Tnpsc

24th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

24th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 24th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

May Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th May 2021 Tnpsc Current Affairs in Tamil & English

  1. பருப்பு வகைகளின் விலையேற்றத்தை குறைப்பதற்காக, பின்வரும் எந்த நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளது?

அ) பருப்பு வகைகளின் உள்நாட்டு உற்பத்தியைக் குறைத்தல்

ஆ) பருப்பு வகைகளை இருப்பு வைத்திருப்பதற்கு வரம்பு விதிப்பது

இ) பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய கட்டற்ற அனுமதியளிப்பது

ஈ) பருப்பு வகைகள் ஏற்றுமதியை ஊக்குவிப்பது

  • பருப்பு வகைகளின் விலை மேலும் உயர்வதைத் தடுக்கும் பொருட்டு, துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு பருப்பு வகைகளை கட்டற்ற முறையில் இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அண்மைக் காலங்களில் பருப்புகளின் விலை அதிக அளவில் உயர்ந்த காரணத்தால், அவை, தடைசெய்யப்படாத இறக்குமதிக்கான பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன

2. ஒரு மாநில சட்டத்தின்மூலம், நுண்கடன் வழங்கலைக் கட்டுப்படுத்த முன்மொழிந்துள்ள மாநிலம் எது?

அ) அஸ்ஸாம்

ஆ) உத்தரபிரதேசம்

இ) தமிழ்நாடு

ஈ) கேரளா

  • அஸ்ஸாம் மாநில அரசாங்கம், ‘அஸ்ஸாம் நுண்கடன் நிறுவனங்கள் (பணப்பரிவர்த்தனை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2020’ஐ இயற்றியுள்ள -து. இதன்மூலம் நுண்கடன் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அது எண்ணுகிறது. இச்சட்டத்தின்கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் (அ) நகரத்தில் பணியாற்ற நுண் கடன் நிறுவனங்களுக்கு தனி பதிவுகள் தேவை. இதுதொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி, இச்சட்டத்தை அமல்படுத்துவது நுண்கடன் சந்தையின் இரட்டை ஒழுங்குமுறைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.

3. “நீண்ட வேலை நேரம்” உலகெங்கிலும் ஆண்டுக்கு 7.45 லட்சம் மரணங்களுக்கு காரணமாக அமைவதாக கூறியுள்ள அமைப்பு எது?

அ) WB மற்றும் IMF

ஆ) WHO மற்றும் ILO

இ) UNICEF மற்றும் UNESCO

ஈ) UN மற்றும் UNCTAD

  • சுற்றுச்சூழல் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஆராய்ச்சி அறிக்கையில், ‘நீண்ட வேலை நேரம்’ உலகம் முழுவதும் 7.45 இலட்சம் மக்களைக் கொன்றதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களில் 3.98 இலட்சம் பேர் பக்கவாதத்தால் இறந்துள்ளனர். 3.47 இலட்சம் பேர் இதய நோயால் இறந்துள்ளனர். மேலும், வேலை தொடர்பான நோய் சுமை ஆண்களில் அதிகம் காணப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

4. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக, 1 மில்லியன் ஹெக்டேரை நேரடி நெல்விதைப்பின்கீழ் கொண்டுவர இலக்கு வைத்துள்ள மாநிலம் எது?

அ) மத்திய பிரதேசம்

ஆ) உத்தர பிரதேசம்

இ) பஞ்சாப்

ஈ) அஸ்ஸாம்

  • இந்தப் பயிராண்டில் பஞ்சாப் அரசு ஒரு மில்லியன் ஹெக்டேர் வேளாண் நிலத்தை நேரடி நெல்விதைப்பு நுட்பத்தின்கீழ் கொண்டுவர இலக்கு வைத்துள்ளது. இம்முறையின்கீழ், ஓர் உழவெந்திரத்தின்மூலம் இயக்க -ப்படும் எந்திரம்மூலம் வயலில் துளையிடப்பட்டு விதைகள் நேரடியாக விதைக்கப்படுகின்றன. COVID இரண்டாவது அலையால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெரும் பற்றாக்குறையை எதிர்பார்த்து, இவ்விலக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

5. கிராமப்புற இணைப்பு திட்டங்களுக்காக அஸ்ஸாம் மாநிலத்திற்கு `1,236 கோடியை வழங்கியுள்ள நிதி நிறுவனம் எது?

