TnpscTnpsc Current Affairs

23rd & 24th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

23rd & 24th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd & 24th October 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

  1. சமீபத்தில் கொம்பாசு என்ற வெப்பமண்டல புயலால் பாதிக்கப்பட்ட நாடு எது?

அ) பிலிப்பைன்ஸ் 

ஆ) அமெரிக்கா

இ) இந்தோனேசியா

ஈ) ஜெர்மனி

  • ‘கொம்பாசு’ என்ற வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் குறைந்தது 19 பேர் பலியாகினர். இப்புயல் ஆசிய-பசிபிக் தீவுகளின் வட முனையைக்கடந்தபோது நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியது. ‘கொம்பாசு’, சீனத் தீவான ஹைனான் மாகாணத்தில் நிலச்சரிவை ஏற்படுத்திய பின் வெப்பமண்டலப்புயலாக மாறியது. இது ஹாங்காங் மற்றும் வியட்நாமையும் கடந்து சேதங்களை ஏற்படுத்தியது.

2. விண்வெளிக்குச் சென்றவர்களுள் மிகவும் வயதானவரான நடிகர் வில்லியம் ஷாட்னர், எந்த முகமையின் ஏவுகலத்தில் பயணம் செய்தார்?

அ) விர்ஜின் கேலக்டிக்

ஆ) புளூ ஆர்ஜின் 

இ) ஸ்பேஸ் எக்ஸ்

ஈ) யுனைடெட் லாஞ்கூட்டணி

  • நடிகர் வில்லியம் ஷாட்னர், புளூ ஆர்ஜின் ஏவுகலத்தில் துணை-சுற்றுப் பாதைக்கான பயணத்தில் பறந்து டெக்சாஸ் பாலைவனத்தில் தரை இறங்கினார். இதன்மூலம் விண்வெளிக்குச் சென்றவர்களுள் மிகவும் வயதான நபராக (90 வயது) ஆனார் நடிகர் வில்லியம் ஷாட்னர்.
  • முழுவதும் தானியங்கு தன்மைகொண்ட நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் பயணித்த நான்கு பயணிகளுள் ஷாட்னரும் ஒருவர். அவர்கள், பூமியில் இருந்து சுமார் 100 கிமீ உயரத்தில் உள்ள கர்மன் கோடு எனப்படும் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லைவரை பயணம் செய்தனர்.

3. Dr APJ அப்துல் கலாம் பிரேரனா மையமானது பின்வரும் எந்த நகரத்தில் அமைந்துள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் திறக்கப்பட்டது?

அ) கொச்சி

ஆ) விசாகப்பட்டினம் 

இ) சென்னை

ஈ) புவனேஷ்வர்

  • முன்னாள் குடியரசுத்தலைவர் ‘பாரத இரத்னா’ Dr APJ அப்துல் கலாமின் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், நாட்டின் 75ஆவது ஆண்டு விடுதலையைக் கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை குறிக்கும் விதமாகவும், விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் அக்டோபர் 15 அன்று ‘டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பிரேரனா மையம்’ திறக்கப்பட்டது.
  • கடற்படை அறிவியல் மற்றும் தொழினுட்ப ஆய்வகத்தின் தயாரிப்புகளான வருணாஸ்திரா, டோர்பேடோ அட்வான்ஸ்ட் லைட் மற்றும் மாரீச் டெகாய் ஆகியவை வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

4. “Our Future is at Hand – Let’s Move Forward Together” என்பது அக்.15 அன்று அனுசரிக்கப்பட்ட எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருள் ஆகும்?

அ) உலக கை கழுவும் நாள் 

ஆ) உலக விலங்குவழி நோய்கள் நாள்

இ) உலக ஊட்டச்சத்துக் குறைபாடு நாள்

ஈ) உலக சுகாதார நாள்

  • சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவத -ற்காக, 2021ஆம் ஆண்டின் உலக கை கழுவுதல் நாள் அக்.15 அன்று அனுசரிக்கப்படுகிறது. “Our Future is at Hand – Let’s Move Forward Together” என்பது 2021ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும். உலக கை கழுவுதல் கூட்டாண்மைமூலம் இந்த நாள் நிறுவப்பட்டது.

5. சமீபசெய்திகளில் இடம்பெற்ற பிரக்ஞானந்தாவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ) மட்டைப்பந்து

ஆ) சதுரங்கம் 

இ) கால்பந்து

ஈ) கைப்பந்து

  • பிரக்ஞானந்தா, இந்திய சதுரங்க வீரரும் நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்ட -ர்களில் ஒருவருமாவார். சமீபத்தில், அவர் அமெரிக்க வீரரான கிறிஸ்டோபர் யூவை வென்றதன்மூலம் ஜூலியஸ் பேர் சேலஞ்சர்ஸ் செஸ் சுற்றுப்பயணத்தை வென்றார். இந்த வெற்றியின்மூலம், பிரக்ஞானந்தா $12,500 பரிசுத்தொகையையும், 2022ஆம் ஆண்டு மெல்ட்வாட்டர் சாம்பி -யன்ஸ் சுற்றுப்பயணத்தில், செஸ் சாம்பியன்களின் உயரடுக்கு அணி உடன் விளையாடும் உரிமையையும் வென்றுள்ளார்.

6. அரசுக்கு இடையேயான ஓர் இராணுவ கூட்டணியான, “கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பில்”, எத்தனை முழுநேர உறுப்பினர்கள் உள்ளனர்?

அ) 17

ஆ) 13

இ) 11

ஈ) 6 

  • கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (Collective Security Treaty Organisation – CSTO) என்பது 6 முழுநேர உறுப்பினர்கள் (ஆர்மேனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான்) மற்றும் 2 உறுப்பினரல்லாத பார்வையாளர்களைக் கொண்ட (ஆப்கானிஸ்தான் & செர்பியா) ஓர் அரசுகளுக்கிடையேயான இராணுவக் கூட்டணியாகும்.
  • சமீபத்தில், CSTO, அக்.22-23 வரை தஜிகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் இராணுவ ஒத்திகையை நடத்த முன்வந்துள்ளது.

7. NATO’இன் தலைமையகம் எங்குள்ளது?

அ) பெல்ஜியம் 

ஆ) அமெரிக்கா

இ) ரஷ்யா

ஈ) பிரான்ஸ்

  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organisation – NATO) என்பது 30 உறுப்புநாடுகளைக்கொண்ட அரசுகளுக்கிடையே -யான ஒரு இராணுவக் கூட்டணியாகும். இதில் 28 ஐரோப்பிய நாடுகள் மற்றும் 2 வட அமெரிக்க நாடுகள் உள்ளன. NATO’இன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் உள்ளது.
  • சமீபத்தில், நேட்டோவுக்கான தனது திட்டங்களை இடைநிறுத்துவதாக -வும், மாஸ்கோவில் உள்ள நேட்டோவின் இராணுவ தொடர்பு மற்றும் தகவல் அலுவலகங்கள் மூடப்படும் என்றும் ரஷ்யா அறிவித்தது.

8. எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர்பற்றிய குழுமம் நடத்திய ஆய்வின்படி, மின்சமையலில் முதலிடத்திலுள்ள மாநிலம்/UT எது?

அ) தில்லி மற்றும் ஹரியானா

ஆ) மகாராஷ்டிரா மற்றும் கோவா

இ) மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம்

ஈ) தில்லி மற்றும் தமிழ்நாடு 

  • எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர்பற்றிய குழுமத்தின் ஆய்வறிக்கையின் படி, தில்லி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 17 சதவீத குடும்பங்கள், சில வகையான மின்சமையல் முறைகளைப் பயன்படுத்துகின்றன.
  • இவ்வீதம் தெலுங்கானாவில் 15% மற்றும் கேரள மாநிலத்தில் 12% ஆகும். ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் குழுமமானது பொதுவாக CEEW என அழைக்கப்படுகிறது. இது, தில்லியை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற கொள்கை ஆராய்ச்சி நிறுவனமாகும்.

9. வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர், எந்த நாட்டில் உள்ள “பூதன் சோலையில்” ஒரு தகட்டினை திறந்துவைத்தார்?

அ) அமெரிக்கா

ஆ) இங்கிலாந்து

இ) பிரான்ஸ்

ஈ) இஸ்ரேல் 

  • இந்திய வெளியுறவு அமைச்சர் S ஜெய்சங்கர், இஸ்ரேலின் ஜெருசலேம் வனப்பகுதியில் “பூதன் சோலை” என்ற தகட்டை திறந்து வைத்தார். இது, 1958’இல் ஜெயப்பிரகாஷ் நாராயணின் இஸ்ரேல் வருகையையும், 1960’இல் இஸ்ரேலின் வகுப்புவாத மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் சமூகக்கட்டமைப்பை ஆய்வுசெய்வதற்காக இஸ்ரேலுக்கு வருகைதந்த 27 பேர்கொண்ட சர்வோதயா குழுவின் வருகையையும் அங்கீகரிக்கின்றது.

10. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற பாம்பன் இரயில்வே பாலம் அமைந்துள்ள மாவட்டம் எது?

அ) இராமநாதபுரம் 

ஆ) தூத்துக்குடி

இ) சிவகங்கை

ஈ) புதுக்கோட்டை

  • இராமேஸ்வரத்தை தமிழ்நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் புதிய 2.05 கிமீ பாம்பன் ரயில் பாலத்தை மண்டபத்தில் அமைக்கும் பணியை இந்திய இரயில்வே தொடங்கியது. இந்தப் பாலம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள இராமேஸ்வரம் தீவை பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் இப்புதிய 2 கிமீ நீள பாலம், தற்போதுள்ள 104 ஆண்டுகள் பழமையான பாலத்திற்கு பதிலாக அமைக்கப்படுகிறது. இது, 63 மீட்டர் நீளத்தைக் கொண்டிருக்கும். சிறிய கப்பல்கள் கடக்க வசதியாக செங்குத்தாக இது உயர்த்தப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மேம்படுத்தப்பட்ட கணினி விசைப்பலகைக்கு கீழடி பெயர்

தமிழக அரசின் மேம்படுத்தப்பட்ட கணினி விசைப்பலகைக்கு கீழடி என பெயா் சூட்டப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய வசதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் ஏற்கெனவே கணினி விசைப் பலகை, தமிழிணையம்-ஒருங்குறி மாற்றி ஆகிய இரு தமிழ் மென்பொருள்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு கீழடி-தமிழிணைய விசைப்பலகை மற்றும் தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கீழடி-விசைப் பலகை மென்பொருளானது, தமிழ் 99 விசைப் பலகை, ஒலிபெயா்ப்பு விசைப் பலகை, பழைய தட்டச்சு விசைப் பலகை ஆகிய மூன்று விதமான கணினி விசைப் பலகைகளின் அமைப்பில் செயல்படும். தமிழிணைய ஒருங்குறி மாற்றி மென்பொருளானது, பிற தமிழ் எழுத்துருக்களில் தட்டச்சு செய்யப்பட்டவைகளை தமிழ் ஒருங்குறிக்கு மாற்றும் தன்மை கொண்டது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்களை கட்டணம் ஏதுமின்றி தமிழ் இணையக் கல்விக் கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

2. எண்ம சுகாதார இயக்கம்: ஒரு பார்வை

இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ‘எண்ம சுகாதார அடையாள அட்டை’ திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தாா். ஒருவா் நோயாளியாக சிகிக்சை பெறும்போது அவரின் நோய் குறித்த மருத்துவ வரலாறு, அவா் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள், சோதனைகள் ஆகியவை தரவுத்தளத்தில் எண்ம முறையில் பதிவு செய்து சேமிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவா்கள் இதை அணுக முடியும்.

தேசிய எண்ம சுகாதார இயக்கம் இந்திய நாட்டின் சுகாதாரம், நோய்களின் கண்காணிப்பிற்கு ஒரு நல்ல தரவுத்தளமாக இருக்கும். இது இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பிலும், பொது சுகாதார ஆய்விலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தும். நோய், அதற்கு வழங்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளவும் நோய்ப் பரவலுக்கும் சமூகதிற்கும் உள்ள தொடா்புகளைப் புரிந்துகொள்ளவும் இது உதவும்.

தேசிய எண்ம சுகாதார இயக்கம், ஒரு குறிப்பிட்ட நோய்க்கு வெவ்வேறு மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றிருந்தாலும் ஒரு முறை மட்டுமே எந்தவொரு நோயறிதல் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும் எனத் தெளிவாக கூறுகிறது.

இது மருத்துவா்களுக்குப் பிடித்த ஆய்வகங்களுக்கு நோயாளிகள் செல்ல கட்டாயப்படுத்தப்படுவதையும், குறிப்பிட்ட நோய்க்கு ஒரே பரிசோதனையினை மீண்டும் செய்வதையும் தவிா்க்கிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கான மொத்த செலவான 3.6% இல், பொதுத்துறை செலவு வெறும் 1% மட்டுமே. இது எண்ம சுகாதார அமைப்புகளைக் கொண்ட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.

