TnpscTnpsc Current Affairs

26th & 27th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

26th & 27th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th & 27th February 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

February Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. ‘தேசிய அறிவியல் நாள்’ முன் கடைப்பிடிக்கப்படும் ஒரு வார கால நினைவேந்தலின் பெயர் என்ன?

அ) Atmanirbhar Vigyan

ஆ) Vigyan Sarvatra Pujyate 

இ) Celebration of Science in Past

ஈ) ‘Science in Culture’ Celebrations

  • ‘விக்யான் சர்வத்ர பூஜ்யதே’ என்ற தலைப்பில் ஒரு வார கால நினைவேந்தலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் Dr ஜிதேந்திர சிங் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் தொடங்கினர்.
  • அமுதப்பெருவிழாவின் ஒருபகுதியாக இது தொடங்கப்பட்டது. தேசிய அறிவியல் நாளான பிப்.28ஆம் தேதி வரை நாடு முழுவதும் 75 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2. ‘நீலப்பொருளாதாரம் மற்றும் பெருங்கடல் ஆளுகைக்கான செயல்திட்டத்தை’ கீழ்காணும் எந்த நாட்டுடன் இணைந்து இந்தியா ஒப்புக்கொண்டது?

அ) அமெரிக்கா

ஆ) ஐக்கிய அரபு அமீரகம்

இ) பிரான்ஸ் 

ஈ) ஜப்பான்

  • இந்தியாவும் பிரான்ஸும் “நீலப்பொருளாதாரம் மற்றும் பெருங்கடல் ஆளுகைக்கான செயல்திட்டத்தில்” உடன்ப -ட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அறிவியல் அறிவு மற்றும் கடல் சார் பாதுகாப்புக்கு பங்களிப்பதை நோக்கமாகக்கொண்டு உள்ளது. மேலும், கடல் என்பது உலகளாவிய சொத்தாக இருப்பதை உறுதிசெய்கிறது.
  • வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்தபோது இது மேற்கொள்ளப்பட்டது.
  • கடல்சார் வர்த்தகம், கடல் சூழல் சுற்றுலா, உள்நாட்டு நீர்வழிகள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மை ஆகியவை இதில் அடங்கும்.

3. COVID தடுப்பூசியை உருவாக்க, ‘CEPI’, எந்த இந்திய மருந்து நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது?

அ) பனசீ பயோடெக் 

ஆ) கேடிலா ஹெல்த்கேர்

இ) சிப்லா

ஈ) சன் பார்மா

  • Coalition for Epidemic Preparedness Innovations (CEPI) ஆனது, COVID தடுப்பூசியை உருவாக்க, Translational Health Science and Technology Institute (THSTI) மற்றும் Panacea Biotec ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டமைப்புடன் இணையும்.
  • THSTI என்பது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பவியல் துறையின் தன்னாட்சி நிறுவனமாகும். CEPI, இப்புதிய திட்டத்திற்கு $12 மில்லியன் டாலர் வரை நிதியளிக்கும்.

4. 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?

அ) சீனா

ஆ) அமெரிக்கா

இ) நார்வே 

ஈ) ஜெர்மனி

  • 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பதினாறு தங்கப் பதக்கங்களுடன் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜெர்மனி பன்னிரு தங்கமும் சீனா 9 தங்கமும் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் ‘பேர்ட்ஸ் நெஸ்ட்’ மைதானத்தில் முடிவடைந்தன.
  • சீனாவும் அதன் அதிபர் ஜி ஜின்பிங்கும் 2026இல் இந்தப் போட்டிகளை நடத்தும் மிலானோ-கார்டினாவிடம் இதன் பொறுப்புக்களை ஒப்படைத்தனர்.

5. யூனிஸ், பிராங்க்ளின் & டட்லி ஆகிய மூன்று புயல்கள் உள்ளிட்ட புயல் தொகுதியால் பாதிக்கப்பட்ட பகுதி எது?

