TnpscTnpsc Current Affairs

26th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

26th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 26th April 2022 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

1. வெப்பமண்டலப் புயலான மெகி தாக்கிய நாடு எது?

அ) ஜப்பான்

ஆ) பிலிப்பைன்ஸ் 

இ) இந்தோனேசியா

ஈ) இலங்கை

 • அண்மையில் பிலிப்பைன்ஸை வெப்பமண்டலப் புயலான ‘மெகி’ தாக்கியது. இப்புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி ஐம்பத்தெட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு மற்றும் கிழக்கு பிலிப்பைன்ஸ் தீவுகளில் 1,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் இப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2. ‘கூட்டுறவுக் கொள்கைக்கான தேசிய மாநாடு’ நடக்கும் இடம் எது?

அ) வாரணாசி

ஆ) காந்தி நகர்

இ) புது தில்லி 

ஈ) புனே

 • ‘கூட்டுறவுக் கொள்கைக்கான தேசிய மாநாடு’ சமீபத்தில் புது தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். நாட்டில் புதிய கூட்டுறவுக் கொள்கையின் அவசியத்தை அவர் அப்போது வலியுறுத்தினார்.
 • தொடக்க வேளாண்மைக் கடன் சங்கம் மற்றும் உயர் மட்ட கூட்டுறவுக் கூட்டமைப்புச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் புதிய கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் என்றும் அவர் அறிவித்தார்.

3. 2022ஆம் ஆண்டில், ‘உலக மர நகரங்களுள்’ ஒன்றென அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்திய நகரம் எது?

அ) சென்னை

ஆ) ஹைதராபாத் 

இ) மதுரை

ஈ) திருவனந்தபுரம்

 • தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ஹைதராபாத் நகரம் ‘உலக மர நகரங்களுள் – Tree Cities of the World’ ஒன்று என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது அர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐநா-இன் உணவு மற்றும் உழவு அமைப்பால் வழங்கப்படும் ஓர் அங்கீகாரமாகும். கடந்த 2 ஆண்டுகளில் 3.50 கோடி மரக்கன்றுகள் நட்டதற்காக, அந்நகரத்துக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

4. எதன் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல்.13 அன்று இந்திய ராணுவம் சியாச்சின் நாளை நினைவுகூர்கிறது?

அ) ஆபரேஷன் விஜய்

ஆ) ஆபரேஷன் மேகதூதம் 

இ) ஆபரேஷன் புளூ நைல்

ஈ) ஆபரேஷன் கார்கில்

 • ‘ஆபரேஷன் மேகதூதத்தின்’கீழ் இந்திய இராணுவத்தின் வீரதீரத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஏப்.13 அன்று சியாச்சின் நாளை இந்திய இராணுவம் கொண்டாடுகிறது. 1984ஆம் ஆண்டு இந்திய இராணுவம் சால்டோரோ முகடு, சியா லா மற்றும் பிலாபோன்ட் லா ஆகிய முக்கிய கணவாய்களில் ஆதிக்கம் செலுத்தும் கட்டுப்பாட்டைப் பெற்றது.

5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஜீரோ கோவிட் கொள்கை’யுடன் தொடர்புடைய நாடு எது?

அ) இந்தியா

ஆ) ரஷ்யா

இ) சீனா 

ஈ) ஜெர்மனி

 • அதன் ‘ஜீரோ-கோவிட் கொள்கை’யின் மீதான உலகளா -விய விமர்சனங்களுக்கு இடையே, சீனா தனது கடுமையான கொரோனா வைரஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அது பல்வேறு சீனத்து நகரங்களில் பெரும் இன்னல்களை ஏற்படுத்தியது. உலகளாவிய நிதி மையமான ஷாங்காய் கடுமையான நடவடிக்கைகளால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சாமியா சுலுஹு ஹாசன், எந்த நாட்டின் முதல் பெண் அதிபராவார்?

