TnpscTnpsc Current Affairs

25th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

25th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil & English

Hello aspirants, you can read 25th October 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

October Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

25th October 2022 Tnpsc Current Affairs Quiz in Tamil

1. சிறார்களுக்கு எதிரான இணையவெளிக் குற்றங்களைத் தடுப்பதற்காக, ‘குஞ்சாப்’ என்ற திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்திய மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. மேற்கு வங்காளம்

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. ஆந்திரப் பிரதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. கேரளா

  • கேரள மாநிலத்தில் குழந்தைகளுக்கு எதிரான இணையவெளிக் குற்றங்களைத்தடுக்கும் வகையில், ‘குஞ்சாப்’ என்ற திறன்பேசி செயலியை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். சிறார் சுரண்டல் குறித்து, ‘குஞ்சாப்’ செயலிமூலம் புகாரளிக்கலாம். புதிதாக நியமிக்கப்பட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் சிறார் நீதி வாரியத்தின் உறுப்பினர்களுக்கான பயிற்சியையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

2. ஐக்கிய நாடுகள் அவையானது ஆண்டுதோறும் எந்த மாதத்தில், ‘ஆயுதக்குறைப்பு வாரத்தை’ அனுசரிக்கிறது?

அ. டிசம்பர்

ஆ. நவம்பர்

இ. அக்டோபர்

ஈ. செப்டம்பர்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. அக்டோபர்

  • ஐக்கிய நாடுகள் அவையானது ஒவ்வோர் ஆண்டும் அக்.24 முதல் அக்டோபர்.30 வரை ஆயுதக்குறைப்பு வாரமாகக் கொண்டாடுகிறது. கடந்த 1945 அக்.24இல் ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்டது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கடந்த 1978ஆம் ஆண்டில் ஆயுதக்குறைப்பு குறித்த சிறப்புக்கூட்டத்தை நடத்தியதோடு ஆயுதக்குறைப்பு வாரத்தை முதன்முதலில் அனுசரித்தது. ஐக்கிய நாடுகளின் ஆயுதக்குறைப்பு ஆணையம் கடந்த 1952இல் நிறுவப்பட்டது. இது உலக நாடுகளின் ஆயுதப்படைகள் மற்றும் அவற்றின் ஆயுதங்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துவதற்கான ஒப்பந்தங்களுக்கான ஆவணங்களை உருவாக்கும் பணியை மேற்கொள்கிறது.

3. பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை முறையே 17 சதவீதம் மற்றும் 7 சதவீதமாக உயர்த்துவதற்கான அவசரச்சட்டத்தை இயற்றிய மாநிலம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. மத்திய பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. ஒடிஸா

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. கர்நாடகா

  • கர்நாடக மாநிலத்தில் உள்ள பட்டியலினத்தோருக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்துக்கு கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான அவசரச்சட்டத்திற்கு கர்நாடக மாநில அமைச்சரவையும் ஒப்புதலளித்துள்ளது.

4. மரபணு மாற்றப்பட்ட இந்திய கடுகு இனமான, ‘Brassica juncea’ஐ வணிக ரீதியாக பயிரிட அனுமதித்த நாடு எது?

அ. அமெரிக்கா

ஆ. ஐக்கிய அரபு அமீரகம்

இ. ஆஸ்திரேலியா

ஈ. வங்காளதேசம்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. ஆஸ்திரேலியா

  • ஆஸ்திரேலியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையம், மரபணு மாற்றப்பட்ட இந்திய கடுகு இனமான, ‘Brassica juncea’ வணிக ரீதியாக பயிரிட ஒப்புதல் அளித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட இந்திய கடுகு வணிகரீதியாக பயிரிட அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். மரபணு மாற்றப்பட்ட (GM) கடுகு பயிரிடலுக்கான அனுமதிக்காக இந்தியாவும் காத்துக்கொண்டுள்ளது. கனோலா (Brassica napus) வணிக பயன்பாட்டிற்காக அனுமதி பெற்ற ஒரே GM வகை கடுகாகும்.

