TnpscTnpsc Current Affairs

24th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

24th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022-FIFA உலகக்கோப்பையை நடத்தும் நாடு எது?

அ) நியூசிலாந்து

ஆ) UK

இ) கத்தார் 

ஈ) தென்னாப்பிரிக்கா

  • ‘2022 – FIFA உலகக்கோப்பை’ போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ளது. 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி 2022 நவம்பர் மாதம் முதல் அல் பேட் மைதானத்தில் தொடங்கும். தென் கொரியா மற்றும் ஜப்பான் இணைந்து நடத்திய 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக ஆசியாவில் இப்போட்டி நடைபெறுகிறது.

2. பயனுள்ள பன்முகத்தன்மைக்கான ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

அ) இரகுராம் இராஜன்

ஆ) ஜயதி கோஷ் 

இ) அபிஜித் பானர்ஜி

ஈ) அமர்த்தியா சென்

  • ஜயதி கோஷ் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸால் பயனுள்ள பன்முகத்தன்மைக்கான ஐநா ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் லைபீரிய அதிபரும் நோபல் பரிசு பெற்றவருமான எலன் ஜான்சன் சர்லீப் மற்றும் முன்னாள் சுவீட பிரதம மந்திரி ஸ்டீபன் லோப்வென் ஆகியோர் இணைந்து இப்புதிய குழுவை நிறுவியதாக குடெரெஸ் அறிவித்தார்.

3. 2008ஆம் ஆண்டுக்கான ‘Limited Liability Partnership’க்கான திருத்தங்கள் எந்தத் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது?

அ) மார்ச்.1

ஆ) ஏப்ரல்.1 

இ) மே.1

ஈ) ஜூன்.1

  • Limited Liability Partnership’ – 2008-க்கான திருத்தங்கள் ஏப்ரல்.1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இத்திருத்தம், ‘Small Limited Liability Partnership’ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. LLP-கள் என்பது `40 இலட்சம் வரையிலான விற்றுமுதலையோ அல்லது `50 கோடிக்கு மிகாத நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கொண்டிருப்ப
    -தையோ குறிக்கின்றது.
  • சில LLP-களை ‘ஸ்டார்ட்-அப் LLP’-களாக நியமிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.

4. ரஷ்யாவைச் சார்ந்திருத்தலைக் குறைத்துக்கொள்வதற்காக, ஜெர்மனி, பின்வரும் எந்த வடகிழக்கு நாட்டுடன் எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ) குவைத்

ஆ) கத்தார் 

இ) ஓமான்

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • ஜெர்மனி கத்தாருடன் நீண்டகால ஆற்றல் கூட்டாண்மை -யாக ஓர் எரிசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகிக்கும் மிகப்பெரிய நாடாக ரஷ்யா இருந்துவருகிறது.
  • ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு, ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி, ரஷ்ய எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. கத்தார் அமீரும் ஜெர்மனியின் அமைச்சரும் எரிசக்தி துறையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்தனர்.

5. இந்தியாவின் எந்த மத்திய அமைச்சகம், “இந்தியா & ஆர்க்டிக்: நிலையான வளர்ச்சிக்கான கூட்டாண்மையை உருவாக்கல்” என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியது?

அ) புவி அறிவியல் அமைச்சகம் 

ஆ) சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

இ) பாதுகாப்பு அமைச்சகம்

ஈ) வெளியுறவு அமைச்சகம்

  • “இந்தியா மற்றும் ஆர்க்டிக்: நிலையான வளர்ச்சிக்கான கூட்டாண்மையை உருவாக்குதல்” என்ற கொள்கையை மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். இந்தக் கொள்கை, வளங்கள் நிறைந்த ஆர்க்டிக் பிராந்தியத்துடன் நாட்டின் கூட்டாண்மையை ஆழப்படுத்த எண்ணுகிறது.
  • ஆர்க்டிக் கவுன்சிலில் பார்வையாளர் அந்தஸ்தில் உள்ள 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. துருவப்பகுதிகளுக்கும் இமயமலைக்கும் இடையேயுள்ள தொடர்பை ஆராயுவும் இந்தக் கொள்கை எண்ணுகிறது.

