TnpscTnpsc Current Affairs

22nd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

22nd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ஆக்சிஸ் வங்கியின் உதவியுடன், ‘டிஜிட்டல் பள்ளி நலவாழ்வு தளம்’ தொடங்கப்பட்ட மாநிலம் / UT எது?

அ) புது தில்லி

ஆ) பீகார்

இ) புதுச்சேரி 

ஈ) கோவா

  • சுமார் 2. 4 லட்சம் மாணவர்களின் உடல்நலம் குறித்த தகவல்களை டிஜிட்டல்மயமாக்குவதற்காக புதுச்சேரி அரசு அண்மையில், ‘டிஜிட்டல் பள்ளி நலவாழ்வு தளத்தை’ அறிமுகப்படுத்தியது. ஆக்சிஸ் வங்கியின் உதவியுடன் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதன்கீழ், மாணவர்களின் ஊட்டச்சத்து மதிப்பீட்டைக் கொண்டு அவர்கட்கு இரத்தசோகை உண்டா இல்லையா என்பதைக் கண்டறியவியலும். மேலும் அதற்கேற்ப சிகிச்சைகளையும் மேற்கொள்ள முடியும்.

2. நாட்டின் முதல் மருத்துவ நகரமான, ‘இந்திரயாணி மெடிசிட்டி’யை நிறுவவுள்ள இந்திய மாநிலம் எது?

அ) உத்தரகாண்ட்

ஆ) மகாராஷ்டிரா 

இ) ராஜஸ்தான்

ஈ) ஹிமாச்சல பிரதேசம்

  • நாட்டின் முதல் மருத்துவ நகரம் புனேவில் அமைக்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தது. ‘இந்திரயாணி மருத்துவ நகரம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இது, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகள் மற்றும் அனைத்து வகை சிறப்பு சிகிச்சைகளை -யும் ஒரே கூரையின்கீழ் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. ‘சர்வதேச துணிச்சல்மிக்க பெண்மணி விருது – 2022’ வென்ற பூமிகா ஸ்ரேஸ்தா சார்ந்த நாடு எது?

அ) இலங்கை

ஆ) நேபாளம் 

இ) இந்தியா

ஈ) மியான்மர்

  • நேபாளத்தின் திருநங்கைகள் உரிமை ஆர்வலர் பூமிகா ஸ்ரேஸ்தா, ஐக்கிய அமெரிக்க மாகாணங்கள் துறையின் மதிப்புமிக்க சர்வதேச துணிச்சல்மிக்க பெண்மணி விருது, 2022-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • LGBTQI+ சமூகத்தின் வாழ்வை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்புக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில், முஸ்கன் காதுன் என்னும் மற்றொரு நேபாள ஆர்வலர், அமிலத்தாக்குதல்களுக்கு எதிரான தனது பணிக்காக இவ்விருதை வென்றார்.

4. ‘UPI லைட்’ கட்டணப் பரிவர்த்தனையின் உச்சவரம்பு எவ்வளவு?

அ) `100

ஆ) `200 

இ) `500

ஈ) `1000

  • இந்திய தேசிய கொடுப்பனவு கழகமானது (NPCI) ‘UPI லைட்’டை அறிமுகப்படுத்தவுள்ளது. இது இணையமற்ற பயன்முறையில் சிறிய மதிப்பிலான பரிவர்த்தனைகளை செயல்படுத்தும்.
  • ‘UPI லைட்’ கட்டணப்பரிவர்த்தனையின் அதிகபட்ச வரம்பு `200ஆக இருக்கும். சாதனத்தில் உள்ள ‘UPI Lite’ பணப் பையின் மொத்த வரம்பு `2,000ஆக இருக்கும்.

5. காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பை (PLFS) வெளியிடுகிற நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) தேசிய புள்ளியியல் அலுவலகம் 

இ) பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஈ) இந்திய ரிசர்வ் வங்கி

  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய காலமுறை தொழிலாளர்படை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 12.6%ஆக உயர்ந்து உள்ளது. இந்த விகிதம் ஜனவரி-மார்ச் காலாண்டில் 9.3 சதவீதமாக இருந்தது.