அ) தென்னாப்பிரிக்கா

ஆ) தான்சானியா 

இ) லிபியா

ஈ) எகிப்து

 • தான்சானியாவின் முதல் பெண் அதிபர் சாமியா சுலுஹு ஹாசன் ஆவார். கீழை-ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய நாடான இது கிளிமஞ்சாரோ தேசியப் பூங்காவிற்குப் பெயர்பெற்றதாகும்.
 • சமீபத்தில், அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற முதல் பெண்மணி கமலா ஹாரிஸை தான்சானிய அதிபர் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அதிக முதலீட்டாளர்களை தான்சானியா நோக்கி ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7. உலக வங்கி கூற்றுப்படி, ஒருவர் தீவிர வறுமையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டால் அவரது தினசரி செலவு வரம்பு எவ்வளவு?

அ) $1.90 

ஆ) $2.50

இ) $3.20

ஈ) $5.00

 • உலக வங்கியின் கூற்றுப்படி, நாளொன்றுக்கு $1.90 டாலருக்கும் குறைவான (சுமார் `145) செலவினத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துவோரின் எண்ணிக்கையின் அடிப்படையில் தீவிர வறுமை அளவிடப்படுகிறது.
 • உலக வங்கியானது சமீபத்தில் “Poverty in India Has Declined over the Last Decade But Not As Much As Previously Thought” என்ற தலைப்பிலான ஒரு திட்டமிடும் ஆவணத்தை வெளியிட்டது. இந்தியாவில், COVID-க்கு முந்தைய ஆண்டில் (2019) 10.2%ஆக தீவிர வறுமை இருந்தது. 2011-இல் அந்தச் சதவீதம் 22.5%ஆக இருந்தது.

8. எந்த மத்திய அமைச்சகம், 1 இலட்சத்திற்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் நல மையங்களில் ‘வட்டார அளவிலான நல விழாக்களை’ நடத்தியது?

அ) பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஆ) சுகாதார அமைச்சகம் 

இ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஈ) கல்வி அமைச்சகம்

 • மத்திய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களில் வட்டார அளவிலான நல விழாக்களை ஏற்பாடு செய்து வருகிறது.
 • இது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, தகவல் மற்றும் ஒலிபரப்பு, பஞ்சாயத்து ராஜ், ஆயுஷ் மற்றும் கல்வி போன்ற தொடர்புடைய அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 • இவ்விழாக்கள் ஆயுஷ்மான் பாரத்-உடல்நலம் மற்றும் நல மையங்கள் மற்றும் தொலைமருத்துவ & தொலைநிலை ஆலோசனைகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமுதப் பெருவிழாவின் ஒருபகுதியாக உள்ளது.

9. 2022 – பன்னாட்டு நீர் வாரம் – நீர் மாநாட்டை நடத்தும் நாடு எது?

அ) இந்தியா

ஆ) சிங்கப்பூர் 

இ) நேபாளம்

ஈ) வங்காளதேசம்

 • இந்தியாவின் தேசிய தூய்மை கங்கை திட்டத்தின் தலைமை இயக்குநர், சிங்கப்பூரில் நடந்தேறிய 2022 – பன்னாட்டு நீர் வாரம், நீர் மாநாட்டில் மெய்நிகராகப் பங்கேற்று, “இந்தியாவில் கழிவுநீர் உற்பத்தி, சுத்திகரிப்பு & மேலாண்மையின் நிலை” குறித்து விளக்கமளித்தார்.

10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பிரவிந்த் குமார் ஜக்நாத் என்பவர் எந்த நாட்டின் பிரதமராவார்?

அ) இலங்கை

ஆ) மொரிஷியஸ் 

இ) மாலத்தீவுகள்

ஈ) மலேசியா

 • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் மொரீஷியசு பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், உயர்மட்டக் குழுவுடன் இந்தியா வந்தடைந்தார். ஜாம்நகரில் அமைய உள்ள WHO – உலகளாவிய பாரம்பரிய மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும், காந்திநகரில் அமையவுள்ள உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க மாநாடு ஆகியவற்றிலும் ஜகநாத் பங்கேற்கவுள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தேசிய அளவிலான தளவாடப் போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கு ‘லோஜிசெம் வாயு – 2022’ தில்லியில் நடைபெறுகிறது

ஏப்ரல் 28ஆம் தேதி புது தில்லியில் உள்ள விமானப்படை அரங்கத்தில் தேசிய அளவிலான ஆயுத தளவாடப் போக்கு வரத்து தொடர்பான கருத்தரங்கிற்கு இந்திய விமானப் படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கருத்தரங்கின் கருப் பொருள், “விமானப்போர் நடவடிக்கைகளுக்கான லாஜிஸ்டிக்ஸ் ஆதரவை ஒழுங்கமைத்தல்” என்பதாகும்.

