Tnpsc

23rd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

23rd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

23rd April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. அண்டார்டிகாவுக்கு நாற்பதாவது அறிவியல் பயணத்தை மேற்கொண்ட அமைச்சகம் எது?

அ) கப்பல் வாணிப அமைச்சகம்

ஆ) புவி அறிவியல் அமைச்சகம்

இ) வெளியுறவு அமைச்சகம்

ஈ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

  • மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அண்டார்டிகாவிற்கு நாற்பதாவது அறிவியல் பயணத்தை மேற்கொண்டது. இந்தப் பயணம், 2021 ஏப்.10 அன்று வெற்றிகரமாக கேப்டவுனுக்குத் திரும்பியுள்ளது.
  • வெறும் 94 நாட்களில் சுமார் 12,000 கடல் மைல் நீள பயணத்தை முடித்த பின்னர் இந்தக் குழு திரும்பியது. MV வாசிலி கோலோவ்னின் கப்பலில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனை, அண்டார்டிகாவில் இந்தியாவின் நாற்பதாண்டுகால அறிவியல்பூர்வ முன்னெடுப்புளை நிறைவு செய்துள்ளது.

2. ‘லூனா 25’ என்பது நிலவு ஆராய்ச்சி குறித்த எந்த நாட்டு திட்டத்தின் பெயராகும்?

அ) ரஷியா

ஆ) ஜப்பான்

இ) சீனா

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • நிலவு ஆராய்ச்சி குறித்த ஒரு புதிய தொடர் திட்டங்களை ரஷியா அறிவித்துள்ளது. “லூனா 25” எனப் பெயரிடப்பட்ட அந்த திட்டங்களில் முதலாவது திட்டம் வரும் அக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • 45 ஆண்டுகளாக ரஷியா இதுபோன்ற நிலவு ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபடாமல் இருந்தது. நிலவின் மேற்பரப்பிற்குக்கீழே நிரந்தரமாக உறை -ந்திருக்கும் பனியை ஆராயும் விதமாக இந்தத் தரையிறங்கி வடிவமை -க்கப்பட்டுள்ளது. நிலவு சூழ் புழுதியின் கூர்மையான துண்டுகளால் ஏற்படும் இடர்களையும் அறிவியலாளர்கள் மதிப்பீடு செய்வார்கள்.

3.  “Complex Pasts: Diverse Futures” என்பது ஏப்ரல்.18 அன்று கொண்டாடப்படும் எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருளாகும்?

அ) உலக கலாச்சார நாள்

ஆ) உலக பாரம்பரிய நாள்

இ) உலக தொல்லியல் நாள்

ஈ) உலக சுற்றுலா நாள்

  • ஆண்டுதோறும் ஏப்18 அன்று உலக பாரம்பரிய நாள் அல்லது நினைவுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரிய தலங்களுக்கான பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. “Complex Pasts: Diverse Futures” என்பது இந்த ஆண்டு (2021), உலக பாரம்பரிய நாளுக்கான கருப்பொருளாகும்.
  • இந்தியாவில், இராமாயணம்குறித்த முதல் ஆன்லைன் கண்காட்சியை சுற்றுலா & கலாச்சார அமைச்சர் தொடங்கினார். இந்தக் கண்காட்சியில், புது தில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தின் 49 சிற்றோவியங்கள் தொகுப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

4. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற டேபிள் மவுண்டைன் தேசிய பூங்கா அமைந்துள்ள நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) தென்னாப்பிரிக்கா

இ) நியூசிலாந்து

ஈ) பிலிப்பைன்ஸ்

  • தென்னாப்பிரிக்காவின் மேசை மலை தேசிய பூங்காவில் எரிந்து வரும் காட்டுத்தீ, கட்டடங்களை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
  • இந்தத்தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுமார் 200 தீயணைப்பு வீரர்களும் 4 உலங்கூர்திகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 1796 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கேப்டவுன் பல்கலைக்கு அருகிலுள்ள மோஸ் -டெர்ட்ஸ் மில் என்ற வரலாற்று கால காற்றாலையும் இந்தத் தீவிபத்தில் சேதமடைந்துள்ளது.

