TnpscTnpsc Current Affairs

23rd & 24th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

23rd & 24th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 23rd & 24th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd & 24th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. பிரதமர் கிராம சதக் யோஜனா (PMGSY)-III தொடங்கப்பட்ட மாநிலம் எது?

அ. மேற்கு வங்காளம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. ஆந்திரப் பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஹிமாச்சல பிரதேசம்

  • பிரதமர் கிராம சதக் யோஜனா (PMGSY)-IIIஐ ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பாவில் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். பிரதமர் கிராம சதக் யோஜனா (PMGSY)-III ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சுமார் 3125 கிலோமீட்டர் சாலைகளை மேம்படுத்தும். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தொலைதூரத்தொகுதிகளில் உள்ள 440 கிலோமீட்டர் சாலைகளை மேம்படுத்துவதற்காக இந்தக் கட்டத்தின்கீழ் `420 கோடிக்கு மேல் நடுவணரசு ஒதுக்கியுள்ளது.

2. 2023 – FIFA மகளிர் உலகக்கோப்பைக்காக வெளியிடப்பட்ட சின்னத்தின் பெயர் என்ன?

அ. நீனா

ஆ. போகோயோ

இ. தசுனி

ஈ. அப்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தசுனி

  • அடுத்த ஆண்டு (2023) ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள FIFA மகளிர் உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ சின்னமாக பென்குயின் தசுனி வெளியிடப்பட்டுள்ளது. போட்டிகளை நடத்தும் இரண்டு நாடுகளிலும் காணப்படும் யூடிப்டுலா என்றவொரு சிற்றினத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தசுனி, டாஸ்மான் கடலையும் ‘ஒற்றுமை’ என்ற சொல்லையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் உள்ளது. ‘தசுனி’ என்பது கடற்கரையில் சிறார்களுடன் விளையாடிய பிறகு கால்பந்தை நேசிக்கும் ஒரு 15 வயது நடுகள கால்பந்தாட்ட ஆளுமையையும் குறிக்கும் வண்ணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

3. லிஸ் டிரஸ் என்பவர் அண்மையில் எந்த நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்?

அ. இந்தோனேசியா

ஆ. சவூதி அரேபியா

இ. இங்கிலாந்து

ஈ. ஐக்கிய அரபு அமீரகம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. இங்கிலாந்து

  • பழைமைவாத கட்சியின் கொள்கைகளால் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு கட்சியில் பிளவு ஏற்பட்டதையடுத்து அந்தக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் அறிவித்தார். 45 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்த லிஸ் டிரஸ், மீண்டும் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இங்கிலாந்தின் பிரதமராகவும் பழைமைவாத கட்சியின் தலைவராகவும் தொடர்ந்து இருப்பேன் என்றும் அறிவித்தார்.

4. ஆசியாவின் மிகப்பெரிய அமுக்கப்பட்ட உயரி வாயு ஆலை திறக்கப்பட்ட மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. பஞ்சாப்

இ. பீகார்

ஈ. சத்தீஸ்கர்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. பஞ்சாப்

  • நடுவண் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள லேராககாவில் ஆசியாவின் மிகப்பெரிய அமுக்கப்பட்ட உயிரி வாயு ஆலையைத் திறந்து வைத்தார். சங்ரூரில் உள்ள இந்த ஆலையானது ஜெர்மனியின் முன்னணி பயோஎனெர்ஜி நிறுவனங்களில் ஒன்றான வெர்பியோ AGஆல் `220 கோடி அந்நிய நேரடி முதலீட்டில் திறக்கப்பட்டது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இது தற்போது நாளொன்றுக்கு ஆறு டன் அமுக்கப்பட்ட உயிரி வாயுவை உற்பத்தி செய்கிறது.