அ) உலக வங்கி

ஆ) ஆசிய வளர்ச்சி வங்கி

இ) பாரத வங்கி

ஈ) வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி

  • வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான வங்கி (NABARD) அஸ்ஸாம் மாநில அரசுக்கு அதன் கிராமப்புற சாலை இணைப்பை மேம்ப -டுத்துவதற்காக `1,236 கோடி நிதியை வழங்கியுள்ளது. இந்த நிதிகள், 2020-21 நிதியாண்டில், NABARD தனது கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கியுள்ளது.

6. JUICE விண்கலத்தை உருவாக்குகிற அமைப்பு எது?

அ) ISRO

ஆ) NASA

இ) ESA

ஈ) CASA

  • ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமானது (ESA) ஏர்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து ‘The Jupiter Icy Moons Explorer (JUICE)’ஐ உருவாக்கிவருகிறது.
  • இது வியாழன் கோளின் கேன்மீட், காலிஸ்டோ மற்றும் யூரோபா ஆகிய 3 நிலவுகளை ஆராய்வதை தனது நோக்கமாகக்கொண்டுள்ளது. 2022 ஜூனில் இந்தப் பணி தொடங்கப்படவுள்ளது. 88 மாத பயணத்திற்குப் பிறகு, 2029 அக்டோபரில் இந்த விண்கலம் வியாழனை எட்டும்.

7. முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, கீழ்காணும் எந்த நாட்டில் நாரைகளின் வருகை மீண்டும் தென்பட்டுள்ளன?

அ) இந்தியா

ஆ) அயர்லாந்து

இ) அமெரிக்கா

ஈ) ஆஸ்திரேலியா

  • சாதாரண நாரைகள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு, தங்குவதற்காகவும் இனப்பெருக்கம் மேற்கொள்வதற்காகவும் அயர்லாந்திற்கு வருகை புரிந்திருப்பதாக வனவுயிரி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, நமது சூழல், மேம்பட்டுவருவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. சட்டத்துக்குப் புறம்பானவர்களின் கைகளிலிருந்து நாரைகளைப் பாதுகாக்க, அவை இனப்பெருக்கம் செய்யும் இடம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

8. உயிரியலைப் பொறுத்தவரை, CD4 எண்ணிக்கை என்பது எந்த நோயைக் கண்டறிவது தொடர்பானது?

அ) COVID

ஆ) AIDS

இ) காசநோய்

ஈ) டைபாய்டு

  • உயிரியலில், CD4 என்பது நோயெதிர்ப்பு உயிரணுக்களின் மேற்பரப்பி -ல் காணப்படும் கிளைகோபுரோட்டீன் ஆகும். ஒரு CD4 எண்ணிக்கை 200 செல் / மிமீ3ஐ விடக்குறைவாக இருக்கும்போது, ஒரு நபர் AIDS நோயறி பரிசோதனைக்கு உள்ளாகிறார். ஒவ்வோர் ஆண்டும், மே.18 அன்று, உலக AIDS தடுப்பூசி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. HIV’க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் மற்றும் நலவாழ்வு நிபுணர்களின் முயற்சிகளை இந்த நாள் அங்கீகரித்து போற்றுகிறது.

9. மங்கோலிய கஞ்சூர் என்பது எந்த சமயத்தின் முதன்மையான சமயவுரையாகும்?

அ) சீக்கியம்

ஆ) பெளத்தம்

இ) சமணம்

ஈ) ஹிந்து

  • மங்கோலிய கஞ்சூர் என்பது 108 தொகுதிகளில் உள்ள பெளத்த உரை ஆகும். அது மங்கோலியாவின் மிக முக்கியமான சமயவுரையாக கருதப்படுகிறது. மங்கோலிய கலாச்சார அமைச்சருடனான இந்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேலின் சந்திப்பு அண்மையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது.
  • மங்கோலியாவின் முக்கிய பெளத்த மையங்களில் விநியோகிப்பதற்காக, அடுத்த ஆண்டுக்குள், நூறு புனித மங்கோலிய கஞ்சூர்களை மறு அச்சாக்கம் செய்ய கலாச்சார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

10. இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி மையம் நிறுவப்பட்டு -ள்ள நகரம் எது?

