TnpscTnpsc Current Affairs

23rd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

23rd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 23rd September 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. மீண்டும் பயன்படுத்தக்கூடிய GSLV Mk-III ஏவுகலத்தை உருவாக்குவதற்காக அதன் தொழில்நுட்பங்களில் பணியாற்றிவரும் அமைப்பு எது?

அ) ஸ்பேஸ் X

ஆ) இஸ்ரோ 

இ) வர்ஜின் கேலக்டிக்

ஈ) ROSCOSMOS

  • இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) GSLV MkIII ஏவுகலத்தை மீண்டும் பயன்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் புதிய நுட்பம், GSLV MkIII ஏவுகலத்தை செங்குத்தாக தரையிறக்க உதவும். இந்த நுட்பம் SpaceX பின்பற்றி வரும் நுட்பததுக்கு இணையாக இருக்கும். மீண்டும் பயன்படுத்தக்கூடிய GSLV MkIII டிரான்ஸ்மிட்டரின் உருவாக்கம், ISRO’இன் நிதியையும் சேமிக்க உதவும்.

2. சமீபத்தில், எந்த நாட்டுடனான பேரிடர் அபாயக் குறைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?

அ) ஜெர்மனி

ஆ) ஜப்பான்

இ) இத்தாலி 

ஈ) பெல்ஜியம்

  • பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை துறையில் இந்தியா -இத்தாலி இடையே ஒத்துழைப்புடன் செயல்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண் ஆணையம், இத்தாலியின் பொது பாதுகாப்புத் துறை இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தானது.
  • இருதரப்பின் பேரிடர் மேலாண்மை முறைகளால் இந்தியா மற்றும் இத்தாலி பயனடைய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். பேரிடர் மேலாண் துறையில் தயார்நிலை, மீட்பு நடவடிக்கை, திறன் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும்.

3. ‘ஒரு கிராமப்பஞ்சாயத்து-ஒரு DIGI-பே சகி’ என்ற பெயரில் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) உத்தர பிரதேசம்

ஆ) ஹரியானா

இ) அந்தமான் நிக்கோபார் தீவுகள்

ஈ) ஜம்மு & காஷ்மீர் 

  • ஜம்மு-காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு டிஜிட்டல் வங்கி மற்றும் நிதிச் சேவைகளை ஊக்குவிப்பதற்காக, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பாம்பூரில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் (JKEDI) ‘ஒரு கிராமப் பஞ்சாயத்து-ஒரு DIGI-பே சகி’ என்ற திட்டத்தைத் தொடங்கினார்.

4. 2021 – “Peaceful Mission” பயிற்சி நடைபெறுகிற நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா 

இ) ஐக்கிய இராச்சியம்

ஈ) ஆஸ்திரேலியா

  • இந்திய வான்படையைச் சேர்ந்த 38 பணியாளர்கள் உட்பட 200 பேர் கொண்ட அனைத்து ஆயுதக் கூட்டுப் படைகளைக் கொண்ட இந்திய இராணுவக்குழு, அமைதி மிஷன் – 2021 பயிற்சியில் பங்கேற்கிறது. இந்தப் பயிற்சி 2021 செப்.13 முதல் 25 வரை தென்மேற்கு ரஷ்யாவின் ஓரன்பர்க் பிராந்தியத்தில் நடைபெறுகிறது. SCO “Peaceful Mission” என்பது ஒரு பன்முக மற்றும் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியாகும்.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்புநாடுகளுக்கிடையே ‘ராணுவ ரீதியிலான உறவின்’கீழ் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.

