TnpscTnpsc Current Affairs

24th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

24th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 6ஆவது ஆப்பிரிக்க ஒன்றியம் – ஐரோப்பிய ஒன்றியம் உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?

அ) பிரஸ்ஸல்ஸ் 

ஆ) கெய்ரோ

இ) ரோம்

ஈ) ஜோகன்னஸ்பர்க்

  • 6ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய – ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு 2022 பிப்.17-18 ஆகிய தேதிகளில் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது. இதில் ஆப்பிரிக்க ஒன்றிய & ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
  • கூட்டத்திற்கு ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர், செனகல் அதிபர் மற்றும் AU’இன் தலைவர் ஆகியோர் தலைமை தாங்கினர். இவ்வுச்சிமாநாட்டின்போது, மேம்படுத்தப்பட்ட கூட்டாண்மைக்கான கூட்டுப்பார்வைக்கு தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

2. 2022இல் பாகிஸ்தானின் 2ஆவது உயரிய குடிமக்கள் விருதான ‘ஹிலால்-இ-பாகிஸ்தான்’ விருது கீழ்காணும் யாருக்கு வழங்கப்பட்டது?

அ) பில் கேட்ஸ் 

ஆ) மலாலா யூசுப்சாய்

இ) எலோன் மஸ்க்

ஈ) சி ஜின்பிங்

  • கொடையாளியும் மைக்ரோசாப்டின் நிறுவனருமான பில் கேட்ஸுக்கு பாகிஸ்தானின் 2ஆவது உயரிய குடிமக்கள் விருதான ‘ஹிலால்-இ-பாகிஸ்தான்’ வழங்கப்பட்டுள்ளது. பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவராக அவர் இந்த விருதைப்பெறுகிறார்.
  • இளம்பிள்ளைவாதத்தை ஒழிப்பதற்கும் பாகிஸ்தானில் வறுமையைக்குறைப்பதற்குமான அவ்வறக்கட்டளையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

3. பிளாஸ்டிக் பேக்கேஜிங்கைப் பொறுத்து, ‘EPR’ என்பது எதைக் குறிக்கிறது?

அ) Extended Producer Responsibility 

ஆ) Environment Protection Responsibility

இ) Ecological Protection Role

ஈ) Epoxy Poly Rehydroxy-sulphate

  • நெகிழிக்கழிவு நிர்வாக விதிகள் 2016’இன்கீழ் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் பொறு -ப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • குறைந்தபட்ச பயன்பாட்டையும், அதிகபட்ச மாசினையும் கொண்ட 1 முறை பயன்படுத்தும் நெகிழிப்பொருட்களை 2022 ஜூலை 1 முதல் தடைசெய்வதுடன் இணைந்ததாக இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.

4. ’எரிசக்தி புள்ளிவிவரங்கள் இந்தியா – 2022’ என்ற தலைப்பில் வெளியீட்டை வெளியிட்ட அமைச்சகம் எது?

அ) புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகம் 

ஆ) எரிசக்தி அமைச்சகம்

இ) நிலக்கரி அமைச்சகம்

ஈ) புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், ‘எரிசக்தி புள்ளிவிவரங்கள் இந்தியா–2022’ வெளியீட்டின் 28வது பதிப்பை வெளியிட்டது. இது எரிசக்தி வளங்கள் பற்றிய புள்ளிவிவரங்களின் களஞ்சியமாக உள்ளது.
  • நீடித்த ஆற்றலமைப்புகளில் இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் முன்னேற்றத்தை இது எடுத்துக் காட்டுகிறது. இவ் வெளியீடு உற்பத்தி, நுகர்வு, வர்த்தகம், ஆற்றல் சமநிலை போன்றவற்றை முன்வைக்கிறது. நிலக்கரி அமைச்சகம், பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம், எரிசக்தி அமைச்சகம், புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து தரவு சேகரிக்கப்பட்டது.

