TnpscTnpsc Current Affairs

22nd June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

22nd June 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 22nd June 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. கட்டுமானத் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கான நாடு தழுவிய முன்னெடுப்பான, ‘NIPUN’ என்பது கீழ்க்காணும் எந்த நடுவண் அமைச்சகத்தின் முன்னெடுப்பாகும்?

அ. வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 

ஆ. MSME அமைச்சகம்

இ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

ஈ. பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

  • நடுவண் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அண்மையில் கட்டுமானத் தொழிலாளர்களின் திறன்பயிற்சிக்கான ‘NIPUN’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இது கட்டுமானத் தொழிலாளர்களின் திறமையை மேம்படுத்துவதற்கான ஒரு நாடு தழுவிய முன்னெடுப்பாகும். இது தீனதயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் (DAY–NULM) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் முன்னெடுப்பாக உள்ளது. இது 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள்மூலம் பயிற்சியளிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது.

2. இந்தியாவில் எட்டாவது சர்வதேச யோகா நாளின் கொண்டாட்டங்கள் முதன்மையாக நடைபெற்ற இடம் எது?

அ. தென்காசி

ஆ. மைசூரு 

இ. ஹைதராபாத்

ஈ. காந்தி நகர்

  • கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற எட்டாவது சர்வதேச யோகா நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த ஆண்டு யோகா நாள் கொண்டாட்டத்தின் கருப்பொருள், ‘Yoga for Humanity’ என்பதாகும். உலகம் முழுவதும் 25 கோடிக்கும் அதிகமானோர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.

3. பன்னாட்டு அமைதிகாக்கும் பயிற்சியான, ‘கான் குவெஸ்ட்–2022’ நடத்தப்பட்ட நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. ஓமான்

இ. மங்கோலியா 

ஈ. ஈரான்

  • ‘கான் குவெஸ்ட்–2022’ என்ற பன்னாட்டு அமைதிகாக்கும் பயிற்சி மங்கோலியாவில் உள்ள உலான்பாதரில் நடத்தப்பட்டது. இந்தப்பயிற்சியானது 16 நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினரிடையே பரஸ்பர கற்றல் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கியது. இப்பயிற்சியில் லடாக் சாரணர்களின் பணியாளர்கள் அடங்கிய இந்தியக்குழு பங்கேற்றது. ஐக்கிய நாடுகள் (UN) அவையின் ஆணையின்படி, உத்திசார் ஒத்திகைகள் இதன் சமயம் நடத்தப்பட்டன.

4. உலகின் மிகப்பெரிய நன்னீர் மீனானது அண்மையில் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. சீனா

இ. கம்போடியா 

ஈ. சிலி

  • கம்போடியாவில் பாயும் மீகாங் ஆற்றில் பிடிபட்ட 300 கிலோகிராம் எடையுள்ள திருக்கை மீன், உலகில் இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட மிகப்பெரிய நன்னீர் மீன் ஆகும். உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன்பற்றிய அதிகாரப்பூர்வ தரவு இல்லை என்றாலும், இதற்குமுன் பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய மீன் 293 கிலோ எடையுள்ள மீகாங் பெருங்கெளுத்தி ஆகும்; அது 2005இல் தாய்லாந்தில் பிடிபட்டது. மீகாங் ஆறு திபெத்திய பீடபூமியிலிருந்து சீனா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் வழியாகப் பாய்கிறது.

5. ICICI வங்கி, HDFC வங்கி மற்றும் NPCI ஆகியவற்றின் சில வளங்களை, ‘முக்கியமான தகவல் உட்கட்டமைப்பு’ என அறிவித்துள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ. மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 

ஆ. நிதியமைச்சகம்

இ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது ICICI வங்கி, HDFC வங்கி மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆகியவற்றின் தகவல் தொழில்நுட்ப வளங்களை, ‘முக்கியமான தகவல் உட்கட்டமைப்பு’ என அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் – 2000 ‘முக்கியமான தகவல் உட்கட்டமைப்பை’ ஒரு ‘கணினி வளமாக’ வரையறுக்கிறது. எந்தவொரு தரவு, தரவுத்தளம், தகவல் தொழில்நுட்ப வலையமைப்பு அல்லது தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு ஆகியவற்றை இவ்வாறு அறிவிக்க அரசாங்கத்திற்கு அதிகாரமுள்ளது.

