Tnpsc

24th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

24th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English


  1. இந்தியாவின் முன்னேற எண்ணும் மாவட்டங்கள் திட்டம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ள உலகளாவிய நிறுவனம் எது?

அ) FAO

ஆ) UNDP

இ) IMF

ஈ) உலக வங்கி

  • ஐநா வளர்ச்சித்திட்டமானது (UNDP) இந்தியாவின் முன்னேற எண்ணும் மாவட்டங்கள் திட்டம்குறித்த சுயாதீன மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, இந்தத்திட்டத்தின் விளைவாக துறை வளர்ச்சி & ஆளுகை மற்றும் நிர்வாகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
  • இது முன்னேற எண்ணும் மாவட்டங்கள் திட்டத்தின் முன்னேற்றத்தை பகுப்பாய்வு செய்து முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளை வழங்கியது. UNDP’இன் இந்திய பிரதிநிதி, NITI ஆயோக்கிற்கு இந்த அறிக்கையை வழங்கினார்.

2. ஐநா பாதுகாப்பு அவையானது ____ உறுப்பினர்கள்கொண்ட ஓர் அமைப்பாகும்.

அ) 10

ஆ) 15

இ) 20

ஈ) 30

  • ஐநா பாதுகாப்பு அவை என்பது 15 உறுப்பினர்கள்கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இவ்வவையின் வீட்டோ அதிகாரம்பெற்ற நிரந்தர உறுப்பினர்கள் ஆக அமெரிக்கா, இரஷ்யா, சீனா, ஐக்கியப் பேரரசு மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. சமீபத்தில், பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், அல்பேனியா, கானா மற்றும் காபோன் ஆகிய 5 நாடுகள் ஐநா பாதுகாப்பு அவையில் சேருவதற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

3. சமூகத்தில் _____’இன் பரவலைத் தீர்மானிப்பதற்காக செரோ ஆய்வு பயன்படுத்தப்படுகிறது.

அ) பிறபொருளெதிரியாக்கி

ஆ) பிறபொருளெதிரி

இ) வைரஸ் திரிபு

ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை

  • சமூகத்தில் பிறபொருளெதிரிகள் இருப்பதை தீர்மானிப்பதற்காக செரோ ஆய்வு பயன்படுத்தப்படுகிறது. இந்தச்செயல்பாட்டில், இரத்த மாதிரிகளில் IgG (இம்யூனோகுளோபுலின் G) பிறபொருளெதிரிகள் இருப்பது சோதிக்க -ப்படுன்றன. அவை COVID காரணமாக ஏற்பட்ட கடந்தகால தொற்றை தீர்மானிக்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது 4ஆவது நாடு தழுவிய COVID-19 செரோ ஆய்வைத் தொடங்கவுள்ளதாக NITI ஆயோக் உறுப்பினர் Dr V K பால் அறிவித்தார்.

4. வணிக அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் இயற்கை வேளாண் பொருட்களின் ஏற்றுமதி, 2020-21இல் ____ சதவீதம் உயர்ந்துள்ளது.

அ) 11

ஆ) 31

இ) 51

ஈ) 71

  • வணிக அமைச்சகத்தின் அண்மைய தரவுகளின்படி, 2020-21ஆம் ஆண்டில், இந்தியாவின் இயற்கை வேளாண் பொருட்களின் ஏற்றுமதி 51% உயர்ந்துள்ளது. இயற்கை வேளாண் பொருட்களின் வெளிப்புற ஏற்றுமதியானது கடந்த ஆண்டின் 689 மில்லியன் டாலர்களை விஞ்சி 1,040 மில்லியன் டாலர்களைத் தொட்டது.

5. IMD’இன் அண்மைய தரவுகளின்படி, கடந்த 121 ஆண்டுகளில், இந்தியாவில், 2ஆவது அதிகபட்ச மாதாந்திர மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ள மாதம் எது?

அ) ஏப்ரல் 2021

ஆ) மே 2021

இ) ஜூன் 2021

ஈ) ஜூலை 2021

  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்சமாக 107.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 1901’க்குப் பிறகு இந்த மே மாதத்தில் சராசரியாக 34.18°C வெப்பநிலை, நான்காவது மிகக்குறைந்த வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.
  • மே மாதத்தில், இந்தியாவில் இம்மழைப்பொழிவு கடந்த 1901ஆம் ஆண்டில் இருந்து இரண்டாவது அதிகபட்சமாகும். அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் தலா ஒரு சூறாவளி உருவானது. ‘தக்தே’ புயல் அரபிக் கடலிலும், ‘யாஷ்’ சூறாவளி வங்காள விரிகுடாவிலும் உருவாகியது.