5. பிரதமர் ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) விருதுகள் 2021இல் முதலிடத்தைப் பிடித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. உத்தர பிரதேசம்

ஈ. மத்திய பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. உத்தர பிரதேசம்

  • ‘பிரதமர் ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) விருதுகள் 2021இல்’ உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசமும் தமிழ்நாடும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. குஜராத் ஐந்து சிறப்புப் பிரிவு விருதுகளைப் பெற்றது, ஜம்மு-காஷ்மீர் ஆனது தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூவுடன் இணைந்து ‘சிறந்த செயல்திறன் கொண்ட UT’ எனத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1.23 கோடி வீடுகள் இத்திட்டத்தின்கீழ் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் 64 இலட்சம் வீடுகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன; மீதமுள்ளவை இறுதிக்கட்டங்களில் உள்ளன.

6. ஒவ்வொரு ஆண்டும், ‘உலக வளர்ச்சித் தகவல் நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. அக்டோபர்.24

ஆ. அக்டோபர்.27

இ. அக்டோபர்.31

ஈ. நவம்பர்.03

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. அக்டோபர்.24

  • ஐக்கிய நாடுகள் அவையானது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர்.24 அன்று உலக வளர்ச்சித்தகவல் நாளை உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. பல்வேறு நாடுகளிலுள்ள வளர்ச்சியைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் மற்றும் அவற்றை கையாளுவதற்கான தீர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1972இல், ஐநா பொதுச்சபை உலக வளர்ச்சித் தகவல் நாளை நிறுவியது.

7. இந்தியாவின் முதல், ‘புலம்பெயர் கண்காணிப்பு அமைப்பு’ தொடங்கப்பட்ட நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. மும்பை

இ. காந்தி நகர்

ஈ. கௌகாத்தி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மும்பை

  • இந்தியாவின் முதல், ‘புலம்பெயர் கண்காணிப்பு அமைப்பானது’ மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது புலம்பெயர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை ஒரே அமைப்பில் உடனே வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. வலைத்தள அடிப்படையிலான இப்புலம்பெயர் கண்காணிப்பு அமைப்பு புலம்பெயர்ந்த பயனாளிகளின் இயக்கங்களை தனிப்பட்ட அடையாள எண்கள்மூலம் கண்காணிக்கும்.

8. அண்மையில் ஏவப்பட்ட புதிய தலைமுறை நடுத்தர தொலைவுக்குத் தாக்கும் ஏவுகணையின் பெயர் என்ன?

அ. ஆகாஷ் பிரைம்

ஆ. அக்னி பிரைம்

இ. ககன் பிரைம்

ஈ. நரன் பிரைம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அக்னி பிரைம்

  • இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை நடுத்தர தொலைவுக்குத் தாக்கும் ஏவுகணையான ‘அக்னி பிரைம்’ (அக்னி-P) ஏவுகணையை ஒடிஸா கடற்கரையிலிருந்து சோதனை செய்தது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூற்றுப்படி, ‘அக்னி பிரைம்’ என்பது 1,000 முதல் 2,000 கிமீ வரை சென்று தாக்கும் திறன்கொண்ட அக்னி வகை ஏவுகணைகளின் புதிய மேம்பட்ட வகையாகும்.

9. ‘தேசிய அறிவுசார் சொத்து விருதுகள் – 2021 மற்றும் 2022’ஐ வென்ற நிறுவனம் எது?

அ. IISc பெங்களூரு

ஆ. ஐஐடி மெட்ராஸ்

இ. ஐஐடி பம்பாய்

ஈ. எய்ம்ஸ், புது தில்லி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஐஐடி மெட்ராஸ்

  • இந்திய தொழில்நுட்பக்கழகம் – மெட்ராஸ் (IIT-M), ‘தேசிய அறிவுசார் சொத்து விருதுகள் – 2021 மற்றும் 2022’ஐ வென்றுள்ளது. காப்புரிமை தாக்கல், மானியங்கள் மற்றும் வணிகமயமாக்கலுக்கான இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக IIT-M நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்விருது மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தொழிற்துறை & உள்நாட்டு வணிகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் வழங்கப்படுகிறது.

10. 2020ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதை வென்றவர் யார்?