2. சென்னைக்கு வந்த வங்கதேச கடலோர காவல்படை ரோந்துக் கப்பல் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு

வங்கதேச நாட்டின் கடலோர காவல்படை கப்பல் ‘கமர் உஸ்மான்’ சென்னை துறைமுகத்திற்கு நல்லெண்ணப் பயணமாக வந்தடைந்தது. இக்கப்பலுக்கு இந்திய கடலோரக் காவல் படை சார்பில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

எட்டாவது தேசிய அளவிலான மாசு கட்டுப்பாடு குறித்த பயிற்சி முகாம் கடந்த ஏப்.18 முதல் 20-ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வங்கதேச கடலோர காவல் படை ரோந்துக் கப்பல் ‘கமர் உஸ்மான்’ பயிற்சி முகாமை முடித்துவிட்டு நாடு திரும்பும் வழியில் சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்தது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

3. சென்னையில் `2 கோடியில் குத்துச்சண்டை அகாதெமி: அமைச்சர் சிவ வீ மெய்யநாதன்

சென்னையில் `2 கோடி செலவில் குத்துச்சண்டை அகாதெமி அமைக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் அறிவித்தார்.

4. மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்: தமிழ்நாட்டுக்கு தேசிய விருது

மலேரியா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்புற மேற்கொண்டதற்காக தமிழ்நாட்டுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் நடைபெற்ற உலக மலேரியா நாள் விழாவில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இவ்விருதை தமிழ்நாட்டு பொது சுகாதாரத்துறை இயக்குநர் Dr செல்வவிநாயகம் அவர்கட்கு வழங்கினார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

2024ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் மலேரியா நோயை முழுமையாக ஒழித்திட மாநில அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் மலேரியா நோய் பாதிப்பு வெகுவாக குறைக்கப்பட்டு கட்டுக்குள்ளது. கொசுக்களால் பரவும் நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் உட்பட அனைத்து நோய்களும் தமிழக அரசின் தீவிர தொடர் தடுப்பு நடவடிக்கைகளால் குறைக்கப்பட்டு, தற்போது மலேரியா நோய் ஒழிக்கப்படும் தருவாயில் உள்ளது.

1990-களில் 1.20 லட்சமாக இருந்த மலேரியா நோய் பாதிப்புகள் 2011-ஆம் ஆண்டில் 22,171-ஆக குறைந்து தற்போது 772-ஆக உள்ளது.

கொசுவிலிருந்து பரவும் மலேரியா பிளாஸ்மோடியம் எனும் ஒட்டுண்ணியால் இந்நோய் உண்டாகின்றது. இந்த தொற்று அனாபிலிஸ் பெண் கொசுக்கள்மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்தியாவில் இரண்டு வகை மலேரியா ஒட்டுண்ணிகளான பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் மற்றும் பிளாஸ்மோடியம் பால்சிபாரம் மட்டுமே உள்ளது.

இந்தியாவில் மலேரியாவை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழநாட்டில் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் மலேரியா நோயை ஒழிக்க இலக்குடன் அதனை அடைவதற்கு பல்வேறு நடவடிக்கைகளும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5. ராணுவ செலவினத்தை 0.9% அதிகரித்துள்ள இந்தியா: சீனா 4.7% அதிகரிப்பு: சர்வதேச ஆய்வறிக்கையில் தகவல்

ராணுவத்துக்கான செலவினத்தை 2021-ஆம் ஆண்டில் `5.86 லட்சம் கோடியாக இந்தியா அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 0.9% கூடுதலாகும்.

