TnpscTnpsc Current Affairs

24th & 25th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

24th & 25th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 24th & 25th December 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

December Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th & 25th December 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. வீர் கார்டியன்–2023 பயிற்சி என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடத்தப்படும் முதல் இருதரப்பு விமானப்பயிற்சியாகும்?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. பிரான்ஸ்

ஈ. ஆஸ்திரேலியா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஜப்பான்

  • இந்திய வான்படையும் ஜப்பானிய வான் தற்காப்புப்படையும் தங்களது முதல் இருதரப்பு விமானப்பயிற்சியான வீர் கார்டியன்–2023ஐ நடத்தவுள்ளன. இந்தப் பயிற்சி ஜப்பானில் 2023 ஜனவரியில் ஹைகுரி மற்றும் இருமா விமானப் படைத்தளத்தில் நடைபெறும். பரஸ்பர புரிதலை மேம்படுத்துதல் மற்றும் விமானப்படைகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

2. மனித பாப்பிலோமா வைரஸால் (HPV) கீழ்க்காணும் எவ்வகை புற்றுநோய் ஏற்படுகிறது?

அ. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

ஆ. மார்பகப் புற்றுநோய்

இ. வாய்ப் புற்றுநோய்

ஈ. ஆண்மைச்சுரப்பிப் புற்றுநோய்

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்

  • பெரும்பாலான கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்கள் மனித பாப்பிலோமா தீநுண்மத்துடன் (HPV) தொடர்புடையவை ஆகும். சிறுமிகள் அல்லது இளம்பெண்கள் இந்நோய்த்தாக்குதலுக்கு ஆளாகும்முன் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இதன் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு 9–14 வயதுடைய இளம்பெண்களுக்கு உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தில் HPV தடுப்பூசியை அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளது. கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுப்பது மற்றும் HPV தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நடுவண் அரசு கடிதம் எழுதியுள்ளது.

3. எந்தத் தலைவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய விவசாயிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது?

அ. அடல் பிஹாரி வாஜ்பாய்

ஆ. ஜவஹர்லால் நேரு

இ. சௌத்ரி சரண் சிங்

ஈ. P V நரசிம்ம இராவ்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சௌத்ரி சரண் சிங்

  • இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக விளங்கிய சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளையும், நாட்டின் விவசாயிகளின் மேம்பாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் டிசம்பர்.23ஆம் தேதி தேசிய விவசாயிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. உழவர்களின் பங்கு மற்றும் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் இயக்கங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

4. சமூகப் பங்குச்சந்தையை அமைப்பதற்காக SEBIஇடம் அனுமதி பெற்ற நிறுவனம் எது?

அ. NITI ஆயோக்

ஆ. பாரத ஸ்டேட் வங்கி

இ. தேசிய பங்குச்சந்தை

ஈ. PFRDA

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. தேசிய பங்குச்சந்தை

  • இந்திய தேசிய பங்குச்சந்தையானது (NSE) சமூகப் பங்குச் சந்தையை (SSE) அதன் தனிப்பிரிவாக அமைக்க இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெற்றுள்ளது. நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019–20ஆம் ஆண்டுக்கான மத்திய வரவுசெலவுத்திட்ட உரையில், SEBIஇன் ஒழுங்குமுறை வரம்பின்கீழ், சமூகப் பங்குச்சந்தையை உருவாக்கலாம் என முன்மொழிந்தார்.

5. அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட, ‘ஜன விஸ்வாஸ் மசோதாவின்’ நோக்கம் என்ன?

அ. பயங்கரவாத எதிர்ப்பு

ஆ. வணிகம் செய்வதை எளிதாக்கல்

இ. ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழித்தல்

ஈ. காவல்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. வணிகம் செய்வதை எளிதாக்கல்

  • வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில், ‘ஜன விஸ்வாஸ்’ மசோதாவைத் தாக்கல் செய்தார். இது வணிகம் செய்வதை எளிதாக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும். 42 சட்டங்களில் 183 விதிகளை திருத்துவதன்மூலம் சிறு குற்றங்களை குற்றமற்றதாக்க இந்த மசோதா எண்ணுகிறது. இம்மசோதா பின்னர் 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. நீதித்துறையின் சுமையைக் குறைப்பதற்கும் இந்த மசோதா உதவும்.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆதித்யா மிட்டல் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. கிரிக்கெட்