அ) வட அமெரிக்கா

ஆ) ஐரோப்பா 

இ) ஆஸ்திரேலியா

ஈ) ஆப்பிரிக்கா

  • யூனிஸ் புயல், இலண்டனுக்கு முதல் சிவப்பு வானிலை எச்சரிக்கையை வழங்கியது. 1987இல் பிரிட்டன் மற்றும் வடக்கு பிரான்சில் பெரும் புயல் தாக்கியதற்குப்பின் இது ஐரோப்பாவில் வீசும் சக்திவாய்ந்த புயல்களுள் ஒன்றாகும்.
  • பிரிட்டன், அயர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் மரங்கள் முறிந்து விழுந்தது பலத்த காற்று வீசியது ஆகியவற்றால் 15 பேர் இறந்தனர். அதைத்தொடர்ந்த 2 நாட்களில் பிராங்க்ளின் மற்றும் டட்லி புயல்கள் அங்கு தாக்கின.

6. தொற்றுநோய்க்கு பிறகு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எந்த இனத்திற்கு, ‘ஹம்பர்டியம் கோவிடம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது?

அ) பாம்பு

ஆ) தட்டைப்புழு 

இ) வீட்டு எலி

ஈ) வீட்டு ஈ

  • ஒரு சிறிய இராஜநாகம்போல தோற்றமளிக்கும் தட்டைப் புழு இனத்தை அறிவியலார்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் இந்த உயிரினங்கள் நத்தைகளை வேட்டையாடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். COVID தொற்றுநோயின் பெயரால் இந்தத் தட்டைப்புழுவுக்கு ‘ஹம்பர்டியம் கோவிடம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

7. புதிய இராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள கிஜாடியா வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் / UT எது?

அ) ஹரியானா

ஆ) பீகார்

இ) குஜராத் 

ஈ) உத்தரகாண்ட்

  • உலக சதுப்பு நில நாளை முன்னிட்டு 2 புதிய இராம்சர் தளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை: குஜராத்தில் உள்ள கிஜாடியா வனவுயிரி சரணாலயம் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பகீரா வனவுயரி சரணாலயம். இந்தியா 10,93,636 ஹெக்டேர் பரப்பளவைக்கொண்ட 49 தளங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது.
  • இந்த எண்ணிக்கை தெற்காசியாவிலேயே மிகவுயர்ந்தது ஆகும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஜஜாரில் உள்ள சுல்தான்பூர் தேசிய பூங்கா மற்றும் பிந்தாவாஸ் வனவுயிரி சரணாலயத்தை ஹரியானாவில் உள்ள இராம்சர் தளங்களாக முன்னதாக அறிவித்தது.

8. 99 மில்லியன் ஆண்டுகள் பழமையான மலர்கள், எந்த நாட்டில் பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன?

அ) இந்தியா

ஆ) மியான்மர் 

இ) இலங்கை

ஈ) அமெரிக்கா

  • மியான்மரில் ‘Eophylica priscastellata’ மற்றும் ‘Phylica piloburmensis’ ஆகிய இரண்டு புதிய வகை புதைபடிவ பூக்களைப் பழங்கால ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவை குறைந்தது 99 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய வட மியான்மரில் உள்ள கம்தி மற்றும் தனைங் சுரங்கங்களில் இருந்த கிரெட்டேசியஸ் அம்பரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

9. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற, ‘2010 TK7 மற்றும் 2020 XL5’ என்பது என்ன?

