TnpscTnpsc Current Affairs

25th & 26th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

25th & 26th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th & 26th January 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

January Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. மூன்றாம் பாலினத்தவர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு எது?

அ) 2000

ஆ) 2005

இ) 2010

ஈ) 2020 

  • 3ஆம் பாலினத்தவர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019 ஆனது கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது.
  • மூன்றாம் பாலினத்தவரின் தனியுரிமை மற்றும் கண்ணி -யத்தைப் பாதுகாக்கும் வகையில் திருநம்பிகளுக்கும் திருநங்கைகளுக்கும் தனித்தனி இருப்பிட வசதிகளை ஏற்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சிறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. திருநங்கைகள் சட்டம், 2019’ஐக் கருத்தில் கொண்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தி -ன்படி, கடந்த 2020இல் நாடு முழுவதுமுள்ள சிறைகளில் 70 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

2. ‘பிராந்திய திட்ட விதிகள், 2021’ஐ அறிவித்த மாநிலம் எது?

அ) தமிழ்நாடு 

ஆ) கேரளா

இ) மணிப்பூர்

ஈ) ஆந்திர பிரதேசம்

  • தமிழ்நாடு அரசானது ‘மண்டல திட்டவிதிகள், 2021’ என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் 1.36 இலட்சம் ச.கிமீ பரப்பளவைக் கொண்ட 12 மண்டலங்களுக்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய விதிகளின்கீழ், அடுத்த 18 மாதங்களில் நிலம் மற்றும் கட்டட பயன்பாட்டு வரைபடங்களைத் தயாரிப்பதற்காக, தமிழ்நாடு அரசு ஒரு பிராந்திய திட்டமிடல் ஆணையத்தை அமைக்கும்.
  • பிராந்தியத்திட்டம் என்பது ஒரு இடை-தீர்வுத் திட்டமாகும், அதே சமயம் முதன்மைத் திட்டங்கள் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்கள் இதன் உள்-தீர்வுத் திட்டங்களாகும்.

3. 2022இல் ‘25ஆவது தேசிய இளையோர் விழா’வை நடத்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ) கோவா

ஆ) இலட்சத்தீவுகள்

இ) புதுச்சேரி 

ஈ) அஸ்ஸாம்

  • புதுச்சேரியில் 25ஆவது தேசிய இளையோர் விழாவை பிரதமர் மோடி காணொளிக்காட்சிமூலம் தொடங்கினார். புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள MSME அமைச்சகத்தின் தொழில்நுட்ப மையம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம், ஆகியவற்றையும் அவர் திறந்துவைத்தார்.

4. WEF தாவோஸ் நிகழ்ச்சி நிரல் 2022’இன்போது ‘P3 (Pro-Planet People) இயக்கத்தை அறிவித்த நாடு எது?

அ) அமெரிக்கா

ஆ) ரஷ்யா

இ) இந்தியா 

ஈ) UK

  • இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) தாவோஸ் நிகழ்ச்சி நிரல் 2022’இல் இந்தியாவின் காலநிலை மாற்றக் கடமைகளை அடிக் கோடிட்டுக் காட்ட “P3 (Pro-Planet People) இயக்கத்தை” அறிமுகப்படுத்தினார். உலகப் பொருளாதார மன்றத்தின் தாவோஸ் நிகழ்ச்சி நிரல் மெய்நிகர் உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முக்கியமான நிறுவனங்களின் தலைவர்களால் கால நிலை நடவடிக்கை, தொற்றுநோய் மீட்பு மற்றும் சமூக-பொருளாதார மீள்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது.

5. மூத்த அதிகாரியான விக்ரம் தேவ் தத், எந்த அமைப்பின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்?

அ) ஏர் இந்தியா 

ஆ) ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

இ) சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிட்

ஈ) பாரத் சஞ்சார் நிகம் லிட்

  • மூத்த அதிகாரி விக்ரம் தேவ் தத், ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். விக்ரம் தேவ் தத் AGMUT (அருணா -ச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம்) கேடரின் 1993-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
  • மேலும் தற்போது தில்லி அரசாங்கத்தில் முதன்மை செயலராக (சுற்றுலா) உள்ளார். பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, கூடுதல் செயலர் பதவிநிலை மற்றும் ஊதியக்கட்டில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

6. ‘இந்தியாவின் காலநிலை அபாயங்கள் மற்றும் பாதிப்பு அட்லஸை’ வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?

அ) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ) புவி அறிவியல் அமைச்சகம் 

இ) சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்

ஈ) வீட்டுவசதி & நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

  • இதன்வகையில் முதலாவதான ‘இந்தியாவின் காலநிலை அபாயங்கள் மற்றும் பாதிப்பு அட்லஸை’ மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இதன்படி, மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலத்தின் அண்டை மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டின் இராமநாதபுரம், புதுக் கோட்டை மற்றும் தஞ்சாவூரில் உள்ள சுந்தரவனங்கள் ஆகியவை சூறாவளி மற்றும் 8.5 முதல் 13.7 மீ உயரம் வரை எழும் புயல் அலைகளால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவையாக அறியப்பட்டுள்ளன.

7. தடுப்பூசி போடப்படாத நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட டென்னிஸ் ஆளுமை யார்?

அ) ரபேல் நடால்

ஆ) நோவக் ஜோகோவிச் 

இ) ரோஜர் பெடரர்

ஈ) டேனியல் மெட்வெடேவ்

  • தடுப்பூசி போட்டுக்கொள்ளாத டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் சவாலை நீதிபதிகள் நிராகரித்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவிலிருந்து அவர் நாடு கடத்தப்பட் -டார். ஆஸி. அரசு “உடல்நலம் மற்றும் நல்லொழுங்கு” அடிப்படையில் அவரது நுழைவு இசைவை ரத்து செய்தது.

8. இந்தியாவின் குற்றவியல் சட்டங்கள் பற்றிய விரிவான மதிப்பாய்வைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம் 

ஆ) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்

இ) சுரங்க அமைச்சகம்

ஈ) புவி அறிவியல் அமைச்சகம்

  • மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவின் குற்றவியல் சட்டங்களை “விரிவான மதிப்பாய்வு” செய்வதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
  • உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சியச்சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்காக இந்தியத் தலைமை நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைக்கோரினார். உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகி -கள், பார் கவுன்சில்கள் மற்றும் சட்டப் பல்கலைகளின் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

9. ‘2 Vs 2’ வேளாண் சந்தை அணுகல் சிக்கல்களை செயல்படுத்துவதற்காக, இந்தியா, எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?