5. 2022 – உலக போலியோ நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Positive Pregnancy

ஆ. A healthier future for mothers and children

இ. Eradication of Polio

ஈ. Brighter and better future.

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. A healthier future for mothers and children

  • போலியோ சொட்டு மருந்து மற்றும் போலியோ ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் அக்.24 அன்று உலக போலியோ நாள் அனுசரிக்கப்படுகிறது. போலியோவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தடுப்பூசிகளை வழங்குவதில் முன்களப் பணியாளர்களின் பணிகளை இந்நாள் எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆண்டு, உலக போலியோ நாளின் முதன்மை கருப்பொருள், “A healthier future for mothers and children” என்பதாகும். முதல் போலியோ தடுப்பூசியை உருவாக்கிய குழுவின் தலைமை ஆராய்ச்சியாளராக இருந்த ஜோனாஸ் சால்க் பிறந்ததை நினைவுகூரும் வகையில், கடந்த 1985ஆம் ஆண்டு உலக போலியோ நாள் நிறுவப்பட்டது.

6. 2022இல் இராணுவப் பணியாளர்களின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. Lt Gen அனில் சௌகான் (ஓய்வு)

ஆ. Lt Gen ஹரி குமார்

இ. Lt Gen மனோஜ் பாண்டே

ஈ. Lt Gen வினோத் G கந்தாரே (ஓய்வு)

விடை மற்றும் விளக்கம்

விடை: அ. Lt Gen அனில் சௌகான் (ஓய்வு)

  • Lt Gen அனில் சௌஹானை (ஓய்வுற்றவர்) இராணுவத்தின் அடுத்த படைத்தளபதியாக நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அவர் இந்திய அரசின் இராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார். ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கும் மேலான அவரது இராணுவ வாழ்க்கையில், அவர் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். 2021இல் ஓய்வுபெறும் வரை 2019இலிருந்து கிழக்குப் படையின் தலைமைத்தளபதியாக அவர் பணியாற்றினார்.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பாந்தவ்கர் வனக்காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மகாராஷ்டிரா

ஆ. மத்திய பிரதேசம்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. மத்திய பிரதேசம்

  • இந்திய தொல்பொருள் ஆய்வு மையமானது (ASI) மத்திய பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 9ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்திய மிகப்பெரிய வர்ஹா சிற்பம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொல்லெச்சங்களைக் கண்டறிந்துள்ளது. பொ ஆ 2ஆம் நூற்றாண்டு முதல் பொ ஆ 5ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்திய இருபத்தாறு குகைகள், சைத்திய வடிவ கதவுகள் மற்றும் கற்படுக்கைகள்கொண்ட கலங்கள் போன்ற பௌத்த மதத்தின் மகாயான பிரிவின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மற்ற கண்டுபிடிப்புகளுள் கல் விளையாட்டுகள், நீர் வடிகட்டி அமைப்பு, நாணயங்கள் மற்றும் பிராமி கல்வெட்டுகள் ஆகியவை அடங்கும்.

8. 2022 – உலக இருதய நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. COVID and Heart

ஆ. Use Heart for Every Heart

இ. Heart and Sustainability

ஈ. Heart and Humanity

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. Use Heart for Every Heart

  • உலக இருதய நாளானது ஒவ்வோர் ஆண்டும் செப்.29 அன்று இருதய நலம் மற்றும் இருதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடைப்பிடிக்கப்படுகிறது. “Use Heart for Every Heart” என்பது நடப்பு (2022) ஆண்டில் வரும் உலக இருதய நாளுக்கானக்கருப்பொருளாகும். ஒவ்வோர் ஆண்டும் 18.6 மில்லியன் உயிர்களைக் கொல்லும் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவை மனித இறப்புகளில் முக்கியமான காரணிகளாக உள்ளன.