6. அழிந்துவரும், ‘பொன்னிற மந்தி’ இனத்தின் பூர்வீக நாடுகள் எவை?

அ) இந்தியா மற்றும் பூடான் 

ஆ) இந்தியா மற்றும் இலங்கை

இ) இந்தியா மற்றும் வங்காளதேசம்

ஈ) லாவோஸ் மற்றும் கம்போடியா

  • பொன்னிற மந்தி (Trachypithecus geei) என்பது பூடான் மற்றும் இந்தியாவின் எல்லையில் பரவியிருக்கும் ஓர் அழிந்துவரும் உயர்விலங்கினமாகும்.
  • சமீபத்திய ஆய்வின்படி, பொன்னிற மந்தியின் வாழ்விடங் -கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகின்றன. இவ்வுயிரினங்களின் வாழ்விடங்களில் அதிகரிக்கும் மனித நடமாட்டங்கள் காரணமாக மனித-பொன்னிற மந்தி மோதலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘MH17 கிராஷ்’ நிகழ்ந்த நாடு எது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) மலேசியா

இ) உக்ரைன் 

ஈ) சீனா

  • 2014ஆம் ஆண்டில் கீழை உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில், கிரிமியாவை உருஷியப்படைகள் இணைத்த போது, மலேசிய ஏர்லைன்ஸ் வானூர்தியான, ‘MH17’ வீழ்த்தப்பட்டதில் ரஷ்யாவின் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சமீபத்தில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில், ஆஸி., மற்றும் நெதர்லாந்து ஆகியவை, ‘MH17’ விபத்து வழக்கு தொடர்பாக ரஷ்யாவிற் -கு எதிராக ஒரு புதிய சட்ட வழக்கைத்தொடங்கவுள்ளன.

8. உலகிலேயே முதன்முறையாக கார்பன் கட்டண வீதத்தை முன்மொழிந்த உலகளாவிய சங்கம் எது?

அ) ஐரோப்பிய ஒன்றியம் 

ஆ) NATO

இ) G20

ஈ) G7

  • ஐரோப்பிய தொழிற்துறையைப் பாதுகாக்கும் நோக்கில், எஃகு, சிமென்ட், உரங்கள், அலுமினியம் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு கார்பன் கட்டண வீதத்தை உலகிலேயே முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சமீபத்தில் மாசுபடுத்தும் பொருட்களின் இறக்குமதிமீது உலகின் முதல் கரியமில வாயு உமிழ்வு கட்டணத்தை விதிக்கும் சங்கத்தின் திட்டத்தை ஆதரித்தன.

9. ‘நகரத்தில் உள்ள அனைத்து மெட்ரோ நிலையங்களுக்கும் அதிவேகமாக பயணம் செய்ததற்கான’ கின்னஸ் உலகசாதனையை படைத்த மெட்ரோ நெட்வொர்க் எது?

அ) சென்னை மெட்ரோ

ஆ) தில்லி மெட்ரோ 

இ) கொச்சி மெட்ரோ

ஈ) மும்பை மெட்ரோ

  • தில்லி மெட்ரோ இரயில் கழக ஊழியர் பிரபுல் சிங், நகரில் உள்ள அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களுக்கும் வேகமாகப் பயணம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், நகரின் அனைத்து 254 நிலையங்களுக்கும் 348 கிமீ தூரத்தை வெறும் 16 மணி 2 நிமிடங்களில் பயணித்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