அ) அமெரிக்கா 

ஆ) இஸ்ரேல்

இ) ரஷ்யா

ஈ) ஆஸ்திரேலியா

  • இந்திய உழவு மற்றும் உழவர்கள் நலத்துறை மற்றும் அமெரிக்க வேளாண்மைத் துறை ஆகியவை “2 Vs 2 வேளாண் சந்தை அணுகல்” சிக்கல்களைச் செயல்படுத்து -வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சமீபத்திய ஒப்பந்தத்தின்படி இந்திய மாம்பழங்கள் மற்றும் மாதுளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
  • இந்தியாவிற்கு செர்ரிகள், நொய் வைக்கோல், அமெரிக்க பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட்டது.

10. பிரதமருக்கான பாதுகாப்பு வீதிமீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்றம் நியமித்த விசாரணைக் குழுவிற்கு தலைமை தாங்குபவர் யார்?

அ) நீதிபதி இரஞ்சன் கோகாய்

ஆ) நீதிபதி இந்து மல்கோத்ரா 

இ) நீதிபதி P சதாசிவம்

ஈ) நீதிபதி K G பாலகிருஷ்ணன்

  • பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு வீதிமீறல்கள் குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்றம் அதன் முன்னாள் நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்தது.
  • இக்குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர், தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை இயக்குநர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரி & பஞ்சாப் காவல்துறையின் ஏடிஜிபி (பாதுகாப்பு) ஆகியோர் அடங்குவர். பாதுகாப்பு வீதிமீறல்களுக்கான காரணங்களை இந்தக் குழு ஆராய்ந்து, பிரதமர் மற்றும் அரசியலமைப்புச் செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பிற்கு பாதுகாப்புப்படை அவசியம் என்று பரிந்துரைக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 29 குழந்தைகளுக்கு பிரதமர் விருது

2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள் மின் எண்மம் (டிஜிட்டல் சான்றி -தழ்கள்) முறையில் நாடு முழுவதுமுள்ள 29 குழந்தைக
-ளுக்கு வழங்கப்பட்டன.

பிளாக்செயின் எனப்படும் இணையவழி ஆவண பரிமாற்ற தொழில்நுட்பத்தின்கீழ் முதன்முறையாக பிரதமர் மோடி சான்றிதழ்களை வழங்கினார்.

விருது பெற்ற 29 சிறார்களில் தமிழகத்தை சேர்ந்த இரு குழந்தைகளும் பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள் பெற்றனர்.

விருதுநகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி என சி விஷாலினி வெள்ளப் பேரிடர்களின்போது நீரில் மூழ்குவதைத் தடுக்கும் ஒரு தானியங்கி பல் செயல்பாட்டு உயிர் மீட்பு வெள்ளவீடு ஒன்றை கண்டுபிடித்ததற்காக கிடைத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது அஸ்வதா பிஜு இளம்பழங்கால ஆராய்ச்சியாளராகி, முதுகெலும்பிகள் அல்லது முள்ளந் தண்டுளிகள் சிற்றினங்கள் புதைபடிவ (தொல்லுயிர் எச்சம்) மாதிரிகளை சேகரித்து பாதுகாப்பதோ -டு கருத்தரங்குகள், காட்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக பிரதமரின் விருதை பெற்றார்.

புதுமை, சமூக சேவை, கல்வித்திறன், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் (6), வீரம் (3) ஆகிய பிரிவுகளில் 29 விருதுகள் பெற்ற நபர்களில் 14 சிறுமிகள் உள்ளனர். இவர்களுக்கு சான்றிதழுடன் `1 லட்சம் ரொக்கமும் இந்த சிறார்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

2. உணவு தரச் சான்றுகள் பெற்ற 314 கோயில்கள்:

தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் வழங்கப்படும் உணவு, பிரசாதங்கள் சிறந்த தரமுடையதாக இருப்பதாக 314 கோயில்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தரச்சான்றுகள் வழங்கப்பட்டு உள்ளன.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வ -ரர் கோயில், சென்னை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருமுல்லைவாயல் மாசிலாமணீசுவரர் கோயில், திருப்போரூர் கந்தசாமி கோயில், மாமல்லபுரம் சயன பெருமாள் கோயில், சென்னை அங்காள பரமேஸ்வரி கோயில், கங்காதீஸ்வரர் கோயில் ஆகியவை தரச்சான்று பெற்ற கோயில்களில் குறிப்பிடத்தக்கவை.

சான்று எதற்கு?: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 754 கோயில் உள்ளன. இவற்றில் பழனி, திருவரங்கம், திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு `76 கோடி செலவில் 754 கோயில்களிலும் நாளொன்றுக்கு 70,000 பக்தர்களுக்கு உணவு தரப்படுகிறது.

இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பா -ட்டு நிறுவனமானது, நாடு முழுவதும் உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் உணவு வகைகளை பரிசோதித்து தரச்சான்று வழங்கும் பணியைச் செய்கிறது. மேலும், மத வழிபாட்டுத் தலங்களில் தயாரிக்கப்படும் உணவுக்கும் சான்று அளிக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் 314 கோயில்களுக்கு உணவுக்கான தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

3. இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர்

இந்தியா – இஸ்ரேல் இடையேயான ராஜீய ரீதியிலான உறவு 30 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் நாஃப்டாலி பென்னட் இந்தியா வர உள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் தெரிவித்தார்.

இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக உறவு தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிப்பிடும் வகையில் இணையவழியில் நடைபெற்ற சிறப்பு இலச்சினை வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோனும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் சஞ்சீவ் சிங்லாவும் இணைந்து இந்த இலச்சினையை வெளியிட்டனர்.

வாராணசி, ஆமதாபாத் NIT’இன் இறுதி ஆண்டு மாணவர் நிகில் உருவாக்கிய இரு நாடுகளுக்கு இடையேயான 30 ஆண்டுகள் நல்லுறவை குறிப்பிடும் இலச்சினை இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டது.

4. கரீஃப் பருவத்தில் தமிழ்நாட்டில் 7 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: 1,20,231 விவசாயிகள் பயன்

கரீஃப் பருவத்தில் (23.01.2022 வரை) நாடு முழுவதும் 606.19 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 7,43,077 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் 1,20,231 தமிழக விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

2021-22ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் சுமுகமாக நடைபெற்று வருகிறது.

