TnpscTnpsc Current Affairs

23rd & 24th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

23rd & 24th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd & 24th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. UPSCஇன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) ரொமிலா தாப்பர்

ஆ) அர்ஜுன் தேவ்

இ) மனோஜ் சோனி 

ஈ) பிபின் சந்திரா

  • அரசியல் அறிவியல் அறிஞர் மனோஜ் சோனி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ் சோனி சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் Dr பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் பரோடாவின் MS பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார். விடுதலை இந்தியாவின் இளைய துணைவேந்தரும் ஆவார்.

2. 2022 – ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்ற பந்தய ஓட்டுநர் யார்?

அ) மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

ஆ) சார்லஸ் லெக்லெர்க் 

இ) லூயிஸ் ஹாமில்டன்

ஈ) செர்ஜியோ பெரெஸ்

  • மொனாகன் பந்தய கார் ஓட்டுநர் சார்லஸ் லெக்லெர்க் ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸில் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப்பில் தலைமை நிலைக்கு முன்னேறினார்.
  • ரெட்புல் அணியின் செர்ஜியோ பெரெஸ், மெர்சிடிஸ் அணியின் ஓட்டுநர்கள் ஜார்ஜ் ரசல் மற்றும் லூயிஸ் ஹாமில்டன் ஆகியோர் இரண்டாமிடத்தைப் பிடித்தனர்.

3. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘மாஸ்க்வா’ என்பது எந்த நாட்டின் புகழ்பெற்ற போர்க்கப்பலாகும்?

அ) உக்ரைன்

ஆ) ரஷ்யா 

இ) சீனா

ஈ) ஜெர்மனி

  • ரஷ்யாவின் ராணுவ ஆற்றலின் அடையாளமாக இருந்த 510 பேர்கொண்ட ஏவுகணைக் கப்பல், ‘மாஸ்க்வா’ உக்ரைன் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படு -கிறது. ரஷ்ய இராணுவ ஆதாரங்களின்படி, உக்ரைன் மீதான கடற்படைத் தாக்குதலை முன்னெடுத்துச் சென்ற போது அப்போர்க்கப்பல் வெடித்துச் சேதமடைந்ததோடு தீயில் மூழ்கியது. 12,490 டன் எடையுள்ள இந்தக் கப்பல் 2ஆம் உலகபோருக்குப்பிறகு, செயலிலிருந்தபோது மூழ்கிய மிகப்பெரிய ரஷ்ய போர்க்கப்பலாகும்.

4. இந்தியாவில், ‘ஹிமாச்சல் திவாஸ்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) ஏப்ரல்.12

ஆ) ஏப்ரல்.14

இ) ஏப்ரல்.15 

ஈ) ஏப்ரல்.16

  • ஹிமாச்சல் நாளானது ஆண்டுதோறும் ஏப்ரல்.15 அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1948ஆம் ஆண்டு இதே நாளில்தான், 28 சிறிய சமஸ்தானங்களின் ஒருங்கிணை -ப்பை அடுத்து, ஹிமாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டது.

5. இந்திய வானிலை ஆய்வுத்துறையால் பருவமழையை முன்னறிவிக்க பயன்படுத்தப்படும், ‘LPA’இன் விரிவாக்கம் என்ன?

அ) Long Period Average 

ஆ) Least Period Average

இ) Long Prime Average

ஈ) Least Prime Average

  • இந்திய வானிலை ஆய்வுத் துறையானது (IMD) இந்த ஆண்டுக்கான அதன் முதல் நீள்நெடுக்கக் காலநிலை முன்கணிப்பில் (LRF) தொடர்ந்து நான்காவது ஆண்டாக நாட்டில் சாதாரண பருவமழைபெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.
  • 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளிலும் ஜூன்-செப் வரையிலான தென்மேற்குப்பருவமழைப் பருவத்தில் இயல்பான அளவில் மழை பெய்தது.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘நெப்டியூன் ஏவுகணை அமைப்பு’டன் தொடர்புடைய நாடு எது?