அ) மும்பை

ஆ) புனே

இ) சென்னை

ஈ) கொச்சின்

  • இந்தியாவின் முதலாவது வேளாண் ஏற்றுமதி மையத்தை புனேவில் தொடங்க மஹாரத்தா வணிகர் கழகம், தொழிற்துறை & வேளாண்மை NABARD உடன் கூட்டிணைந்துள்ளது. அப்பிராந்தியத்தில் வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் உலகளாவிய தரத்தை பின்பற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வேளாண் உணவு ஏற்றுமதிக்கான திறன் மேம்பாட்டு தளமாகவும் செயல்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி தொடக்கம்

ஸ்புட்னிக்-வி COVID தடுப்பூசியின் உற்பத்தி ஹிமாச்சலில் உள்ள பேனசியா பயோடெக் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ரஷியாவின் கமலீயா நிறுவனம் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியைத் தயாரித்தது. அதை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்தடுப்பூசிகள் ஏற்கெனவே இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சோதனை அடிப்படையில் மக்களுக்கு ஸ்புட்னிக்-வி செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஹிமாசல பிரதேசத்தின் பட்டி பகுதியில் உள்ள பேனசியா பயோடெக் நிறுவனம், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்காக ரஷிய நேரடி முதலீட்டு நிதி அமைப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆண்டுக்கு 10 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2. வங்கக்கடலில் உருவானது ‘யாஸ்’ புயல்

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ‘யாஸ்’ புயலாக மாறியது. இது அதிதீவிர புயலாக மாறவுள்ளது. இப்புயல் வடக்கு ஒடிஸா-மேற்கு வங்க கடலோரப்பகுதியில் பாரதீப்-சாகர் தீவுகளிடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வட அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மே.22 அன்று உருவானது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘யாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

3. இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 12% வரி: ஜிஎஸ்டி கவுன்சில் மே 28-இல் முடிவு

சொந்த பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து, வரும் 28-ஆம் தேதி நடக்கும் GST கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

சொந்த பயன்பாட்டுக்காகவோ அல்லது நன்கொடையாக வழங்குவதற்காக -வோ இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான ஒருங்கி -ணைந்த ஜிஎஸ்டி வரியை ஐஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீத -மாகக் குறைத்து மத்திய நிதியமைச்சகம் கடந்த 1-ஆம் தேதி அறிவித்தது. இந்த வரிக் குறைப்பு ஜூன் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, அமெரிக்காவில் இருந்து உறவினா் அனுப்பிய ஆக்சிஜன் செறிவூட்டிக்கு 12 சதவீதம் ஐஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை எதிா்த்து கரோனா நோயாளி ஒருவா், தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், தனிநபா் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவீதம் ஐஜிஎஸ்டி வரி விதிப்பது சட்ட விரோதம் என்று கூறியது. இதுதொடா்பாக, மத்திய நிதியமைச்சகம் கடந்த 1-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையையும் உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் சொந்த பயன்பாட்டுக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவீத ஐஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால் சிகிச்சைக்குப் பயன்படும் அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. கரோனா சிகிச்சைக்குத் தேவையான உயிா்காக்கும் மருந்துகள் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பதை தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.

4. ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சிறுத்தைப் புலிகள்: மத்திய பிரதேச வனப்பகுதியில் விடப்படும்

ஆப்பிரிக்காவில் இருந்து சிறுத்தைப் புலிகள் நவம்பரில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது. தரையில் மிகவும் வேகமாக ஓடக் கூடிய உயிரினம் சிறுத்தைப் புலி. ஒரு காலத்தில் இந்தியாவில் சிறுத்தை புலிகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசா்கள், ஆங்கிலேய ஆட்சியாளா்கள் உள்ளிட்டோா் பொழுதுபோக்குக்காக அவற்றை அதிக அளவில் வேட்டையாடியதால், சிறுத்தைப் புலிகளின் இனமே இந்தியாவில் அழிந்துபோனது.

நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிறுத்தைப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் சிறுத்தைப் புலி இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கடந்த 1952-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. சிறுத்தைப் புலிகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆப்பிரிக்க சிறுத்தைப் புலிகளை சோதனை அடிப்படையில் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது. ‘சிறுத்தைப் புலி’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு வழிகாட்டும் நோக்கில் 3 போ் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