ஆ. செஸ்

இ. பூப்பந்து

ஈ. ஹாக்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. செஸ்

  • 16 வயதுடைய ஆதித்யா மிட்டல் சமீபத்தில் இந்தியாவின் 77ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார். ஸ்பெயினில் நடைபெற்று வரும் எல்லோபிரேகாட் ஓபன் போட்டியின் ஆறாவது சுற்றில் மும்பையைச் சேர்ந்த அவ்வீரர் 2,500 ELO புள்ளிகளைக் கடந்தார். பரத் சுப்ரமணியம், இராகுல் ஸ்ரீவத்சவ், வி பிரணவ் மற்றும் பிரணவ் ஆனந்த் ஆகியோருக்குப் பிறகு நடப்பு 2022ஆம் ஆண்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெறும் ஐந்தாவது இந்தியரானார் ஆதித்யா மிட்டல்.

7. ‘கரிசல் மண்ணின் உலகளாவிய நிலை’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNEP

ஆ. FAO

இ. UNFCCC

ஈ. UNHCR

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. FAO

  • உணவு மற்றும் உழவு அமைப்பானது (FAO) 2022 டிசம்பர்.05ஆம் தேதியன்று உலக மண் நாளை முன்னிட்டு “Global status of Black Soils” என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலக மக்களுக்கு உணவளிக்கும் கரிசல் மண் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. பெரும்பாலான கரிசல் மண் பரப்புகள் தங்களது இயல்பான கரிம இருப்புகளில் பாதியையாவது இழந்துள்ளன. FAOஇன் கருத்துப்படி, நிலப் பயன்பாட்டு மாற்றம், நீடிக்க முடியாத மேலாண்மை நடைமுறைகள் மற்றும் இரசாயனங்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவை இதற்குக் காரணங்கள் ஆகும்.

8. சர்வதேச தினை ஆண்டு–2023 (IYM2023) இன் தொடக்க விழாவை நடத்தும் நகரம் எது?

அ. புது தில்லி

ஆ. ரோம்

இ. பாரிஸ்

ஈ. கொழும்பு

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ரோம்

  • ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO) இத்தாலியின் ரோமில் சர்வதேச தினை ஆண்டு –2023 (IYM2023) இன் தொடக்க விழாவை ஏற்பாடு செய்தது. தொடக்க விழாவில், நடுவண் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் சுஸ்ரீ ஷோபா கரந்த்லாஜே தலைமையிலான இந்தியக் குழுவும் பிற மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். “தினைகுறித்த விழிப்புணர்வு – Millet Mindfulness” என்பதை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த இயக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

9. G20இன் தலைமைப்பொறுப்பில் இந்தியாவுள்ள இவ்வேளையில், வணிக நிகழ்ச்சி நிரலை வழிநடத்துவதற்காக, B20 இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. கிரண் மசூம்தார் ஷா

ஆ. N சந்திரசேகரன்

இ. உதய் கோடக்

ஈ. இரத்தன் டாடா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. N சந்திரசேகரன்

  • டாடா குழுமத்தின் தலைவரான N சந்திரசேகரன் B20 இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டார். G20இன் தலைமைப்பொறுப்பில் இந்தியாவுள்ள இவ்வேளையில், வணிக நிகழ்ச்சி நிரலை அவர் வழிநடத்தினார். B20 இந்தியா செயல்முறைக்கு தலைமைதாங்குவதற்காக நடுவண் அரசால் B20 இந்திய செயலகமாக இந்திய தொழிற் துறை கூட்டமைப்பு (CII) நியமனம் செய்யப்பட்டுள்ளது.

10. BPCLஇன் முன்னாள் தலைவர் அருண் குமார் சிங், கீழ்க்காணும் எந்த அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. PFC