9. சமீபத்திய உச்சநீதிமன்ற ஆணையின்படி, எத்தனை வாரங்கள் வரை அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு உரிமை உண்டு?

அ. 20

ஆ. 24

இ. 30

ஈ. 32

விடை மற்றும் விளக்கம்

விடை: ஆ. 24

  • அனைத்து பெண்களும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு உரிமை உண்டு என்றும், இந்த விவகாரத்தில் திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு இடையேயான வேறுபாடு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருமணமாகாத பெண்களும் ஒருமித்த உறவின் காரணமாக 20-24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதியரசர் DY சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, மருத்துவச்சூல் முற்றுவிப்பு சட்டத்தின்கீழ், வண்புணர்வின் வரையறையில் திருமணத்துக்குப் பிறகான வல்லுறவும் அடங்கும் எனத் தீர்ப்பளித்தது.

10. உலகின் முதல் CNG முனையம் அமைக்கப்படவுள்ள இந்திய மாநிலம் எது?

அ. ஹரியானா

ஆ. அஸ்ஸாம்

இ. குஜராத்

ஈ. பீகார்

விடை மற்றும் விளக்கம்

விடை: இ. குஜராத்

  • உலகின் முதல் CNG முனையம் மற்றும் பிரவுன்ஃபீல்ட் துறைமுகத்திற்கான அடிக்கல்லை குஜராத் மாநிலம் பாவ் நகரில் பிரதமர் நரேந்திர மோதி நாட்டினார். 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் `100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மண்டல அறிவியல் மையத்தையும் பிரதமர் அப்போது திறந்து வைத்தார்.

25th October 2022 Tnpsc Current Affairs Quiz in English

1. Which state/UT launched ‘Kunjapp’ mobile application to prevent cyber-crimes against children?

A. West Bengal

B. Kerala

C. Maharashtra

D. Andhra Pradesh

Answer & Explanation

Answer: B. Kerala

  • Kerala Chief Minister Pinarayi Vijayan launched the ‘Kunjapp’ mobile application to prevent cyber-crimes against children in the state. Child exploitation can be reported through the ‘Kunjapp’ application. The Chief Minister also inaugurated the training for the newly appointed Child Welfare Committee (CWC) and Juvenile Justice Board (JJB) members.

2. The United Nations observes ‘Disarmament Week’ every year on which month?

A. December

B. November

C. October

D. September

Answer & Explanation

Answer: C. October

  • The United Nations (UN) marks October 24 to October 30 as Disarmament Week each year. On October 24, the United Nations (UN) was established in 1945. The United Nations General Assembly had a special session on disarmament in 1978 and Disarmament Week was first observed. The United Nations Disarmament Commission (UNDC) was established in 1952. It was tasked with creating documents for treaties to regulate the number of armed forces and weapons of nations.

3. Which state passed an ordinance to increase the reservation for the Scheduled Castes and Scheduled Tribes to 17 % and 7 %?

A. Jharkhand

B. Madhya Pradesh

C. Karnataka

D. Odisha

Answer & Explanation

Answer: C. Karnataka

  • Karnataka Governor Thaawarchand Gehlot gave assent to the ordinance to increase the reservation for the Scheduled Castes from 15 per cent to 17 per cent and the Scheduled Tribes from 3 per cent to 7 per cent in the state. The Karnataka cabinet approved an ordinance for increasing the reservation for Scheduled Castes and Scheduled Tribe communities.

4. Which country approved the commercial cultivation of Genetically modified Indian mustard species ‘Brassica juncea’?

A. USA

B. UAE

C. Australia

D. Bangladesh

Answer & Explanation

Answer: C. Australia

  • The regulatory authority in Australia approved the commercial cultivation of the genetically modified Indian mustard species ‘Brassica juncea’. This is the first time a genetically modified variety of Indian mustard has received commercial approval anywhere in the world. Even India awaits the clearance of genetically modified mustard. The canola (Brassica napus) is the only GM mustard variety that was cleared for commercial application.

