TnpscTnpsc Current Affairs

25th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

25th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 25th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. 2022 – ‘போர்ப்ஸின் முப்பத்தாறாம் ஆண்டு உலக செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்?

அ) ஜெப் பெசோஸ்

ஆ) எலோன் மஸ்க் 

இ) வாரன் பபெட்

ஈ) பில் கேட்ஸ்

 • 2022இல் தனது 36ஆம் ஆண்டு உலக செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. இது 236 புதியவர்கள் உட்பட உலகின் 2,668 செல்வந்தார்களை பட்டியல் இட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில், புதியவர்களின் எண்ணிக்கை 493ஆக இருந்தது.
 • எலோன் மஸ்க், உலக செல்வந்தர்கள் தரவரிசையில் முதன்முறையாக $219 பில்லியன் மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். ஜெப் பெசோஸ் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் மஸ்க்குக்குப் பின்னுள்ளனர்.

2. இந்த ஆண்டுக்கான ஓ ஹென்றி பரிசு பெற்ற அமர் மித்ரா சார்ந்த மொழி எது?

அ) ஹிந்தி

ஆ) உருது

இ) பெங்காலி 

ஈ) மராத்தி

 • பெங்காலி எழுத்தாளர் அமர் மித்ராவின், ‘கான்புரோ’ என்ற சிறுகதைக்கு இவ்வாண்டுக்கான மதிப்புமிக்க ஓ ஹென்றி பரிசு வழங்கப்பட்டது. இது 1977-இல் அமர் மித்ரா எழுதிய வங்காள சிறுகதையாகும். ஆதிவாசி கலாச்சாரம் மற்றும் அவர்களின் போராட்டமே அமர் மித்ராவின் விருதுபெற்ற இக்கதையின் பின்னணி. அமர் மித்ராவுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

3. இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டுடனான புதிய ‘விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு ஏற்பாட்டில்-Space Situational Awareness Arrangement’ கையெழுத்திட்டது?

அ) ஆஸ்திரேலியா

ஆ) அமெரிக்கா 

இ) பிரான்ஸ்

ஈ) ஜப்பான்

 • வாஷிங்டனில் நடைபெற்று வரும் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவும் அமெரிக்காவும் புதிய ‘விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு ஏற்பாட்டில்’ கையெழுத்திட்டன. அமெரிக்காவும் இந்தியாவும் தகவல் பகிர்வு, தொடர்புப் பரிமாற்றங்கள் மற்றும் கூட்டுச்சேவை ஈடுபாடுகளில் உயர்நிலை, ஒருங்கிணைந்த செயல்பாடு -களை ஆதரிக்கும் முக்கிய இருதரப்பு முன்னெடுப்புகளை இறுதிசெய்துள்ளன.

4. 2026 – காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாடு எது?

அ) பிரான்ஸ்

ஆ) ஆஸ்திரேலியா 

இ) சீனா

ஈ) ரஷ்யா

 • ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணமானது 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும். காமன்வெல்த் என்பது பெரும்பாலும் முந்தைய பிரிட்டிஷ் காலனிகளின் விளையாட்டுக் கூட்டமாகும். கடந்த ஐந்து பதிப்புகளுள் நான்கு, ஆஸ்திரேலியா அல்லது பிரிட்டனில் நடந்தன. ஆங்கில நகரமான பர்மிங்காம் ஜூலை.28 முதல் 2022 பதிப்பை நடத்துகிறது.

5. புலம்பெயர்தல் கண்காணிப்பு அமைப்பு பயன்பாட்டை உருவாக்கிய முதல் மாநிலம் எது?

அ) பீகார்

ஆ) குஜராத்

இ) மகாராஷ்டிரா 

ஈ) உத்தர பிரதேசம்

 • பாதிக்கப்படக்கூடிய பருவகால புலம்பெயர்ந்த தொழிலாள -ர்களின் இயக்கத்தை வரைபடமாக்குவதற்காக, மகாராஷ்டிர மாநில அரசாங்கம் இணையதள அடிப்படையிலான புலம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு செயலியை உருவாக்கியுள்ளது.
 • மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, பழங்குடியினர் அதிகம் உள்ள ஆறு மாவட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பரில் முன்னோடித்திட்டமாக இதை அறிமுகப்படுத்தியது.