6. AISHE அறிக்கை 2019-20’இன்படி, ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் என்ன?

அ) 27.1

ஆ) 37.1

இ) 47.1

ஈ) 57.1

  • 2019-20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம், 2019-20ஆம் ஆண்டில் 27.1%ஆக உள்ளது.
  • இது கடந்த 2018-19ஆம் ஆண்டில் 26.3%ஆகவும், 2014-15ஆம் ஆண்டில் 24.3%ஆகவும் இருந்தது. கடந்த 2018-19ஆம் ஆண்டு 3.74 கோடியாக இருந்த ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை, 2019-20ஆம் ஆண்டில் 3.85 கோடியாக அதிகரித்து, 11.36 லட்சமாக (3.04%) வளர்ச்சியடைந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18.2% அதிகரித்தது.

7. உலகின் மிகநீள வடமான ‘ஃபிர்மினா’வை கட்டமைத்த தொழில் நுட்ப நிறுவனம் எது?

அ) மைக்ரோசாப்ட்

ஆ) கூகிள்

இ) ஆப்பிள்

ஈ) அமேசான்

  • ஐக்கிய அமெரிக்க நாடுகள், பிரேசில், உருகுவே & அர்ஜென்டினாவை இணைக்கும் ‘Firmina’ என்ற கடலடிசெல்லும் வடத்தை உருவாக்கவுள்ளதாக கூகிள் அறிவித்தது. உலகின் மிகநீளமான வடமாக இருக்கும் இந்த வடம், குறிபிடப்பட்டுள்ள பிராந்தியங்களுக்கு இடையில் இணைய இணைப்புத்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த வடம், அமெரிக்காவின் கீழைக்கடற்கரையிலிருந்து அர்ஜென்டினா வரை இயங்கும். மேலும் தென்னமெரிக்காவிலுள்ள பயனர்களுக்கான கூகிள் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும்.

8. மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக ‘நச்சுக்காற்று கோபுரத்தை’ அமைக்கவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) கர்நாடகா

ஆ) குஜராத்

இ) புது தில்லி

ஈ) மகாராஷ்டிரா

  • தில்லி சுற்றுச்சூழல் அமைச்சரின் கூற்றுப்படி, ஆக.15ஆம் தேதிக்குள் தேசிய தலைநகரத்தில் முதல் ‘நச்சுக்காற்று கோபுரம்’ அமைக்கப்படும். சோதனை அடிப்படையிலான இத்திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், தற்போது நிலவிவரும் COVID தொற்றால் அதன் கட்டுமானம் தாமதமானது. 25 மீ கட்டமைப்பில் தூசி மாசு, வாகன மாசுபாடு முதல் அண்டை பகுதிகளில் பயிர்த்தூர் எரிப்பால் ஏற்படும் மாசுபாடு வரை 10 விதமான சிக்கல்கள் இதனால் தீர்க்கப்படும்.

9. எந்த விண்வெளி நிறுவனம் தனது வெள்ளிக்கோள் பயணத்தின் ஒருபகுதியாக ‘என்விஷன்’ ஆய்வுக்கலத்தை அறிவித்துள்ளது?

அ) NASA

ஆ) JAXA

இ) ISRO

ஈ) ESA

  • ஐரோப்பிய விண்வெளி முகமை தனது வெள்ளிக்கோள் பயணத்தின் ஒருபகுதியாக ‘என்விஷன்’ என்ற ஆய்வுக்கலத்தை அண்மையில் அறி -வித்தது. அமெரிக்க (USA) விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA, வெரிட்டாஸ் மற்றும் டாவின்சி+ என அழைக்கப்படும் 2 வெள்ளிக்கோள் பயணத்திட்டங்களைத் அறிவித்த ஒருவாரகாலத்திற்குப்பின் ESA இதை அறிவித்தது. ESA’வைப் பொறுத்தவரை, 2034-35’க்குள் இந்த ஆய்வுக் கலம் தயாராக இருக்கும்.

