Tnpsc

22th & 23th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

22th & 23th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22th & 23th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

22th & 23th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் இரயில் நிலையத்தில் Wi-fi வசதி இயக்கப்பட்டதன்மூலம், எத்தனை இரயில் நிலையங்களில் இந்திய இரயில்வே Wi-fi வசதியை வெற்றிகரமாக நிறுவியது?

அ) 500

ஆ) 1000

இ) 2000

ஈ) 6000

 • கிழக்கு மத்திய இரயில்வேயின் தன்பாத் பிரிவில் உள்ள ஜார்கண்டின் ஹசாரிபாக் இரயில் நிலையத்தில் Wi-fi வசதி இயக்கப்பட்டதன்மூலம், மே.15 நிலவரப்படி 6,000 இரயில் நிலையங்களில் இந்திய இரயில்வே Wi-fi வசதியை நிறுவியுள்ளது. 2016 ஜனவரியில், மும்பை இரயில் நிலையத்தில், இந்திய இரயில்வே அதன் Wi-fi வசதியை நிறுவியது.
 • பின்னர், மேற்கு வங்க மாநிலத்தின் மிதான்பூரில் 5,000ஆவது இரயில் நிலையம் என்ற இலக்கை இந்திய இரயில்வே அடைந்தது.

2. ஐநா கடைப்பிடிக்கும், ‘அமைதியுடன் ஒன்றாக வாழ்வதற்கான பன்னாட்டு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ) மே 10

ஆ) மே 12

இ) மே 16

ஈ) மே 18

 • ‘அமைதியுடன் ஒன்றாக வாழ்வதற்கான பன்னாட்டு நாள்’ என்பது ஐநா அவையால் ஒவ்வோர் ஆண்டும் மே.16 அன்று அனுசரிக்கப்படுறது.
 • அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான பன்னாட்டு சமூகத்தின் முன் முயற்சிகளை அணிதிரட்டுவதற்கான ஒரு வழியாக இது செயல்படுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. “Recoverin -g better for an equitable and sustainable world” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

3. புவியின் மிகப்பெரிய கார உப்புநீர் ஏரியான வான் ஏரி உள்ள நாடு எது?

அ) துருக்கி

ஆ) லெபனான்

இ) எகிப்து

ஈ) பிரான்ஸ்

 • துருக்கியில் அமைந்துள்ள வான் ஏரியின் நிழற்படம் NASA’இன் ‘எர்த் 2021’ சவாலில் வென்றது. இது, புவியில் உள்ள மிகப்பெரிய கார உப்புநீர் ஏரியாகும். இந்த நிழற்படத்தை விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ், 2016 செப்டம்பரில் படம்பிடித்தார். இந்த ஏரியின் pH அளவு 10 என உள்ளது.

4. மேற்குத்தொடர்ச்சி மலையில் புதிய காட்டு அரணை இனங்கள் காணப்பட்டன. அது எவ்வகை உயிரினமாகும்?

அ) மீன்

ஆ) ஊர்வனம்

இ) பூச்சி

ஈ) பறவை

 • இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தயாரித்த தெற்காசிய ஊர்வன சிவப்புப்பட்டியல் மதிப்பீட்டின்போது, ஆராய்ச்சியாளர்கள் குழு ஆசிய வலிவற்ற அரணை என்ற புதிய இனத்தை கண்டறிந்தது.
 • நீலகிரி பகுதியையொட்டி கண்டறியப்பட்டதால், Subdoluseps nilgiriensis என்று இந்த இனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. சிறு உடலமைப்பைக் கொண்டு உள்ள இது சுமார் 7 செமீ நீளமும் மணல் பழுப்பு நிறத்திலும் உள்ளது. கடந்த ஆயிரமாண்டுகளில் இந்தியாவிலிருந்து கண்டுபிடிக்கப் -பட்ட மூன்றாவது காட்டு அரணை இனம் இதுவாகும்.

5. ஆழ்கடல் ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள ஓகியானோஸ் எக்ஸ்ப் -ளோரர் என்பது எந்த நாட்டினுடையதாகும்?

