Tnpsc

26th & 27th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

26th & 27th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th & 27th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

June Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

26th & 27th June 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. அண்மையில், சிறப்பு புலிட்சர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட டார்னெல்லா ஃப்ரேஷியர் சார்ந்த நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஐக்கியப் பேரரசு

இ) ஜெர்மனி

ஈ) ஆஸ்திரேலியா

  • புலிட்சர் பரிசு என்பது இதழியல் துறையில் வழங்கப்படும் மிகவும் மதிப்பு மிக்க விருதாகும். ஜார்ஜ் பிலாய்டின் மரணத்தை படமாக்கியதற்காக அமெரிக்க இளைஞியான டார்னெல்லா ஃப்ரேஷியர் இந்த விருதைப் பெற்றார். COVID தொற்றுநோய்குறித்த செய்திகளை சிறப்புற முறையில் வழங்கியதற்காக மதிப்புமிக்க பொது சேவைக்கான விருதை, நியூயார்க் டைம்சுக்கு புலிட்சர் குழுமம் வழங்கியது.

2. நடப்பாண்டு (2021) பிரஞ்சு ஓபன் போட்டியின் மகளிர் பட்டத்தை வென்றவர் யார்?

அ) பார்போரா கிரெஜிகோவா

ஆ) நவோமி ஒசாகா

இ) சிமோனா ஹாலெப்

ஈ) ஜெனிபர் பிராடி

  • 2021ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் பார்போரா கிரெஜிகோவா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இந்தப்பட்டத்தை வென்ற முதல் செக் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். 2018 பிரெஞ்சு ஓபன், 2018 விம்பிள்டன் மற்றும் 2021 பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றில் மகளிர் இரட்டையர் பட்டங்களையும், 2019, 2020, மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார்.

3. கடந்த 52 ஆண்டுகளில், 4 கிராண்ட்ஸ்லாம்களையும் இருமுறை வென்ற முதல் வீரர் யார்?

அ) ரோஜர் பெடரர்

ஆ) நோவக் ஜோகோவிச்

இ) ரபேல் நடால்

ஈ) ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ்

  • 2021ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியின் இறுதிப்போட்டியில் மூத்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தனது 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தார். ஜோகோவிச், 52 ஆண்டுகளில், 4 கிராண்ட்ஸ்லாம்களை இரண்டு முறை வென்ற முதல் வீரரும் ஆனார்.

4. தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் உருவாக்கப்படவுள்ள மாநில -ம் எது?

அ) தமிழ்நாடு

ஆ) மகாராஷ்டிரா

இ) குஜராத்

ஈ) கேரளா

  • குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பிற்காக நடுவண் கலாசாரம் மற்றும் மத்திய துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • குஜராத்தின் ஆமதாபாத்திலிருந்து சுமார் 80 கிமீட்டர் தொலைவிலுள்ள லோத்தல் தளத்திற்கு அருகில், உலகத்தரம்வாய்ந்த வசதியுடன் உருவாக்கப்படவுள்ளது. பன்னாட்டு சுற்றுலாத்தலமாக உருவாக்கப்படும் இந்த வளாகத்தில், இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் காட்சிப்படுத்தப்படும்.

5. BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகத்திற்கான இந்தியாவின் முதன்மை நிறுவனம் எது?

அ) IISc, பெங்களூர்

ஆ) IIT மும்பை

இ) IIT தில்லி

ஈ) IIT சென்னை

  • மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனமானது மின்சார போக்குவரத்து குறித்த BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகங்களின் முந்நாள் மெய்நிகர் மாநாட்டை நடத்தியது. இவ்வாண்டு 13ஆவது BRICS உச்சிமாநாடானது, கல்வித்துறையின்கீழ் இந்தியா நடத்தும் நிகழ்வுகளின் ஒருபகுதியாக நடத்தப்பட்டது. BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகம் என்பது 5 BRICS உறுப்புநாடுகளைச்சார்ந்த உயர்கல்வி நிறுவனங்களின் ஒன்றியமாகும். BRICS நெட்வொர்க் பல்கலைக்கழகத்திற்கான இந்தியாவின் முதன்மை நிறுவனமாக IIT-மும்பை உள்ளது.

6. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘Data Lake’ என்பது பின்வரும் எந்த அமைப்பின் வலைத்தளமாகும்?

அ) RBI

ஆ) NHAI

இ) CBI

ஈ) DRDO

  • வெளிப்படைத்தன்மை, சமீப தொழில்நுட்பம் ஆகியவற்றை அதிகரிக்க, நெடுஞ்சாலை திட்டப்பணிகளில், ஆளில்லா வானூர்திகள்மூலமான படப்பதிவை கட்டாயமாக்க சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கட்டாயமாக்கியுள்ளது.
  • இதன்படி ஒப்பந்ததாரர்கள், நடைபெற்றுவரும் தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகளை மேற்பார்வை ஆலோசகரின் குழு தலைவர் முன்னிலையில் டிரோன்மூலம் காணொளி எடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தின் ‘டேட்டா லேக்’கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்பார்வை ஆலாசகர்கள் இதை ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களை, டிஜிட்டல் மாதாந்திர அறிக்கையில் சமர்ப்பிக்கவேண்டும்.

7. ஆழ்கடல் திட்டத்தை செயல்படுத்தும் நடுவண் அமைச்சகம் எது?

அ) MSME அமைச்சகம்

ஆ) புவி அறிவியல் அமைச்சகம்

இ) வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஈ) சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்

  • நடுவண் புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆழ்கடல் ஆய்வுத்திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு ஒப்புதலளித்துள்ளது. இதன்மூலம் ஆழ்கடல் வளங்கள் ஆராயப்பட்டு நிலையான பயன்பாட்டுக்கான ஆழ்கடல் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும்.
  • ஒவ்வொரு கட்டமாக, ஐந்தாண்டு காலத்துக்கு அமல்படுத்தப்படவுள்ள இந்த ஆழ்கடல் ஆய்வுத்திட்டத்தின் செலவு `4,077 கோடியாக இருக்கும்.

8. கிழக்கு கடற்கரை பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதில் இந்தியாவின் முன்னணி பங்காளராக இருக்கும் வங்கி எது?

அ) AIIB

ஆ) ADB

இ) உலக வங்கி

ஈ) IMF

  • நாட்டின் கிழக்கு கடற்கரை பொருளாதார (ECEC) வழித்தடத்தை உரு வாக்குவதில் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இந்தியாவின் முன்னணி பங்காளராக இருக்கும். தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரை -யிலான தொழிலக வழித்தடத்தின் (CKIC) வழியாக போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்காக ADB’உம் நடுவணரசும் $484 மில் -லியன் டாலர் மதிப்பிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • CKIC, கிழக்கு கடற்கரை பொருளாதார வழித்தடத்தின் ஒருபகுதியாகும்; அது மேற்கு வங்கத்திலிருந்து தமிழ்நாடு வரை நீண்டுள்ளது.

9. நடப்பாண்டின் (2021) உலக குருதிக்கொடை நாள் நிகழ்வுகளை நடத்திய நாடு எது?

அ) ஐக்கிய அமெரிக்க நாடுகள்

ஆ) ஜெர்மனி

இ) இத்தாலி

ஈ) ஐக்கிய அரபு அமீரகம்

  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன்.14 அன்று உலக குருதிக்கொடை நாள் கடை -ப்பிடிக்கப்படுகிறது. பாதுகாப்பான குருதியின் தேவை மற்றும் குருதி மாற்றத்திற்குத் தேவையான குருதியின் உயிர்காக்கும் கூறுகள்குறித்து உலகம் முழுவதும் இந்நாள் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 2021ஆம் ஆண்டில் வரும், உலக குருதிக்கொடை நாளுக்கான வாசகமாக, “Give blood and keep the world beating” உள்ளது.
  • இத்தாலி தனது தேசிய குருதி மையம்மூலம், நடப்பாண்டின் (2021) உலக குருதிக்கொடை நாள் நிகழ்வுகளை நடத்தியது.