குஜராத், அஸ்ஸாம், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், தெலங்கானா, இராஜஸ்தான், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், திரிபுரா, பிகார், ஒடிஸா, மகாராஷ்ட்ரம், சத்தீஸ்கர், ஆந்திரம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையில் `1,18,812.56 கோடி மதிப்பிலான நெல் கொள்முதல்மூலம், இதுவரை, 77.00 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. ஐசிசி சிறந்த வீரர் ஷாஹின் ஷா அப்ரிடி, வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ‘சர் கேரிபீல்ட் சோபர்ஸ்’ விருதுக்கு ஷாஹின் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ‘ரேச்சல் ஹெஹோ பிளிண்ட்’ விருதுக்கு ஸ்மிருதி மந்தனா (இந்தியா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த வீரர்: ஷாஹின் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்):

‘சர் கேரிபீல்ட் சோபர்ஸ்’ விருது ஏற்படுத்தப்பட்டபின் முதன்முறையாக இந்த விருதைப் பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை ஷாஹின் அப்ரிடி பெற்றுள்ளார்.

சிறந்த வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா (இந்தியா):

சிறந்த வீராங்கனைக்கான ‘ரேச்சல் ஹெஹோ பிளிண்ட்’ விருதுக்கு இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

சிறந்த டெஸ்ட் வீரர்: ஜோ ரூட் (இங்கிலாந்து)

சிறந்த ஒருநாள் வீரர்: பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)

சிறந்த ஒருநாள் வீராங்கனை: லிஸே லில்லி (தென்னாப்பிரிக்கா)

இந்த விருதைப் பெறும் முதல் தென்னாப்பிரிக்க வீராங்கனை லிஸே ஆவார்.

வளரும் வீரர் விருது தென்னாப்பிரிக்காவின் யான்மேன் மலானுக்கும், வீராங்கனை விருது பாகிஸ்தானின் பாத்திமா சனாவுக்கும் கிடைத்துள்ளது.

சிறந்த நடுவர் விருது மரைஸ் எராஸ்மஸுக்கு கிடைத்துள்ளது.

6. விபின் ராவத், 127 பேருக்கு பத்ம விருதுகள்: முழு விவரம்

2022ஆம் ஆண்டுக்கான ‘பத்ம’ விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு ‘பத்ம விபூஷண்’ விருது உள்பட 128 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்பட் -டுள்ளன.

மறைந்த முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் கல்யாண் சிங்குக்கு ‘பத்ம விபூஷண்’ விருது, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாப் நபி ஆசாத், முன்னாள் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி, கூகுள் தலைமைச்செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, மைக்ரோசாப்ட் தலைமைச்செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்
-டோருக்கு ‘பத்ம பூஷண்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், சௌகார் ஜானகி உள்ளிட்டோருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கியம், கல்வி, சமூக சேவை, அரசியல், தொழில், விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று ‘பத்ம’ விருதுகளை அறிவித்து வருகிறது.

நடப்பாண்டில் 128 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 4 ‘பத்ம விபூஷண்’ விருதுகளும் 17 ‘பத்ம பூஷண்’ விருதுகளும், 107 ‘பத்மஸ்ரீ’ விருதுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. 2 விருதுகளை இருவர் பகிர்ந்துகொள்கிறார்கள்.

விருது பெறுவோரில் 34 பேர் பெண்கள். 13 பேருக்கு மறைவுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. 10 பேர் வெளிநாட்டுப் பிரிவில் விருது பெறுகிறார்கள். ‘பத்ம’ விருதுகள் வழங்கும் விழா, வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது.

பத்ம விபூஷண் விருது பெறுவோர் (4)

1. பிரபா ஆத்ரே- கலை- மகாராஷ்டிரம்

2. ராதேஷ்யாம் கெம்கா- இலக்கியம், கல்வி- உத்தர பிரதேசம்

3. விபின் ராவத்- ஆட்சிப் பணி- உத்தரகண்ட்

4. கல்யாண் சிங்- அரசியல்- உத்தர பிரதேசம்

பத்ம பூஷண் விருது பெறுவோர் (17)

1. குலாம் நபி ஆசாத்- அரசியல்- ஜம்மு-காஷ்மீர்

2. விக்டர் பானர்ஜி- கலை- மேற்கு வங்கம்

3. புத்ததேவ் பட்டாச்சார்ஜி- அரசியல்- மேற்கு வங்கம்

4. N சந்திரசேகரன், TATA குழுமத்தலைவர் – மகாராடிரா

5. கிருஷ்ணா எல்லா, சுசித்ரா எல்லா, பாரத் பயோடெக் நிறுவனம்- தொழில்- தெலங்கானா

6. ராஜீவ் மெஹரிஷி, முன்னாள் சிஏஜி- ஆட்சிப் பணி- ராஜஸ்தான்

7. சத்யா நாதெள்ளா, மைக்ரோசாப்ட் சிஇஓ- தொழில்- அமெரிக்கா

8. சுந்தர் பிச்சை, கூகுள் சிஇஓ- தொழில்- அமெரிக்கா

9. சைரஸ் பூனாவாலா, சீரம் நிறுவனம்- தொழில்- மகாராஷ்டிரம் உள்ளிட்ட 17 பேர்

பத்மஸ்ரீ விருது பெறுவோர் (107)

1. சிற்பி பாலசுப்பிரமணியம்- இலக்கியம், கல்வி- தமிழ்நாடு

2. S பல்லேஷ் பஜந்திரி- கலை- தமிழ்நாடு

3. S தாமோதரன்- சமூக சேவை- தமிழ்நாடு

4. சௌகார் ஜானகி- கலை- தமிழ்நாடு

5. R முத்துக்கண்ணம்மாள்-கலை-தமிழ்நாடு

6. A K C நடராஜன்- கலை- தமிழ்நாடு

7. V சேஷையா- மருத்துவம்- தமிழ்நாடு

8. நீரஜ் சோப்ரா- விளையாட்டு- ஹரியாணா

9. சங்கரநாராயண மேனன் சுண்டயில்- விளையாட்டு- கேரளம்

10. சோனு நிகம்- கலை- மகாராஷ்டிரம் உள்ளிட்ட 107 பேர்.