10. SKOCH மாநில நிர்வாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம் 

ஈ) தெலுங்கானா

  • SKOCH மாநிலத்தின் நிர்வாக தரவரிசையில், ஆந்திர பிரதேசம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. SKOCH மாநில நிர்வாக தரவரிசை – 2021 ஆவணத்தின்படி, ஆந்திர பிரதேச மாநிலம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஒரு நட்சத்திரம் (தரநிலை 1 முதல் 5 வரை) கொண்டுள்ளது மாநிலம் என்பதைக் கூறுகிறது. 2021-இல் தென்னிந்தியாவிலிருந்து ‘ஸ்டார்’ மதிப்பீடு பெற்ற ஒரே மாநிலம் இதுவாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவில் மார்ச் 31இல் முடிவுக்கு வரும் கரோனா கட்டுப்பாடுகள்; முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மட்டும் அவசியம்

நாட்டில் நீடித்துவரும் கரோனா கட்டுப்பாடுகள் மார்ச்.31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது என்றும், இருப்பினும் மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச்.22ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. கரோனாவின் முதல் அலையில் தொடர்ந்து எட்டு மாதங்கள் நீடித்த பொது முடக்கம் பின்பு படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் அலையின்போது பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்தியாவில் மூன்றாவது அலை கரோனா பரவல் பிப்ரவரியில் முடிவடைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் படிப்படியாக பொது முடக்கம் தளர்த்தப்பட்டு பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும் சில கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வந்தன. இந்த நிலையில், நாடு முழுவதும் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து, COVID -19 கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக அமல்படுத்தபட்ட பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் விதிகளை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இருந்தபோதிலும் முகக்கவசம் அணிய, தனிமனித இடைவெளியைத் தொடர்ந்து கடைபிடிக்க மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

2. ஆஷ்லி பர்ட்டி ஓய்வு

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையாக இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பர்ட்டி (25), விளையாட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

27 பட்டங்கள்…

கடந்த 2010-இல் தொழில்முறை டென்னிஸ் ஆடத் தொடங்கியது முதல் ‘டூர்’ நிலையிலான போட்டிகளில் இதுவரை ஒற்றையர் பிரிவில் 15, இரட்டையர் பிரிவில் 12 என 27 பட்டங்கள் வெற்றிருக்கிறார் பர்ட்டி.

3 கிராண்ட்ஸ்லாம்…

டென்னிஸ் விளையாட்டில் இருக்கும் 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், 3-இல் பட்டம் வென்றிருக்கிறார் பர்ட்டி. பிரெஞ்சு ஓபன் (2019), விம்பிள்டன் (2021), ஆஸ்திரேலிய ஓபன் (2022) ஆகியவற்றில் கோப்பை வென்றிருக்கும் அவர், அமெரிக்க ஓபனில் அதிகபட்சமாக 4-ஆவது சுற்று வரை (2018, 19) வந்திருக்கிறார்.

3. பாரா தடகளம்: தேசாய்க்கு தங்கம்

துபையில் நடைபெறும் பாரா தடகள கிராண்ட் ப்ரீ போட்டியில் ஓட்டப்பந்தய வீரர் பிரணவ் பிரசாந்த் தேசாய் தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.

பதக்கப்பட்டியலில் தற்போதைய நிலையில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 15-ஆவது இடத்தில் உள்ளது.

1. Which country is the host of FIFA World Cup 2022?

A) New Zealand

B) UK

C) Qatar 

D) South Africa

  • The ‘FIFA World Cup 2022’ is scheduled to take part in Qatar. The 32–nation tournament will commence at the Al Bayt Stadium from November 2022. The World Cup is being held in Asia for the second time since 2002, when it was jointly–hosted by South Korea and Japan.

2. Which Indian has been appointed to UN Advisory Board on Effective Multilateralism?

A) Raghuram Rajan

B) Jayati Ghosh 

C) Abhijeet Banerjee

D) Amartya Sen

  • Jayati Ghosh has been appointed by UN Secretary General Antonio Guterres to the Advisory Board on Effective Multilateralism. UN Chief Guterres announced the establishment of the new high–level to be co–chaired by former Liberian president and Nobel laureate Ellen Johnson Sirleaf and former Swedish Prime Minister Stefan Lofven.

