TnpscTnpsc Current Affairs

24th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

24th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 24th September 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

September Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

24th September 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. இந்தியாவில் சூரிய ஆற்றல் உற்பத்திப் பண்ணைகளை அமைத்த முதல் மின்னணு வணிக நிறுவனம் எது?

அ. வால்மார்ட்

ஆ. அமேசான்

இ. பிளிப்கார்ட்

ஈ. ஈபே

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. அமேசான்

  • அமேசான் நிறுவனம் தனது முதல் சூரிய ஆற்றல் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவில் இராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று புதிய சூரிய ஆற்றல் உற்பத்திப் பண்ணைகளை அமைப்பதன்மூலம் தொடங்கியுள்ளது. இப்பண்ணையின் ஒருங்கிணைந்த ஆற்றல் திறன் 420 MW ஆகும். 2025ஆம் ஆண்டுக்குள் அமேசான் தனது வணிகத்தில் 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியத் திட்டத்தில் 210–மெகாவாட் திட்டம் ‘ReNew Power’மூலம் உருவாக்கப்படும். 100–மெகாவாட் திட்டம் Amp எனர்ஜி இந்தியாவால் உருவாக்கப்பட உள்ளது. புரூக்ஃபீல்டின் 110–MW திட்டமும் இதிலடங்கும்.

2. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல இரட்டை செயல்பாட்டு திறனுடன்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை கொள்முதல் செய்வதற்காக கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது?

அ. டசால்ட் ஏவியேஷன்

ஆ. துருவ் ஏரோஸ்பேஸ்

இ. DRDO

ஈ. BAPL

விடை மற்றும் விளக்கம்

விடை: ஈ. BAPL

  • `1700 கோடி மதிப்பில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல இரட்டை செயல்பாட்டு திறனுடன்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையை கொள்முதல் செய்வதற்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்துடன் (BAPL) பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இரட்டை செயல்பாட்டு திறன்கொண்ட இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும். பிரம்மோ ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனம் என்பது இந்தியா–ரஷ்ய கூட்டுநிறுவனமாகும். நிலத்தில் செயல்படக்கூடியதாகவும், கப்பல்மீதான தாக்குதலை முறியடிக்கும் வகையிலும், இந்தப் புதிய வகை ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

3. தேசிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டை நடத்தும் மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. கோவா

இ. குஜராத்

ஈ. கேரளா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. குஜராத்

  • பிரதமர் நரேந்திர மோதி, குஜராத் மாநிலத்தின் ஏக்தா நகரத்தில் செப்.23 அன்று காணொளிமூலம் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டைத் தொடங்கிவைத்தார். செப்.23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள் மாநாட்டில், வாழ்க்கை, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் (மாசுகளைத் தணித்தல் மற்றும் காலநிலை தாக்கங்களுக்கு ஏற்ப பருவநிலை மாற்றம் குறித்த மாநில செயல்திட்டங்களை மேம்படுத்துதல்), பரிவேஷ் (ஒருங்கிணைந்த பசுமை அனுமதிகளுக்கான ஒற்றை சாளர அமைப்பு) ; வனமேலாண்மை; மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு; வனவுயிரிகள் மேலாண்மை; நெகிழி மற்றும் கழிவு மேலாண்மையை கடைப்பிடித்தல் ஆகிய தலைப்புகளுடன் ஆறு கருப்பொருள் அமர்வுகள் நடைபெறும்.

4. ரூபாய் வர்த்தகத்திற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அனுமதியைப் பெற்ற முதல் இந்திய வங்கி எது?

அ. பாரத வங்கி

ஆ. HDFC வங்கி

இ. UCO வங்கி

ஈ. பெடரல் வங்கி

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. UCO வங்கி

  • இந்தியப் பொதுத்துறை வங்கியான UCO வங்கி ரூபாய் வர்த்தகத்திற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்ற முதல் வங்கியாக உள்ளது. கொல்கத்தாவைச் சார்ந்த இவ்வங்கி, இந்திய ரூபாயில் வர்த்தக தீர்வைக் காண்பதற்காக ரஷ்யாவின் காஸ்ப்ரோம்பேங்கில் சிறப்பு வோஸ்ட்ரோ கணக்கைத் திறக்கவுள்ளது. கடந்த ஜூலை மாதம், இந்திய வங்கிகள் இந்திய நாணயத்தில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கும் முடிவை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்திய ரிசர்வ் வங்கியானது இந்தியாவிற்கும் இலங்கை மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இடையே வர்த்தக தீர்வுகளை அனுமதித்துள்ளது.