தமிழக பத்ம விருதாளர்கள்…

N சந்திரசேகரன் (பத்ம பூஷண்)

TATA சன்ஸ் குழுமத்தின் தலைவரான N சந்திரசேகரன் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் பிறந்தவர்.

1987’இல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தி -ல் சேர்ந்த அவர், 2009’இல் அதன் தலைமைச் செயல் இயக்குநராக உயர்ந்தார். தற்போது டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ளார். தற்போது மும்பையில் வசிக்கிறார்.

சிற்பி பாலசுப்பிரமணியம் (பத்மஸ்ரீ)

கோவை மாவட்டம், ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர். மொழிபெயர்ப்புக்காகவும் (2001-அக்கினிசாட்சி), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003- ஒரு கிராமத்து நதி) இரண்டு முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

சௌகார் ஜானகி (பத்மஸ்ரீ)

N T ராமாராவ் நடித்த “சௌகார்” என்ற தெலுங்கு படத்தில் 19ஆவது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதை அடுத்து, “சௌகார் ஜானகி” ஆனார்.

டாக்டர் வி சேஷய்யா (பத்மஸ்ரீ)

கடந்த 1957ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் MBBS பயின்ற டாக்டர் வி சேஷய்யா, அதன் பின்னர் இந்திய இராணுவத்தில் மருத்துவ சேவை ஆற்றினார்.

சென்னை மருத்துவக்கல்லூரியில் உதவிப்பேராசிரியராக இருந்த டாக்டர் வி சேஷய்யா, சர்க்கரை நோய் துறையை 1978’இல் தொடங்கினார்.

டாக்டர் வி சேஷய்யாவின் பிறந்தநாளான மார்ச் 10ஆம் தேதி தேசிய பேறுகால சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

A K C நடராஜன் (பத்மஸ்ரீ)

திருச்சியைச் சேர்ந்த கிளாரினெட் இசைக்கலைஞர் AKC நடராஜனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று இசைக் கருவிகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்.

R முத்துக்கண்ணம்மாள் (பத்மஸ்ரீ)

திருச்சி அருகே உள்ள விராலிமலையில் அமைந்துள்ள சதிர் நடனக்குடும்பத்தைச்சேர்ந்த R முத்துக்கண்ணம்மா (82), தனது எட்டு வயது முதல் நடனக் கலையை பயின்று -ள்ளார். சதிர் நடனக்கலையைப் பயிற்றுவித்து வருகிறார்.

S பல்லேஷ் பஜந்திரி (பத்மஸ்ரீ)

கலைப் பிரிவில் ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ள பல்லேஷ் பஜந்திரி, ஷெனாய் இசைக் கலைஞராவார். ராஞ்சனா உள்ளிட்ட பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் அவர் ஷெனாய் இசைத்துள்ளார்.

7. சிறப்பாக பணிபுரிந்ததற்காக தமிழகத்தைச் சேர்ந்த 20 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் விருது: செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் வழங்கப்படுகிறது

சிறப்பாக பணிபுரிந்த தமிழ்நாட்டு காவல்துறையினர் 20 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படுகிறது.

காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு நாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் விருது பெற தமிழக காவல்துறை அதிகாரிகள் 20 பேர் தேர்வாகி உள்ளனர்.

தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவர் காவல் விருதுகள் சென்னை தலைமையிட ADGP வெங்கடராமன், தஞ்சாவூர் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் சிவனருள் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

பாராட்டத்தக்க பணிக்கான குடியரசுத்தலைவர் விருதுகள் தமிழக காவல்துறையில் 18 பேருக்கு வழங்கப்படுகின்றன.

8. இரயில்வே பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளருக்கு உயரிய விருது

குடியரசு தினத்தையொட்டி, இந்திய காவல்துறையின் உயரிய பதக்கம் தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தின் இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) உதவி ஆய்வாளர் K M சுனில்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

K M சுனில்குமார், இரயில்வே பாதுகாப்புப் படையில் கடந்த 1996ஆம் ஆண்டு சேர்ந்தார். இவர், பல்வேறு வழக்குகளை திறம்பட விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளார். 2018ஆம் ஆண்டில், ஹவாலா வழக்கில் `3 கோடியே 44 லட்சத்து 54,500 ரொக்கத்தை பறிமுதல் செய்ததற்காக, இவரை கேரளகாவல்துறை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

சுனில் குமாரின் சிறப்பான பணியைப் பாராட்டி, இந்திய காவல்துறையின் உயரிய பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

8. வீரதீரச் செயல்களுக்கான குடியரசுத்தலைவர் பதக்கம்: 939 பேருக்கு அறிவிப்பு

குடியரசு நாளையொட்டி, வீரதீரச்செயல்களைப் புரிந்ததற்காக, காவல்துறையைச் சேர்ந்த 939 பேர் குடியரசுத்தலைவரின் பதக்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

நாடு முழுவதும் 939 பேர் காவல்துறையின் சிறந்த சேவைக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில், வீரதீரச்செயலுக்கான காவலர் பதக்கத்துக்கு 189 பேரும், தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் காவலர் பதக்கத்துக்கு 88 பேரும், தகுதிமிக்க சேவைக்கான காவலர் பதக்கத்துக்கு 662 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வீரதீரச் செயலுக்கான பதக்கம் பெறும் 189 பேரில், 134 பேர் ஜம்மு-காஷ்மீரில் வீரச்செயல் புரிந்தமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீரச்செயல் புரிந்தமைக்காக 47 பேருக்கும், வடகிழக்கு பிராந்தியத்தில் வீரச்செயல் புரிந்தமைக்காக ஒருவருக்கும் இந்தப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

பதக்கம் பெறுவோரில் 115 பேர் ஜம்மு காஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். 30 பேர் மத்திய ரிசர்வ் காவல்படையையும் (CRPF), 3 பேர் இந்திய-திபெத்திய எல்லைக்காவல்படையையும், 2 பேர் எல்லைப்பாதுகாப்புப் படையையும், 3 பேர் சசஸ்திர சீமா பல் படையையும், 10 பேர் சத்தீஸ்கர் காவல்துறையையும், 9 பேர் ஒடிஸா காவல்துறையையும், 7 பேர் மகாராஷ்டிர காவல் துறையையும், எஞ்சியவர்கள் பிறமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

சிறைத் துறையினருக்கு சேவைப் பதக்கம்:

சிறைத்துறையினருக்கான சீர்திருத்த சேவைப் பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைசிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவரின் சீர்திருத்த சேவைப் பதக்கம் 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறைத்துறையினர் 37 பேர், தகுதிமிக்க சேவையாற்றியதற்கான சீர்திருத்த சேவைப்பதக்கம்பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களின் விவரம்:

டி பரணிதரன் – உதவி ஜெய்லர், வி பிரியா – உதவி ஜெய்லர், கே பாஸ்கர் – கிரேடு 1 வார்டர்.