ஆ. ONGC

இ. SAIL

ஈ. IOCL

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ONGC

  • எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனமான BPCLஇன் முன்னாள் தலைவர் அருண் குமார் சிங், ONGCஇன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்ற தேதியில் இருந்து மூன்றாண்டு காலத்திற்கு அந்த நிறுவனத்தின் தலைவராக பதவி வகிப்பார். அவர் BPCL தலைவராக 13 மாதங்கள் பதவியிலிருந்த பிறகு 2022 அக்டோபரில் ஓய்வுபெற்றார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மூக்குவழியாக செலுத்தும் COVID மருந்தை பூஸ்டராக பயன்படுத்த அனுமதி.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்குவழியாகச் செலுத்தும் COVID மருந்தை 3ஆவது தவணையாக (பூஸ்டர்) செலுத்திக்கொள்ள நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பைத் தடுப்பதற்காக கோவேக்ஸின் தடுப்பூசியை ஹைதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கெனவே தயாரித்துள்ளது. அந்தத்தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊசி மூலமாக அல்லாமல் மூக்கு வழியாகவே செலுத்தும் COVID மருந்தை பாரத் பயொடெக் நிறுவனம் தயாரித்தது. அந்த மருந்தை 18 வயதைக் கடந்த நபர்களுக்கு செலுத்த இந்திய மருந்துப் பொருள்கள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசரகால ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், அந்தத் தடுப்பு மருந்தை 3ஆவது தவணையில் செலுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் COVID தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மூக்குவழி COVID மருந்தானது CoWin வலைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் இருதவணைகளில் கோவேக்ஸின், கோவிஷீல்டு என எவ்வித COVID தடுப்பூசிகளைச் செலுத்தியிருந்தாலும், பூஸ்டராக மூக்குவழி தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ளலாம்.

பெரும்பலன்: சுவாசப்பாதையின் மேற்பரப்பில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதை வழக்கமான COVID தடுப்பூசி தடுப்பதில்லை எனக் கூறிய பாரத் பயோடெக் நிறுவனம், அதற்குத் தீர்வுகாணும் நோக்கில் ‘BBV154’ என்ற மூக்கு வழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தை தயாரித்தது.

2. தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில், ‘பிளாக் செயின்’ தொழில்நுட்பம் அறிமுகம்.

தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் ‘பிளாக் செயின்’ தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக இந்தத் தொழில்நுட்பத்தை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் புகார்களைப் பதிவு செய்வது மட்டுமல்லாது, அந்தப் புகார்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், மனுக்கள் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைக் கண்டறியவும் முடியும்.

முன்னோடியான திட்டம்: தமிழக சிலை திருட்டு தடுப்புப்பிரிவு அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் தொழில்நுட்பம் மிகவும் முன்னோடியானது. இதன்மூலம் ஒரு முறை புகார் அளித்துவிட்டால், அது பாதுகாப்பாக சேமிக்கப்படுவதோடு, அதை மாற்றவும் முடியாது. மேலும், இந்தத் தொழில்நுடபத்தின்மூலம் புகார் அளிப்பவரின் அடையாளத்தை பிறர் அறிய முடியாது.

3. 25-12-2022 – ‘மூதறிஞர்’ இராஜாஜி அவர்களின் 50ஆவது நினைவு நாள்.

24th & 25th December 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Veer Guardian–2023 Exercise is a maiden bilateral air exercise set to be held between India and which country?

A. China

B. Japan

C. France

D. Australia

Answer & Explanation

Answer: B. Japan

  • Indian Air Force (IAF) and Japanese Air Self Defence Force (JASDF) are set to hold their maiden bilateral air exercise, Veer Guardian 23. The exercise will be held at Hyakuri air base and Iruma air base in Japan in January 2023. It aims to promote mutual understanding and strengthen defence cooperation between the Air Forces.

2. Which type of cancer is caused by Human Papilloma Virus (HPV)?

A. Cervical Cancer

B. Breast Cancer

C. Oral Cancer

D. Prostate Cancer

Answer & Explanation

Answer: A. Cervical Cancer

  • Most cervical cancers are associated with the Human Papilloma Virus (HPV). The HPV vaccine can prevent most cases of if the vaccine is given before girls or women are exposed to the virus. National Technical Advisory Group   for Immunization (NTAGI) has recommended introduction of HPV Vaccine in the Universal Immunization Programme (UIP) with for 9–14–year–old adolescent girls. The Centre has written to all States and UTs to create awareness on prevention of cervical cancer and the importance of HPV vaccine.