அ) ஏமன்

ஆ) சௌதி அரேபியா

இ) உக்ரைன் 

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • கப்பலின்மீது நிகழ்ந்த ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்ய கருங்கடல் கடற்படைக் கப்பலான ‘மாஸ்க்வா’ ஒடெசா கடலில் மூழ்கியது. அக்கப்பலில் வெடிகுண்டுகள் வெடித்ததாக ரஷ்ய தரப்பும், நெப்டியூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப்பயன்படுத்தி திட்டமிட்டு இதனை மேற்கொண்டதாக உக்ரேனிய தரப்பும் கூறியுள்ளது.

7. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின்கீழ், எவ்வளவு ஆண்டுகளுக்கு உற்பத்திக்கா -ன நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது?

அ) 3 ஆண்டுகள்

ஆ) 5 ஆண்டுகள் 

இ) 7 ஆண்டுகள்

ஈ) 10 ஆண்டுகள்

  • ஜவுளித்துறையில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை பெறுவதற்காக பெறப்பட்ட 67 விண்ணப்பங்களில் 61 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • ஊக்கத்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட 61 விண்ணப்ப -ங்கள்மூலம், மொத்த முதலீடு `19,077 கோடியாகவும், 5 ஆண்டுகளில் `184,917 கோடி அளவிற்கு விற்றுவரவும் கிடைக்கப்பெறும்.

8. CUET’க்கு (மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு) எதிராக தீர்மானம் நிறைவேற்றிய மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) மத்திய பிரதேசம்

  • CUET (மத்திய பல்கலைக்கழக்கங்களுக்கான பொதுவான நுழைவுத்தேர்வு) திட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தத் தீர்மானத்தின்படி, NEETஐப்போன்று CUETஉம் விளிம்புநிலை மாணாக்கரை ஓரங்கட்டுகிறது. 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு படிப்புகளுக்கான மாணாக்கர் சேர்க்கை CUET மூலம் மட்டுமே நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

9. அண்மையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) சோதனை செய்யப்பட்ட, ‘ஹெலினா’ என்பது எந்த வகை ஏவுகணையாகும்?

அ) பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை 

ஆ) நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் எறிகணை

இ) தரைப்பரப்பிலிருந்து வானிலக்கைத்தாக்கும் ஏவுகணை

ஈ) இடைமறிக்கும் ஏவுகணை

  • பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையான ‘ஹெலினா’, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டரிலிருந்து மிகவுயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்தச் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), இந்திய இராணுவம் மற்றும் இந்திய வான்படை ஆகியவை கூட்டாக மேற்கொண்டன. இந்த ஏவுகணை உலகிலேயே மிக நவீனமான பீரங்கி எதிர்ப்பு சாதனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

10. யாரின் பிறந்தநாளான ஏப்ரல்.11 அன்று இந்தியாவில், ‘தேசிய பாதுகாப்பான தாய்மை நாள்’ கொண்டாடப்படுகிறது?

அ) அன்னை தெரசா

ஆ) கஸ்தூரிபாய் காந்தி 

இ) இந்திரா காந்தி

ஈ அன்னி பெசன்ட்

  • இந்திய அரசு கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்.11 அன்று தேசிய பாதுகாப்பான தாய்மை நாளாக அறிவித்தது. இந்த நாள் கஸ்தூரிபாய் காந்தியின் பிறந்தநாளையும் குறிக்கிறது.
  • இந்தியாவில் ஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்படுகி -றது. பிரசவத்திற்கு முன்பும், பிரசவத்திற்குப் பின்பும், கர்ப்பிணிப் பெண்ணுக்குத் தேவையான கவனிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பாதுகாப்புத் துறையில் தற்சார்பு: இந்தியாவுக்கு ஆதரவு

பாதுகாப்புத்துறையில் தற்சார்பு அடைவதற்கான இலக்கை இந்தியா அடைவதற்கு பிரிட்டன் போதுமான ஆதரவை வழங்கும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்தார்.