5. UNESCO’இன் நடப்பு 2021ஆம் ஆண்டுக்கான அரசர் செஜோங் எழுத்தறிவு பரிசை, இந்தியாவிலுள்ள எந்த அமைப்பு வென்றுள்ளது?

அ) தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனம் 

ஆ) அண்ணா பல்கலைக்கழகம்

இ) மெட்ராஸ் பல்கலைக்கழகம்

ஈ) IISc

  • நொய்டாவில் உள்ள தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி நிறுவனம் ஆனது (NIOS), புகழ்பெற்ற UNESCO’இன் அரசர் செஜோங் எழுத்தறிவு பரிசு – 2021’ஐ வென்றுள்ளது. இந்த அமைப்பு, கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. கல்விக்கான புதுமையான அணுகுமுறைக்காக UNESCO’இன் உலகளாவிய அங்கீகாரத்தை இது பெற்றுள்ளது.
  • UNESCO’இன் பன்னாட்டு எழுத்தறிவு விருதுகள் ஒரு குறிப்பிட்ட கருப் பொருளில் கவனஞ்செலுத்துகின்றன. நடப்பு 2021ஆம் ஆண்டு, “உள்ளட -க்கிய தொலைவு மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு கற்றல்” என்பதில் கவனஞ்செலுத்துகிறது. இந்த ஆண்டின் (2021) UNESCO பன்னாட்டு கல்வியறிவு பரிசுகள் NIOS உடன் இணைந்து கோட் டி ஐவரி, எகிப்து, குவாத்தமாலா, மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுக்கும் வழங்கப்பட்டது.

6. “ஏக் பாஹல்” என்ற இந்திய அளவிலான சிறப்பு இயக்கத்தை தொடங்கியுள்ள நடுவண் அமைச்சகம் எது?

அ) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் 

ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ) பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

ஈ) நிதி அமைச்சகம்

  • வீடுகளுக்கேச் சென்று நீதி வழங்கும் “ஏக் பாஹல்” என்ற இந்திய அளவிலான சிறப்பு இயக்கத்தை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தொடங்கியுள்ளது. தொலைநிலை-சட்டத்தின்கீழ் பதிவுகளை ஊக்குவிக் -கும் வகையில் இது தொடங்கப்பட்டது. நீதித்துறை மற்றும் NALSA இந்த இயக்கத்தை தொடங்கியது.

7. இந்தியாவில் உள்ள 112 முன்னேற விழையும் மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்குவதற்காக, NITI ஆயோக், எந்த நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது?

அ) அன்அகாடமி

ஆ) பைஜு 

இ) டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்

ஈ) ஐஐடி கான்பூர்

  • இந்தியாவின் 112 முன்னேற விழையும் மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக NITI ஆயோக், BYJU உடன் கூட்டிணைந்துள்ளது. இந்தக் கூட்டாண்மையின் ஒருபகுதியாக, உயர்தர & தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் திட்டங்களை, BYJU’s, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும். இந்தத் திட்டம் ஒரு பிரத்யேக பணிக்குழுவை நிறுவும். அது அறிவு, கண்டுபிடிப்பு மற்றும் உத்திசார் ஆதரவின் அமைப்பை நிறுவுவதற்கு உதவும்.

8. எந்த நாட்டில் அமைந்துள்ள இந்திய உயராணையரகம் 57ஆவது இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளைக் கொண்டாடியது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) கத்தார்

இ) வங்காளதேசம் 

ஈ) தென் கொரியா

  • 2021 செப்.16 அன்று, டாக்காவில் உள்ள இந்திய உயராணையரகம் 57 ஆவது இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளைக் கொண்டாடியது. இந்த நிகழ்வை வங்காளதேசத்தில் உள்ள இந்திய உயராணையர் விக்ரம் தொரைசாமி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில், சுமார் 100 ITEC முன்னாள் மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.
  • ITEC என்பது இந்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு வளர்ச்சி அனுபவத்தையும் பொருத்தமான தொழில் நுட்பத்தையும் வழங்குவதற்காக 1964’இல் இந்தியாவால் நிறுவப்பட்டது.

9. அண்மையில் தொடங்கப்பட்ட திட்டமொன்றின்கீழ் 50,000 இளையோருக்கு பயிற்சியளிக்க முடிவுசெய்துள்ள நிறுவனம் எது?