10. 2021 NATO உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட நகரம் எது?

அ) பிரஸ்ஸல்ஸ்

ஆ) ஜெனீவா

இ) கெய்ரோ

ஈ) தாவோஸ்

  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் நடப்பாண்டுக்கான (2021) உச்சி மாநாடு, NATO உறுப்புநாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களின் 31ஆவது கூட்டமாகும். இது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்
    -ஸில் நடைபெற்றது. சீனா, உலகிற்கு சவால்களை முன்வைக்கிறதென NATO தலைவர்கள் எச்சரித்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கலந்து கொண்ட முதல் NATO உச்சிமாநாடும் இதுதான்.
  • முன்னதாக G7 நாடுகளின் குழுமம், சீனா மற்றும் தைவானில் நிலவும் மனித உரிமைகள்குறித்தான ஓர் அறிக்கையை வெளியிட்டது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய – அமெரிக்க படைகள் கூட்டுப் பயிற்சி நிறைவு

இந்திய பெருங்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை மற்றும் இந்திய வான்படை மேற்கொண்ட இரண்டு நாள் ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சி நிறைவடைந்தது. இதுதொடர்பாக மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ப -ட்டுள்ளதாவது: இந்திய கடற்படையின் மிக் 29கே விமானம், நீண்டதூர ரோந்துவிமானம், கப்பல்கள், உலங்கூர்திகள் உள்ளிட்டவையும், இந்திய வான்படையின் ஜாகுவாா மற்றும் சு 30 MKI போர்விமானங்கள், வானி -லேயே எரிபொருள் நிரப்பும் விமானம் உள்ளிட்டவையும் இக்கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.

அமெரிக்கா தரப்பில் இருந்து ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி போர்க் கப்பல், F18 போர்விமானங்கள், தாக்குதல் உலங்கூர்திகள் உள்ளிட்ட
-வை 2 நாள் ஒருங்கிணைந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்றன. இரு நாடுகள் இடையேயான பாதுகாப்புப்படைகள் ஒத்துழைப்பை வலுப்படுத் -தவும், கூட்டு இராணுவங்கள் பகிாந்துகொள்ளக்கூடிய விஷயங்களை வலியுறுத்தவும், சர்வதேச கடல்பகுதிகளில் சுதந்திரத்தை உறுதிசெய்யவு -ம், திறந்தவெளி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பகுதிக்கான உரிமையை நிலைநாட்டவும், விதிமுறைகள் சார்ந்த படை நடவடிக்கைகள், சர்வதேச நெறிமுறைகளுக்கும் மற்றுமொரு மைல்கல் -லாக இந்தக் கூட்டுப் பயிற்சி அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சீர்மிகு நகரங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு மூன்றாமிடம்

சீர்மிகு நகரங்கள் (ஸ்மார்ட்சிட்டி) திட்டத்தைச் செயல்படுத்துவதில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு மூன்றாமிடம் பெற்றுள்ளது. நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக் -கில் கடந்த 2015 ஜூன்.25 அன்று சீர்மிகு நகரங்கள் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, நாட்டில் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு கட்டமைப்புவசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதன் ஆறாம் ஆண்டையொட்டி சிறப்பு விரு -துகளை மத்திய வீட்டுவசதி-நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறி -வித்தது. அதன்படி, சீர்மிகு நகரங்கள் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத் -துவதில் உத்தர பிரதேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் மத்திய பிரதேச மாநிலம் இரண்டாமிடத்தையும் தமிழ்நாடு மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் சண்டிகர் முதலிடத் -தைப் பிடித்துள்ளது. சிறந்த சீர்மிகு நகரத்துக்கான விருது மத்திய பிரதேசத்தின் இந்தூர், குஜராத் மாநிலத்தின் சூரத் ஆகியவற்றுக்கு வழ -ங்கப்பட்டுள்ளது. சீர்மிகு நகரங்கள் தலைமைத்துவ விருது ஆமதாபாத், வாராணசி, ராஞ்சி ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமூக அம்சங்கள், நிர்வாகம், கலாசாரம், நகர சுற்றுச்சூழல், சுகாதாரம், பொருளாதாரம், நீர்பயன்பாடு, நகரப்போக்குவரத்து உள்ளிட்ட பிரிவுகளி -ன்கீழ் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் கரோனா தொற்று மேலாண்மை, ஒருங்கி
-ணைந்த கட்டுப்பாட்டு மையங்கள், போக்குவரத்து நெரிசல் மேலாண்
-மை, திறந்தவெளியை முறையாகப் பயன்படுத்துதல், கழிவுகளிலிருந்து எரிசக்தி உற்பத்தி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள் -ளதாக மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்து உள்ளார்.

