TnpscTnpsc Current Affairs

26th & 27th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

26th & 27th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th & 27th March 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

March Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. பார்முலா–1இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளராகவுள்ள இந்திய தொலைத்தொடர்பு நிறுவனம் எது?

அ) ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

ஆ) TATA கம்யூனிகேஷன் 

இ) பார்தி ஏர்டெல்

ஈ) BSNL

  • மும்பையைச் சார்ந்த டாடா கம்யூனிகேஷன்சும் பார்முலா –1உம் பல்லாண்டுகால உத்திசார் கூட்டாண்மையை அறிவித்துள்ளன. இதன்மூலம், டாடா கம்யூனிகேஷன்ஸ் பார்முலா–1இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இணைப்பு வழங்குநராகும்.
  • இதன்மூலம் F1–ஐ உலக அளவில் 500 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களுக்கு ஒளிபரப்ப இயலும்.

2. எட்டிகோப்பகா பொம்மைகளுடன், “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற கருத்தைச் செயல்படுத்திய முதல் இரயில் நிலையம் எது?

அ) மைசூரு

ஆ) விசாகப்பட்டினம் 

இ) ஹைதராபாத்

ஈ) கொச்சின்

  • கீழைக்கடற்கரை இரயில்வேயில், விசாகப்பட்டினம் ரயில் நிலையம், “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற கருத்தை செயல்படுத்தும் முதல் இரயில் நிலையம் ஆனது.
  • இதற்கான கருத்தாக்கம் சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் –பட்டிருந்தது. எட்டிகோப்பகா பொம்மைகள் மற்றும் கை வினைப் பொருட்கள் விசாகப்பட்டின ரயில் நிலையத்தில் 15 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் காட்சிப்படுத்தப் –பட்டு விற்பனை செய்யப்படும்.

3. ‘டோல் உத்சவம்’ கொண்டாடப்படுகிற மாநிலம் எது?

அ) மத்திய பிரதேசம்

ஆ) ஹரியானா

இ) மேற்கு வங்கம் 

ஈ) இராஜஸ்தான்

  • மேற்கு வங்க மக்கள் வண்ணங்களின் திருவிழாவைக் ‘டோல் உத்சவம்’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இக்கலாசார திருவிழா வசந்தகாலத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில், வசந்த விழா ‘டோல் உத்சவம்’, ‘டோல் யாத்ரா’, ‘டோல் பூர்ணிமா’ மற்றும் ‘வசந்தா உத்சவம்’ என்று கொண்டாடப்படுகிறது.

4. ‘ஆர்டெமிஸ்–1’ என்பது எந்த விண்வெளி முகமையின் முதன்மைத் திட்டமாகும்?

அ) இஸ்ரோ

ஆ) NASA 

இ) ESA

ஈ) JAXA

  • ‘ஆர்டெமிஸ்’ என்பது NASAஇன் முதன்மைத் திட்டமாகும். இது 2020–களின் இறுதிக்குள் நிலவில் நீண்ட கால, நிலையான மனித இருப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NASA சமீபத்தில் தனது ‘ஆர்ட்டெமிஸ்–1’ நிலவுப் பயணத்தை கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சோதித்தது.

5. ‘Ex–DUSTLIK’ என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் ஒரு கூட்டு பாதுகாப்புப் பயிற்சியாகும்?

அ) இலங்கை

ஆ) பிரான்ஸ்

இ) உஸ்பெகிஸ்தான் 

ஈ) ஓமன்

  • ‘Ex–DUSTLIK’ எனப் பெயரிடப்பட்ட இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தானின் படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியின் மூன்றாவது பதிப்பு உஸ்பெகிஸ்தானின் யாங்கியாரிக்கில் தொடங்கியது.
  • இந்தியாவை அதன் கிரெனேடியர்ஸ் படையணிப்பிரிவும் உஸ்பெகிஸ்தானை அதன் வடமேற்கு இராணுவ துருப்புகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
  • DUSTLIK–இன் இதற்கு முந்தைய பதிப்பு உத்தரகாண்டின் இராணிகேட்டில் நடைபெற்றது.

6. 2022 – ‘பீகார் திவாஸி’ன் கருப்பொருள் என்ன?