போர் மற்றும் ஆயுத கட்டுப்பாடு தொடர்பாக சர்வதேச அளவில் ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பான ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI)’ வெளியிட்ட ஆய்வறிக்கைமூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதில் உலகிலேயே இரண்டாவது நாடான சீனா, 2021-ஆம் ஆண்டில் அந் நாட்டு பாதுகாப்புத் துறைக்கு `22.43 லட்சம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4.7% கூடுதலாகும். 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 72 சதவீதம் கூடுதலாகும்.

அதுபோல, இந்தியாவும் ராணுவத்துக்கான செலவினத்
-தை 2021-ஆம் ஆண்டில் `5.86 லட்சம் கோடியாக இந்தியா அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 0.9% கூடுதலாகும். 2012-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 33% கூடுதலாகும்.

ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் உலக நாடுகளில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் நான்காமிடத்திலும், ஐந்தாவது இடத்தில் ரஷியாவும் உள்ளன.

உலகின் மொத்த ராணுவ செலவினத்தில் இந்த ஐந்து நாடுகளின் பங்களிப்பு 62 சதவீதமாகும். அதில் அமெரிக்கா, சீனா இரு நாடுகள் மட்டுமே 52% அளவு பங்களிப்பைக் கொண்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா – ஓசியானா ராணுவ செலவினமும் அதிகரிப்பு:

ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்பட 4 நாடுகளை உள்ளடக்கிய ஓசியானா பிராந்தியத்தின் ஒட்டுமொத்த ராணுவ செலவினமும் 2021-இல் கூடுதலாகியிருப்பது இந்த ஆய்வறிக்கைமூலம் தெரியவந்துள்ளது. இந்தப் பிராந்தியத்தின் 2021-ஆம் ஆண்டு ராணுவ செலவினம் `44.87 லட்சம் கோடியாகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.5% கூடுதலாகும். இதில் இந்தியா, சீனா இரு நாடுகளின் பங்கு மட்டும் 63 சதவீதமாகும்.

இந்தப் பிராந்தியத்தில் ராணுவ செலவினம் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார் எலான் மஸ்க்

டுவிட்டர் நிறுவனத்தை டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் அளித்து கையகப்படுத்த முடிவானது.

இது தொடர்பாக டுவிட்டர் – எலான் மஸ்க் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்காக 43 பில்லியன் டாலர் (சுமார் `3.10 லட்சம் கோடி) ரொக்கம் அளிக்கத் தயார் என்றும் அவர் கூறியிருந்தாா். இதையடுத்து நிறுவனத்தை அவர் கையகப்படுத்த இயலாத வகையில் பங்கு ஒழுங்காற்று விதிமுறைகளின் கீழ் டுவிட்டர் நிர்வாகம் தடைகளை ஏற்படுத்தியது. எனினும், எலான் மஸ்க் அல்லது இதே போன்ற கையகப்படுத்தும் நோக்கத்துடன் முன்வரும் வேறு ஏதேனும் முதலீட்டாளரை நிரந்தரமாகத் தடுத்துவிட முடியாது என்ற நிலையில், டுவிட்டர் நிறுவனம் மனம் மாறியது.

பேச்சுவார்த்தையின் இறுதியில் 44 பில்லியன் டாலர் (சுமார் `3.36 லட்சம் கோடி) அளித்து டுவிட்டரின் முழுப் பங்குகளை எலான் மஸ்க் பெற முடிவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை விவரம் வெளியானதும் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் டுவிட்டர் பங்கு விலை 3 சதவீதம் அதிகரித்தது.

1. Which country has been hit by Tropical Storm Megi?

A) Japan

B) Philippines 

C) Indonesia

D) Sri Lanka

 • Philippines has been recently hit by Tropical Storm Megi and the death toll from landslides and floods after the storm rose to 58. Over 1,00,000 people in southern and eastern Philippines islands have been affected by the storm. Villages around Baybay city in the central Leyte province are worse hit by the storm.

2. Which is the venue of the ‘National Conference on Cooperation Policy’?

A) Varanasi

B) Gandhi Nagar

C) New Delhi 

D) Pune

 • The ‘National Conference on Cooperation Policy’ was recently organised in New Delhi. Minister of Home Affairs and Cooperation Amit Shah addressed the conference.
 • He has stressed the need for a new cooperative policy in the country. He also announced that the Centre will come up with the new policy which will address the issue of Primary Agricultural Credit Society to Apex Cooperative Federation.