6. 2022 – உலக சுற்றுச்சூழல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Invest in our Planet

ஆ. Only One Earth 

இ. 50th Environment Day

ஈ. Live with the Nature

  • பாழான சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.5 அன்று உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. ஐநாஇன் சுற்றுச்சூழல் திட்டம் என்பது உலகெங்கிலும் உள்ள நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடத்தும் ஒரு மைய நிறுவனமாகும்.
  • 2022ஆம் ஆண்டு 50ஆம் உலக சுற்றுச்சூழல் நாளைக்குறிக்கிறது. சுவீடன், இந்த ஆண்டு நிகழ்வின் தொகுப்பாளராக உள்ளது. “Only One Earth” என்பது இந்நாளின் கருப்பொருளாகும். இது 1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டின் முழக்கமாக இருந்தது.

7. இந்திய வான்படையானது இந்திய வான்படை பாரம்பரிய மையத்தை அமைப்பதற்காக எந்த மாநிலம்/UT உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. சிக்கிம்

ஆ. கேரளா

இ. சண்டிகர் 

ஈ. தெலுங்கானா

  • சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகமும் இந்திய வான்படையும் இந்திய வான்படை பாரம்பரிய மையம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இம்மையத்தில் சிமுலேட்டர்கள், பணிநீக்கஞ்செய்யப்பட்ட விமானம், ஏரோ எஞ்சின்கள் மற்றும் பிற IAF கலைப்பொருட்கள் இருக்கும். இந்த மையத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் AI தொழில்நுட்பமும் இருக்கும். பாரம்பரிய மையம் தகவல் தருவதாகவும், நாட்டின் இளைஞர்களை ஆயுதப்படைகளில் சேர ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

8. காப்புக்காடுகள், வனவுயிரிகள் சரணாலயத்திற்கு குறைந்தபட்சம் எத்தனை கிமீட்டர் தொலைவில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை (ESZ) கட்டாயமாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது?

அ. 0.5 கிமீ

. 1 கிமீ 

இ. 2 கிமீ

ஈ. 3 கிமீ

  • நாடு முழுவதுமுள்ள ஒவ்வொரு காப்புக்காடு, தேசியப்பூங்கா மற்றும் வனவுயிரி சரணாலயம் ஆகியவை அவற்றின் வரையறுக்கப்பட்ட எல்லையிலிருந்து தொடங்கி குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கட்டாய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் குறைந்த பாதுகாப்பை உள்ளடக்கிய பகுதிகளுக்கான ஒரு மாறுதல் மண்டலமாகச் செயல்படும்.

9. 2022 – பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?

அ. ஆஷ்லே பார்ட்டி

ஆ. இகா ஸ்விடெக் 

இ. மரியா சக்காரி

ஈ. நவோமி ஒசாகா

  • 2022–பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நெ:1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் அமெரிக்க இளம் வீராங்கனையான கோகோ காப்பை வீழ்த்தி பட்டத்தை வென்றார். 21 வயதான அவர் மூன்று ஆண்டுகளில் தனது இரண்டாவது பட்டத்தை 6–1, 6–3 என்ற நேர் செட்களில் காப்புக்கு எதிராக வென்றார். முதல் 10 இடங்களுக்குள் வந்த இளம் வீராங்கனை இவராவார். 2020–பிரெஞ்சு ஓபன் சாம்பியனான இகா, போலந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை ஆவார்.

10. 2022இன், ‘செலண்ட் மாதிரி’ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ள வங்கி எது?

அ. இண்டஸ்இண்ட் வங்கி 

ஆ. HDFC வங்கி

இ. ஐசிஐசிஐ வங்கி

ஈ. ஆக்சிஸ் வங்கி

  • இண்டஸ்இண்ட் வங்கியானது அதன் வகையில் சிறந்த நிறுவன கொடுப்பனவு மையத்தைக் கட்டமைத்ததற்காக ‘Payments System Transformation’ பிரிவின்கீழ் உலகளாவிய, ‘செலண்ட் மாதிரி வங்கி’ விருதைப் பெற்றுள்ளது. முகிலடிப்படையிலான நடுவண் கொடுப்பனவு மையத்தை உருவாக்குவதில் வங்கியின் சிறந்த பயணத்தை இந்த விருது அங்கீகரிக்கிறது. உலகளவில் நிதி நிறுவனங்களுக்கான தொழில்நுட்பத்தில் கவனஞ்செலுத்தும் முன்னணி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘செலண்ட்’ இந்த விருதை வழங்குகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாடு: கரோனா பாதித்தோரில் 25% பேருக்கு பிஏ-5 வகை தாக்கம் – பொதுச்சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

இந்த மாதத்தில் COVID-19 தொற்றுக்கு உள்ளானவர்களில் 25 சதவீதம் பேர் ஒமைக்ரான் பிஏ-5 வகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து பொதுச்சுகாதாரத்துறை கூறியதாவது:

கடந்த மே மாதத்தில் பிஏ-2 வகை தொற்று பாதித்தவர்களின் விகிதம் 36 சதவீதமும், பிஏ-2.38 வகை பாதிப்புக்கு உள்ளானவர்கள் விகிதம் 35 சதவீதமாகவும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிஏ-4, பிஏ-5 ஆகியவை முறையே 1.4 சதவீதம் மற்றும் 4 சதவீத பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில், ஜூன் மாதத்தைப் பொருத்தவரை பிஏ-2.38 வகை தொற்றுக்குள்ளானோர் 35 சதவீதமாகவும், பிஏ-5 வகை பாதிப்புக்குள்ளானோர் 25.2 சதவீதமாகவும் உள்ளது.