அக்குழுவானது இந்தியாவின் எந்தப் பகுதியில் சிறுத்தைப் புலிகளை அறிமுகப்படுத்தலாம் என்பது தொடா்பாக ஆய்வு நடத்துமாறு இந்திய வனஉயிரிகள் மையத்துக்கு (டபிள்யூ.ஐ.ஐ.) வலியுறுத்தியது. அதனடிப்படையில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைப் புலிகள் வாழ்வதற்கான சூழல் காணப்படுகிா என்று வனஉயிரிகள் மையம் ஆய்வு நடத்தியது. மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் தகுந்த சூழல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, வனஉயிரிகள் மையத்தின் அதிகாரிகள், தென்னாப்பிரிக்க சிறுத்தைப் புலி பாதுகாப்பு மைய அதிகாரிகள் உள்ளிட்டோா் குனோ தேசிய பூங்காவில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கு சிறுத்தைப் புலிகள் வாழ்வதற்கான சூழல் காணப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, சிறுத்தைப் புலிகளை தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடா்பாக மாநில அரசின் வனத்துறை அமைச்சா் விஜய் ஷா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்தியாவில் சிறுத்தைப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான திட்டத்தை வனஉயிரிகள் மையம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து தென்னாப்பிரிக்காவில் இருந்து 10 சிறுத்தைப் புலிகளைக் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 5 பெண் சிறுத்தைப் புலிகள் இடம்பெறும்.

அவை சிவபுரி மாவட்டத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படவுள்ளன. இதற்கான அலுவல் சாா்ந்த நடவடிக்கைகள் ஆகஸ்டில் நிறைவடையும். சிறுத்தைப் புலிகளைப் பராமரிப்பது தொடா்பாக அறிந்து கொள்வதற்காக இந்திய அதிகாரிகள் ஜூன், ஜூலை மாதங்களில் தென்னாப்பிரிக்கா செல்லவுள்ளனா். போதிய இரை: சிறுத்தைப் புலிகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் அக்டோபரில் தொடங்கி நவம்பரில் நிறைவடையும். சம்பல் நதிப் பகுதியில் குனோ தேசியப் பூங்கா 750 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு சிறுத்தைப் புலியின் இரைகளான புள்ளிமான், சாம்பா் மான், காட்டுப்பன்றி உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

எனவே, சிறுத்தைப் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குனோ தேசியப் பூங்காவில் காணப்படுகிறது. சிறுத்தைப் புலிகள் திட்டத்துக்காக நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.14 கோடி வழங்கப்படவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனங்கள், பருவநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அடுத்த மாதத்தில் விடுவிக்கவுள்ளது என்றாா். 4 இடங்களில் ஆய்வு: மத்திய பிரதேசத்தின் கூடுதல் முதன்மை வனப் பாதுகாவலா் ஜே.எஸ்.சௌஹான் கூறுகையில், ‘ஆப்பிரிக்க சிறுத்தைப் புலிகளைப் பராமரிப்பதற்கு ஏற்ற இடத்தைக் கண்டறிவதற்காக மாநிலத்தின் 4 பகுதிகளில் இந்திய வனஉயிரிகள் மைய அதிகாரிகள் ஆய்வு நடத்தினா்.

குனோ தேசியப் பூங்கா, சாகா் மாவட்டத்தில் உள்ள நௌராதேஹி வனவிலங்குகள் சரணாலயம், மாண்டசூா்-நீமூச் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காந்தி சாகா் சரணாலயம், சிவபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாதவ் தேசியப் பூங்கா ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதியல் குனோ தேசியப் பூங்கா தோ்வு செய்யப்பட்டது. மத்திய பிரதேசத்தில் ஏற்கெனவே சிறுத்தைப் புலிகள் வாழ்ந்துள்ளன. அதற்கான வாழிடச் சூழல் இங்கு சிறப்பாகக் காணப்படுகிறது. விலங்குகளை மற்ற இடங்களில் இருந்து கொண்டு வந்து பராமரிப்பதில் மத்திய பிரதேச அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் இருந்து கடந்த 2009-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட புலிகள், பன்னா புலிகள் காப்பகத்தில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன’ என்றாா். உலக அளவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிறுத்தைப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளிலேயே உள்ளன.

1. In order to curtail the price rise in pulses, which of the following steps has been recently initiated by the Government of India?

A) Decrease local production of pulses

B) Impose stock holding limits on pulses

C) Permit free import of pulses

D) Incentivize pulses export

  • In order to curb the price of pulses from further moving up, the Government of India has permitted for free import of tur, urad and moong pulses. These pulses have been placed in the non–restricted list of imports, since their prices were on the higher side in the recent past.