3. The amendments to the ‘Limited Liability Partnership’ 2008 will take effect from which date?

A) March 1

B) April 1 

C) May 1

D) June 1

  • The amendments to the ‘Limited Liability Partnership’ 2008 will take effect from April 1. The Amendment has introduced the concept of ‘Small Limited Liability Partnership’.
  • The LLPs are those with a previous year turnover of up to ₹40 lakh or any prescribed amount which shall not exceed ₹50 crore. The Government has the powers to designate certain LLPs as ‘start–up LLPs’.

4. Germany has signed the Energy Deal with which North–Eastern country, to reduce its dependence on Russia?

A) Kuwait

B) Qatar 

C) Oman

D) UAE

  • Germany has signed the Energy Deal with Qatar as a long–term energy partnership. Russia has been the largest supplier of gas to Germany. Germany, Europe’s biggest economy is seeking to become less dependent on Russian energy sources, after Russia started to invade Ukraine. Qatar’s Emir and Germany’s Minister also discussed ways to enhance bilateral relations in the energy sector.

5. Which Union Ministry of India launched the “India and the Arctic: building a partnership for sustainable development” policy?

A) Ministry of Earth Sciences 

B) Ministry of Environment, Forest and Climate Change

C) Ministry of Defence

D) Ministry of External Affairs

  • The policy, titled “India and the Arctic: building a partnership for sustainable development” was released by Union Earth Sciences Minister Jitendra Singh. The Arctic policy seeks to deepen the country’s partnership with the resource–rich Arctic region.
  • India is one of the 13 countries holding the observer status in the Arctic Council. It also seeks to study the linkages between polar regions and the Himalayas.

6. The ‘Golden Langur’ is an endangered species, native to which country?

A) India and Bhutan 

B) India and Sri Lanka

C) India and Bangladesh

D) Laos and Cambodia

  • Golden Langur (Trachypithecus geei) is an endangered primate species that is distributed along the boundary of Bhutan and India.
  • As per a recent study, there is a significant decline in the habitat of Golden Langur and the intensity of human–langur conflict is increasing due to enhanced human footprints in the habitat of the species.

7. The ‘MH17 Crash’, which was making news recently, happened in which country?

A) Australia

B) Malaysia

C) Ukraine 

D) China

  • Russia is alleged to have a role in the downing of Malaysia Airlines flight MH17 that crashed in eastern Ukraine’s Donetsk region in 2014, when Crimea was annexed by Russian forces.
  • Recently, amidst the Russian invasion of Ukraine, Australia and the Netherlands are set to launch a new legal case against Russia, regarding the MH17 Crash Case.

8. Which Global Association proposed the world’s first Carbon Tariff?

A) European Union 

B) NATO

C) G20

D) G7

  • The European Union proposed the world’s first Carbon Tariff on imports of steel, cement, fertilisers, aluminium and electricity, to protect European industry. European Union countries have recently backed the association plan to impose a world–first carbon dioxide emissions tariff on imports of polluting goods.

9. A Guinness World Record for ‘fastest time to travel to all metro stations in city’, was created in which Metro network?

A) Chennai Metro

B) Delhi Metro 

C) Kochi Metro

D) Mumbai Metro

  • A Delhi Metro Rail Corporation (DMRC) employee Prafull Singh has created Guinness World Records for recording the fastest time to travel to all metro stations in the city. This makes him the first person in the world to travel to all 254 stations of the city covering 348 km in just 16 hrs and 2 minutes.

10. Which state is placed at the top spot in the SKOCH State of Governance rankings?

A) Tamil Nadu

B) Kerala

C) Andhra Pradesh 

D) Telangana

  • Andhra Pradesh has retained its top spot in the SKOCH State of Governance rankings for the second consecutive year.
  • The SKOCH State of Governance–2021 document highlighted that Andhra Pradesh has been a ‘Star’ (Rank 1 to 5) for the fourth year in a row. It is also the only State from South India to have been given ‘Star’ ratings in 2021.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!