6. ‘ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதனப் பொருட்கள் திட்டம்’ என்பதுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) வணிக அமைச்சகம் 

இ) வெளியுறவு அமைச்சகம்

ஈ) நிதி அமைச்சகம்

 • ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதனப் பொருட்கள் திட்டத்தின் கீழ் வணிக அமைச்சகம் பல்வேறு நடைமுறைகளை தளர்த்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மூலதனப் பொருட்களின் இறக்குமதிகள் ஏற்றுமதித் தீர்வைக்கு உட்பட்டு, வரியின்றி அனுமதிக்கப்படுகின்றன. இணக்கத் தேவைகளைக் குறைப்பதற்கும் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்குமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

7. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘Poison Pill’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) மருத்துவ தொழிற்சாலை

ஆ) உணவு பாதுகாப்பு

இ) நிறுவனத்தைக் கையகப்படுத்துதல் 

ஈ) தீநுண்மவியல்

 • இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் தொடர்பான நிதித் துறையில், வரையறுக்கப்பட்ட கால பங்குதாரர் உரிமைத் திட்டம், “விஷ மாத்திரை” என்றும் அழைக்கப்படுகிறது.
 • சமீபத்தில், எலோன் மஸ்க்கின் கையகப்படுத்தும் முயற்சி -க்கு பதிலளிக்கும் விதமாக, டுவிட்டர் “விச மாத்திரையை” ஏற்றுக்கொண்டது. இது ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் ஒரு நிறுவனத்தில் புதிதாக வழங்கப்பட்ட பங்குகளை வர்த்தக விலையில் தள்ளுபடியில் வாங்க அனுமதிக்கிறது. இது வாங்குதல் திட்டத்தை மிகவும் விலையுயர்ந்ததாகவும் சிக்கலானதாகவும் மாற்றும்.

8. சித்தலிங்க சுவாமிகளின் பிறந்தநாளை ‘ஒருங்கிணை -ப்பு நாள்’ எனக் கொண்டாடவுள்ள மாநிலம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) ஆந்திர பிரதேசம்

ஈ) கர்நாடகா 

 • கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, சித்தலிங்க சுவாமியின் பிறந்தநாளை, ‘ஒருங்கிணைப்பு நாள்’ எனக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். கடக்கில் உள்ள தொண்டதர்ய மடத்தின் சித்தலிங்க சுவாமிகள் ஒரு சிந்தனையாளரும் தத்துவவாதியுமாவார்.

9. பின்வரும் எவ்வமைப்பின்கீழ், ஆராய்ச்சி வடிவமைப்பு -கள் மற்றும் தரநிலைகள் அமைப்பு செயல்படுகிறது?

அ) ISRO

ஆ) DRDO

இ) இந்திய இரயில்வே 

ஈ) இந்திய விமானப்படை

 • ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) என்பது இந்திய இரயில்வேயின்கீழ் செயல்படும் ஓர் ஆராய்ச்சி அமைப்பாகும். B-5 பயோ-டீசல் கொண்ட டீசல் எஞ்சின்களின் இயக்கம் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பால் சோதிக்கப்பட்டதாக இந்திய இரயில்வே அறிவித்துள்ளது.

10. இந்திய மாநிலங்களிலிருந்து ‘பச்சரிசி’யைக் கொள்மு -தல் செய்யும் அமைப்பு எது?

அ) NABARD

ஆ) FCI 

இ) ICAR

ஈ) IARI

 • இந்திய உணவுப்பொருள் கழகமானது (FCI) இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துடனும் ‘பச்சரிசி’ கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. அண்மையில், உழவர்களுக்கு உதவும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரிசியை தெலுங்கானா மாநிலத்திலிருந்து FCI கொள்முதல் செய்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கடற்படைத்தளபதிகள் 4 நாள் மாநாடு

ராணுவத் தளபதிகள் மாநாட்டைத் தொடர்ந்து, இந்திய கடற்படையின் உயர்நிலைத் தளபதிகளின் நான்கு நாள் மாநாடு தில்லியில் ஏப்.25 அன்று தொடங்குகிறது. நாட்டின் ஒட்டுமொத்த கடல்சார் பாதுகாப்பு, ரஷியா – உக்ரைன் மோதலால் இந்தியப் பெருங்கடல் பகுதியின் தாக்கங்கள், சீன ஊடுவல் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

2. 25-04-2022 – உலக மலேரியா நாள்

கருப்பொருள்: Harness innovation to reduce the malaria disease burden and save lives” – உலக அளவில் மலேரியா நோய் பாதிப்பு சுமையை குறைப்பதற்கான புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளுதல் மற்றும் உயிர்களை காப்பாற்றுதல்.