10. ஃபோர்ப்ஸின் உலகின் சிறந்த வங்கிகள் – 2021 பட்டியலில், இந்தியாவில் முதலிடத்தில் உள்ள வங்கி எது?

அ) இந்தியன் வங்கி

ஆ) பாரத வங்கி

இ) கனரா வங்கி

ஈ) DBS

  • உலகளாவிய வாடிக்கையாளர் கருத்துக்கேட்பின் அடிப்படையில் ஃபோர்ப்ஸின் உலகின் சிறந்த வங்கிகள் – 2021 பட்டியலில் DBS வங்கி இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் 30 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வங் -கிகளில் முதலிடத்தில் DBS வங்கி உள்ளது.
  • சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டாடிஸ்டாவுடன் இணைந்து நடத்தப்ப -ட்ட ஃபோர்ப்ஸின் ‘உலகின் சிறந்த வங்கிகள்’ பட்டியலின் மூன்றாவது பதிப்பு இதுவாகும். இந்தப் பட்டியலில் இரண்டாவது வங்கியாக கேரள மாநிலத்தைகச் சார்ந்த CSB வங்கியும், அதனைத் தொடர்ந்த இடங்களில் ICICI வங்கியும் HDFC வங்கியும் உள்ளன.

செய்தித்தாள் நடப்புநிகழ்வுகள்

1. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூஸிலாந்து சாம்பியன்

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியின் இறுதியாட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 144 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது நியூஸிலாந்து. இரு இன்னிங்ஸ்களிலுமாக 7 விக்கெட்டுகள் சாய்த்த கைல் ஜேமிசன் ஆட்டநாயகன் ஆனார்.

உலக டெஸ்ட் சாம்பின்ஷிப்பில் பட்டம் வென்றுள்ள நியூஸிலாந்து அணிக்கு `11.7 கோடியும், 2ஆம் இடம்பிடித்த இந்திய அணிக்கு `5.8 கோடியும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

2. ‘கவியரசு’ கண்ணதாசன் – 95ஆவது பிறந்தநாள்

3. இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா-அமெரிக்கா கூட்டு போர்ப் பயிற்சி

இந்தியாவும், அமெரிக்காவும் இந்திய பெருங்கடல் பகுதியில் மிகப்பெரிய அளவிலான 2 நாள் கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கின. தென்சீன கடல்பகுதி மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீனா ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், அதன்மூலம் எழும் எவ்விதமான சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தக் கடல் பிராந்திய பகுதிகளில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் கூட்டு போர்ப் பயிற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்கா சார்பில் அணுசக்தியில் இயங்கக்கூடிய ‘USS ரொனால்ட் ரீகன்’ விமானம் தாங்கி போர்க்கப்பல், F-18 இரக போர் விமானங்கள், தட்பவெப்பநிலைகளிலும் ஆபத்துகுறித்து துல்லியமாக முன்னெச்சரிக்
-கை செய்யும் இ-2சி விமானம் ஆகியவை இந்தப் போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தியா சார்பில் ஜாகுவார் மற்றும் சுகோய்-30 MKI போர் விமானங்கள், விண்ணில் பறந்தபடி எரிபொருள் நிரப்பும் IL-78 விமானம், விண்ணில் பறந்தபடி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய விமானம், கொச்சி மற்றும் டெக் போர்க்கப்பல்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா சார்பில் ஏற்கெனவே, போர்க்கப்பல் குழு ஒன்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க் கப்பல் குழுவில் ஏராளமான போர் விமானங்களுடன் கூடிய ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல், சிறிய அளவிலான போர்க் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்களும் இடம்பெற்றிருக்கும்.

இந்த 2 நாள் போர்ப்பயிற்சி இந்தியா-அமெரிக்க நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்தும் என்பதோடு, கடல்சார் நடவடிக்கைகளிலும் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும். வான்வழி சவால்க -ளை திறம்பட எதிர்கொள்வது, நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைக -ள் என்பன உள்ளிட்ட பலதரப்பட்ட போர்ப்பயிற்சிகள் இந்த இரண்டு நாள் பயிற்சியில் மேற்கொள்ளப்படும்.

1. Which global institution released an independent appraisal report on India’s Aspirational Districts Programme (ADP)?

A) FAO

B) UNDP

C) IMF

D) World Bank

  • The United Nations Development Programme (UNDP) released an independent appraisal report on India’s Aspirational Districts Programme (ADP).
  • As per the report, the programme has resulted in sectoral growth and improvements in governance and administration. It analyses the progress of ADP and made recommendations for improvement. UNDP India representative handed over the report to NITI Aayog.