5. குஜராத்தின் பனிதரில் இந்தியாவில் தனது முதல் மெகா உணவு பூங்கா திட்டத்தை தொடங்கியுள்ள நாடு எது?

அ) பிரான்ஸ்

ஆ) இஸ்ரேல்

இ) இத்தாலி

ஈ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

  • அண்மையில், உணவு பதப்படுத்தும் வசதிகளை உள்ளடக்கிய தனது முதல் மெகா உணவு பூங்கா திட்டத்தை, இத்தாலி, இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. “தி மெகா புட் பார்க்” என்ற சோதனை அடிப்படையிலான இந்தத் திட்டம், மெய்நிகர் முறையில் தொடங்கப்பட்டது.
  • மும்பையில் உள்ள ICE அலுவலகத்திற்கும் குஜராத்தின் பனிதர் மெகா உணவு பூங்காவிற்கும் இடையே ஒரு விருப்பகடிதம் கையெழுத்தானது.

6. சாகச விளையாட்டு நிறுவனம் திறக்கப்பட்டுள்ள தேரி ஏரி உள்ள மாநிலம் எது?

அ) மகாராஷ்டிரா

ஆ) உத்தரகண்ட்

இ) ஒடிஸா

ஈ) மேற்கு வங்கம்

  • தேரி ஏரியின் கரையில் நீர் விளையாட்டு மற்றும் சாகச நிறுவனத்தை உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் தீரத் சிங் ராவத் மற்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் திறந்துவைத்தனர். இந்தோ-திபெத்திய எல்லைப்புற காவல்துறையால் நடத்தப்படு இந்த நிறுவனம், `20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

7. எந்த நாட்டுடனான தனது மிகப்பெரிய இராணுவ கொள்முதல் ஒப்பந்தத்தில், அண்மையில், இஸ்ரேல் கையெழுத்திட்டது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) சீனா

இ) ஜெர்மனி

ஈ) கிரேக்கம்

  • இஸ்ரேலும் கிரேக்கமும் தங்களது மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இஸ்ரேலிய இராணுவ ஒப்பந்தக்காரரால் ஹெலெனிக் வான்படைக்கு (கிரேக்கம்) ஒரு பயிற்சி மையத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஓர் ஒப்பந்தமும் இதிலடங்கும்.
  • இந்த ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையிலான அரசியல் & பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாடுகளின் வான்படைகளும் ஒரு கூட்டுப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

8. அண்மையில் கூகிள் டூடுலில் இடம்பெற்ற வேரா கெட்ராய்ட்ஸ் என்பவர் எந்த நாட்டின் முதல் பெண் இராணுவ அறுவை சிகிச்சை நிபுணராவார்?

அ) ஜெர்மனி

ஆ) ரஷியா

இ) இத்தாலி

ஈ) பிரான்ஸ்

  • ரஷிய அறுவை சிகிச்சை நிபுணர், பேராசிரியர், கவிஞர் மற்றும் எழுத்தாளருமான Dr வேரா கெட்ராய்ட்ஸின் 151ஆவது பிறந்தநாளை கூகிள் கொண்டாடியது. அவர், அந்நாட்டின் முதல் பெண் இராணுவ அறுவை சிகிச்சை நிபுணராகவும், உலகின் முதல் பெண் பேராசிரியர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். கடந்த 1904’இல், ருஸ்ஸோ-ஜப்பானிய போரின்போது ஓர் அறுவை சிகிச்சை நிபுணராக டாக்டர் கெட்ராய்ட்ஸ் தாமாக முன்வந்து பணியாற்றினார்.

9. மனித உடலில், திசு மட்டத்தில் போதுமான அளவு உயிர்வளி (O2) பெறாத நிலைக்கு பெயர் என்ன?