அ) இஸ்ரேல்

ஆ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

இ) ரஷ்யா

ஈ) ஜப்பான்

 • தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கப்பலான ஓகியானோஸ் எக்ஸ்ப்ளோரர், NOAA பெருங்கடல் ஆய்வு தலைமையிலான 2வார பயணத்திற்கு புறப்பட்டது. NOAA என்பது அமெரிக்காவின் வணிகத்துறைக்குள் உள்ள ஓர் அமெரிக்க அறிவியல் நிறுவனமாகும்.
 • ‘ஆர்பியஸ்’ எனப்படும் நீர்மூழ்கு ரோபோ, கடற்பரப்பில் உள்ள அறிவியல் அம்சங்களை அடையாளம் காணும் அமைப்பைக் காண்பிக்கும். இந்த நிலப்பரப்பு-தொடர்புடைய வழிசெலுத்துதல் அமைப்பானது NASA’இன் பெர்ஸிவெரன்ஸ் ஊர்தியில், துல்லியமான தரையிறங்குதலுக்காக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தேஜஸ்வின் சங்கருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) டேபிள் டென்னிஸ்

ஆ) தடகளம்

இ) ஹாக்கி

ஈ) பூப்பந்து

 • அமெரிக்காவின் மன்ஹாட்டனில் நடைபெற்ற பிக் 12 வெளிப்புற தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய உயரந்தாண்டுதல் வீரரான தேஜஸ்வின் சங்கர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதிகபட்சமாக 2.28 மீ உயரந்தாண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர். இது, இந்தத் தொடரில் இவரது இரண்டாவது தங்கமாகும்.

7. பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட ஆண்ட்ரியா மேசா சார்ந்த நாடு எது?

அ) மெக்ஸிகோ

ஆ) ரஷியா

இ) இத்தாலி

ஈ) சுவீடன்

 • 26 வயதான ‘மெக்ஸிகோ அழகி’ ஆண்ட்ரியா மேசா, புளோரிடாவில் ‘பிரபஞ்ச அழகி’யாக முடிசூட்டப்பட்டார். COVID தொற்றுநோயால் கடந்த 2020ஆம் ஆண்டில் முதன்முறையாக ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்த நிகழ்வு இந்தாண்டு நடத்தப்பட்டது. பிரேசில் மற்றும் பெருவிய இறுதிப் போட்டியாளர்களுக்கு இடையே ஆண்ட்ரியா மேசா முதலிடம் பிடித்தார். மற்றொரு போட்டியாளரான ‘மியான்மர் அழகி’ தனது நாட்டில் நடந்த இராணுவ சதித்திட்டம் குறித்த கவனத்தை ஈர்க்க தனக்கு வழங்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தினார்.

8. COVID-19 நோயாளிகளுக்கு உயிர்வளி, படுக்கைகள் மற்றும் பிளாஸ்மாவைப்பெற உதவும் ‘ஹெளஸ்லா’ என்றவொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) ஹரியானா

இ) உத்தரகண்ட்

ஈ) பஞ்சாப்

 • COVID-19 நோயாளிகளுக்கு உயிர்வளி, படுக்கைகள் மற்றும் பிளாஸ்மாவை பெற உதவுவதற்காக உத்தரகண்ட் காவல்துறை, ‘ஹெளஸ்லா’ என்ற இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • அவசர தொடர்புக்காக அனைத்து மாவட்டங்களிலும் இரு கட்டணமில்லா எண்கள் குறித்து காவல்துறை தகவலளித்தது. காவல்துறை பணியாளர்கள் ரேஷன், மருந்துகள் வழங்குவதிலும், தேவைப்படுபவர்களுக்கும் முதியவர்களுக்கும் அவசர ஊர்தியைப் பெற்றுத் தரும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

9. இயற்கை வேளாண்மையை முழுமையாக பின்பற்றும் நாட்டின் முதல் மாநிலமான எம்மாநிலம், மே.16ஆம் தேதியன்று தனது மாநில நாளைக் கொண்டாடியது?

அ) அஸ்ஸாம்

ஆ) சிக்கிம்

இ) மணிப்பூர்

ஈ) மேகாலயா

 • சிக்கிம் தனது மாநில நாளை மே.16 அன்று கொண்டாடியது. 1975ஆம் ஆண்டில், சிக்கிம், இந்தியாவின் 22ஆவது மாநிலமாக உருவான நாளைக் குறிக்கிறது. சிக்கிம், இந்திய மாநிலங்களிலேயே மிகக்குறைந்த மக்கள்தொகைகொண்ட மாநிலமாகவும் இரண்டாவது சிறிய மாநில -மாகவும் உள்ளது. முழுமையான இயற்கை வேளாண் உற்பத்தியை எட்டிய இந்தியாவின் முதல் மாநிலமாகவும் இது திகழ்கிறது.