5. நடுவண் அரசு பட்ஜெட் 2022-23’இன்படி, கூட்டுறவு சங்கங்களுக்கான புதிய மாற்று குறைந்தபட்ச வரிவிகிதம் எவ்வளவு?

அ) 10%

ஆ) 12.5%

இ) 15% 

ஈ) 17.5%

  • மத்திய அரசு பட்ஜெட் 2022-23இல் கூட்டுறவு சங்கங்கள் செலுத்தவேண்டிய மாற்று குறைந்தபட்ச வரி 15%ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, கூட்டுறவு சங்கங்கள் இதனை 18.5 சதவீதமாக செலுத்தி வருகின்றன. அதே நேரத்தில் நிறுவனங்கள் 15%ஆக செலுத்தி வருகின்றன.
  • `1 கோடி முதல் `10 கோடி வரை மொத்த வருமானம் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு கூடுதல் கட்டணத்தை 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்க இந்தப் பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.

6. புதிதாக அறிவிக்கப்பட்ட ‘துடிவினை சிற்றூர்கள் திட்டத்தின்’ பயனாளிகள், எவ்வகையான சிற்றூர்களைச் சார்ந்தோராக இருப்பர்?

அ) கடலோர சிற்றூர்கள்

ஆ) எல்லைப்புறச் சிற்றூர்கள் 

இ) மலைப்பாங்கான சிற்றூர்கள்

ஈ) ODF சிற்றூர்கள்

  • இந்திய எல்லையில் குறிப்பாக சீன எல்லையில் அமைந்து உள்ள சிற்றூர்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தலை நோக்கமாகக்கொண்ட ‘Vibrant Villages’ என்னும் புதிய திட்டத்தை மத்திய பட்ஜெட் அறிவித்துள்ளது.
  • இந்தத் திட்டத்தின்கீழ், கூடுதல் நிதி அளிக்கப்படுவதோடு, ஏற்கனவேயுள்ள திட்டங்கள் ஒன்றிணைக்கப்படும். வீடுகள், சுற்றுலா மையங்கள், சாலை இணைப்பு, பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குதல், தூர்தர்ஷன் மற்றும் கல்வித்தொலைக்காட்சிகளுக்கான DTH அணுகல் மற்றும் வாழ்வாதார உதவி இதிலடங்கும்.

7. உலக வானொலி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ) பிப்ரவரி 13 

ஆ) பிப்ரவரி 14

இ) பிப்ரவரி 15

ஈ) பிப்ரவரி 16

  • ‘உலக வானொலி நாளானது ஆண்டுதோறும் பிப்ரவரி.13 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது முதன்முதலில் கடந்த 2011இல் யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளால் அறிவிக்கப்பட்டது. 2012இல் ஐநா பொதுச்சபை இம்முன்மொழிவை ஏற்றுக்கொண்டது. 2022இல் வரும் உலக வானொலி நாளுக்கானக்கருப்பொருள் ‘வானொலி மற்றும் நம்பிக்கை (Radio and Trust)” என்பதாகும்.

8. 2022 பிப்ரவரியில் இந்தியா எந்த நாட்டுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ) ஐக்கிய அரபு அமீரகம் 

ஆ) சீனா

இ) பிரேஸில்

ஈ) ரஷ்யா

  • இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) சமீபத்தில் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (CEPA) கையெழுத்திட்டன. இருநாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி & இறக்குமதி ஆகிய இரண்டிலும் கிட்டத்தட்ட 90 சதவீத வர்த்தகத்திற்கு இது பயனளிக்கும்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தங்கத்திற்கு இந்தியா வரிச்சலுகைகளை வழங்கியுள்ளது. அதேவேளையில் இந்திய ஏற்றுமதியாளர்களும் தங்களது நகைகளுக்கு 0% வரி செலுத்துவார்கள்.

9. இந்தியா, எந்த நாட்டிடமிருந்து 100,000 டன் சோயா எண்ணெயை இறக்குமதி செய்து சாதனை படைத்தது?