2. விம்பிள்டன்

டென்னிஸ் காலண்டரில், ஓர் ஆண்டில் நடைபெறும் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், வரும் 27-ஆம் தேதி தொடங்கி, ஜூலை.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான இருபாலர் தகுதிச்சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக பங்கேற்பாளர்களுக்கான போட்டித்தரவரிசையும் (சீட்) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புல்தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் குறித்த சில விவரங்கள், இதோ.

போட்டி தொடக்கம்: 1877

நடப்பு ஆண்டு போட்டி: 135-ஆவது சீசன்

நடப்பு சாம்பியன்கள்

ஆடவர்: நோவக் ஜோகோவிச் (செர்பியா)

மகளிர்: ஆஷ்லி பா்ட்டி (ஆஸ்திரேலியா) (ஓய்வு)

ஆடவர் இரட்டையர்: நிகோலா மெக்டிச்/மேட் பாவிச் (குரோஷியா)

மகளிர் இரட்டையர்: சியே சுவெய் (தைவான்)/எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்)

கலப்பு இரட்டையர்: டெஸைரே கிராவ்ஸிக் (அமெரிக்கா)/நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து)

மொத்த பரிசுத்தொகை: ரூ.386 கோடி

சாதனைகள்…

அதிகமுறை சாம்பியன்

ஒற்றையர்: ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) (8)

இரட்டையர்: டாட் வூட்பிரிட்ஜ் (ஆஸ்திரேலியா) (9)

வயதான சாம்பியன்

ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) (35 வயது / 2017)

இளம் சாம்பியன்

போரிஸ் பெக்கர் (ஜெர்மனி) (17 வயது / 1985)

‘சென்டர் கோர்ட்’ நூற்றாண்டு

விம்பிள்டன் போட்டி நடத்தப்படும் டென்னிஸ் கோர்ட்டுகளில் பிரதானமானதாக இருக்கும், ‘சென்டர் கோர்ட்’ இந்த ஜூன் மாதத்துடன் நூற்றாண்டை எட்டுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

3. ஐநா-உக்கு புதிய தூதர் நியமனம்

ஐநா-உக்கான இந்தியத்தூதராக, மூத்த வெளியுறவு அதிகாரி ருசிரா கம்போஜ் நியமிக்கப்பட்டார். தற்போது அந்தப் பொறுப்பை வகித்து வரும் டி எஸ் திருமூர்த்திக்குப் பதிலாக அவர் அந்தப் பதவியை ஏற்கவுள்ளார். 1987-ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான அவர், தற்போது பூடானுக்கான இந்தியத் தூதராக இருந்து வருகிறார். ஐநா-உக்கான இந்தியத்தூதராக ருசிரா கம்போஜ் கூடிய விரைவில் பொறுப்பேற்பார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. விண்ணில் பாய்ந்தது தென் கொரிய ஏவுகணை

உள்நாட்டில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட ஏவுகணை முதல்முறையாக தென் கொரியா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: முழுக்க முழுக்க தென் கொரியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணையின்மூலம் முதல்முறையாக செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 3 நிலைகளில் இயங்கக்கூடிய, ‘நூரி’ என்ற இந்த ஏவுகணை பூமியிலிருந்து 700 கிமீ தொலைவில் செயற்கைக்கோளை துல்லியமாகச் செலுத்தியதாக அதிகாரிகள் கூறினர்.

1. National Initiative for Promoting Upskilling of Nirman workers ‘NIPUN’ is an initiative of which Union Ministry?

A. Ministry of Housing & Urban Affairs 

B. Ministry of MSME

C. Ministry of Commerce and Industry

D. Ministry of Women and Child Development

  • Union Minister for Housing & Urban Affairs Hardeep Singh Puri recently launched a project for skill training of construction workers called ‘NIPUN’ i.e., National Initiative for Promoting Upskilling of Nirman workers. It is an initiative of Ministry of Housing & Urban Affairs (MoHUA) under the Deendayal Antyodaya Yojana–National Urban Livelihoods Mission (DAY–NULM). It aims to train over 1 lakh construction workers, through skilling and upskilling programmes and provides them with work opportunities also in foreign countries.

