Tnpsc

25th & 26th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

25th & 26th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th & 26th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th & 26th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. இந்திய கடற்படைக்கு பத்தாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் வானூர்தியான P-8I’ஐ வழங்கிய நிறுவனம் எது?

அ) போயிங்

ஆ) ஏர்பஸ்

இ) டசால்ட் ஏவியேஷன்

ஈ) டெஸ்லா

  • அமெரிக்காவைச் சார்ந்த வானூர்தி நிறுவனமான போயிங்கிடமிருந்து இந்திய கடற்படை, 10ஆவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் வானூர்தியான P-8I’ஐ பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் முதன்முதலில் 2009ஆம் ஆண்டில், 8 P-8I விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • பின்னர், 2016’இல், 4 கூடுதல் P-8I விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பேரிடர் நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளின்போது P-8I பயன்படுத்தப்படுகிறது.

2. சுரங்கங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனம் எது?

அ) அசெஞ்சர்

ஆ) டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்

இ) காக்னிசன்ட்

ஈ) இன்போசிஸ்

  • நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு திறந்தவெளி சுரங்கங்களில் தன்னுடைய செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இந்திய நிலக்கரி நிறுவனம் முறையாக அசெஞ்சர் நிறுவனத்தை ஆலோசகராக நியமித்துள்ளது. அடையாளங்காணப்பட்ட 7 சுரங்கங்கள் – குஸ்முண்டா, கெவ்ரா, தென்கிழக்கு நிலக்கரிக்கள நிறுவனத்தின் (SECL) திப்கா மற்றும் நிகாஹி, ஜெயந்த், துதிச்சுவா, வட நிலக்கரிக்கள நிறுவனத்தின் (NCL) காடியா. SECL மற்றும் NCL ஆகியவை இந்திய நிலக்கரி நிறுவனத்தின் இணை நிறுவனங்களாகும்.
  • உற்பத்தி மற்றும் செயல்திறனை உயர்த்துவதற்கு தரவு பகுப்பாய்வு நுட்பங்களைப் பயன்படுத்துவதை இந்த ஒப்பந்தம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. ரஷ்ய COVID-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி’ஐ இந்தியாவில் தயாரிக்கவுள்ள இந்திய மருந்து நிறுவனம் எது?

அ) டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள்

ஆ) சீரம் இந்தியா நிறுவனம்

இ) பாரத் பயோடெக்

ஈ) பயோகான்

  • புனேவைச் சார்ந்த சீரம் இந்தியா நிறுவனம், வரும் செப்டம்பர் மாதம் முதல் ரஷ்ய COVID-19 தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி’ஐ இந்தியாவில் தயாரிக்கவுள்ளது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமானது SII ஏற்கனவே செல் மற்றும் திசையன் மாதிரிகளைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. அவற்றின் இறக்குமதி, இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டதால், அதன் உற்பத்தி செயல்முறை தொடங்கியது.

4. முதலாமாவது வரைவு “உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை” வெளியிட்ட நிறுவனம் எது?

அ) உயிரியல் பன்முகத்தன்மை செயலகத்திற்கான ஐநா பேரவை

ஆ) உலக நலவாழ்வு அமைப்பு

இ) பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணி

ஈ) NITI ஆயோக்

  • முதலாவது வரைவு “உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை”, உயிரியல் பன்முகத்தன்மை செயலகத்திற்கான ஐநா பேரவையால் வெளியீடு செய்யப்பட்டது. இந்தக் கட்டமைப்பில், இயற்கையின் பாதுகாப்பிற்காக 2030’க்குள் செய்யப்படவேண்டிய, உலகளாவிய நடவடிக்கைகளாக மாற்றப்படவேண்டிய வழிகாட்டுதல்கள் உள்ளன. இந்தக் கட்டமைப்பில், 2030ஆம் ஆண்டிற்குள் அடைய வேண்டிய 21 இலக்குகள் உள்ளன.

5. இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்னாற்றல் பூங்காவை, எந்த மாநிலத்தில் அமைக்க NTPC REL முடிவு செய்துள்ளது?

அ) தமிழ்நாடு

ஆ) இராஜஸ்தான்

இ) குஜராத்

ஈ) கேரளா

  • நாட்டின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவை குஜராத்தின் கட்ச் பகுதியில் ராண் என்ற இடத்தில் NTPC அமைக்கவுள்ளது. தேசிய அனல் மின் நிறுவனத்தின் (NTPC) 100 சதவீத துணை நிறுவனமான NTPC புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமானது (REL) குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள ராண் என்ற இடத்தில் 4750 MW திறனுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைக்க, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் அனுமதிபெற்றது.
  • பசுமை எரிசக்தித் துறை வளர்ச்சியின் ஒருபகுதியாக, NTPC நிறுவனம், 2032ஆம் ஆண்டுக்குள் 60 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

6. ‘கீழ் அருண் நீர்மின் திட்டம்’ அமைக்கப்படவுள்ள நாடு எது?