2. The United Nations Security Council (UNSC) is a ……… member body.

A) 10

B) 15

C) 20

D) 30

  • The United Nations Security Council is a 15–member body. Five veto–wielding permanent members of the council are the United States, Russia, China, United Kingdom and France. Recently, five countries namely Brazil, the United Arab Emirates, Albania, Ghana and Gabon have been selected for to join the U.N. Security Council.

3. Sero survey is used to determine the prevalence of …………. in the community.

A) Antigen

B) Antibody

C) Virus Strain

D) None of the above

  • Sero survey is used to determine the prevalence of antibodies in the community. In the process, blood samples are tested for the presence of IgG (Immunoglobulin G) antibodies, which determine a past infection due to COVID–19. NITI Aayog Member Dr VK Paul announced that the Indian Council of Medical Research (ICMR) will start the fourth nation–wide COVID–19 serosurvey.

4. As per the recent data from the Commerce Ministry, the exports of India’s organic farm products rose by ………. percent in 2020–21.

A) 11

B) 31

C) 51

D) 71

  • As per the recent data from the Commerce Ministry, Exports of India’s organic farm products rose 51 percent in 2020–21. Outward shipments of organic products touched 1,040 million dollars last year compared to 689 million dollars a year before.

5. As per the recent data from IMD, India received the second highest monthly rainfall for which month in the last 121 years?

A) April 2021 B) May 2021

C) June 2021 D) July 2021

  • As per the recent data from the Indian Meteorological Department (IMD), India as a whole received the second highest monthly rainfall for the month of May in the last 121 years since 1901. The average maximum temperature over India this May, 34.18 degrees Celsius, was the fourth lowest temperature since 1901. There was formation of a cyclone each in the Arabian Sea and the Bay of Bengal, during May.

6. What is the Gross Enrolment Ratio (GER) in higher education, as per the AISHE Report 2019–20?

A) 27.1

B) 37.1

C) 47.1

D) 57.1

  • The Ministry of Education has recently released the All–Indian Survey of Higher Education (AISHE) report 2019–20. The Gross enrolment ratio (GER) during 2019–20 is 27.1 %, which is an increase of 0.8 % from the previous year. Total enrolment in higher education stands at 3.85 crore in 2019–20. The rise in female enrolment in higher education during the period is 18.2 %.

7. Firmina, the longest cable in the world when built, is being constructed by which technology company?

A) Microsoft

B) Google

C) Apple

D) Amazon

  • Tech Major Google announced that it is building an undersea cable called ‘Firmina’, that would connect the United States, Brazil, Uruguay and Argentina. The cable, which will be the longest cable in the world, aims to bolster internet connection capacity between these regions.
  • The cable will run from the East Coast of the US to Argentina and improve access to Google services for users in South America.

8. Which Indian state is constructing a ‘Smog Tower’ to curb pollution?

A) Karnataka

B) Gujarat

C) New Delhi

D) Maharashtra

  • As per the Environment Minister of Delhi, the National capital is all set to get its first smog tower by August 15. Though the pilot project was inaugurated last year, the construction had been delayed due to the ongoing COVID–19 pandemic. The 25–meter structure will address 10 issues, from dust pollution, vehicle pollution to pollution caused by stubble burning in neighbouring areas.

9. Which space agency announced ‘Envision’ probe, as a part of its Venus mission?

A) NASA

B) JAXA

C) ISRO

D) ESA

  • The European Space Agency has recently announced a probe called Envision, as a part of its Venus Mission. ESA announced this one week after its American counterpart, NASA, chose two Venus projects of its own, known as Veritas and Davinci+. As per the team of EAS, the probe will be ready by 2034–35.

10. Which bank was named in the first position in India in the Forbes’ World’s Best Banks 2021 list?

A) Indian Bank

B) State Bank of India

C) Canara Bank

D) DBS

  • DBS has been named by Forbes in their list of World’s Best Banks 2021, based on global customer survey. DBS was ranked in the first position out of 30 domestic and international banks in India.
  • This is the third edition of the ‘World’s Best Banks’ list by Forbes, conducted in partnership with market research firm Statista. The second bank in the list is Kerala–based CSB Bank, followed by ICICI Bank and HDFC Bank.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!