அ) ஐக்கிய அரபு அமீரகம்

ஆ) அமெரிக்கா 

இ) மலேசியா

ஈ) ஆஸ்திரேலியா

  • வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னமெரிக்காவில் இருந்து வரத்து குறைவாக இருப்பதால், இந்திய வர்த்தகர்கள் அமெரிக்காவிலிருந்து நூறாயிரம் (100,000) டன் சோயா எண்ணெயை இறக்குமதி செய்து சாதனை படைத்து உள்ளனர். பனையெண்ணெயின் விலையேற்றத்துக்கு இடையே இந்த இறக்குமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10. உலக வங்கியின் ‘REWARD’ திட்டத்தின் நோக்கம் என்ன?

அ) பள்ளிக்கல்வியை மேம்படுத்துதல்

ஆ) நீர்ப்பிடிப்பு மேலாண்மை 

இ) திடக்கழிவு மேலாண்மை

ஈ) உட்கட்டமைப்பு மேம்பாடு

  • இந்திய அரசு, கர்நாடகா மற்றும் ஒடிஸா மாநில அரசுகள் மற்றும் உலக வங்கி ஆகியவை 115 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டத்தின் பெயர் ‘REWARD’ (Rejuvenating Watersheds for Agricultural Resilience through Innovative Development Programme). தேசிய மற்றும் மாநில நிறுவனங்கள் நவீன நீர்ப்பிடிப்பு மேலாண்மை நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இது உதவும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அனைத்து வகை கரோனாவுக்கும் ஒரே தடுப்பூசி

கரோனா தீநுண்மிகள் எத்தகைய உருமாற்றம் அடைந்தாலும் அதிலிருந்து தற்காக்கும் வகையிலான ஒரே தடுப்பூசியைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் முதல்கட்ட நிலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

அடுத்த 4 ஆண்டுகளுக்குள் அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர முயன்று வருவதாகவும் அவர் கூறினார்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவேக்ஸின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இரு தவணைகளாக அவற்றை செலுத்திக் கொண்டாலும், உருமாற்றமடைந்த புதிய வகை COVID பாதிப்பு வராமல் அதனால் தடுக்க இயலாது. அதேவேளையில், நோய்த் தொற்று தீவிரமடையாமல் தடுப்பூசிகள் உதவுகின்றன.

இந்நிலையில், அனைத்து வகை கரோனா பாதிப்பையும் தடுக்கவல்ல சிறப்பு கரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணிகளை உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி Dr சௌமியா சுவாமிநாதன் பகிர்ந்துகொண்ட தகவல்:

COVID தொற்றை வேரறுப்பது என்பது இயலாத காரியம். அதேவேளையில் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கலாம். புதிய உருமாற்றங்கள் ஆகாமல் ஓரளவு தடுக்கலாம். ஒருவேளை உருமாற்றங்கள் நிகழ்ந்தால் அவை மிகசாதாரணமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதையும் நாம் திட்டவட்டமாகக் கூற இயலாது. தற்போது பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகள் புதிய பாதிப்பு வராமல் தடுக்காவிட்டாலும், அதனால் தீவிர நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது உறுதி.

இதற்கு ஒரே தீர்வு அனைத்து வகையான கரோனா பாதிப்புகளுக்கும் ஒரே தடுப்பூசியை உருவாக்குவது மட்டும்தான். அதற்கான ஆராய்ச்சிகளும், பணிகளும் ஆரம்பநிலையில் உள்ளன. அதன் பொருட்டு சர்வதேச தரவுகள், ஆய்வுகள் மற்றும் மருத்துவ நுட்பங்களைத் திரட்டி வருகிறோம்.