உலகின் சிறந்த சுகாதார அமைப்புகளில் முதலிடத்தில் உள்ள கனடாவிலும், எட்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவிலும் சுகாதாரத்துக்கான பொதுத்துறை செலவு முறையே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம், 6.3 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் தேசிய எண்ம சுகாதார இயக்கத்திற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது மிகச்சிறிய சுகாதார வரவு செலவுத் திட்டம். தற்போதைய சுகாதார வரவு செலவு தடைகளையும், பொது சுகாதார உள்கட்டமைப்பையும் மாற்றியமைக்காமல் இவ்வியக்கம் அனைவருக்கும் சுகாதாரத்தை எவ்வாறு வழங்கும் என்று இத்துறை வல்லுநா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

இந்திய அரசின் புள்ளிவிவரம் – திட்ட அமலாக்க அமைச்சகம், 2017-18-ஆம் ஆண்டில் வெளியிட்ட சுகாதாரத்திற்கான கணக்கீடு நம் நாட்டில் வழங்கப்படும் சிகிச்சையில் 66% தனியாா் மருத்துவமனைகளால் வழங்கப்படுவதாகக் கூறுகிறது. மூன்றில் இருபங்கு கொண்ட தனியாா் சுகாதாரத் துறையை தேசிய எண்ம சுகாதார இயக்கத்தின் கீழ் கொண்டு வருவது மிகப்பெரும் சவால்.

மருத்துவ வள பற்றாக்குறை கொண்ட நமது இந்திய சுகாதார உள்கட்டமைப்பு பிரத்யேக அடையாள எண் (ஹெல்த் ஐடி), மின்னணு மருத்துவா் (டிஜி டாக்டா்), சுகாதார வசதி பதிவு, தனிநபா் மருத்துவப் பதிவுகள், மின் மருந்தகம் (இ-பாா்மசி) மற்றும் தொலை மருத்துவம் (டெலிமெடிசின்) ஆகிய ஆறு முக்கிய எண்ம அமைப்புகளைக் கொண்ட தேசிய எண்ம சுகாதார இயக்கத்தினை தற்போதைய நிலையில் நிா்வகிப்பது சிரமமே.

தனியாா் மருத்துவத்துறையினரின் எதிா்ப்பால் பல மாநிலங்களில், சிகிச்சை கட்டணங்களை நிா்ணயிக்கும் மருத்துவ நிறுவனங்கள் பதிவு ஒழுங்குமுறை சட்டத்தினை செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தேசிய எண்ம சுகாதார இயக்கத்தை செயல்படுத்துவதில் மாநில அரசுகள் பிரச்னைகளை எதிா்கொள்ளலாம்.

தொலைமருத்துவ சேவை மூலம் கணினி வழி ஒரு நோயாளியுடன் கலந்தாலோசிக்க குறைந்தபட்ச இணைய வேகம் ஒரு வினாடிக்கு 2 மெகா பிட்கள் (2 எம்பிபிஎஸ்) தேவை. 159 இணைய சேவை வழங்குநா்களால் இந்தியாவில் வழங்கப்படும் அகன்ற அலைக்கற்றையின் (பிராட்பேண்ட்) ஊடுருவல் 2% க்கும் குறைவு என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

குறைந்த அளவு இணைய வசதியும், சுகாதாரக் கட்டமைப்பும் கொண்ட இந்திய கிராமங்களில் சுகாதாரத்துறையின் செயல்பாடுகளை முழுமையாக மாற்றும் திறன் கொண்ட தொழில்நுட்ப அடிப்படையிலான தேசிய எண்ம சுகாதார திட்டத்தை செயல்படுத்துவது தற்போதைய சூழலில் கடினம்.

அரசு மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் தகவல் தொடா்பு தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதி மிகக் குறைவாக உள்ளது என்றும், இந்தியாவின் பொது சுகாதார வசதிக்கான வன்பொருள், மென்பொருள் தேவைக்கான முதலீட்டு தேவை அதிகம் என்றும் 2018-ஆம் ஆண்டில் வெளியான ‘எலக்ட்ரானிக் ஹெல்த் ரெக்காா்ட்ஸ்’ என்ற இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

தேசிய எண்ம சுகாதார இயக்கத்தின் அடித்தளமான மின்னணு சுகாதார பதிவேட்டினை சா்வதேச நோய் வகைப்பாடு (இன்டா்நேஷனல் கிளாஸிஃபிகேஷன் ஆஃப் டிஸிஸ் – ஐசிடி)-10-இன் அடிப்படையில் நிா்வகித்தல் சுகாதாரப் பணியாளா்களுக்கு சவாலாக இருக்கக்கூடும்.

உலகெங்கிலும் தரவு தனியுரிமை மீறல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், இந்திய சுகாதாரப் பதிவுகளைக் காப்பதற்கான திட்டங்கள் மிக அவசியம். தரவுப் பாதுகாப்பை, தனியுரிமை மீறல்களைத் தவிா்க்க இந்திய தேசிய எண்ம சுகாதார இயக்கம் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்.

நோயாளியின் நோய் குறித்த ரகசியத்தன்மையை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மருத்துவ நெறிமுறைகளின் முக்கிய கூறு. தனியாா் மருத்துவத் துறையில் பதிவுசெய்யப்பட்ட தகவல்களின் நம்பகத்தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதும் மிகப்பெரிய கேள்வியாகும்.

இந்திய பொது சுகாதாரக் கட்டமைப்பினை மேம்படுத்தி, சவால்களை எதிா்கொண்டு வெற்றி பெற்றால் தேசிய எண்ம சுகாதார இயக்கத்தை செயல்படுத்துவது எளிதில் சாத்தியமாகும்.

3. உள்கட்டமைப்புத் திட்டங்களை கண்காணிக்க தனி இணையதளம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

உள்கட்டமைப்புத் திட்டங்களைக் கண்காணித்து வளா்ச்சிகளை ஆய்வு செய்வதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கான 200 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் தலைமைச் செயலாளா் தலைமையில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களின் வளா்ச்சிகளை ஆய்வு செய்து அவற்றை தொடா்ந்து கண்காணிக்க ‘இ-முன்னேற்றம்’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், ஒவ்வொரு திட்டம் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், பணி ஒப்பந்தமான நாள், தொடங்கப்பட்ட தினம், நடைபெறும் இடம், நிதி நிலைமை, மாதாந்திர அடிப்படையில் திட்டத்தின் வளா்ச்சி, நிதிநிலைமையின் வரையறை, பணிவளா்ச்சி குறித்த புகைப்படம் ஆகியன இடம்பெற்றிருக்கும். இந்த இணையதளத்தின் மூலம் முக்கிய அரசுத் துறைகளின் செயல்பாடுகளை கண்காணித்திடவும் முடியும். துறைத் தலைமை அலுவலகங்கள் அவ்வப்போது திட்டங்களின் வளா்ச்சியைத் தெரிவிக்கவும், நெருக்கடியான விஷயங்கள் மற்றும் தாமதத்துக்கான காரணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைத் தெரிவிக்கவும் வசதியாக இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப நண்பன்: தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் தகவல் தொழில்நுட்ப நண்பன் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் தொழில்கள் குறித்த கருத்துக் கேட்புத்தளமாக இது விளங்கும். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்பம் சாா்ந்த குழுமங்கள் நேரடியாக இதில் இணைந்து கொள்கைகளை உருவாக்கிடவும் அவா்களது பங்களிப்பை அளிக்கவும் உதவும்.