சுற்றுச்சூழலை மேம்படுத்தியதற்கான பிரிவில் இந்தூர், சூரத், ஈரோடு ஆகிய நகரங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. நகரப் போக்குவரத்து பிரிவில் ஔரங்காபாத், சூரத், ஆமதாபாத் ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. நகர சுற்றுச்சூழல் பிரிவில் போபால், சென்னை நகரங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. நிர்வாகப் பிரிவில் வதோதராவும், கலாசாரப் பிரிவில் இந்தூர், சண்டிகர் நகரங்களும், சுகா -தாரப்பிரிவில் திருப்பதி, இந்தூர் நகரங்களும் முதலிடம் பிடித்துள்ளன.

3. பினாகா ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது DRDO

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட நீண்டதூரம் சென்று தாக்கும் பினாகா ராக்கெட் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) நடத்தியது. ஒடிஸா மாநிலம் பாலேசுவரம் மாவட்டத் -திலுள்ள சந்திப்பூரில் மொத்தம் 25 பினாகா ராக்கெட்கள் வெற்றிகரமாக பரிசோதனை நடத்தப்பட்டது.

4. ‘பொலிவுரு நகரம்’ திருப்பதிக்கு 5 விருதுகள்

மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்மார்ட் நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் திருப்பதி மாநகருக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டிகளில் (பொலிவுரு நகர்) திருப்பதியும் ஒன்று. அதனால் திருப்பதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இங்கு சுத்தம் சுகாதாரமும் நன்றாகப்பேணப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மாநகரம் மத்திய அரசிடமிருந்து ஒரு விருதை பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக 5 விருதுகளை பெற்றுள்ளது.

இந்தூர், சூரத் நகரங்களுக்கு அடுத்து ஐந்து விருதுகளைப் பெற்ற ஒரே ‘பொலிவுரு நகர்’ திருப்பதி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அதில் சுத்தம் சுகாதாரம் பேணுதற்கும், இ-ஹெல்த் பிரிவுகளின் கீழ் நாட்டின் முதலிடமும், சிறந்த நகரம் மற்றும் எகானமி பிரிவுகளின் கீழ் இரண்டாம் இடமும், நகர்ப்புற சுற்றுச்சூழல் பிரிவின் கீழ் மூன்றாம் இடத்தையும் தக்க வைத்துக்கொண்டுள்ளது. முதன்முறையாக திருப்பதி நகருக்கு ஐந்து விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1. Darnella Frazier, who recently was honoured with special Pulitzer Award, is from which country?

A) USA

B) UK

C) Germany

D) Australia

  • The Pulitzer Prize is the most prestigious award given in the field of Journalism. Darnella Frazier, an American teenager who filmed the death of George Floyd, received a special citation. The Pulitzer committee honoured the New York Times with the prestigious public service award for its coverage of the Covid–19 pandemic.

2. Who is the winner of the women’s title of French Open tournament 2021?

A) Barbora Krejcikova

B) Naomi Osaka

C) Simona Halep

D) Jennifer Brady

  • Barbora Krejcikova won her maiden Grand Slam singles title at the French Open Tournament 2021. She became the first Czech woman in 40 years to win the tournament. She won the women’s doubles titles at the 2018 French Open, 2018 Wimbledon and 2021 French Open and the mixed doubles titles at the Australian Open in 2019, 2020, and 2021.