அ) ஜல் ஜீவன் ஹரியாலி 

ஆ) ஸ்வச் பீகார்

இ) பீகார் பேட்டி பதாவோ

ஈ) ஜல் சக்தி

  • பீகார் அதன் 110ஆவது உதய நாளை மார்ச்.22 அன்று கொண்டாடியது. கடந்த 1912ஆம் ஆண்டு இதே நாளில் வங்காள மாகாணத்திலிருந்து பீகார் பிரிக்கப்பட்டது. இந்த ஆண்டு பீகார் திவாஸின் கருப்பொருள், ‘ஜல் ஜீவன் ஹரியாலி’ என்பதாகும்.

7. பிப்லோபி பாரத் காட்சியகம் சமீபத்தில் எந்த நகரத்தில் திறக்கப்பட்டது?

அ) புவனேஷ்வர்

ஆ) கொல்கத்தா 

இ) கௌகாத்தி

ஈ) சிம்லா

  • கொல்கத்தாவின் விக்டோரியா நினைவரங்கில் உள்ள பிப்லோபி பாரத் காட்சிக்கூடத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சிமூலம், ‘ஷாஹீத் திவாஸ்’ என்ற விழாவில் திறந்து வைத்தார்.
  • விடுதலைப்போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்களிப்பையும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு அவர்களின் எதிர்ப்பையும் இந்தக் காட்சிக்கூடம் காட்சிப்படுத்துகிறது.

8. “Step–Up to End TB – உலக காசநோய் நாள் உச்சி மாநாடு – 2022” ஏற்பாடு செய்யப்பட்ட நகரம் எது?

அ) புது தில்லி 

ஆ) மும்பை

இ) கொச்சி

ஈ) சென்னை

  • மத்திய சுகாதார அமைச்சர் Dr மன்சுக் மாண்டவியா, புது தில்லியில் உலக காசநோய் நாளையொட்டி, “Step–Up to End TB – உலக காசநோய் நாள் உச்சிமாநாட்டை” தொடங்கி வைத்தார். கடந்த 2018ஆம் ஆண்டில், பிரதமர் மோடி தில்லி காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கினார் மற்றும் 2030ஆம் ஆண்டின் காசநோய் தொடர்பான SDG இலக்கிற்கு 5 ஆண்டுகட்கு முன்னதாக, 2025ஆம் ஆண்டளவில் இந்தியாவில் காச நோயை முடிவுக்குக் கொண்டுவர அவர் முன்மொழிந்தார்.

9. BRICS தடுப்பூசி R மற்றும் D மையம் மற்றும் தடுப்பூசி கூட்டாண்மை குறித்த பயிலரங்கைத் தொடங்கியுள்ள நாடு எது?

அ) இந்தியா 

ஆ) பிரேசில்

இ) சீனா

ஈ) ரஷ்யா

  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் Dr மன்சுக் மாண்டவியா, BRICS தடுப்பூசி R&D மையம் மற்றும் பிற BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) தலைவர்களுடன் இணைந்து தடுப்பூசி கூட்டாண்மை குறித்த பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். இந்த மையம், கடந்த 2018 ஜோகன்னஸ்பர்க் பேரறிவிப்பின் ஒருபகுதியாக அமைக்க திட்டமிடப்பட்டது.

10. 2022 – இந்தியா–ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ) டோக்கியோ

ஆ) புது தில்லி 

இ) சென்னை

ஈ) ஒசாகா

  • இந்தியா–ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு 2022–இன் போது புதுதில்லியில் பிரதமர் மோடியும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஜப்பான் இந்தியாவில் 5 டிரில்லியன் யென் அல்லது `3.2 இலட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக இந்தியப் பிரதமர் அறிவித்தார்.
  • ஜப்பானிய அரசாங்கத்தின் தலைவராக ஜப்பான் பிரதமர் இந்தியா வருவது இது முதல் முறையாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தை (PM-GKAY) மேலும் ஆறு மாதங்களுக்கு (ஏப்ரல்-செப்டம்பர், 2022) நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PM-GKAY) திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. செப்டம்பர் 2022 (கட்டம் VI).

உலகின் மிகப்பெரிய உணவுப்பாதுகாப்புத் திட்டமாக பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் (PM-GKAY) திட்டம் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் மொத்தம் `3.40 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்தத் திட்டத்தின்கீழ் 80 கோடி பேர் பயன்பெறுவர். இதற்கான முழு நிதியையும் மத்திய அரசே வழங்கும்.

நீட்டிக்கப்பட்ட பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளியும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களுடன் கூடுதலாக நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும்.