அ. இரஜினிகாந்த்

ஆ. கமல்ஹாசன்

இ. ஆஷா பரேக்

ஈ. மு க ஸ்டாலின்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஆஷா பரேக்

  • கடந்த 2020ஆம் ஆண்டிற்கான, ‘தாதாசாகேப் பால்கே’ விருதுக்கு மூத்த நடிகை ஆஷா பரேக் தேர்வு செய்யப்பட்டு, புது தில்லியில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது விழாவில் அவருக்கு அவ்விருது வழங்கப்படவுள்ளது. தமிழ்த் திரையுலகின், ‘சூப்பர் ஸ்டார்’ இரஜினிகாந்த், 2021ஆம் ஆண்டுக்கான, ‘தாதாசாகேப் பால்கே’ விருதைப் பெற்றார். 52ஆவது ‘தாதாசாகேப் பால்கே’ விருதுபெற்ற ஆஷா பரேக், 95-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியதோடு, 1998-2001 வரை நடுவண் திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவராகவும் இருந்தார். கடந்த 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகளை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள் 

1. 7ஆவது ஆயுர்வேத நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

ஏழாவது ஆயுர்வேத நாள் 23-10-2022 அன்று இந்தியாவிலும், பன்னாட்டளவிலும் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, “ஹர் தின் ஹர் கர் ஆயுர்வேதம்”, அதாவது ஆயுர்வேதத்தின் நன்மைகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய உறுதியேற்று செயல்பட வேண்டும் என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.

2. GSLV Mk-3 ஏவுகணை LVM-3 எனப் பெயர்மாற்றம்

விண்ணுக்கு மிக அதிக எடையை தாங்கிச்செல்லும் திறன்கொண்ட புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் செலுத்து வாகனமான, ‘GSLV Mk-3’ ஏவுகணையின் பெயரை ‘LVM-3’ (செலுத்து வாகனம் Mk-3) என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெயர்மாற்றம் செய்துள்ளது. இந்தியாவின் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் விண்வெளி திட்டத்திலும் இந்த LVM-3 இராக்கெட்தான் பயன்படுத்தப்படவுள்ளது.

3. தஞ்சைப் பெரிய கோவிலில் இராஜராஜ சோழனின் 1037ஆவது சதய விழா

தஞ்சைப்பெரிய கோவிலில் இராஜராஜ சோழனின் 1037ஆவது சதய விழாவில் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.   உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில், இராஜராஜ சோழனுக்குச் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இரண்டு நாள்கள் சிறப்பாக விழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சதய விழா வரும் நவ.2 & 3 தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, பெரிய கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.

23rd & 24th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)–III has been launched in which state?

A. West Bengal

B. Himachal Pradesh

C. Maharashtra

D. Andhra Pradesh

Answer & Explanation

Answer: B. Himachal Pradesh

  • The Prime Minister Narendra Modi launched Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)–III in Chamba, Himachal Pradesh. The Prime Minister also launched Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)–III in Himachal Pradesh for the upgradation of around 3125 kilometres of roads in the state. More than Rs 420 crores has been sanctioned by the Central Government under this phase for the upgradation of 440 kilometres of roads in 15 border and far–flung blocks of the state.

2. What is the name of the mascot unveiled for 2023 FIFA Women’s World Cup?

A. Nina

B. Pokoyo

C. Tazuni

D. Appu

Answer & Explanation

Answer: C. Tazuni

  • Penguin Tazuni has been unveiled as the official mascot of next year’s FIFA Women’s World Cup in Australia and New Zealand. The design is based on the Eudyptula minor species found in both host countries, and the name combines the Tasman Sea and the word ‘Unity’. Tazuni is a 15–year–old midfielder whose story involves her falling in love with football after playing with a group of children on a beach.

3. Liz Truss recently resigned as the Prime Minister of which country?

A. Indonesia

B. Saudi Arabia

C. United Kingdom

D. UAE

Answer & Explanation

Answer: C. United Kingdom

  • British Prime Minister Liz Truss has announced that she will step down from the position leader of the Conservative Party after her policies triggered economic turmoil and divided the party. Truss, who has been prime minister for just 45 days, also announced that she will remain as prime minister and party leader until a successor is chosen.