அ) இந்தியா

ஆ) பூட்டான்

இ) இலங்கை

ஈ) நேபாளம்

  • கீழை நேபாளத்தில் 679 MW உற்பத்தித் திறனுடன் கீழ் அருண் நீர்மின் திட்டத்தை நிறுவ இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான சத்லுஜ் ஜல் வித்யுத் நிகாம், நேபாள அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மதிப்பீடு சுமார் $1.3 பில்லியன் ஆகும். இது, நேபாளத்தின் மிகப்பெரிய மிகப்பெரிய அந்நிய நாட்டு முதலீட்டு திட்டமாகும். நேபாளத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள இரண்டாவது மிகப்பெரிய திட்டம் இதுவாகும்.

7. உணவு பாதுகாப்பு & ஊட்டச்சத்தின் நிலைகுறித்த உலகளாவிய அறிக்கையின்படி, 2020’ல் எத்தனை பேர் பசியுடன் இருந்தார்கள்?

அ) 112 மில்லியன்

ஆ) 222 மில்லியன்

இ) 553 மில்லியன்

ஈ) 811 மில்லியன்

  • ‘உலகின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை’ என்பது FAO, IFAD, UNICEF, WFP மற்றும் WHO ஆகியவை இணைந்து தயாரிக்கும் வருடாந்திர முதன்மை அறிக்கையாகும். பசியை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பு நிலையை அடைதல் & ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான முன்னேற்றம் குறித்து அறிவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அந்த அறிக்கையின்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கினர், 2020ஆம் ஆண்டில், 811 மில்லியன் மக்கள் வரை பசியுடன் இருந்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக மாறாமல் இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்தது. 2030ஆம் ஆண்டில் சுமார் 660 மில்லியன் மக்கள் பசிக்காளாக நேரிடும் என அது கணித்துள்ளது.

8. NTPC புதுப்பிக்கத்தக்க எரிசக்தியானது இந்தியாவின் முதல் ‘பசுமை ஹைட்ரஜன் இயக்கத் திட்டத்தை’ அமைக்கவுள்ள இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ) சிக்கிம்

ஆ) ஹிமாச்சல பிரதேசம்

இ) லடாக்

ஈ) கோவா

  • நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் இயக்கத் திட்டத்தை நிறுவுவதற்கு லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் LAHTC ஆகியவற்றுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல்மின் கழகம் கையெழுத்து இட்டுள்ளது. மேலும், லே நகரத்தில் தேசிய அனல்மின் கழகத்தின் சூரிய மின்சக்தி திட்டங்களும் தொடங்கப்பட்டன.
  • இதன்மூலம் பசுமை ஹைட்ரஜனில் இயங்கும் இயக்கத் திட்டத்தைக் கொண்ட இந்தியாவின் முதல் நகரமாக லே விளங்கும்.

9. தேசிய ஆயுஷ் இயக்கமானது பின்வரும் எந்த வகை திட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

அ) மத்திய துறை திட்டம்

ஆ) மத்திய நிதியுதவித் திட்டம்

இ) முக்கிய திட்டம்

ஈ) முதன்மை திட்டம்

  • தேசிய ஆயுஷ் இயக்கத்தை மத்திய நிதியுதவித் திட்டமாக 01-04-2021 முதல் 31-03-2026 வரை `4607.30 கோடி மதிப்பில் (மத்திய அரசின் பங்காக `3000 கோடி, மாநில அரசின் பங்காக `1607.30 கோடி) தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2014 செப்.15 அன்று தொடங்கப்பட்ட இத்திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை மேம்படுத்துவதன்மூலம் உலகளாவிய அணுகலுடன்கூடிய மலிவான சேவைகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.

10. WHO மற்றும் UNICEF வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டில், எத்தனை சிறார்கள், தங்களின் வழமையான நோய்த் தடுப்பு மருந்துகளை தவறவிட்டுள்ளனர்?