அடுத்த 4லிருந்து 5 ஆண்டுகளுக்குள் கரோனாவுக்கான ஒரே தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

கரோனா தொற்று அனைவருக்கும் வந்து போனால் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உருவாகிவிடும் என்ற பொதுக்கருத்து நிலவுகிறது. அது முற்றிலும் தவறு. தடுப்பூசிகளைக்கொண்டு மட்டுமே எதிர்ப்பாற்றலை வளர்ப்பது சாத்தியம். ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் போதிய அளவில் கரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில்லை. இதனால், அங்கிருந்து தீநுண்மி உருமாறி மீண்டும் உலகம் முழுவதும் பரவியது. தடுப்பூசி விநியோகத்தில் நீடிக்கும் சமநிலையற்ற தன்மையைப் போக்க உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நிகழாண்டுக்குள் உலகின் 70 சதவீத நாடுகளில் இரு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது எங்களது இலக்கு. அதனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

கரோனா பெருந்தொற்று உணர்த்திய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகள் இனி வரும் காலத்தில் மருத்துவத் துறையில் அதிக முதலீடுகளை மேற்கொள்வது அவசியம். மருத்துவக் கட்டமைப்பு, ஆராய்ச்சி, பயிற்சி உட்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் டாக்டர் சௌமியா சுவாமிநாதன்.

2. தமிழகத்தில் 188 புதிய அவசரகால வாகன சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

தமிழகத்தில் 188 புதிய அவசரகால வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், ஐம்பது இலட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தையும் அவர் அளித்தார்.

‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டமானது கடந்த ஆகஸ்டில் தொடக்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டமானது 50 வட்டங்களில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு இன்று அனைத்து இடங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், கள அளவில் 10,969 பெண் சுகாதாரத் தன்னார்வலர்களும், 385 இயன்முறை மருத்துவர்களும், 385 நோய் ஆதரவுச் செவிலியர்களும், 4 ஆயிரத்து 848 இடைநிலை சுகாதாரச் சேவையாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தின்படி இதுவரை 50 இலட்சம் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். ஐம்பது இலட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை முதல்வர் அளித்தார்.

இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் இதுவரை 21,762 பேர் பயன் பெற்றுள்ளனர்.

அவசரகால ஊர்திகள்: பொதுமக்களின் உயிரைக்காக்கும் வகையில் 108 அவசரகால ஊர்திசேவைத்திட்டம் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், 1,303 அவசர கால ஊர்திகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், மேலும் புதிதாக 188 அவசரகால ஊர்திகளின் சேவையை முதல்வர் தொடக்கி வைத்தார்.

3. கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க `5 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் கடற்பசுக்களுக்கான பாதுகாப்பகம் அமைக்க `5 கோடி நிதி ஒதுக்கி வனத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

கடல் மாசு மற்றும் கடற்புல் படுகைகள் அழிக்கப்படுவதால் கடற்பசு இனம் சமீப காலங்களில் அழிந்து வருகின்றன. இதைப் பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடற்பகுதியில் அமைக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக்கூட்டத்தொடரில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

கடற்பசு இனத்தைக்காக்கும் நோக்கில் அமைக்கப்படும் இந்தப் பாதுகாப்பகம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடாவில் காணப்படும் பல வகையான மீன்கள், ஆமைகள், கடல் தாவரங்கள் ஆகிய கடல் உயிர்ப்பன்மை -யத்தை பாதுகாக்க உதவும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

4. 24-02-2022 – தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ‘புரட்சித்தலைவி’ செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 74ஆவது பிறந்தநாள்.

5. சதுரங்க சாதனை! | பிரக்ஞானந்தாவின் வெற்றி குறித்த தலையங்கம்

ஒட்டுமொத்த உலகத்தையும் தமிழகத்தை நோக்கித் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் பிரக்ஞானந்தா என்கிற 16 வயதுச் சிறுவன். ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் நார்வேயை சேர்ந்த உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனை அவர் தோற்கடித்திருப்பது சாதனை வெற்றி.

