மேலும் விவாதிக்கப்படும். இந்த ஆண்டு G20இன் கருப்பொருள் “Recover Together, Recover Stronge” என்பதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அகரமுதலி இயக்ககத்தில் தாய்மொழி நாள் விழா

தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்பட்டு வரும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில், “எப்பொழுதும் முப்பொழுதும் எந்தமிழே!” என்னும் பொருண்மையில் உலகத்தாய்மொழி நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

2. 12 – 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி: மத்திய அரசு

நாட்டில் 12 – 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ‘கோர்பேவாக்ஸ்’ என்ற தடுப்பூசியை 12 – 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு தயாரிப்பான ‘கோர்பெவேக்ஸ்’ தடுப்பூசிக்கு, அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியிருப்பதாக பயாலஜிகல் இ லிட் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, 16 – 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ‘கோவேக்ஸின்’ இரு தவணை தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு, அந்தத்திட்டம் செயல்படுத் -தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

3. நீலப்பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா – பிரான்ஸ் ஒப்பந்தம்

நீலப்பொருளாதாரம், கடல்சார் நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வழிவகுக்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்ஸும் கையொப்பமிட்டுள்ளன.

தென்சீனக்கடல், கிழக்கு சீனக்கடல், இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் -ளார். அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜீன் ஈவ் லெடிரையனை அவர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

அப்போது, கடல்சார்ந்த நீலப்பொருளாதாரத்தில் இரு நாடுகளுக்கிடையே நிலவும் நல்லுறவை வலுப்படுத்த வழிகாட்டும் ஒப்பந்தம் கையொப்பமானது.

3. டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), டி20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நேற்றுமுன் தினம் நடைபெற்ற கடைசி டி20 ஆட்டத்தில் 17 இரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3 ஆட்டங்கள்கொண்ட தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையைவென்ற இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகள் மதிப்பீடு புள்ளிகளை (269) ஒரே மாதிரியாக பெற்ற போதிலும் ஒட்டுமொத்த புள்ளிகள் கணக்கில் இந்திய அணி 10,484 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இங்கிலாந்து 10,474 புள்ளிகளை பெற்று 2ஆம் இடத்தில் உள்ளது.

1. Scientists from which country achieved a milestone in nuclear fusion energy, by generating 59 MJ of sustained energy?

A) USA

B) China

C) India

D) UK 

  • Scientists in the United Kingdom have achieved a new milestone in producing nuclear fusion energy, or imitating the way energy is produced in the Sun. A team at the Joint European Torus (JET) facility in central England generated 59 mega joules of sustained energy during an experiment. A kg of fusion fuel contains about 10 million times energy of that of a kg of coal, oil or gas.

2. Annual Status of Education Report (ASER) is published by which institution?

A) NITI Aayog

B) Pratham Foundation 

C) Ministry of Education

D) Ministry of Women and Child Development

  • Pratham Foundation annually conducts an extensive survey in schools, to analyse the learning outcome of students. Recently, it released the Annual Status of Education Report (ASER, West Bengal). As per the report, the basic reading and numerical abilities of school children in West Bengal have reduced during COVID–19, without class rooms.

3. Which developing country has imposed a ban on Import of Drones?

A) India 

B) Indonesia

C) Argentina

D) Brazil

  • India’s Directorate General of Foreign Trade announced that the import of drones is banned. The order exempted those used for research and development, defense, and security purposes. This move also blocks the market for China’s SZ DJI Technology Co., the world’s top dronemaker, and encourages India’s local industry to increase production.

4. What is the new policy repo rate, after the February 2022 Monetary Policy Committee meeting?

A) 3.75%

B) 4.00% 

C) 4.25%

D) 4.50%

  • RBI’s Monetary Policy Committee (MPC) has voted unanimously to keep policy repo rate unchanged at 4%. Reverse repo rate also remains unchanged at 3.35%. As per the RBI Governor Shaktikanta Das, the ‘accommodative’ stance will continue as long as needed.

5. ‘Namma Shaale Nanna Koduge’ app is an initiative of which state/UT?

A) West Bengal

B) Karnataka 

C) Telangana

D) Punjab

  • Karnataka’s Department of Primary and Secondary Education has developed an application named ‘Namma Shaale Nanna Koduge’ app. This aims to address infrastructure needs of government schools, shortage of teachers, better use of learning aids and utilisation of Corporate Social Responsibility funds.

6. As per NASA, what is the total number of objects tracked on–orbit as of 2022?

A) 1000

B) 10000

C) 25000 

D) 50000

  • As per NASA’s recent announcement, there are currently 25,000 total objects tracked on–orbit.
  • SpaceX’s Gen2 expansion involves launching 30,000 satellites, which will double the number of tracked objects in orbit.

7. As per a recent study, which national park of India is releasing more carbon than it is absorbing?

A) Pakke Tiger Reserve

B) Kaziranga National Park 

C) Namdapha National Park

D) Kuno National Park

  • As per a recent research, Kaziranga National Park in Assam, is releasing more carbon than it is absorbing.
  • The National Park is home to the largest–population of the one–horned rhinoceros in the world. Usually, forests absorb more carbon than they release, which makes them carbon sinks. This is mainly due to decreasing rainfall in the region.

8. ‘World Pulses Day’ is celebrated on which date?

A) February 8

B) February 10 

C) February 12

D) February 15

  • ‘World Pulses Day’ is celebrated on February 10 every year. The UN General Assembly in 2019 dedicated this day to increase awareness and access to pulses globally.
  • World Pulses Day 2022 is celebrated under the theme of “Pulses to empower youth in achieving sustainable agri–food systems”.

9. Which Union Ministry/Institution organized Global Summit on ‘Reimagining Museums in India’?

A) Ministry of Culture

B) Ministry of Tourism 

C) NITI Aayog

D) UNESCO

  • Ministry of Culture organised a two–day Global Summit on ‘Reimagining Museums in India’ in the month of February 2022. The summit was organized under the aegis of Azadi ka Amrit Mahotsav.
  • The online summit will encompass four broad themes: Architecture and Functional Needs, Management, Collections (including Curation and Conservation practices) and Education & Audience Engagement.

10. Which country holds the Presidency of G20 in 2022?

A) India

B) Indonesia 

C) China

D) Japan

  • Indonesia holds the Presidency of G 20 in 2022. The G20 second Finance and Central Bank Deputies meeting produced a communique draft containing a long–term economic recovery strategy to tackle future pandemics. The communique draft would be further discussed in the first Finance Ministers and Central Bank Governors (FMCBG) meeting. The theme of G20 this year is “Recover Together, Recover Stronger”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!