Tnpsc

23rd November 2020 Current Affairs in Tamil & English

23rd November 2020 Current Affairs in Tamil & English

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கி காணப்படுகிற நாடு எது?

அ. பிரேசில்

ஆ. பெரு

இ. கென்யா

ஈ. ஆஸ்திரேலியா

  • அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற உலகின் ஒரே வெள்ளை ஒட்டகச்சிவிங்கியானது கென்யாவில் காணப்படுகிறது. இந்த ஒட்டகச்சிவிங்கியில் ஒரு GPS கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. லூசிசம் என்றவொரு மரபணுக்கூறானது விலங்குகளில் வெண்மை நிறத்தை ஏற்படுத்துகிறது.
  • இந்த ஒற்றை ஆண் ஒட்டகச்சிவிங்கியானது, வேட்டை அச்சுறுத்தல் நிலையில் தற்போது உள்ளது. இந்த ஒட்டகச்சிவிங்கியின் கொம்புகளுள் ஒன்றனில் இணைக்கப்பட்டுள்ள ஜி பி எஸ் கண்காணிப்பு சாதனம், வனச்சரகர்களை அந்த ஒட்டகச்சிவிங்கியின் இருப்பிடம் குறித்து எச்சரிக்கிறது.

2. 2030ஆம் ஆண்டுக்குள் புதிய பெட்ரோல் & டீசல் மகிழுந்துகளின் விற்பனையை தடை செய்வதாக உறுதியளித்துள்ள நாடு எது?

அ. பிரான்ஸ்

ஆ. ஐக்கியப் பேரரசு

இ. ஜெர்மனி

ஈ. நெதர்லாந்து

  • புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் மற்றும் வேன்கள் விற்பனையை 2030 முதல் தடை செய்வதாக ஐக்கியப்பேரரசு (UK) அண்மையில் உறுதியளித்துள்ளது. இக்காலக்கெடு முன்னர் உறுதியளித்ததை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ளது. முன்னதாக, பிரதமர் போரிஸ் ஜான்சன், 2050’க்குள் நிகர சுழியத்திற்கு உமிழ்வைக் குறைப்பதற்காக, ‘பசுமைப்புரட்சி’யை அறிவித்தார். கடந்த ஆண்டு, 2050ஆம் ஆண்டுக்குள் நிகர சுழிய உமிழ்வு இலக்கை நிர்ணயித்த முதல் G7 நாடாக UK ஆனது.

3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஹிந்தோன் வானூர்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. உத்தர பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. பீகார்

  • கர்நாடக மாநிலத்தின் கலபுரகி முதல் உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிந்தோன் வானூர்தி நிலையம் வரையிலான முதல் நேரடி வானூர்தி சேவை பிராந்திய இணைப்புத் திட்டமான UDAN’இன்கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரை UDAN திட்டத்தின்கீழ் 295 வழித்தடங்கள், ஐந்து உலங்கு வானூர்தி நிலையங்கள் உட்பட 53 வானூர்தி நிலையங்கள், 2 நீர் வானூர்தி நிலையங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. ஸ்டார் ஏர் வானூர்தி நிறுவனம், வாரத்திற்கு மூன்று சேவைகளை கலபுரகி- ஹிந்தோன் இடையே இயக்கும்.

4. எந்த இந்திய மாநிலத்தின் 31ஆவது மாவட்டமாக ‘விஜயநகரம்’ உருவாக்கப்பட்டுள்ளது?

அ. ஆந்திர பிரதேசம்

ஆ. கர்நாடகா

இ. கேரளம்

ஈ. தெலுங்கானா

  • ‘விஜயநகரம்’ மாவட்டத்தை மாநிலத்தின் 31ஆவது மாவட்டமாக உருவாக்க கர்நாடக அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய மாவட்டம் தற்போதுள்ள பல்லாரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்படுகிறது. இப்பகுதியில் ஆட்சி புரிந்து வந்த விஜயநகர அரசின் பெயரால் இந்தப் புதிய மாவட்டம் வழங்கப்படுகிறது.

5. புதிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தியை தழுவியுள்ள பிராந்திய அமைப்பு எது?

அ. SAARC

ஆ. ASEAN

இ. BRICS

ஈ. G-77

  • பிரேசில் (B), ரஷ்யா (R), இந்தியா (I), சீனா (C) மற்றும் தென்னாப்பிரிக்காவை (S) உள்ளடக்கிய பிராந்திய அமைப்பான, ‘BRICS’ அண்மையில் ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்பு உத்தியை தழுவியது. சமீபத்தில் மெய்நிகராக நடைபெற்ற BRICS ஆண்டு உச்சிமாநாட்டின்போது, BRICS நாடுகள் அனைத்தும் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. மெய்நிகராக நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டை இரஷ்யா நடத்தியது.

6. 2050ஆம் ஆண்டுக்குள் எந்த நோயை ஒழிப்பதற்காக உலக நலவாழ்வு அமைப்பு (WHO) உலகளாவிய உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது?