16 வீரர்கள் பங்குபெறும் ரேபிட் பார்மெட் இணையவழி செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

கடந்த ஆண்டு செஸ் கிளாஸிக் பந்தயத்தில் இதே மேக்னஸ் கார்ல்செனுடனான போட்டி வெற்றி – தோல்வி இல்லாமல் முடிந்தது. தன்னுடன் போட்டிபோடும் தகுதி இருப்பதாக அந்தச் சிறுவனிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையை, கார்ல்சென் வியந்து பாராட்டினார். இப்போது தன்னைத் தோற்கடித்திருக்கும் பிரக்ஞானந்தாவை வாழ்த்தி ஆசீர்வதித்திருக்கிறார்.

மேக்னஸ் கார்ல்சென் சாதாரணமான விளையாட்டு வீரர் அல்ல. இதற்கு முன்னால் அவரை வென்ற இந்திய வீரர்கள் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தும், கிராண்ட் மாஸ்டர் பெந்தல ஹரிகிருஷ்ணாவும் என்பதிலிருந்தே பிரக்ஞானந்தாவின் வெற்றி எத்தகையது என்பதை உணர முடியும்.

தனது போட்டியாளர்களை அசர அடிக்கும் கார்ல்செனை, பதற்றமே இல்லாத அமைதியான அணுகுமுறையால் பிரக்ஞானந்தா கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கியதை உலகமே கண்டு வியந்தது.

இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த அந்த 16 வயது சிறுவன், காய்களை எங்கேயும் நகர்த்த முடியாத தர்மசங்கடத்துக்கு மேக்னஸ் கார்ல்செனை உள்ளாக்கினார். 39-ஆவது நகர்வில் கார்ல்சென் கைகளை விரித்துத் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். தனது கதாநாயகனைத் தோற்கடித்த பெருமிதமும், தன்னையே நம்ப முடியாத ஆச்சரியமும் பிரக்ஞானந்தாவை திக்குமுக்காடச்செய்தன.

2016இல் தனது 10ஆவது வயதில், உலகின் மிகக் குறைந்த வயதில் செஸ் பந்தயத்தில் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்றவர் பிரக்ஞானந்தா. தொடக்கம் முதலே அவர் சர்வதேச விளையாட்டுக்காரருக்கான தகுதி பெற்று இருந்ததை செஸ் வல்லுனர்கள் அடையாளம் கண்டனர்.

இரண்டாண்டு கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் பிரக்ஞானந்தாவின் தன்னம்பிக்கை கடுமையாகக் குறைந்திருந்தது. செஸ் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்ததும், சர்வதேச பந்தயங்களில் பங்குபெறாமல் போனதும் அந்தச் சிறுவனுக்குத் தளர்வை ஏற்படுத்தியதாக பயிற்சியாளர் குறிப்பிட்டிருந்தார். சரியான நேரத்தில் ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் கார்ல்செனை வென்றிருப்பது பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஊக்கம்.

சதுரங்க ஆட்டம் என்பது இந்தியாவுக்குப் புதிதொன்றுமல்ல. நமது புராண இதிகாச காலத்திலிருந்து அரண்மனைகளிலும் தெருவோரங்களிலும் விளையாடப்படுவதுதான் அது. பிற்காலத்தில் மேல்நாட்டு பாணி சதுரங்கமான செஸ் விளையாட்டு அறிமுகமானபோது இந்தியர்களுக்கு அதில் தேர்ச்சி பெறுவது சிரமமாக இருக்கவில்லை.

சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா கடந்த 60 ஆண்டுகளாகத்தான் முத்திரை பதித்து வருகிறது. 1961-இல் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டராக மேனுவல் ஆரான் தடம் பதித்தார். அதற்கு பிறகு 26 ஆண்டுகள் கழித்து 1987-இல் 18 வயதுகூட நிரம்பியிராத விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக சாதனை நிகழ்த்தினார். 2000-இல் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக உயர்ந்ததும் விஸ்வநாதன் ஆனந்தே. இதுவரை 5 முறை உலக சாம்பியனாகவும், ஒருமுறை ரஷியாவுடன் இணைந்து செஸ் ஒலிம்பிக் சாம்பியனாகவும் தேர்ந்தவர் ஆனந்த்.