2. Which state has proposed to control microfinance, by way of a state legislation?

A) Assam

B) Uttar Pradesh

C) Tamil Nadu

D) Kerala

  • The state Government of Assam has enacted “The Assam Microfinance Institutions (Regulation of Moneylending) Act, 2020”, through which it proposes to control microfinance and related institutions. Under this act, micro finance institutions require separate registrations for working in a selected village or city. In this regard, the Reserve Bank of India has expressed firm reservations and has stated that implementation of the Act would lead to dual regulation of the microfinance market.

3. Which organizations have stated that “Long working hours” have resulted in 7.45 lakh deaths per year around the globe?

A) WB and IMF

B) WHO and ILO

C) UNICEF and UNESCO

D) UN and UNCTAD

  • In a joint research publication by the World Health Organization and the International Labour Organization, published in the Environment International journal, it is stated that Long working hours have killed close to 7.45 lakh people across the globe. Of them 3.98 lakh people died from stroke and 3.47 lakh died from heart disease. Also, it is found that work related disease burden is found to be more prominent in men.

4. Which state has targeted to bring one million hectares under the Direct Seeding of Rice, due to anticipated shortage of migrant labour?

A) Madhya Pradesh

B) Uttar Pradesh

C) Punjab

D) Assam

  • The Government of Punjab has targeted to bring one million hectares of farm land under Direct Seeding of Rice (DSR) technique, during this cropping year. Under this method, seeds are directly drilled into the field by a tractor–powered machine. This target has been envisioned, in anticipation of a huge shortfall in migrant labour due to COVID 19 second wave pandemic in the nation.

5. Which financial institution has provided a sum of Rs 1,236 crore to Assam for Rural Connectivity Projects?

A) World Bank

B) Asian Development Bank

C) State Bank of India

D) National Bank for Agriculture and Rural Development

  • The National Bank for Agriculture and Rural Development (NABARD) has extended financial assistance to the Government of Assam to the tune of Rs 1,236 crore in order to boost its rural connectivity. These funds have been lent by NABARD to the state out of its Rural Infrastructure Development Fund (RIDF) during the financial year 2020–21.

6. Which organization is developing the JUICE spacecraft?

A) ISRO

B) NASA

C) ESA

D) CASA

  • The European Space Agency (ESA), in association with Airbus Defence and Space is developing the “The Jupiter Icy Moons Explorer (JUICE)”. It is an interplanetary spacecraft which has a mission to study three of Jupiter’s moons, namely – Ganymede, Callisto, and Europa. The mission is set to be launched in June 2022. After an 88–month journey, the spacecraft would reach Jupiter in October 2029.

7. Cranes have been observed to return to which country, after a period of 300 years?

A) India

B) Ireland

C) USA

D) Australia

  • Wildlife experts have observed that common cranes have returned to Ireland for shelter and breeding, after a period of 300 years. This is believed to be a sign that our environment is improving. The breeding location is kept confidential to protect the cranes from unlawful hands.

8. With reference to biology, CD4 count is related to the diagnosis of which disease?

A) COVID

B) AIDS

C) Tuberculosis

D) Typhoid

  • In biology, CD4 is a glycoprotein found on the surface of immune cells. When a CD4 count is lower than 200 cell/mm3, a person will receive a diagnosis of AIDS. Each year, May 18 is celebrated as World AIDS vaccine day to acknowledge the efforts of thousands of scientists and health professionals, who are working on finding a vaccine against Human immunodeficiency virus (HIV).

9. Mongolian Kanjur is an important religious text of which religion?

A) Sikhism

B) Buddhism

C) Jainism

D) Hinduism

  • Mongolian Kanjur, the Buddhist text in 108 volumes is considered to be the most important religious text in Mongolia. A meeting of the Minister of State for Culture & Tourism (IC) Prahlad Singh Patel with the Mongolian Minister of Culture was held in virtual mode. Ministry of Culture is to complete reprinting of 100 sets of sacred Mongolian Kanjur by next year to distribute in the main Buddhist centers in Mongolia.

10. India’s first Agriculture export facilitation centre has been set up in which city?

A) Mumbai

B) Pune

C) Chennai

D) Cochin

  • The Mahratta Chamber of Commerce, Industry, and Agriculture (MCCIA) has partnered with NABARD to launch India’s first Agriculture export facilitation centre (AEFC) in Pune. It aims to boost agricultural exports from the region and adhere to global standards. It will also serve as the capacity–building platform for agri–food exports.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!