6. 2022 – இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?

அ) டோக்கியோ

ஆ) புது தில்லி 

இ) சென்னை

ஈ) ஒசாகா

  • இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு 2022-இன் போது புதுதில்லியில் பிரதமர் மோடியும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவில் 5 டிரில்லியன் யென் அல்லது `3.2 இலட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
  • ஜப்பானிய அரசாங்கத்தின் தலைவராக ஜப்பான் பிரதமர் இந்தியா வருவது இது முதல் முறையாகும்.

7. விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய, ‘Relativistic Klystron Amplifier (RKA)’யை உருவாக்கியுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) ரஷ்யா

இ) சீனா 

ஈ) இஸ்ரேல்

  • சீனா அண்மையில் “Relativistic Klystron Amplifier (RKA)” என்ற ஒரு நுண்ணலை எந்திரத்தை உருவாக்கியுள்ளது. இது விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன்கொண்டதாகும். இந்தச் சாதனத்தால் Ka-கற்றையில் 5-மெகாவாட் அளவிலான அலை வெடிப்பை உருவாக்க முடியும்.
  • இது உள்நாட்டு மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மின்காந்த நிறமாலையின் ஒருபகுதி ஆகும். இயக்கப்பட்ட ஆற்றல் ஆயுதங்கள் (Directed Energy Weapons) எதிரியின் உபகரணங்களை அழிப்பதற்கு செறி -வூட்டப்பட்ட மின்காந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.

8. உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்கள் தீர்மானம் குறித்து எந்தச் சர்வதேச அமைப்பில் இந்தியா வாதிட்டது?

அ) அகதிகளுக்கான ஐநா உயராணையகம்

ஆ) ஐநா பாதுகாப்பு அவை 

இ) ஐநா சுற்றுச்சூழல் திட்டம்

ஈ) பன்னாட்டு நீதிமன்றம்

  • ஐநா பாதுகாப்பு அவையில் (UNSC) உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்கள் குறித்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. பேரழிவு தரும் இந்த வகை ஆயுதங்களின் அனைத்து வடிவங்களையும் தடைசெய்யும் BTWC தீர்மானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இந்தியா அறிவித்தது.

9. ‘MV இராம் பிரசாத் பிஸ்மில்’ என்பது அண்மையில் எந்த ஆற்றில் பயணித்த மிக நீளமான கப்பலாகும்?

அ) கங்கை

ஆ) பிரம்மபுத்திரா 

இ) நர்மதை

ஈ) கிருஷ்ணா

  • ‘MV இராம்பிரசாத் பிஸ்மில்’ என்ற கலம் பிரம்மபுத்திராவில் பயணஞ்செய்ததை அடுத்து மிகநீளமான கப்பலை பயணிக்க வைத்த ஒரு மைல்கல்லை சாதனையை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் எட்டியது. 90 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் 26 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது.

10. உலக வாய்நல நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) மார்ச்.20 

ஆ) மார்ச்.21

இ) மார்ச்.22

ஈ) மார்ச்.23

  • வாய்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.20ஆம் தேதி உலக வாய்நல நாள் கொண்டாடப்படுகிறது. “Be Proud of Your Mouth” என்பது நடப்பாண்டில் (2022) வரும் உலக வாய்நல நாளுக்கானக் கருப்பொருளாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் லக்‌ஷயா சென் தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 11ஆவது இடம் வகிக்கும் இந்தியாவின் லக்‌ஷயா சென், ‘நம்பர் ஒன்’ வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென்னிடம் (டென்மார்க்) 21-10, 21-15 என்ற நேர் செட்டில் வீழ்ந்து வீழ்த்தி வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

2. ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால பொருட்களை பார்வையிட்டார் பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால அரிய கலைப்பொருட்களை பிரதமர் பார்வையிட்டார்.