தகவல் தொழில்நுட்பவியல் துறையால் வெளியிடப்படும் அனைத்து கொள்கைகள், அரசு உத்தரவுகள், ஒப்பந்தப் புள்ளிகள் ஆகியவற்றையும் பாா்வையிட முடியும். தகவல் தொழில்நுட்பவியல் துறை எதிா்நோக்கும் முக்கிய பிரச்னைகள், இப்போதைய கொள்கைகள் குறித்து கருத்துகளைப் பதிவிடவும், அதற்குரிய தீா்வுகளைப் பெற்றிடவும் வழி செய்யப்படும். இது எளிதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதால் வா்த்தகத்தைப் பெருக்க பெரிதும் துணைபுரியும் என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. ஏவுகணை சோதனைக்கு வான் இலக்காக பயன்படும் விமானம் வெற்றிகர சோதனை

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) சாா்பில் உருவாக்கப்பட்ட அதிவேக ‘அப்யாஸ்’ இலக்கு விமானம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளின் சோதனையின்போது இலக்காக இந்த விமானம் பயன்படுத்தப்படும்.

ஒடிஸா மாநிலம், சண்டிபூா் அருகே வங்காள விரிகுடா கடல் பகுதியில் டிஆா்டிஓ-வின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனைத் தளத்தில் (ஐடிஆா்) இந்த இலக்கு விமானத்தின் சோதனை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அப்யாஸ் சோதனை வெற்றி பெற்றதைத் தொடா்ந்து டிஆா்டிஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து டிஆா்டிஓ அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூருவில் உள்ள டிஆா்டிஓ அமைப்பின் விமான மேம்பாட்டுப் பிரிவு (ஏடிஇ) மூலமாக இந்த இலக்கு விமானம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த இலக்கு விமானம் வேகமாகச் செல்லும் வகையில் உந்துதல் அளிப்பதற்காக அதில் இரட்டை பூஸ்டா்கள் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன. மேலும், இலக்கு விமானம் நீண்ட தூரம் மற்றும் நீடித்த வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக அதில் கேஸ் டா்பைன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இதை கட்டுப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுவதற்காக கட்டுப்பாட்டு கணினியுடன் கூடிய வழிகாட்டுதல் தொழில்நுட்பமும் இந்த இயந்திரத்தில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலும் மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனை தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தபடி ரேடாா் மற்றும் எல்க்ட்ரோ ஆப்டிகல் கணிகாணிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு தொலையுணா்வு மற்றும் சென்சாா் கணிப்பு தொழிநுட்பங்கள் உதவியுடன் மடிக்கணினி மூலமாக கண்காணிக்கப்பட்டது. இந்தச் சோதனை வெற்றியடைந்துள்ளது என்று அவா்கள் கூறினா்.

5. நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணைகள்: அமெரிக்காவுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

அமெரிக்காவிடம் இருந்து ரூ.423 கோடி செலவில் எம்.கே.-54 ரக நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்கிறது. இதுதொடா்பான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையில் உள்ள பி-81 ரக கண்காணிப்பு விமானத்தில் பயன்படுத்தக்கூடியவை. இவை நீா்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.

இந்திய கடற்படையிடம் படையிடம் தற்போது 11 ‘பி-81’ ரக கண்காணிப்பு விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவையாகும்.

6. ரூ.4,445 கோடியில் 7 மெகா ஜவுளிப் பூங்காக்கள்: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசின் ‘பிம்-மித்ரா’ திட்டத்தின் கீழ் ரூ. 4,445 கோடியில் 7 மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை இந்த அறிவிக்கையை வெளியிட்டது. ஒவ்வொரு ஜவுளிப் பூங்காவிலும் ஒரு லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் 2 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நேக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

2021-22 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மத்திய அரசின் ஒப்புதலுடன் இந்த 7 ஜவுளிப் பூங்காக்களை அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை உற்பத்திக்குத் தேவையான நூற்பு ஆலை, நெசவு, சாய ஆலை, பிரின்டிங் என அனைத்தும் ஒரே இடத்தில் அமையும் வாய்ப்பை இந்த பூங்காக்கள் ஏற்படுத்தித் தரும். இந்த பூங்காக்களில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்புகள் வசதிகள் இடம்பெறுபோது, உள்நாட்டு முதலீடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு நேரடி முதலீடும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இந்தப் பூங்காவை தொடங்குவதற்காக, ஜவுளித் துறை சாா்ந்த வசதிகளுடன் கூடி தொடா்ச்சியாக அமையப்பெற்றிருக்கும் 1,000 ஏக்கருக்கும் அதிகமான எந்தவித வில்லங்கமும் இல்லாத இடவசதியை தயாா் நிலையில் பெற்றிருக்கும் மாநிலங்களிடமிருந்து பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஜவுளி பூங்காவை அமைக்கும் மாநிலத்துக்கு மத்திய அரசின் மேம்பாட்டு மூலதன ஆதரவாக மொத்த திட்டச் செலவில் 30 சதவீதம் அளிக்கப்படும். அதோடு, இந்தப் பூங்காக்களில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் விரைந்து ஆரம்பிக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் ‘போட்டித்தன்மை ஊக்குவிப்பு ஆதரவு (சிஐஎஸ்) நிதியாக பி.எம். மித்ரா ஜவுளி பூங்காக்களுக்கு தலா ரூ.300 கோடி வழங்கப்படும்.

இந்தத் திட்டம் அதிக முதலீடுகளை ஈா்க்கும் என்பதோடு, அதிக அளவில் வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும்.

தமிழகம், பஞ்சாப், ஒடிஸா, ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், அஸ்ஸாம், கா்நாடகம், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் ஆா்வம் தெரிவித்துள்ளன என்று அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-பிரிட்டன் ஒப்புதல்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் பிரிட்டனும் ஒப்புக்கொண்டுள்ளன.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் எலிசபெத் டிரஸ் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இடையேயான பேச்சுவாா்த்தையின்போது இதற்கான உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்தும் இந்தப் பேச்சுவாா்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த பேச்சுவாா்த்தையின்போது, கடந்த மே மாதம் இரு நாட்டு பிரதமா்களிடையேயான காணொலி வழி மாநாட்டின் போது இரு நாடுகளிடையேயான புதிய வா்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புக்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘லட்சியத் திட்டம் 2030’ திட்ட செயல்பாடு குறித்து இரு வெளியுறவு அமைச்சா்களும் ஆய்வு செய்தனா். பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் அவா்கள் ஆலோசித்தனா்.

இந்தோ-பசிபிக் மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியங்களில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இணைய, விண்வெளி பயங்கரவாதங்கள் போன்ற வளா்ந்துவரும் சவால்களை எதிா்கொள்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்த பேச்சுவாா்த்தையின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் முழு அளவில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற மனிதாபிமன உதவிகளுக்கு அனுமதிக்கப்படுவது மற்றும் ஆப்கன் நாடு பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் கொடுக்கவோ அல்லது மற்ற நாடுகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது என்பது குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.