3. Who is the first player in the last 52 years to win all four Grand Slams twice?

A) Roger Federer

B) Novak Djokovic

C) Rafael Nadal

D) Stefanos Tsitsipas

  • Ace Tennis player Novak Djokovic made history with his 19th Grand Slam Title in the final of French Open Tournament 2021. In a 5–set thriller, Novak Djokovic beat Stefanos Tsitsipas. Djokovic also became the first in 52 years to win all 4 Grand Slams twice.

4. The National Maritime Heritage Complex is to be developed in which state?

A) Tamil Nadu

B) Maharashtra

C) Gujarat

D) Kerala

  • The Ministry of Culture and Ministry of Ports, Shipping and Waterways signed a Memorandum of Understanding (MoU) for ‘Cooperation in Development of National Maritime Heritage Complex (NMHC) at Lothal, Gujarat’. NMHC, a world–class facility is to be developed near the ASI site of Lothal, located about 80 kms away from Ahmedabad, Gujarat. The complex would be developed as an international tourist destination, where the maritime heritage of India would be showcased.

5. Which is the lead institution of India for the BRICS Network University?

A) IISc, Bangalore

B) IIT Mumbai

C) IIT Delhi

D) IIT Chennai

  • Indian Institute of Technology (IIT) Bombay, hosted a three–day virtual conference of BRICS Network Universities on electric mobility.
  • The conference is part of the events that India hosts under the education stream during its 13th BRICS Summit this year. BRICS Network University is a union of higher education institutions of the five BRICS member countries. IIT–Bombay is the lead institution of India for the BRICS Network University.

6. ‘Data Lake’, which was making news recently, is the online portal of which organisation?

A) RBI

B) NHAI

C) CBI

D) DRDO

  • The National Highways Authority of India (NHAI) mandated to use drones for monthly video recording of all national highway projects during their different stages of construction, operation and maintenance.
  • NHAI has directed contractors to carry out the drone video recording in the presence of the Supervision Consultant, and upload the status of the current and last month on ‘Data Lake’, the portal of NHAI.

7. Which is the Nodal Ministry of the Deep Ocean Mission?

A) Ministry of MSME

B) Ministry of Earth Sciences

C) Ministry of Commerce and Industry

D) Ministry of Health and Family Welfare

  • The Union Cabinet has approved ‘Deep Ocean Mission to study biodiversity, impact of climate change, and establish an offshore marine station to explore source of thermal energy.
  • The Ministry of Earth Sciences is the nodal Ministry of the mission, which aims to develop deep–sea technologies for sustainable use of ocean resources.

8. Which multilateral bank is the lead partner of India in developing the East Coast economic corridor?

A) AIIB

B) ADB

C) World Bank

D) IMF

  • The Asian Development Bank is the lead partner of India in developing the country’s East Coast economic corridor or ECEC. ADB and the Central government signed a USD 484 million loan in order to improve the transport connectivity through Chennai–Kanyakumari Industrial Corridor (CKIC) in Tamil Nadu. The CKIC is a part of the East Coast economic corridor, which stretches from West Bengal to Tamil Nadu.

9. Which country plays host to the World Blood Donor Day 2021 events?

A) USA

B) Germany

C) Italy

D) UAE

  • World Blood Donor Day is observed on June 14 every year, to create awareness across the world about the need for safe blood and life–saving components of blood required for transfusion.
  • For 2021, the World Blood Donor Day slogan will be “Give blood and keep the world beating”. Italy hosts the World Blood Donor Day 2021 through its National Blood Centre.

10. The 2021 NATO Summit was organised in which city?

A) Brussels

B) Geneva

C) Cairo

D) Davos

  • The 2021 summit of the North Atlantic Treaty Organization was the 31st formal meeting of the heads of state and heads of government of NATO. It was held in Brussels, Belgium. NATO leaders warned that China presents systemic challenges to the world.
  • This was also the first NATO Summit attended by the US President Joe Biden. Earlier Group of Seven (G7) rich nations issued a statement on human rights in China and Taiwan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!