அ) NITI ஆயோக்

ஆ) இரயில்வே அமைச்சகம் 

இ) பிரசார் பாரதி

ஈ) நிதி அமைச்சகம்

  • ரயில் கௌஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் ஒருபகுதியாக, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவால், செப்.17 அன்று 18 முதல் 35 வயது வரையிலான 50,000 இளையோருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு இரயில்வே பயிற்சி நிறுவனங்களில் தொழில்தொடர்பான திறன்களைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு திட்டத்தை தொடங்கினார்.

10. SPIN (Strengthening the Potential of India) என்ற தனித்துவமான திட்டத்தைத் தொடங்கியுள்ள நிறுவனம் எது?

அ) காதி மற்றும் கிராமப்புறத் தொழிலகங்கள் ஆணையம் 

ஆ) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ) தேசிய சிறுதொழில் கழகம்

ஈ) பாரத வங்கி

  • காதி மற்றும் கிராமப்புறத் தொழிலகங்கள் ஆணையமானது (KVIC) SPIN (Strengthening the Potential of India) என்ற தனித்துவமான திட்டத்தைத் தொடங்கியுள்ளது. மேலும் 1100 விளிம்புநிலை குயவர்க்கு வலுவளிக்கும் நோக்கத்துடன், வாரணாசியில் SFURTI திட்டத்தின்கீழ் ஒரு மட்பாண்டத் தொகுதியையும் அமைத்துள்ளது.
  • SPIN திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் 780 வனைசக்கரங்கள் வழங்கப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. `2,120 கோடி முதலீட்டில் 41,695 பேருக்கு வேலை: அரசுடன் 24 நிறுவனங்கள் ஒப்பந்தம்

தமிழநாட்டில் 41,695 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் `2,120 கோடியில் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. சென்னையில் ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தப் புதிய ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.

2. இனி ‘பேட்ஸ்மேன்’ கிடையாது!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ‘பேட்ஸ்மேன்’ என்கிற கிரிக்கெட் சொல்லுக்கு மாற்றாக ‘பேட்டர்’ என்கிற சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளது எம்.சி.சி. கிரிக்கெட் விதிமுறைகளை வகுப்பதில் எம்.சி.சி. என்றழைக்கப்படும் மெரிலேபோன் கிரிக்கெட் கிளப் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் கிரிக்கெட் விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது ஐசிசி என்கிற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

1. Which organization is working on technologies in order to develop reusable GSLV Mk–III launch vehicle?

A) SpaceX

B) ISRO 

C) Virgin Galactic

D) ROSCOSMOS

  • The Indian Space Research Organisation (ISRO) is working to develop the technology which is required to reuse GSLV MkIII launch vehicle.
  • This new technology will help ISRO to vertically land its GSLV MkIII launch vehicle. This technology will be similar to what SpaceX is doing. The development of the reusable GSLV MkIII transmitter will help ISRO save money.

2. Recently, with which country the Union Cabinet has approved a MoU for Disaster Risk Reduction?

A) Germany

B) Japan

C) Italy 

D) Belgium

  • The Union Cabinet chaired by the PM Modi was apprised about the Memorandum of Understanding (MoU) between the National Disaster Management Authority (NDMA) of the Republic of India and the Italian Republic on Cooperation in the field of Disaster Risk Reduction and Management.
  • The MoU seeks to put in place a system, whereby both India and Italy will benefit from the Disaster Management mechanisms of each other and it will help in strengthening the areas of preparedness, response and capacity building in the field of Disaster Management.

3. Which state/UT has launched the Mission named ‘One Gram Panchayat–One DIGI–Pay Sakhi?’

A) Uttar Pradesh

B) Haryana

C) Andaman & Nicobar Islands

D) Jammu & Kashmir 

  • In order to promote door to door digital banking and financial services in remote areas of Jammu and Kashmir, Lieutenant Governor Manoj Sinha launched Mission ‘One Gram Panchayat–One DIGI–Pay Sakhi’, at Jammu & Kashmir Entrepreneurship Development Institute (JKEDI) in Pampore.