2. உலக பாரம்பரிய மருத்துவ மையம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு கையெழுத்து

குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலக பாரம்பரிய மருத்துவ மையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் உலக சுகாதார அமைப்புடன் மையத்தின் தாயகமான இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இதன் இடைக்கால அலுவலகம் குஜராத்தின் ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இயங்கும். மத்திய அரசின் 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் இந்த மையம் செயல்படும்.

உலக மக்களின் ஒட்டுமொத்த நலனை முன்னேற்றுவதற்கான, உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய மருத்துவ வளத்தை நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமாக மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

3. தேசிய ஓட்டப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ரயில்வேயின் மகளிர் அணி தங்கம் வென்றது

நாகாலாந்து தலைநகர் கோகிமாவில் நடைபெற்ற 56ஆவது தேசிய ஓட்டப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய ரயில்வே அணி தங்கம் வென்றது. இரயில்வே விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த வர்ஷா தேவி, மஞ்சு யாதவ், பிரினு யாதவ், மன்னி தேவி ஆகியோரைக் கொண்ட குழு போட்டியில் இந்தப் பதக்கத்தை வென்றது,

ஆடவர் பிரிவில் இந்திய இரயில்வே அணியின் நரேந்திர பிரதாப், தினேஷ், வீரேந்திர குமார் பால், ஹர்ஷத் மாத்ரே ஆகியோரைக் கொண்ட குழு வெள்ளி வென்றது.

நாட்டில் மிகப்பெரிய விளையாட்டுப் பணியாளர்களை கொண்ட துறையாக இந்திய இரயில்வே உள்ளது. நாட்டின் விளையாட்டுப் பிரிவில் அளவில்லா பங்களிப்பை அது வழங்கியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற 7 பதக்கங்களில் 4 பதக்கங்களை வென்றவர்கள் இந்திய இரயில்வேயைச் சேர்ந்தவர்கள்.

4. சென்ட்ரல் இரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுப் புடவை அரங்கு

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில், ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின்’கீழ், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளின் விற்பனை அரங்கு திறக்கப்பட்டது.

5. இதயநோயால் 28% உயிரிழப்பு

நாட்டில் கடந்த 2016-இல் பதிவான மொத்த உயிரிழப்புகளில் 28 சதவீதம் இதயம் தொடர்புடைய நோய்களால் ஏற்பட்டவை என மக்களவையில் சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட ஆய்வு முடிவின்படி, கடந்த 2016-இல் பதிவான உயிரிழப்புகளில் 28.1% இதயநோயால் பதிவானவை என்பது தெரியவந்து உள்ளது. இதுவே கடந்த 1990-இல் 15.2 சதவீதமாக இருந்தது. இதேபோல, நாட்டில் பதிவான உயிரிழப்புகளில் 63% தொற்றாநோய்களின் காரணமாக ஏற்பட்டவை என அதில் இணையமைச்சர் பாரதி பவார் தெரிவித்துள்ளார்.

6. NITI ஆயோக்கின் ஏற்றுமதி தயார்நிலைக்குறியீடு: குஜராத் 2ஆம் ஆண்டாக முதலிடம்; தமிழகம் 4ஆம் இடம்

NITI ஆயோக்கின் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு 2021-இல் குஜராத் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாநிலங்களின் ஏற்றுமதிக்கான திறன் மற்றும் செயல்பாடுகள் எந்த அளவுக்கு தயார்நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதை அடிப்படையாகக் கொண்டு NITI ஆயோக் ஏற்றுமதி தயார்நிலைப்பட்டியல் வெளியிடப்படுகிறது.

2021-க்கான இப்பட்டியலில் குஜராத் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழகம், ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஆந்திரபிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

லட்சத்தீவு, அருணாசல பிரதேசம், மிசோரம், லடாக் மற்றும் மேகாலயா ஆகியவை ஏற்றுமதி தயார்நிலை பட்டியல்-2021-இல் கடைசி நிலைகளில் இடம்பெற்றுள்ளன. மொத்த ஏற்றுமதியில் 70% பங்களிப்பில் மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், தமிழகம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. Which Indian Telecom Company is the Official Broadcast Connectivity Provider of Formula 1?

A) Reliance Communication

B) TATA Communication 

C) Bharti Airtel

D) BSNL

  • Mumbai–based Tata Communications and Formula 1 have announced a multi–year strategic collaboration. With this, Tata Communications is the Official Broadcast Connectivity Provider of Formula 1. This will enable F1 to broadcast to more than 500 million fans globally.