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் உட்பட 29 பழங்காலப் பொருட்களை ஆஸ்திரேலியாவிலிருந்து மத்திய அரசு மீட்டுள்ளது. இந்தப் பழங்காலப் பொருட்கள் இராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை.

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்டு இந்தியா கொண்டுவரப்ப -ட்ட 29 பொருட்களும் சிவன், சக்தி, விஷ்ணு, ஜெயின் பாரம்பரியம், உருவப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பழங்கால பொருட்களும் மணற்கல், பளிங்கு, வெண்கலம், பித்தளை, காகிதம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களை தில்லியில் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இதனிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான உச்சிமாநாடு காணொலிக்காட்சிமூலம் நடைபெற்றது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சிமூலம் பேசினார். அப்போது, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட பழங்காலப் பொருட்களை திருப்பி அனுப்பியதற்காக ஸ்காட் மோரிசனுக்கு இந்தியர்கள் அனைவரின் சார்பிலும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒத்துழைப்பு வேகமாக வளர்ந்து வருவதாகவும் மோடி கூறினார். மேலும், இந்தோ – பசிபிக் பகுதியின் வளர்ச்சியில் இருநாடுகளும் இணைந்து தொடர்ந்து கவனம் செலுத்துவது, ஐரோப்பாவில் நிலவும் பதற்றமான சூழல் ஆகியவை குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.

3. உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு: ஐநா ஆலோசனைக் குழுவில் இந்திய பொருளாதார அறிஞர்

குறைந்தபட்சம் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இடையே ஆக்கபூர்வ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான ஐநாஇன் புதிய உயர்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினராக இந்திய பொருளாதார அறிஞர் ஜயதி கோஷ் (66) நியமிக்கப்பட்டுள்ளார்.

4. உலக தண்ணீர் நாள்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.22 அன்று உலக தண்ணீர் நாள் கொண்டாடப்படுகிறது. நீர்வளங்களின் நிலைத் தன்மைமிக்க மேலாண்மையை வலியுறுத்துவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

“நிலத்தடிநீர் – காணாததை காண வைத்தல்” என்னும் கருப்பொருளில் இந்த ஆண்டு (2022) உலக தண்ணீர் நாள் கொண்டாடப்படுகிறது.

5. மேகேதாட்டு அணைக்கு நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

மேகேதாட்டுவில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கியுள்ள கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவர் மன்றம் 2007ஆம் ஆண்டு பிப்.5ஆம் தேதி அளித்த இறுதித்தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றம் 2018 பிப் 16ஆம் தேதி அளித்த தீர்ப்பை மதிக்காமலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலை பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியை பெறாமலும் தன்னிச்சையாக காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது. எனவே, கர்நாடக அரசின் செயலுக்கு பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

கர்நாடகாவின் மேகேதாட்டு அணை திட்டத்துக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எந்த அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகிற -து. காவிரி நதிநீர்ப் பிரச்சினை ஒரு நீண்டகால பிரச்சினையாகும். இதற்கு தீர்வாக கடந்த 2018 பிப்.16ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சினை இரு மாநிலங்களின் உணர்வு பூர்வமான பிரச்சினையாகும்.

எனவே, கர்நாடக அரசு மேகேதாட்டுவிலோ, வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எந்தவித புதிய நீர்த்தேக்க திட்டத்தையும் மற்ற படுகை மாநிலங்கள், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடக அரசை அறிவுறுத்தும்படி மத்திய அரசை பேரவை கேட்டுக் கொள்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படாத நிலையில், மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதியளிக்கவோ கூடாதென ஆணையத்தை பேரவை கேட்டுக் கொள்கிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

1. Which state/UT launched ‘Digital School Health Platform’, with the assistance of Axis Bank?

A) New Delhi

B) Bihar

C) Puducherry 

D) Goa

  • Puducherry Government recently launched ‘Digital School Health Platform’, to digitise the health records of around 2. 4 lakh students. The software has been developed with the assistance of Axis Bank. Under the initiative, the nutrition level of students can be checked to find if they are anaemic and early intervention could be done accordingly.