10. அண்மையில், ‘Go First’ என்று மறுபெயரிடப்பட்ட இந்திய வானூர்தி நிறுவனம் எது?

அ) இண்டிகோ

ஆ) ஸ்பைஸ் ஜெட்

இ) கோ ஏர்

ஈ) ஏர் இந்தியா

 • மும்பையைச்சார்ந்த இந்திய வானூர்தி நிறுவனமான ‘Go Air’ தனது பெயரை ‘Go First’ என மாற்றிக்கொண்டுள்ளது. இந்திய வணிக நிறுவ -னமான வாடியா குழுமத்திற்கு சொந்தமான இது, கடந்த 2005ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. `3,600 கோடி மதிப்புள்ள ஆரம்பகட்ட பங்கு விற்பனைக்கு, அந்த வானூர்தி நிறுவனம் முதற்கட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. பங்குகள் பட்டியலிடப்பட்டதும், கோ ஏர்லைன்ஸ் (இந்தியா) நிறுவனம், ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவன -ங்களுக்குப்பிறகு, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் merkollஉம் மூன்றாவது திட்டமிடப்பட்ட வானூர்தி நிறுவனமாக இருக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா காலமானார்

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா (94) கரோனா தொற்றால் உயிரிழந்தார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா மரங்கள், காடுகளைக் காக்க தொடர்ந்து பல்வேறு இயக்கத்தை முன்னெடுத்தவர். 1973ஆம் ஆண்டு மரங்களைக் காக்க உத்தரகண்ட் சமோலி பகுதியில் பெண்கள் முன்னெடுத்த ‘சிப்கோ’ இயக்கத்தை தொடங்கிவைத்தவர். இவரது தொடர் போராட்டங்களின் காரணமாகவே 1980இல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, மரங்களை வெட்டுவதற்கு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

2. கருப்புப் பூஞ்சைக்கான மருந்து: 5000 குப்பிகள் கொள்முதல்

கருப்புப் பூஞ்சை பாதிப்புக்குக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், அதனை குணப்படுத்தும் ஆம்போடெரிசின் – பி மருந்தை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

3. உடலில் எதிர்ப்பு சக்தியை 75 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் கிட்: DRDO தயாரித்தது

கரோனா தொற்றை சமாளிக்க உடலில் எதிர்ப்பு சக்தி எவ்வளவு உள்ளது என்பதை 75 நிமிடங்களில் அறிந்துகொள்ளும் சிறு கருவியை மத்திய அரசின் பாதுபாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், டிப்கேவன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவியில் கரோனா நோய்க்கான எதிர்ப்பு சக்தியின் அளவு குறித்து 75 நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம்.

வேறு நோய்களின் விவரங்கள் இதில் இடம்பெறாது. 18 மாதங்கள் வரை பயன்பாட்டு காலம் உள்ள இக்கருவியில் கண்டுபிடிக்கப்படும் விவரங்கள் 97 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை துல்லியமாக இருக்கும். தில்லியைச் சேர்ந்த வான்கார்ட் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100 கருவிகள் விரைவில் அறிமுகபடுத்தப்படும்.

அதன்மூலம் சுமார் 10 ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். ஒரு பரிசோதனைக்கான செலவு சுமார் `75ஆக இருக்கும். மாதந்தோறும் சுமார் 500 கருவிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. DRDO அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்தக் கருவியை தில்லியின் பல்வேறு மருத்துவமனைகளில் ஆயிரம் நோயாளிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஓராண்டாக உருவாக்கப்பட்டு வரும் இந்தக் கருவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சட்டவிரோதமான செயல்கள்குறித்து புகார் தெரிவிக்க ‘ஹலோ போலீஸ்’ திட்டம் அறிமுகம்: செங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

செங்கல்பட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கொள்ளை, சூதாட்டம் மற்றும் கள் இறக்கல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்க செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடிக் கண்காணிப்பில் ‘ஹலோ போலீஸ்’ என்ற ஒரு புதிய கைப்பேசி எண் பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.

1. With the commissioning of Wi–Fi at Hazaribagh Railway station, Jharkhand, Indian Railways successfully established Wi–Fi at _____ stations?

A) 500

B) 1000

C) 2000

D) 6000

 • With the commissioning of Wi–Fi at Hazaribagh Town, Jharkhand in Dhanbad Division of East Central Railway, Indian Railways commissioned Wi–Fi at 6,000 Railway stations, as on May 15. Indian Railways extended Wi–Fi facility for the first time in Mumbai Railway station in January 2016. Thereafter, it reached 5,000th Railway station, at Midanpore, West Bengal and reached.