நவீன போர்விமானங்களைத் தயாரிப்பதற்கான தொழில் நுட்பத்தை உருவாக்குவதில் இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து செயல்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2. ஓராண்டுக்கு ஆறு கிராம சபை கூட்டம் நடத்தப்படும்: பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு

அரசின் பல்வேறு திட்டங்களை கிராம அளவில் ஒருங்கே இணைத்து செயல்படுத்த முதற்கட்டமாக இந்த ஆண்டு 600 ஊராட்சிகளில், ‘கிராம செயலகங்கள்’ கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும், நவ.1ஆம் தேதி ‘உள்ளாட்சி நாள்’ கொண்டாடப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும். அந்த வகையில் ஜன.26 குடியரசு நாள், மே.1 தொழிலாளர் நாள், ஆகஸ்ட்.15 சுதந்திர நாள், அக்.2 காந்தி பிறந்தநாள் ஆகிய நாட்களுடன் இனி வரும் காலங்களில் கூடுதலாக மார்ச்.22 – உலக தண்ணீர் நாள், நவம்பர்.1 உள்ளாட்சி நாள் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்.

இந்த ஆண்டு முதல் ‘உத்தமர் காந்தி கிராம ஊராட்சி’ விருது வழங்கப்படும். மாவட்டத்துக்கு ஒன்றுவீதம் சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு `10 லட்சம் வீதம் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

3. கரோனாவுக்கு எதிராக செயல்படும் புதிய மருந்து: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘இன்டோமெதசின்’ மருந்துக்கு செயல்திறன் இருப்பதை சென்னை ஐஐடி வடிவமைத்த சோதனை வெளிப்படுத்துகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் அழற்சி எதிர்ப்பு மருந்தான ‘இன்டோமெதசின்’ மிகச்சிறந்த செயல்திறனைக் காட்டுகிறது என, அண்மையில் வெளியான நேச்சர் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

4. 22-04-2022: உலக புவி நாள்

கருப்பொருள்: Invest In Our Planet.

5. உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்பின் மூன்று விருதுகளுக்கு தமிழ்நாடு அரசு தேர்வு: நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா தகவல்

நீர்வளத்துறைச் செயலர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் ஒவ்வோர் ஆண்டும் உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் & நீர் சேமிப்பு விருதுகளை அறிவிக்கிறது.

இந்திய தேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் குழுமம், ஒவ்வோர் ஆண்டும் இந்திய மாநிலங்களில் இருந்து, தகுதியான முன்மொழிவுகளை ஐசிஐடி அமைப்புக்கு பரிந்துரைக்கிறது.

இதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழக நீர்வளத் துறை சார்பில்கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தக ஆம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஆறு நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உலக பாரம்பரிய கட்டமைப்புகளாக அறிவிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணைய ஆய்வுக்குழு, தமிழக நீர்வளத் துறை விண்ணப்பித்த கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்தது. இதன் தொடர்ச்சியாக, உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி, காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டுக்கும் 4 விருதுகள் சர்வதேச அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு 4 விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், தமிழகம் 3 விருதுகள் பெறுவது குறிப்பிடத்தக்கது.

கல்லணை: வரலாற்றுச் சிறப்பு மிக்க கல்லணை கிபி 2ம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான அணையாகும். இது உலகின் 4ஆவது பழமையான நீர்மாற்று அமைப்பு அல்லது நீர் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பாகும். இன்னும் பயன்பாட்டில் உள்ள பழமையான கட்டமைப்பாகும்.

வீராணம் நீர்த்தேக்கம்: கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் நீர்த்தேக்கம் 9ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டது.

காளிங்கராயன் அணைக்கட்டு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணைக்கட்டு 740 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு பகுதி மன்னரான காளிங்கராயக் கவுண்டரால் கட்டப்பட்ட பழமையான அணையாகும். இந்தியாவில் இன்னும் பயன்பாட்டில் உள்ள பழமையான கட்டமைப்பாகும். தமிழகத்துக்கான 3 விருதுகளும் வரும் நவம்பர் 7ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் பராமரித்தல் மற்றும் நீர்சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச அமைப்பால் இத்தகு விருது வழங்கப்படுவது மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதேபோல, 2022ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழகம் சார்பில் மேலும் 10-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான முன்மொழிவு அனுப்பப்பட உள்ளது.

1. Who has been appointed as the new UPSC Chairman?

A) Romila Thapar

B) Arjun Dev

C) Manoj Soni 

D) Bipin Chandra

  • A scholar of political science, Manoj Soni has been appointed as the new Chairman of the Union Public Services Commission (UPSC). Manoj Soni specialises in International Relations and had served as the Vice Chancellor of Dr Babasaheb Ambedkar Open University and MS University of Baroda. He was also the youngest Vice Chancellor in independent India.