4. Asia’s largest Compressed Bio Gas (CBG) plant has been recently inaugurated in which state/UT?

A. Rajasthan

B. Punjab

C. Bihar

D. Chhattisgarh

Answer & Explanation

Answer: B. Punjab

  • Union Minister of Petroleum and Natural Gas Hardeep Singh Puri inaugurated Asia’s largest Compressed Bio Gas (CBG) plant in Lehragaga, Sangrur, Punjab. The CBG Plant at Sangrur was inaugurated with an FDI investment of Rs 220 crores by Verbio AG, one of the top bioenergy companies in Germany. It is spread out across around 20 acres and currently produces about 6 Tons Per Day (TPD) of CBG.

5. Which state was ranked first in the ‘Pradhan Mantri Awas Yojana–Urban (PMAY–U) Awards 2021?

A. Tamil Nadu

B. Maharashtra

C. Uttar Pradesh

D. Madhya Pradesh

Answer & Explanation

Answer: C. Uttar Pradesh

  • Uttar Pradesh bagged the first position in the ‘Pradhan Mantri Awas Yojana– Urban (PMAY–U) Awards 2021. It is followed by Madhya Pradesh and Tamil Nadu at second and third place, respectively. Gujarat saw five special category awards while Jammu and Kashmir was adjudged the ‘Best Performing UT’ alongside Dadra and Nagar Haveli and Daman & Diu.1.23 crore houses were sanctioned under the scheme of which 64 lakh have already been completed and delivered while the rest were at various stages of completion.

6. When is the ‘World Development Information Day’ observed every year?

A. October.24

B. October.27

C. October.31

D. November.03

Answer & Explanation

Answer: A. October.24

  • Every year the United Nations marks October 24 as World Development Information Day across the world. This day is observed to create awareness towards the problems surrounding development in different nations and solutions to overcome them. In 1972, the UN General Assembly established World Development Information Day.

7. India’s first ‘Migration Monitoring System’ has been inaugurated in which city?

A. New Delhi

B. Mumbai

C. Gandhi Nagar

D. Guwahati

Answer & Explanation

Answer: B. Mumbai

  • India’s first ‘Migration Monitoring System’ has been inaugurated in Mumbai. The system has been developed by the Department of Women and Child Development. It is aimed at providing updated information on migrant pregnant women, lactating mothers and children instantly on a single system. The website–based Migration Tracking System (MTS) will track the movements of vulnerable seasonal migrant beneficiaries through unique identification numbers.

8. What is the name of the new generation medium–range ballistic missile, which was recently test–fired?

A. Akash Prime

B. Agni Prime

C. Gagan Prime

D. Naran Prime

Answer & Explanation

Answer: B. Agni Prime

  • India test–fired indigenously developed new generation medium–range ballistic missile ‘Agni Prime’ (Agni–P) from the Odisha coast. As per the Defence Research and Development Organisation, Agni Prime is a new generation advanced variant of the Agni class of missiles with range capability between 1,000 and 2,000km.

9. Which institution won the ‘National Intellectual Property Awards 2021 and 2022’?

A. IISc Bengaluru

B. IIT Madras

C. IIT Bombay

D. AIIMS, New Delhi

Answer & Explanation

Answer: B. IIT Madras

  • The Indian Institute of Technology Madras (IIT Madras) has won the ‘National Intellectual Property Awards 2021 and 2022’. The institution has been identified as the top Indian academic institution for patents filing, grants and commercialisation. This award is presented by the Department for Promotion of Industry and Internal Trade, Ministry of Commerce and Industry.

10. Who is the winner of the Dadasaheb Phalke award for the year 2020?

A. Rajinikanth

B. Kamal Haasan

C. Asha Parekh

D. M K Stalin

Answer & Explanation

Answer: C. Asha Parekh

  • Veteran actor Asha Parekh has been selected for the Dadasaheb Phalke award for the year 2020 and will be presented the award at the National Film Awards ceremony, to be held in New Delhi. Tamil film superstar Rajinikanth was the recipient of the last Dadasaheb Phalke award. Asha Parekh, the 52nd awardee of the honour, worked in more than 95 films and was the chairperson of the Central Board of Film Certification from 1998–2001. Established in 1954, the awards are being organised by the National Film Development Corporation (NFDC).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!