அ) மையாக்ஸியா

ஆ) ஹைபாக்ஸியா

இ) ஹைபராக்ஸியா

ஈ) டைபாக்ஸியா

  • ஹைபாக்ஸியா என்பது மனித உடலில், திசு மட்டத்தில் போதுமான அளவு உயிர்வளி பெறாத ஒரு நிலையாகும். வைரஸ் தொற்று காரணமாக COVID-19 நோயாளிக்கு இந்த நிலை மீண்டும் மீண்டும் வருகிறது.
  • கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதால் நாட்டில் உயிர்வளி உருளைகளின் பெரும் பற்றாக்குறைக்கு மத்தியில், இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) SpO2 (குருதி உயிர்வளி செறிவு) கூடுதல் உயிர்வளி வழங்கல் முறையை உருவாக்கியுள்ளது. இது, ஒரு நபரை, ஹைபாக்ஸியா நிலைக்கு ஆளாகாமல் காப்பாற்றுகிறது.

10. ‘கடல் சூழலுக்குள் நுழையும் நெகிழியை எதிர்த்து நகரங்கள்’ குறித்த எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?

அ) பின்லாந்து

ஆ) ஜெர்மனி

இ) சுவிச்சர்லாந்து

ஈ) பிரான்ஸ்

  • இந்திய அரசின் வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் ஜெர்மானிய சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுவாற்றல் அமைச்சகத்தின் சார்பாக GIZ GmbH இந்தியாவும் தொழில்நுட்ப ஒத்து
    -ழைப்பு தொடர்பான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இத்திட்டத்தின் விளைவுகள் நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் நோக்கங்களான நீடித்த திடக்கழிவு மேலாண்மை மற்றும் 2022’க்குள் ஒற்றை பயன்பாட்டு நெகிழியை ஒழிப்பதற்கான இலக்கு ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மே 1 முதல் இலவச தடுப்பூசி முகாம்: தமிழ்நாடு அரசு

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட் -டுதலின்படி, தமிழ்நாட்டில் 2020 மார்ச் 25 முதல் தேசிய பேரிடர் மேலா -ண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்துவருகிறது.

2. குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

போலந்தில் நடைபெறும் இளையோர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய மகளிர் 4 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். இறுதிச்சுற்றுகளில், 48 கிலோ பிரிவில் கீதிகா – போலாந்தின் நடாலியா குஷெவ்ஸ்காவை 5-0 என்ற கணக்கில் வென்றார். 51 கிலோ பிரிவில் பேபிரோஜிசனா சானு – ரஷியாவின் வாலெரியா லின்கோவாவை அதே புள்ளிகள் கணக்கில் தோ -ற்கடித்தார். 57 கிலோ பிரிவில் பூனம் 5-0 என்ற கணக்கில் பிரான்ஸின் ஸ்தெலின் கிராசியையும், 60 கிலோ பிரிவில் வின்கா – கஜகஸ்தானின் ஜுல்டைஸ் ஷயாக்மீடோவாவையும் வீழ்த்தினர். இப்போட்டியில் இன்னும் 3 மகளிரும், ஓர் ஆடவரும் இறுதிச்சுற்றில் விளையாட உள்ளனர்.

1. Which Ministry hosted the 40th Scientific Expedition to Antarctica (ISEA)?

A) Ministry of Shipping

B) Ministry of Earth Sciences

C) Ministry of External Affairs

D) Ministry of Science and Technology

  • The Union Ministry of Earth Sciences has hosted the 40th Scientific Expedition to Antarctica (40–ISEA). The expedition has successfully returned to Cape Town on April 10, 2021.
  • The team returned after completing a journey of about 12 thousand nautical miles in just 94 days. The 40–ISEA was onboard the chartered ice–class vessel ‘MV Vasiliy Golovnin’. This achievement concludes four successful decades of India’s scientific endeavour in Antarctica.

2. ‘Luna 25’ is the name of the Lunar Mission of which country?

A) Russia

B) Japan

C) China

D) UAE

  • Russia has unveiled a new series of space Lunar missions. The first of those missions, named as “Luna 25”, is scheduled to launch this October. The country had a 45–year drought of moon landings.
  • The lander has been designed to study the ice permanently frozen below the moon’s surface. The scientists will also evaluate the dangers posed by sharp fragments of lunar dust.