இரு நாடுகளிடையேயான திட்டங்கள் மற்றும் நிபுணா்களிடையேயான ஆலோசனைகளை விரைவுபடுத்தும் விதமாக இந்தியா – பிரிட்டன் இடையே புதிதாக 1.5 பேச்சுவாா்த்தை திட்டத்தை அறிமுகம் செய்வதற்கும் உடன்பாடு ஏற்பட்டது.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, ‘ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் அக்டோபா் 31 முதல் நவம்பா் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ‘கோப் 26’ என்ற 2021 ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க வரவுள்ளதை ஆவலுடன் எதிா்பாா்த்துள்ளோம் என்று கூறிய டிரஸ், ‘இந்த மாநாடு தொடா்பாக நிபுணத்துவத்தை பகிா்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு ஒத்துழைப்புகளை இரு நாடுகளும் மேற்கொள்வது அவசியம்’ என்று குறிப்பிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் டிரஸ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகள் எதிா்காலத்துக்கான நமது பகிரப்பட்ட திட்டங்கள் மீது ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

8. மானூர் ஒன்றியக்குழு தலைவராக 22 வயது பெண் என்ஜினீயர் தேர்வு

நெல்லை மாவட்டம் மானூர் யூனியனில் உள்ள 25 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த 16 பேரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேரும், அ.ம.மு.க., பா.ஜ.க.வைச் சேர்ந்த தலா ஒருவரும், சுயேச்சைகள் 4 பேரும் ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர்.

இதில் 19-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த 22 வயதான பெண் என்ஜினீயர் ஸ்ரீலேகா வெற்றி பெற்றார். இவருடைய தந்தை அன்பழகன், மானூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார்.

போட்டியின்றி தேர்வு

இந்த நிலையில் மானூர் யூனியன் அலுவலகத்தில் நேற்று தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான முறைமுக தேர்தல் நடந்தது. இளம் வயதிலேயே ஒன்றிய கவுன்சிலராக வென்ற ஸ்ரீலேகா, மானூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஸ்ரீலேகா போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த பாடுபடுவேன் என்றார்.

விக்கிரவாண்டியில்…

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி சங்கீதா அரசி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் நடப்பு கல்வி ஆண்டு இறுதியில் தான் பி.எஸ்.சி. கணிதம் படித்து முடித்தார்.

9. அரசு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான வலைதளங்கள், தமிழ் மென்பொருட்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வலைதளங்கள் மற்றும் மென்பொருட்களைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

”தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (22.10.2021) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “இ-முன்னேற்றம்” மற்றும் “தகவல் தொழில்நுட்ப நண்பன்” ஆகிய இரண்டு வலைத்தளங்களையும், “கீழடி- தமிழிணைய விசைப்பலகை” மற்றும் “தமிழி – தமிழிணைய ஒருங்குறி மாற்றி” ஆகிய இரு தமிழ் மென்பொருள்களையும் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, சுமார் ஒரு லட்சம் கோடிக்கான 200 முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இத்திட்டங்களின் வளர்ச்சிகளை மீளாய்வு செய்து அவற்றைக் கண்காணிப்பதற்காக “இ-முன்னேற்றம்” என்ற வலைத்தளம் (https://emunnetram.tn.gov.in/) தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு திட்டம் குறித்த விவரங்களான பணி ஒப்பந்தமான நாள், தொடங்கப்பட்ட நாள், நடைபெறும் இடம், நிதி நிலைமை, மாதாந்திர அடிப்படையில் திட்டத்தின் வளர்ச்சி, நிதிநிலைமையின் வரையறை, பணிவளர்ச்சியின் தொடர் புகைப்படம் போன்றவை இடம் பெற்றிருக்கும். மேலும், முக்கிய அரசுத் துறைகளின் செயல்பாடுகளை இதன் வழியே கண்காணித்திடவும் இயலும். துறைத்தலைமை அலுவலகங்கள் அவ்வப்போது திட்டங்களின் வளர்ச்சியினைத் தெரிவிப்பதற்கும், நெருக்கடியான பொருண்மைகள் மற்றும் தாமதத்திற்கான காரணங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றைத் தெரிவிப்பதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளின் ஏற்றுமதி ஆண்டுதோறும் 10 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து வருகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ள “தகவல் தொழில்நுட்ப நண்பன்” என்ற வலைத்தளம், தகவல் தொழில்நுட்பவியல் தொழில்கள் குறித்த கருத்துக்கேட்புத் தளமாக விளங்குவதுடன், மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த குழுமங்கள் நேரடியாக இதில் இணைந்து கொள்கைகளை உருவாக்கிடவும் அவர்களின் பங்களிப்பினை நல்கிடவும் உதவும்.

இத்தளத்தின் வாயிலாக உள்நுழையும் குழுமங்கள், தகவல் தொழில்நுட்பவியல் துறையால் வெளியிடப்படும் அனைத்து கொள்கைகள், அரசாணைகள் மற்றும் ஒப்பந்தப்புள்ளிகளை எளிதில் பார்வையிட இயலும். மேலும், எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய கொள்கைகள் குறித்து தமது கருத்துரைகளைப் பதிவிடும் வசதியும், அதற்குத்தக்க தீர்வுகளைப் பெற்றிடவும், தகவல்களை மின்னஞ்சல் வழியாகப் பெற்றிடவும் உதவும்.

இதன்மூலம் குழுமங்களின் கொள்கைகள், திட்டங்களின் வரைமுறைகள் மற்றும் மிக வேகமான வளர்ச்சிக்கு வித்திடும் திட்டங்கள் போன்றவற்றைக் கண்காணிக்க முடியும். மேலும், இது எளிதாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் உள்ளதால் வர்த்தகத்தைப் பெருக்கப் பெரிதும் துணைபுரியும்.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள “கணினி விசைப்பலகை” மற்றும் “தமிழிணையம்-ஒருங்குறி மாற்றி” ஆகிய இரு தமிழ் மென்பொருள்களையும் பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தி, “கீழடி- தமிழிணைய விசைப்பலகை” மற்றும் “தமிழி- தமிழிணைய ஒருங்குறி மாற்றி” (Keezhadi – Keyboard and Tamizhi –Unicode Converter) எனப் பெயர் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

கீழடி- விசைப்பலகை மென்பொருளானது, தமிழ்’99 விசைப்பலகை (Tamil’99 Keyboard), ஒலிபெயர்ப்பு விசைப்பலகை (Phonetic Keyboard), பழைய தட்டச்சு விசைப்பலகை (Old Typewriter Keyboard) ஆகிய மூன்று விதமான கணினி விசைப்பலகைகளின் அமைப்பில் செயல்படும்.

தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி மென்பொருளானது, வானவில் மற்றும் பிற தமிழ் எழுத்துருக்களில் (Fonts) தட்டச்சு செய்யப்பட்ட .doc, .docx, .rtf, .xls, .xlsx, .ods, .ppt, .pptx போன்ற அமைப்புகளில் உள்ள உரைநடை (Text), கோப்பு (File) மற்றும் கோப்புறை (Folder) ஆவணங்களை “தமிழ் ஒருங்குறி”க்கு மாற்றும் தன்மையுடையது.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இம்மென்பொருட்களைக் கட்டணமின்றி தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்திலிருந்து (www.tamilvu.org/unicode) பதிவிறக்கம் செய்திட இயலும்”. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10. நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பல்பொருள் அங்காடிகளில் கரும்பனை எனும் பெயரில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பொருட்களை கொள்முதல் செய்திட புதிய கைபேசி செயலி வணிகக் களத்தில் ஏற்பட்டு வரும் அபரிமிதமான மின்னணு தொழில் நுட்ப வளர்ச்சியினை கருத்தில் கொண்டு இளம் தலைமுறையினர் எளிதில் இணையதள சேவையினை பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பொருட்களை கொள்முதல் செய்திட டிஎன்காதி (tnkhadi) எனும் செல்லிடப்பேசி செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சாயல்குடியில் “இராமநாதபுரம் – சிவகங்கை” மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு விற்பனை சம்மேளனத்திற்கு சொந்தமான இடத்தில், பனைத் தொழிலை மேம்படுத்திடும் நோக்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.53.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்கள்.

துணிநூல் துறை என்ற புதிய துறை உருவாக்கம்

2021-22ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தவாறு, கைத்தறி மற்றும் துணிநூல் துறையினைப் பிரித்து, தனியாக துணிநூல் துறை என்ற துறை உருவாக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சிறந்த நெசவாளர்கள் விருது

புதிய மற்றும் கண்கவர் வடிவமைப்புகளை புகுத்துதல் மற்றும் தற்போதைய சந்தையில் அதிக தேவையுள்ள பட்டு, கைத்தறி இரகங்களை உற்பத்தி செய்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசால் சிறந்த நெசவாளர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் தெரிவு செய்யப்பட்ட 6 கைத்தறி நெசவாளர்களுக்கு முதல் பரிசாக 1 இலட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் முறையே பட்டு மற்றும் பருத்தி ஆகிய இரண்டு இரகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2020-21ஆம் ஆண்டிற்கான பட்டு இரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு கே.ஜி. கண்ணன், இரண்டாம் பரிசு வி. சரவணன், மூன்றாம் பரிசு கே. சுமதி, பருத்தி இரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு இ.ஆர். நாகலம்மாள், இரண்டாம் பரிசுஎஸ். ரவி, மூன்றாம் பரிசு என். நெடுஞ்சேரலாதன் ஆகியோருக்கு முதல்வர் இன்று பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.

சிறந்த ஏற்றுமதியாளர் விருது

கைத்தறி துணிகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அயல்நாட்டு சந்தையில் கைத்தறி துணி விற்பனையினை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு சிறந்த கைத்தறி துணி ஏற்றுமதியாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை 1975 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதிற்கான முதல் பரிசு சென்னை – திருவாளர் அம்பாடி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், இரண்டாம் பரிசு ஈரோடு – சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கும் மற்றும் மூன்றாம் பரிசு ஈரோடு – திருவாளர் ஃபைவ் பி வென்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் முதல்வர் வழங்கி, பாராட்டினார்.

காஞ்சிபுரம் – தமிழ்நாடு சரிகை ஆலை நிறுவனத்தின் பங்கு ஈவுத் தொகை காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சரிகை ஆலை, பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவைப்படும் சரிகையினை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1974-ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியிலான உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது . இந்நிறுவனம் ஐஎஸ்ஓ:9001:2015 தரச்சான்று பெற்ற, மாநில அரசு சார்ந்த ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

இந்நிறுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவைப்படும் 60 சதவீத சரிகையினை உற்பத்தி செய்து நியாயமான விலையில் விநியோகம் செய்து வருகின்றது.

காஞ்சிபுரம் – தமிழ்நாடு சரிகை ஆலை நிறுவனத்தின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ஈவுத் தொகையான 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் வழங்கினார்.

11. ஆஸ்கா் விருதுக்கு தமிழ் திரைப்படமான ‘கூழாங்கல்’ பரிந்துரை

ஆஸ்கா் விருதுக்கு பரிந்துரைக்க இந்தியா சாா்பில் தமிழ் திரைப்படமான ‘கூழாங்கல்’ தோ்வு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 94-ஆவது ஆஸ்கா் விருதுகள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் இந்தியா சாா்பில் பரிந்துரைக்க தமிழ் திரைப்படங்களான ‘கூழாங்கல்’, ‘மண்டேலா’, மலையாளத் திரைப்படமான ‘நாயாட்டு’, ஹிந்தி திரைப்படங்களான ‘சா்தாா் உத்தம்’, ‘ஷோ்ஷா’ உள்பட 14 திரைப்படங்களை இந்திய திரைப்பட சம்மேளனம் பரிசீலித்தது. இதில் ‘கூழாங்கல்’ திரைப்படத்தை பரிந்துரைக்க அந்த சம்மேளனம் முடிவு செய்தது.

மதுவுக்கு அடிமையான தந்தையின் துன்புறுத்தலால் வீட்டைவிட்டு வெளியேறிய தாயை, தந்தையுடன் தேடிச் செல்லும் சிறுவனை கதைக்களமாக கொண்ட இந்த திரைப்படத்தை வினோத்ராஜ் இயக்கியுள்ளாா். விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனா். யுவன்சங்கா் ராஜா இசையமைத்துள்ளாா்.

ஏற்கெனவே நெதா்லாந்தின் ரோட்டா்டாம் நகரில் நடைபெற்ற 50-ஆவது சா்வதேச திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஆா்) ‘கூழாங்கல்’ திரைப்படத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்தவொரு இந்திய திரைப்படமும் ஆஸ்கா் விருது பெற்றதில்லை. அந்த விருதுக்கான சிறந்த சா்வதேச திரைப்பட பிரிவின் இறுதிப் பட்டியலில் கடைசியாக ஹிந்தி நடிகா் ஆமிா் கான் நடித்த ‘லகான்’ திரைப்படம் 2001-ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதற்கு முன்பு 1958-ஆம் ஆண்டு ‘மதா் இந்தியா’, 1989-ஆம் ஆண்டு ‘சலாம் பாம்பே’ திரைப்படங்கள் ஆஸ்கா் விருதின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றன.