4. In which country Exercise Peaceful Mission – 2021 is being held?

A) United States

B) Russia 

C) United Kingdom

D) Australia

  • The Indian military contingent consisting of an all arms combined force of 200 personnel, including 38 personnel from the Indian Air Force, is taking part in the Exercise PEACEFUL MISSION –2021.
  • This exercise is being held in the Orenburg Region of South West Russia from September 13 to 25, 2021. SCO Peaceful Mission is a Multilateral & Joint Counter Terrorism Exercise. The exercise is conducted biennially under the “military diplomacy” between the Shanghai Cooperation Organisation (SCO) member states.

5. Which organization from India has won the UNESCO King Sejong Literacy Prize 2021?

A) National Institute of Open Schooling 

B) Anna University

C) Madras University

D) IISc

  • The National Institute of Open Schooling (NIOS) of India, Noida won the prestigious UNESCO King Sejong Literacy Prize 2021. This organization is run by the education ministry and has bagged global recognition from UNESCO for its innovative approach towards education. The UNESCO International Literacy Prizes focus on a specific theme.
  • This year, the focus was on inclusive distance and digital literacy learning. Along with NIOS, this year’s UNESCO International Literacy Prizes was awarded to other five outstanding literacy programs from Côte d’Ivoire, Egypt, Guatemala, Mexico, and South Africa.

6. Which ministry has launched a Pan–India Special Campaign called “Ek Pahal”?

A) Ministry of Law and Justice 

B) Ministry of Rural Development

C) Ministry of Corporate Affairs

D) Ministry of Finance

  • A Pan–India Special Campaign called “Ek Pahal Drive” for Justice Delivery at doorstep was launched by the Ministry of Law and Justice. This campaign was launched in a bid to encourage mass registration under Tele–Law. Department of Justice and NALSA launched this campaign.

7. With which organization, NITI Aayog has partnered to provide free access to education to students in 112 Aspirational Districts in India?

A) Unacademy

B) BYJU 

C) TATA Institute of Fundamental Research

D) IIT Kanpur

  • NITI Aayog has tied up with BYJU`S to provide free education opportunities for students in 112 Aspirational Districts in India. As part of the partnership, Byju’s will provide students with high–quality and technology–oriented learning programs free of charge to ensure high–quality education. This project will provide for the establishment of a dedicated working group, which in turn should help establish a system of knowledge, innovation and strategic support.

8. The Indian High Commission located in which country has celebrated the 57th Indian Technical and Economic Cooperation (ITEC) day?

A) Australia

B) Qatar

C) Bangladesh 

D) South Korea

  • On September 16, 2021, The Indian High Commission in Dhaka celebrated the 57th Indian Technical and Economic Cooperation (ITEC).
  • The event was hosted by Vikram Doraiswami, High Commissioner of India in Bangladesh. About 100 ITEC alumni and VIPs from all walks of life participated in the event. ITEC is the flagship program of the Indian government. It was established in 1964 to provide development experience and appropriate technology to developing countries by India.

9. Which organization has decided to train 50,000 youths under a recently launched scheme?

A) NITI Aayog

B) Ministry of Railways 

C) Prasar Bharati

D) Ministry of Finance

  • As part of the Rail Kaushal Vikas Yojana initiated by the Minister of Railway Ashwini Vaishnaw on September 17, 2021, the railway will train 50,000 young people aged 18 to 35 in the next three years in industry–related skills in various Railway Training Institutes.

10. Which organization has launched a unique scheme called SPIN (Strengthening the Potential of India)?

A) Khadi and Village Industries Commission 

B) Ministry of Rural Development

C) National Small Industries Corporation

D) State Bank of India

  • Khadi and Village Industries Commission (KVIC) has launched a unique Scheme called Strengthening the Potential of India (SPIN) and has also set up a pottery cluster under the SFURTI Scheme in Varanasi with the aim to empower over 1100 persons belonging to the marginalized potters. 780 electric potter wheels were also sanctioned to SPIN Scheme participants.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!