3. Which Indian city has been recognised as one of the ‘Tree Cities of the World’ in 2022?

A) Chennai

B) Hyderabad 

C) Madurai

D) Thiruvananthapuram

 • For the second consecutive year, Hyderabad has been recognised as one of the ‘Tree Cities of the World’. It is a tag presented by Arbor Day Foundation and Food and Agriculture Organization of United Nations.
 • Over 3.50 Crore trees have been planted over the last two years, according to the certification of recognition given to the city.

4. Indian Army marks Siachen Day on April 13 every year, to commemorate which operation?

A) Operation Vijay

B) Operation Meghdoot 

C) Operation Blue Nile

D) Operation Kargil

 • Indian Army marks Siachen Day on April 13 every year, to commemorate the courage of the Indian Army under “Operation Meghdoot”. In 1984, the Indian army gained control over the dominating heights on the main passes of the Saltoro ridge, Sia La and Bilafond La.

5. ‘Zero–Covid policy’, which was seen in the news recently, is associated with which country?

A) India

B) Russia

C) China 

D) Germany

 • Amid growing global criticism over its zero–Covid policy, China defended its strict coronavirus measures that have resulted in hardship in several Chinese cities. The global financial hub Shanghai is claimed to be worse hit by the strict measures.

6. Samia Suluhu Hassan, who was seen in the news recently, is the first female President of which country?

A) South Africa

B) Tanzania 

C) Libya

D) Egypt

 • Samia Suluhu Hassan is the first female President of Tanzania. It is the largest country in East–African region and known for the Kilimanjaro National Park. Recently, the President of the Country met Kamala Harris, the first woman and first woman of color to be Vice President of the United States. This meeting is expected to pull more investors towards Tanzania.

7. As per the World Bank, what is the daily expense limit below which a person is classified to be in Extreme Poverty?

A) $1.90 

B) $2.50

C) $3.20

D) $5.00

 • As per the World Bank, Extreme poverty is measured in terms of the number of people living on less than USD 1.90 a day (around Rs 145).
 • The World Bank recently released a working paper, titled ‘Poverty in India Has Declined over the Last Decade but Not as Much as Previously Thought’. Extreme poverty in India dropped to 10.2% in the pre–Covid year of 2019 from 22.5% in 2011.

8. Which Union Ministry organises ‘Block Level Health Melas’ at more than 1 lakh Ayushman Bharat–Health and Wellness Centres?

A) Ministry of Women and Child Development

B) Ministry of Health 

C) Ministry of Social Justice and Empowerment

D) Ministry of Education

 • The Union Health Ministry is organising Block Level Health Melas at more than one lakh Ayushman Bharat–Health and Wellness Centres across the country.
 • This is being organised in collaboration with all states, UTs and related ministries such as Women and Child Development, Information and Broadcasting, Panchayati Raj, AYUSH and Education.
 • The Melas are part of Azadi ka Amrit Mahotsav to create awareness about Ayushman Bharat–Health and Wellness Centres and telemedicine and tele–consultations.

9. Which country is the host of International Water Week– Water Convention 2022?

A) India

B) Singapore 

C) Nepal

D) Bangladesh

 • Director General, National Mission for Clean Ganga (NMCG) of India participated virtually in Singapore International Water Week, Water Convention 2022 and gave a presentation on ‘Status of Wastewater Generation, Treatment and Management in India”.

10. Pravind Kumar Jugnauth, who was seen in the news, is the Prime Minister of which country?

A) Sri Lanka

B) Mauritius 

C) Maldives

D) Malaysia

 • Mauritius Prime Minister Pravind Kumar Jugnauth, accompanied by a high–level delegation arrived in India at the invitation of Prime Minister Narendra Modi.
 • Jugnauth is set to participate in the groundbreaking ceremony of the WHO–Global Centre for Traditional Medicine in Jamnagar and Global Ayush Investment and Innovation Summit in Gandhinagar.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button