அ) புறக்கோள்கள்

ஆ) பூமி டிரோஜன்கள் 

இ) விண்கற்கள்

ஈ) தொலைநோக்கிகள்

  • ‘பூமி டிரோஜன்’ என்பது ஒரு சிறுகோளாகும். இது நமது புவியின் அதே சுற்றுப்பாதையைப் பகிர்ந்துகொள்வதோடு சூரியனையும் சுற்றிவருகிறது. 2ஆவது ‘பூமி டிரோஜன்’ 2020இல் கண்டறியப்பட்டது; அகற்கு ‘2020 XL5’ என்று பெயரிடப்பட்டது. இது பூமிக்கு அருகிலுள்ள சிறுகோளாகும்.
  • இது விலகிச்செல்லும் முன் அடுத்த 4,000 ஆண்டுகளுக்கு இச்சுற்றுப்பாதையிலிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சிறுகோள் ‘Pan-STARRS S1’ தொலைநோக்கிமூலம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அறியப்பட்ட பூமி டிரோஜன் சிறுகோள் ‘2010 TK7’ ஆகும். சுமார் 0.3 கிமீ அகலம் உடைய இது, 2010இல் கண்டுபிடிக்கப்பட்டது.

10. கொங்குர்ஸ்-M ஏவுகணைகளைத் தயாரிப்பதற்காக, இந்திய இராணுவம், பின்வரும் எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது?

அ) டிஆர்டிஓ

ஆ) பாரத் டைனமிக்ஸ் லிட் 

இ) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட்

ஈ) பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிட்

  • பாரத் டைனமிக்ஸ் லிட்டும் (BDL) இந்திய இராணுவமும் `3,131.82 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் ‘Konkurs-M’ ஏவுகணைகளை வாங்குவதற்காக ஈடுபட்டுள்ளன. 75-4000 மீ வீச்சுத்திறன்கொண்ட இந்த ஏவுகணை BMP-II இலிருந்தோ அல்லது தரை ஏவியிலிருந்தோ ஏவப்படலாம். கொங்குர்ஸ்-M இரஷ்ய மூலக்கருவி உற்பத்தியாளரின் (OEM) உரிம ஒப்பந்தத்தின்கீழ் இது தயாரிக்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. எல்ஐசி பொதுப் பங்கு: 20% அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி

ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பொதுப் பங்குகளை வாங்குவதில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: LIC’ல் மத்திய அரசின் பங்குகளை பொதுப்பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பொதுப்பங்குகளை வாங்கு -தற்கு விரும்பலாம். ஆனால், தற்போதைய விதிகளின்படி, எல்ஐசியில் அந்நிய நேரடி முதலீடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தற்போதைய அந்நிய நேரடி முதலீட்டு விதிகளின்படி, பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு 20 சதவீதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி எல்ஐசி நிறுவனத்தில் 20 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எல்ஐசியில் மத்திய அரசின் பங்கில் 5 சதவீதமான 31.63 கோடி பங்குகளை பொதுப்பங்கு வெளியீடுமூலம் விற்க இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) கடந்த 13-ஆம் தேதி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த விற்பனைமூலம் `63,000 கோடி திரட்ட திட்டமிடப்ப -ட்டுள்ளது.

இணையவழி ஏல முறையில் நிலக்கரி விற்பனைக்கு ஒப்புதல்: கோல் இந்தியா லிட் உள்ளிட்ட அரசு நிலக்கரி நிறுவனங்கள், துறைசார்ந்த ஏல விற்பனைக்குப் பதிலாக, இணையவழி பொது ஏல முறையில் நிலக்கரியை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மத்திய அரசின் இந்த முடிவால் சந்தையில் விலைகுறித்த தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்; அனைத்து நுகர்வோருக்கும் ஒரே விலை தெரிவிக்கப்படும். மேலும், இணையவழி ஏல நடைமுறை, மின்னுற்பத்தி துறை உள்பட அனைத்து துறைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் (எண்ம) மிஷன் திட்டத்துக்கு ஒப்புதல்: நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் எனப்படும் எண்ம சுகாதார அடையாள அட்டைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் `1,600 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின்கீழ் குடிமக்களுக்கு எண்ம சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். அவர்களின் சுகாதாரம் பற்றிய தகவல்கள் எண்ம வடிவில் ஆவணங்களாக சேமித்து, அதனுடன் அடையாள எண் இணைக்கப்படும். தகவல் தொழில்நுட்ப உதவியுடன் மக்களுக்கு தரமான மருத்துவச் சேவையை வழங்குவதற்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.