2. When is the ‘International Day of Living Together in Peace’ observed by UN?

A) May 10

B) May 12

C) May 16

D) May 18

 • ‘International Day of Living Together in Peace’ is observed by the United Nations on May 16, every year. It is aimed to serve as a means of mobilizing the efforts of the international community to promote peace, tolerance and solidarity. The 2021 theme for the International Day of Peace is “Recovering better for an equitable and sustainable world”.

3. Lake Van, the largest soda or alkaline lake on Earth, is located in which country?

A) Turkey

B) Lebanon

C) Egypt

D) France

 • The photograph of Lake Van located in Turkey won the Tournament Earth 2021 challenge of NASA. It is the largest soda or alkaline lake on Earth. The photograph was shot by astronaut Kate Rubins in September 2016, showing a part of one of the largest alkaline lakes in the world, with a pH of 10 and high salinity levels.

4. New species of skink was found from Western Ghats. What is a skink?

A) Fish

B) Reptile

C) Insect

D) Bird

 • During the South Asian Reptile Red List Assessment organised by the International Union for Conservation of Nature (IUCN), a team of researchers have discovered a new species, the Asian gracile skink. Named Subdoluseps nilgiriensis, after the Nilgiris region, the reptile has a tiny body of just about 7 cm and it is sandy brown in colour. This is only the third skink species discovered from India in the last millennium.

5. Okeanos Explorer, which is set for Deep–sea Exploration, is a part of the mission of which country?

A) Isreal

B) USA

C) Russia

D) Japan

 • The National Oceanic and Atmospheric Administration (NOAA) ship Okeanos Explorer departed for a two–week expedition led by NOAA Ocean Exploration. NOAA is an American scientific agency within the United States Department of Commerce.
 • The new class of submersible robot called Orpheus, will showcase a system to identify scientific features on the seafloor. This Terrain–relative navigation was used in NASA’s Mars 2020 Perseverance Mars rover, for the precision touch down on the Mars.

6. Tejaswin Shankar, who was making news recently, is associated with which sports?

A) Table Tennis

B) Track and Field events

C) Hockey

D) Badminton

 • Indian high jumper Tejaswin Shankar has claimed a gold medal at the Big 12 Outdoor Track and Field Championships in Manhattan, USA Tejaswin Shankar won the gold with a maximum high jump of 2.28 m. This was also Tejaswin’s second successive gold at the event.

7. Andrea Meza, who was crowned Miss Universe, was from which country?

A) Mexico

B) Russia

C) Italy

D) Sweden

 • The 26–year–old Miss Mexico Andrea Meza was crowned Miss Universe in Florida. The event returned to television this year, after it was cancelled in 2020 for the first time, due to the coronavirus pandemic. Andrea Meza finished first ahead of the Brazilian and Peruvian finalists. Another contestant Miss Myanmar used the stage time to draw attention to the military coup in her country.

8. Which state has launched “Mission Hausla” to help Covid–19 patients get oxygen, beds and plasma?

A) Gujarat

B) Haryana

C) Uttarakhand

D) Punjab

 • The Uttarakhand Police has launched a drive called “Mission Hausla” to help people get oxygen, beds and plasma for COVID–19 patients. The Police department also informed about two toll–free numbers in all the districts for emergency contact. The Police personnel also engage in providing ration, medicines and getting ambulances to the needy and the elderly.

9. Which state, the first organic state in the country, celebrates its statehood day on May 16?

A) Assam

B) Sikkim

C) Manipur

D) Meghalaya

 • Sikkim celebrates its statehood day on May 16. It marks the day in 1975 when Sikkim was made the 22nd state of India from being a monarchy earlier. Sikkim is the least populous and second smallest among the Indian states. It also became the first state in India to achieve complete organic agriculture production.

10. Which Indian airline has recently rebranded itself as ‘Go First’?

A) Indigo

B) Spice Jet

C) Go Air

D) Air India

 • Mumbai–based Indian budget airline, GoAir has rebranded itself as ‘Go First’. It is owned by the Indian business conglomerate Wadia Group and was founded in 2005. The airline has filed preliminary papers for an initial share sale worth Rs 3,600 crore. Once the shares get listed, Go Airlines (India) Ltd will be the third operational scheduled carrier after SpiceJet and IndiGo to trade in Indian stock exchanges.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!