அ. காசநோய்

ஆ. கருப்பைவாய்ப் புற்றுநோய்

இ. தட்டம்மை

ஈ. இளம்பிள்ளை வாதம்

  • 2050ஆம் ஆண்டளவில் கருப்பைவாய்ப்புற்றுநோயை (Cervical Cancer) ஒழிப்பதற்கான உலகளாவிய உத்தியை உலக நலவாழ்வு அமைப்பு (WHO) சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 2050ஆம் ஆண்டில் தடுப்பூசி, பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவற்றின்மூலம் நாற்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட புதிய நோய்த்தாக்குதலையும், 50 இலட்சம் இறப்புகளையும் குறைப்பதே இவ்வுத்தியின் நோக்கமாகும்.
  • கருப்பைவாய்ப்புற்றுநோயின் புதிய பாதிப்புகளின் வருடாந்திர எண்ணிக்கை, கூடுதல் செயற்பாடுகள் ஏதுமில்லாமல், 2018ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரை 5.7 இலட்சத்திலிருந்து 7 இலட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. எந்த மத்திய அமைச்சருக்கு வாதாயன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது?

அ. நிர்மலா சீதாராமன்

ஆ. இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’

இ. பியுஷ் கோயல்

ஈ. ஹர்ஷ் வர்தன்

  • மத்திய கல்வியமைச்சர் இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்’கிற்கு வாதாயன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. அமைச்சரின் எழுத்து, கவிதை மற்றும் இதர இலக்கிய படைப்புகளைக் கெளரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு அவர் ஏற்கனவே பல்வேறு தேசிய, பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • இரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, இலக்கியத்துறையில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவர் இதுவரை பல்வேறு துறைகளில் 75’க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். இலண்டனில் உள்ள வாதாயன் அமைப்பு, கவிஞர்கள், கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘கலிப்ஸோ’ ஆபரேஷனுடன் தொடர்புடைய துறை எது?

அ. போதைப்பொருள் கடத்தல்

ஆ. பண மோசடி

இ. குழந்தை கடத்தல்

ஈ. வரி ஏய்ப்பு

  • வருவாய் புலனாய்வு இயக்குநரகமானது (DRI) சமீபத்தில் ஒரு பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் மோசடியை, ‘Calypso’ என்ற பெயரில் முறியடித்தது. இந்த ஆபரேஷன், மும்பை மற்றும் ராஜஸ்தானின் உதய்பூரில் மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்டது. டிரினிடாட் மற்றும் டொபாகோவிலிருந்து மும்பைக்கு அனுப்பப்பட்ட ½ கிலோவுக்கும் அதிகமான கொக்கைனை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

9. ஆண்டுதோறும் UNESCO’ஆல் உலக தத்துவ நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. நவம்பர் மாதத்தில் வரும் மூன்றாவது வியாழக்கிழமை

ஆ. அக்டோபர் மாதத்தில் வரும் மூன்றாவது வியாழக்கிழமை

இ. நவம்பர் மாதத்தில் வரும் மூன்றாவது சனிக்கிழமை

ஈ. அக்டோபர் மாதத்தில் வரும் மூன்றாவது சனிக்கிழமை

  • உலக தத்துவ நாளானது ஐநா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCO’ஆல் கடந்த 2002’இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற UNESCO பொதுமாநாட்டின்போது, நவம்பரில் வரும் ஒவ்வொரு மூன்றாவது வியாழக்கிழமையும் உலக தத்துவ நாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தது. நடப்பாண்டின் (2020) கடைப்பிடிப்பு, தற்போது பரவிவரும் தொற்றுநோயில் தத்துவ பிரதிபலிப்புகளில் கவனஞ்செலுத்துமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

10. கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தொட்டிகளை அபாயகரமாக சுத்தம் செய்வதைத் தடுக்க தொடங்கப்பட்ட சவாலின் பெயர் என்ன?

அ. சபாய்மித்ரா சுரக்ஷா

ஆ. பிரதான் மந்திரி சபாய்மித்ரா

இ. சேப் சபாய்மித்ரா

ஈ. சுவச் பாரத் சபாய்மித்ரா

  • ‘அபாயகரமான’ தூய்மைப்பணியின் காரணமாக எந்தவொரு கழிவுநீர் கால்வாய்கள் அல்லது தொட்டி தூய்மைப்படுத்துவோரும் தங்கள் இன்னுயிரை இழந்துவிடக்கூடாது என்பதை உறுதிசெய்வதற்காக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அண்மையில் ‘சபாய்மித்ரா சுரக்ஷா’ என்ற சவாலை தொடங்கினார்.
  • உலக கழிப்பறை நாளை முன்னிட்டு, நாடு முழுவதுமுள்ள 243 நகரங்களில் இது தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில், 243 நகரங்களின் பிரதிநிதிகளும் 2021 ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அனைத்து கழிவுநீர் கால்வாய் & தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை இயந்திரமயமாக்குவதாக உறுதியளித்தனர்.