2. Which Indian state announced the Country’s first Medical city named ‘Indrayani Medicity’?

A) Uttarakhand

B) Maharashtra 

C) Rajasthan

D) Himachal Pradesh

  • Maharashtra Government, during the Budget presentation announced that the country’s first medical city will be set up in Pune. Named ‘Indrayani Medicity’, it aims to provide medical education and research facilities, as well as all categories of specialty treatment under one roof.

3. Bhumika Shrestha, who won the ‘International Women of Courage Award, 2022’ is from which country?

A) Sri Lanka

B) Nepal 

C) India

D) Myanmar

  • Nepal’s Transgender rights activist Bhumika Shrestha has been selected for US Department of States’ prestigious International Women of Courage Award, 2022.
  • The award has been announced for her dedication to improving the lives of the LGBTQI+ community. Last year, another Nepali activist Muskan Khatun won the award for her work against acid attacks.

4. What is the upper limit of a ‘UPI Lite’ payment transaction?

A) Rs. 100

B) Rs. 200 

C) Rs. 500

D) Rs. 1000

  • National Payments Corporation of India (NPCI) is set to launch UPI Lite, which would enable small value transactions in an offline mode. The upper limit of an UPI Lite payment transaction will be Rs 200.
  • The total limit of UPI Lite balance for an on-device wallet will be Rs 2,000 at any point of time.

5. Which institution releases the Periodic Labour Force Survey?

A) NITI Aayog

B) National Statistical Office 

C) Ministry of Labour and Employment

D) Reserve Bank of India

  • The latest Periodic Labour Force Survey (PLFS) released by the National Statistical Office (NSO), which works under the Ministry of Statistics and Program Implementation (MoSPI).
  • As per the recent PLFS update, India’s urban unemployment rate jumped to 12.6 percent in the April-June quarter of 2021, compared to 9.3 percent in the January-March quarter.

6. Where was the India-Japan Annual Summit 2022 held?

A) Tokyo

B) New Delhi 

C) Chennai

D) Osaka

  • Prime Ministers Narendra Modi and his Japanese counterpart Fumio Kishida held talks in New Delhi during the India-Japan Annual Summit 2022. After the Meet, the Indian Prime Minister announced that Japan is set to invest 5 trillion yen or Rs 3.2 lakh crore in India over next 5 years. This is Japan PM’s first visit to India as the head of the Japanese government.

7. Which country has developed a “Relativistic Klystron Amplifier (RKA)”, which can destroy satellites in space?

A) India

B) Russia

C) China 

D) Israel

  • China has recently developed a microwave machine “Relativistic Klystron Amplifier (RKA)”, that could jam or destroy satellites in space. The device can generate a wave burst measuring 5-megawatts in the Ka-band. It is a portion of the electromagnetic spectrum used for both civil and military purposes.
  • Directed Energy Weapons (DEW) use concentrated electromagnetic energy to destroy enemy equipment or personnel.

8. India advocated the Biological and Toxin Weapons Convention at which international body?

A) United Nations High Commissioner for Refugees

B) United Nations Security Council 

C) United Nations Environment Programme

D) International Court of Justice

  • India advocated the Biological and Toxin Weapons Convention (BTWC) at the United Nations Security Council (UNSC). India announced that it attaches high importance to the BTWC Convention as a key non-discriminatory disarmament Convention, prohibiting an entire category of weapons of mass destruction.

9. ‘MV Ram Prasad Bismil’ recently became the longest vessel ever to sail on which river?

A) Ganges

B) Brahmaputra 

C) Narmada

D) Krishna

  • The Ministry of Ports, Shipping & Waterways achieved a milestone when the ‘MV Ram Prasad Bismil’ became the longest vessel ever to sail on Brahmaputra. The 90 meters long vessel is 26 meters wide, loaded with a draft of 2.1 meters.

10. When is the World Oral health Day celebrated every year?

A) March 20 

B) March 21

C) March 22

D) March 23

  • World Oral Health Day is celebrated on 20 March to raise awareness about oral health. The theme of World Oral Health Day 2022 is “Be Proud of Your Mouth”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!