மத்திய அரசின் இந்தத் திட்டத்தை தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்தும் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. மத்திய அரசு சார்பில் ‘உடல் ஆரோக்கிய சவால் போட்டி’ – அமைச்சர் மா. சுப்பிரமணியன் முதலிடம்: சென்னை மாநகரில் அதிக போட்டியாளர்கள் பங்கேற்பு

மத்திய அரசு நடத்திய ‘உடல் ஆரோக்கிய சவால்’ போட்டியில், தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முதலிடம் பிடித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

75ஆம் ஆண்டு இந்திய விடுதலை விழாவை முன்னிட்டு, உடல் ஆரோக்கியஞ்சார் போட்டிகளில் இந்திய அளவில் 75 நகரங்களைச் சார்ந்த தலைவர்கள், பல்வேறு நிறுவனங்களின் முதன்மைசெயல் அலுவலர்கள், ஆணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதில் இணையதளம் வாயிலாக பதிவுசெய்த நபர்களின் நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற நிகழ்வுகள் இணையம் வழியே கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

75 நகரங்கள் பங்கேற்பு

நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற நிகழ்வுகளில் 75 நகரங்களில் உள்ள முக்கிய தலைவர்களில் 297 பேரும், பல்வேறு நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்கள் மற்றும் அரசு ஆணையாளர்கள் 56 பேரும் பதிவு செய்தனர்.

நடைபயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் ஆகிய சவால் போட்டிகளில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிவு செய்திருந்தார். இதில் அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகளில் 390 கிமீ தூரம் ஓடி முதலிடத்தைப்பிடித்துள்ளார்.

நடைபயிற்சி சவால் போட்டியில் அதிக எண்ணிக்கையி
-லான செயல்பாடுகளில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி 5ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

சென்னை மாநகரம் முதலிடம்

சென்னை மாநகரில் மிதிவண்டி ஓட்டுதல் சவாலில் 1,059 பேர் பதிவு செய்து மொத்தம் 72,458 கிமீ தூரத்தை கடந்துள்ளனர். இதன்மூலம் போட்டியில் கலந்துகொண்ட நகரங்களிலேயே அதிகம் பதிவுசெய்தவர்கள், கடந்த தூரம் அடிப்படையில் சென்னை மாநகரம் முதலிடத்தை பெற்றுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1. What is the name of the new week–long commemoration before the ‘National Science Day’?

A) Atmanirbhar Vigyan

B) Vigyan Sarvatra Pujyate 

C) Celebration of Science in Past

D) ‘Science in Culture’ Celebrations

  • A week–long commemoration event titled Vigyan Sarvatra Pujyate was launched by Union Minister of Science and Technology Dr Jitendra Singh and Union Minister of Culture G Kishan Reddy. This was launched as part of the Azadi Ka Amrit Mahotsav. The event is being held simultaneously at 75 locations across the country till February 28, National Science Day.

2. India, along with which country, agreed on ‘Roadmap on Blue Economy and Ocean Governance’?

A) USA

B) UAE

C) France 

D) Japan

  • India and France have agreed on a Roadmap on Blue Economy and Ocean Governance. The agreement aims to contribute to scientific knowledge and ocean conservation and ensure that the ocean remains a global common.
  • It was made during External Affairs Minister S Jaishankar’s three–day visit to France. The scope includes maritime trade, marine eco–tourism, inland waterways, scientific research, and integrated coastal management among others.

3. ‘CEPI’ has announced partnership with which Indian pharma company to develop Covid Vaccine?