6 வீரர்களுக்கு சௌர்ய சக்ரா விருது

இந்திய ராணுவம், அஸ்ஸôம் ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான சௌர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடியரசு தினத்தையொட்டி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்கள், அஸ்ஸôம் ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த ஒரு வீரர் என மொத்தம் 6 பேருக்கு சௌர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள 5 ராணுவ வீரர்களான நாயப் சுபேதார் ஸ்ரீஜித், ஹவில்தார்கள் அனில் குமார் தோமர், காஷிராய் பம்மன்னள்ளி, பிங்கு குமார், சிப்பாய் மாருப்ரோலு ஜஸ்வந்த் குமார் ரெட்டி ஆகியோர் பயங்கரவாதிகளுடனான மோதலின்போது வீரமரணம் அடைந்தனர். இதுதவிர 4 வீரர்களுக்கு உத்தம் யுத்த சேவை விருது, 10 வீரர்களுக்கு யுத்த சேவை விருது, 84 பேருக்கு சேனை விருது (தீரச்செயல்), 40 பேருக்கு சேனை விருது (சிறப்பான சேவை) அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9. சிறந்த தேர்தல் நடைமுறை: 8 தமிழகம், புதுச்சேரி அதிகாரிகளுக்கு தேசிய விருதுகள்

2021ஆம் ஆண்டு தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முறையாக நடத்தி வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டது, தேர்தல் முறைகேடுகளைத் தடுத்தது உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 8 தமிழக, புதுச்சேரி தேர்தல் அதிகாரிகளுக்கு 12ஆவது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஐந்து விதமான பிரிவுகளில் 23 பேருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய விருதுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் முன்னிலையில் இந்த விருதுகளை மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தில்லியில் செவ்வாய்க்கிழமை வழங்கினார். இதில் கடந்தாண்டு 2021 -இல் தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு தரப்பினருக்கு நடப்பு ஆண்டின் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த மாநில விருதுகள்: சிறப்பாக செயல்படும் மாநில விருதுகள் பிரிவில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிற்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சுதந்திரமாகவும் நியாயமான முறையில் தேர்தலை சுமூகமாக நடத்த தகவல் தொழில்நுட்ப முயற்சிகள், பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பிற தொடர்புடைய அம்சங்களுக்காக இவ்விருது சத்ய பிரத சாகுவிற்கு வழங்கப்பட்டது.

இதே 2021ஆம் ஆண்டில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொண்ட அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நிதின் காடேவிற்கு சிறந்த மாநிலங்களுக்கான விருது கொடுக்கப்பட்டது.

சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகளின் பொதுப்பிரிவில் 10 விருதுகள் வழங்கப்பட இதில் மூன்று விருதுகள் தமிழக, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பெற்றனர். இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வி.விஷ்ணு, தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் “வாக்குச் சாவடி வழிகாட்டி” என்கிற செயலி மூலம் சமூக ஊடகங்களின் போலிச் செய்திகள், வேட்பாளர்களின் செலவுகள் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக கண்காணிக்கப்பட அவர் இந்த விருதை பெற்றார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்: இதேமாதிரி வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு புதுமையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியமைக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் Dr கே செந்தில் ராஜ்க்கும் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருது கிடைத்தது. அவர் மத்திய சட்ட அமைச்சரிடமிருந்து இவ்விருதை பெற்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய், உள்ளாட்சி, காவல் துறை உள்ளிட்ட முழு நிர்வாகத்தையும் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ஈடுத்தப்பட்டது.

சுமார் 1 லட்சம் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு தபால் வழியாக கடிதம் எழுதி கட்டாயமாக வாக்களிக்க வேண்டும், அதுவும் வோட்டுக்கு பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் போன்றவைகளை கடிதத்தின் வாயிலாக மாணவர்கள் தெரிவித்தனர்.

பிரபலமான முத்து குளியல், கல்லூரி மாணவர்கள் ஆகியவை மூலமாக வாக்களிப்பது குறித்த விடியோ உருவாக்கப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது. இதற்காக இந்த மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி என்கிற முறையில் டாக்டர் செந்தில் ராஜ் விருதை பெற்றார்.

மேலும் புதுச்சேரி தேர்தலில் காரைக்கால் பகுதியில் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளர் நிகரிகா பட், தமிழகம் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த வருமான வரி புலனாய்வுத் துறை இயக்குநர் ஜெனரல் பிரவீண் குமார், கூடுதல் இயக்குநர் பி எஸ் சிவசங்கரன் ஆகியோர் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களது செலவினங்களை கண்காணித்து 83 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு `103 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை கைப்பற்றியதற்காக விருதுகளை பெற்றனர்.

இதே மாதிரி அம்பாச முத்திரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அதிகாரியும் சேரன்மாதேவி துணை ஆட்சியருமான பிரதிக் தயாள், அதிக வாக்குபதிவு செய்த புதுச் சேரி மாநில துணை தலைமை தேர்தல் அதிகாரி பி தில்லைவேல் ஆகியோர் சிறந்த தேர்தல் நடைமுறைக்கா -ன தேசிய விருதைப் பெற்றனர்.

10. ஹிமாசல பிரதேசம் தினம்

யூனியன் பிரதேசமாக இருந்த ஹிமாசல பிரதேசம் கடந்த 1971ஆம் ஆண்டு ஜன.25ஆம் தேதி நாட்டின் 18ஆவது மாநிலமாக உருவெடுத்தது. அந்தத் தினமே ஹிமாசல பிரதேச தினமாக கொண்டாடப்படுகிறது.

11. சுனாமி தாக்கிய டோங்கா தீவுக்கு இந்தியா `1.50 கோடி நிதியுதவி

சுனாமி தாக்கிய டோங்கா தீவுக்கு உடனடி நிவாரணமாக இந்தியா சார்பில் $2 லட்சம் டாலர்கள் (சுமார் `1.50 கோடி) நிதியுதவி வழங்கப்படுகிறது.