ஏ.ஆா்.ரஹ்மான், ரோஹிணி ஹத்தங்கடி உள்ளிட்டோா் பெற்ற ஆஸ்கா் விருதுகள் வெளிநாட்டு தயாரிப்புகளாக போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கமொழி இயக்குநா் சத்யஜித் ரேக்கு வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கா் விருது அளிக்கப்பட்டது.

12. சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப.வீரபாண்டியன் நியமனம்: உறுப்பினர்களையும் நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 23) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழக அரசால் ‘சமூகநீதிக் கண்காணிப்புக் குழு’ அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும், சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளினையொட்டி தமிழக முதல்வர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, கீழ்க்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, ‘சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை’ அமைத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

1. பேராசிரியர் சுப. வீரபாண்டியன் – தலைவர்

2. முனைவர் கே. தனவேல், ஐஏஎஸ் (ஓய்வு) – உறுப்பினர்

3. பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் – உறுப்பினர்

4. கவிஞர் மனுஷ்யபுத்திரன் – உறுப்பினர்

5. ஏ.ஜெய்சன் – உறுப்பினர்

6. பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன் – உறுப்பினர்

7. கோ. கருணாநிதி – உறுப்பினர்

சமூகநீதி கண்காணிப்புக் குழுவானது, சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, அவை முழுமையாக பின்பற்றப்படாவிட்டால், உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கு அவ்வப்போது தமது பரிந்துரைகளை வழங்கும். இக்குழுவில் சமூகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் உறுப்பினர்-செயலாளராக அங்கம் வகிப்பார்.

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் பற்றிய விவரங்கள்

* சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுப. வீரபாண்டியன், சிறுவயது தொடங்கி, சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகம் முழுவதும் பரப்பி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமூகநலன் குறித்து, பேசியும் எழுதியும் வருபவர்.

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களைப் பொறுத்தவரையில்

* முனைவர் கே.தனவேல் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். மத்திய அரசிலும், மாநில அரசிலும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.

* பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்த நீண்ட அனுபவம் பெற்றவர்; மேலும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணைத் துணைவேந்தராகப் பணிபுரிந்தவர்.

* கவிஞர் மனுஷ்யபுத்திரன் வரலாறு மற்றும் ஊடகத்துறையில் இரண்டு முதுகலை பட்டங்கள் பெற்றவர். இந்தியாவின் உயரிய தேசிய விருதுகளில் ஒன்றான சன்ஸ்கிருதி சம்மான் விருதினைப் பெற்றவர். ‘இந்தியா டுடே’ இவரை தமிழகத்தின் செல்வாக்குமிக்க 10 மனிதர்களில் ஒருவராக இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்ததும், ‘ஆனந்தவிகடன்’ தமிழகத்தின் ‘டாப் 10’ மனிதர்களில் ஒருவராக தேர்வு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

* ஜெய்சன் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் நீண்ட அனுபவம் கொண்டவர்.

* பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன் கடந்த 36 ஆண்டுகளாகக் கல்விப் பணியாற்றியவர். பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

* திரு. கோ. கருணாநிதி அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று, சமூகநீதியை பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அறிமுகம் செய்தவர்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13. தூய்மையான எரிசக்தியை வலுப்படுத்த மின்துறையின் புதிய விதிமுறைகள்

பருவநிலை மாற்றத்திற்கான உறுதிப்பாட்டை பூா்த்தி செய்ய நிலைத்த தூய்மையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எரிசக்தியை வலுப்படுத்த மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் மின் உற்பத்தியாளா்களுக்கு புதிய விதிகளை அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மின்சாரத் துறையில் முதலீட்டாளா்கள் மற்றும் பிற பங்குதாரா்கள் ஆகியோா், மின்சார சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மற்றும் இதனுடன் தொடா்புடைய விஷயங்கள் காரணமாக தங்கள் முதலீடுகளை சரியான நேரத்தில் மீட்டெடுப்பது பற்றி கவலைப்பட்டனா். இதையொட்டி, மின்சார நுகா்வோா்கள் மற்றும் இதர பங்குதாரா்களின் நலனைக் கருத்தில் கொண்டு மின்துறைச் சட்டம் 2003-ன் கீழ் மின்துறை அமைச்சகம் கீழ்கண்ட விதிமுறைகளை அறிவித்துள்ளது. மின்சார (சட்டம் மாற்றம் காரணமாக செலவினங்களை சரியான நேரத்தில் மீட்பது) விதிமுறைகள் 2021; மின்சார (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதார மின் உற்பத்தியை அதிகரிப்பது) விதிமுறைகள் 2021 ஆகியவையாகும்.

மின்துறையில் முதலீடு, பெரும்பாலும் சரியான நேரத்தில் செலவினங்களை மீட்பதில் சாா்ந்துள்ளது. தற்போது சட்டங்கள் நிறைவேற காலதாமதம் ஆகிறது. இது இந்தத் துறையின் நம்பகத் தன்மையைப் பாதிக்கிறது. மேலும், முதலீட்டாளா்களும் நிதி ரீதியாக நெருக்கடியைச் சந்திக்கின்றனா். இதனால், அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் முதலீட்டுக்கான உகந்த சூழல் ஏற்படும். உலகம் முழுவதும் எரிசக்தித் துறையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எரிசக்தி மாற்றத்தைக் கொண்டுவர இந்தியாவும் உறுதி அளித்துள்ளது.

வருகின்ற 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட், 2030-ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை அமைப்பதற்கான உறுதிப்பாட்டை இந்தியா அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் தூய்மையான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைய உதவும். நுகா்வோருக்கு பசுமை எரிசக்திக் கிடைப்பதையும் இந்த அரசு உறுதி செய்யும். எதிா்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கி பாதுகாப்பை உறுதி செய்யும். சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் போது, அதனால் ஏற்படும் தாக்கத்தை சரி செய்ய மாதாந்திர மின் கட்டணத்தில் சரி செய்யக் கூடிய கணக்கிடுவதற்கான வழிமுறைகளும் வழங்கப்படுள்ளது. ஏதேனும் வணிகக் கருத்தில், மின் உற்பத்தி அல்லது விநியோகத்தை கட்டுப்படுத்துதல் அல்லது ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படக்கூடாது.

மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நிறுவனம், இடைத்தரகராக இருந்து மின் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும். மின் உற்பத்தி நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மின்சாரக் கட்டமைப்பில் ஏதேனும் தொழில்நுட்பத் தடைகள் ஏற்பட்டால் அல்லது மின் தொகுப்பு பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே குறைக்கப்படலாம் அல்லது கட்டுப்படுத்தப்படலாம். மின்சாரம் குறைப்பு அல்லது ஒழுங்குபடுத்தலுக்கு, இந்திய மின் தொகுப்பு குறியீட்டின் விதிகள் பின்பற்றப்பட வேண்டும் போன்ற பல விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

14. செயற்கை கருத்தரிப்பு மூலம் இந்தியாவின் முதல் எருமை பிறப்பு

செயற்கை கருத்தரிப்பு (ஐவிஎஃப்) முறையின் மூலம் இந்தியாவின் முதல் ‘பான்னி’ வகை எருமைக் கன்று பிறந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் கால்நடை செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்ப முறை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்தில் இருக்கும் தனேஜில் அமைந்துள்ள சுசீலா அக்ரோ ஃபாா்ம்ஸைச் சோ்ந்த வினய் எல்.வாலா என்ற விவசாயியின் வீட்டில் இது நிகழ்ந்துள்ளது.