A) Panacea Biotec 

B) Cadila Healthcare

C) Cipla

D) Sun Pharma

  • Coalition for Epidemic Preparedness Innovations (CEPI) will partner with a consortium comprised of the Translational Health Science and Technology Institute (THSTI) and Panacea Biotec to develop COVID vaccine. THSTI is an autonomous institute of the Department of Biotechnology, Ministry of Science and Technology. CEPI will fund the new project up to USD 12 million.

4. Which country topped the medal tally in the 2022 Beijing Winter Olympics?

A) China

B) USA

C) Norway 

D) Germany

  • For the second Games in a row, Norway topped the medal tally in the 2022 Beijing Winter Olympics, with 16 golds. It was followed by Germany with 12 golds and China with 9. The Games recently ended in the “Bird’s Nest” stadium, China and its President Xi Jinping handed over the games to 2026 hosts Milano–Cortina.

5. Which region is affected by Storm Clusters including three Storms– Eunice, Franklin and Dudley?

A) North America

B) Europe 

C) Australia

D) Africa

  • Storm Eunice sparked the first–ever red weather warning for London. It was one of the most powerful tempests in Europe since the Great Storm hit Britain and northern France in 1987.
  • Over 15 people were killed by falling trees, flying debris and high winds in Britain, Ireland, the Netherlands, Belgium, Germany and Poland. Storm Franklin and Storm Dudley followed in two days.

6. Which newly discovered species has been named after the pandemic as ‘Humbertium covidum’?

A) Snake

B) Flatworm 

C) House Rat

D) House Fly

  • Scientists have discovered an alien hammerhead flatworm species that looks like a miniature king cobra. The researchers found the creatures hunting snails in France and Italy. The flatworm has been named after the COVID–19 pandemic as Humbertium covidum’.

7. Khijadiya wildlife sanctuary, is a new Ramsar site, located in which state/UT?

A) Haryana

B) Bihar

C) Gujarat 

D) Uttarakhand

  • Two new Ramsar sites were announced on the occasion of World Wetlands Day. They are: Khijadiya wildlife sanctuary in Gujarat and Bakhira wildlife sanctuary in Uttar Pradesh.
  • India has a network of 49 such sites covering 10,93,636 hectares, which is the highest in South Asia. The Union Environment Ministry had earlier notified the Sultanpur National Park and Bhindawas wildlife sanctuary in Jhajjar as Ramsar sites in Haryana.

8. 99–million–years old Flowers have been discovered in protected state in which country?

A) India

B) Myanmar 

C) Sri Lanka

D) USA

  • Paleontologists have identified two new types of fossil flowers– Eophylica priscastellata and Phylica piloburmensis in Myanmar. They have been found in cretaceous amber from the Hkamti and Tanaing mines, northern Myanmar, dated to at least 99 million years ago.

9. What are ‘2010 TK7 and 2020 XL5’, which are seen in the news recently?

A) Exoplanets

B) Earth Trojans 

C) Meteors

D) Telescopes

  • Earth Trojan is an asteroid that shares the same orbit as our planet, going around the Sun. The second Earth Trojan was detected in 2020 and has been named 2020 XL5. It is a near–earth asteroid that is expected to stay in orbit for the next 4,000 years before deviating away. The asteroid was discovered by the Pan–STARRS S1 telescope survey. The first known Earth Trojan asteroid was 2010 TK7, about 0.3 km wide, and discovered in 2010.

10. Indian Army signed contract with which company for manufacture of Konkurs–M missiles?

A) DRDO

B) Bharat Dynamics Ltd 

C) Hindustan Aeronautics Ltd

D) Bharat Electronics Ltd

  • Bharat Dynamics Limited (BDL) and the Indian Army have signed a contract worth Rs 3,131.82 crore for the manufacture and supply of Konkurs–M anti–tank guided missiles.
  • The missile with 75–4000 metre range can be launched either from the BMP–II tank or from a ground launcher. Konkurs–M is being manufactured under a license agreement with a Russian Original Equipment Manufacturer (OEM).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!