அ) 3 மில்லியன் சிறார்கள்

ஆ) 23 மில்லியன் சிறார்கள்

இ) 80 மில்லியன் சிறார்கள்

ஈ) 100 மில்லியன் சிறார்கள்

  • உலக நலவாழ்வு அமைப்பு (WHO) மற்றும் UNICEF வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள 23 மில்லியன் சிறார்கள், 2020 ஆம் ஆண்டில் தாங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் நோய்த்தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள இயலாமல் தவறவிட்டுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை, கடந்த 2019’இன் மதிப்பைவிடவும் 3.7 மில்லியன் அதிகமாகும். 2020’இல் COVID தொற்றுநோயால் ஏற்பட்ட உலகளாவிய சேவை இடையூறுகள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்முறையாக பளு தூக்குதல் போட்டியில் இந்தியா பதக்கத்தை வென்றுள்ளது. 49 கிலோ எடை பிரிவில் மீராபாய் சானு வெற்றிபெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளார். 26 வயதான மீராபாய் சானு மொத்தமாக, 202 கிலோ எடையை தூக்கி சிட்னி ஒலிம்பிக்ஸ் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி படைத்த சாதனையை முறியடித்துள்ளார். சீனாவின் ஹூ சிஉய் தங்க பதக்கத்தையும் இந்தோனேசியாவின் ஐசா விண்டி கான்டிகா வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு, ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 87 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளர்.

2. கரோனா நிவாரணப் பொருள்களுடன் இந்தோனேசியா சென்ற ஐஎன்எஸ் ஐராவத்

இந்திய கடற்படையைச் சேர்ந்த INS ஐராவத் போர்க்கப்பல் கரோனா நிவாரணப் பொருள்களுடன் இந்தோனேசியா சென்றடைந்தது.

INS ஐராவத் போர்க்கப்பல் ராணுவ தளவாடங்களையும் ஏற்றிச்செல்லும் திறன்கொண்டது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஐராவத் போர்க்கப்பல், மனிதாபிமான அடிப்படையில் உதவிபுரியும் பணிகளிலும் பேரிடர்களின் போது மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

ஐராவத் போர்க்கப்பல்மூலம் இந்தோனேசியாவுக்கு 5 கிரையோஜனிக் கொள்கலன்களில் 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் மற்றும் 300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டது. இந்தப் போர்க்கப்பல் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவின் துறைமுகத்தை அடைந்தது.

இந்தியாவும் இந்தோனேசியாவும் கலாசார மற்றும் வர்த்தக ரீதியில் நட்பு பாராட்டி வருகின்றன. பாதுகாப்பான இந்திய-பசிபிக் கடல் பகுதியை உருவாக்குவதற்கு 2 நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இரண்டு நாடுகளின் கடற்படைகளும் தொடர் கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

3. உலக கேடட் மல்யுத்தம்: தங்கம் வென்றார் பிரியா மாலிக்

உலக கேடட் மல்யுத்தப் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் பிரியா மாலிக். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் மகளிர் 73 கிலோ எடைப்பிரிவில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் பெலாரஸின் கேஸ்னியா படோபோவிச்சை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.

4. உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் தெலங்கானா ராமப்பா கோயில்

தெலங்கானா மாநிலத்தில் வாரங்கல் அருகேயுள்ள ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக UNESCO அறிவித்துள்ளதாக மத்திய கலாசார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கணபதி தேவா என்ற காகதிய வம்ச மன்னரின் ஆட்சிக்காலத்தில் 13ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட பிரசித்தி பெற்ற இக்கோயிலின் மூலவர் ராமலிங்கேசுவரர். எனினும், இந்த அற்புதமான கோயிலை வடிவமைத்த கட்டடக்கலைஞரான ராமப்பாவின் பெயரால் அறியப்படுவது குறிப்பிடத் தக்கது. 2019ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம்பெறுவதற்காக மத்திய அரசால் இக்கோயில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

காகதிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் இப்போதைய தெலங்கானா, ஆந்திரத்தை உள்ளடக்கிய பெரும்பாலான பகுதிகளையும், கிழக்கு கர்நாடகம், தெற்கு ஒடிசாவின் சில பகுதிகளையும் 12 முதல் 14ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்துவந்தனர்.

1. Which company supplied the 10th anti–submarine warfare aircraft P–8I, to the Indian Navy?

A) Boeing

B) Airbus

C) Dassault Aviation

D) Tesla

  • The Indian Navy has received the 10th anti–submarine warfare aircraft P–8I from the US–based aerospace company Boeing. The Defence Ministry had first signed a contract for eight P–8I aircraft in 2009.
  • Later, in 2016, it signed a contract for four additional P–8I aircraft. P–8I isdeployed during disaster relief and humanitarian missions.