3. “Complex Pasts: Diverse Futures” is the theme of which special day celebrated on April 18?

A) World Culture Day

B) World Heritage Day

C) World Archaeology Day

D) World Tourism Day

  • Every year April 18 is celebrated as World Heritage Day or the International Day for Monuments and Sites. This year, the theme of the World Heritage Day is “Complex Pasts: Diverse Futures”.
  • In India, Tourism and Culture Minister has inaugurated the first–ever online exhibition on Ramayana. The online exhibition showcases 49 miniature paintings collections of National Museum, New Delhi.

4. Table Mountain National Park, which was seen in the news recently, is located in which country?

A) Australia

B) South Africa

C) New Zealand

D) Philippines

  • A massive fire, which has been burning along the Table Mountain National Park, South Africa, is said to be damaging buildings. Around 200 firefighters along with four helicopters have been dispatched to put off the massive blaze. Mostert’s Mill, a historic windmill near the University of Cape Town built around 1796, has also been damaged by the fire.

5. Which country launched its first ever mega food park project in India, at Fanidhar, Gujarat?

A) France B) Israel

C) Italy D) USA

  • Italy has recently launched its first ever mega food park project in India involving food processing facilities. The pilot project “The Mega Food Park” was launched in virtual mode.
  • A Letter of Intent was signed between the ICE Office in Mumbai and Fanidhar Mega Food Park, Gujarat.

6. Tehri lake, on whose bank an Adventure Sports Institute has been opened, is in which state?

A) Maharashtra

B) Uttarakhand

C) Odisha

D) West Bengal

  • Uttarakhand Chief Minister Tirath Singh Rawat and Union Minister Kiren Rijiju inaugurated a water sports and adventure institute on the bank of the Tehri lake. The institute will be run by the Indo Tibetan Border Police and has been built at a cost of Rs 20 crore.
  • The institute is built at a cost of Rs 20 crore and will be run by the Indo Tibetan Border Police.

7. Israel has signed its biggest ever Defence procurement Deal with which country recently?

A) USA

B) China

C) Germany

D) Greece

  • Israel and Greece have signed their biggest ever defence procurement deal.
  • It includes a USD 1.65 bn contract for establishment and operation of a training centre for the Hellenic Air Force by Israeli defence contractor. This deal is expected to strengthen political and economic ties between the countries. The Air Forces of the two countries also launched a joint exercise.

8. Vera Gedroits, who featured in Google Doodle recently, is the first female military surgeon of which country?

A) Germany

B) Russia

C) Italy

D) France

  • Google celebrated the 151st birthday of Dr. Vera Gedroits, a Russian surgeon, professor, poet, and author. She is also regarded as the country’s first female military surgeon and one of the world’s first female professors of surgery. Dr. Gedroits volunteered as a surgeon during the Russo–Japanese War in 1904.

9. What is the name of the condition in which the human body is deprived of adequate oxygen supply at the tissue level?

A) Myoxia

B) Hypoxia

C) Hyperoxia

D) Typoxia

  • Hypoxia is a condition in which the human body is deprived of adequate oxygen supply at the tissue level. This condition gets repeated in a COVID–19 patient due to the virus infection.
  • Amid a massive shortage of oxygen cylinders in the country due to raise in coronavirus cases, the Defence Research and Development Organisation (DRDO) has developed SpO2 (Blood Oxygen Saturation) supplemental oxygen delivery system. It saves a person from sinking into a state of Hypoxia.

10. India signed a MoU with which country on ‘Cities combating plastic entering the marine environment’?

A) Finland

B) Germany

C) Switzerland

D) France

  • The Ministry of Housing and Urban Affairs, Government of India and GIZ GmbH India on behalf of the German Ministry of Environment, Nature Conservation and Nuclear Safety signed an agreement on Technical Cooperation titled ‘Cities Combating Plastic Entering the Marine Environment’.
  • The project’s outcomes are completely in line with the objectives of Swachh Bharat Mission–Urban focusing on sustainable solid waste management and the target to phase out single use plastic by 2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!