கடந்த ஜன.15ஆம் தேதி தென் பசிபிக் தீவுகளில் ஒன்றான டோங்கா அருகே கடலுக்கு அடியில் எரிமலை வெடித்தது. அதனைத்தொடர்ந்து டோங்காவில் ஆழிப்பேரலைத் தாக்கியது. இந்தப் பேரிடரில் 3 பேர் பலியாகினர். அந்தத் தீவின் மொத்த மக்கள்தொகையில் 5இல் 4 பங்கு பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட் -ட அறிக்கையில், “இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பின்கீழ் ‘நெருங்கிய நட்பு நாடு’ என்ற அடிப்படையிலும், இந்தியா உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த உதவி டோங்காவுக்கு வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 9%ஆக குறைத்தது IMF

சர்வதேச செலாவணி நிதியம் (IMF), நடப்பு நிதியாண்டுக் -கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 9 சதவீதமாக குறைத்துள்ளது.

இதுகுறித்து அந்நிதியத்தின் உலகப் பொருளாதார ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிய வகை கரோனா தீநுண்மி வேகமாக பரவி வருவது வர்த்தக நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைக்கருத்தில்கொள்ளும்போது நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% அளவுக்கே இருக்கும் என தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீதமாகவும், ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான 2023ஆம் நிதியாண்டில் 7.1 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சாதகமற்ற நிலவரங்களையடுத்து தற்போது இம்மதிப்பீடு குறைக்கப் -பட்டுள்ளது.

கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதா -ரம் 7.3% பின்னடைவைக்கண்டது என அவ்வறிக்கையி -ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய புள்ளியியல் அலுவலகம் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி மதிப்பீட்டில் இது 9.5 சதவீதமாக இருக்கும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், IMF மதிப்பீடு அதைவிட குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13. வாக்களிப்பதை கட்டாயமாக்க 86% இந்தியர்கள் விருப்பம்: ஆய்வில் தகவல்

12ஆம் தேசிய வாக்காளர் நாளையொட்டி வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று 86 சதவீத இந்தியர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது.

தேர்தல் ஆணையம் கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி நிறுவப்பட்டது. கடந்த 2011 முதல் இந்த நாள் தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. புதிய மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்களைப் பதிவு செய்ய இது ஊக்கமளிக்கிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் நான்கு லட்சம் பேரிடம் பப்ளிக் ஆப் என்ற சமூக வலைதளம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி நாட்டின் தற்போதைய வாக்குப்பதிவு முறை மீது 80 சதவீதம் பேர் நம்பிக்கையை தெரிவித்தனர்.

“வாக்களிப்பது எனன்ற கடமையானது சமூக வளர்ச்சிக்கு இந்தியக் குடிமக்களின் முக்கியமான பங்களிப்பாகும். வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டுமா என்ற கேளவிக்கு 86 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்தனர்” என்று இந்த ஆய்வு கூறுகிறது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 சதவீதம் பேர் 30 வயதுக்கும் கீழ் உள்ளவர்களாவர். எதை அடிப்படையாக வைத்து வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு களத்தில் உள்ள வேட்பாளர் கடந்த முறை எவ்வாறு செயல்பட்டார் என்பதை அடிப்படையாக வைத்து வாக்களிப்போம் என்று 34 சதவீதம் பேர் பதிலளித்தனர்.

அனைத்து வேட்பாளர்களையும் விரிவாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் வாக்களிப்போம் என்று 31 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த செல்வாக்கை வைத்து வாக்களிப்பதாக 4.96 சதவீதம் பேரும் வேட்பாளர்களின் அரசியல் கட்சியை வைத்து வாக்களிப்பதாக 11.92 பேரும் தெரிவித்தனர்.

மக்கள் வாக்களிக்கத் தவறுவது ஏன் என்பது குறித்து இந்த ஆய்வில் கேட்கப்பட்டது. அதற்கு வாக்குப்பதிவின்போது உள்ளூரில் இல்லாமல் மற்றொரு நகரில் இருப்பதுதான் முக்கிய காரணம் என்று 30.04 சதவீதம் பேர் தெரிவித்தனர். எனினும் 56.3 சதவீதம் பேர் தாங்கள் வாக்களிக்கத் தவறியதே இல்லை என்று குறிப்பிட்டனர்.

கடந்த காலங்களில் வாக்களிக்காமல் இருந்ததற்கு தேர்தல் குறித்த தகவல் இல்லாதது (5.22 சதவீதம்), எந்தக் கட்சியையும் ஆதரிக்காதது (7.19), அக்கறை செலுத்தாதது (1.27) போன்ற காரணங்களையும் ஆய்வில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 79.5 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது வாக்களித்திருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

14. ஜஜாரியாவுக்கு பத்ம பூஷண்; நீரஜுக்கு பத்ம ஸ்ரீ

பாரா ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு ‘பத்ம பூஷண்’ விருதும், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இதில் ‘பத்ம ஸ்ரீ’ விருதுக்கு நீரஜ் சோப்ரா உள்பட 8 பேர் தேர்வாகியுள்ளனர்.

2004 (ஏதென்ஸ்), 2016 (ரியோ) ஆகிய பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜரியா, கடந்த ஆண்டு நடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார். மறுபுறம், நீரஜ் சோப்ராவோ டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்து, போட்டியின் வரலாற்றில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

நீரஜ் சோப்ராவோடு, பாரா துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா, பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத், பாரா ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில், தற்காப்புக் கலையான ‘கலரிப்பயட்டு’ ஜாம்பவான் சங்கரநாராயண மேனன் சுண்டயில், முன்னாள் சர்வதேச தற்காப்புக்கலை சாம்பியன் பைசல் அலி தார், இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் பிரம்மானந்த் சங்க்வல்கர், ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா ஆகியோரும் ‘பத்ம ஸ்ரீ’ விருது பெறுகின்றனர்.

15. T20 தரவரிசை: மீண்டும் முதலிடத்தில் ஷபாலி வர்மா

மகளிர் T20 கிரிக்கெட்டில் ICC தரவரிசையில் பேட்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஷபாலி வர்மா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

ICC வெளியிட்ட புதிய தரவரிசையின்படி, ஷபாலி ஓரிடம் முன்னேறி முதலிடத்தைப் பிடிக்க, ஸ்மிருதி மந்தனா ஓர் இடம் சறுக்கி 4ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பெத் மூனி மற்றும் மெக் லேனிங் ஆகியோர் முறையே 2, 3ஆவது இடங்களில் உள்ளனர்.