5. “The India Way: Strategies for an Uncertain World” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. நரேந்திர மோடி

ஆ. S ஜெய்சங்கர்

இ. அருண் ஜெட்லி

ஈ. இரகுராம் இராஜன்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. S ஜெய்சங்கர்

  • வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர் அண்மையில் குஜராத்தில் தனது, “The India Way: Strategies for an Uncertain World” என்ற நூலின் குஜராத்தி மொழி பதிப்பை வெளியிட்டார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூலின் அசல் பதிப்பு, கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர், இந்த நூலில், ‘உலகளாவிய ஒழுங்கு மாறும்போது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை எதை நோக்கி என்னவாக இருக்க வேண்டும்?’ என்ற கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்கிறார்.

6. கீழ்க்காணும் எந்த நகரத்தில் `3,800 கோடி மதிப்பிலான இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்?

அ. மைசூரு

ஆ. மங்களூரு

இ. புனே

ஈ. கொச்சின்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மங்களூரு

  • `3,800 கோடி மதிப்பிலான இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மங்களூருவில் அடிக்கல் நாட்டினார். புதிய மங்களூரு துறைமுக ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட கொள் கலன்கள் மற்றும் பிற சரக்குப் பெட்டகங்களை இயந்திரமயமாக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும், துறைமுகத்தால் மேற்கொள்ளப்பட்ட சுமார் `1,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட்மூலம் மேற்கொள்ளப்பட்ட இரண்டு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

7. ஹோமியோபதியின் பெருமைக்கான உலக நல உச்சிமாநாட்டை நடத்தும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. சிங்கப்பூர்

ஈ. சீனா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

  • ‘ஹோமியோபதியின் பெருமைக்கான உலக நல உச்சிமாநாட்டின்’ முதலாவது பதிப்பு துபாயில், “காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலால் ஏற்படும் நோய்கள்” என்ற தலைப்பில் நடந்தது. இந்த உச்சிமாநாடு, ஹோமியோபதி மருத்துவமுறை, மருந்துகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டது. இந்த உச்சி மாநாட்டில், நடுவண் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே உரையாற்றினார்.

8. ‘உயிரி–கிராமங்களை’ வெற்றிகரமாக அமைத்துள்ள இந்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. ஹிமாச்சல பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. திரிபுரா

ஈ. மேற்கு வங்காளம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. திரிபுரா

  • திரிபுரா மாநில அரசு, நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றம் தணிப்பு மற்றும் காலநிலை தழுவல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ஐந்து ‘உயிரி கிராமங்களை’ வெற்றிகரமாக அமைத்துள்ளது. இந்திய மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வரும் காலநிலை நடவடிக்கைகள் குறித்த சிறந்த நடைமுறைகளின் தொகுப்பின்படி, திரிபுராவில், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட ஐந்து ‘உயிரி–கிராமங்களின்’மூலம் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளன. இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக கடந்த 2018ஆம் ஆண்டில் திரிபுராவின் உயிரித்தொழில்நுட்ப இயக்குநரகத்தால், ‘Bio–Village’ என்ற கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அரவிந்த் சிதம்பரம் சார்ந்த விளையாட்டு எது?

அ. ஸ்குவாஷ்

ஆ. பூப்பந்து

இ. சதுரங்கம்

ஈ. டேபிள் டென்னிஸ்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. சதுரங்கம்

  • கிராண்ட்மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் அண்மையில் 22ஆவது துபாய் ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் ஆனார். ஏழு இந்தியர்கள் முதல் பத்து இடங்களைப் பிடித்தனர்; மேலும் R பிரக்னாநந்தா இரண்டாவது இடத்தை அபிஜீத் குப்தா, ஜெய்குமார் சம்மேட் ஷேட் மற்றும் S P சேதுராமன் உள்ளிட்ட ஐந்து பேருடன் பகிர்ந்துகொண்டார்.

10. NITI ஆயோகின் ஓர் அண்மைய அறிக்கையின்படி, போஷான் அபியான் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முதல் இடத்தைப் பிடித்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. மகாராஷ்டிரா

இ. இராஜஸ்தான்

ஈ. பஞ்சாப்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மகாராஷ்டிரா

  • “Preserving Progress on Nutrition in India: Poshan Abhiyan in Pandemic Times” என்ற தலைப்பில் NITI ஆயோக் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, போஷான் அபியான் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மகாராஷ்டிர மாநிலம் மாநிலங்களுள் முதலிடத்தைப் பிடித்தது. ஆந்திர பிரதேசம் இரண்டாவது இடத்திலும், குஜராத் மூன்றாவது இடத்திலும் உள்ளன. COVID காலத்தில் போஷானைச் செயல்படுத்த தேவையான 100% மனிதவள ஆட்சேர்ப்பில் ஆந்திர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு மொபைல் போன்கள் விநியோகம் செய்வதிலும் ஆந்திர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாட்டுநலப்பணி திட்ட விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர்

இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, 2020-21ஆம் ஆண்டுக்கான நாட்டுநலப்பணி திட்ட விருதுகளை வழங்கினார். 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr R ரமேசுக்கு, பல்கலைக்கழகம்/பிளஸ்டூ கவுன்சில் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது. யூனிட் திட்ட அலுவலர்கள் பிரிவில் மதுரை ஶ்ரீமீனாட்சி கலைக்கல்லூரிக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயசீலன், மதுரை மெப்கோ சிலீக் பொறியியல் கல்லூரியின் வரதராஜன் ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.

2. இணையவழியில் பட்டா மாறுதல்: முதல்வர் தொடக்கம்

பட்டா மாறுதலுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் முக ஸ்டாலின் தொடக்கிவைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நில உரிமையாளர்கள் பட்டாமாறுதலுக்கான விண்ணப்பங்களை பொதுச்சேவை மையங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பித்து, அவை இணையவழியில் பரிசீலிக்கப்படுகின்றன. பின்னர், பட்டா மாறுதலுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்போது, பொதுமக்களின் வசதிக்காக எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பட்டா மாறுதல் கோரி இணையவழியில் (www.tamilnilam.tn.gov.in/citizen) விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வட்டாட்சியர் அலுவலகங்கள், பொதுச்சேவை மையங்களுக்குச் செல்லவேண்டிய அவசியமிருக்காது. மேலும், நில உட்பிரிவுக்கான கட்டணம், செயலாக்கக் கட்டணங்களைச் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணையவழியிலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, பொதுமக்கள் பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச் சுவடி ஆகியவற்றை எங்கிருந்தும் எந்த நேரத்திலும் இணையவழிச் சேவைமூலம் கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனால், பொதுச்சேவை மையங்களுக்குச் செல்வதும், வட்ட அலுவலகங்களில் இடைத்தரகர்களால் பொதுமக்கள் அவதிப்படுவதும் தவிர்க்கப்படும்.

இணையவழியில் வரைபடங்கள்: நகரப்புலங்களுக்கான வரைபடங்கள் www.eservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதையும் இணையதளத்திலிருந்து கட்டணம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம். மனை அங்கீகாரம், வங்கிக்கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு வரைபடங்கள் மிகுந்த தேவையாக உள்ளன. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், இதற்காக பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் வருவது தவிர்க்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. ஊரகத் திறன் பயிற்சி: பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

ஊரகத் திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தரப்படுத்த, பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்துடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீனதயாள் உபாத்தியாய ஊரகத்திறன் பயிற்சித்திட்டமானது, 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட கிராமப்புற ஏழை, எளிய இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளித்து, அவர்களுக்கு நிரந்தர வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. அவர்களுக்கு மென்திறன் பயிற்சியளிப்பது மிகவும் முக்கியமாகும்.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் நோக்கத்துடன் உலகில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்தை தொழில்நுட்ப உதவி நிறுவனமாகக்கொண்டு செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.

24th September 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which is the first e–commerce company to set up solar farms in India?

A. Walmart

B. Amazon

C. Flipkart

D. ebay

Answer & Explanation

Answer: B. Amazon

  • Amazon announced its first solar project in India with three new solar farms in Rajasthan, with a combined energy capacity of 420 megawatts (MW). Amazon aims to use 100% renewable energy across its business by 2025. The Indian project includes a 210–MW project to be developed by ReNew Power, a 100–MW project to be developed by Amp Energy India, and a 110–MW project to be developed by Brookfield Renewable Partners.

2. Defence Ministry signs deal for dual role Surface–to–Surface BrahMos missile with which company?

A. Dassault Aviation

B. Dhruv Aerospace

C. DRDO

D. BAPL

Answer & Explanation

Answer: D. BAPL

  • Defence Ministry signed deal for dual role Surface–to–Surface BrahMos missile with BAPL (BrahMos Aerospace Pvt. Ltd). The additional dual –role (land and anti–ship) capable BrahMos missiles will be acquired at Rs 1,700 crore under ‘Buy–Indian’ category. BrahMos Aerospace (BAPL) is a joint venture between India and Russia.