2. Which IT consulting company has been engaged by Coal India Ltd, for Digitalisation of mines?

A) Accenture

B) TATA Consultancy Services

C) Cognizant

D) Infosys

  • Coal India Ltd (CIL) has formally engaged Accenture as consultant, for digitalization of mine process in seven select opencast mines of the company. The seven identified mines are Kusmunda, Gevra, Dipka of South Eastern Coalfields Ltd (SECL) and Nigahi, Jayant, Dudhichua, Khadia of Northern Coalfields Ltd (NCL).
  • SECL and NCL are subsidiaries of Coal India. This tie–up aims to use data analytic techniques to raise mine productivity and efficiency.

3. Which Indian pharma company is set to produce the Russian Covid–19 vaccine Sputnik V in India?

A) Dr Reddy Labs

B) Serum Institute of India

C) Bharat Biotech

D) Biocon

  • Pune–based Serum Institute of India will produce the Russian Covid–19 vaccine Sputnik V in India from September. The Russian RDIF (Russian Direct Investment Fund) announced that SII has already received cell and vector samples. As their import approved by the Drug Controller General of India, the cultivation process has started.

4. The 1st ever Draft “Global Biodiversity Framework” has been released by which entity?

A) UN Convention on Biological Diversity Secretariat

B) World Health Organization

C) International Solar Alliance

D) NITI Aayog

  • The 1st ever Draft “Global Biodiversity Framework” has been released by the UN Convention on Biological Diversity Secretariat. This framework contains guidelines to be converted into world wide actions to be performed by 2030, for conservation and protection of nature. The framework includes 21 targets to be achieved by the year 2030.

5. NTPC REL has proposed to set up India’s single–largest solar photovoltaic project in which state?

A) Tamil Nadu

B) Rajasthan

C) Gujarat

D) Kerala

  • The state–run PSU – NTPC’s renewable energy arm NTPC Renewable Energy Ltd (NTPC REL) has proposed to set up India’s single–largest solar photovoltaic project at Rann of Kutch in Gujarat, with a capacity of 4750 MW. The company has received approval from the Union Energy Ministry. The company has been given a target of building 60 GW renewable energy capacity by 2032.

6. ‘Lower Arun Hydropower project’ is to be set up in which country?

A) India

B) Bhutan

C) Sri Lanka

D) Nepal

  • India’s state–owned PSU Satluj Jal Vidyut Nigam has signed an MoU with the Government of Nepal, to establish 679–Megawatt Lower Arun Hydropower project in eastern Nepal.
  • The cost of the project is approximately $1.3 billion and is the single biggest foreign investment project of Nepal. This is the second mega project being undertaken by India in Nepal.

7. As per the State of Food Security and Nutrition in the World report, how many people went hungry in 2020?

A) 112 million

B) 222 million

C) 553 million

D) 811 million

  • ‘State of Food Security and Nutrition in the World’ is an annual flagship report jointly prepared by FAO, IFAD, UNICEF, WFP and WHO. It aims to inform on progress towards ending hunger, achieving food security and improving nutrition. As per the report, nearly one–tenth of the world population, up to 811 million people went hungry in 2020.
  • World Hunger increased last year, after remaining virtually unchanged for five years. It also projected that around 660 million people may still face hunger in 2030.

8. NTPC Renewable Energy is set up India’s first ‘Green hydrogen–based mobility project’ in which Indian state/UT?

A) Sikkim

B) Himachal Pradesh

C) Ladakh

D) Goa

  • NTPC Renewable Energy (NTPC REL) has inked a pact with the Union Territory of Ladakh to set up a ‘Green hydrogen mobility project’ in the region. Leh would be the first city in the country to implement a green hydrogen–based mobility project, once completed. NTPC is set to set up a solar plant and a green hydrogen generation unit in Leh.

9. National Ayush Mission is classified as which category of scheme?

A) Central Sector Scheme

B) Centrally Sponsored Scheme

C) Core Scheme

D) Core of the Core Scheme

  • The Union Cabinet has approved to continue the National AYUSH Mission as a Centrally Sponsored Scheme for another five years till 2026. A financial outlay of Rs 4,607.30 crores to be spent during the period. The scheme which was launched on September 15, 2014, is being implemented by the AYUSH Ministry.
  • The objective of providing cost–effective services, with a universal access through upgrading.

10. As per data published by WHO and UNICEF, how many children have missed out their routine immunization in the year 2020?

A) 3 million children

B) 23 million children

C) 80 million children

D) 100 million children

  • As per the data released by World Health Organisation (WHO) and UNICEF, 23 million children across the globe have missed their routine immunization in the year 2020 and this figure is 3.7 million more than the 2019 value. This reflects the global service disruptions due to COVID–19 pandemic in 2020.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!