1. The only known white giraffe, which was seen in news, is found in which country?

[A] Brazil

[B] Peru

[C] Kenya

[D] Australia

  • The only known white giraffe, which was seen in the news, is found in Kenya. The giraffe has been fitted with a GPS tracking device to help protect it from poachers. Leucism, a genetic trait causes the white color in animals.
  • The single male giraffe is in a dangerous state at the risk of poaching. The GPS tracking device, which is attached to one of the giraffe’s horns, will alert wildlife rangers about its location.

2. Which country has pledged to ban sale of new petrol and diesel cars by 2030?

[A] France

[B] United Kingdom

[C] Germany

[D] Netherlands

  • United Kingdom has recently pledged to ban the sale of new petrol and diesel cars and vans from 2030. This deadline is five years earlier than previously pledged by Britain. Earlier, the Prime Minister Boris Johnson announced “Green revolution”, to cut emissions to net-zero by 2050. Last year, Britain became the first G7 country to set a net-zero emission target by 2050.

3. Hindon Airport, which was seen in news recently, is located in which state?

[A] Gujarat

[B] Uttar Pradesh

[C] Maharashtra

[D] Bihar

  • The first direct flight operations from Kalaburagi, Karnataka to Hindon Airport, Ghaziabad, Uttar Pradesh were flagged off under the RCS-UDAN scheme.
  • Under the ‘Regional Connectivity Scheme – Ude Desh Ka Aam Nagrik’ scheme, 295 routes and 53 airports including 5 heliports and 2 Water Aerodromes have been operationalized till date. Star Air airline was awarded this airline route last year.

4. Vijayanagara has been created as the 31st district of which Indian state?

[A] Andhra Pradesh

[B] Karnataka

[C] Kerala

[D] Telangana

  • The Karnataka Cabinet has recently approved the formation of Vijayanagara district as the 31st district of the State. The new district would be carved out from the existing Ballari district. It is named after the Vijayanagara empire, which ruled from this region.

5. Which regional organisation has adopted a new counter-terrorism strategy?

[A] SAARC

[B] ASEAN

[C] BRICS

[D] G-77

  • The regional organisation comprising of Brazil, Russia, India, China and South Africa, BRICS has recently adopted a new counter-terrorism strategy. During the virtual annual summit of BRICS held recently, the BRICS countries reaffirmed their commitment to counter international terrorism and its financing. Russia hosted the virtual summit.

6. World Health Organisation has launched global strategy to eradicate which disease by 2050?

[A] Tuberculosis

[B] Cervical cancer

[C] Measles

[D] Polio

  • The World Health Organization (WHO) has recently launched a global strategy to eradicate cervical cancer by 2050. The strategy aims to reduce over 40% of new cases and 5 million related deaths by 2050 through vaccination, screening and treatment.
  • The annual number of new cases of cervical cancer is expected to increase from 5.7 lakh to 7 lakhs between 2018 and 2030, without additional action.

7. Which Union Minister of India is to be honoured with Vatayan Lifetime Achievement Award?

[A] Nirmala Sitharaman

[B] Ramesh Pokriyal ‘Nishank’

[C] Piyush Goyal

[D] Harsh Vardhan

  • Union Education Minister Shri Ramesh Pokhriyal ‘Nishank’ will be conferred with the Vatayan Lifetime Achievement Award.
  • The Minister had earlier received various awards for governance and literature. He holds an honorary doctoral degree in the field of literature and has also penned over 75 books. Vatayan International Awards are presented to poets & artists by the Vatayan-UK organization in London.

8. Operation ‘Calypso’, which was seen in news recently, is associated with which field?

[A] Drug Smuggling

[B] Money Laundering

[C] Child Trafficking

[D] Tax Evasion

  • The Directorate of Revenue Intelligence has recently cracked an international drug smuggling racket under the operation codenamed as ‘Calypso’. It was carried out in Mumbai and Udaipur, Rajasthan for three days. More than half a kg of cocaine couriered from Trinidad & Tobago to Mumbai was seized by DRI. Four persons involved in the drug smuggling were also arrested.

9. When is World Philosophy Day observed by UNESCO every year?

[A] 3rd Thursday of November

[B] 3rd Thursday of October

[C] 3rd Saturday of November

[D] 3rd Saturday of October

  • World Philosophy Day was introduced by the United Nations Educational, Scientific and Cultural Organization, UNESCO in 2002. The UNESCO General Conference proclaimed that World Philosophy Day would be celebrated on every third Thursday of November, in 2005. This year, the observance calls all countries to focus on the philosophical reflections of the current pandemic.

10. What is the name of the challenge launched to prevent hazardous cleaning of Sewers and Septic Tanks?

[A] Safaimitra Suraksha

[B] Pradhan Mantri Safaimitra

[C] Safe Safaimitra

[D] Swachh Bharat Safaimitra

  • Union minister Hardeep Singh Puri has recently launched the Safaimitra Suraksha Challenge, to ensure no life of any sewer or septic tank cleaner is lost due to ‘hazardous’ cleaning. The campaign is launched on the occasion of World Toilet Day, in 243 cities across the country. In the virtual event, representative of the 243 cities pledged to mechanize all sewer and septic tank cleaning operations by 30th April 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!