2. Which is the first Railway station to implement “One Station One Product” concept, with its Etikoppaka Toys?

A) Mysore

B) Visakhapatnam 

C) Hyderabad

D) Cochin

  • The Vishakapatnam station is be the first station in the East Coast Railway to implement the “One Station One Product” concept. The concept has been announced in the recent budget. Etikoppaka toys and handicraft products from the village will be showcased and sold at the Vishakapatnam station, on a pilot basis for a period of 15 days.

3. ‘Dol Utsav’ is predominantly celebrated in which Indian state?

A) Madhya Pradesh

B) Haryana

C) West Bengal 

D) Rajasthan

  • The people of West Bengal celebrate the festival of colours, predominantly known as Dol Utsav in the state. This cultural festival marks the onset of spring season.
  • In Eastern parts of the India, the festival of spring is celebrated as Dol Utsav, Dol Jatra, Dol Purnima and Basanta Utsav.

4. ‘Artemis 1’ is the flagship program of which space agency?

A) ISRO

B) NASA 

C) ESA

D) JAXA

  • ‘Artemis’ is the flagship program of NASA, which aims to establish a long–term, sustainable human presence on the moon by the end of the 2020s. NASA recently began rolling its Artemis 1 moon mission out to the launch pad for testing at Kennedy Space Center (KSC).

5. ‘Ex–DUSTLIK’ is a Joint Defence Exercise held between the armed forces of India and which country?

A) Sri Lanka

B) France

C) Uzbekistan 

D) Oman

  • The third edition of the joint training exercise between India’s and Uzbekistan’s armies named ‘EX–DUSTLIK’ began in Uzbekistan’s Yangiarik.
  • India is represented by its Grenadiers Regiment while the Uzbek Army contingent is represented by troops of the North Western Military District. The last edition of DUSTLIK was held in Uttarakhand’s Ranikhet.

6. What is the theme of ‘Bihar Diwas’ 2022?

A) Jal Jivan Haryali 

B) Swachh Bihar

C) Bihar Beti Padhao

D) Jal Shakti

  • Bihar celebrated its 110th foundation day on March 22. The state of Bihar was carved out from Bengal’s presidency on the same day in 1912. The theme of this year’s Bihar Diwas is ‘Jal Jivan Haryali’.

7. Biplobi Bharat Gallery was recently inaugurated at which city?

A) Bhubaneshwar

B) Kolkata 

C) Guwahati

D) Shimla

  • Prime Minister Narendra Modi inaugurated the Biplobi Bharat Gallery at Victoria Memorial Hall, Kolkata via video conferencing on the occasion of Shaheed Diwas.
  • The Gallery showcases the contribution of the Revolutionaries in the freedom struggle and their resistance to British colonial rule.

8. In which city, was the “Step–Up to End TB– World TB Day Summit 2022” organised?

A) New Delhi 

B) Mumbai

C) Kochi

D) Chennai

  • Union Health Minister Dr Mansukh Mandaviya inaugurated the “Step–Up to End TB – World TB Day Summit” on the occasion of World Tuberculosis Day at New Delhi. In 2018, Prime Minister Narendra Modi chaired the Delhi End TB summit and proposed to End TB in India by 2025, five years ahead of the TB–related SDG targets of 2030.

9. Which country launched the ‘BRICS Vaccine R&D Centre and Workshop on Vaccine Cooperation’?

A) India 

B) Brazil

C) China

D) Russia

  • Union Minister of Health and Family Welfare Dr Mansukh Mandaviya launched the BRICS Vaccine R&D Centre and Workshop on Vaccine Cooperation with other BRICS (Brazil, Russia, India, China, and South Africa) leaders. The BRICS Vaccine R&D Centre was proposed to be set up as part of the 2018 Johannesburg Declaration.

10. Where was the India–Japan Annual Summit 2022 held?

A) Tokyo

B) New Delhi 

C) Chennai

D) Osaka

  • Prime Ministers Narendra Modi and his Japanese counterpart Fumio Kishida held talks in New Delhi during the India–Japan Annual Summit 2022. After the Meet, the Indian Prime Minister announced that Japan is set to invest 5 trillion yen or Rs 3.2 lakh crore in India over next 5 years. This is Japan PM’s first visit to India as the head of the Japanese government.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!