பௌலர்கள் பிரிவில் இந்தியாவின் தீப்தி சர்மா ஓரிடம் ஏற்றங்கண்டு 4ஆவது இடத்தை எட்டியிருக்கிறார். முதல் 3 இடங்களில் மாற்றமின்றி இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன், சாரா கிளென், தென்னாப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோர் தக்கவைத்துக்கொண்டு உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள் பிரிவிலும் தீப்தி சர்மா ஓரிடம் முன்னே -றி 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். நியூஸிலாந்தின் சோபி டிவைன், இங்கிலாந்தின் நேட் ஸ்கிவர் ஆகியோர் முதலிரு இடங்களில் தொடர்கின்றனர்.

16. 15 இலட்சம் கிலோமீட்டர் தொலைவு சென்று இலக்கை அடைந்தது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA அனுப்பியுள்ள உலகின் மிகப்பெரிய ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி செயற்கைக்கோள் அதன் இலக்கை அடைந்தது.

பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வுசெய்வதற்காக ‘ஜேம்ஸ் வெப்’ தொலை நோக்கியை NASA உருவாக்கியது. 10 பில்லியன் டாலர் (சுமார் `74,000 கோடி) மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட இத் தொலைநோக்கி கடந்த டிசம்பர்.25ஆம் தேதி ஏவுகலம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், பூமியிலிருந்து 15 இலட்சம் கிலோமீட்டர் தொலைவைக் கடந்து அதன் இறுதி சுற்றுவட்டப் பாதையை ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி அடைந்தது. ‘L2’ என்ற சுற்றுவட்டப் பாதையில் அது சுற்றிவரும்.

ஆரம்பகால பிரபஞ்சத்தின் இரகசியத்தை இந்தத் தொலை நோக்கி வெளிக்கொண்டுவரும் என நம்பும் அறிவியலாள -ர்களுக்கு இது மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. ஜூலையிலிருந்து ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கியின் தரவுகள் கிடைக்கக்கூடும் என NASA தெரிவித்துள்ளது.

17. சத்தியமங்கல புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது

உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை இருமடங்குக்கும் மேல் உயர்ந்ததற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருதான ‘TS2’ என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.

நீலகிரி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் 1,455 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சத்தியமங்கலம் வனவுயிரிகள் சரணாலயம் 2013 டிச.1ஆம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, சுமார் 30 புலிகள் இருந்ததாக அப்போதைய கணக்கெடுப்பில் தெரியவந்தது.

2013ஆம் ஆண்டு முப்பது புலிகளாக இருந்த காப்பகத்தில் தற்போது 80 புலிகள் உள்ளது தெரியவந்துள்ளது.

உலக அளவில் புலிகளை பாதுகாப்பதற்கு ரஷியா, சீனா, இந்தோனேசியா, வங்கதேசம் உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள கன்சர்வேஷன் & டைகர் ஸ்டான்டர்டு, வைல்டு லைப் கன்சர்வேஷன் ஆப் சொசைட்டி, உலகளாவிய நிதியகம் என 13 அமைப்புகள் கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டமைப்பு 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தும் நோக்கில் 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டில் இருமடங்காக உயர்த்திய நாட்டுக்கு ‘TS2’ எனும் சர்வதேச விருது வழங்கப்படும் என அந்தக் கூட்டமைப்பு அறிவித்தது.

இதன்படி, சர்வதேச அளவில் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இருமடங்குக்கும்மேல் உயர்ந்ததற்காக ‘TS2’ என்ற விருது முதல் பரிசாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு வழங்கப்பட்டது. 2ஆவது பரிசு நேபாளத்தில் உள்ள பர்தியா தேசியப்பூங்காவுக்கு வழங்கப்பட்டது.

18. சேலம் வனப்பகுதிகளில் புதிய வகை பச்சைப் புறா, பட்டாம்பூச்சி இனம்

சேலம் மாவட்டத்தில் புதிய வகை செம்மஞ்சள் மார்பு பச்சைப்புறா, ‘கொக்கிகுறி வெள்ளையன்’ என்ற பட்டாம்பூச்சி இனம் கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் காப்புக்காடுகள் 115494.5 ஹெக்டேர் பரப்பளவும் மற்றும் காப்புநிலங்கள் 9268.420 ஹெக்டேர் பரப்பளவும் என மொத்தம் 124762.9 ஹெக்டேர் பரப்பளவி -ல் வனங்கள் உள்ளன.

இக்காப்புக் காடுகளில் யானை, காட்டு மாடு, கரடி, மான், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, குரங்குகள், மலைப் பாம்பு, மயில் உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள், பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.

சேலம் வன மண்டலம் – சேலம் வனக்கோட்டத்துக்கு உள்பட்ட சேர்வராயன் தெற்கு வனச்சரகம், சேர்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, கல்வராயன் ஆகிய 9 வனச்சரகங்களை உள்ளடக்கியதாகும்.

கணக்கெடுப்புப் பணி…

இந்த வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடு, காப்பு நில வனப்பகுதியில் சுமார் 40 வனப்பணியாளர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் 83 நபர்கள் அடங்கிய தன்னார்வலர்க -ள் ஆகியோர் 16 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கடந்த 2021, பிப்.17 முதல் பிப்.19 வரை மூன்று நாள்கள் 2021ஆம் ஆண்டுக்கான பறவைகள், பட்டாம்பூச்சிகளைக் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்ட வனங்களில் 225 வகையான பறவை இனங்கள் உள்ளன. இப்பறவைகள் கணக்கெடுப்பின் போது சேலம் மாவட்டத்தை வழியாகக்கொண்ட 175 வகையான இனங்களும், வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் வாழும் 49 இனங்களும் மற்றும் பொதுவாக தெற்காசிய நாடுகளில் காணப்படும் (செம் மஞ்சள்மார்பு பச்சைப்புறா) என்ற புதிய வகை பறவை இனமும் கண்டறியப்பட்டன.

செம்மஞ்சள்மார்பு பச்சைப்புறா பறவை இனமானது பழ வகைகளை உண்ணக்கூடியது; ஜோடியாகவும், சிறுசிறு கூட்டங்களாகவும் வாழும் குணமுடையது.