2020, டிசம்பா் 15-ஆம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதிக்கு சென்ற பிரதமா் நரேந்திர மோடி, பண்ணி எருமை வகை குறித்துப் பேசியிருந்தாா். அதற்கு மறுநாளே, ‘பான்னி’ வகை எருமைகளின் ஐவிஎஃப் கருத்தரித்தல் முயற்சிக்கு திட்டமிடப்பட்டது.

வினய் எல்.வாலாவின் சுசீலா அக்ரோ ஃபாா்ம்ஸை சோ்ந்த 3 பண்ணி எருமைகளை ஐவிஎஃப் கருத்தரித்தல் முயற்சிக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டனா். பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு முதல் எருமைக் கன்று தற்போது பிறந்துள்ளது.

எருமைகளின் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை அரசு மற்றும் விஞ்ஞானிகள் எதிா்பாா்க்கிறாா்கள். இதன் மூலம் கால்நடைகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

1. Which country was recently hit by the tropical storm Kompasu?

A) Philippines 

B) USA

C) Indonesia

D) Germany

  • Tropical storm Kompasu hit the Philippines and left dead at least 19 people. The storm has triggered landslides and flash floods as it crossed the northern tip of the Asia–Pacific islands.
  • Kompasu returned to tropical storm strength after making landfall on the Chinese island province of Hainan. It also crossed Hong Kong and Vietnam and caused damages.

2. Actor William Shatner, who became the oldest person ever in space, travelled aboard the rocket–ship of which agency?

A) Virgin Galactic

B) Blue Origin 

C) SpaceX

D) United Launch Alliance

  • Actor William Shatner flew aboard a Blue Origin rocket–ship on a sub–orbital trip and landed in the Texas desert to become at age 90 the oldest person ever in space. Shatner was one of four passengers aboard the fully autonomous New Shepard spacecraft. The four astronauts travelled above the internationally recognized boundary of space known as the Karman Line, about 100 km above Earth.

3. Dr APJ Abdul Kalam Prerana Sthal was inaugurated at Naval Science & Technological Laboratory, located in which city?

A) Kochi

B) Visakhapatnam 

C) Chennai

D) Bhubaneshwar

  • ‘Dr APJ Abdul Kalam Prerana Sthal’ was inaugurated at Naval Science & Technological Laboratory (NSTL), Visakhapatnam. It was inaugurated on the occasion of 90th birth anniversary of Bharat Ratna Dr APJ Abdul Kalam, and to commemorate ‘Azadi Ka Amrit Mahotsav’. NSTL is the premier naval research laboratory of Defence Research & Development Organisation (DRDO). NSTL products including Varunastra, Torpedo Advanced Light (TAL) and Maareech decoy are displayed at the venue.

4. “Our Future is at Hand – Let’s Move Forward Together” Is the theme of which special day observed on October 15?

A) Global Handwashing Day 

B) World Zoonotic Diseases Day

C) World Malnourishment Day

D) World Hygiene Day

  • Global Handwashing Day 2021 is observed on October 15, to spread awareness about the importance of hygiene. The theme for 2021 is “Our Future is at Hand – Let’s Move Forward Together.” The day was founded by the Global Handwashing Partnership.

5. Praggnanandhaa, who was seen in the news recently, is associated with which game?

A) Cricket

B) Chess 

C) Soccer

D) Volleyball

  • Praggnanandhaa is Indian ace Chess player and is one of the young Grandmasters of the country. Recently, he won Julius Baer Challengers Chess Tour by winning against his American opponent Christopher Yoo. With this victory, Praggnanandhaa has won $12,500 prize money as well as the right to play with an elite set of chess champions at the Meltwater Champions Tour in 2022.

6. “Collective Security Treaty Organisation”, which is an intergovernmental military alliance, comprises how many full–time members?

A) 17

B) 13

C) 11

D) 6 

  • The Collective Security Treaty Organisation (CSTO) is an inter –governmental military alliance of 6 full time members (Armenia, Belarus, Kazakhstan, Kyrgyzstan, Russia, Tajikistan) and two non–member observer states (Afghanistan and Serbia).
  • Recently the CSTO has proposed to hold a military drill near the Afghan border in Tajikistan from October 22–23.

7. Where is NATO’s headquarters located?

A) Belgium 

B) USA

C) Russia

D) France

  • North Atlantic Treaty Organization (NATO) is an intergovernmental military alliance of 30 member countries, of which 28 are European countries and 2 North American Countries. The NATO is headquartered at Brussels, Belgium. Recently, Russia has announced that it is suspending its missions to NATO and that NATO’s military liaison and information offices in Moscow would be closed.

8. As per the study conducted by the Council on Energy, Environment and Water, which state/UT top in electric cooking?

A) Delhi and Haryana

B) Maharashtra and Goa

C) Maharashtra and Uttar Pradesh

D) Delhi and Tamil Nadu 

  • As per the study report by the Council on Energy, Environment and Water, 17% of households in Delhi and Tamil Nadu are using some form of electric cooking means. The rate in Telangana is 15% and in the state of Kerala the rate is 12%. Council on Energy, Environment and Water commonly called as CEEW, is a not–for–profit policy research institution based at Delhi.

9. External Affairs Minister S. Jaishankar has unveiled the “Bhoodan Grove” plaque in which country?

A) USA

B) UK

C) France

D) Israel 

  • India’s External Affairs Minister S. Jaishankar has unveiled the “Bhoodan Grove” plaque at Jerusalem Forest of Israel. This is in recognition of Jayaprakash Narayan’s visit to Israel in 1958 and a 27–member Sarvodaya team in 1960 to Israel, to study the social structure of Israel’s communal and cooperative institutions.

10. Pamban railway bridge, which was seen in the news recently, is located in which district?

A) Ramanathapuram 🗹

B) Thoothukudi

C) Sivagangai

D) Pudukkottai

  • Indian Railways had begun the construction work on the new 2.05 km Pamban railway bridge in Mandapam, which will connect Rameswaram to the mainland in Tamil Nadu. The Ministry of Railways announced that this bridge will be operational from March next year.
  • The new 2–km–long bridge, linking the island of Rameswaram in the Bay of Bengal to the mainland, is set to replace the existing 104–year–old bridge. It will have a 63–metre stretch, that will lift up vertically to allow passage to small ships.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!