ஆனந்தை தொடர்ந்து இப்போது ஏராளமான சிறுவர்களும், இளைஞர்களும் செஸ் விளையாட்டில் சாதனை புரிந்து வருகின்றனர். பிரக்ஞானந்தா மட்டுமல்லாமல் திவ்யா தேஷ்முக், நிகல் ஷரின், வைஷாலி, பெந்தல ஹரிகிருஷ்ணா, விதீத் குஜராத்தி, கோனேரு ஹம்பி, ஹரிகா என்று வரிசையாகப் பலர் சர்வதேச அளவில் இந்தியக் கொடியை செஸ் பந்தயங்களில் உயர்த்திப் பிடிக்கிறார்கள். இதற்கெல்லாம் முன்னோடியும், இந்த இளைஞர்களுக்கு வழிகாட்டியும் விஸ்வநாதன் ஆனந்த் என்பதை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

1987-இல் விஸ்வநாதன் ஆனந்த முதலாவது கிராண்ட் மாஸ்டர் ஆனதைத் தொடர்ந்து, இப்போது இந்திய கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 73. பிரக்ஞானந்தா இந்திய விளையாட்டு வீரர்களில் 16-ஆவது இடத்திலும், உலகத் தர வரிசையில் 193-ஆவது இடத்திலும் இருக்கிறார். இன்றைய பதின்ம வயது இந்திய செஸ் விளையாட்டு வீரர்களில் அதீத திறமைசாலி என்று கருதப்படும் பிரக்ஞானந்தா இப்போது விஸ்வநாதன் ஆனந்தின் வழிகாட்டுதலில் இருக்கிறார் எனும்போது அவரது வருங்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து பங்குபெறுவதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த், அனடோலி கார்போவ், கேரி கேஸ்பரோவ், மேக்னஸ் கார்ல்சென் வரிசையில் பிரக்ஞானந்தா இடம்பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

பிரக்ஞானந்தாவின் வளர்ச்சியும் வெற்றியும் நமக்கு சில செய்திகளைத் தருகின்றன. தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை செஸ் விளையாட்டில் ஊக்கப்படுத்துவதுபோல, அரசுப் பள்ளிகளில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. தொடக்கப்பள்ளி நிலையிலேயே செஸ் விளையாட்டுப் பயிற்சி வழங்குவதன் மூலம் வருங்கால விஸ்வநாதன் ஆனந்த்களையும், பிரக்ஞானந்தாக்களையும் அடையாளம் காண முடியும். அவர்களுக்குத் தகுந்த ஊக்கமும், அரசு ஆதரவும் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டால் தமிழகம், கிராண்ட் மாஸ்டர்களின் கேந்திரமாக உயரக்கூடும்!

1. Where was the 6th African Union – European Union Summit held?

A) Brussels 

B) Cairo

C) Rome

D) Johannesburg

  • The 6th African Union – European Union Summit was held on 17 February – 18 February 2022 at Brussels, where heads of member states of African Union and European Union participated.
  • The meeting was co-chaired by the President of the European Council, President of Senegal and the Chairperson of the AU. During the summit, the leaders agreed on a joint vision for a renewed partnership.

2. Who has been conferred with Hilal–e–Pakistan – the 2nd highest civilian award of Pakistan, in 2022?

A) Bill Gates 

B) Malala Yousafzai

C) Elon Musk

D) Xi Jinping

  • Philanthropist and founder of Microsoft corporation – Bill Gates has been conferred with Hilal-e-Pakistan, which is the 2nd highest civilian award of Pakistan. He is receiving this award as the co-chair of Bill and Melinda Gates Foundation.
  • This award has been dedicated to him on account for the foundation’s continuous efforts to eradicate polio and to reduce poverty in Pakistan.