3. Which state is the host of the ‘National Conference of Environment Ministers’?

A. Maharashtra

B. Goa

C. Gujarat

D. Kerala

Answer & Explanation

Answer: C. Gujarat

  • Prime Minister Narendra Modi inaugurated the National Conference of Environment Ministers in Ekta Nagar, Gujarat. The two–day conference will have six thematic sessions with topics focusing on LiFE, Combating Climate Change; PARIVESH –Single Window System for Integrated Green Clearances ; Forestry Management; Prevention and Control of Pollution; Wildlife Management ; Plastics and Waste Management.

4. Which is the first Indian bank to get Reserve Bank of India (RBI) approval for rupee trade?

A. State Bank of India

B. HDFC Bank

C. UCO Bank

D. Federal Bank

Answer & Explanation

Answer: C. UCO Bank

  • India’s Public sector lender UCO Bank is the first bank to receive the Reserve Bank of India’s (RBI’s) approval for rupee trade. The Kolkata–based bank will open a special vostro account with Gazprombank of Russia for trade settlement in Indian rupees. In July, RBI announced its decision to allow Indian banks to settle trade in Indian currency. RBI also allowed trade settlements between India and other countries, including Sri Lanka and Russia.

5. Who is the author of the book titled ‘The India Way: Strategies for an Uncertain World’?

A. Narendra Modi

B. S Jaishankar

C. Arun Jaitley

D. Raghuram Rajan

Answer & Explanation

Answer: B. S Jaishankar

  • External Affairs Minister S Jaishankar recently launched the Gujarati translation of his book, “The India Way: Strategies for an Uncertain World” in Gujarat. The original version of the book in English was launched in the year 2020. India’s External Affairs Minister S. Jaishankar seeks to address the question of ‘what should be the direction of India’s foreign policy as the global order changes?’ in the book.

6. Prime Minister Modi inaugurated mechanization and industrialization projects worth Rs 3,800 crores in which city?

A. Mysuru

B. Mangaluru

C. Pune

D. Kochin

Answer & Explanation

Answer: B. Mangaluru

  • Prime Minister Narendra Modi inaugurated and laid the foundation stone of mechanization and industrialization projects worth Rs 3,800 crores in Mangaluru. He inaugurated a project for mechanisation of containers and other cargo undertaken by the New Mangalore Port Authority, and laid foundation stone of projects worth around ₹1,000 crore undertaken by the port. He also inaugurated two projects undertaken by Mangalore Refinery and Petrochemicals Limited (MRPL).

7. Which country is the host of the ‘World Health Summit for Pride of Homoeopathy’?

A. India

B. UAE

C. Singapore

D. China

Answer & Explanation

Answer: B. UAE

  • The first edition of ‘World Health Summit for Pride of Homoeopathy’ was held in Dubai with the theme “Diseases caused by climate change and global warming”. The summit aimed to promote homoeopathic system of medicine, drugs, and practices. The summit was virtually addressed by Ashwini Kumar Choubey, Minister of State of Environment Forest & Climate change.

8. Which Indian state/UT has successfully set up ‘Bio–Villages’?

A. Himachal Pradesh

B. Assam

C. Tripura

D. West Bengal

Answer & Explanation

Answer: C. Tripura

  • Tripura government has successfully set up five ‘Bio–Villages’ for promoting sustainable development, climate change mitigation and climate adaption. As per the Compendium of Best Practice on Climate Action from Indian states, in Tripura, over 500 households have been benefited with the successful implementation in five ‘Bio–Villages’. The concept of ‘Bio–Village’ was introduced by the Directorate of Biotechnology, Tripura in 2018 for promoting organic farming.

9. Aravindh Chithambaram, who was seen in the news, plays which sports?

A. Squash

B. Badminton

C. Chess

D. Table Tennis

Answer & Explanation

Answer: C. Chess

  • Grandmaster Aravindh Chithambaram recently became champion in the 22nd Dubai Open chess tournament. Seven Indians finished in the top 10 while R Praggnanandhaa shared the second spot with five others including Abhijeet Gupta, Jaykumar Sammed Shete and S P Sethuraman.

10. Which state won the first rank in the implementation of Poshan Abhiyan scheme, as per a recent NITI Aayog Report?

A. Tamil Nadu

B. Maharashtra

C. Rajasthan

D. Punjab

Answer & Explanation

Answer: B. Maharashtra

  • Niti Aayog released a report titled ‘Preserving Progress on Nutrition in India: Poshan Abhiyan in Pandemic Times’. As per the report, Maharashtra won the top rank among states in the implementation of the Poshan Abhiyaan scheme. Andhra Pradesh came second and Gujarat is at the third rank. Andhra Pradesh is first in 100 per cent recruitment of human resources required for implementation of Poshan during Covid. It also tops in the distribution of mobile phones to Anganwadi workers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!