2. Which is the main venue of the eighth International Day of Yoga celebrations in India?

A. Tenkasi

B. Mysuru 

C. Hyderabad

D. Gandhi Nagar

  • Prime Minister Narendra Modi participated in the eighth International Day of Yoga (IDY) celebrations in Karnataka’s Mysuru. The theme of this year’s Yoga Day celebrations is ‘Yoga for Humanity’. Over 25 crore people across the world took part in various events and doing yoga in unison.

3. The Multinational Peacekeeping Exercise “Ex Khaan Quest –2022” was organised in which country?

A. France

B. Oman

C. Mongolia 

D. Iran

  • The Multinational Peacekeeping Exercise “Ex Khaan Quest –2022” was conducted at Ulaanbaatar in Mongolia. The exercise provided a platform for mutual learning and sharing best practices amongst the armies from 16 Nations. The Indian contingent consisting of personnel from the Ladakh Scouts participated in the exercise. Mock tactical operations as per United Nations (UN) mandate among other exercise were held.

4. In which country, world’s largest ever freshwater fish has been found recently?

A. Australia

B. China

C. Cambodia 

D. Chile

  • A 300kg stingray caught in the Mekong River in Cambodia is the biggest freshwater fish ever documented in the world. Though there is no official database of the world’s biggest freshwater fish, the previous largest recorded fish was a 293 kg Mekong giant catfish caught in Thailand in 2005. The Mekong River flows from the Tibetan Plateau through China, Myanmar, Thailand, Laos, Cambodia and Vietnam.

5. Which Union Ministry has declared certain resources of ICICI Bank, HDFC Bank and NPCI as ‘critical information infrastructure’?

A. Ministry of Electronics and IT 

B. Ministry of Finance

C. Ministry of Commerce and Industry

D. Ministry of Home Affairs

  • The Union Ministry of Electronics and IT (MeitY) has declared IT resources of ICICI Bank, HDFC Bank and National Payments Corporation of India (NPCI) as ‘critical information infrastructure’. The Information Technology Act of 2000 defines ‘Critical Information Infrastructure’ as a “computer resource”. The government has the power to declare any data, database, IT network or communications infrastructure as CII.

6. What is the theme of the ‘World Environment Day 2022’?

A. Invest in our Planet

B. Only One Earth 

C. 50th Environment Day

D. Live with the Nature

  • The World Environment Day is celebrated every year on June 5, to raise awareness about degrading environmental conditions and environment protection. The United Nations Environment Programme (UNEP) is the nodal agency that organises and supports events across the world. The year 2022 marks the 50th World Environment Day. Sweden is the host of the event this year and the theme is ‘Only One Earth’. It was the motto for the 1972 Stockholm Conference.

7. The Indian Air Force (IAF) signed an MoU with which state/UT to set up Indian Air Force Heritage Centre?

A. Sikkim

B. Kerala

C. Chandigarh 

D. Telangana

  • The Chandigarh UT Administration and the Indian Air Force (IAF) signed an MoU on the Indian Air Force Heritage Centre. The centre will have simulators, decommissioned aircraft, aero engines and other IAF artefacts. The centre will also include virtual reality and AI technology. The Heritage Centre will be informative and motivate the country’s youth to join the armed forces.

8. Supreme Court directed a mandatory eco–sensitive zone (ESZ) of a minimum of how many kilometers for protected forest, wildlife sanctuary?

A. 0.5 Km

B. 1 Km 

C. 2 Km

D. 3 Km

  • The Supreme Court directed that every protected forest, national park and wildlife sanctuary across the country should have a mandatory eco–sensitive zone (ESZ) of a minimum one km starting from their demarcated boundaries. As per the Environment Ministry guidelines, the eco–sensitive zone (ESZ) would act as a transition zone from areas of high protection to those involving lesser protection.

9. Who is the winner of the French Open tennis Women’s Singles 2022 Title?

A. Ashleigh Barty

B. Iga Swiatek 

C. Maria Sakkari

D. Naomi Osaka

  • World Number One Iga Swiatek of Poland won the French Open 2022 Women’s Singles Title by beating US teenager Coco Gauf. The 21–year–old clinched her second title in three years in straight sets 6–1, 6–3 over Gauff. She is the youngest player ranked in the top ten. Iga was the 2020 French Open champion and is the first player representing Poland to win a Grand Slam singles title.

10. Which bank has been declared the ‘Celent Model’ 2022 winner?

A. IndusInd Bank

B. HDFC Bank

C. ICICI Bank

D. Axis Bank

  • IndusInd Bank has been awarded the global ‘Celent Model Bank’ award under the category of ‘Payments System Transformation’ for building a best–in–class Enterprise Payments Hub (EPH). The award recognizes the Bank’s outstanding journey in creating a cloud–based central payments hub. The award is given by Celent, leading research and advisory firm focused on technology for financial institutions globally.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!