2. Which racing driver won the Australian Grand Prix 2022 tournament?

A) Max Verstappen

B) Charles Leclerc 

C) Lewis Hamilton

D) Sergio Perez

  • Monacan race car driver Charles Leclerc clinched victory in the Australian Grand Prix to move into a commanding position in the World Championship. Red Bull’s Sergio Perez was 2nd followed by Mercedes drivers George Russell and Lewis Hamilton.

3. ‘Moskva’, which was seen in the news, is a famous warship of which country?

A) Ukraine

B) Russia 

C) China

D) Germany

  • The 510–crew missile cruiser ‘Moskva’, which was a symbol of Russia’s military power, is said to be hit by Ukrainian missiles.
  • As per Russian Military sources, the warship which was leading its naval assault on Ukraine, was damaged by an explosion and sank after a fire. The 12,490–tonne vessel is the biggest Russian warship to be sunk in action since Second World War.

4. When is the ‘Himachal Diwas’ celebrated in India?

A) April.12

B) April.14

C) April.15 

D) April.16

  • Himachal Diwas (Himachal Day) is celebrated on April 15 every year. It was on this day in 1948 that Himachal Pradesh was created as a province of India after the integration of 28 small princely states.

5. What is the expansion of ‘LPA’, based on which the India Meteorological Department (IMD) forecasts the monsoon?

A) Long Period Average 

B) Least Period Average

C) Long Prime Average

D) Least Prime Average

  • The India Meteorological Department (IMD) said in its first Long Range Forecast (LRF) for this year that the country is likely to receive a normal monsoon for the fourth consecutive year. Rainfall in the June–September southwest monsoon season was in the normal range in 2019, 2020, and 2021 as well.

6. ‘Neptune Missile system’, which was seen in the news, is associated with which country?

A) Yemen

B) Saudi Arabia

C) Ukraine 

D) UAE

  • The Russian Black Sea Fleet ‘Moskva’ sank off the coast of Odessa after a missile strike on the ship. Russians claimed that an onboard ammunition fire caused the blasts on the ship, while the Ukrainians stated that it was a planned strike using the Neptune anti–ship cruise missiles.

7. Under the Production linked incentive (PLI) scheme, the Centre provides financial support for manufacturing, for how many years?

A) 3 years

B) 5 years 

C) 7 years

D) 10 years

  • The government has recently approved financial support to 61 companies, including seven foreign ones, for its textiles production linked incentive (PLI) scheme. These companies plan investment of Rs 19,077 crore and a projected turnover is Rs 184,917 crore over a period of 5 years.

8. Which state assembly adopted a resolution against CUET (Central Universities Common Entrance Test)?

A) Tamil Nadu 

B) Kerala

C) Andhra Pradesh

D) Madhya Pradesh

  • Tamil Nadu assembly adopted a resolution urging the Union government to drop the proposal of CUET (Central Universities Common Entrance Test). As per the resolution, the CUET similar to NEET sidelined the marginalised students.
  • The University Grants Commission announced that from the academic year 2022–2023, admissions to various courses in all central universities would be done only through CUET, to be conducted by the National Testing Agency (NTA).

9. What type of missile is ‘HELINA’ which was recently tested by the Defence Research and Development Organisation (DRDO)?

A) Anti–Tank Guided Missile 

B) Submarine Launched Ballistic Missile

C) Surface–to–Air Missile

D) Interceptor Missile

  • Indigenously developed helicopter launched Anti–Tank Guided Missile ‘HELINA’ was successfully flight tested at high–altitude ranges as part of user validation trials.
  • The flight–test was jointly conducted by the teams of scientists from Defence Research and Development Organisation (DRDO), Indian Army and Indian Air Force (IAF). It is one of the most advanced anti–tank weapons in the world.

10. ‘National Safe Motherhood Day’ is celebrated in India on April 11, the birth anniversary of which personality?

A) Mother Teresa

B) Kasturba Gandhi 

C) Indira Gandhi

D) Annie Besant

  • The Government of India in the year 2003 designated 11 April as National Safe Motherhood Day. The day also marks the birth anniversary of Kasturba Gandhi. The day is marked annually in India and aims to raise awareness about the care required by pregnant woman before, during, and after childbirth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!