5. What is the theme of ‘World Polio Day 2022’?

A. Positive Pregnancy

B. A healthier future for mothers and children

C. Eradication of Polio

D. Brighter and better future.

Answer & Explanation

Answer: B. A healthier future for mothers and children

  • World Polio Day is observed every year on October 24 to raise awareness about the polio vaccination and eradication of polio. The day highlights the efforts of the frontline workers who work to provide vaccines in polio-hit countries.
  • This year, the overarching theme of World Polio Day is ‘A healthier future for mothers and children’. World Polio Day was established in 1985 to commemorate the birth of Jonas Salk, who was the lead researcher of the team that developed the first Polio vaccine.

6. Who has been appointed as the Chief of Defence Staff (CDS) in 2022?

A. Lt Gen Anil Chauhan (Retired)

B. Lt Gen Hari Kumar

C. Lt Gen Manoj Pandey

D. Lt Gen Vinod G. Khandare (Retired)

Answer & Explanation

Answer: A. Lt Gen Anil Chauhan (Retired)

  • The Government has decided to appoint Lt General Anil Chauhan (Retired) as the next Chief of Defence Staff (CDS). He shall also function as Secretary to Government of India, Department of Military Affairs. In a career spanning over nearly 40 years, he has served in various positions. Lt General, he became the General Officer Commanding-in-Chief of the Eastern Command in 2019 until he retired in 2021.

7. Bandhavgarh Forest Reserve, which was seen in the news, is located in which state?

A. Maharashtra

B. Madhya Pradesh

C. Andhra Pradesh

D. Karnataka

Answer & Explanation

Answer: B. Madhya Pradesh

  • Archaeological Survey of India (ASI) has found more than 100 remains including largest Varha sculpture of 9th century to 15th century in Bandhavgarh Tiger Reserves in Madhya Pradesh. Twenty-six caves of 2nd Century CE to 5th century CE, remains of Mahayana sect of Buddhism like chaitya shaped doors and cells containing stone beds were found. Other findings include stone games, water filter structure, coins and Brahmi inscriptions.

8. What is the theme of the ‘World Heart Day 2022’?

A. COVID and Heart

B. Use Heart for Every Heart

C. Heart and Sustainability

D. Heart and Humanity

Answer & Explanation

Answer: B. Use Heart for Every Heart

  • World Heart Day 2022 is celebrated every year on September 29 to raise awareness about the concerns of heart health and cardiovascular illnesses. The theme of the World Heart Day 2022 is ‘Use Heart for Every Heart’. Heart disease and stroke are the world’s leading causes of death, which claim 18.6 million lives each year.

9. As per the recent Supreme Court order, all women are entitled to safe and legal abortion upto how many weeks?

A. 20

B. 24

C. 30

D. 32

Answer & Explanation

Answer: B. 24

  • The Supreme Court ruled that all women are entitled to safe and legal abortion and that the distinction between married and unmarried women in this matter is unconstitutional. The Supreme Court also said that unmarried women are also entitled to seek abortion of pregnancy in the term of 20-24 weeks arising out of a consensual relationship. A three-judge bench headed by Justice DY Chandrachud ruled that under the Medical Termination of Pregnancy Act, the definition of rape must include marital rape.

10. The World’s First CNG Terminal is set to come up in which Indian state?

A. Haryana

B. Assam

C. Gujarat

D. Bihar

Answer & Explanation

Answer: C. Gujarat

  • The Prime Minister Narendra Modi laid the foundation stone of the World’s First CNG Terminal and a brownfield port at Bhavnagar, Gujarat. The Prime Minister also inaugurated the Regional Science Centre which is spread over 20 acres and has been built at a cost of around Rs 100 crores.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!