1. Who topped the ‘Forbes’ 36th annual World’s Billionaires List’ of 2022?

A) Jeff Bezos

B) Elon Musk 

C) Warren Buffett

D) Bill Gates

 • The ‘Forbes’ 36th annual World’s Billionaires List’ of 2022 was released recently. It listed 2,668 billionaires of the world, including 236 newcomers, which fell from last year’s 493.
 • Elon Musk tops the World’s Billionaires ranking for the first time ever, with an estimated net worth of USD 219 billion. Jeff Bezos and Bernard Arnault followed Musk.

2. Amar Mitra, who was awarded with this year’s O. Henry prize, is an author of which language?

A) Hindi

B) Urdu

C) Bengali 

D) Marathi

 • Bengali author Amar Mitra was awarded with this year’s prestigious O. Henry prize for his short story titled ‘Gaonburo’. It is Bengali short fiction written by the author in 1977.
 • The Adivasi culture of the state and their struggle is the background to Mitra’s award–winning story. The Writer was awarded the Sahitya Academy award in 2006.

3. India signed a new ‘Space Situational Awareness Arrangement’ with which country?

A) Australia

B) USA 

C) France

D) Japan

 • India and the USA finalized signing of a new Space Situational Awareness arrangement, during the 2+2 Ministerial Dialogue being held at Washington.
 • The United States and India finalized major bilateral initiatives on information–sharing, liaison exchanges, and joint service engagements to support high–end, combined operations.

4. Which country is the host of the 2026 Commonwealth Games?

A) France

B) Australia 

C) China

D) Russia

 • Australia’s Victoria state will host the 2026 Commonwealth Games, the multi–sport gathering for mostly former British colonies. The four of the last five editions were held in Australia or Britain. The English city of Birmingham will host the 2022 edition from July 28.

5. Which is the first state to develop Migration tracking system (MTS) application?

A) Bihar

B) Gujarat

C) Maharashtra 

D) Uttar Pradesh

 • The Maharashtra government has developed a website–based migration tracking system (MTS) application to map the movement of vulnerable seasonal migrant workers.
 • The state women and child development department launched it as a pilot project in November last year in six districts with high tribal population.

6. ‘Export Promotion Capital Goods (EPCG) scheme’ is associated with which Union Ministry?

A) Ministry of MSME

B) Ministry of Commerce 

C) Ministry of External Affairs

D) Ministry of Finance

 • The Commerce Ministry has relaxed various procedures under the Export Promotion Capital Goods (EPCG) scheme. Under the scheme, imports of capital goods are allowed duty free, subject to an export obligation. The relaxations were announced in order to reduce compliance requirements and facilitate ease of doing business.

7. ‘Poison Pill’, which was seen in the news, is associated with which field?

A) Pharmaceutical Industry

B) Food Safety

C) Acquisition of Company 

D) Virology

 • In the field of finance related to merger and acquisition, limited–duration shareholder rights plan is also known as a “Poison pill”. Recently, in response to Elon Musk’s take–over bid, Twitter has adopted “poison pill”, which allows existing shareholders to purchase freshly issued shares in a company at a discount to the trading price. This will in turn make buyout plan extremely expensive and complicated.

8. Which state has announced to celebrate the birth anniversary of Siddalinga Swami as ‘Integration Day’?

A) Tamil Nadu

B) Kerala

C) Andhra Pradesh

D) Karnataka 

 • Karnataka Chief Minister Basavaraj Bommai announced that the birth anniversary of Siddalinga Swami will be celebrated as ‘Integration Day’. Siddalinga Swami of Tontadarya Mutt in Gadag was a thinker and philosopher.

9. Research Designs and Standards Organisation (RDSO) functions under which organisation?

A) ISRO

B) DRDO

C) Indian Railways 

D) Indian Air Force

 • Research Designs and Standards Organisation (RDSO) is a research organisation, functioning under Indian Railways. Indian Railways has announced that the operation of diesel locomotives with B–5 bio–diesel have been tested by Research Designs and Standards Organisation (RDSO).

10. Which organisation procures ‘Raw rice’ from Indian states?

A) NABARD

B) FCI 

C) ICAR

D) IARI

 • The Food Corporation of India (FCI) has an agreement signed with every State for the procurement of raw rice. Recently, the Telangana government has been the Centre procure paddy from the State at the minimum support price (MSP) to aid farmers as well as parboiled rice.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button