3. National Farmer’s Day is observed to commemorate the birth anniversary of which leader?

A. Atal Behari Vajpayee

B. Jawaharlal Nehru

C. Chaudhary Charan Singh

D. P V Narasimha Rao

Answer & Explanation

Answer: C. Chaudhary Charan Singh

  • National Farmer’s Day is being observed on December 23 to commemorate the birth anniversary of the fifth Prime Minister of India, Chaudhary Charan Singh, and his contributions towards the upliftment of farmers in the country. Various awareness campaigns and drives are organised across the country to educate people about the role of farmers and their contribution to the economy.

4. Which institution received approval from SEBI to set up Social Stock Exchange (SSE)?

A. NITI Aayog

B. State Bank of India

C. National Stock Exchange

D. PFRDA

Answer & Explanation

Answer: C. National Stock Exchange

  • National Stock Exchange of India (NSE) has received in–principle approval from the Securities Exchange Board of India (SEBI) to set up a Social Stock Exchange (SSE) as a separate segment of the NSE. Union Finance Minister Nirmala Sitharaman, in her Union Budget speech of 2019–20, proposed the creation of a Social Stock Exchange, under the regulatory ambit of SEBI, for listing social enterprises and voluntary organisations.

5. What is the aim of ‘Jan Vishwas Bill’, which was recently tabled in Lok Sabha?

A. Anti–terrorism

B. Ease of doing business

C. Eradication of Malnutrition

D. Police Reforms

Answer & Explanation

Answer: B. Ease of doing business

  • Commerce and industry Minister Piyush Goyal in Lok Sabha introduced Jan Vishwas Bill, which seeks to promote ease of business. The bill seeks to decriminalise minor offences by amending 183 provisions in 42 Acts. The Bill was later referred to a 31–member joint committee of Parliament for scrutiny. The bill will also help in reducing the burden on judiciary.

6. Aditya Mittal, who was seen in the news, is associated with which sports?

A. Cricket

B. Chess

C. Badminton

D. Hockey

Answer & Explanation

Answer: B. Chess

  • Sixteen–year–old Aditya Mittal has recently become India’s 77th chess Grandmaster. The Mumbai–based player crossed 2,500 ELO points mark during the sixth round of the ongoing Ellobregat Open tournament in Spain. Mittal is also the fifth Indian to achieve the GM title in 2022 after Bharath Subramaniyam, Rahul Srivatshav, V Pranav and Pranav Anand.

7. Which institution released the ‘Global status of black soils’ Report?

A. UNEP

B. FAO

C. UNFCCC

D. UNHCR

Answer & Explanation

Answer: B. FAO

  • The Food and Agriculture Organization (FAO) released the ‘Global status of black soils’ Report on the occasion of World Soil Day, December 5, 2022. As per the report, Black soils, which feed the global population, are under threat, with most losing at least half of their soil organic carbon (SOC) stocks. As per the FAO, the reasons are Land–use change, unsustainable management practices and excessive use of agrochemicals.

8. Which city is the host of opening ceremony for the International Year of Millet– 2023 (IYM2023)?

A. New Delhi

B. Rome

C. Paris

D. Colombo

Answer & Explanation

Answer: B. Rome

  • The Food and Agriculture Organization (FAO) of the United Nations organized an opening ceremony for the International Year of Millets 2023 (IYM2023) in Rome, Italy. An Indian delegation led by Sushri Shobha Karandlaje, Minister of State, Agriculture & Farmers Welfare and other senior officials were present at the opening ceremony. Raising awareness to create ‘Millet Mindfulness’ is an important part of this movement.

9. Who has been appointed as the chair of B20 India, to lead the business agenda during India’s G20 presidency?

A. Kiran Mazumdar Shaw

B. N Chandrasekaran

C. Uday Kotak

D. Ratan TATA

Answer & Explanation

Answer: B. N Chandrasekaran

  • Chairperson of the Tata Group, N Chandrasekaran was appointed the chair of B20 India, to lead the business agenda during India’s G20 presidency. The Confederation of Indian Industry (CII) is appointed as the B20 India Secretariat by the Centre to lead the B20 India process.

10. Arun Kumar Singh, former chairman of BPCL, has been appointed as the Chairman and Managing Director of which organisation?

A. PFC

B. ONGC

C. SAIL

D. IOCL

Answer & Explanation

Answer: B. ONGC

  • Arun Kumar Singh, former chairman of oil refining and marketing company BPCL, is appointed Chairman and Managing Director of ONGC. He will head the company for a three–year tenure with effect from the date of assumption of charge. He retired as the BPCL head 13 months later in October 2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!