3. With reference to plastic packaging, what does EPR stand for?

A) Extended Producer Responsibility 

B) Environment Protection Responsibility

C) Ecological Protection Role

D) Epoxy Poly Rehydroxy-sulphate

  • Ministry of Environment, Forest and Climate Change has notified the Guidelines on Extended Producers Responsibility on plastic packaging under Plastic Waste Management Rules, 2016.
  • The guidelines on extended producer responsibility coupled with prohibition of identified single use plastic items, which have low utility and high littering potential, with effect from 1st July 2022.

4. Which Union Ministry released the publication titled ‘Energy statistics India – 2022’?

A) Ministry Of Statistics and Programme Implementation 

B) Ministry of Power

C) Ministry of Coal

D) Ministry of New and Renewable Energy

  • Ministry Of Statistics and Programme Implementation released the 28th edition of the publication, ‘Energy statistics India – 2022’. It is a repository of statistics on energy resources and highlights India’s commitment and progress made in sustainable energy systems.
  • The publication presents the concepts of production, consumption, trade, energy balance etc. The data is collected from Ministry of Coal, Ministry of Petroleum and Natural Gas, Ministry of Power, Ministry of New and Renewable Energy.

5. As per Union Budget 2022–23, what is the new Alternate Minimum Tax (AMT) for Cooperative societies?

A) 10%

B) 12.5%

C) 15%

D) 17.5%

  • The Union Budget has reduced the Alternate Minimum Tax (AMT) to be paid by Cooperative societies to 15 percent. At present, cooperative societies are required to pay AMT at the rate of 18.5 percent, while companies pay the same at 15 percent.
  • The Budget proposed to reduce the surcharge from the 12% to 7%, for cooperatives with total income of Rs 1 crore up to Rs 10 crore.

6. Which type of villages are the beneficiaries of the newly announced ‘Vibrant Villages programme’?

A) Coastal Villages

B) Border Villages 

C) Hilly villages

D) ODF Villages

  • The Union Budget has announced a new scheme called ‘Vibrant Villages programme’, which aims to boost the infrastructure of the villages along India’s border, especially with China.
  • Under the programme, additional funding will be provided, existing schemes will be converged. Activities include housing, tourist centres, road connectivity, provisioning of decentralised renewable energy, DTH access for Doordarshan and educational channels, and livelihood support.

7. When is the ‘World Radio Day’ celebrated?

A) February 13 

B) February 14

C) February 15

D) February 16

  • ‘World Radio Day’ is celebrated on ‘February 13’ every year, across the world. It was first proclaimed by the member states of UNESCO in 2011. The UN General Assembly adopted the proposal in 2012. Theme of 2022 edition of the World Radio Day is, “Radio and Trust”.

8. India signed a Comprehensive Economic Partnership Agreement (CEPA) with which country in February 2022?

A) UAE 

B) China

C) Brazil

D) Russia

  • India and the United Arab Emirates (UAE) recently signed a Comprehensive Economic Partnership Agreement (CEPA). It is set to benefit almost 90 per cent of trade, both exports and imports, between the two countries.
  • India has given duty concessions on gold exported from the UAE, while Indian exporters will attract zero per cent duty on jewellery.

9. India imported a record 100,000 tonnes of Soy Oil from which country?

A) UAE

B) USA 

C) Malaysia

D) Australia

  • Indian traders have imported a record 100,000 tonnes of Soy Oil from the United States, because of limited supplies from drought-hit South America. This import has been undertaken amidst the high prices of its rival Palm Oil.

10. What is the objective of World Bank’s REWARD Program?

A) Promotion of School Education

B) Watershed management 

C) Solid waste Management

D) Infrastructure Development

  • Government of India, the State Governments of Karnataka and Odisha and the World Bank have signed a USD 115 million Programme.
  • The name of the project is REWARD (Rejuvenating Watersheds for Agricultural Resilience through Innovative Development Programme). It will help national and state institutions adopt improved watershed management practices.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!