இவை அமைதியாகவும், மரங்களில் மெதுவாக நகர்ந்து இரைதேடும் பழக்கமுடையவை. சேர்வராயன் மலை அடிவாரப்பகுதிகளில் இப்பறவை தென்பட்டுள்ளது.

பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு:

பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பில் 147 பட்டாம்பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டன. இதில், சேலம் மாவட்டத்தில் வாழும் 146 இனங்கள் மற்றும் இந்தியா (இமயமலை), சீனா, நேபாளம், இந்தோனேசியா, பாகிஸ்தான், மியான்மர், சிக்கிம், பூடான் ஆகிய நாடுகளில் வாழும் இனமான ‘கொக்கிக்குறி வெள்ளையன்’ என்ற புதிய வகை பட்டாம்பூச்சியும் கண்டறியப்பட்டன.

1. The Transgender Persons (Protection of Rights) Act came into effect from which year?

A) 2000

B) 2005

C) 2010

D) 2020 

  • The Transgender Persons (Protection of Rights) Act, 2019 came into effect from January 2020. The Ministry of Home Affairs (MHA) has asked prison authorities to make separate facilities for trans men and trans women to preserve the right to privacy and dignity of the inmates.
  • The guidelines are released considering the Transgender Persons Act, 2019. According to a National Crime Records Bureau, there were 70 transgender prisoners in jails across the country in 2020.

2. Which state government notified the ‘Regional Plan Rules, 2021’?

A) Tamil Nadu 

B) Kerala

C) Manipur

D) Andhra Pradesh

  • The state government of Tamil Nadu notified the ‘Regional Plan Rules, 2021’. The rules are notified for preparing plans for 12 regions covering 1.36 lakh sq km in the State. Under the new rules, the State will constitute a regional planning authority to prepare land and building use maps over the next 18 months.
  • The regional plan is an inter–settlement plan, while master plans and detailed development plans are intra–settlement plans.

3. Which state/UT played host to the ‘25th National Youth Festival’ in 2022?

A) Goa

B) Lakshadweep

C) Puducherry 

D) Assam

  • Prime Minister Narendra Modi inaugurated the 25th National Youth Festival in Puducherry via video conference. The Prime Minister also inaugurated a technology centre of the MSME Ministry and Perunthalaivar Kamarajar Manimandapam, an auditorium with an open–air theatre in Puducherry, to be used for educational purposes.

4. Which country proposed ‘P3 (Pro–Planet People) movement’ during the WEF Davos Agenda 2022?

A) USA

B) Russia

C) India 

D) UK

  • Indian Prime Minister Narendra Modi introduced the “P3 (Pro–Planet People) movement” to underline India’s climate change commitments at World Economic Forum’s (WEF) Davos Agenda 2022. The World Economic Forum’s Davos Agenda Virtual Summit hosted world leaders and heads of important institutions around the world to discuss climate action, pandemic recovery, and socio–economic resilience.

5. Senior bureaucrat Vikram Dev Dutt is the new Chairman & Managing Director of which organisation?

A) Air India 

B) Life Insurance Corporation

C) Central Electronics Ltd

D) Bharat Sanchar Nigam Ltd

  • Senior bureaucrat Vikram Dev Dutt has been appointed as the Chairman & Managing Director of Air India Ltd. Vikram Dev Dutt was a 1993–batch IAS officer of AGMUT (Arunachal Pradesh, Goa, Mizoram and Union Territory) cadre and is at present Principal Secretary (Tourism) in Delhi Government.
  • He has been appointed in the rank and pay of Additional Secretary, as per the order issued by the Personnel Ministry.

6. Which Union Ministry launched the ‘Climate Hazards and Vulnerability Atlas of India’?

A) Ministry of Science and Technology

B) Ministry of Earth Sciences 

C) Ministry of Environment, Forest and Climate Change

D) Ministry of Housing and Urban Affairs

  • The first of its kind ‘Climate Hazards and Vulnerability Atlas of India’ has been recently released by the Union Ministry of Earth Sciences. As per the report, the Sunderbans in West Bengal, neighbouring districts of Odisha, and Ramanathapuram, Pudukkottai and Thanjavur in Tamil Nadu are the most vulnerable to high storm surges of as much as 8.5 to 13.7 metres that are induced by cyclones.

7. Which Tennis star was deported from Australia, after his unvaccinated status?

A) Rafael Nadal

B) Novak Djokovic 

C) Roger Federer

D) Daniil Medvedev

  • Ace Tennis player Novak Djokovic has been deported from Australia after Judges rejected a challenge by the unvaccinated tennis star.
  • The Australian Government cancelled his visa on “health and good order” grounds.

8. Which Ministry initiated a Comprehensive Review of India’s criminal laws?

A) Ministry of Home Affairs 

B) Ministry of Law and Justice

C) Ministry of Mines

D) Ministry of Earth Science

  • Ministry of Home Affairs has initiated the process for a “comprehensive review” of India’s criminal laws. Union Home Minister Amit Shah sought suggestions from within the judiciary, including the Chief Justice of India, MPs and Chief Ministers for amendments to the Indian Penal Code (IPC), the Code of Criminal Procedure (CrPC) and the Indian Evidence Act.
  • Suggestions were invited from Chief Justices of High Courts, Administrators of Union Territories, Bar Councils and law universities.

9. India signed an agreement with which country for implementing “2 Vs 2” Agri market access issues?

A) USA 

B) Israel

C) Russia

D) Australia

  • India’s Department of Agriculture & Farmers Welfare and the US Department of Agriculture (USDA) signed an agreement for implementing the “2 Vs 2 Agri market access” issues.
  • The export of Indian mangoes and pomegranates to the US is in accordance with the recent agreement. India also signed agreements to allow import of cherries, Alfalfa hay, US pork and pork products to India.

10. Who is the head of the Supreme Court appointed Inquiry Committee to probe Prime Minister security breach?

A) Justice Ranjan Gogoi

B) Justice Indu Malhotra 

C) Justice P Sathasivam

D) Justice K G Balakrishnan

  • The Supreme Court appointed an inquiry committee under its former judge Justice Indu Malhotra to probe the security breach during Prime Minister Narendra Modi’s visit to Punjab. The committee will also include the Registrar General of the Punjab and Haryana Court, the Director General of the National Investigation Agency or an officer nominated by him and ADGP (Security) of Punjab Police.
  • The committee will look into the reasons for security breach and suggest safeguards are necessary for the security of the PM and Constitutional functionaries.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!